Monday, April 30, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 3

இரண்டாம் பகுதி

ஒரு நாள் இரவு, பனிரெண்டு மணி போல எப்போதும் அடிக்கபடும் சர்ச் கோவில் மணியோசை கேட்டது.. ஊரே கண்ணை முழிச்சுகிட்டது.. திருடர்களை பிடிச்சதாகவும், அவங்க நாலஞ்சு பேருன்னும் தெரிஞ்சவுடன் எல்லா வீட்டுல இருந்த உலக்கை, அருவாள் எல்லாம் அந்த வீட்டு ஆண்களோட கைக்கு மாறியது.. அதுக்குள்ள யாரோ போலீசுக்கும் போன் போட்டாங்க.. போலீஸ் வர்றதுக்குள்ள, ஊரே சேர்ந்து அடிச்சதுல, அந்த அஞ்சு பேரும் கிழிஞ்ச துணிமாதிரி ஆகியிருந்தாங்க..போலீஸ் வந்து ஊரை சமாதனப் படுத்தி அந்த அஞ்சு பேரையும் கூட்டிகிட்டு போனாங்க..

போலீஸுக்கு எங்க ஊர்ல இருக்க பாதி பேரோட பேர் தெரியும்.. நிறைய பேர் போலீஸ் தோளுல கை போட்டு பேசுற அளவுக்கு பரிச்சயமானவங்க.. சில பேர் போலீஸ் கிட்ட நண்பர்கள் மாதிரி கூட பழகுவாங்க.. எனக்கெல்லாம் போலீஸ்னா எப்போதுமே ஒரு அலர்ஜி உண்டு.. எங்க ஊரை நம்பி எங்க ஊர் காரவங்க மாட்டும் அல்ல, நிறைய போலீஸ் குடும்பங்கள் அப்போது பிழைத்து கொண்டிருந்தன.. ஆனால் ஒரு சில பேர் பிழைக்க நிறைய குடும்பங்கள் அழிந்ததென்னவோ உண்மை தான்.. சில போலீஸ்காரர்கள் இந்த சாராய வியாபாரிகளுக்கு கூழைகும்பிடு போட்டு பணம் வாங்கி சென்றதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் இரவு ஆறு மணி ஆகிவிட்டால் எங்கள் தெருவே சத்தமும் சண்டையும் கலாட்டாவுமாகத் தான் இருக்கும்.. வேலைக்கு போய்விட்டு வந்து ஒவ்வொருவராக அப்போது தான் சாராயத்தை குடித்து விட்டு அலம்பல் பண்ணுவார்கள்.. ஒருவர் வயது கிட்டதட்ட அறுபதை ஒட்டி இருக்கும்..இவர் கிறித்துவர்..தண்ணியை போட்டுவிட்டு வந்தால், எங்கள் ஊர் பெரிய சிலுவைதிண்ணை (இது சர்ச் கிடையாது. ஊரில் இது போன்று சிலுவை திண்ணைகள் நிறைய உண்டு. பத்து வருடங்களுக்கு முன்னால், இங்கே மதிய நேரத்தில் அரட்டை அடிப்பதும் படுத்துக் கிடப்பதுமாய் நிறைய பேர் இருப்பார்கள். ஒரு சிலுவை வைக்கப்பட்டு திணை கட்டப்பட்டிருக்கும். சர்ச் பூட்டி இருக்கும் நேரங்களில் இங்கே தான் எல்லோரும் சாமி கும்பிடுவார்கள்) முன் மண்டியிட்டு பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார்.. பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவேன்னு இவர் ஆரம்பித்தால் கிட்டதட்ட இவரது பிரசங்கம் ஒரு மணி நேரதுக்கும் மேலாக இருக்கும்.. மற்ற நாட்களில் இவர் அவ்வளவு சாது.. அவரவர் அவரவர் வேலை பார்த்துக்கொண்டு போவார்கள்.. இதெல்லாம் எங்கள் ஊர் மனிதர்களுக்கு மிகவும் சகஜம்..

இன்னொருவர்.. இவர் வீடு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் தோட்டத்தில் இருப்பதால் வாரம் ஒரு முறை தான் வருவார்.. கிட்டதட்ட நானூறு அடி தூரம் இருக்கும் எங்கள் வீதியில் வடக்கும் தெற்குமாக கிட்டதட்ட ஒரு முப்பது தடவைக்கு மேல நடப்பார்.. இவர் இந்து என்பதால்..இவருடைய பூஜையும் உண்டு.. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாப்பதிரண்டு ரிஷிமார்களுக்கும் என்ன சொல்லிக்கிறேனா..அப்படின்னு ஆரம்பிச்சார்னா அவர் தோட்டத்துல பயிருக்கு பூச்சி மருந்து அடிக்கிறதுல இருந்து காலைல சாப்பிட்ட கஞ்சி வரைக்கும் ஒண்ணு விடாம சொல்லிடுவர்.. ஆனா எவ்வளவு நேரம் பேசினாலும் இவங்க வாயில இருந்து ஒரு கெட்ட வார்த்தை கூட வராது.. இன்னும் சில பேர் இருக்காங்க.. வாயத் திறந்தாலே கெட்ட வார்த்தைகள் தான்.. இவங்க பேசுறதை கேட்டாலே காது கூட புளுத்துப்போகும்னு சொல்வாங்க.. ஆனா ஒவ்வருவரும் ஒரு ஒரு ஸ்டைல் வச்சு இருப்பாங்க.. எங்க வீட்டுப்பக்கதுல இருந்த ஒரு முன்னாள் வாத்தியார், தண்ணியை போட்டாலே சின்ன சின்ன கணக்குகள் சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்.. என்ன பண்ணினாய்..என்ன பன்னி நாய்னு சொற்களைப் பிரித்து தமிழ் பாடம் வேற எடுப்பார்..

இரவு நேர எங்கள் ஊர் இப்படித் தான் இருக்கும்.. இது இல்லாமல் எங்கள் ஊரில் இருக்கும் இந்திராகாந்தி சிலை அருகே சில சூதாட்டமெல்லாம் நடக்கும்.. இதுக்கு ஆங்கிலத்துல பிங்கோன்னு பேர் சொல்றாங்க.. ஒரு தகடுல ஒன்பது கட்டங்கள்ல ஒன்பது எண்கள் இருக்கும்.. இந்த விளையாட்டு விளையாட ஒரு ரூபா கொடுத்து இந்த தகட்ட வாங்கி கொள்ளணும்.. இது மாதிரி பல பேர் வாங்கி இருப்பாங்க.. இதை நடத்துறவர் ஒவ்வொரு நம்பரா சொல்வார்.. அது உங்க தகடுல இருந்தா அந்த நம்பர் மேல கொஞ்ச மண்ணை எடுத்து வச்சுக்கணும்.. அப்படி எல்லா நம்பரிலும் நீங்க மண் நீங்க வச்சுட்டீங்கன்னா நீங்க தான் வின்னர்.. இது மாதிரி பல விளையாட்டுக்கள் ஆடுவாங்க.. அதுவும் அந்த தெரு விளக்கின் கீழ் விடிய விடிய நடக்குமே கோலிகுண்டு விளையாட்டு, அதை பாக்கவே அவ்வளவு கூட்டம் கூடி நிக்கும்.. அந்த விளையாட்டுல காசு வச்சு எல்லாம் விளையாடுவாங்க.. பீடியை பத்த வச்சுகிட்டு ஒவ்வொருத்தரும் அவ்வளவு நுணுக்கமா விளையாடுறதை பாக்கணுமே..நமக்கே ரொம்ப த்ரில்லா இருக்கும்.. இது இல்லாம சீட்டு விளையாட்டு படு ஜோரா இருக்கும்.. ஆலமரம், அரசமரம், புளியமரம்னு ஊருக்கு மூணு திசையிலும் பகலெல்லாம் இந்த சூதாட்டம் நடக்கும்.. இது மட்டுமில்லாமல், யாராவது மதியத்துக்கு மேல இறந்து போயிட்டா, அவங்கள அடுத்த நாள் தான் சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போவாங்க.. இறந்து போனவங்களுக்கு இறுதி மரியாதை எல்லாம் அடுத்த நாள் தான் நடக்கும்.. எங்க ஊர்ப் பக்கம், அப்படி இறந்து போனவங்களை அலங்கரிச்சு ஒரு சேர்ல உக்கார வச்சுடுவாங்க.. நெருங்கிய சொந்தங்கள் மட்டும் தான் அந்த நேரம் இருப்பாங்க.. விடிய விடிய கண் முழிச்சு இறந்து போனவங்க கிட்ட இருக்கனும்னு ஒரு பழக்கம் இருக்கு.. அந்த நேரத்துல இறந்து போனவங்க வீட்டு சார்பா சீட்டுக்கட்டு வாங்கித் தருவாங்க.. அதை வச்சு அங்கேயும் காசு வச்சு இந்த விளையாட்டு நடக்கும். இவங்களுக்கு டீயெல்லாம் வேற சப்ளை பண்ணனும்.. இவங்க கூட இறந்தவங்க வீட்டுக்காரவங்களும் கண் முழிச்சு தூங்காம இருப்பாங்க. பத்து வருஷதுக்கு முன்னாடி, இதோட ரெண்டு படம் வேற வீடியோவுல ஓட்டுவாங்க..

இதெல்லாம் பெரியவங்க விளையாட்டுனா, சின்ன பசங்க விளையாட்டுன்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு.. அந்த ஒவ்வொரு விளையாட்டையும் இப்போ நினச்சாலும் அதுக்காக போட்ட சண்டை, அந்த சந்தோசம் மனசுல இன்னைக்கும் இன்னிக்கும்.

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

22 பின்னூட்டங்கள்:

said...

கார்த்தி

இதற்கு முந்தைய பதிவுகளும் படித்தேன்...
வெள்ளோடு கிராமத்தின் வெள்ளோட்டமா? :-)
கார்த்தியின் மால்குடி டேஸ் போல இருக்கே!

ஊர்களில் நடக்கும் அன்றாடப் பிரச்சனைகளையும் தாண்டி மக்கள் வாழ்க்கை எப்படி ஓடுதுன்னு இயல்பா சொல்றீங்க!

//தண்ணியை போட்டாலே சின்ன சின்ன கணக்குகள் சொல்லி பாடம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்.. என்ன பண்ணினாய்..என்ன பன்னி நாய்னு சொற்களைப் பிரித்து தமிழ் பாடம் வேற//

:-))))

said...

கார்த்தி,
நல்ல தொடர். மிகவும் சுவாரசியமாகச் சொல்கிறீர்கள். இதற்கு முந்திய பதிவுகளையும் வாசித்திருந்தேன். சோம்பல் காரணமாக பின்னூட்டம் எழுதவில்லை.

நானும் ஒரு சின்னக் கிராமத்திலிருந்து வந்தவன் தான்.

said...

வழக்கம் போல் அருமையான நடையில் எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள் :) :)

said...

//என்ன பண்ணினாய்..என்ன பன்னி நாய்னு சொற்களைப் பிரித்து தமிழ் பாடம் வேற//

LOL:) :)

ambi said...

//பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவேன்னு இவர் ஆரம்பித்தால் கிட்டதட்ட இவரது பிரசங்கம் ஒரு மணி நேரதுக்கும் மேலாக இருக்கும்.//

ROTFL :)))

//கார்த்தியின் மால்குடி டேஸ் போல இருக்கே!//

me also repeatuuuuuuuuuuu! :)

C.M.HANIFF said...

Nalla irukku unga pathivu, oru super flash back ;-)

said...

Pricipal saar...kadhai enna immam perisa iruku....but unlike usual class lectures..interest aaum iruku

said...

naa ivlo periya post aa endha kadailayum paathathey illa

said...

unga old post ellathyum oru naal ukkandhu padikkanumnu vachirken..

indha episode m nallathaan irundhadhu.. ana full flow kidaikkala.. :(

muzhusa padichutu vaaren.. :)

said...

thani ulla ponadhuku appuram manushanga panra alambal iruke....comedy koothu adhu...

said...

aduvum gramamna ketkave vendaam....

said...

//என்ன பண்ணினாய்..என்ன பன்னி நாய்னு சொற்களைப் பிரித்து தமிழ் பாடம் வேற எடுப்பார்..//

இது high light :)

அடுத்த பகுதிக்கு waiting :)

said...

மிகவும் அருமையான் தொடர் கார்த்தி.
படிக்கும்போது என்னுடைய தாத்தா/பாட்டி கிராமத்துக்கு அழைத்துப்போன்ற தொரு உணர்வு.

தொடரட்டும் கிராமத்துப் பார்வை..

said...

//
ஊர்களில் நடக்கும் அன்றாடப் பிரச்சனைகளையும் தாண்டி மக்கள் வாழ்க்கை எப்படி ஓடுதுன்னு இயல்பா சொல்றீங்க!
//
ரிப்பீட்டே

said...

//
ஊர்களில் நடக்கும் அன்றாடப் பிரச்சனைகளையும் தாண்டி மக்கள் வாழ்க்கை எப்படி ஓடுதுன்னு இயல்பா சொல்றீங்க!
//
ரிப்பீட்டே

said...

mmmm, pathivum aduthu aduthu poduvinga, naduvile commentsum poy koduthutu varvuvinga, aaniyum pidunguvinga, aanal namma pathivukku mattum vara matinga. enna kodumai ithu? :P

said...

Hello I am visiting your blog-Web and I like much. Congratulations

If you want you can visit ours, one is but irreverent and iconoclastic blog of the world, and one is in Catalonia - Spain

http://telamamaria.blogspot.com

Thank you very much

said...

//ஒவ்வொரு நாளும் இரவு ஆறு மணி ஆகிவிட்டால் //

போச்சு போ! ஆறு மணி உங்களுக்கு இரவா?? :-P

said...

கதை நடை சூப்பரா போகுத தல.. வாழ்த்துக்கள். :-D

said...

தல

அருமையாக இருக்கு உங்கள் பயணம் ;-)

said...

//அப்படின்னு ஆரம்பிச்சார்னா அவர் தோட்டத்துல பயிருக்கு பூச்சி மருந்து அடிக்கிறதுல இருந்து காலைல சாப்பிட்ட கஞ்சி வரைக்கும் ஒண்ணு விடாம சொல்லிடுவர்.. //

ROTFL...தல....:-)

said...

தல படிக்க படிக்க ஊர்க்கு போய்ட்டு வந்த எபக்ட்டு....:-)