Friday, April 27, 2007

அஜித்திற்கு பிறந்த நாள் பரிசாக கிரீடம் இல்லை


அஜித், விஜய் (நடிகர் விஜய் அல்ல.. தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் விஜய்) இயக்கத்தில் நடிக்கும் கிரீடம் படத்திற்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷாவும், அப்பா அம்மாவாக ராஜ்கிரண் சரண்யாவும் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை ஜி.வி.ப்ரகாஷ்.




படம் மே 1, தல பிறந்த நாளன்று ரிலீஸ் செய்வதாக முடிவு செய்து நூறுக்கும் குறைவான நாட்களிலேயே திட்டமிட்டு படப்பிடிப்பை முடித்தார்கள். ஆனால், இப்போது படத்தை மே 1 அன்று வெளியிடப்பட முடியாத சூழ்நிலை.




சிவாஜி மே 17 அன்று ரிலீஸ் ஆவதால், தயாரிப்பாளர்களுக்கு படத்தை திரையிட தியேட்டர் வாங்குவதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடைபட்ட காலதிற்குள் படத்தின் மூலம் லாபத்தை ஈட்டமுடியுமா என்று கவலை. அதனால், படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.



தலைவரின் சந்திரமுகி வெளியானபோது போட்டிக்கு விஜய் சச்சினை வெளியிட்டு சூடு வாங்கிகொண்டதை போல, அஜித்தும் கிரீடம் தயாரிப்பளர்களும் செய்யாதது நல்லதே..

12 பின்னூட்டங்கள்:

Chinna Ammini said...

Wise Decision not relese with Sivaji.

MyFriend said...

தல,

சிவாஜி ஜூனில்தான் ரிலீஸ்ன்னு சொன்னாங்களே??

MyFriend said...

இப்படித்தான் பீமாவும் தள்ளி போயிட்டே இருக்கு!!!

இதெல்லாம் பார்த்தால் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களை பார்க்க எதிர்ப்பார்ப்பே இல்லாமல் போய் விட்டது..

Anonymous said...

OK, wait pannuvom ;-)

Dreamzz said...

ஹி ஹி!! அப்ப பொழச்சுபாரு!!

Syam said...

தமிழ்நாடு இன்னும் கொஞ்ச நாளைக்கு எஸ்கேப் :-)

மு.கார்த்திகேயன் said...

/Wise Decision not relese with Sivaji.//

ஆமாங்க அம்மிணி.. தேவையில்லாம தயாரிப்பாளர் தலையில் துண்டு வேண்டாமே

மு.கார்த்திகேயன் said...

அப்படியும் சொல்றாங்க.. ஆனா இப்ப வரைக்கும் மே 17 தான்

மு.கார்த்திகேயன் said...

//இதெல்லாம் பார்த்தால் பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களை பார்க்க எதிர்ப்பார்ப்பே இல்லாமல் போய் விட்டது.. //

கரெக்டா சொன்னீங்க.. லேட்டா வர்றதுன்னாலும் ஷங்கர் முன்னாடியே சொல்லிட்டா மத்த படங்களாவது முதலிலேயே ரிலீஸ் ஆகுமே

மு.கார்த்திகேயன் said...

//OK, wait pannuvom //

me too..

மு.கார்த்திகேயன் said...

//ஹி ஹி!! அப்ப பொழச்சுபாரு!! //

வீம்புக்கு வெளியிட்டு தயாரிப்பாளர் காசை வீணாக்காம இருந்தால் சரி ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//தமிழ்நாடு இன்னும் கொஞ்ச நாளைக்கு எஸ்கேப் :-) //

ஷ்யாம், தலைக்கு இந்தப் படமாவது ஓடட்டும்