Tuesday, May 01, 2007

தல, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (அரிய புகைப்படங்களுடன்)

போன முறை, இதே நாளில் 'தல'க்கு பரமசிவனும் திருப்பதியும் வந்த நேரம். ஒரு மனிதன் தன்னை இந்த அளவுக்கு மாற்றிகொள்ள முடியுமா என்று வியந்த விஷயம். ரெட் படத்தில் ஏற்றப்பட்ட உடம்பு எங்கே, இப்படி இளகி இளைத்து மறு அவதாரம் எடுத்த பரமசிவன் எங்கே என்று நனவு என்று தெரிந்தும் நான் என்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். திருப்பதியில் பேரரசு போதைக்கு ஊறுகாய் ஆனாலும், வரலாறு தீபாவளிக்கு வந்து படைத்த வரலாற்றில் தல அஜித் தலை நிமிர்ந்தார்.

(தனது 29வது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடிய போது)

இன்னமும் கேலி பேசாதோர் இல்லை.. சன் மியூஸிக்கில் வேண்டுமென்றே அஜித் பாடல்களை போடாமல் அஜித் ஓரங்கட்டப்பட்டார்.. (அஜித், சன் டிவி கலாநிதிமாறனை சந்தித்ததாக படித்தேன் ஒரு இதழில்.. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று) பொங்கலுக்கு வந்த ஆழ்வாரும் சற்றே அவருக்கு சோதனை தந்தது. இப்படி போன வருடம் ஏற்றங்களையும் இறக்கங்களையும் அஜித்திற்கு தந்த வருடம்.

இந்த வருடம் கிரீடமும், பில்லாவும் காத்திருக்கிறது. தல, உங்கள் படங்களை உங்களை விட நாங்கள் அதிகமாய் எதிர்பாக்குறொம்.. நீங்க கலக்குங்க தலைவா.. நாங்கள் துணையிருக்கிறோம்..


இத்தனை துயர்கள் வந்தாலும் உறவுகள் போல அஜித்திற்கு உறுதுணை, அவரது ரசிகர்கள் தான்.. தோளுக்கு தோளாய் அவருக்கு ஆதரவும் வெற்றிகளின் போது கைகள் குலுக்கி வாணவேடிக்கையும் தரும் அதே நேரம், தோல்விகளின் போது தோளாக நின்று அவருக்கு பெரும்படைகளாக இருக்கின்றனர்..


தன்னம்பிக்கை கொண்டு, கீழே விழுந்தாலும் எழுந்து ஓடும் குதிரையாய் இருக்கும் தல அஜித், நடிக்கும் படங்களின் கதைகளை மட்டும் ஒழுங்கா கேட்டு நடித்தால் இன்னும் தொடலாம் சிகரத்தை..

தல, பல வெற்றிப்படிகள் ஏறி சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம்பிடிக்க வாழ்த்துக்கள் தல...

தல, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

27 பின்னூட்டங்கள்:

MyFriend said...

தலக்கு எனது பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லிக்கிறேன். :-D

KG said...

Thala than nalla manithan

Thalai pol illai punithan


Thanambikai, thanadakkam konda manithan thoothatha sarithiram illa

Thala nee dhool kelapu maaaaaa

சுப.செந்தில் said...

தலயோட பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துக்கள் பதிவப் போட்டு என்னப் போல தல ரசிகர்களை எல்லாம் குஷிப்படுத்திட்டீங்க வாத்தியாரே!

சுப.செந்தில் said...

தல பிறந்த நளுக்கு இந்த காத்தாடியோட வாழ்த்துக்கள்! :)

Geetha Sambasivam said...

nijama ivvalavu bakthiyoda irukkum ungalukku than vazhthukkal sollanum.

Syam said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....:-)

மணிகண்டன் said...

தல பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

balar said...

பல்லாண்டு வாழ்க.:)

Priya said...

தலக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ட்ரீட் உண்டில்ல கார்த்திக்?

Anonymous said...

huh, he is useless .. remember ur relatives and friends birthday and do something useful.

-ur friend

Arunkumar said...

தல மேல உங்களுக்கு இருக்குற பக்திய நெனச்சா கண் கலங்குது எனக்கு... உங்களோட சேந்து நானும் வாழ்த்திக்குறேன்.

ப்ளீஸ், கத கேட்டு நடிக்க சொல்லுங்க.. திறமைய வீனடிக்குறாரு உங்க தல :-(

Syam said...

// திறமைய வீனடிக்குறாரு உங்க தல :-(
//

அருண், பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்...என்ன திறமை இருக்கு வீணடிக்க :-)

Anonymous said...

Thnx karthi..
Romba naal thalayoda pathivai ethirparthen...

"IVAN THAN NALLA MANITHAN
IVAN POL ILLAI PUNITHAN"

WISH U HAPPY BDAY THALA

-Kumaresh

Anonymous said...

!!! kadavule ajithayum kaapathu... avar bakthargalaiyaum kaapathu :-)

-porkodi

ambi said...

Happy birthday Ajith!

Anonymous said...

Thala entha year kreedom soodiya billavaga vanthu vetri kodi katta endrum valuthum anbu rasigan

Anonymous said...

Syam,


Ajith theriamai illanu sonna avarukku
3 times flimfare award kodutha tamil rasigargal muttal pasanga illa .... neenga maatum than over smart tamilnatula ......

Arunkumar said...

//
அருண், பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்...என்ன திறமை இருக்கு வீணடிக்க :-)
//
நாட்ஸ், விஜய் அளவுக்கு டேன்சும் காமிடியும் அஜீத்துக்கு வராது
தான் ஆனா வாலி,ஆசை மாதிரி படங்கள்ல நல்ல தான
நடிச்சாரு. அப்பால மக்கள் ஓவரா ஏத்திவிட்டு இன்னைக்கு
இந்த நிலமை.

விஜய்க்கு-னு ஒரு ட்ரெண்ட் இருக்கு. song/comedy/sentiment/dance/
dappanguthu/song.. in a chain.
இந்த ட்ரெண்டுக்கு கதை தேவயில்ல.. மதுர மாதிரி டப்பா படம்கூட ஓடிரும்.

ஆனா அஜீத்துக்குனு ஒரு ட்ரெண்டும்
கெடயாது. கதைய மட்டுமே நம்பி நடிச்சாத்தான் உண்டு.
நல்ல கதைல நடிச்சா (வெட்டி பந்தா இல்லாம) இன்னும் ஒரு
சின்ன ரவுண்டு வரவாரு-னு தான் நானும் நினைக்குறேன்.

Dreamzz said...

அடடா! நம்ம அசீத்துக்கு பொறந்த நாளா!

நம்ம சார்பாவும் ஹாப்பி பெர்த் டே சொல்லிடுங்க!

Dreamzz said...

மறக்காம சொன்ன உங்கள்ளுக்கு ஒரு நன்றி

Padmapriya said...

ajith ku bday wishes!!
treat enga? epo?

Priya said...

Present Karthick. Belated birthday wishes to Ajith...

Raji said...

Ahaha nammakku aanis neraya adhunaal thala B'thday kku oru post podalainu feel pannina koraya theethuteeenga Karthik ...

Happy Birthday Thala!!

Syam said...

//நல்ல கதைல நடிச்சா (வெட்டி பந்தா இல்லாம) இன்னும் ஒரு
சின்ன ரவுண்டு வரவாரு-னு தான் நானும் நினைக்குறேன்//

அருண் அது மேட்டரு...நல்ல கதை இருந்தா போதும் யாரு நடிச்சாலும் படம் ஓடும் :-)

Syam said...

அட பாதில விட்டுட்டேன்...அதுக்கு தலயும் வேண்டாம் வாலும் வேண்டாம் :-)

கார்த்திக் பிரபு said...

ariya pugai padangaalunnu sonnegana onnuthuyum kanala?

Anonymous said...

Killapintankaya Killapintankaya
thalai thappu solladdi ivangalukku
thuukam varathey....
(only one animal barks against them self ... no need explain vijay fans)