Monday, October 22, 2007

ஒரு பயணக் குறிப்பும் சில நன்றிகளும் 1

மாதமொருமுறை சென்னையிலிருந்து ஊருக்கு செல்லும் காலங்களில், சென்னை வந்த புதிதில் பேருந்தில் தான் செல்வேன் (அதன் பிறகு ரயிலில் செல்வது வழக்கமாயிற்று) பெரும்பாலும் அரசு பேருந்துகள் தான். கட்டணங்கள் குறைவு என்பதால் அதை பட்டியலின் முதலில் வைத்திருப்பேன். தனியார் சொகுசு பேருந்துகளை போல, அந்தந்த மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்தின் தொலை தூர பேருந்துகள் நன்றாகவே இருக்கும். முக்கியமாக அரசு விரைவு பேருந்துகளை விட இவைகள் பயணிக்க சொகுசாக இருக்கும். பாதுகாப்பு மிகுந்ததாக இருக்கும். தனியார் பேருந்துகளைப் போலவே அரசு பேருந்துகளிலும் இப்போதெல்லாம் டிவிப் பெட்டிகள் வைத்து படங்கள் ஓட்டுகின்றனர். (தற்போது தனியார் வண்டிகளில் இந்த சௌகரியம் இல்லை என்று நினைக்கிறேன்) இந்த மாதிரி இரவு நேர பேருந்துகளில், பயணிகள் எல்லோரும் தூங்கின பிறகு, எந்த அளவு கண்முழித்து அந்த ஓட்டுநர் கஷ்டப்பட்டு அந்த வண்டியை, அத்தனை பேரின் பாதுகாப்பையும் மனதில் வைத்து வண்டியை ஓட்டியிருக்க வேண்டும்? (அதற்கு தான் அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதை இங்கே ஒரு கருத்தாக எடுத்துகொள்ளத் தேவையில்லை என்று நினைகிறேன்) அதுவும் இரண்டு மூன்று மணிக்கெல்லாம் அப்படியொரு தூக்கம் கண்களை தழுவும்.. அடிக்கடி சொக்கி நம்மை விழவைக்கும்.. அதையெல்லாம் பொறுத்துகொண்டு ஓட்டுவது எவ்வளவு சிரமம்? இதையெல்லாம் நான் அந்த வண்டிகளிலே பயணிக்கும் போது கொஞ்சம் கூட நினைத்ததில்லை.. அதுவும் நினைத்த நேரத்தில் இடம் சென்று சேர முடியவில்லை என்றால், எத்தனையோ பேரோடு நானும் அந்த ஓட்டுநரை மனதால் சபித்திருக்கிறேன். (அமெரிக்காவில் ஓடுகின்ற தொலைதூர பேருந்துகள் ஒவ்வொரு ஆறு\எழு மணிநேர பயணத்திற்கும், இரண்டு மணி நேர ஓய்வு எடுப்பது வழக்கம் என்று பயணித்த நண்பர்கள் சொல்லக் கேள்வி)


இந்த சனி ஞாயிறு கிழமைகளில் என் தங்கையை (சித்தி பெண்) பார்க்க விஸ்கான்ஸினில் உள்ள மில்வாக்கி நகரம் சென்றிருந்தேன். கிட்டதட்ட ஏழரை மணி நேர பயணம்.. தனியாளாக கார் ஓட்டி சென்றேன்.. அப்போது தான், என்னை இது வரை சுமந்து சென்ற பேருந்தின் ஓட்டுநர்கள் தெய்வங்களாக கண்முன்னே தெரிந்தார்கள்.. அதுவும் சொகுசான சாலைகள்.. சொன்னபடி கேட்கின்ற புது வண்டிகள் (நான் ஓட்டி சென்றது ஏழு பேர் உட்காரக்கூடிய கிரைஷலர் டவுன் கன்ட்ரி.. மில்வாக்கியில் இருக்கும் தங்கை நண்பர்களோடு சிகாகோ செல்லும் திட்டம் இருந்ததால் பெரிய வண்டியாக எடுத்துக்கொண்டேன்) என்ற சாதகங்கள் இருக்கும் இடத்திலேயே ஏழு மணி நேர பயணம் அலுப்பை கொடுத்தது. நிச்சயமாக, இப்படிப்பட்ட நெடுந்தூர வண்டிகளை இயக்கும் எண்ணற்ற ஓட்டுநர்களுக்கு (குறிப்பாக இந்தியாவில்), இதுவரை நன்றி மனதினுள் கூட சொல்லாமல் இருந்ததற்காக வெட்கப்படுகின்றேன்.. அவர்களுக்கு இந்த பதிவின் என் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

இந்த பயணத்தில் என்னுடன், எனக்கு ஆதரவாக என்னுடன் பயணித்தது இசை தான்.. இசையினால் எந்த அளவுக்கு துணையாக, ஆறுதலாக இருக்க முடிகிறது என்பதை கண்கூடாக அனுபவித்து கொண்டேன். எண்பதுகளில் வந்த கொண்டாட்ட பாடல்கள் தனிவகை.. காக்கிச் சட்டை சிங்காரி சரக்கு, சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் மனதிற்கு அவ்வளவு தெம்புகளையும்
உற்சாகத்தையும் தந்தது என்றால் அது மிகையில்லை.. இப்படி குத்தாட்ட பாடல்கள் ஒருவகை என்றால், மனதை மயிலிறகால் வருடும் இளையராஜவின் மெல்லிசை அடுத்த வகை.. ஒரு இசைத்தட்டு முழக்கம் மிகுந்ததாவும், அடுத்தது இப்படி மெல்லிசைகளுமாய் கேட்டவாறே என் பயணம் அமைந்தது..

இப்போது இங்கே இலையுதிர்காலம் என்பதால், மரங்கள் எல்லாம் வண்ணம் மாறி, அருமையாய் தெரிந்தன.. ஒவ்வொரு காட்சிகளும், வண்ண இலைகள், மரம் முழுவதும் இத்தனை பூக்களா என்று வியக்க வைத்து, கண்ணை வாரிச் சென்றது.. விஸ்கான்ஸின், இல்லினாய்ஸ் மாநிலங்களை விட, வடகிழக்கே வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் மாநிலங்களை இந்த இலையுதிர்காலத்தில் அவ்வளவு அழகாக இருக்கும் என்று பலர் சொல்லக்கேள்வி.. இந்த முறையும் அங்கெல்லாம் சென்று மகிழ, கொடுத்து வைக்கவில்லை எனக்கு.. நானிருக்கும் ஒஹாயோவில் இப்போது தான் மெல்ல இலைகள் உருமாறி, மாறியவைகள் மரத்தை வண்ணமடித்தது போதும் என்று தரையெல்லாம் வண்ணமடிக்க உதிர்ந்து கொண்டிருக்கின்றன..

இதையெல்லாம் சேமித்து வைக்க என் மூன்றாவது கண்ணை இன்னும் திறக்க வில்லை.. திறந்த பின், சில நிழற்படங்களை (டிஜிட்டல் யுகத்தில் நிழற்படம் என்று சொல்லலாமா) இங்க உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.. பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.. உங்களின் கருத்துகள், குடுவையின் கீழ் இருக்கும் தண்ணீரை பருக கற்களை ஒன்றன்பின் ஒன்றாக இட்ட காக்கைகு உதவியதாக இருக்கும்.

எனது பழைய பதிவுகளுக்கும் சென்று, படித்து பின்னூட்டமிட்ட சேதுக்கரசிக்கும் என் ஏனைய நண்பர்களுக்கும் நன்றி.

10 பின்னூட்டங்கள்:

said...

Karthi,

True they deserve some appreciation. But on the other side, I also remember the rash driving, utter disregard for the rules and for other vehicles / road users. If you have driven in the highways in the night in a bike or even a car, you will have very little sympathy for the bus drivers (with few exceptions).

Anyway, hope you had a nice trip. Looking forward to your photos.

Also, I think you have mistaken New Hampshire for North Hemisphere.

Cheers
SLN

said...
This comment has been removed by the author.
said...

ஓட்டுநர்களை பற்றி நீங்கள் சொன்னதும் சரியான கூற்று தான் SLN..

நியூ என்று மாற்றிவிட்டேன்..திருத்தியதற்கு நன்றி SLN

said...

உண்மை! உண்மை. எப்போதும் இந்த மாதிரி நெடுந்தூர பயண முடிவில், ஓட்டுனருக்கு சென்று நன்றி தெரிவித்து, கை குலுக்குவேன்.

அப்போது அவர்கள் முகத்தில் தோன்றும் மின்னல் போன்ற சிரிப்பு, மகிழ்ச்சி இருக்கிறதே! நேரில் பார்த்தால் மட்டுமே உணர முடியும். :)

Anonymous said...

Ungal payana katurai padithu romba naal aayitru :-)

said...

நல்லா ரசனையா எழுதுறீங்க.. தொடருங்க.. நல்லாயிருக்கு..

said...

eppo long distance drive pannalum nanachuppen namma ooru driversa..

really they deserve appreciation and more importantly good roads.

karthi,
approm fall colors paaka engayaavadhu pora idea irundha enakku oru vaartha sollunga.. 71S irukkave irukku..vandhu aikiyam aayikuren :)

said...

கண்டிப்பா கடவுள் தான்... நம்ம உயிர் அவங்க கையில்.. :)

சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..
நானும் ஒரு நன்றி சொல்லிகிறேன்...

said...

நல்ல சிந்தனை தல.. ஆனா, கார் ஓட்டறது அலுப்பை தருதுன்னு சொல்றீங்களே.. அது ஒரு வித் சுகம் இல்லையா??

said...

\\Dreamzz said...
கண்டிப்பா கடவுள் தான்... நம்ம உயிர் அவங்க கையில்.. :)

சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..
நானும் ஒரு நன்றி சொல்லிகிறேன்...
\\
ரீப்பிட்டேய்...:)