Saturday, January 26, 2008

விஜய் - த்ரிஷா - காதல் - மறுபடியும் - கிசுகிசு?

நான் தனியாக எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஜுனியர் விகடனில் வந்த இந்த கிசு கிசுவை நீங்கள் படித்து பொருள் தெரிந்து கொள்ளுங்கள்..


இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த போதும், இதேபோல் செய்திகள் உலா வந்தது.. மறுபடியும் இப்போ..

Thursday, January 24, 2008

2007-ன் மயக்கும் மெட்டுக்கள்

ஒவ்வொரு வருடமும் கணக்கு வழக்கில்லாத படங்கள் வெளியிடப்படுகின்றன, தமிழ் சினிமாவில்.. படத்தின் பூஜையின் போது எல்லோரும் அந்த படம் வெற்றி பெறவே உழைக்கிறார்கள்.. ஆனால் பத்துக்கும் குறைவான படங்களே நினைத்த வெற்றியை பெறுகின்றன.. மிச்சமிருப்பதில் பத்து படங்கள் தயாரிப்பாளரின் வயிற்றில் பாலை வார்கின்றன. ஒரு படத்தின் வெற்றிக்கு மிகவும் அதிகமாக தன் பங்கை தருபவர்கள் படத்தின் இசையமைப்பாளர்கள்.. படம் வருவதற்கு முன்னரே மக்களின் மனதில் படத்தை பற்றிய ஒரு எதிர்பார்ப்பை தந்துவிடுகின்றன.. தியேட்டர் வரை அவர்களை இழுத்தும் வருகின்றன..

2007-ல் அப்படி ரசிகர்களை கட்டிப்போட்ட படங்களின் பாடல்கள் என்னென்ன.. எனது பார்வையில் ஒரு சிறிய பட்டியல்.. எனது காருக்கான ஒரு ஆடியோ சிடி எழுதினால் அதில் என்னென்ன பாடல்கள் இருக்கலாம். நிச்சயம் இதில் உங்கள் பட்டியலில் இருக்கும் சில பாடல்கள் இருக்கும்.. ஏனென்றால் இந்த வருடம் அநியாயதிற்கு ரசிக்க, மயக்க பல பாடல்கள் இருக்கின்றன.. ஆனால் எல்லாவற்றையும் ஒரு சிடியில் அடக்க முடியாது.. உன்னாலே உன்னாலே படத்தில் அனைத்தும் பாடல்களும் தலையசைக்க வைப்பவை.. அதில் அதிகமா பிடித்த ஒரு பாடலை மட்டுமே இங்கே பட்டியலில் சேர்த்திருக்கிறேன்..

மெலடி மெட்டுகள்
(வரிசை சும்மா தான்.. ரேட்டிங் இல்லை)

தொட்டால் பூ மலரும் - அரபு நாடே (ஹரிச்சரன்,யுவன் இசை:யுவன்)
சென்னை 28 - யாரோ யாருக்குள் யாரோ (SPB, சித்ரா இசை:யுவன்)
தீபாவளி - காதல் வைத்து (
விஜய் யேசுதாஸ் இசை:யுவன்)
கற்றது தமிழ் - பற பற பட்டாம்பூச்சி (ராகுல் இசை:யுவன்)
பருத்தி வீரன் - அறியாத வயசு (இளையராஜா இசை:யுவன்)
பொல்லாதவன் - மின்னல் கூத்தாடும் (கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ இசை:ஜிவி பிரகாஷ்)
கிரீடம் - அக்கம் பக்கம் (சாதனா சர்கம் இசை:ஜிவி பிரகாஷ்)
பச்சைக்கிளி முத்துச்சரம் - காதல் கொஞ்சம் (நரேஷ் ஐயர் இசை:ஹாரிஸ் ஜெயராஜ்)
பொறி - பேருந்தில் நீ எனக்கு (மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ இசை:தினா)
சிவாஜி வாஜி வாஜி (ஹரிஹரன், மதுஸ்ரீ இசை:ஏஆர் ரகுமான்)


தாளப் பாடல்கள்

சிவாஜி - அதிரடிக்காரன் (ஏஆர் ரகுமான், சயனோரா இசை:ஏஆர் ரகுமான்)
கருப்பசாமி குத்தகைக்காரர் - நாலு கோபுர (திப்பு, சின்னப்பொன்னு இசை : தினா)
போக்கிரி - டோலு டோலு தான் (ரஞ்சித், சுசித்ரா இசை: மணிசர்மா)
பில்லா - வெத்தலையை போட்டேன்டி (சங்கர் மகாதேவன் இசை:யுவன்)
சென்னை 28 - சரோஜா சாமானிக்காலோ (ஷங்கர் மகாதேவன், ப்ரேம்ஜி அமரன் இசை:யுவன்)
பருத்தி வீரன் - ஊரோரம் புளியமரம் (சரோஜா, பாண்டி, லக்ஷ்மி, கார்த்திக் இசை:யுவன்)
சிவி – மாயாவி நீயா (ஹரிச்சரன், க்ரிஷ், ஸ்ருதி இசை: தரன்)
தாமிரபரணி - கட்டபொம்மன் ஊரெனெக்கு (விஜய் யேசுதாஸ் இசை:யுவன்)
பொல்லாதவன் - எங்கேயும் எப்போதும் (SPB, யோகி B, சுனிதாசாரதி இசை:ஜிவி பிரகாஷ்)
ஓரம் போ - கோழி காலு (கைலாஷ் நாயர், ஜாஷி கிஃப்ட் இசை: ஜிவி பிரகாஷ்)

இந்த வருஷம் அதிகப்படங்களுக்கு இசையமைத்தது யுவனாகத் தான் இருக்கும். ஆனால் அதில் சில படங்களுக்கு மோசமான இசை அமைந்திருந்தாலும் (மச்சக்காரன்?), பல படங்கள் அந்தந்த நேரத்தில் வரிசை பட்டியலில் நல்ல இடத்தில் தான் இருந்தன.. மற்றும் ஜிவி பிரகாஷின் பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பேற்றது உண்மை தான். அதுவும் 2008-ல் ரஜினி நடிக்கும் குஷேலன் படத்தின் இசை பொறுப்பும் ஜிவி பிரகாஷிற்கு கிடைத்துள்ளது. இன்னும் நல்ல இசை தந்து மகிழ்விக்க வாழ்துக்கள் அவருக்கு!

திரையிசையில் அழையாமல் நுழைந்து விட்ட ஒன்று ரீமிக்ஸ் பாடல்கள். மக்கள் வரவேற்றாலும் அதை எதிர்ப்பவர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது.. இந்த வருடமாவது அதன் தாக்கம் குறைந்து இசையமைப்பாளர்கள் அவர்களின் சொந்த திறனை தருவார்களா நல்லிசையாக?

Friday, January 18, 2008

சாலை நெரிசலை தவிர்க்க.. ஒரு எளிய வழி

சென்னை மட்டுமல்ல, எந்த ஊரை எடுத்துக்கொண்டாலும் எட்டரையிலிருந்து ஒன்பதரை மணிக்குள் ஏகப்பட்ட நெரிசல் இருக்கும் சாலையில்.. அண்ணா சாலையில் ஒவ்வொரு சிக்னலையும் கடப்பதே பெரிய வேலையாக இருக்கும்.. பஸ்ஸில் கழைக்கூத்தாடி போல் படியில் பயணம், மின்சார ரெயிலில் வாசல் கம்பியை சுற்றி இருபது பேர் பிரயாணம்..இது தின நிகழ்வு..இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அலுவலகத்திற்கு சீக்கிரமாக செல்ல வேண்டும்.. ஆனால் நமது அலுவலகத்தில் சீக்கிரம் வந்தாலும் ஆறு மணிவரை கட்டாயம் இருக்குவேண்டும் என்ற எழுதாத சட்டம் இருக்கிறது.. நேரத் தளர்வு கிடையாது. அதனால் சீக்கிரம் வந்து, இந்த கூட்ட நெரிசலில் சிக்காமல் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று நினைப்பதற்கும் தோன்றாது. எட்டு மணி நேரம் இருந்தால் போதும், கொடுத்த வேலையை முடித்தால் போதும் என்ற கொள்கை இருந்தாலும் நன்றாக தான் இருக்கும்.. ஆனால் அதற்கும் வழி இல்லை.. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் அமெரிக்க வசதியும் கிடையாது.. அலுவலகத்தில் விட்டாலும் இன்னும் அந்த அளவுக்கு நமது ஊரில் நெட் வசதிகளும் பெருகவில்லை.. (நெட் கனெக்க்ஷன் புலம்பல்களை தனியாக கீதா மேடம் பதிவில் படிக்கலாம்)

மேல சொன்ன வழிகளை நிறைவேற்ற பல நாட்களும், பல விஷயங்களும் தேவைப்படும். அப்புறம் இந்தக் கதை தெரிந்தால் ஷன்கர் அவர்களுக்கு புது படத்திற்கான கதை கிடைத்துவிடும். அதெல்லாம் விட, அரசாங்கம்
நினைத்தால் நடக்கக் கூடிய இன்னொரு எளிய வழி இருக்கிறது. ஒவ்வொரு சாலைகளிலும் ஐநூறுக்கும் மேற்பட்டவர் பணிபுரியும் நிறுவனங்களுக்கு உரிமம் தரும் போதும் அந்த நிறுவனம் எந்த நேரத்தில் இயங்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். எல்லா நிறுவனங்களின் இயங்கும் நேரமும், 8-5, 9-6, 10-7 என்னும் மூன்று நேரங்களில் ஏதாவது ஒன்றில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். அதுவும் ஒரே சாலையில் இருக்கும் நிறுவனங்கள் மேற்சொன்ன நேரங்களில் சமமாக பிரிக்கப்பட்டு இயங்க வேண்டும். இப்படி ஒரு ஊரில் இருக்கும் எல்லா நிறுவனங்களும் மாற்றப்பட்டால் சாலைகளில் போக்குவரத்தும் பிரிக்கப்பட்டு, நெரிசல் குறைந்து விடும். இதன் முதல் வெள்ளோட்டமாக எல்லா அரசாங்க அலுவலகத்தின் நேரங்களும் இது போல் மாற்றலாம்.

டைடல் போன்ற பெரிய வளாகத்தில் இருக்கும் நிறுவனங்கள் இது போல நேர பிரிவுகளில் உள்ளடக்கினால் அந்த வளாகத்துள் வண்டிகள் நிறுத்தும் இடங்களிலும், முக்கிய சாலையிலிருந்து அந்த வளாகத்துள் பிரியும் இடங்களும் நெரிசல் தவிர்க்கப் படும். ஏற்கனவே நிறைய பள்ளிகளின் நேரங்கள் மாற்றியமைக்கப் பட்டுவிட்டன (அரசாங்க பள்ளிகள் தவிர்த்து) இதெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் நெரிசல் 30 முதல் 50 சவிகிதம் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எந்த அளவுக்கு இந்த உத்தி ஒத்துவரும், வெற்றிபெறும் என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு முயற்சியில் சற்றே சாலை நெரிசல் குறையும் என்பது எண்ணம்.. இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இது மாதிரி வேற ஏதும் கருத்துகள் உங்களிடம் இருக்கிறதா? இருக்கவே இருக்கு பின்னூட்டம்.. பகிர்ந்துகொள்ளுங்களேன்

Thursday, January 17, 2008

கணக்கை மறுபடியும் திறக்கிறேன்

புத்தாண்டும் முடிந்தது, பொங்கலும் போயிடுச்சு.. ஜனவரியின் இரண்டாம் வாரம் தான் ரொம்பவும் மெதுவா, சத்தியமா, ஆமையை விட மெதுவா போச்சு.. எல்லா வருஷம் போலவும் இந்த வருஷம்.. சரியா பனிரெண்டு மணிக்கு வீட்டு சரவுண்டு சிஸ்டத்துல முருகன் பாட்டை போட்டு, புது வருஷத்தை ஆரம்பிச்சோம், நானும் என்
அறையில் இருக்கும் தம்பி மதனும்.. மற்ற நண்பர்கள் வித்தியாசமா கொண்டாடப் போறோம்னு வெளில கிளம்பிட்டாங்க.. முருகன் பாட்டு முடிஞ்சவுடன், எப்பவும் போல, நம்ம ஊர் வானொலி நிலையங்கள் செய்வது போல, சகலகலா வல்லவன் பட இளமை இளமை இதோ பாட்டு.. அவ்வளவு தான்.. எங்களுக்கு இப்படித் தான் புது வருஷம் பிறந்தது.

அப்புறம் ஊரில் இருக்கும் உறவுக்காரர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் தொலைபேசி வாழ்த்துக்கள்.. நலம் விசாரிப்புகள்.. பேசமுடியா நண்பர்களுக்கு மெயில் விடு வாழ்த்துக்கள்.. சில பேருக்கு ஆர்குட் வாழ்த்துக்கள்.. பக்கத்தில் இருப்பவர்கள், நேரில் கைகுலுக்கல்கள்.. இப்படியாக சென்றது புது வருஷத்தின் பகல்..

நான் சென்னையில் இருக்கும் போது, குமுதம் புத்தகத்தை புரட்டும் போது 'கதவை திற காற்று வரட்டும்' என்னும் ஆன்மீகத் தொடரை சுவாமி பரமஹம்ச நித்யானந்தா எழுதியிருப்பதை பார்த்திருக்கிறேன்.. பெரும்பாலும் படித்ததில்லை.. என்றாவது வேற வழியே இல்லை என்றால் படித்ததுண்டு. அவர், கொலம்பஸ்ஸில் அவரது ஆசிரமக் கோயிலை அமைத்திருக்கிறார். சிவன், பார்வதி, விநாயகர், முருகன் இரு துணைவிகளுடன், பார்க்க தமிழ்க் கோயில் போல பரவசம் தருகின்றது என்று நண்பர்கள் சொல்ல வருஷ முதல் நாள் அன்று சென்றிருந்தோம். கிட்டதட்ட இரண்டடியில் வினாயகர் கற்சிலையில் அருள் தருகிறார். சிவன், பார்வதியோடு (லிங்க வடிவில் அல்லாது உருவவடிவில் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை என்று நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை) வீற்றிருக்கிறார். இவரின் வலப்பக்கம் முருகன், தெய்வானை வள்ளியோடு எழுந்தருளிக்கிறார். கோயில் தமிழக கோயில்கள் மாதிரி இல்லாது, வீடு போல கோயில் அமைக்கபட்டிருக்கிறது.. அக்டோபர் 2007-இல் தான் கோயிலை நிர்மாணித்து பிரண பிரதிஸ்டை எல்லாம் செய்திருக்கிறார்கள். ஆண்டவன் அருளை பெறுவது தானே நல்ல ஆரம்பமாயிருக்க வேண்டும்..

ஒவ்வொரு முறையும் எதையாவது பதிவெழுதலாம் என்று நினைக்கும் போது, அட! இது மொக்கை பதிவாகிட்டா என்ன பண்றதுன்னு தோன்றும். ஆனா கீதா மேடத்தை பார்த்த பிறகு..ம்ம்..அதை பத்தியெல்லாம் கவலைப் பட தேவையில்லை என்று நினைக்க தோன்றுகிறது.. அப்படி எழுதியது தான் இந்த பதிவு..