Thursday, May 24, 2007

பாதயாத்திரையில் அவளின் சந்திப்பு

பாதயாத்திரை போவதென்பது பக்தி கலந்த ஒரு அலாதியான விஷயம். எங்க ஊர்ல வேளாங்கண்ணி மாதாவிற்கும் பழநி முருகனுக்கும் மாலை போடுவார்கள். இப்பொழுது சபரிமலை ஐயப்பனுக்கும் மாலை போட்டு விரதமிருக்கிறார்கள். எனக்கு தெரிந்து இந்த வருஷம், பங்குனி முடிந்ததோடு கடந்த இருபது வருஷமாக பழநிக்கு மாலை போட்டு பாதயாத்திரை சென்று வருகிறார்கள், எங்கள் ஊரிலிருந்து.

எனக்கு எட்டு வயது இருக்கும் போது முதன் முதலாக பழநிக்கு பாதயாத்திரை போனேன். எங்கள் ஊரிலிருந்து பழநிக்கு 61 கிலோமீட்டர். முதல் நாள் சாயந்திரம் கிளம்பினா, அடுத்த நாள் இரவு தான் பழநி போய் சேருவோம். எங்கள் ஊரிலிருக்கும் சில பேர் அடுத்த நாள் பத்து மணிகெல்லாம் ஊரில் இருப்பார்கள், சாமியை பார்த்துவிட்டு. தினமும் சிறுமலைக்கு ஏறி இறங்கி பழக்கம் அவர்களுக்கு. அவ்வளவு அசுர நடையர்கள் அவர்கள்

அந்த சின்ன வயதில் என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியல. என்னுடன் சேர்ந்து நடந்து வந்த என் மாமா, சித்தப்பாக்கள் தான் என்னை தூக்கி சென்றனர். இதே மாதிரி தான், ஜானகி எம்.ஜி.ஆர் மதுரையில் முதல் மாநாடு தமுக்கம் மைதானத்தில் நடத்திய போதும் என்னை இதே போல் தான் அவர்கள் அந்த மாநாட்டு திடலில் தூக்கிய வண்ணம் இருந்தனர்.. அடுத்த முறை போனபோது அவர்கள் என்னை சுமக்க முடியாத அளவு நான் வளர்ந்து விட்டேன். அதனால் பாதி தூரம் நடந்தும் மீதி தூரம் பஸ்ஸிலுமாக சென்றேன்..

மூன்றாவது முறையாக நான் பதினோராவது வகுப்பு படிக்கும் போது பாதயாத்திரை சென்றேன். எப்போதும் பங்குனி உத்திரத்திற்கு நடந்து செல்பவன், அந்த தடவை என் நண்பர்களுடன் சேர்ந்து தைப் பூசத்திற்கு சென்றேன். அந்த பாதயாத்திரை இன்னும் மறக்க எனது இளமைகால நாட்களின் சம்பவங்களில் ஒன்று. நல்ல அனுபவம். பல ஊர்களிலிருந்து வரும் நிறைய பேரிடம் இரண்டற கலந்துபழகும் வாய்பு கிடைத்தது.

அப்படி பாதயாத்திரை சென்று திரும்பி வரும் வேளையில், திண்டுகல்லிற்கு வருவதற்காக பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தோம். எங்கள் ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் கடைசி நிறுத்தம் செல்வதற்கு ஏறுபவர்களுக்கு தான் அமர இடம் கிடைக்கும். இடையில் இறங்கும் ஆட்களை வண்டியில், வண்டி கிளம்பும் வரை ஏறவிட மாட்டார்கள். அதுவரை எனக்கும் அது கொடுமையான அனுபவத்தை தந்த விஷயம். அன்றைக்கும் அதுவே எனக்கு அழகான மலரும் நினைவுகளாய் இன்று என்னை நினைக்க வைக்கும் அளவிற்கு தருணம் அது.

நான் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு பக்கத்தில் ஒட்டன்சத்திரம் செல்வதற்காக ஒரு பொண்ணுங்க கூட்டம் வந்தது. எல்லாம் கேரளாவை சேர்ந்தவர்கள். ஓட்டன்சத்திரம் பள்ளியில் படிப்பவர்கள் போல. ஆயிரம் விண்மீன்கள் இருந்தாலும் பளிசென்று நிலா தெரிவது போல, என் அருகில், வட்ட முகம், கரு கரு விழிகள் (அப்படியே கேரளத்து கண்கள்), கவுன் போட்டுகொண்டு ஒருவள் இருந்தாள். பார்த்தவுடன், ஃபெவிகால் உதவியில்லாமல் நெஞ்சில் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் பாந்த முகம்..சாந்த முகம்..காந்த முகம்.. பஸ்ஸிள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவள் சிரிக்கும் போதெல்லாம், கண்டெக்டர் தனது சில்லறை பையை கீழே கொட்டிவிட்டாரோ என்று நினைக்கத்தோனும்.

நானும் அந்த வயதுக்கே ஊரிய குறும்புடன் அந்த பெண்ணுடன் அரைமணி நேர பயணத்தை கண்களில் பேசிய கடந்தேன். இந்த இடைப்பட்ட வெளியில், அவளுக்கும் தெரிந்துவிட்டிருந்தது, அவளுக்காய் ஒரு ஜீவன் மெழுகாய் பக்கத்தில் உருகுகிறது என்று.. அவள் பஸ்ஸை விட்டு இறங்கும் போது கடைசி படியில் நின்றுகொண்டு, என்னை திரும்பி பார்த்த ஒரு பார்வையில், இதயம் ஒரு முறை துடிப்பை நிறுத்தி அந்த பிரிவை தாங்காமல் கதறியது.அவள் முகம் இப்போது மறந்து போனாலும், அப்போது எனது வாலிப வயசில் அவள் உருவாக்கிய, அவள் எனது மனதின் தெருக்களில் நடந்து போன அந்த பாதச்சுவடுகள் இன்னமும் அப்படியே இருக்கிறது. எப்போதெல்லாம் பழநி பாதயாத்திரை பற்றி நினைப்பேனோ அப்போதெல்லாம், அந்த நினைவுக் குதிரையில் ராணியாய் சவாரி செய்து வருவாள் அவள். எப்படி நமக்கே தெரியாமல் நமது இதய சிம்மாசனத்தில் தற்காலிகமாக எத்தனையோ பேர் உட்கார்ந்து சென்றிருப்பார்கள் அதில் இவளும் ஒருவள்.

23 பின்னூட்டங்கள்:

mgnithi said...

Ennanga kaarthi ithu... Romba feelings of indiava irukke..

Neenga chinna vayasula paarhta antha ponnu Recenta unga kanavula ethavathu vathaangala..

Anonymous said...

Superna karthik, nalla anubavichu eshuti irukeenga ;-)

CVR said...

//எப்படி நமக்கே தெரியாமல் நமது இதய சிம்மாசனத்தில் தற்காலிகமாக எத்தனையோ பேர் உட்கார்ந்து சென்றிருப்பார்கள் அதில் இவளும் ஒருவள்.
//
ரைட்டு தான் தல!! நான் ஒரு தடவை ந்யூயார்க் போயிருந்த போது சென்ட்ரல் பார்க்குல ஒரு அக்கா தூங்கிட்டு இருந்தாங்க!! Sleeping beauty - ங்கற சொல்லுக்கு ஏத்த காட்சி. பக்கத்துலையும் யாரும் இல்ல.சுத்தி நிறைய மக்கள் போய்ட்டு வந்துட்டு இருக்கும் போது இவங்க மட்டும் அழகா /அமைதியா தூங்கிட்டு இருந்தது ரொம்பவும் ஆச்சரியமா இருந்தது!!
இப்போ எனக்கும் அவங்க முகம் மறந்து போச்சு,ஆனா ஒரு 5 நிமிடங்களுக்கு மனதில் அவரின் தாக்கம் இருந்தது!!
நல்ல பதிவு!
வாழ்த்துக்கள்!! :-)

Anonymous said...

Karthik,

First Comment. Good one. I visualized the scene from "A Bronx Tale" movie, while reading your post.

Sero

G3 said...

Adada.. Eppavum pola unga nadaila asathi irukkeenga.. super :-))

//அந்த பாதயாத்திரை இன்னும் மறக்க எனது இளமைகால நாட்களின் சம்பவங்களில் ஒன்று//
marakka mudiyaadhannu solla vandheengalo :-))

// எப்படி நமக்கே தெரியாமல் நமது இதய சிம்மாசனத்தில் தற்காலிகமாக எத்தனையோ பேர் உட்கார்ந்து சென்றிருப்பார்கள் அதில் இவளும் ஒருவள். //
Appadiyae linea ellara pathiyum postunga :-))

balar said...

நீங்கள் கூறுவது மிகவும் உண்மை கார்த்தி..ஒரு சிலரை பார்த்தும் நம்மை அறியாமலே அவர்கள் ஏதாவது ஒருவகையில் நம் இதயத்தை தொட்டு செல்வார்கள்..அவர்கள் பிரிந்தாலும் அவர்களுடைய அந்த ஒரிரு நிமிட நினைவுகள் நம்மை விட்டு பிரிய கொஞ்ச நாளாகும்..

அதுவும் கேரள வள்ளிகள் என்றால் சொல்லவே வேண்டாம்...:))

மு.கார்த்திகேயன் said...

//Neenga chinna vayasula paarhta antha ponnu Recenta unga kanavula ethavathu vathaangala.. //

அப்படியெல்லாம் இல்ல நிதி.. ஹிஹிஹி.. மறுபடியும் ஐந்து நாளைக்கு முன்னால் இங்கே ஒரு பொண்ணை ஒரு ஷாப்பிங் மால்ல பார்த்தேன் அது தான்

மு.கார்த்திகேயன் said...

//Superna karthik, nalla anubavichu eshuti irukeenga ;-) //

நன்றிங்க ஹனிஃப் ;-)

மு.கார்த்திகேயன் said...

//இப்போ எனக்கும் அவங்க முகம் மறந்து போச்சு,ஆனா ஒரு 5 நிமிடங்களுக்கு மனதில் அவரின் தாக்கம் இருந்தது!!//

உண்மை தான் எப்படி மறக்க முடியும் அது மாதிரியான முகங்களை, CVR

மு.கார்த்திகேயன் said...

//First Comment. Good one. I visualized the scene from "A Bronx Tale" movie, while reading your post.
//

நன்றிங்கோ சரோ!

மு.கார்த்திகேயன் said...

//marakka mudiyaadhannu solla vandheengalo //

ஹிஹி.. ஆமா G3!

//Appadiyae linea ellara pathiyum postunga //

போட்டுட்டா போச்சு G3!

மு.கார்த்திகேயன் said...

//அதுவும் கேரள வள்ளிகள் என்றால் சொல்லவே வேண்டாம்...:)) //

ஹிஹிஹி.. ஆமாங்க பாலர்!

Ponnarasi Kothandaraman said...

Aaaha! Antha ponnu kandupudikka ethathu adayalam iruka ;) Help pannalam paakren!

Bytheway oru naal post padikirennu sonna apram aala kaanumey! :) Enna theriyutha? :D

My days(Gops) said...

neenga nallavara kettavara?

k4k annathe blog a poi paarunga.. for the feedback [:)]

Padmapriya said...

Princi..sooper eh ezhutheerkeenga.. :)

//ஆயிரம் விண்மீன்கள் இருந்தாலும் பளிசென்று நிலா தெரிவது போல, என் அருகில், வட்ட முகம், கரு கரு விழிகள் (அப்படியே கேரளத்து கண்கள்), கவுன் போட்டுகொண்டு ஒருவள் இருந்தாள்//

Aha.. :D

Neengalea ippdi pannirntheenganna.. unga class la matha pasangala epdi thatti keappeenga???

adhukkaha.. matha sandhippukala ezhudhaama vittudaatheenga..

Geetha Sambasivam said...

இன்னொரு ஆட்டோ க்ராஃப்?

சேதுக்கரசி said...

அன்புடன் கவிதைப் போட்டியில் படக்கவிதைப் பிரிவில் உங்கள் தோழி வேதா ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறார்!

(கவிதைப் போட்டி வேலையா ரொம்ப பிசி கார்த்தி... பதிவு படிக்க அப்புறம் வரேன், சரியா?)

Aboorva said...

Nanbarae Vannakam Thiru Bala avargalin blog mulam cross Panni ungal blog pakkam vanthane (Photo parrkum pothu Director Suki Ganesan mathiri Theridandu?) Ambi kalayanam matturm Thriumathi ambi birthday Sethi mikkavaum Magalichi allikarathu. In your story also there is a directorial touch..... Goood one.

Raji said...

Hmmm naan kooda enga oorala irundhu Vaitheeswaran kovilukku povaenga...But only 14kms...Aana vayal summa rendu pakkamum pachai pasaelunu irukkum...En thambingalaam poi marathu maela eruradhu manga parichutu varadhu..Superaa irukkum :)

ஜி said...

எத்தன??

தல இப்படியே போன உங்களுக்கு தசரத கல்யாணந்தான்... ;)))

சுப.செந்தில் said...

//பாந்த முகம்..சாந்த முகம்..காந்த முகம்.. பஸ்ஸிள் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கும் போது, இவள் சிரிக்கும் போதெல்லாம், கண்டெக்டர் தனது சில்லறை பையை கீழே கொட்டிவிட்டாரோ//
ஆட்டோகிராப் னு நெனச்சா இப்படி கவிதையா அள்ளி தெளிச்சிருக்கீங்க!கலக்குறீங்க கார்த்தி!

Syam said...

பாதயாத்திரை போக சொன்னா ஒட்டன்சத்திரம் கேரளா நர்சுகள சைட் அடிச்சிட்டு வந்து இருக்கீங்க :-)

Arunkumar said...

//
எத்தன??

தல இப்படியே போன உங்களுக்கு தசரத கல்யாணந்தான்... ;)))
//

G,
enna idhu sinna pulla thanama? beauty enga irundaalum adha rasikkanum :)

thala, u carry on :)