Thursday, April 19, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 2

முதல் பகுதி

ஒரு பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது..

ஒரு நாள் இரவு, ஊரின் வடக்கு மூலையில் இருக்கும் ஓடு போட்ட வீட்டில் சரமாரியாக கல்மழை பொழிந்தது.. மறு நாள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருகும் மற்றொரு வீட்டில் அதே மாதிரி கல்மழை.. அந்த வீட்டை சுற்றியுள்ள வயல் வெளிகளை பார்த்தால் பெரிய பெரிய காலடி தடங்கள்..

சாதாரண மனிதர்களின் காடலடி தடங்களை விட மிகப் பெரியதாக அந்த காலடி தடங்கள் இருந்தன.. ஊரில் மக்களிடையே ஒருவித கிலி பரவியது.. எங்கள் ஊரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடந்தாலும், ஊரின் நடுவில் இருக்கும் ஒரு சர்ச்சின் மணி அடிக்கப்படும். அந்த சர்ச் மணி கேட்டால் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் அப்படியே போட்டது போட்டபடி எல்லோரும் அங்கே வந்து விடுவார்கள்.. மிகத் தொலைவில் இருப்பவர்கள் கூட எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக அந்த இடத்துக்கு வந்துவிடுவார்கள்.. ஒரு முறை ஊரின் அருகே இருந்த தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போர் திடீரென தீப் பற்றிக்கொண்டது.. பார்த்தவர்கள் உடனே கோயில் மணி அடிக்க, ஊரே சேர்ந்து அந்த தீயை அணைத்தது. எங்க ஊரை போன்ற கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால், போஸ்ட் ஆபீசு மூலம் தீயணைப்பு வண்டிக்கு சொல்லி அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.. அதனால் முடிந்தவரை ஊரே சேர்ந்து தான் சமாளிக்கும் இது போன்ற பிரச்சனைகளை..

அன்றும் அது போலவே சர்ச் மணி அடிக்கப்பட்டு ஊரே கூடியது.. தினமும் இது போன்ற கல்விழும் சம்பவம் நடந்து கொண்டிருந்ததால், ஊர் பஞ்சாயத்து கூடியது.. ஊருக்குள்ள வர்ற எல்லா பாதையிலும் செக்-போஸ்ட் வைக்கிறதுன்னு முடிவானது.. செக்-போஸ்ட்னா என்னன்னா உண்மையான செக்-போஸ்ட் மாதிரியே மரமெல்லாம் கட்டி வர்ற வ்ண்டி ஆளுகைளை எல்லாம் விசாரிப்பாங்க.. அங்கேயே ரெண்டு மூணு கட்டிலை போட்டு ஷிப்ட் முறைல படுத்து காவலும் காப்பாங்க.. ஒரு பயலும் அப்போ ஊருக்குள்ள அவ்வளவு சீக்கிரம் வரமுடியாது.. அப்போ சாராயம் விக்கிறது கூட இந்த செக்போஸ்டுக்கு வெளில தான் நடந்தது.. சாராயம் குடிக்கிறேன் பேர்வழின்னு கூட யாரும் உள்ளார வந்துட முடியாது..

அப்படித்தான் ஏதோ ஒரு ஊர்க்காரன் ஊருக்குள்ள வந்து மாட்டிக்கிட்டான். போதைல இருந்த அவன் என்ன கேள்வி கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்லல.. அவனை நாயை விட கேவலமா அடிச்சாங்க.. ரத்தம் வரவர ஊர்ல இருக்க ஒரு கோவில்ல அடச்சு வேற போட்டாங்க.. அப்புறம் அவன் போதை தெளிஞ்சு அவன் வீட்டுக்கு சொல்லிவிட்டு, அவங்க வந்து கூட்டிட்டு போனாங்க.. அவ்வளவு அழகான ரெண்டு பிள்ளைகளாம் அவனுக்கு.. அப்படி என்ன அவனுக்கு சாராய ருசி வேண்டி கிடக்குது.. அவன் பண்ணின பாவமோ என்னமோ..ரெண்டு நாளுல அவன் செத்துப்போனதா ஊர்ல பேசிகிட்டாங்க..

ஊர்ல பேசிகிட்டாங்க அப்படின்னா..திண்ணைப் பேச்சும் டீக்கடை பேச்சும் தான்.. இப்போவெல்லாம் திண்ணை வச்சு யாரும் வீடு கட்றதே இல்லை.. அந்த காலத்துல வழிபோக்கர்கள், இல்லை களைப்பா இருக்கவங்க கொஞ்சம் ஒதுங்க ஓய்வுவெடுக்க இந்த மாதிரி திண்ணக ஒவ்வொரு வீட்டுலையும் இருக்கும்.. இப்போ எல்லாம் எங்க ஊர்ல அப்படி திண்ணை இருக்க வீடுகளை விரல் விட்டு எண்ணிடலாம்.. இந்த மாதிரி திண்ணைல நீங்க உக்கார்ந்தா போதும் ஊர்ல நடக்குற எல்லா விஷயமும் உங்களுக்கு அத்துப்படியாயிடும்.. யார் ரெண்டு பேருக்கும் இடையே சண்டை... யார் யார் கூட ஓடிப்போனா..ஓடிப்போகப் போறாங்க.. எந்த தண்ணிக் குழாய்ல ரெண்டு குடம் தண்ணிக்காக சண்டை போட்டுக்கிட்டாங்கன்னு எல்லா மேட்டாரும் அங்கே வந்து சேர்ற பெண்களோட அரட்டையில தெரிஞ்சுடும். இதை வேற மாதிரி சொன்னா புரணி பேசுறதுப்பாங்க.. எப்படி ஒவ்வொரு டீக்கடையிலும் ஆண்கள் உட்கார்ந்து கதையடிக்கிறாங்களோ..அது மாதிரி பெண்களுக்கு ஏதோ ஒரு வீட்டு திண்ணை.. அடேயேப்பா..அப்பா அவங்க பேசுற பேச்சை பாக்கணும்..ஒரு பக்கம் சிரிப்பாவும் ஒரு பக்கம் எரிச்சலாவும் இருக்கும்..

அடியேய் உனக்கு விஷயம் தெரியுமா.. அந்த உடம்பெல்லாம் நகையா போட்டுகிட்டு மினிமினித்துகிட்டு போவாள்ல, அந்த கண்டக்டர் சம்சாரம்.. அவள அவ புருசன் போட்டு சாத்திட்டானாம் நேத்து ராவுல.. இது ரொம்ப படிக்காம கூலி வேலைக்கு போற பெண்களோட சம்பாஷனை.. ஏங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா.. நகை கடை விளம்பரதுல வர்ற பொண்ணு மாதிரி போவுமே அந்த கண்டக்டர் வைப், அந்த பொண்ணப் போட்டு அவ வீட்டுக்காரர் அடியோ அடின்னு அடிச்சுட்டாராம்..இது எந்த வேலைக்கும் போகாம வீட்லயே இருக்க பொண்ணுக பேச்சு.. இவங்களுக்கு மத்தவங்க விஷயத்தயும் பேசணும்னு ஒரு துறுதுறுப்பு இருக்கும்.. ஆனாலும் ஒரு பயம் வேற உள்ளார..

அப்படி கல்மழை பொழிஞ்ச சமயத்துல எங்க போனாலும் இதே பேச்சு தான்.. எல்லோருக்கும் அதப் பத்தி பேசுறப்போ கண்ணுல ஒரு பயம் இருக்கும்..எங்க ஊரையே தூங்காம கல் எரிஞ்ச மனுசங்க மேல எங்க ஊர்க்காரவங்க அந்த அளவுக்கு கோபத்துல இருந்தாங்க.. எத்தனை பேர் ஒரு வாரமா..அவங்கள பிடிக்க இரவு முழுவதும் முழிச்சுக்கிடந்து காவல் காத்தாங்க... அப்படிபட்ட அந்த திருடங்களே இவங்க கையில கிடச்சிருந்தா என்ன பண்ணியிருப்பாங்க..

(அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

32 பின்னூட்டங்கள்:

dubukudisciple said...

adada.. ippo thaan naan gramathula poranthu valaraleyunu varuthama iruku kaarthi. ippadi oru vishayamum illaye enaku ezhutharthuku... seri edo neenga ezhuthareenga.. naan santhosha patukaren

சுப.செந்தில் said...

//பெரிய பெரிய காலடி தடங்கள்..//
படிக்கும்போதே கொஞ்சம் திகிலாத்தான் இருக்குது

சுப.செந்தில் said...

//அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்//

கண்டிப்பா! திகில் விலகணும்ல

Anonymous said...

Ok waiting........... ;-)

Raji said...

Kalmazhaiyaa? Sikkiram podunga thala next partu...

Bharani said...

//அடியேய் உனக்கு விஷயம் தெரியுமா.. அந்த உடம்பெல்லாம் நகையா போட்டுகிட்டு மினிமினித்துகிட்டு போவாள்ல, அந்த கண்டக்டர் சம்சாரம்.. அவள அவ புருசன் போட்டு சாத்திட்டானாம் நேத்து ராவுல.. இது ரொம்ப படிக்காம கூலி வேலைக்கு போற பெண்களோட சம்பாஷனை.. ஏங்க உங்களுக்கு விஷயம் தெரியுமா.. நகை கடை விளம்பரதுல வர்ற பொண்ணு மாதிரி போவுமே அந்த கண்டக்டர் வைப், அந்த பொண்ணப் போட்டு அவ வீட்டுக்காரர் அடியோ அடின்னு அடிச்சுட்டாராம்..இது எந்த வேலைக்கும் போகாம வீட்லயே இருக்க பொண்ணுக பேச்சு.//...super maams...chancae ila.....

Bharani said...

thirudanga sikkinaangala....

Geetha Sambasivam said...

postla date Friday 20nu varuthu. he he he comments date ellaam Thursday 19, ithu eppadi irukku? :))))))))))))))))))))))))

CVR said...

கலக்கறீங்க தல
///ஓடு போட்ட வீட்டில் சரமாரியாக கல்மழை பொழிந்தது//
கல்மழைனா என்ன அர்த்தம் தலைவா?? வானத்துல இருந்து கல் கொட்டுமா?? இல்லைஆலங்கட்டி மழையை தான் அப்படி சொல்றீங்களா??

//பார்த்தால் பெரிய பெரிய காலடி தடங்கள்..//
ஆகா!!! பிக் ஃபுட் மாதிரி ஹைப் ஏத்தறீங்க!! :-)

//அவனை நாயை விட கேவலமா அடிச்சாங்க.. ரத்தம் வரவர ஊர்ல இருக்க ஒரு கோவில்ல அடச்சு வேற போட்டாங்க..........
அவன் பண்ணின பாவமோ என்னமோ..ரெண்டு நாளுல அவன் செத்துப்போனதா ஊர்ல பேசிகிட்டாங்க..
///
நீங்களே நல்லா மரண அடி அடிச்சிட்டு,அவன் பண்ணின பாவத்துல செத்துட்டான்னு சாக்கு வேற!! :-D

ambi said...

யாராவது தண்ணி அடிச்சுட்டு உருண்டு போயிருப்பாங்க. இதுக்கு ஒரு சஸ்பென்ஸா? சரி வெயிட்டரோம். :)

Priya said...

Its good to read when you take back us to those green fields and nature with the essence of soil when rain drops flash.

Dreamzz said...

ரவுசான பதிவு தான்!

Dreamzz said...

இது என்ன விந்தையா?? இல்ல மாயமா? கல் மழை யாம்!, பெரிய கால் தடமாம்! சீக்கிரம் அடுத்தது சொல்ல்லுங்க!

Priya said...

எப்படி தான் இவ்ளோ வேகமா போஸ்ட் போடறிங்களோ?

Priya said...

//எங்க ஊரை போன்ற கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்தால், போஸ்ட் ஆபீசு மூலம் தீயணைப்பு வண்டிக்கு சொல்லி அவர்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.. //
வருத்தப் பட வேண்டிய விஷயம்.

//அவனை நாயை விட கேவலமா அடிச்சாங்க.. ரத்தம் வரவர ஊர்ல இருக்க ஒரு கோவில்ல அடச்சு வேற போட்டாங்க.. //
கிராமங்ள்ல அடிக்கடி இந்த மாதிரி சட்டத்த கைல எடுத்துக்கறாங்களே? சரியா?

Priya said...

//அடியேய் உனக்கு விஷயம் தெரியுமா.. அந்த உடம்பெல்லாம் நகையா போட்டுகிட்டு மினிமினித்துகிட்டு போவாள்ல, அந்த கண்டக்டர் சம்சாரம்.. அவள அவ புருசன் போட்டு சாத்திட்டானாம் நேத்து ராவுல//

LOL.. ஆம்பளைங்க எப்படி பேசுவாங்கனும் போட்டிருக்கலாம் :)

//எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..
//

ஓ. அதான் இவ்ளோ ஃபாஸ்ட்டா?

G3 said...

ennanga? edho animation kadha maadiri soldreenga? kal mazha periya kaal thadamnu? aduthu enna nadandhudhunnu seekiram podunga :)

Syam said...

தல அந்த தின்னை பேச்சு கிராமத்துல மட்டும் இல்ல...நம்ம மக்கள் அமெரிக்கா வரைக்கும் கொண்டு வந்துட்டாங்க...அதுதான் இங்க TBI...Thinnai bureau of investigation :-)

Syam said...

சுவாரஸ்யமா போகுது கல்மழை மேட்டர்...:-)

MyFriend said...

தல.. வந்துட்டேன் வந்துட்டேன்.. :-)

MyFriend said...

//அடுத்த பகுதிக்கு வெயிட் பண்ணுங்களேன்//

வேய்ட் பண்ண முடியலைன்னா நம்ம நேர பூங்காவில் படிக்கலாமே..

ஆனாலும், நான் வேய்ட் பண்ணுவேன். ;-)

MyFriend said...

@ப்ரியா:

//LOL.. ஆம்பளைங்க எப்படி பேசுவாங்கனும் போட்டிருக்கலாம் :)//

அதே! அதே! தல, நீங்க இதுக்கு கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும். :-)

Ravi Kannan Chandrasekaran said...

karthik,,

tats a great work,, I need a small help. I am a big fan of ur blogs. Just love the narrative style. I want to write blogs in tamil too but can't figure out how?? Can u help me.. Please. my email id is c.ravikannan@yahoo.co.in

மு.கார்த்திகேயன் said...

/ippo thaan naan gramathula poranthu valaraleyunu varuthama iruku kaarthi.//

என்னங்க DD,நீங்க எங்க இருந்தாலும் கதை இல்லாத இடமா என்ன.. சும்ம எழுதுங்க DD

மு.கார்த்திகேயன் said...

/படிக்கும்போதே கொஞ்சம் திகிலாத்தான் இருக்குது //

ஹிஹிஹி.. அப்போ நான் தூங்காமெல்லாம் இருந்தேங்க செந்தில்

மு.கார்த்திகேயன் said...

//கண்டிப்பா! திகில் விலகணும்ல//

திகிலை விலக்கிடுவோம் செந்தில்

மு.கார்த்திகேயன் said...

//Ok waiting//

:-)

மு.கார்த்திகேயன் said...

/Kalmazhaiyaa? Sikkiram podunga//

போட்ருவோம்ங்க ராஜி

மு.கார்த்திகேயன் said...

//super maams...chancae ila..... //

ஹிஹிஹி.. நன்றிங்க மாப்ள

மு.கார்த்திகேயன் said...

/thirudanga sikkinaangala....//


சிக்காமல் இருப்பாங்களா.. வெயிட் பண்ணு மாப்ள

மு.கார்த்திகேயன் said...

//postla date Friday 20nu varuthu. he he he comments date ellaam Thursday 19, ithu eppadi irukku? //

பெண் நக்கீரர் நீங்க மேடம்

வல்லிசிம்ஹன் said...

எங்க ஊரில பாழும் கிணறூ ஒண்ணு. அது வழியா ஸ்கூலுக்குப்
போகணும்.
அதில ஏதோ ஒரு பூதம் இருக்குனு வேற சொல்லிடுவாங்க.
பக்கத்தில போகவே பயப்படுவோம்.
அந்த நினைவு தான் வந்தது கார்த்தி.
ரொம்ப நல்ல வத்திச் சுருளா இருக்கே:-)