Saturday, April 07, 2007

விழுதுகளே வேராக...

தானிருக்கும்
வரை
விழுதுகளில்
வாழாது
ஆலமர வேர்..

தவ்வியோடும் வரை
தரையில்
தன்
குட்டிகளை
விடுவதில்லை
கங்காரு...

தானாக
பாய்ந்தோடும் வரை
தன் குட்டியை
தூக்கி செல்லுமாம்
குரங்கு!

அறிவு,
ஆறுக்கும்
ஒன்று
குறைவாக பெற்றாலும்,
பெற்றதால்
இவைகள்
தன்
பிள்ளைகளை
பிழைப்புக்கு
அனுப்புவதில்லை!

குழந்தையிவன்,
பென்சில்
பிடிக்கும்
கரங்களில்
பீடி சுற்றுகிறான்!

அவன் அப்பனோ
அதை
புகையாய்
விடுகிறான்!

பஞ்சாய்
இருக்கும்
பிஞ்சு
கரங்கள்
நஞ்சு
போகின்றன,
உளிகள்
பிடித்தும்
கயிறுகள்
இழுத்தும்...

பக்கத்து வீட்டு
பையன்
கான்வென்ட் போக
இவன்
கனவுகள் கூட
கழுவுகின்ற
டீ கிளாஸை சுற்றியே!

சுத்தியல்
தூக்குகின்றன
பூக்கள்..
இதை
புத்தியில்
புரிவார்களா
மாக்கள்?

இவர்கள்
வளரும் முன்
தேய ஆரம்பித்த
பாக்கெட் சைஸ் நிலவுகள்..

மலரும் முன்
வாட ஆரம்பித்த
மெக சைஸ் பூக்கள்..

நிலவுகளையும்
பூக்களையும்
ரசிக்காமல்
இப்படியா
பழுதுபடுத்துவது?

இப்படி
தன்
குழந்தையை
வேலைக்கு
அனுப்புவோரை
என்னவென்று சொல்வது?

முதுகில்
எலும்பு
இல்லாதவர்கள்..
கண்ணிருந்தும்
குருடர்கள்..

இல்லை..
இல்லவே இல்லை..

அடுத்த
செடியின் மீது
படர்ந்து
அது
சமைக்கும்
ஆகாரத்தை
உறிந்து
தானுன்டு
வாழும்
மனித ஒட்டுண்ணிகளே
இவர்கள்..
பதர்கள்..

குறைந்த
சம்பளம்
என்பதால்
குழந்தைகளை
வேலைக்கு
வைப்பதையும்
தவிருங்கள்..

அவர்கள்
படிக்கட்டும்...
எந்த
படிக்கட்டும்
ஏறி
அவர்கள்
தொடட்டும்
வானத்து
நிலவை..
என்னும்
எதிர்கால
வசந்த வாழ்க்கையை..

எங்காவது
குழந்தை
தொழிலாளர்கள்
இருந்தால்
காவல்துறைக்கு
சொல்லுங்கள்..

எப்படியாவது
அவர்தம்
வாழ்க்கையில்
இருளை போக்க
நல்ல
விளக்கொன்று
ஏற்றுங்கள்..

இப்போது
வேண்டுமானால்
அவர்கள்
அகல் விளக்கு..
பாரதியின்
அக்னிகுஞ்சு போல,
நாளை
இந்தியாவின்
ஒளி விளக்கு..

41 பின்னூட்டங்கள்:

said...

ஆஹா ஆஹா!!
அற்புதம்!! :-)

/சுத்தியல்
தூக்குகின்றன
பூக்கள்..
இதை
புத்தியில்
புரிவார்களா
மாக்கள்?
//
சூப்பர்!! :-)அழகான கருத்தை அற்புதமா வெளிப்படுத்தி இருக்கீங்க தலைவரே!! :-)

said...

அருமையாக இருக்கு கார்த்திக்!

said...

கவிதை சூப்பருங்க :D

//தானிருக்கும்
வரை
........
தூக்கி செல்லுமாம்
குரங்கு!
//

இது டாப்பு. இதுக்காக தனியா ஒக்காந்து யோசிப்பீங்களோ??

said...

//குழந்தையிவன்,
பென்சில்
பிடிக்கும்
கரங்களில்
பீடி சுற்றுகிறான்!

அவன் அப்பனோ
அதை
புகையாய்
விடுகிறான்!//

//மனித ஒட்டுண்ணிகளே
இவர்கள்..//

கசக்கும் உண்மைகள் :-((

said...

அழகான கவிதை கசப்பான உண்மைகளோடு

Anonymous said...

sonna maadhiri kavidhai potinga polarku?? :-) monday thaan padiching idhu verum attendance!

-porkodi

Anonymous said...

nalla karuthu,sindhanai...aana ithai kavithainnu completaa othukka mudiyala...neriya idangalil kavithai thanmai ilandhu, idikkuthu...

said...

Nice ones Karthick and a social awareness poem.

said...

Hello..
Kavidhai nalla irukudhu..child labor is a major problem in India..chumma law kondu vandha mattum onnum periya diff illai :(
nice post :)

said...

nalla nethiyila adicha maadhiri iruku maams...kuzhandai thozhillar pathi idhai vida nalla solla mudiyaadhu....

said...

manasu ganamaagi pochi....

said...

//பஞ்சாய்
இருக்கும்
பிஞ்சு
கரங்கள்
நஞ்சு
போகின்றன,
உளிகள்
பிடித்தும்
கயிறுகள்
இழுத்தும்...//

creates profound impact! :)

Arumayana kavithai! :)

said...

aaga !!! நஞ்சு உண்ணும் பிஞ்சுகுளின்
நெஞ்சை பிளக்கும் உண்மைகள்!!! அனைத்தியும் மிஞ்சிய கவிதை போங்க !!

said...

அருமையான, அர்த்தங்கள் நிறைந்த கவிதை தல ;-)))

said...

அருமையான சிந்தனை தல.. வாழ்த்துக்கள்..

குழந்தை தொழிலாளர் பிரச்சனை ஒரு பெரிய சீர்கேடு தான். எத்தனை சட்டம் போட்டாலும், இதை மக்கள் (மாக்கள்??) புரிந்து கொண்டு திருந்தும் வரை முற்றிலும் ஒழிப்பது கடினமே. :(

said...

மிக அருமையான கவிதை...

/*குழந்தையிவன்,
பென்சில்
பிடிக்கும்
கரங்களில்
பீடி சுற்றுகிறான்!
அவன் அப்பனோ
அதை
புகையாய்
விடுகிறான்!*/ யதார்த்தமான உண்மை வரிகள்...

தொடருட்டும் உங்கள் சமுதாய பார்வை..

said...

//அழகான கருத்தை அற்புதமா வெளிப்படுத்தி இருக்கீங்க தலைவரே//

நன்றி CVR.. அந்த குழந்தைகளின் கண்ணீர் நமது இந்தியாவில் சீக்கிரம் துடைக்கப்பட வேண்டும்,CVR

said...

//அருமையாக இருக்கு கார்த்திக்! //

நன்றிங்க தம்பி

said...

//இதுக்காக தனியா ஒக்காந்து யோசிப்பீங்களோ?? //


அங்கங்க படிச்ச அறிவியல் விஷயத்தை தூவிவிட வேண்டியது தான், G3

said...

//கசக்கும் உண்மைகள்//

இந்த விஷயங்கள் நேரில் பக்கத்தில் இருந்து பார்த்தால் மனசுக்குள் ஒரு ஓலமே இருக்கும்ங்க G3

said...

//அழகான கவிதை கசப்பான உண்மைகளோடு

//

நன்றி துர்கா

said...

/sonna maadhiri kavidhai potinga polarku?? :-) monday thaan padiching idhu verum attendance!

-porkodi

//

அட்டென்டன்ஸ் குறிச்சுகிட்டேன் பொற்கொடி!

திங்கள் வந்து படிச்சிட்டு கமென்டுங்க

said...

//nalla karuthu,sindhanai...aana ithai kavithainnu completaa othukka mudiyala...neriya idangalil kavithai thanmai ilandhu, idikkuthu... //

வெளிப்படையான கருத்துக்கு நன்றி அனான்.. இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்!

said...

//Nice ones Karthick and a social awareness poem. //

நன்றி ப்ரியா

said...

/Hello..
Kavidhai nalla irukudhu..child labor is a major problem in India..chumma law kondu vandha mattum onnum periya diff illai :(
nice post :) //

நன்றிங்க ஸ்ரீ.. நீங்க சொன்ன மாதிரி இந்த விழிப்புணர்ச்சி ஒவ்வொரு மக்கள்கிட்டயும் இருந்து கிளம்பனும்..

said...

//nalla nethiyila adicha maadhiri iruku maams...kuzhandai thozhillar pathi idhai vida nalla solla mudiyaadhu....

//

நன்றி மாப்ள..ஹிஹிஹி.. பில்லு பரணியாம்ல புதுப் பேரு.. அம்சமா இருக்கு போப்பா

said...
This comment has been removed by the author.
said...

//manasu ganamaagi pochi....

//

:((

said...

//creates profound impact! :)

Arumayana kavithai! :) //

நன்றிங்க பொன்னா..

said...

/aaga !!! நஞ்சு உண்ணும் பிஞ்சுகுளின்
நெஞ்சை பிளக்கும் உண்மைகள்!!! அனைத்தியும் மிஞ்சிய கவிதை போங்க !! //

நன்றிங்க டேவ் தேவ்

said...

//அருமையான, அர்த்தங்கள் நிறைந்த கவிதை தல ;-)))

//

நன்றிப்பா கோபிநாத்

said...

//குழந்தை தொழிலாளர் பிரச்சனை ஒரு பெரிய சீர்கேடு தான். எத்தனை சட்டம் போட்டாலும், இதை மக்கள் (மாக்கள்??) புரிந்து கொண்டு திருந்தும் வரை முற்றிலும் ஒழிப்பது கடினமே. :( //

இதற்கு சட்டங்கள் இருக்க, நாம் அதை ஒழுங்காவும் கடைபிடிச்சா ஓழிச்சிடலாம்னு தோணுது ACE

said...

/ யதார்த்தமான உண்மை வரிகள்...

தொடருட்டும் உங்கள் சமுதாய பார்வை.. //

நன்றிங்க பாலர்

Anonymous said...

அறிவு,
ஆறுக்கும்
ஒன்று
குறைவாக பெற்றாலும்,
பெற்றதால்
இவைகள்
தன்
பிள்ளைகளை
பிழைப்புக்கு
அனுப்புவதில்லை

Ungalin kavidhaiyil manadhai kavarndha varigal ivai.....


Kuzhandhai Thozhilalar - Varthaiyilayae SUDUM UNMAI....

Naanum ungalai pol dhan ninaikiren.Indha kuzhandhaigalai velai seiya vida kudadhu enru....

India vil konjam konjamaga indha prachnai gavanika pattu varugiradhu.ADhanal sila idangalil, Hotel ponra idangalil , Oru add podaranga - ingae kuzhandhai thozhilar kedaiyadhu" enru.....

Anal, ennudaiya paarvaiyil, indha Kuzhandhai Thozhilar ku thadai vandha pinnal gavanithal,

IDhilum BOY and GIRL enru gavanithal, GIRL KIDS thangaludaiya veetu velai enravadhu veetil irukirargal....

Anal, Indha BOY KIds school kum pogamal. velaikum poga vazhi illamal.

Rowdigalaga sutri kondu irukirargal.Idhuvum Aabathanadhae..

Adhanal, School il,

Book , Lesson, Marks enru kodumai paduthamal, paadahtai nanraga padika mudiyadha students ku enru

Kai thozhil enru aarambithu, adhai katru kolla seidhal, nichayam

Kids ellam school ku aasaiyaga selvargal.
School il, edho oru kai thozhilai

endha vidha kodumaiyum , kashtamum illamal

katru kolvargal.Katru kondal adhai encourage seivadhu pol some amount or gift ai koduka vendum....

Indha madhiriyaga school irundhal,parents school ku anupuvargal enru enaku thondrum.

(velaiku anupum parents in view about school is - enna padichu enna panna porae?) or ( pasangaluku padipu varavillai enral adhu dhan saaku enru kooli velaiku anupugirargal.. enna seivadhu?)
ADhanal, method of education aiyum
GOVT gavanika vendum.... enbadhu en ennam.
Appodhu dhan idharku oru nirandhara theervu kidaikum Karthi...


With Love,
Usha Sankar.

said...

cannot read properly through firefox. here only it is working. no e-kalappai. what to do? No reception for me till now. grrrrrrrrrrrrr

said...

பரணியின் பதிவை இப்ப தான் படிச்சேன் அதன் தாக்கம் தான் இங்க கவிதையா தல:)
குழந்தை தொழிலாளர் பிரச்னைக்கு இரு புறம் உண்டு கார்த்தி, பெற்றோர் பணத்திற்கு ஆசைப்பட்டு படிக்க வைக்காமல் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, உண்மையிலேயே படிக்க மட்டுமல்லாமல் வாழவே முடியாமல் வேலைக்கு அனுப்புவது. இதில் முதல் வகையை சேர்ந்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இரண்டாம் வகையை சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளை படிக்க அரசாங்கம் முன் வர வேண்டும், அதற்கான போதிய விழிப்புணர்ச்சி இல்லையென்றே சொல்லலாம்.

said...

arumaiyana kavithai.. sinthika vendiyavargal sinthithal seri

C.M.HANIFF said...

ARUMAI KARTHIK ;-)

said...

just read your kavithai. yet to read other posts. grrrrrrr, did not come to my house? and did not make arrangements for my reception? grrrrrrrr :)))))))))))))

said...

ரொம்ப அருமை.
குறிப்பா

//
சுத்தியல்
தூக்குகின்றன
பூக்கள்..
இதை
புத்தியில்
புரிவார்களா
மாக்கள்?
//

கவிதை சூப்பரா வருது தல. நிறைய எழுதுங்க... வாழ்த்துக்கள்

said...

கார்த்திக்,

இதுதான் முதல்முறை நான் உங்கள் வலைப்பூவைப் பார்வையிடுவது..

//சுத்தியல்
தூக்குகின்றன
பூக்கள்..
இதை
புத்தியில்
புரிவார்களா
மாக்கள்?//

சபாஷ் போட வைக்கும் வரிகள்.. நல்ல நயத்தோடும், எதுகை மோனையிலும் சவுக்கடி கொடுத்திருக்கிறீர்கள்...

தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்..

பி.கு. போட்டோல சும்மா ஹீரோ கணக்கா இருக்கீங்க தலைவா.. நல்லாயிருக்கு...