அழகுகள் ஆயிரம்.. ஆயிரத்தில் ஆறு இங்கே
இன்று காலை அழகு அழகுன்னு CVR ஒரு பதிவை போட்டிருந்தார். அழகாய் தானே எழுதியிருக்கிறார் என்று பார்த்தால், தல, நீங்களும் எழுதுங்க நம்மளையும் எழுதச் சொன்னார். மறுபடியும் நம்ம நண்பர் அமிழ்தும் இந்த தொடரை எழுத சொல்லியிருந்தார். ஆறு தான் எழுதப் போறோம் ரெண்டு பேருக்கும் பிரிச்சு தந்தா, அதெல்லாம் முடியாது, ஞானபழத்தை முழுதா சாப்பிட்டா தான் நல்லதுன்னு சொல்லிடுவாங்களோன்னு தெரியல. இருந்தாலும் நண்பர்கள் ஆளுக்கு மூன்றா பிரிச்சுக்குவாங்கங்கிற நம்பிக்கைல இதோ நம்ம வண்டி தயார்...
இதோ நமக்கு பிடிச்ச அழகுகள் ஆறு..
முருகன்
அழகெல்லாம் முருகனே-ல ஆரம்பிச்சு அழகென்ற சொல்லுக்கு முருகா வரை அவன் அழகு பற்றி சொல்லாத பாடல்கள் கிடையாது. காலெண்டரோ, ஓவியமோ, எதுவாய் இருந்தாலும் முருகனோட முகத்துல தெய்வீக அழகை தவிர, சுண்டியிழுக்கும் ஒரு இளமை அழகும் இருக்கும். சின்ன வயதில் முருகனோட படங்கள் பார்த்து, இப்படி வரையும் ஓவியர்கள் யாரின் முகத்தை முன்மாதிரியா எடுத்துக்குவாங்க.. இல்லை வரையும் போதே அவர்களின் முன்னே முருகன் வருவானோ என்று எண்ணி எண்ணி வியக்கும் அப்படியொரு அழகு முருகனோட முகத்துல இருக்கும். பழநி மலை போனால், ராஜா வேஷத்துல, ஆனந்தமான ஒரு புன்னகையோட அவரை காண கண்கோடி வேண்டும். அதுவும், வடபழநி கோவிலில், சில அர்ச்சனை பொழுதுகளில், திருநீறு, திணை, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால் என்று பல அபிஷேகங்களில் முருகனை காண என்ன கொடுப்பினை செய்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. அழகு அப்படின்னு சொன்னாலே எனக்கும் சித்திரம் முதல் சிலை வரை முதல்ல மனசுல வந்து நிற்பது முருகன் தான். மொத்த அழகு ஆறையும் முருகன்னே சொல்லலாம். ஆனால், மேல CVRக்கும் அமிழ்துக்கும் வாக்கு கொடுத்து விட்டதால் முருகன் முதல் இடத்தில் மட்டும்.
தமிழ்
ஒவ்வொரு எழுத்தும் ஒரு அழகு. அதிலிலிருந்து எழும் ஓசைகளும் அழகு. தமிழை கரைத்து குடித்தவர்கள், அதோடு பக்கத்தில் அமர்ந்து வாழ்ந்தவர்கள், அதனை அமிழ்தென்றும் அழகென்றும் சொல்லிவிட்ட பிறகு, நான் மட்டும் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது.
நான் பிறந்தவுடன் வடமாநிலத்தில் இருந்தேன், கிட்டதட்ட எனது நான்கு வயது வரை. அப்போது அங்கு தமிழர் பிரச்சனை எழுந்து, தமிழரெல்லாம் பயந்து தமிழகம் வந்தடைந்த போது, போதும் இந்த வாழ்க்கை என்று நாங்களும் வந்துவிட்டோம். அப்போது கிளி மாதிரி தத்துபித்துன்னு நான் தமிழ் பேசுவேனாம். ஆனால் ஹிந்தி வெளுத்துகட்டுவேனாம். என் ஊருக்கு வந்த பிறகு யார் கேள்வி கேட்டாலும் நான் ஹிந்தியில் தான் பதில் தருவேனாம். இன்னமும் ஊர் பெருசுகள் என்னை கண்டால் சொல்லும் விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்போது ஹிந்தியா அப்படின்னா என்று கேட்கும் நிலையில் தான் நான் என்றாலும், அப்போது அப்படி ஹிந்தி பேசியதில் பல சமயங்களில் பேசும் போது, 'ழ'வை ல என்று உச்சரித்து விடுவதுண்டு. ஆனால் எழுதும் போது அந்த மாதிரி பிழைகள் இருக்கவே இருக்காது. இந்த ஒரு விஷயதிற்காக எத்தனையோ முறை நான் வருந்தியதுண்டு என்றால், தமிழ் மேலும், அதன் ஏகாந்த அழகின் மீதும் நமக்கிருக்கும் பற்று தெரிந்திருக்குமே. தமிழ் இங்கே இரண்டாவது அழகு..
நிலா
ஆடை கட்டி வந்த நிலவு என்று பட்டுகோட்டை முதல், வண்ணம் கொண்ட வெண்ணிலவே என்று வைரமுத்து வரை நிலவை, அதன் அழகை, அதன் பரந்த வெளிச்ச வெளிகளை பாடாத கவிஞர்கள் உண்டா.. நிலா, என்றுமே அழகு. அது தேய்வதும் அழகு.. வளர்வதும் அழகு.. சின்ன வயசில் நிலாவை காட்டி நமக்கு நெய்ச்சோறு போட்டதெல்லாம் மறக்கமுடியாதது. (அப்பவே நிலாவ சைட் அடிக்காம இந்த ஷ்யாமுக்கும், அம்பிக்கும் சோறே உள்ள இறங்காதாம்.) அந்த சின்ன வயதில் மனதில் ஒரு இளவரசியாக பதிந்துவிட்ட நிலா, இன்று அழகான ஒரு தேவதையாக மனசுக்குள் உருவெடுத்து நிற்கிறது. பரந்து விரிந்து கிடக்கின்ற இருண்ட வானத்தில் ஒரு வெளிச்ச பொட்டு, இந்த நிலா. உலக காதலர்களின் உன்னத நண்பன் இந்த நிலா. நமக்கும் எங்கே போனாலும் கூடவே வர்ற காதலி. இவள் இருப்பது மூன்றாம் இடத்தில்.
புன்னகை
கொஞ்சம் சிரிங்க என்று புகைப்பட நிபுணர் முதல், எப்படி சிரிச்ச முகத்தோட மகாலெட்சுமி மாதிரி இருக்கு பொண்ணு என்று பெண் பார்க்கும் இடத்தில் பெரியவர்களும், டேய், எப்போதுமே உன் உதட்டுல லிப்ஸ்டிக் மாதிரி இருக்கிற அந்த ஸ்மைல் தாண்டா என்னை கவுத்தினது என்று பூங்காவில் காதலனிடம் கதைக்கும் காதலியும், பொக்கை வாய்னாலும் என் தாத்தா சிரிச்சா அது அழகு என்று சொல்லும் பேரன்களும், அமுல் பேபி மாதிரி அழகா சிரிக்கிறான் பாரு குழந்தை என்று பக்கத்து வீட்டு குழந்தைகளை கொஞ்சுவது வரை புன்னகையில் அழகு, வர்ணமடித்த வானம் மாதிரி முகத்துக்கு ஒரு அழகு. இந்த சிரிப்பு முகத்துக்கு மட்டும் இல்ல, உள்ள இருக்க மனசையும் படம்பிடித்து காட்டும் அழகு.. அதனால நமக்கு சிரித்த முகம் ரொம்ப பிடிச்ச விஷயம்.
மழை
ஒரு மழை பெய்தால் போதும், அது மனிதர் முதல் புல், பூங்கா வரை எல்லோரையும் மகிழ்விக்கும். இந்த பூமியே குளித்தது போல அப்படி ஒரு அழகு வழிந்தோடும் இந்த மழையினால். நமக்கு மழை ரொம்ப பிடித்த விஷயம். மனசு நனையிற வரை மழையில் ஆடுவேன். நம்புங்கள், பயந்து ஒளிந்த போதெல்லாம் பிடிக்கும் வியாதிகள் மழையோடு கைகோர்த்து ஆடும் போது வருவதே இல்லை. நான் மழையை பொருத்தவரை, ஆண்பால் ஷ்ரேயா. கண்ணை மூடிக்கொண்டு இதை கற்பனை செய்து பாருங்கள். மழை முடிந்த நேரத்தில், மரங்கள் சூழ்ந்த ஒரு சாலையில், ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல, சேர்த்த துளிகளை தரைக்கு இலைகள் அனுப்பும் அந்த ஆனந்த கணத்திலே என்னை மறந்து நடப்பேன். ஒரு மரத்தை போல ஒளிந்து கொள்ளாமல் மழையில் குளித்து, காற்றில் தலைவாரிக் கொள்வேன். மழை, என் ஐந்தாவது அழகு.
நல்ல மனிதர்கள்
வானில் கருமேகம் சூழ்ந்தது. இதை கண்டாலே மழை பெய்யும் சந்தோசத்தில், தரை புற்கள் கூட தலையாட்டி ஆடும். மயிலுக்கு சொல்லவும் வேண்டுமோ. தன் அழகு தோகைவிரித்து நடனமாடியது. இதை கண்ட பேகன் என்னும் மன்னன், அடடா, குளிரில் வாடுகிறதே இந்த பொன்மயிலென்றெண்ணி போர்வை போர்த்துகிறான். பார்ப்பதற்கு அறிவற்ற செயல் என்று தோன்றினாலும், அதுவும் ஒரு உன்னத செயல் என்கிறது நாலடியார். இதைப் போல பசியென்று வந்த புறாவிற்கு தன் தொடை அரிந்து தந்தான் ஒரு மன்னன். இப்படி, வாய்விட்டு சொல்லமுடியாத உயிருக்கே பதறியடித்து உதவும் இவர்கள் மனிதர்களுக்கு எப்படி உதவியிருப்பர்கள். இந்த அளவு இல்லையெனினும், நம்மால் முடிந்த அளவு முடியாதோர்க்கு உதவி செய்யலாம். முடியாதோர் என்றதும் எல்லோரும் பிச்சை போடுவது ஒன்று தான் என்று நினைகிறார்கள். ஆனால், அதுவல்ல.. வெயில் காலங்களில் பழநிக்கு பாதயாத்திரை நடந்து போவோருக்கு மோர், தண்ணீர் பந்தல் அமைத்து அவர்தம் தாகம் தணித்தல், கல்வி கற்க வழியிருந்தும் நிதி இல்லாததால் பள்ளி போக முடியாதோர்..இப்படி எத்தனையோ பேர் வாழ நெஞ்சில் உரம் இருந்தும் திசைகாட்ட ஆள் இல்லாததால் பாய்மரம் போலத் தவிக்கின்றனர். நல்ல மனிதர்கள் சமுதாயதிற்கு அழகு.
இது போல படித்து முடித்துவிட்டு, புராஜெக்ட் அல்லது வேலை இருக்கும் இடங்கள் தெரியாமல் எத்தனையோ மனிதர்கள் பரிதவிக்கின்றனர். அப்படி வழியிழந்தோர்க்கு உதவ அம்பி-யும், DD மேடமும் புதியதாய் ஒரு வழிமுறையோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் நல்ல மனிதர்கள். சமுதாயம் புன்னகை பூக்க, சோர்ந்த நெஞ்சங்களில் மகிழ்ச்சி மழை பொழிய, இந்த தமிழின் உதவியோடு, இருட்டை ஒழிக்க வந்திருக்கும் மனித நிலாக்கள். அவர்களின் இந்த முயற்சி வெற்றி பேற வாழ்த்துக்கள்.
என்னின் ஆறை எழுதி முடித்தாகிவிட்டது. அப்போ நாமும் மற்றவர் அழகை தெரிந்து கொள்ளவேண்டாமா. இதோ நான் டேக் செய்யும் நண்பர்கள்
1. அம்பி
2. DD மேடம்
3. ACE
4. ப்ரியமான ப்ரியா
5. பில்லு பரணி
6. G3
(விதிகளை மீறி ஆறு பேரை கூப்பிட்டாச்சு.. இனிமே இதுல மூணு பேரை குறைக்க முடியாது.. இந்த சங்கிலியை ஆரம்பித்த கொத்ஸ் மன்னிப்பாராக)
உங்க அழகை தெரிந்துகொள்ள நான் தயார். எழுத தயாராகுங்கள்.
78 பின்னூட்டங்கள்:
firstu :))
aah just miss
-porkodi
தல, இந்த டேக், ஆரம்பிச்சது இலவச கொத்தனார், அவர் 3 பேர தான டேக் பண்ண சொன்னார்.. :(
பரவாயில்லை விடுங்க.. அழகு தானே..
அழகெனச் சொன்ன ஆறும் எனக்கும் அழகானவையே!
சொல்லியிருக்கும் அழகே அழகு!
என்ன தல, நமக்கு பிடிச்சத எல்லாம் சொல்லி இருக்கீங்க.. புது மழை பெய்தா, வர மண் வாசம்.. ஆகா என்ன ஒரு சுகம் :)
மீதி நாளைக்கு :)
enna idhu azhaga pathi potutu enna pathi podama vitutinga?? so complete agalai unga post :D
aiyo kallu parandhu varudhe!! kodi odu...
-porkodi
arumai...
aanaalum vithimuraiya maathi aaru pera ezutha sollirukeenga?? koththanaartta solli unga mela maana nasta vazakku poda solla poren :))))
Dear Karthi,
Nalla writings um oru azhagu dhan .Ungalin writings pola....
இருண்ட வானத்தில் ஒரு வெளிச்ச பொட்டு, இந்த நிலா. உலக காதலர்களின் உன்னத நண்பன் இந்த நிலா. நமக்கும் எங்கே போனாலும் கூடவே வர்ற காதலி. இவள் இருப்பது மூன்றாம் இடத்தில்.
Nilaavai patriya azhagana varnanai.
இந்த பூமியே குளித்தது போல அப்படி ஒரு அழகு வழிந்தோடும் இந்த மழையினால்.
Mazhaiku kodutha definition - Azhagu. (naan solra azhagu unga writings patri)
Mazhaiyil nanaidhal kidaikum sandhosham - Great than.
Mazhaiyilum vareity irukae!!!
Thooralaga peiyum mazhaiyil nanaidhal - maram , chedi, vaanam enru ellavatraiyum rasithu kodnu nadakalam..
Periya mazhaiyil nanaindhal - konjam bayathudan oru adventure madhiri nanaindhu kondu varalam. Reallly nice experience dhan indha mazhaiyil nanaidhal.....
நல்ல மனிதர்கள் சமுதாயதிற்கு அழகு. - TRUE
Neengal sonna ellam ennudiaya favourites um kuda. Innum one more Beauty in this world is - KIDS dhan Karthi...
Pirandha kuzhandhai mudhal mazhalai maaradha school pogum kids varai - Iraivan padaipil oru more Beauty... I love kids So Much.....
With Love,
Usha Sankar.
அழகென்ற சொல்லின் தலைவனில் ஆரம்பித்து நல்ல மனிதர்களோடு உள்ள உலகமே அழகு என சொல்லி வந்த
உங்கள் தமிழ் அழகு
உங்கள் நடை(எழுத்து) அழகு
உள்ளது ஆயிரம் என்றாலும் அழகின் அழகான அந்த ஆறும் அழகு
//மனசு நனையிற வரை மழையில் ஆடுவேன்//
இதுதான் இடிக்குது அதெப்டி மனசு நனையும்-ஆனாலும் அழகு
சொல்லியிருக்கும் அழகே அழகு!
now attendence, will come for second round.
@anony(kodi) second anony comment chellathu chellathu! :p
ella azhagayum neenga ezhdhiteenga..idhula naan ennatha ezhudharadhu maams :)
azhaguna bhavana-nu oru padhivu potuda vendiyadhu thaan :)
தல
அழகுகள் எல்லாம் நல்லா எழுதியிருக்கீங்க. கொஞ்சம் வேகமாக போட்டது மாதிரி தெரியுது.
Just awesome karthick:)
You picked up all the good ones we need to care and help.
நீங்க பட்டியல் இட்டிருக்கற அனைத்தும் எனக்கும் பிடித்தமான விஷயங்கள்.
அழகான பதிவு தலைவரே!! :-)
ASHAGAGA SOLLI IRUKEENGA KARTHIK
;-)
mmmmm, so I am not in your favourite bloggers list. So that is the reason you are not coming now-a-days. OK.
ambi already wrote about beautiful things. I think.
As usual the flow in ur writing is 2 good! :) Keep writing.. Waiting 2 c others versions of this tag ;)
முதல் இடத்துக்கு வந்த நண்பர் ACE-க்கு நல்லா கூலா ரெண்டு இளநீர் பார்சல்
/aah just miss
-porkodi //
என்னாச்சு பொற்கொடி.. இப்போவெல்லாம் ஒரே அனானி கமெண்ட் தானா
/தல, இந்த டேக், ஆரம்பிச்சது இலவச கொத்தனார், அவர் 3 பேர தான டேக் பண்ண சொன்னார்.. :(//
ஹிஹிஹி.. தெரியாமல் ரூல்ஸ் உடச்சிட்டேன் ACE.. டிஸ்கி போட்டுட்டேன்
//அழகெனச் சொன்ன ஆறும் எனக்கும் அழகானவையே!
சொல்லியிருக்கும் அழகே அழகு! //
ரொம்ப நன்றிங்க VSK
/மீதி நாளைக்கு :) //
வெயிட்டிங் மக்கா :))
//enna idhu azhaga pathi potutu enna pathi podama vitutinga?? so complete agalai unga post :D
aiyo kallu parandhu varudhe!! kodi odu...
-porkodi
//
பொற்கொடி.. நீ வந்து கமெண்ட் போட்டதுல பூர்த்தி ஆகிடுச்சுப்பா
//இந்த பதிவும் அழகோ அழகு :) //
வேதா.. நன்றிங்க..
என்னங்க ரொம்ப ஆணியா.. திருக்குறளை விடச் சின்னதா கமெண்டுறீங்க :)
/aanaalum vithimuraiya maathi aaru pera ezutha sollirukeenga?? koththanaartta solli unga mela maana nasta vazakku poda solla poren :)))) //
அப்படியெல்லாம் ஏதும் பண்ணிடாதீங்க ஜி.. ஏதோ பாவம் நான் :)
எப்படி இருக்கு இந்திய பயணம், ஜி
/Pirandha kuzhandhai mudhal mazhalai maaradha school pogum kids varai - Iraivan padaipil oru more Beauty... I love kids So Much.....
With Love,
Usha Sankar.
//
குழந்தை அழகை பெரும்பாலும் எல்லோரும் சொல்லிடுறதால, அதை default லிஸ்ட்ல சேர்த்துட்டேங்க உஷா..
/உங்கள் தமிழ் அழகு
உங்கள் நடை(எழுத்து) அழகு
உள்ளது ஆயிரம் என்றாலும் அழகின் அழகான அந்த ஆறும் அழகு //
நன்றிங்க செந்தில்.. எல்லாம் அந்த முதலில் இருப்பவனின் கருணை
/இதுதான் இடிக்குது அதெப்டி மனசு நனையும்-ஆனாலும் அழகு //
மனசு சந்தோசமாகும் வரைங்கிறதை அப்படி ஒரு உருவகத்துல சொன்னேங்க செந்தில்
/சொல்லியிருக்கும் அழகே அழகு!
now attendence, will come for second round.
//
Thanki ambi..
அம்பி, பிளாக்ல தான அடுத்த ரவுண்டு.. இல்ல ஷ்யாம் மாதிரி பாகார்டிலயா
/ella azhagayum neenga ezhdhiteenga..idhula naan ennatha ezhudharadhu maams /
மாப்ள, நீ என்ன எழுதினாலும் அழகு தான்பா
/azhaguna bhavana-nu oru padhivu potuda vendiyadhu thaan :) //
நினச்சேன்.. நீ எப்படி ஏதாவது டகால்டி பண்ணுவேன்னு நினச்சேன்
/தல
அழகுகள் எல்லாம் நல்லா எழுதியிருக்கீங்க. கொஞ்சம் வேகமாக போட்டது மாதிரி தெரியுது. //
எப்படிப்பா கண்டுபிடிச்ச கோபி
//Just awesome karthick:)
You picked up all the good ones we need to care and help. //
Thanks Priya..
/நீங்க பட்டியல் இட்டிருக்கற அனைத்தும் எனக்கும் பிடித்தமான விஷயங்கள்.
அழகான பதிவு தலைவரே!! :-) //
நன்றிப்பா CVR.. இப்ப சந்தோசமா உன் டேகை எழுதியாச்சு உடனே
/ASHAGAGA SOLLI IRUKEENGA KARTHIK
//
Thanks Haniff :-)
/mmmmm, so I am not in your favourite bloggers list. So that is the reason you are not coming now-a-days. OK. //
மேடம், உங்களுக்கு டேக் தானே வேணும்.. இனிமே பாருங்க.. நீங்க இன்னும் நல்லா எழுத ஆரம்பிக்கலையேன்னு தான்..
/ambi already wrote about beautiful things. I think.//
No Madam :-)
தலை உங்க போஸ்ட் அழகோ அழகு..
இதையும் கவிதை மயமா எழுதியிருக்கிங்க.
//மொத்த அழகு ஆறையும் முருகன்னே சொல்லலாம்.//
இவ்ளோ மஸ்க்காவா முருகன்க்கு?
// தமிழ் மேலும், அதன் ஏகாந்த அழகின் மீதும் நமக்கிருக்கும் பற்று தெரிந்திருக்குமே. /
தெரியும் தெரியும்..
//உலக காதலர்களின் உன்னத நண்பன் இந்த நிலா. நமக்கும் எங்கே போனாலும் கூடவே வர்ற காதலி.//
சின்ன வயசுல நிலா கிட்ட அட்ராக்ட் ஆகாதவங்களே இருக்க முடியாது. அதுவும் அது எப்படி எங்க போனாலும் கூடவே வருதுனு எனக்கு ஆச்சரியம் தாங்க முடியாது :)
//இந்த சிரிப்பு முகத்துக்கு மட்டும் இல்ல, உள்ள இருக்க மனசையும் படம்பிடித்து காட்டும் அழகு.. /
க்ரெக்ட். சிரித்த முகம் நம்மளையும் உற்சாகமாக்கும்.
மழை - chance ஏ இல்ல. ரொம்ப அழகு.
//நல்ல மனிதர்கள்//
ஆஹா. நல்லா சொன்னிங்க.
hehehe geetha paatti! kettingla? neenga innum nalla ezhuda aarambikkalai nu thalaiye sollitaaru!! :D idhukku mela enna venum?? :-)
-porkodi
தலை சொல்லி எழுதாம இருக்க முடியுமா? எழுதிசலாம்.
என்ன, இத படிச்சதால இதோச இன்ஃப்ளூயன்ஸ் வந்துடும். வராம எழுத பாக்கறேன்.
inime naan post podara anikku thaan login pannuven nu nenakren:-)
-porkodi.
thala enna aani pidungama comment poduringla? damageeeeeeeeeeeeeer! seekiram odiyaanga :-)
-porkodi.
ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க தல... எனக்கும் நீங்க சொன்ன எல்லா அழகும் பிடிக்கும்.
//
(அப்பவே நிலாவ சைட் அடிக்காம இந்த ஷ்யாமுக்கும், அம்பிக்கும் சோறே உள்ள இறங்காதாம்.)
//
சந்தடி சாக்குல இது சூப்பர் :)
//
பரந்து விரிந்து கிடக்கின்ற இருண்ட வானத்தில் ஒரு வெளிச்ச பொட்டு, இந்த நிலா
//
அட அடா
//
மழை முடிந்த நேரத்தில், மரங்கள் சூழ்ந்த ஒரு சாலையில், ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல, சேர்த்த துளிகளை தரைக்கு இலைகள் அனுப்பும் அந்த ஆனந்த கணத்திலே என்னை மறந்து நடப்பேன்.
//
நானும் :)
கற்பனை பண்ணிப்பாத்தாலே சூப்பரா இருக்கு !!!
கார்த்திக்,
நல்ல அழகாகவே எழுதியிருக்கீங்க.... :)
kaarthi ;) athukulla pottu kalakareenga!
enakku pidicha aaraiyum neenga solliteenga.. ithulla cvr nammalaiyum tag panni irukaar.. naan enna pannuven ;)
sari... paapom.. ethaachum thonamala pogum...
//ஒரு மரத்தை போல ஒளிந்து கொள்ளாமல் மழையில் குளித்து, காற்றில் தலைவாரிக் கொள்வேன்//
kaarthi, super!
namma top 6 appadiye othu poguthu!
/தலை உங்க போஸ்ட் அழகோ அழகு..
//
ப்ரியா, நீங்க எழுதுற அழகு பட்டியலை பார்த்துட்டு சொல்றேன்.. நிச்சயமா அது தான் அழகாய் இருக்கும் :-)
//இவ்ளோ மஸ்க்காவா முருகன்க்கு?
//
பின்ன..நடப்பதெல்லாம் அவன் செயல் தானேங்க ப்ரியா
//சின்ன வயசுல நிலா கிட்ட அட்ராக்ட் ஆகாதவங்களே இருக்க முடியாது. அதுவும் அது எப்படி எங்க போனாலும் கூடவே வருதுனு எனக்கு ஆச்சரியம் தாங்க முடியாது :)//
ஆமாங்க ப்ரியா.. அதை வச்சு சொல்ற கதைகள் இருக்கே, அதுக்கு எல்லையே இல்லை
////நல்ல மனிதர்கள்//
ஆஹா. நல்லா சொன்னிங்க.//
நல்லார் பொருட்டு பெய்யுமாம் மழைனு சும்மாவா சொல்லியிருக்காங்க ப்ரியா
/hehehe geetha paatti! kettingla? neenga innum nalla ezhuda aarambikkalai nu thalaiye sollitaaru!! :D idhukku mela enna venum?? :-)
-porkodi
//
பொற்கொடி! நம்மளை எப்படி போட்டுகொடுக்கலாமா
/தலை சொல்லி எழுதாம இருக்க முடியுமா? எழுதிசலாம்.
என்ன, இத படிச்சதால இதோச இன்ஃப்ளூயன்ஸ் வந்துடும். வராம எழுத பாக்கறேன். //
ஆவலுடன் இருக்கிறோம், ப்ரியா
/inime naan post podara anikku thaan login pannuven nu nenakren:-)
-porkodi.
//
என்ன கொடும இது பொற்கொடி
/damageeeeeeeeeeeeeer! seekiram odiyaanga :-)//
kaarthik, Escapeeeeeeee :-)
/ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க தல... எனக்கும் நீங்க சொன்ன எல்லா அழகும் பிடிக்கும். //
நன்றிப்பா அருண்
//நானும் :)
கற்பனை பண்ணிப்பாத்தாலே சூப்பரா இருக்கு !!! //
ஹ்ம்ம்.. உள்ளேயே போயிட்டு வந்தாச்சு போல அருண்..
/கார்த்திக்,
நல்ல அழகாகவே எழுதியிருக்கீங்க.... //
நன்றி இராம் :-)
/kaarthi ;) athukulla pottu kalakareenga!//
நாம தான் ஃபாஸ்ட்ல ட்ரீம்ஸ்:-)
/enakku pidicha aaraiyum neenga solliteenga//
இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கப்படாது ட்ரீம்ஸ் :-)
//namma top 6 appadiye othu poguthu! //
No No No.. No Escpism Dreamz
/bloglines ஏதோ அழகு-னு ஒரு போஸ்ட் காமிச்சுச்சு... வந்து பாத்தா அடுத்த போஸ்டா ? ரவுசு தான் //
தலைவர் பத்தி செய்தி படிச்ச பின்னாடி போடாம இருக்க முடியல அருன்ன்
/தலைவர்னா சும்மாவா? சரி ரிலீஸ் எப்போ பண்றதுனு முடிவு பண்ணிட்டாரா ஷங்கர் ?
கொலம்பஸ்ல ரிலீஸ் ஆவுதா??
//
படம் மே 17 தான்..
கொலம்பஸில் ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன் அருண்
//இத இப்போ தான் பாத்தேன். அநியாயத்துக்கு சிந்திக்கிறீங்க தல //
அதெல்லாம் கண்டுக்கப்படாது அருண் :-)
/thala, yen ippdi panringa? azhagu postaye innum niraya peru padichurukka maatanga! konjam gap vidunga, illana unga ezhuthu paravaadhu! :-( //
பொற்கொடி.. நீ சொல்வது சரிதான்பா.. என்ன பண்றது தலைவர் பத்தி எழுதாம இருக்க முடியலையே!
//peria rajini rasigara irupinga polarke! adikkadi sivaji news //
நாம சின்னவயசுல இருந்தே இப்படித் தான் பொற்கொடி!
/seri naanum paadidren! poombavai aambal aambal... punnagaiyo vowel vowel!//
அது நௌவல் நௌவல், பொற்கொடி
/so it just reaches the younger gen like ours!//
Obsolutely Correct porkodi!
//ennai vida chinna kuzhandaiya aagitingla? ;-) summa nee vaa po ne sollunga. ana rendu potti extrava anupchu vechidunga! //
ஒகே பொற்கொடி.. நீயே சொல்லிட்ட.
பெட்டி தானே.. சியாட்டல் நோக்கி வந்துகொண்டே இருக்கு!
/சரியா சொன்னிங்க தலை. நான் 2 வருஷம் முன்னாடி ஊருக்கு போயிருந்தப்ப "சுட்டும் விழிச் சுடரே" ரிங் டோன போட்டு கொன்னுட்டாங்க மக்கள்//
ஹிஹிஹி.. அதுல நானும் ஒரு ஆள் தான் பிரியா
/என்னங்க இது, சிவாஜியோட காதல் யானைய கம்பேர் பண்ணி என்ன கூச்சப் பட வைக்கறிங்க..//
மக்கள், நாங்கள் எப்படி வெயிட் பண்ணினோம்னு எங்களுக்கு தானே தெரியும் ப்ரியா!
/அதுனால என்ன பொற்கொடி. நம்மள மாதிரி பிஜியான ஆளுங்க எங்க எப்ப போஸ்ட் போடுவாங்கனு காத்திட்டிருக்கோம் இல்ல..
//
நானும் தான் இதுல ஒரு ஆள் ப்ரியா..
சிவாஜி பற்றிய பதிவின் பின்னூட்டங்களுக்கான பதிலை மறந்து போய் இந்த பதிவில் போட்டுட்டேன் மக்களே.. :(
Post a Comment