குதிரை பந்தயங்கள்
சில சமயங்களில் தொடர்ந்து ஒரு விஷயத்தை செய்வது சற்றே அலுப்பை தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது. இத்தனை மாதங்களில், கிட்டதட்ட பதினைந்து மாதங்களில் இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டதே இல்லை, இங்கே எழுதுவதில். ஆனால், புதிய பொறுப்புகளும், வேலை பளுவும் இந்த முறை இந்த இடைவெளியை ஏற்படுத்தியதென்பது உண்மை.. எழுதவில்லை என்றால் கூட பரவாயில்லை, நாட்டாமை மாதிரி எல்லா நண்பர்களின் பதிவிற்கும் சென்று பின்னூட்டமாவது இடலாம் என்றால் அதற்கும் வழியில்லை.. பத்து ஆணி இருக்கும் போதே, இன்னும் நூறு ஆணியை நம்ம முன்னால் கொட்டிவிடுகிறார்கள்.. புடுங்கு ராசா என்று தட்டிக் கொடுக்கிறார்கள், பலியாட்டிற்கு கழுத்தில் பூமாலை போடுவதை போல...
இரண்டு வாரங்களுக்கு முன்னால், கோடைகால சுற்றுலாவை துவக்கிவைக்கும் முகமாக இரண்டு நாட்கள் மினி சுற்றுலா சென்று வந்தேன் நண்பர்களுடன்.. அமெரிக்காவில் வருடத்திற்கு மூன்று முறை நடக்கும் டெர்பி ஷோவிற்கும் போகும் வாய்ப்பு கிட்டியது. வருடத்தின் முதலில், இது கென்டகி மாகாணத்தில் இருக்கும் லூயிவில்லில் நடந்த அந்த குதிரை போட்டிக்கு (நம்ம கிண்டி குதிரை ரேஸ் மாதிரிதாங்க) சென்றோம்.. காலை பதினொரு மணிக்கு ஆரம்பிக்கும் ரேஸ், ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு முறை நடத்தப் பட்டது. இதற்கிடையில் அந்தந்த போட்டிகளுக்கு, உங்களுக்கு பிடிக்கும் குதிரை மேல் பணத்தை கட்டலாம்.. எந்த சுற்றில் எந்த குதிரை ஜெயிக்க அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். பெரும்பாலும் அதன் படி தான் நடக்கிறது.. அப்புறம் அதற்கேன், இப்படி ஒரு போட்டி என்பதும் விளங்காதது தான்.
அன்று மட்டும் இந்த குதிரை பந்தயத்தை காண வந்தவர்களிடம் வசூலித்த நுழைவு கட்டணமே (நுழைவு கட்டணம் 40 டாலர்) பத்து பணிரெண்டு லட்சம் டாலர்களை கடந்திருக்கும்.. சுற்றியிருப்பவர்கள் நன்றாக பரப்பதற்கு வசதியாக ராட்சத திரையில் வீடியோவாகவும் இதை ஒளிபரப்புகிறார்கள். உள்ளே பீர்கள், நம்ம ஊர் தண்ணீர் பந்தலை போல, சின்ன சின்ன ஷாமியான பந்தல்களின் கீழே விற்கப்படுகிறது.
நான் இருந்த ஒரு நான்கு மணிநேரத்தில் கிட்டதட்ட நானூறு வகையான தொப்பிகளை கண்டேன் அங்கே.. %^$ வந்திருக்கும் மக்கள் எல்லோரும், நானிருப்பது அமெரிக்காதான் என்பதை பறைசாற்றினார்கள். மும்தாஜ், ரகசியா எல்லாம் தோற்றுவிடவேண்டும், இவர்களின் ஆடை சிக்கனத்தில்.. மாலை ஆறு மணிஅளவில் தான் பெரிய போட்டியே நடக்கும். அதுவரை வசூலித்த காசையெல்லாம், மொத்தமாக போட்டு நடக்கும் போட்டியது.. நாங்கள் அங்கிருந்து ஸ்மோக்கி மலைக்கு செல்லவேண்டியிருந்ததால், மதியம் இரண்டுமணியளவிலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.. ஆனால் அதற்கு பிறகு தான் கூட்டம் கட்டுங்கடங்காமல் பெருக ஆரம்பித்தது... உள்ளேறும் கூட்டம் ஐநூறென்றால், வெளியேறுவது இருபதாய் கூட இல்லை.
இத்தனை வருட காலம் சென்னையில் இருந்தும் கிண்டியில் நடக்கும் போட்டியை பார்த்ததே இல்லை.. இன்னும் கிண்டியில் ரேஸ் நடக்கிறதா இல்லை தடை செய்துவிட்டார்களா? நமக்கு குதிரை மீது பணம் கட்ட ஆசையில்லை என்றாலும், இது போன்ற குதிரை பந்தயத்தை கிண்டியில் பார்க்கவேண்டுமென்பது சிறுவயது ஆசை.. மிஸ்டர் பாரத்தில் ரஜினி என்னம்மா கண்ணு என்று பாடும் போதும், ஜல்லிக்கட்டில் சத்யராஜ், மலேசியா வாசுதேவனை துரத்தும் போதும், பார்த்தது தான் இந்த கிண்டி மைதானத்தை.. அதன் பிறகு, பஸ்ஸில் வேளச்சேரியில் இருந்து கிண்டிக்கோ, சைதைக்கோ போகும் போது எட்டி பார்த்ததுண்டு.. உள்ளூரில் நிறைவேறாத ஆசை வெளிநாட்டில் வந்து நிறைவேறி இருக்கிறது..
இந்த இடைவெளியில், என் மச்சான் அம்பியின் திருமணம் இனிதே சென்னையில் நடந்தேறியது.. வாழ்த்துக்கள் மச்சான்!
இன்று, மே 23-இல் பிறந்த நாள் கொண்டாடும் அமைச்சர் பொற்கொடிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
9 பின்னூட்டங்கள்:
படங்கள் போட்டு இருக்கலாமே கார்த்திக்.
ஸ்மொகி மௌண்டைன்ஸ் ரொம்ப அழகா இருக்கும்னு கேள்விப்பட்டு இருக்கேன்.
படிப்பதற்கு வெயிடிங்.
Engay romba naala kaanomey enru paarthen,vanthu viteenga karthik
;-)
தல, அடாத ஆணி புடுங்கும் நேரத்திலும் இப்பட விடாம டெர்பி ஷோ போயிடு வந்த்டிட்டீங்களே..
அப்பறம் எத்தனை குதிரை மேல நீங்க கட்டீனீங்கள்..
உள்ளே இல்ல வெளியே???????..:))
//வந்திருக்கும் மக்கள் எல்லோரும், நானிருப்பது அமெரிக்காதான் என்பதை பறைசாற்றினார்கள். மும்தாஜ், ரகசியா எல்லாம் தோற்றுவிடவேண்டும், இவர்களின் ஆடை சிக்கனத்தில்.. //
ippa theriyuthu neenga entha derby showva paarka poneeenganu :-)
welcome back thala :)
Kedi-ku Appy Bday :P
குதிரைகள் வேகமா ஓட குதிரைகளுக்கு ஆல்கஹால் குடுத்துருவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். இப்ப அந்தப்பழக்கம் நிறய குறைவுன்னும் சொல்லணும்.
பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்ந்துக்கிட்டே இருக்கு போல
அருணாச்சலம் படத்தில் பார்த்தது இல்லையா?
ரொம்ப பெரிய இடைவெளிதானுங்கோ!
நீங்க போன இந்த சுற்றுலா படங்களைப் போட்டிருக்கலாமே! :)
தல, ஆணின்னு சொல்லிட்டு குதிரை ரேஸ் போயிருக்கீங்க..
எவ்வளவு ஜெயிச்சீங்க.. எவ்வளவு விட்டீங்க.. :D
Post a Comment