Tuesday, April 03, 2007

லெட்சுமி கிளியும் ஜானி நாயும்

இந்த சம்பவம் நான் பிறப்பதற்கு முன்னாடி நடந்த ஒரு உண்மை சம்பவம். அப்போ, என்னுடைய அப்பா ITI படிச்சு முடிச்சிட்டு, சேலத்தில் ஒரு தனியார் கம்பெனியில் எலெக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்த சமயம். அப்போது அவருக்கு கிடைத்த சம்பளமான முந்நூறு ரூபாயில் அவரின் செலவுகள் போக வீட்டிற்கும் அதிகமாக அனுப்பவேண்டும் என்பதால், கம்பெனியில் உள்ளேயே தரப்பட்டிருந்த வீட்டில் (கூரை வேய்ந்த) தங்கி இருந்தார். வீட்டை விட்டு தனித்து இருப்பவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். என் அப்பாவிற்கு அப்போது அதுவும் கூடாத காரியம். எங்கே நண்பர்கள் வைத்துக் கொண்டால் செலவுகள் அதிகமாகும் என்றோ என்னவோ அதிகமான நண்பர்கள் வைத்துக்கொள்ளவில்லை. அவருக்கு ஏற்ற ஒரு சில நண்பர்களுடன் பழக்கம் வைத்திருந்தார். அத்துடன், அழகிய பச்சைக் கிளியையும் வைத்திருந்தார். வீட்டிற்குள் வந்துவிட்டால் நண்பன், சொந்தக்காரன் எல்லாமே அந்த பச்சைக்கிளி தான். அதற்கென்று அவர் கூண்டொன்றும் வைத்துக்கொள்ளவில்லை. எனக்கு தெரிந்து இவ்வளவு பெரிய கூடு கிடைத்த கிளி அது ஒன்றாகத் தான் இருக்கும்.

அந்த கிளிக்கு என் அப்பா வைத்திருந்த பெயர் லெட்சுமி. அந்த பெயரை சொன்னாலே போதும். அது தலையை தூக்கி என் அப்பாவை ஒரு லுக் விடுமாம். அவர் ஷிப்ட் முடித்து வரும் நேரம் எல்லாமே அதற்கு முன்கூட்டியே தெரிந்து விடும். சரியான நேரத்திற்கு அந்த கூரையின் மீது நின்றுகொண்டிருக்கும். என் அப்பாவிற்கும், அதற்கும் இடையில் அப்படியொரு இனம் பிரியா பாசம் இழையோடி இருந்தது. என் அப்பாவை கண்டதும் முத்து என்று அதன் இனிய குரலில் கூப்பிடுமாம்.. ஒரு நாள் என் அப்பா, இரண்டாவது ஷிப்ட் முடித்துவிட்டு அலுப்பில் கயிற்றுக்கட்டிலில் தூங்கிகொண்டிருந்திருக்கிறார். இடையில் உஸ்ஸ்..உஸ்ஸ் என்னும் சத்தமும் கிளியின் சத்தமும் கேட்டிருந்திருக்கிறது. இவர் அலுப்பில் லெட்சுமி சும்மா இரு என்று சொல்லிவிட்டு அசதியில் தூங்கிவிட்டார். காலையில் லட்சுமி லட்சுமி என்று கூப்பிட்டிருக்கிறார். கிளியை காணவில்லை. அது கட்டிலுக்கு கீழே வாய் நிறைய ரத்தத்தோடு செத்துக் கிடந்திருக்கிறது. பக்கத்தில் கிடந்த பாம்பை பார்த்தவுடன், என் அப்பாவிற்கு ஒரு நிமிஷம் உயிரே இல்லை. அப்போது தான் அவருக்கு இரவு கேட்ட உஸ்ஸ்..உஸ்ஸ் சத்ததிற்கு அர்த்தம் புரிந்தது.

என் சிறிய வயதில் நான் இந்த கதையை (தொட்டிலுக்கு காவல் காத்த நாயின் வாயில் ரத்தம் இருப்பதை பார்த்த ஒரு கோபக்கார தாய், தன் குழந்தையை தான் நாய் தின்றுவிட்டதோ என்று நாயை கொன்றுவிடுவார். அதன்பிறகு தொட்டிலுக்கு கீழே செத்துகிடந்த பாம்பை பார்த்தவுடன் தான் அவளுக்கு உண்மை எல்லாம் விளங்கும் என்றொரு கதை ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பதை விளக்கி சொல்ல ஏற்படுத்தபட்ட கதை.) படித்துக்கொண்டிருந்தேன். அதை நான் படித்துக்கொண்டிருந்த போது என் அப்பா இந்த கதையை என்னிடம் சொன்னார்.

நான் எம்.சி.ஏ படித்துக்கொண்டிருந்த போது எங்கள் வீட்டில் ஜானி என்றொரு நாய் இருந்தது. சிறு வயதில் இருந்து எங்கள் வீட்டிலேயே வளர்ந்தது. நல்ல பாசமாய் இருக்கும். நான் புதுச் சட்டை ஏதும் போட்டால், என்னை கொஞ்சாமல் விடாது. பாசத்தில் என் சட்டையை கறையாக்குகிறது என்று அதற்கென்ன தெரியும்.. நாயிற்கு நாங்கள் வைத்து அழைக்கும் பெயர் ஜானி.. ஜானி அப்படின்னு ஒரு சத்தம் போட்டால் போதும், எங்க இருந்தாலும் ஓடோடி வந்திடும். ஒரு நாள் நான் காலேஜ் விட்டு வீட்டிற்கு வந்தால், ஒரு மூலையில் படுத்துக் கிடக்கிடந்தது. காலையில் இருந்து ஒன்னுமே சாப்பிடலை ஜானின்னு என் அம்மா கவலையோடு சொன்னார்கள். நான் ஒரு டம்ளரில் பாலோடு சென்று அதன் வாயை திறந்து நான் அதற்கு ஊட்டினேன். ஒரு பக்கத்திலிருந்து ஊற்றினால் அது மறுபக்கதில் வெளியேறியது. எனக்கு பயங்கர கஷ்டமாயிடுச்சு.

அடுத்த நாள் காலையிலும் ஜானியின் நிலமை அப்படித் தான் இருந்தது. திடீர்னு நல்லா இருந்தது எப்படி எவ்ளோ மோசமா போச்சுன்னு ஒரு பக்கம் எனக்கு ஒரே விந்தை.. அந்த கவலையோடவே காலேஜ் போயிட்டு திரும்பி வந்தேன் சாயந்தரம். இரவு வந்தால், தூரத்திலேயே என்னை பார்த்துவிட்டு, துள்ளிக்குதித்தி ஓடி வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம். என் அம்மாவிடம் கேட்டால், என்னமோ தெரிலைடா.. சாயந்தரம் ஆறு மணி போல அதுவா எந்திருச்சு ஓடியாடி விளையாட ஆரம்பிச்சது.ன்னு சொன்னாங்க.. இதை அவர்கள் சொல்ல, என் தூரத்து ஐயாவின், ஊரில் இருந்து என் ஐயா இறந்து விட்டதாக செய்தி வந்தது. எப்படி இறந்தார் என்று விசாரித்த போது, எங்கள் வீட்டு நாய் எப்போது உடம்பு சரியில்லாமல் போனதோ, அதே நேரத்தில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. எங்கள் வீட்டு நாயிற்கு சரியான நேரத்தில் அதே நேரத்தில் அவர் இறந்துவிட்டிறுக்கிறார். நாங்கள் வீடு கட்டிய ஒரு வருட காலங்கள் எங்கள் வீட்டில் தான் இருந்தார் அவர். இதை கேட்டுகொண்டிருந்த பலர், இது போல பல சம்பவங்கள் நடந்திருக்கிறது என்று சொன்னார்கள். ஜானி இறந்திருந்தால் என் ஐயா பிழைத்திருப்பார் எனவும், என் ஐயா இறந்துவிட்டதால் ஜானி பிழைத்துகொண்டதாகவும் அவர்கள் கூறினார்கள். எனக்கும் இது எப்படி சாத்தியமாகும் என்று ஒரே ஆச்சர்யம்.

வீட்டுப் பிராணிகள் எந்த அளவிற்கு அதன் எஜமானர்களோடு ஒன்றாக, உயிராக கலந்துவிடுகின்றன என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் ஆயிரம் உண்டு உலகில்

48 பின்னூட்டங்கள்:

Raji said...

Thala attendance apuram padikkuraen..

simplyguru said...

karthik soopera ezhuuthiringa....meendum vaazhthukal

ambi said...

//வீட்டுப் பிராணிகள் எந்த அளவிற்கு அதன் எஜமானர்களோடு ஒன்றாக, உயிராக கலந்துவிடுகின்றன என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் ஆயிரம் உண்டு உலகில்//

unmai! unamai. namakku priyamaanavargaluku ethavathu nadanthu vittal thaangave mudiyaathu. that's the only reason i restrict myself to pet an dog.

nice narration karthi, me thaan pashtu..? :)

SurveySan said...

interesting and amazing.

Unknown said...

Super karthik..excellent article with emotional contents.. its also amazing to see how much u hav toiled to come up in life ..

Anonymous said...

Unmaithaan karthik , nanraaga eshuti irukeenga ;-)

MyFriend said...

//அத்துடன், அழகிய பச்சைக் கிளியையும் வைத்திருந்தார். //

appa muthucharam vachchirukkalaiyaa? :-P

MyFriend said...

//வீட்டுப் பிராணிகள் எந்த அளவிற்கு அதன் எஜமானர்களோடு ஒன்றாக, உயிராக கலந்துவிடுகின்றன என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் ஆயிரம் உண்டு உலகில்//

ithepol naanum niraiya keddirukkiren. iyarkai peridar, udal nala kuraivu, aabaththu enru ethaavathu vanthaal, athai varuvatharku munbe ivai arinthu nammidam solla muyarchikkum..

oru thadavai enakku therintha oruvarin veedu theepparri erinthathu.. thee pidiththathu andru ariyaamal ellaarum avaravar velaiyai seythikkondrinthanar. ange eppothum theruvil oru naai suththik kondrikkum.. athu veeddulle pugunthu meththai mele vilaiyadik kondruntha kuzabthaiyayyum antha meththaiyaiyum serthu athan vaayaal izuththukkondu veliyeriyathu. ellaarum antha naayai adiththu thuraththa muyandrum, athu verrikaramaaka antha kuzanthaiyai veeddukku veliye izuththu vanthuviddathu. veeddilullavar ellaarum antha naayai thuraththiyathaal, ellaarum veliy vanthuviddaarkal. appothuthaan avarkal veedu teepparri erivathai avarkal unarnthanar.

antha naayukku avangge eppotho oru naal soru poddirukkaangga.. antha nandriyai marakkaamal avangga kudumbaththukku athu uthaviyirukku. :-)

Bharani said...

total senti :)

Bharani said...

enga ootlakooda ippadi dog sentis niraya iruku...

சுப.செந்தில் said...

//ஜானி இறந்திருந்தால் என் ஐயா பிழைத்திருப்பார் //
ஜானி இறந்திருக்கணும்னு நெனச்சீங்களோ?

Sree's Views said...

Oh very sorry to hear about ur relative. But enakku kooda nayingalukku 6th sense irukkunnu thonum..subtle feelings kooda naigalukku puriyum. Kilikki avalo vishayam theriyumnnu unga post la irundhudhaan therinjukitten :)
Nice Post !!

G3 said...

Modhal part nijamavae kadha padicha effectla dhaan irundhudhu.. ippadiyum nadakkumannu

//ஜானி இறந்திருந்தால் என் ஐயா பிழைத்திருப்பார் எனவும், என் ஐயா இறந்துவிட்டதால் ஜானி பிழைத்துகொண்டதாகவும் அவர்கள் கூறினார்கள். எனக்கும் இது எப்படி சாத்தியமாகும் என்று ஒரே ஆச்சர்யம்.//
enakkum..

Syam said...

அஞ்சு அறிவு கிளி இவ்வளவு தியாகம் பண்ணி இருக்குனு நினைச்சா நெகிழ்ச்சியா இருக்கு...

Syam said...

நீங்க சொல்றதும் சரி தான்...எங்க வீட்டுல ஒரு மாடு இறந்த போது எல்லோரும் இப்படிதான் சொன்னாங்க...அது இறந்து போகலனா வீட்டுல இழப்பு வந்து இருக்கும்னு...

Priya said...

லட்சுமியோட தியாகம் பிரமிப்பா இருக்கு தலை. என்ன பாசம் என்ன பாசம். பசங்கள பெத்து வளர்க்கறதுக்கு பதில் இந்த மாதிரி பிராணிகளை வளக்கலாம்..

//ஜானி இறந்திருந்தால் என் ஐயா பிழைத்திருப்பார் எனவும், என் ஐயா இறந்துவிட்டதால் ஜானி பிழைத்துகொண்டதாகவும் அவர்கள் கூறினார்கள். எனக்கும் இது எப்படி சாத்தியமாகும் என்று ஒரே ஆச்சர்யம். //

அதெல்லாம் சும்மா நம்ம மக்கள்ஸ் சொல்ற கதை.

ramya said...

wow..arumaiyana kadhai karthik...nijamaley kili ippadi kooda irukumanu oru aacharyam...

thathroobama irukku kadhai..really very senti n emotional story...

Anonymous said...

senti post!! rangu veetla kooda rubynu oru naai irundhudham. apram adhu irandha sogathla vera edhiyum valarkalanu solluvaru!!

-porkodi

Arunkumar said...

attendance thala

CVR said...

இதை படிக்கும்போது நாங்கள் வளர்த்த பூனை நாய் பற்றி எல்லாம் எனக்கு நியாபகம் வந்து விட்டது!! :-)

வாழ்த்துக்கள்! :-)

துளசி கோபால் said...

எதையும் எதிர்பார்க்காம இதுங்க கொடுக்கும் அன்பு சொல்லி மாளாது.

ACE !! said...

thala, padichitten... aani romba.. so methuva comment podaren.. nekilchiyaana padhivu thala.. as usual, kalakkal nadai vazthukkal

ACE !! said...

தல, உங்களை நானே டேக் பண்ணிட்டேன்.. அதனால உங்க வியர்டை சீக்கிரமா எழுதி, ஜோதில ஐக்கியமாயிடுங்க.. :))) :))

ஆத்தா, நானும் ஒருத்தர டேக் பண்ணிட்டேஏஏஏன்ன்ன்ன்!!! :)))

மு.கார்த்திகேயன் said...

//Thala attendance apuram padikkuraen.. //

மெதுவா வாங்க ராஜி.. ஆனா முதல் ஆளா வந்துட்டீங்களே..

மு.கார்த்திகேயன் said...

//karthik soopera ezhuuthiringa....meendum vaazhthukal

//

குரு, ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க.. நன்றி குரு

மு.கார்த்திகேயன் said...

//unmai! unamai. namakku priyamaanavargaluku ethavathu nadanthu vittal thaangave mudiyaathu. that's the only reason i restrict myself to pet an dog.
//

அம்பி, எங்க வீட்டிலும் ஜானிக்கு பிறகு இந்த காரணமாக நாங்கள் வேற எதுவும் வளர்க்கவில்லை

மு.கார்த்திகேயன் said...

//interesting and amazing//

நன்றிங்க சர்வேசன்...

மு.கார்த்திகேயன் said...

//Super karthik..excellent article with emotional contents.. its also amazing to see how much u hav toiled to come up in life .. //

நன்றி மகேஷ்.. இந்த கதையை சொல்லும் போது என் அப்பாவின் கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப்பார்த்தது..

மு.கார்த்திகேயன் said...

/Unmaithaan karthik , nanraaga eshuti irukeenga //

நன்றி ஹனிஃப் :-)

மு.கார்த்திகேயன் said...

//வாயில்லா பிராணிகள் என்று சொன்னாலும் உண்மையிலேயே பாசமுள்ளவை தான்//

இதைப் போல நிறைய கதைகள் கேட்டிருந்தாலும் அனுபவிக்கும் போது எனக்கும் கஸ்டமாத் தான் இருந்தது வேதா

மு.கார்த்திகேயன் said...

//appa muthucharam vachchirukkalaiyaa?//

லொள்ளுங்க மை பிரண்ட் :-)

மு.கார்த்திகேயன் said...

//antha naayukku avangge eppotho oru naal soru poddirukkaangga.. antha nandriyai marakkaamal avangga kudumbaththukku athu uthaviyirukku//

பின்னூட்டத்திலேயே ஒரு சம்பவத்தையே சொல்லிட்டீங்களே மை பிரண்ட்.. மனதை உருக்கும் சம்பவம்..

மு.கார்த்திகேயன் said...

/ootlakooda ippadi dog sentis niraya iruku... //

ஒண்ணு ரெண்டை எழுதலாமே பரணி

மு.கார்த்திகேயன் said...

//ஜானி இறந்திருக்கணும்னு நெனச்சீங்களோ? //

ரெண்டு பேரும் உயிரோடு இருக்கணும்னு நினைச்சேன் செந்தில்

மு.கார்த்திகேயன் said...

/But enakku kooda nayingalukku 6th sense irukkunnu thonum..//

அது உண்மை தான் ஸ்ரீ.. முதல் வருகைக்கு நன்றிங்க

மு.கார்த்திகேயன் said...

//Modhal part nijamavae kadha padicha effectla dhaan irundhudhu.. ippadiyum nadakkumannu
//

கேட்டப்போ எனக்கும் கண்ணீர் திரண்டுவிட்டது, G3

ACE !! said...

தல லெச்சுமி ஆச்சர்யமான விஷயம் தான்.. கிளி இப்படி பண்ணும்னு இப்ப தான் கேள்வி பட்டதே இல்ல.. இந்த ஜானி கதை மாதிரி சில விஷயங்கள் கேள்வி பட்டிருக்கேன்..ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு... வாழ்த்துக்கள்

மு.கார்த்திகேயன் said...

/அஞ்சு அறிவு கிளி இவ்வளவு தியாகம் பண்ணி இருக்குனு நினைச்சா நெகிழ்ச்சியா இருக்கு... //


வச்சிருக்க பாசத்துக்கு எதுவா இருந்தாலும் உயிரையே கொடுக்கும்ங்கிறது தெரியுது ஷ்யாம்

மு.கார்த்திகேயன் said...

//...எங்க வீட்டுல ஒரு மாடு இறந்த போது எல்லோரும் இப்படிதான் சொன்னாங்க...அது இறந்து போகலனா வீட்டுல இழப்பு வந்து இருக்கும்னு... //

நான் சொல்ல வந்தது இதே தான் நாட்டாமை..

மு.கார்த்திகேயன் said...

/லட்சுமியோட தியாகம் பிரமிப்பா இருக்கு தலை. என்ன பாசம் என்ன பாசம். பசங்கள பெத்து வளர்க்கறதுக்கு பதில் இந்த மாதிரி பிராணிகளை வளக்கலாம்..//

16 வயதினிலேல சொல்ற மாதிரி, எங்காத்த ஆடு வளத்தா கோழி வளத்தா நாய் வளக்கலியே.. ப்ரியா

மு.கார்த்திகேயன் said...

//wow..arumaiyana kadhai karthik...nijamaley kili ippadi kooda irukumanu oru aacharyam...

thathroobama irukku kadhai..really very senti n emotional story... //

ராஜி.. எல்லாக் காலங்களிலும் சிலை வைப்பதற்கான விலங்குகள் வாழ்ந்துகிட்டு தான் இருக்கு

மு.கார்த்திகேயன் said...

/senti post!! rangu veetla kooda rubynu oru naai irundhudham. apram adhu irandha sogathla vera edhiyum valarkalanu solluvaru!!

-porkodi

///


நிறைய பேர் இதுக்கு பயந்து தான் எதுவுமே வளக்குறதில்ல பொற்கொடி..

மு.கார்த்திகேயன் said...

/இதை படிக்கும்போது நாங்கள் வளர்த்த பூனை நாய் பற்றி எல்லாம் எனக்கு நியாபகம் வந்து விட்டது!! //

அது பற்றிய கதை எதுவும் இருக்கிறதா, CVR உங்களிடம்

மு.கார்த்திகேயன் said...

/எதையும் எதிர்பார்க்காம இதுங்க கொடுக்கும் அன்பு சொல்லி மாளாது./

சரியா சொன்னீங்க துளசியக்கா

மு.கார்த்திகேயன் said...

//thala, padichitten... aani romba.. so methuva comment podaren.. nekilchiyaana padhivu thala.. as usual, kalakkal nadai vazthukkal

///


பாத்து ACE, எல்லா ஆணிகளையும் மெதுவா புடுங்கிட்டு வாங்க

மு.கார்த்திகேயன் said...

/தல, உங்களை நானே டேக் பண்ணிட்டேன்.. அதனால உங்க வியர்டை சீக்கிரமா எழுதி, ஜோதில ஐக்கியமாயிடுங்க//

ஆஹா ACE.. என் வியர்டை எழுதணுமா.. அதுவே எனக்கு நினச்சா வியர்டா இருக்கே..

மு.கார்த்திகேயன் said...

//தல லெச்சுமி ஆச்சர்யமான விஷயம் தான்.. கிளி இப்படி பண்ணும்னு இப்ப தான் கேள்வி பட்டதே இல்ல.. இந்த ஜானி கதை மாதிரி சில விஷயங்கள் கேள்வி பட்டிருக்கேன்..ரொம்ப நெகிழ்ச்சியான பதிவு... வாழ்த்துக்கள் //


எனக்கும் தான் ACE, எழுதும் போது மனசுக்குள் இனம் புரியாத ஒரு சோகம்

மு.கார்த்திகேயன் said...

//எனக்கு அல்வாலாம் வேண்டாம். அந்த தங்க பூரிக் கட்டைய சீக்கிரம் அனுப்புங்க. //

கல்யாணத்துக்கு முன்னாடியே ஆயுதம் வாங்க இவ்வளவு ஆர்வமா.. பாவம் உங்க ரங்கு