Wednesday, October 17, 2007

மூன்றாவது கண்

என்னடா திடீர்னு பரமசிவன் மாதிரி பதிவெல்லாம் போடுறியேன்னு நினைக்காதீங்க.. புதுசா ஒரு டிஜிட்டல் கேமரா வாங்கியிருக்கேன்.. நான் ஒரு கேமரா வாங்க வேண்டும் என்று நினைத்த பிறகு எதை வாங்கலாம்னு ஒரு குழப்பதுல இருந்தப்ப, இருள் தேசத்தில் டார்ச் அடிச்சு வழி சொன்னவங்க நீங்க.. உங்க ஆலோசனையெல்லாம் கேட்ட பிறகு, கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ வாங்கலாம்னு முடிவு பண்ணினேன்.. கொஞ்ச நாட்களுக்கு முன், நல்லதொரு பேரம் கிடைத்ததால் அதை வாங்கியும் விட்டேன்.. இப்போ எங்க போனாலும் நம்ம தோளுல அது தான் சவாரி செய்யுது.. சுகமான சுமை.. ஏற்கனவே தருமி மாதிரி நாம எடுக்குற புகைப்படங்கள் நல்லாயிருக்குன்னு நம்மளை உசுப்பேத்துற மக்கள் இங்க அநேகம்.. இப்போ இதையும் தோளுல தூக்கி சுமக்க ஆரம்பிச்சதிலிருந்து, நம்ம வீடு பால் காய்ச்சுறோம்.. கொஞ்சம் வந்து போட்டோ எடுத்து தரமுடியுமான்னு மக்கள் கேட்க அராம்பிச்சுட்டாங்க.. ஆயிரம் பேரை கொன்னாத் தான் அரை வைத்தியன் மாதிரி, பத்தாயிரம் போட்டோ எடுத்தா தான் அரை போட்டோகிராபர்னு நம்ம பள்ளிகூடத்துல சொல்றாங்க.. இப்பத் தான் நாம பள்ளில 'அ'னா போட ஆரம்பிச்சிருக்கேன்.. பார்ப்போம், பட்டப்படிப்பு வரை போகமுடியுதான்னு..

அதனால, இனிமேல் அடிக்கடி நாம எடுத்த படங்களை போட்டு உங்களுக்கு சோதனை தரப் போறேன்.. அதுக்கிடையில் வேலைகள் சற்று குறைவாக இருப்பதால், மறுபடியும் நம்ம எழுத்துப் பணியை தொடரலாம்னு நினைக்கிறேன்.. அப்பப்போ உங்க பக்கங்கள்ல நான் தலை காட்டி வந்தாலும் எப்போதும் எனக்கு ஆதரவு காட்டி வரும் நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி

நம்ம பிளாக் மக்கள் எல்லோரும் ஒண்ணா கூடி, புகைப்படக்கலைக்குன்னு தமிழ்ல ஒரு தனி பக்கம் ஆரம்பிச்சு, புதிய நுணுக்கமான தகவல்கள், போட்டிக்கள்னு பட்டையை கிளப்புறாங்க.. உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் இந்த பக்கத்தை மேயலாம்.. இந்த பிளாக் பக்கத்திற்கு நான் கியாரண்டி :)

வாங்கின கேமராவை பற்றி (ராம்கி கேட்டதிற்காக):

மாடல் பெயர் : கெனான் ரிபெல் எக்ஸ்.டி.ஐ\EOS 400 with 18-55 mm Lens
விலை : $674 (No Tax, Free Shipping)
வாங்கிய இடம் : US1photo.com

சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:17 பின்னூட்டங்கள்:

said...

இங்கயும் கேமராவா??

எங்குட்டுப் பார்த்தாலும் கேமரா மயமா இருக்கே.. இது என்ன CVR-effect-a??

said...

Karthi,

Photos are good, especially the flowers.

Cheers
SLN

Anonymous said...

என்ன மாடல், என்னா வெலைன்னு சொல்லக்கூடாதா? நாங்களும் வாங்குவோம்ல

ராம்கி

said...

பரவாயில்லையே.. நீங்களும் சோக்கா படம் காட்டுறீங்களே. :-)))

said...

படங்கள் அருமையா வந்துருக்கு.

said...

கார்த்திக்
முதல் படம் அருமையாக வந்திருக்குது.

said...

படங்கள் நல்லா இருக்கு!
எப்பவும் சப்ஜெக்ட்ட ப்ரேமோட(frame) நட்ட நடுவுல வெக்காம கொஞ்சம் ஓரமா வெச்சு கம்போஸ் செய்யவும்!
சுவாரஸ்யமா இருக்கும்! :-)

said...

படம் எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு.

*ahem, அப்படியே உங்க திருமண படங்கள், சரி, சரி... நான் ஒன்னும் சொல்லலைபா! நீயாச்சு! திரு.முத்துராஜன் ஆச்சு! எனக்கேதுக்கு வம்பு? :p

said...

வாங்க வாங்க ஆட்டத்துக்கு....

said...

ரெண்டாவது படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :) சீக்கிரம் வந்து பட்டைய கிளப்புங்க :)

said...

Great pics and loved the first and second a lot.

said...

//என்னடா திடீர்னு பரமசிவன் மாதிரி பதிவெல்லாம் போடுறியேன்னு நினைக்காதீங்க//
அவர் எப்ப பதிவ்ல்லாம் போட்டாரு ;))


எல்லா படமும் அழகாக இருக்குது!

said...

Awesome pics..And title is so damn apt! :)

said...

camera vangina .udane poo..chedi kodi dana ? PC sreeram style la lighting changes try pannalame ?

All the best in the new hobby. If you get it as a good hobby, its really interesting .

said...

ரொம்பத் துல்லியமா அழகா வந்திருக்கு!

said...

thala return vandaacha?
good good

photos 1 and 3 romba nalla irukku.. potu thaakunga..

apdiye inga oru pullaiku kaadhu kuthu vachirukkom , 71 vadakkulka vandingana vizhava sirappichitu apdiya padam pudichi kuduthutu polaame :)

said...

Couldn't able to see the 1st and 3rd photo. the silhoute looks artistic...