Friday, April 13, 2007

திரைப்பட வினாடி-வினா 2

இன்னைக்கு கேள்விகள் கொஞ்சம் வித்தியாசமான பாணில கேட்டிருக்கேன். எப்படி இருக்கிறதுன்னு தங்களுடைய கருத்துகளைச் சொல்லுங்க. முடிந்தவரை கேள்வி பெருசா இருந்தாலும் அதில் க்ளூ இருக்கும். இதற்கான பதிலோட உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

1. இவர் ஒரு டைரக்டர். இப்போதைய இளம் நடிகரின் தந்தையும் கூட. இவரது படங்களில் கோர்ட் சீன்கள் இல்லாமல் இருக்காது. கேப்டனுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலத்தை கொடுத்தது இவரது படங்கள் தான். இதற்காக கேப்டன் இவரின் சமீப படங்களில் கூட நடித்தார். ஒரு படத்தில் இவர் மகன் கூட, அண்ணனாக நடித்தார். அந்த மகன் நடிகரும், கேப்டனும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர் என்ன? அதில் கேப்டனின் ஜோடியாக நடித்த நடிகை யார்?

2. இவரும் ஒரு மாபெரும் நடிகரின் மகன் தான். இவர் மற்ற பெரும்பாலான நடிகர்கள் கூட இணைந்து நடித்தவர். இவரும் பெரியார் படத்தில் பெரியாராக நடிக்கும் நடிகரும் சேர்ந்து அண்ணன் தம்பியாக நடித்த படத்தின் பெயர் என்ன? படத்தின் டைரக்டர் யார்?

3.இவர்கள் இரண்டு பேர். இரண்டு பேரும் நடிகர்களின் மகன்கள் தான். இவர்கள் இரண்டு பேரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார்கள். இதில் ஒருவரின் 100வது படத்தையும், இவர்கள் இணைந்து நடித்த படத்தையும் இயக்கி உள்ளார் ஒரு டைரக்டர். இவர் ஒரு பாடலாசிரியரும் கூட. பெரும்பாலான இவரின் படங்களுக்கு இவரே பாடல் எழுதியுள்ளார். அவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சிவாஜி போன்றோரையும் வைத்து படங்கள் இயக்கியுள்ளார். அந்த டைரக்டர் சமீபத்தில் ஒரு நடிகரின் தம்பி முறை நடிகரை கதாநாயகனாக வைத்து டைரெக்ட் செய்தார். கேள்வி, அவர் மேல சொன்ன நடிகர்கள் ஒருவரின் 100 வது படத்தை இயக்கினார் அல்லவா. அந்த படத்தின் பெயர் என்ன? அவர் கடைசியாக இயக்கிய படத்தின் பெயரும், ரஜினியை வைத்து இயக்கிய படத்தின் பெயரும் என்ன?

நண்பர்கள், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் தங்களுக்கு எல்லா வளங்களையும் மகிழ்வையும் மன நிம்மதியையும் தர வேண்டுகிறேன்.

உலகத்தில் வெள்ளை பூக்கள் மலரட்டும். மகிழ்ச்சி கானங்கள் ஒலிக்கட்டும்!

78 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Karthi,
Here are the answers...
1. senthoorapandi, gauthami
2. chinna thambi periya thambi, manivannan
3. Rajakumaran,karka kasadara , yejaman

yenna chinna pulla thanama irukku...:))

Balaji

கானா பிரபா said...

1. கேப்டன் - விஜயகாந்த், தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், மகன் விஜய், படம் செந்தூர பாண்டி, அதில் கேப்டனின் ஜோடி கெளதமி

1. மாபெரும் நடிகர் மகன் பிரபு, பெரியார் சத்யராஜ், படம் சின்னதம்பி பெரியதம்பி, இயக்கம் மணிவண்ணன்

3. 100 வது படம் ராஜகுமாரன், இயக்குனர் ஆர் வி உதயகுமார், கடைசியாக இயக்கியது கற்க கசடற, ரஜினி படம் எஜமான், பிரபுவும் கார்த்திக்கும் சேர்ந்து நடித்து இவர் இயக்கியது உரிமை கீதம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் தல

PRINCENRSAMA said...

1. படம்: செந்தூரப் பாண்டி
கதாநாயகி: சித்தியில் பிரபாவதியாக நடித்த யுவராணி
2. ப்டம்: சின்னத் தம்பி பெரிய தம்பி
இயக்கம்: கங்கை அமரன்

3. படம்: ராஜகுமாரன் (100வது படம்)
இயக்குநர்: ஆர்.வி.உதயகுமார்
ரஜினி படம்: எஜமான்

mgnithi said...

Attendace ... firsta?

Bharani said...

1. Sendhoorapaandi, Gouthami
2. Chinna thambi Periya thambi, Manivannan
3. No clue...

Bharani said...

pesaama neenga tamizh magazinesku kisu kisu ezhudhalaam maams :)

Bharani said...

Ungalukum Iniya Puthandi Vaazhthukal :)

கதிர் said...

எஸ்.ஏ. சந்திரசேகரன்
செந்தூரபாண்டில விஜயகாந்துக்கு ஜோடியா நடிச்சது கவுதமி.

சின்னத்தம்பி பெரியதம்பி. இயக்குனர் பி.வாசு??

ஆர்.வி.உதயகுமார்
பிரபு நடித்த நூறாவது படத்தை இயக்கினார் படத்தின் பெயர் ராஜகுமாரன். சமீபத்தில் இயக்கிய படம் கற்க கசடற.
ரஜினியை வைத்து எஜமான் படத்தை இயக்கியவர்

மு.கார்த்திகேயன் said...

பதில்கள் அனுப்பிய பாலாஜி, கானா பிரபா, பிரின்ஸ், பரணி ஆகியோருக்கு நண்றி.

சொன்ன வரைக்கும் எல்லாமே சரியான விடைகள்..

பிரின்ஸ், கேள்வி விஜயகாந்தின் ஜோடி தான். சரியாக படிக்கவும்.

மாப்ள, மூணாவது கேள்வியை இன்னொரு முறை படிச்சு பதில் சொல்லுப்பா..


வழக்கம் போல, உங்களுடைய பதில்கள் இரண்டு நாட்கள் கழித்து பிரசுரிக்கப்படும் :)

மு.கார்த்திகேயன் said...

தம்பி, இரண்டாவது கேள்வி, டைரெக்டரை தவிர்த்து எல்லாமே சரியான விடைகள்

ப்ரசன்னா (குறைகுடம்) said...

1. சந்திரசேகர், செந்தூரபாண்டி, விஜயகாந்த், விஜய், கௌதமி.
2. பிரபு, சத்யராஜ், சின்னதம்பி பெரியதம்பி, மணிவண்ணன்
3. பிரபு, கார்த்திக், ஆர்.வி.உதயகுமார், உரிமைகீதம், எஜமான், ராஜகுமாரன், விக்ராந்த், கற்க கசடற

மு.கார்த்திகேயன் said...

குறைகுடம், ஒன்றாவது வினாடி-வினாவைப் போல இதிலும் தங்களது எல்லாக் கேள்விகளும் சரிங்க.. வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றி.

ஜோ/Joe said...

1.எஸ்.ஏ.சந்திரசேகர்,செந்தூர பாண்டி,நடிகை தெரியாது
2.பிரபு-சத்தியராஜ் ,சின்ன தம்பி பெரிய தம்பி
3.பிரபு-கார்திக்,ராஜகுமாரன்,கற்க கசடற,எஜமான்

mgnithi said...

1.S.A.chandrasekar..
vijay-
vijaykanth-
senthoora paandi-

Vijaykku - yuvaraninu theriyum ;-)
vijaykanthukku ? yosikkanum


2.
Prabhu and satya raj
movie -Chinna thambi periya thambi..
director .. manivannan

3. Think u are talking about r.v.udaykumar.karthik and prabhu.

100th movie for prabhu.. Rajakumaran..

prabhu and karthik - urimai geetham

vikranth- karka kasadara

Rajini- yejaman

Ithula ethachum kareeta pa?

மு.கார்த்திகேயன் said...

MGநிதி, நீங்க சொன்ன எல்லாமே சரி.. முதல் கேள்விக்கு கதாநாயகி பேரைச் சொல்லியிருந்தா, எல்லாமே கரெக்ட்!

கதிர் said...

மணிவண்ணன்

மு.கார்த்திகேயன் said...

தம்பி, நீங்க இரண்டாவது கேள்விக்கு சொன்ன டைரக்டர் பெயர் சரி. ஆல் பாஸ் :)

ஜோ, முதல் கேள்விக்கு கதாநாயகி பெயரும், இரண்டாவது கேள்விக்கு டைரக்டர் பேரும், சொன்னீங்கன்னா எல்லாமே சரியான பதிகள் :-)

நாகை சிவா said...

1, பெரியண்ணா, மீனா
2, சின்ன தம்பி பெரிய தம்பி - சுந்தரராஜன்
3, உதயகுமார், எஜமான், கற்க கசடற, ராஜகுமாரன்.

மு.கார்த்திகேயன் said...

நாகை சிவா மாப்ஸ்,

முதல் கேள்விக்கு விடை தவறு மாப்ஸ்..

ரெண்டாவது படம் பேரு சரி.. டைரக்டர் தவறு.

மூணாவது எல்லமே சரி..

மறுபடியும் ஒரு தபா முயற்சி பண்ணுப்பா மாப்ஸ்

Priya said...

அட போட்டுட்டிங்களா? சரி, பதில்களை சீக்கிரம் அனுப்பறேன்.

Priya said...

Tamil puthandu vazthukkal karthick.

Once I step out of the theatre ellamey, invisble dhan. Ipdi ellam brainwork kudukareengaley.

Filbert said...

1) S.A.Chandrasekhar, Vijay, Vijayakanth, Sendhoorapaandi, Gowthami

2) Prabhu, Sathyaraj, Chinna Thambi Periya Thambi, Director: Manivannan

3) Karthik, Prabhu, Rajakumaran (Prabhu's 100th film), Karka Kasadara, Ejamaan

Porkodi (பொற்கொடி) said...

வந்தேன்!

Porkodi (பொற்கொடி) said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)

வெட்டிப்பயல் said...

1. செந்தூர பாண்டி
கௌதமி

2. சி.தம்பி பெ.தம்பி
மணிவண்ணன்

3. உதயக்குமார்
எஜமான்

மு.கார்த்திகேயன் said...

வெட்டி, எல்லா பதிலும் சரி.. ஆனா அந்த மூணாவது கேள்விக்கு, 100வது படத்தோட பேரைச் சொல்லலையே..

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பொற்கொடி!

Syam said...

தல உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

Syam said...

டூ மச் ஆணிஸ்...அப்புறமா வந்து மத்த போஸ்ட் எல்லாம் படிக்கறேன் :-)

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துகள்...

Anonymous said...

பதில எல்லாம் சிட்டுகுருவிகிட்ட கேட்டு இருக்கென், வந்து சொன்னதுக்கு அப்புறம் சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்

வெட்டிப்பயல் said...

என்ன தலைவா அது கூடவா தெரியாது???

வாட் ய சேம்....


ராஜகுமாரன்

Priya said...

வெள்ளிக்கிழமை 2-3 யாராவது மீட்டிங் வைப்பாங்களா? ச்ச ச்ச ரொம்ப தொல்லை பண்றாங்க.

மு.கார்த்திகேயன் said...

என்னங்க ப்ரியா.. நல்லா தூங்கிட்டீங்களா மீட்டிங்ல.. நான் அப்படி தூக்கம் வந்தா நண்பர்களோட சாட்டிங் தான் (மீட்டிங் ல இல்லைங்க):-)

Priya said...

1. டைரக்டர் - S.A. சந்திரசேகர்
நடிகர் - விஜய்
அந்த மகன் நடிகரும், கேப்டனும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர்: செந்தூர பாண்டி
அதில் கேப்டனின் ஜோடி: கவுதமி

2.நடிகர்: பிரபு
இவரும் பெரியார் படத்தில் பெரியாராக நடிக்கும் நடிகரும் சேர்ந்து அண்ணன் தம்பியாக நடித்த படத்தின் பெயர் : சின்ன தம்பி பெரிய தம்பி
படத்தின் டைரக்டர்: மணிவண்ணன்

3.இவர்கள் இரண்டு பேர்: பிரபு & கார்த்திக்
இணைந்து நடித்த படம்: உரிமை கீதம்
டைரக்டர்: RV உதயகுமார்
இவர் இயக்கிய பிரபுவின் 100வது படம்: ராஜகுமாரன்
அவர் கடைசியாக இயக்கிய படம்: கற்க கசடற
ரஜினியை வைத்து இயக்கிய படம்: எஜமான்

Priya said...

இந்த தடவை என்ன பரிசுனு சொல்லலயே?

மைஃப்ரெண்ட வேற காணும்..

Priya said...

//நல்லா தூங்கிட்டீங்களா மீட்டிங்ல.. //

தூங்கற மாதிரி மீட்டிங் இல்ல. தூங்கினா அடுத்த வாரம் கோட் எழுத முடியாது. கஷ்டப் பட்டு முழிச்சிட்டிருந்தேன்.. அப்படியே உங்க க்விஸ் பத்தி கொஞ்சம் யோசிச்சேன் :)

Priya said...

சரி, தலை..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Have a blasting weekend!

மு.கார்த்திகேயன் said...

காலைல இருந்தே தேடுறேன்.. மை பிரண்டை புடிக்க முடியல, சாட்ல கூட..

நாளைக்கு வந்து ஏங்க முன்னாடியே சொல்லலன்னு நம்ம கூட சண்டையும் போடுவாங்க மலேசியத் தோழி

மு.கார்த்திகேயன் said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரியா.. உங்க ஆள் பே ஏரியாவுல பாகுன்னாரா? (நல்லா இருக்காரங்கிறதுக்கு இதானே தெலுங்கு வார்த்தைகள்?)

மு.கார்த்திகேயன் said...

ப்ரியா, இந்த தடவை பட்டையை கிளப்பிட்டீங்க..

எல்லாமே சரியான பதில்கள்.. :-)

மு.கார்த்திகேயன் said...

/பதில எல்லாம் சிட்டுகுருவிகிட்ட கேட்டு இருக்கென், வந்து சொன்னதுக்கு அப்புறம் சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்//

சிட்டுக்குருவி தான் வகேஷன்ல போயிருக்கே மணி..

அகில் பூங்குன்றன் said...

1). S.A சந்திரசேகர்.
செந்தூரப்பாண்டி.
கௌதமி.

2).பிரபு
சின்னதம்பி, பெரியதம்பி
மணிவன்னன்.
3). SP முத்துராமன்
ஸ்ரீராகவேந்திரர்

இருங்க யோசிச்சிட்டே இருக்கேன்

Priya said...

//உங்க ஆள் பே ஏரியாவுல பாகுன்னாரா? (நல்லா இருக்காரங்கிறதுக்கு இதானே தெலுங்கு வார்த்தைகள்?) //
அத தெலுங்கு தெரிஞ்சவங்க கிட்ட கேளுங்க :) நல்லா இருக்காரு கார்த்திக்.

//எல்லாமே சரியான பதில்கள்/
ஐ.. பரிச அனுப்பிடுங்க.

இந்த தடவை கொஞ்சம் சுலபமா இருந்தது கார்த்திக். ஏதாவது ஒண்ணு தெரிஞ்சா மத்தத லிங்க் பண்ணி கண்டு பிடிக்க முடிஞ்சது.

For example, மூணாவதுல எனக்கு அந்த 2 நடிகர்களும், ஒரு நடிகரின் தம்பி முறை யாருனும் தெரிஞ்சது. அதை வச்சி மத்த விடைகள கண்டு பிடிச்சேன்.

மு.கார்த்திகேயன் said...

மீட்டிங்கை நல்லாத் தான் யூஸ் பண்ணியிருக்கீங்க ப்ரியா :-)

மக்களை, ஆர்வமா பங்கேற்கவைக்கத் தான் இப்படி சுலபக் கேள்விகள் ப்ரியா.. :-)

SLN said...

கார்த்தி

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

SLN

ACE !! said...

தல உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

ACE !! said...

1. இத வெட்டிபயல், ஒரு தடவை டெவில் ஷோல எழுதியிருந்ததா ஞாபகம்.. தேடி படிச்சு பிடிச்சேன்..

படம் செந்தூரபாண்டி,
கேப்டனோட ஜோடி கெளதமி

(கூகிளாண்டவரோட உதவியில் ..:))

2. இந்த படத்த நானே கண்டுபிடிச்சிட்டேன்.. :) :)

சின்ன தம்பி பெரிய தம்பி / மணிவண்ணன்

3வது ஒன்னுமே புரியல :( எதோ கிசு கிசு படிச்ச மாதிரி இருக்கு :(

Anonymous said...

yappa mandai kaanju pochu idhukke! :-(

1.sendhoorapandi, gauthami

2.chinna thambi periya thambi. director yaarnu teriala :-(

3. director rv udhayakumar thaan. andha thabi nadigar vikranth padam karka kasadara. rajni nadichu direct panna padam ejamaan. ana endha nadigaroda 100vadhu padam nu theriala :-( rajini, kamal, sivaji illa. vijaykanth 100vadhu padam captain prabhakaran, adhu ivaru direct pannala nu nenakren?! sathyarajoda 100vadhu padame enanu theriala! ennatha solradhu :-(

edho pass mark pottu oru basandhi kuduthingana puthaanduku saptukuven! :-)

-porkodi

Dreamzz said...

puthaandu vaalthukkal thalai!

unga kelvi ellam padichathum answer takkunu nyabagam varuthu.. "namakku onnume nyabagam varalaye" enru ;)

Dev Payakkal said...

sorry contd
1) Senndurapaandi
heroine Gowthami i think!

மு.கார்த்திகேயன் said...

ACE, SLN, ட்ரீம்ஸ், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

thala en badhilgal?? :-(

-porkodi

ACE !! said...

3வது கேள்வி.. ரொம்ப கஷ்டபட்டு, கூகுளாண்டவரை படுத்தி எடுத்தும் சரியா விடை கிடைக்கல.. இருந்தாலும், மனம் தளராத விக்ரமாதித்தனா தேடோ தேடுன்னு தேடி, இப்படி ஒரு பதிலை போடறேன்.. தப்பான்னு சொல்லுங்க..

நடிகர் :கார்த்திக், பிரபு??

தம்பி முறை நடிகர் : விக்ராந்த் (விஜயின் சித்தி மகன்).. படம் கற்க கசடற, இயக்கியவர் : உதயகுமார்?? எஜமான்னு ரஜினியை வச்சு ஒரு படம் இயக்கினார்னு விக்கிபீடியா சொல்லுது..

3. 100வது படம், ராஜகுமாரன்?? (பிரபுவோடது).. ரஜினி படம், எஜமான்.

மாறன் said...

1. S A சந்திரசேகரன் ~ செந்தூர‌ பாண்டி ~ கெள‌த‌மி
2. சின்ன‌த‌ம்பி பெரிய‌தம்பி ~ ம‌னிவ‌ன்ன‌ன்
3. ராஜ‌குமார‌ன் ~ கற்க கசடற ~ எஜ‌மான்

Geetha Sambasivam said...

Happy Tamil New Year. Karthik. attendance only now. But read the article.

Padmapriya said...

[Quiz ku ellam varaleenga..]

Iniya thamizh puthaandu vaazhthukkal!!!

கோபிநாத் said...

தல...தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Ponnarasi Kothandaraman said...

Hehehe....Sorry na intha velayatukku varala :P

Ponnarasi Kothandaraman said...

And iniya puthandu nal vazhthugal! :)

Dev Payakkal said...

karthik yenoda answer varavillaya?

Anonymous said...

aiyo thalaiya pichukkitu potta badhil ellamm enna aachu nu terialiye! thala idhu too much! :-(

-porkodi

மு.கார்த்திகேயன் said...

சொன்ன பதில்கள் எல்லாம் கரெக்ட் பா பொற்கொடி!

ஹிஹிஹி.. கொஞ்சம் வேலைகள் அதிகம்.. அதனால் தான் பதில் முடியல..

மு.கார்த்திகேயன் said...

ACE, சொன்ன மூணாவது பதில் கரெக்ட் :-)

மு.கார்த்திகேயன் said...

மாறன், சொன்ன பதிலெல்லாம் கரெக்ட்ங்க :-)

மு.கார்த்திகேயன் said...

தேவ், நீங்க சொன்ன பதிலெல்லாம் சரியானது..

மு.கார்த்திகேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், பொன்னா..

மு.கார்த்திகேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், கோபிநாத்

மு.கார்த்திகேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், கீதா மேடம்

மு.கார்த்திகேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் , ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் , SLN

Ravi said...

Karthik, puthaandu vaazhthukkal! Okay, here are my answers :

1. Sendhoorapaandi, Gouthami

2. Chinna thambi Periya thambi,
Director : Manivannan

3. Rajakumaran, Karka Kasadara.

ACE !! said...

அப்போ முதல் 2 விடைகளும் தப்பா?? அடடா, சுலபம்னு நினைச்சு கோட்டை விட்டுட்டேனே :(

மணிகண்டன் said...

1. செந்தூரப்பாண்டி
2. சிவசக்தி
3. ராஜகுமாரன்,கற்க கசடற, எஜமான்

முதல் ரெண்டு கேள்விக்கும் பாதி பதில் தான் தெரியும் கார்த்தி. பாதி பரிசு குடுங்க போதும்.

மு.கார்த்திகேயன் said...

நிறைய நண்பர்கள் இந்த முறை சரியான பதில்களை தந்துள்ளார்கள்.. அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

சரியான விடைகள் :

1. செந்தூரப்பாண்டி, கௌதமி
2. சின்னதம்பி பெரிய தம்பி, மணிவண்ணன்
3. ராஜகுமாரன், கற்க கசடற, எஜமான்

MyFriend said...

தல,

கசுத்துப்புட்டீங்களே! வினாடி-வினா ரெடியாயிடுச்சு.. வவலையில இருக்குன்னு ஒரு வார்த்ததை கூட என் கிட்ட சொல்லலையே..

MyFriend said...

பாவம்.. ப்ரியா அக்காதான் எங்கே மை ஃபிரண்ட்ன்னு தேடியிருக்காங்க.. உங்களுக்கு என் மேல அக்கரையே இல்லை.. ம்ம்ம்...

அருண்மொழிவர்மன் said...

1. செந்தூரபாண்டி; கௌதமி
2. சின்னதம்பி பெரியதம்பி; மணிவண்ணன்
3.ராஜகுமாரன்
ஆ. கற்ககசடற
இ. எஜமான்