Wednesday, April 18, 2007

காதல் இலையுதிர்காலம்

காதல்.. பள்ளித் தலைமையாசிரியர் டேபிளில் ஒரு சின்ன கம்பியில் நின்று பூமியுருண்டை சுத்திகொண்டு இருக்கின்ற மாதிரி, இந்த பூமியை பிடித்திருக்கின்ற ஒரு மெல்லிய உணர்வுக் கம்பி. தி.நகர் ரெங்கநாதன் வீதியில் நின்றுகொண்டு, உள்ள வர்ற எல்லோரிடமும் இதுவரைக்கும் நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களான்னு கேட்டா கிட்டதட்ட எல்லோருக்குள்ளும், கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் உறங்கி கொண்டிருக்கும் ஒரு முத்தை போல, ஒரு அழகான கதை இருக்கும். ஆனா, உலகத்துல சொல்லப்பட்ட காதல்களைவிட சொல்லாத காதல்கள் கோடிகள். அப்படிச் சொன்ன காதலில் கல்யாண மேடையில் அருந்ததி பார்க்கின்ற காதல்கள் மிகவும் குறைவு. அதில், சில ரெஜிஸ்டர் அலுவலகத்தின் கோடு போட்ட தாள்களிலே கூட ஆரம்பிக்கின்றது.

உலகத்தில் ஜெயித்த காதலை விட, தோற்ற காதல்கள் தான் அதிகம் மக்களால் பேசப்பட்டிருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. இதில் ஒரு தலை காதல்களும் அடங்கும். இப்பொழுது நான் சொல்லப்போவது, நான் பள்ளிகளில் படித்த போது, மதுரையில் ஒரு பொறியியல் கல்லூரியில் நடந்தது. ஒரே ஊரை சேர்ந்த ஒரு பையனும், பெண்ணும் அந்த கல்லூரியில் படித்து வந்தார்கள். அந்த பையன் மூன்றாம் வருடம் படிக்கும் போது தான் அந்த பெண் முதல் வருடத்தில் சேர்ந்திருக்கிறாள். ஒரு நாள் ஒரே பேருந்தில் பயணிக்கும் போது தான் அவனுக்கு, அந்த பெண் தன் ஊர் என்று தெரிந்திருக்கிறது. எப்படியோ காலப்போக்கில் இவனுக்குள் காதல் வளர, ஆனால் அந்த பெண்ணின் மனதில் அப்போதைக்கு எதுவும் இல்லை. இவனும் பலமுறை அந்த பெண்ணிடம் சொல்லியிருக்கிறான். அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை. அவனுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்க சென்னை வந்துவிட்டான். விட்டது தொல்லை என்று இந்த பெண் இருந்திருக்கிறாள். ஆனால் முதல் மாத சம்பளம் வாங்கிய கையோடு இந்த பெண்ணை பார்க்க கல்லூரிக்கே வந்துவிட்டான் அவன். வாங்கிய சம்பளத்தை சொல்லி, என்னை ஏற்றுக்கொள். நான் கை நிறைய சம்பளம் வாங்குறேன் என்றெல்லாம் அவளிடம் கேட்டிருக்கிறான். அவள் முடியவே முடியாது என்று ஒரேடியாக மறுத்துவிட்டாள். இவனுக்கு கோபம் தலைக்கேற, கையில் பேப்பரில் சுருட்டி வைத்த அரிவாளால் அந்த பெண்ணின் தலையில் ஒரே போடாக போட்டுவிட்டான். அரிவாள் பட்டவுடன் அந்த பெண் மயங்கி விழ, இறந்துவிட்டாளோ என்ற பயத்தில் இவன் பக்கத்தில் இருந்த ஒரு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டான்.

அப்பா, அம்மா சொன்ன பெண்ணை கட்டிக்கொண்டு, இந்நேரம் அந்த கம்பெனியில் உயரிய நிலைக்கு வந்திருக்க வேண்டிய ஒருவன், காதல் என்பது என்ன என்பதை முழுதாக புரிந்து கொள்ளாமல் தனது வாழ்க்கையையே அழித்துக்கொண்டான். இப்படித் தான் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன், திருச்சியிலும் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் அந்த சம்பவத்தில் அந்த பெண் அந்த இடத்திலேயே இறந்துவிட்டாள். ஒரு பக்கம் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால், தற்கொலை செய்துகொள்கின்ற காதல்கள் ஒரு புறம் என்றால் இப்படி ஒரு தலை காதல் தற்கொலை மற்றும் கொலைகளும் மறுபுறம். ம்ம்.. இன்னும் எத்தனை உயிரை குடிக்கப்போகிறதோ இந்த காதல் அரக்கன்.

நீங்கள் ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கிறாய் படம் பார்த்து இருக்கிறீர்களா. அதன் டைட்டில் போடும் போது, இது போன்ற ஏகப்பட்ட சம்பவங்களின் நாளிதழ் கட்டிங்குகள் காண்பிப்பார்கள். அது போலவே படத்திலும், ராஜீவ் கிரிஷ்ணா காதலையும், அதற்கு அவன் தேடிக்கொள்ளும் வழிகளையும், ஷாம் தன் காதல் தோற்ற பிறகு நடந்து கொள்ளும் விதத்தையும் அழகாக சொல்லியிருப்பார் டைரக்டர் வஸந்த். இது, ஷாமை காதலிக்கும் ஸ்வப்னா என்ற ஒரு பெண்ணின் குணத்தையும் அவள் அவளது காதல் தோற்றதற்கா செய்யும் வேலைகளையும் என்று நன்றாக இந்த சூழ்நிலைகள் விளக்கப்பட்டிருக்கும். படம் சரியாக ஓடவில்லையென்றாலும், அதில் ஒவ்வொரு காதல்களும், அதன் முடிவுகளை எப்படி அந்த காதலர்கள் மனதலவில் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையும் நன்றாக காட்டியிருப்பார் வஸந்த். ஷாம், அதற்காக சொல்லும் விளக்கங்கள் எல்லாமே எனக்கும் சரியென்றே படும் அந்த படம் பார்க்கும் போதெல்லாம். பொறுமையாக மூன்று முறை பார்த்திருக்கிறேன் .

படங்களில் காதல் தோல்விகளை பார்க்கும் போது நமக்கு ரசிப்பதாய் இருந்தாலும் நேரில் அது மிகவும் கொடுரமானது. எனது நெருங்கிய நண்பனொருவன் இப்படியான ஒரு துயரத்தில் இருந்த போது நாங்கள் அனைவரும் அவனுக்கு உறுதுணையாய் இருந்தது எனக்கு ஞாபகம் வருகிறது. தவறான மன அபிப்பிராயத்தில் நமக்குள்ளே ஒரு தாஜ்மஹாலை கட்டுவதெல்லாம் தவறு. இரண்டு நாட்களுக்கு முன்னால் எனது நண்பனின் நண்பன், காதலினால் சோகத்தில் ரயிலில் தலை வைத்து உயிரை இழக்கும் தருவாயில் காப்பாற்றப்பட்டான். அந்த சம்பவத்தை நினைத்த போது மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.. வேறெந்த தோல்வி என்றாலும் தாங்கிகொள்ளும் மனசு, இதில் மட்டும் முரண்பட்டு நிற்பதேன்.. எதையும் எதிர்த்து போராடுங்கள் காதலர்களே!

55 பின்னூட்டங்கள்:

said...

nethu potta commentukku reply panniteengalannu paakka vandha adhukkulla oru pudhu posta???

waities padichittu varen :)

said...

ellam unarchivasapadum andha oru sila nimidangalil edukkapadum mudivugal.. verenna solvadhu..

idha padichappo enakku en frienduku nadandha nigazhchi dhaan nyaabagathukku vandhudhu.. avaloda pazhaya companyla work panna ava friend ava kitta propose pannama directa ava veetla pesi kalyanathukku permission vaangi appuram ava kitta propose panaru.. avalukkum avara pudichirundhadhaala she too accepted. ava accept pannapo she was in chennai and he was in b'lore. so he said he will come to chennai to meet her on aug 14th independence day leave.. but adhukku munnadi avaloda close friend oruthar inga irandhutadhaala ivala console panna varennu he came from blore. unfortunately varra vazhila he met with an accident and he expired on the spot. Avala avanga nativekku anupi vechom (2 perukkum same native dhaan) but avaroda bodya avanga parents accident aana body avlo dhooram poga mudiyaadhunnu pondicherylayae adakkam pannitaanga.. avalukku kadaisila andha mugatha kooda paaka mudilannu romba varuthapatta.. avanga veetla irundhappo 2 vaati suicide attempt try panni 2 vaatiyum avangappa dhaan avala kaapathinar.. idhu nadandhu 3 yrs aagudhu.. but still engalaala avala pazhaya maadiri paaka mudiyala.. :-( Kaadhal evlo vali tharumnu modhal murai naan ava kitta dhaan paathen.

said...

///// ரெங்கநாதன் வீதியில் நின்றுகொண்டு, உள்ள வர்ற எல்லோரிடமும் இதுவரைக்கும் நீங்க யாரையாவது காதலிச்சிருக்கீங்களான்னு கேட்டா கிட்டதட்ட எல்லோருக்குள்ளும், கடலின் ஆழத்தில் சிப்பிக்குள் உறங்கி கொண்டிருக்கும் ஒரு முத்தை போல, ஒரு அழகான கதை இருக்கும்///
nidarsanamana unmai...

said...

////வேறெந்த தோல்வி என்றாலும் தாங்கிகொள்ளும் மனசு, இதில் மட்டும் முரண்பட்டு நிற்பதேன்.. எதையும் எதிர்த்து போராடுங்கள் காதலர்களே!
///
ade thaan naanum ketkiren.. oru murai kadalil thotruponal en makkal vaazhkaiye mudinja mathiri ninaikaraanga

said...

//உலகத்துல சொல்லப்பட்ட காதல்களைவிட சொல்லாத காதல்கள் //

சொல்லாத காதலால் யாருக்கென்ன லாபம்.."ரோஜாக்கூட்டம்" படத்தில் Climax ல் ராதிகா ஸ்ரீகாந்த்திடம் சொல்வார் "நீ உன் காதல அவகிட்ட சொல்லாம நல்லவன்னு பேர் எடுக்கிறத விட சொல்லிட்டு அயோக்கியன்னு பேர் எடுக்குறதுல தப்பே இல்ல"
இது எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்

said...

//இந்த பூமியை பிடித்திருக்கின்ற ஒரு மெல்லிய உணர்வுக் கம்பி//
கம்பி மேட்டரு சூப்பர்!காதலுக்கு இப்படியொரு உவமையா?

said...

//மூன்று முறை பார்த்திருக்கிறேன்//

தெய்வமே!பெரிய பொறுமைசாலி தானுங்க நீங்க!!

Anonymous said...

I believe it is not the aspect of love, but something deeper. When we are little kids and have a deep desire to become an engineer, a doctor or a big official, we feel a big lose when those dreams are not acheived. Likewise, when you dream of a life with someone, and that does not look possible, life I am sure, loses a special stimulant. Of course, the degree to which such a lose drives a person depends on how deeply they are affected and how much they have wanted something.

Chinna chinna poRulkaL kidaikalaNaala, manasu kastapaduthu. Namma vazhkai-aiyE oru aaL kooda panku pOda aasai pattu athu kidaikalaNaa evvalavu kastamaa irrukkum.

But people should always get into relations with some intelligence attached. If social status, religion and other thoughts will take precedents over the person that you love, you shouldn't go for it.

Not a very correct view. But I guess, this is what happens in the minds of others. I certainly don't endorse things like suicide and ruining ones life. But am trying to understand that person's thoughts.

-kajan

said...

first!!!

said...

Hey Karthik, really a serious post...naa yedho kadhai nu ninaichu padikka aarambicha..idhu unmaya?? I've heard abt that trichy REC matter..but not this madurai one.. so sad..

:) :) yei nee romba azhaga iruke va recall pannina..only vivek jokes thaan nyabagam varudhu :) :)

said...

ஸ்ப்ப்பா! ஒரு பிரின்ஸிபால் நேர்ல நின்னு பேசற மாதிரி இருந்தது கார்த்தி. :)

said...

mmmmm, intha vishyaththil ninga theliva irukkirathaip partha I am happy. Very good post indeed. Keep it up.

said...

innum yarum varalaiya? me first? ha ha ha prize money ellam enakku. appuram antha Barani kitte irunthu, veda anupicha petti, Gopinath anupichathu ellamum varanum, vida matten. sariya? :D

said...

;-((((( ரொம்ப சோகமா இருக்கு தல

C.M.HANIFF said...

Nalla eshuti irukeenga, konjam soagam kalanta pathivu ;-)

said...

நீங்கள்ளும் காதல் பத்தியா! அருமையா சொல்லி இருக்கீங்க!

said...

உண்மை தான் கார்த்தி.

காதல் மரணம் மாதிரி.

said...

நடந்தா தவிர மத்தவங்களுக்கு புரிய வழியில்லை!!. We can never understand it unless we are one experiencing it!

said...

//// இந்த பூமியை பிடித்திருக்கின்ற ஒரு மெல்லிய உணர்வுக் கம்பி. //

aiyo, idha paatuku neeenga dreamz aanda solli vaikaadheeenga...... he he appuram peria kambi'nu yen solla'lanu sandaiku varauvaaaru...

said...

ennathe solla,

kadhalukaaaga uyirai vidubavargal => vaaila orey ketta ketta vaarthaigala varudhu.......

ennathe solla.....

sollurathuku onnumey ila....

said...

//
இப்படித் தான் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன், திருச்சியிலும் ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் அந்த சம்பவத்தில் அந்த பெண் அந்த இடத்திலேயே இறந்துவிட்டாள்.
//
அந்த பையன் நான் படித்த ஷண்முகா கல்லூரியில் தான் படித்தான் மு.கா. கேம்பஸில் CTS நிறுவனத்தில் மாதம் 22000 சம்பளத்தில் வேலை கிடைத்தது அவனுக்கு. வாழ்க்கையை தொலைத்து விட்டு சிறையில் இருக்கிறான்.

ஹ்ம்ம்.... என்னத்த சொல்றது.

அது சரி... கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் பிணக்கோலத்தை பார்த்திருக்கிறீர்களா? கத்தியினால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாள். பாதி கழுத்து அறுபட்ட நிலையில் அந்த கத்தி அவளது கழுத்தில் இருந்தது. தான் நேசித்த ஒரு பெண்ணை இவ்வாறு கொலை செய்ய அரக்க மனம் கொண்டவனால் மட்டுமே முடியும்.

Anonymous said...

Dear Karthi,
enna solradhu.. One side love and its failure - idharku orae reason,

Thannai patri thanaku perumaiyaga ninaithu kolladhavangaluku than indha sogam affect pannum.

So , kadhal tholvi vandhal, manadhai seri seidhu kolla vendum -

Ennudan vaazha Ivan or ivaluku koduthu
vaikavillai .Thats all.

Namakaetra oru nalla jeevan namaku kidaikum.

Nammai purindhu kolladha ival(n) udan life eppadi nanraga irukum enru sindhithu parthu vittu - (nam unmai anbai purindhu kolladha oruvarudan life eppadi nanraga irukum....unmai idhu dhanae )

(Seriyana size illadha dress pottu kolla muyarchipadhai pol dhan - indha one side love garadhu...)

Che che indha pazham pulikukm enru solli kondal - kadhal tholvi manadhai bhadhikadhu.

Idhu ennudaiya karuthu for One side love ku.......

With Love,
Usha Sankar.

said...

கொஞ்சம் டைம் குடுங்க தல.. உங்க ஸ்பீடுக்கு நம்மால ஈடு குடுக்க முடியாது :-(

said...

இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பாக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு. என்ன பண்றது, பல தவறுகள் உணர்ச்சி வசப் பட்டு, யோசிக்காம பண்றது தானே.

said...

G3,

உங்க ஃப்ரெண்ட் கதை கேக்கவே ரொம்ப பாவமா இருக்கு. அதுவும் தன்னை பார்க்க கிளம்பி வரும் போது ஆக்ஸிடெண்ட்னா, மறக்கறது ரொம்ப கஷ்டம் தான்.

said...

Thaz very sad karthick. Love alone is not the end of the world. If he doesn't get the girl he loves, he must marry a girl who likes him and comforts him.

Love need not always go after death. It just happens and in life ther are many lessons to learn. If he can swim with confidence, he can win even if he fails for the first time. Isn't it.

said...

//nethu potta commentukku reply panniteengalannu paakka vandha adhukkulla oru pudhu posta???
//

என்னங்க பண்றது, G3 நம்மளால சில விஷயங்களை எழுதாமல் இருக்க முடியிறது இல்லை

said...

/Kaadhal evlo vali tharumnu modhal murai naan ava kitta dhaan paathen.//

G3, உங்க தோழியோட கதை மிகவும் சோகமானது.. படிக்கும் எங்களுக்கே அதிர்ச்சியா இருக்கேப்பா...

said...

/nidarsanamana unmai...//

ஆமாங்க DD.. பூவே உனக்காக படத்துல சொல்ற மாதிரி முதல் காதலை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துட முடியாது

said...

/oru murai kadalil thotruponal en makkal vaazhkaiye mudinja mathiri ninaikaraanga//

G3யோட தோழியின் கதையை கேட்ட பிறகு இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரிலைங்க DD

said...

//"நீ உன் காதல அவகிட்ட சொல்லாம நல்லவன்னு பேர் எடுக்கிறத விட சொல்லிட்டு அயோக்கியன்னு பேர் எடுக்குறதுல தப்பே இல்ல"//

எனக்கும் பிடித்த வரிகள் செந்தில்

said...

/கம்பி மேட்டரு சூப்பர்!காதலுக்கு இப்படியொரு உவமையா?
//

ஹிஹிஹி.. நன்றிங்க செந்தில்

said...

//தெய்வமே!பெரிய பொறுமைசாலி தானுங்க நீங்க!!
//

கான்செப்ட் கொஞ்சம் பிடிச்சு போச்சுங்க செந்தில்.. கூடவே ஸ்நேகாவும்

said...

/But am trying to understand that person's thoughts.//

நீங்க சொன்னது சரிங்க கஜன்.. சின்ன பொருள்லயே அப்படி மனசு கிடந்து தவிக்கிறப்போ காதல், அதைவிட வலிமையானது..

said...

/yei nee romba azhaga iruke va recall pannina..only vivek jokes thaan nyabagam varudhu//

பத்மப்ரியா அடுத்த தடவை அந்த படத்தை பாத்தா இதையெல்லாம் கவனிங்க..

said...

/ஒரு பிரின்ஸிபால் நேர்ல நின்னு பேசற மாதிரி இருந்தது கார்த்தி//

அம்பி.. உன் லொள்ளுக்கு அளவே இல்லைப்பா

said...

/ Very good post indeed. //

ஹிஹிஹி நன்றிங்க மேடம்

வஷிஷ்டர் வாயால வரம் வாங்கின மாதிரி இருக்கு :-)

said...

/appuram antha Barani kitte irunthu, veda anupicha petti, Gopinath anupichathu ellamum varanum, vida matten. sariya?//

தீக்குச்சி பெட்டியா மேடம்!

said...

/ரொம்ப சோகமா இருக்கு தல
//

எழுதி முடிச்சப்போ எனக்கும் கோபி

said...

/Nalla eshuti irukeenga, konjam soagam kalanta pathivu/

மனசு கனத்து போய் எழுதினதுங்க ஹனிஃப் :-)

said...

/நீங்கள்ளும் காதல் பத்தியா! அருமையா சொல்லி இருக்கீங்க!

//

உங்க பதிவையும் படிச்சேங்க ட்ரீம்ஸ்

said...

/நடந்தா தவிர மத்தவங்களுக்கு புரிய வழியில்லை!!. We can never understand it unless we are one experiencing it!

//

ஆமாங்க ட்ரீம்ஸ்.. அனுபவிக்கிற வரை அதன் வலி நமக்கு புரிவதில்லை..

said...

/aiyo, idha paatuku neeenga dreamz aanda solli vaikaadheeenga...... he he appuram peria kambi'nu yen solla'lanu sandaiku varauvaaaru...
//

நல்ல வேளை சண்டைக்கு வரல கோப்ஸ்

said...

/கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் பிணக்கோலத்தை பார்த்திருக்கிறீர்களா? கத்தியினால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாள். பாதி கழுத்து அறுபட்ட நிலையில் அந்த கத்தி அவளது கழுத்தில் இருந்தது//

கொடுமையான புகைப்படங்கள் அவை சத்யா

said...

/Idhu ennudaiya karuthu for One side love ku.......
//

நல்லா சொன்னீங்க உஷா.. என்னங்க பண்றது அறிவுக்கு தெரியிறது மனசுக்கு புரியிறதில்லை

said...

/கொஞ்சம் டைம் குடுங்க தல.. //

மெதுவா படிச்சிட்டு வாப்பா அருண்

said...

//என்ன பண்றது, பல தவறுகள் உணர்ச்சி வசப் பட்டு, யோசிக்காம பண்றது தானே. //

ஆமாங்க ப்ரியா.. அந்த ஒரு நொடியை கடந்துட்டாலே இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்காது

said...

/Thaz very sad karthick. Love alone is not the end of the world. If he doesn't get the girl he loves, he must marry a girl who likes him and comforts him.
//

எல்லாம் அந்த நேர உணர்ச்சி வயப்படுதல் தாங்க ப்ரியா

said...

நம்ம சுத்தி நடக்கற இப்படிப்பட்ட விஷயங்களை பார்க்கும்போது மனதிற்கு மிக கஷ்டமா இருக்கு கார்த்தி. ஒரு தலை காதலை விட கொடுமையானது ரொம்ப நாள் காதலித்து பின் கைப்பிடிக்க முடியாமல் போவது தான். என் தோழிக்கு அது மாதிரி தான் நடந்தது.காதலர்களுக்கு ஒன்று காதலை திருமணத்தில் முடிக்க கடைசி வரை போராட தெரிய வேண்டும், முடியவில்லையென்றால் தோல்வியை தாங்கிக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இது நடக்காத போது தான் இப்படி கோரமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

said...

Kadhilithu paar kavidhai varum endrargal..
Kadhalithaen kavidhai varavilai-avan
Kaadhalai maruthadhaal
KaLaraiyin vazhi therindhadhu eLidhil!!

Engo padichadhu pa ...

said...

Nalla message..Kadhalikkuravanga yosipaangalaa?

said...

Love is nothing but a great expectation. Expectation of Fresh new life.. Idhudhaan source of joy.. ivanaala illa ivalaaladhaan nalla life, sandhoshamaana life amaiumnu oru kuruttu nambikkai.. Nambi nambi kanavu valathu kadaisiyila nijathila paakurappo Kanavukkum realitikkum malaikkum maduvukkum ulla difference irukkum. Expectation disappointment aagum... Appuram enna, kaadhal tholvi, Vali, Vedhanai.. Vera endha vishayathukkum manushan ivvalavu kanavu karpanai ellam vechikkaradhae illa... Indha oru vishayatha thaan avanoda mansu fulla affect pannura alavukku allow pannuraan... Adhudhaan ivvalavu despair.. Yemaatram.. Valkaiye avvalavudhaanu oru consideration..

Love appidingaradha practical human expectation apidinnu eduthukkanum. Adha vittuttu cinematicka neriya vishayangala potu kolappikkitta ippidithaan.. Rail thandavaalathula thalaiya kudukka vendiyadhudhaan.. Idiots..

said...

/ஒரு தலை காதலை விட கொடுமையானது ரொம்ப நாள் காதலித்து பின் கைப்பிடிக்க முடியாமல் போவது தான். என் தோழிக்கு அது மாதிரி தான் நடந்தது//

G3யின் தோழி கதையை கேட்கும் போது அது நன்றாகவே புரிகிறதுங்க வேதா

said...

//Kadhalikkuravanga yosipaangalaa? //

யோசிச்சா காதல் வராதுங்க, ராஜி.. கவலைகள் தான் வரும்

said...

//Love appidingaradha practical human expectation apidinnu eduthukkanum. Adha vittuttu cinematicka neriya vishayangala potu kolappikkitta ippidithaan.. Rail thandavaalathula thalaiya kudukka vendiyadhudhaan.. Idiots..
//

சரி சரி.. அவங்க அப்ப இருக்கிற ஒரு இனம் தெரியாத உணர்சில இதையெல்ல்லம் செஞ்சிடுறாங்க சசி