Monday, May 07, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 4

மூன்றாம் பகுதி

சின்ன வயசுல நான் விளையாடிய விளையாட்டுக்கள் இப்போது வழக்கத்தில் இல்லாமலே போய்விட்டது. எல்லோரும் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது விளையாண்டது கண்ணாமூச்சி விளையாட்டாத்தான் இருக்கும். இதுலயே நான் இன்னும் கொஞ்சம் வித்தியாசமா விளையாடி இருக்கேன். அதுக்கு பேரு பணியார கண்ணாமூச்சி.

ரெண்டு அணியா இருந்தா தான் இது நல்லா இருக்கும். ஒரு அணி ஒரு இடத்தில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் காத்திருக்கணும். இன்னொரு அணி எல்லாப் பக்கமும் போய் பணியாரம் மாதிரி சின்ன சின்ன தாய் மணலை குவிச்சு வச்சுட்டு வருவாங்க. இந்த விளையாட்டுக்கு எல்லையெல்லாம் உண்டு. இந்த தெருக்கள் தான் அப்படின்னு ஒரு வரமுறை வச்சு தான் விளையாடுவாங்க. அப்படி பணியாரம் சுடப் போன அணி வந்து சொன்ன பிறகு, கத்திருந்த அணி அந்த பணியாரத்தை கண்டுபிடிக்கப் போவாங்க. எத்தனை பணியாரத்தை அவங்க கண்டுபிடிக்கிறாங்க அப்படிங்கிறதுல தான் பாயின்டே.

இது இல்லாம பச்சக் குதிரை. இந்த விளையாட்டு ஒரு தடவை விளையாண்டு அப்படியே என் நெஞ்சு தரைல பட நான் விழுந்து.செத்தடா நீன்னு அலறியதெல்லாம் உண்டு. ஒவ்வொரு தடவையும் தாண்டுற உயரம் கூடறப்ப எல்லாம் நம்ம மனசு சேர்ந்து பயத்துல குதிக்கும்.

கோலிகுண்டு எல்லோரும் விளையாடுறது. பெரியவங்க காசு வச்சு பந்தயம் கட்டி விளையாண்டா சின்ன பசங்க எல்லாம் சினிமா பிலிம்க்காகவும், குத்துப் படத்துக்காகவும் விளையாடுவோம். குத்துப்படம் விளையாட்டே தனி தான். தீப்பெட்டி மேல ஒட்டுற அந்த வண்ண பேப்பர், சீட்டு தான் மூலதனம். அதுமாதிரி நிறைய கம்பெனி பேப்பர் விப்பாங்க. அதை எல்லாம் நாம கைல வச்சுக்கனும். எதிராளியும் வச்சு இருப்பான். ஒவ்வொரு படமா எடுத்து வைப்பான். இப்படி எடுத்து வச்சு விளையாடுறப்போ, நாம எடுத்து வைக்கிற படத்தையே எதிராளியும் வச்சா, அதுக்கு கீழ இருக்க எல்லாப் படமும் அவனுக்குத் தான் சொந்தமே. ஆயிரம் சீட்டு இருந்தாலும் சில நேரம் போண்டியா ஆனதெல்லாம் உண்டு.

எல்லோருக்கும் தெரிஞ்ச விளையாட்டு கிட்டி தான்.அதாங்க கில்லி. எங்க ஊர் பக்கம் அதை கிட்டின்னு தான் சொல்வாங்க. அந்த கில்லியை வச்சு அடிக்கிறதுக்குன்னே பல ஸ்டைலே இருக்கும். சில பேர் பின்னால திரும்பி குழில இருந்து தள்ளுவாங்க. சில பேர் சோடா குத்துன்னு, அந்த நீள குச்சியின் முனையை பூமில அழுத்தி நடுல ஓங்கி அடிப்பாங்கா. ஆனா இதுல ஆபத்து நிறைய இருக்கு. இன்னும் தழும்பு இருக்கு ரொம்ப பேருக்கு இது விளையாடினதுல.

பம்பரம் விளையாடாதவங்களே இருக்க முடியாது. பம்பரத்தை கைல வச்சு, சாட்டை சுத்தனும். அதை சுத்தி பம்பரத்தை கீழ சுத்த விட்டு, மறுபடியும் சாட்டையால எடுக்கனும். அப்படி எடுக்காதவங்க பம்பரத்தை ஒரு சின்ன வட்டம் போட்டு நடுல வைப்பாங்க. அந்த பம்பரத்தை, ஆக்கர் குத்தி, அதாங்க ஆணியை வச்சு குத்தி உடைக்கனும். இது தாங்க பந்தயம்.இப்படி எத்தனையோ பேரோட பம்பரம் ரெண்டா எல்லாம் உடஞ்சிருக்கு.

இதெல்லாம் விட ஒரு குரூப் சின்ன பசங்க இருக்காங்க. இந்த பில்லி சூனியம் எங்க ஊர்ல செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க அந்த சூனியத்தை எலுமிச்சம் பழம், மைதா மாவுல உருவம், வெத்தல பாக்கு வச்சு பூஜை பண்ணிட்டு சில சில்லறை காசெல்லாம் வச்சு முச்சந்தில போட்டுட்டு போயிடுவாங்க. இந்த பசங்க என்ன பண்ணுவாங்கன்ன, அந்த பொருட்களை சுத்தி வட்டமா நின்னு ஒரு பெரிய வட்டமா சிறுநீர் கழிச்சுட்டு அந்த காசை எடுத்துட்டு போயிடுவாங்க. ஆனா அவங்களை அந்த சூனியம் ஒண்ணும் பண்ணாது. சில பேர் அதை வெறும் காலால தாண்டி பட்ட அவஸ்தையை நேர்லயே பாத்திருக்கேன். எங்க ஊர்ல சவரம் பண்றவர் காலைல காபி குடிக்க வெறும் காலால நடந்து வந்து அதை மிதிச்சுட்டார். ஒரு நாலு மணி நேரத்துல அவரோட காலு பலூன் மாதிரி வீங்கி போய் தண்ணி தண்ணியா கொட்டுது. அந்த அளவுக்கு அதுக்கு வீரியம் உண்டு. ஆனா நான் பாத்த வகைல இந்த பசங்களொட சிறுநீர் அதை எல்லாம் முறிக்ககூடியாதாகவே இருந்திருக்கு.

எங்க ஊர்ல இந்த மாதிரி செய்றவங்க நிறைய பேர் இருக்காங்க. இதை சாமி பாக்குறதுன்னு சொல்வாங்க. நிறைய பேர் வெளியூர்ல இருந்து எல்லாம் வந்து பாத்துட்டு போவாங்க. இதை வைத்து லட்சம் லட்சமா சம்பாரிச்சவங்க இருக்காங்க என் ஊர்ல. அவங்க கிட்ட நீங்க உங்களோட எதிர்காலத்தை பத்தியோ, உங்க கஷ்டத்தை போக்கவோ போகணும்னா வெத்தலை பாக்கு, எழுமிச்சை பழம், திருநீரு, பத்தி சூடம் வாங்கிட்டுப் போனா போதும். அவர் நீங்க கேட்டத நடத்திக்கொடுப்பார். இப்படி பல பேருக்கும் பண்ணி பிரசித்தி அடஞ்சவங்க நிறைய சம்பாரிக்கவும் செய்றாங்க.

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

25 பின்னூட்டங்கள்:

said...

aakar pota kaalatha ellam nyabaga paduthi nostalgic aakiteenga thala....

Anonymous said...

Hi Karthik

Naan ippo konja naala thaan indha blogs ellam padichutu irukaen, I had read SahyaPriyan's, Kodumai Usha's, Priya naeram, Porkodi's, Living Smile's.

Ellarum nalla eluthureenga, but I have a request, summa cinema, unga village indha topic mattum illama y cant u ppl try to write abt few social issues?

Indha vagaila living smile is doing a good job, thirunangai pathi konjam awareness kondu vara try pannuraanga....adhu maadhiri sila awareness kondu vara maadhiri topic-la edludhulaam. I'm not blogging, but I had developed the habit of reading the blogs these days.

Few topics u can try r "Why n how youths can contribute to create political awareness" indha maadhiri payan ulla topics pathi eludhulaamae?

It's my opinion or humble request...ppl who r talented in writing should do something like this...

As I mentioned bfore, it's just my request....no hard feelings pls....

-Arvinth

Anonymous said...

Karthi,
Nice memories.
Enaku 2 brohters dhan.Sisters kedaiyadhu.

Vera vazhi illama -

neenga sonna ithanai games um naanum vilaiyadi iruken. (en brothers kuda than)..ANal ella game layum thotthu poi udanae veliyetra paduven enbadhu veru vishayam......... he he he he...


Gilli and bambaram - my favourite games.
Ippodhu holiday ku Kodaikanal , friend family kuda poitu vandhen.

Anagae. Pine mara kattu ku pona podhu, manadhil vandha asai - indha gilli dhan.
periyavanga, chinnavanga nu ellarum gilli vilaiyadinom.

Vilaiyadiya podhu manadhil vandha ennam - indha gilli vilaiyada free ya niraiya space vendum enru.
Unmaiyil indha kalathu kids pavam dhan.Vilaiyada space illai.......

Innum onrai solla marandhuteenga - maram yeri, marathail utkarndhu kolvadhu...
Engal veetil Vadha narayana maram irukum.Veiyil adhigamaga irundhal, marathil yeri utkarndhu kondal road nanraga theiryum (top view il road ai rasipadhu oru sandhosham dhanae)

With Love,
Usha Sankar.

C.M.HANIFF said...

Antha pashaiya vilaiyattellam ippo engay irukku karthik, athu oru kana kaalam ;-)

said...

//இது இல்லாம பச்சக் குதிரை. இந்த விளையாட்டு ஒரு தடவை விளையாண்டு அப்படியே என் நெஞ்சு தரைல பட நான் விழுந்து.செத்தடா நீன்னு அலறியதெல்லாம் உண்டு//
அடடே பச்ச குதிர அனுபவம் உங்களுக்கும் உண்டா!!

said...

//எல்லோருக்கும் தெரிஞ்ச விளையாட்டு கிட்டி தான்.அதாங்க கில்லி. எங்க ஊர் பக்கம் அதை கிட்டின்னு தான் சொல்வாங்க. அந்த கில்லியை வச்சு அடிக்கிறதுக்குன்னே பல ஸ்டைலே இருக்கும். சில பேர் பின்னால திரும்பி குழில இருந்து தள்ளுவாங்க//

இதுல surprising news ennana, when i was talking to me romanian colleagues, i found they have this same game with almost similar rules!!!! etho peru sonnanga nyabagam illa! namma killi evlo popular paarunga!

said...

பழைய இனிய நினைவுகளை தூண்டி விடுது உங்க பதிவு..

வழக்கம் போல், நேர்த்தியான பதிவு.. வாழ்த்துக்கள் :) :)

said...

"அது ஒரு அழகிய நிலாக் காலம் கனவினில் தினம் தினம் உலாப் போகும்" னு பாட்டு பாட வச்சுப்புட்டீங்களே வாத்தியாரே!

said...

//அதுக்கு பேரு பணியார கண்ணாமூச்சி.

ரெண்டு அணியா இருந்தா தான் இது நல்லா இருக்கும். ஒரு அணி ஒரு இடத்தில் கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் காத்திருக்கணும். //

இன்னொரு அணி இருக்குற பணியாரமெல்லாம் சாப்பிட்டு முடிச்சிடுவாங்க.. அதானே! :-P

said...

//எல்லோருக்கும் தெரிஞ்ச விளையாட்டு கிட்டி தான்.//

கிட்டியா? இப்படி ஒரு விளையாட்டு நான் கேள்விப்பட்டதில்லையே?

said...

//எங்க ஊர் பக்கம் அதை கிட்டின்னு தான் சொல்வாங்க.//

உங்க ஊர் தூரத்துல என்னன்னு சொல்வாங்க தல? :-?

said...

நல்லா சுவாரஸ்யமாதான் போய்ட்டு இருக்கு தல!!
நடத்துங்க!!

கிராமத்துல நடக்கற பல விஷயங்களை மொத முறையா இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்!! :-)

said...

niyabagam varuthe niyabagam varuthe...

said...

செம ஆட்டோகிராஃபா இருக்கு. கலக்கலா எழுதியிருக்கிங்க.

said...

போட சினிமா quiz ல கலந்துக்க முடியல தலை. ஆனா, nested questions ஆ குடுக்காம இந்த மாதிரி direct ஆ குடுங்க இனிமேல்.

said...

மீள் பதிவாப் போட்டீங்கன்னா அப்புறம் ஆடியன்ஸுக்கு அலுத்துப் போயிடப் போகுது! :D

Anonymous said...

thala pirandha naal vaazhthukkal :)
olimayama irukatum vara kaalam poora! :D

-porkodi

Anonymous said...

@Arvinth:

hello arvinth, en bloga padichurkingla? :-) dankees! unga suggestion nyayamanadhu thaan! (neenga ellarayum ezhuda solringla, illa thalaiya mattum thana nu enakku seriya puriala, irundhalum ok!) ana adhula sila prachanaigal irukku. social issues ezhupum podhu adhuku marupatta karuthum varudhu. adhai sila per nagarigama therivikranga, sila per ellaiya meeriduvanga.

namma vazhkaiye epoda weekend varum nu naai pozhappa irukku, idhula inga vandhu vambai vilai kuduthu vaanganuma nu oru ennam thaan podhuva enga pala paeruku irukradha nenakren. (idhuvum en opinion thaan, sorry for generalizing)

Also, social issues are so big that our posts MAY not have that required reach. 'naan oruthan solli enna aaga pogudhu' attitude thaan ellaraiyum pola! :-(

anyway, unga karuthu romba sari! blog reading than blogging ku mudhal step! so vaazhthukal :-)

-porkodi

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

said...

பொற்கொடி, கார்த்திக், உங்க வாழ்த்துகளுக்கு நன்றி.. நன்றி

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல:) போஸ்ட் இன்னும் படிக்கல அப்பால வரேன்:)

said...

iniya pirantha nal valthukal.

vazga valarga

said...

Annathaey time inaikku thaan kidaichudhu..So ipa thaan padichaen..

Paniyaara kanaamoochi ipa thaan kaelvi paduraen..Seven stones aatam maadhiri konjam konjam irukku..

Apuram naan pambaram vittaa eppavum mottai thaan..Saatai varadhu..So naan oru styleaa suthuvaen..
Apuram gilli kittipullu solluvoam..

Thipaeti padam..Summer leavela alainju therinju thaedi edupoam ..Aamam sila nerathula 100- vachurundhalum boandiya laam aaghiduvoam..

Indha post moththathula super thala....

said...

Hmmm apuram unga ID koodunga..Ungalukkum Gm mail annuppuraen dhinamum....

said...

hai karthik .i am jerome. i am also from vellodu. i dont know who you are actually but you have given full details about our village... so i want to contact you and so pl give your e-mail id... my e-mail id is xjeromekumar@gmail.com