மறுபடியும் ராஜ்கிரண்
வரிசையாக மூன்று (என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா தான்)மாபெரும் வெற்றிப்படங்களை தந்த ராஜ்கிரண், அதற்கடுத்து மற்றவர்கள் படங்களில் (பாசமுள்ள பாண்டியரே, மாணிக்கம், பொன்னு விளையிற பூமி) கதாநாயகனாக நடித்து தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார். நீண்ட நாள் ஓய்வின் பின் பாலாவின் நந்தா, சேரனின் பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் ராஜ்கிரணுக்கு நல்ல பெயர் கொடுத்து நிமிர்ந்து உட்கார வைத்தது.
இப்போது ராஜ்கிரண் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் சன் கிரியேசன்ஸை தூசிதட்டி, புதிய படங்கள் எடுக்கப் போகிறார். வழக்கம் போல கதாநாயகன், டைரக்க்ஷன் பொறுப்பை இவரே செய்கிறார். இவரது அடுத்த இரு படங்களுக்கு சிந்தாமணி, மலை கள்ளன் என்று பெயரிட்டுள்ளார்.
இவர் நடிக்காமல் படங்கள் (என்னை பெத்த ராசா, ராசாவே உன்னை நம்பி) மட்டும் தயாரித்த காலங்களில் இருந்து இவரது படங்களுக்கு இசைஞானி இசை தான். இப்போது இந்த இரு படங்களுக்கு இசையமைப்பது இசைஞானி தான்.
மறு அவதாரம் எடுத்து வரும் ராஜ்கிரண் வெற்றிகளை குவிப்பார் என்று நம்புவோம்.
4 பின்னூட்டங்கள்:
thala,
y u din write about dasaavathaaram, it is not fair, u mite be a ajith fan
cud have writen something abt dasaavathaaram stills that released yesterday...u don like ulaga naayagan or what??
--Rangan
பார்ப்போம். :-)
ஹீரோவா? ராஜ்கிரணா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ராஜ்கிரணுக்கு வாழ்த்துக்கள்...
கொஞ்சம் இல்ல இல்ல.. ரொம்பவே ஒவர் ஆக்டிங்கா இருந்தாலும் தாய்குலங்களை கவரும் வகையில் தான் கண்டிப்பாக அவர் படம் இருக்கும்... ஒரு குறிப்பிட்ட மக்களை சந்தோஷப்படுத்தினாலும் அது நல்ல விசயம் தானே... வரட்டும் வரட்டும்.
Post a Comment