Friday, April 20, 2007

சலூன் கடைகள் ஏக்கங்கள்

நான் சின்ன வயசுல தூங்குன இடங்கள்ல சலூன் கடையும் ஒன்று. சின்ன வயசுல எங்க ஊர்ல என்னை எல்லாம் சேர்ல உக்கார வைக்க மாட்டாங்க.. தரை தான். சம்மணங்கால் போட்டு உட்கார்ந்து தான் முடிவெட்டிவிடுவாங்க.. தலையில தண்ணியை தெளிச்சு விடுறது தான் தெரியும். முடிவெட்டி விடுறவரே என் தலையை அந்தப் பக்கம் இந்தப்பக்கம் திருப்பி விட்டு முடிவெட்டிவிடுவார். அப்ப எல்லாம் எப்படி முடிவிட்டா நமக்கென்ன.. ஒண்ணும் தெரியாது. எண்ணெய்யை தடவி அம்மா சீவி விடுவாங்க. மறுபடியும் அடுத்த நாள் சீவி விடுவாங்க..இன்னமும் நான் என்னிக்குமே பாக்கெட்டுகளில் சீப்பையோ, கண்ணாடி பாக்குற இடங்கள்ல சீவுறதோ கிடையாது.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொன்னாங்க

என் அப்பா காலத்துல படங்கள்ல பாக்குற மாதிரி மரத்தடி தான் சலூன் கடை. அதுக்குப் பிறகு கூரை வேய்ந்த குடிலில். ஒரு மரச்சேர் இருக்கும். இரண்டாக உடைந்த கண்ணாடி தான் இருக்கும். ஒரு வேளை மான்ய விலையில் வாங்கி வந்திருப்பார்னு நினச்சுக்குவேன். தலையில் தண்ணி அடிக்க எல்லாம் அந்த ஸ்ப்ரேயர் இருக்காது. ஒரு குவளையில் தண்ணீர் வச்சிருப்பாங்க.. தலையில் தண்ணி அவங்க தெளிச்சா முகமெல்லாம் வழியும். கடை முழுக்க எல்லா நடிகர்களோட படங்களும் இருக்கும். பழைய காலெண்டர் பேப்பர்கள் தான் ஷேவிங்க் செய்தால் அந்த சோப்புகளை வழித்து எடுக்க. சாணி போட்டு மெழுகின தரை.. கூரைகளில் அங்கங்கே மழை பெய்தால் வலிக்காமால் தரைக்கு வர சில ஓட்டைகள் இருக்கும். ஒரு கட்டிங், நான் சின்ன வயசுல வெட்டிக்கிட்டப்போ ஒரு ரூபாயில் இருந்து இப்போது பத்து பணிரெண்டு ரூபாய்க்கு வந்திருக்கிறது.

இந்த விலையில் ஹீட்டர், சேவிங் லோசன் எல்லாம் எப்படி வாங்கி வைப்பார்கள். இன்னமும் அந்த கூரைக் குடில் தான்.. எனக்கு சென்னையில் முப்பது அல்லது ஐம்பது ரூபாஇக்கு வெட்டிய பிறகு ஊருக்கு போனால், ஆச்சர்யமாக இருக்கும். எப்படி பத்து ரூபாயில் காலத்தை கடத்துகிறார்கள் என்று. ஒரு முறை நான் முடி வெட்டியதுக்கு இருபது ரூபாய் தர, அதை பார்த்த ஒரு பெரியவர் தனியாக வந்து, தம்பி இப்படி எல்லாம் கொடுத்து பழக்காதீங்க என்று எனக்கு அட்வைஸ் தந்துவிட்டுப் போனார்.

நான் முடிவெட்ட ஆரம்பித்து சில காலங்களுக்கு பின்னாடி தான் பிளேடு கலாச்சாரம் எல்லாம். அதுக்கு முன்னாடி, கத்தி தான்.. சேவிங் பண்றதுக்குள்ள ஒரு நாலு தடவையாவது கத்தியை அந்த சாணைகல்லுல தீட்டிக்குவாங்க.. அப்போ எனக்கு நல்ல வேளை தாடியெல்லாம் இல்லை. பின்னங்கழுத்து, காதோரங்களில் சேவிங் செய்யும் போது பயங்கரமா வலிக்கும், கத்தி படும் போதெல்லாம்.

எப்போது சலூன் கடைக்கு சென்றாலும் எப்படா நாமும் சேவிங் செய்துகொள்வோம் என்று ஆசையா இருக்கும். இந்த ஆசையை தணித்துகொள்ள நண்பர்களுக்குள் காசு போட்டு பிளேடு வாங்கி, தனியா சேவிங் பண்ணிக்கொண்டதுண்டு. அதுவும் மீசை வளர அடிக்கடி நாங்கள் சேவிங் செய்வோம். என் அம்மா திட்டுவார்கள். என் அப்பா சிரித்துவிட்டு கண்டுக்க மாட்டார். அவரும் சின்ன வயசுல இப்படித் தான் பண்ணியிருப்பாரோன்னு நினச்சுக்குவேன். இப்போது வாரம் இரண்டு முறை சேவிங் பண்ணவே சோம்பேறியா இருக்கும். எப்படித் தான் சில பேர் தினமும் பண்றாங்களோன்னு எனக்கும் அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.

சின்ன வயசுல ஒரு மூணு நாலு வயசு வரை நான் சடை வைத்திருந்தேன். இன்னமும் சடை வைத்து பூவைத்த போட்டோக்கள் என் அம்மாச்சி வீட்டில் தொங்கிகொண்டிருக்கும். எங்கள் குலதெய்வம் நாலு வருடத்திற்கு ஒரு முறை தான் சாமி கும்பிடுவார்கள். அதனால் அதுவரை முடிவெட்டா கூடாது, முதல் மொட்டை குல தெய்வ சாமிக்குத் தான். நான் அதிக முடிவச்சிருந்தது என் சித்திகளுக்கு ரொம்ப சவுகரியமா போய்விட்டது. அவங்க புதுசு புதுசா காய்ச்சுற எண்ணெய்களை எல்லாம் நம்ம தலைல ஊத்தி தான் டெஸ்ட் பண்ணுவாங்க.. கருவேப்பிலை எண்ணெய் முதல் முயல் ரத்தம், வெட்டிவேர் இப்படி எல்லா வகை எண்ணெய்களையும் நம்ம தலை கண்டிருக்கிறது. அதனால தான் என்னவோ, எங்க ஊர்லயும் சரி, மதுரை, சென்னையிலும் சரி, இப்போ இங்க வந்து கொலம்பஸ்லயும் சரி, உன் முடி ரொம்ப திக்குப்பா என்று தான் நம்ம தலைல கைவைக்கிறவங்க சொல்வாங்க. என் தங்கச்சிக்கு நம்ம முடியை கண்டா கோபம் வேற வரும், எப்படி கரு கருன்னு காடு மாதிரி வளர்ந்திருக்கு பொண்ணுகளுக்கு மாதிரின்னு..

நமக்கு ஒரு கெட்ட பழக்கம், எல்லோருக்கும் அது இருக்கான்னு தெரியாது. ஒரு ஆள்கிட்ட முடி வெட்டிகிட்ட அப்புறம் எப்போ கடைக்கு போனாலும் அவங்க கிட்ட தான்.. சென்னையில இருந்தவரை மூணு தடவை வீடு மாறிவிட்டாலும் தலைமுடி வெட்டுற கடையையும் ஆளையும் மாத்தினதே இல்லை.

போன வாரம் சனிக்கிழமை இங்க இருக்க கிரேட் க்ளிப்ஸ்க்கு போயிருந்தேன் முடிவெட்ட. அப்போ வெட்டுறவர் கிட்ட மஷ்ரூம் கட்டிங் பண்ணிவிடுங்கன்னு எல்லா ஸ்பெக்கும் கொடுத்தேன். பாவி மகனுக்கு என்ன சொன்னாலும், அவங்க ஊர் ஸ்டைல ட்ரிம்மரை போட்டு ஒரே சரட் தான். அப்போ நான் முடிவெட்டி கிட்ட கடைகளையும் அந்த மனிதர்களையும் நினச்சுகிட்டேன், கண்கலங்க.. சில சமயம், மனசு தானா, சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமான்னு தானா பாட ஆரம்பிச்சிடுது.

(சொல்ல மறந்துட்டேனே... நமக்கு இன்னமும் சலூன் கடை சேர் ஏறி உக்கார்ந்து தலைல தண்ணி பட்டாலே தானே சொக்க ஆரம்பிச்சிடுது.. அந்த தூக்கம் மட்டும் விட்டதே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது.. அது ஒரு தனி சுகம்ங்க..)

29 பின்னூட்டங்கள்:

said...

சாரி தல..

உங்க "சலூன் கடை ஏக்கங்கள்"-ஐ நான் பலூன் கடை ஏக்கங்கள்ன்னு படிச்சுட்டு எங்கடா பலூனை பத்தி ஒரு நியூஸுமே வரலையேன்னு பார்த்தேன். :-P

said...

நாலு வயசு வரைக்கும் நீண்ட கூந்தலுடன் கார்த்தியா?

அந்த படம் நாங்க பார்க்கணுமே! அடுத்த போஸ்ட்டுல போட்டுடுங்க. :-)

said...

"தூக்கம் வரலைன்னா சலூன் கடைக்கு போங்க"

இதுதானே உங்க மோரல் ஆப் தி ஸ்டோரி?? ;-)

said...

உங்களுக்கு சலூன் கடை.எனக்கு வீட்டுல எங்கம்மா தலை வார ஆரம்பிச்சாங்கன்னா அப்டியே சுகமா தூக்கம் வரும்:) ஒரு வேளை அது மசாஜ் மாதிரி இருக்கறதனால தூக்கம் வருதுன்னு நினைக்கறேன்.

/அந்த படம் நாங்க பார்க்கணுமே! அடுத்த போஸ்ட்டுல போட்டுடுங்க.:)/
ஆமா தலைவா ரொம்ப ஆவலா இருக்கு:)

ambi said...

//ஒரு ஆள்கிட்ட முடி வெட்டிகிட்ட அப்புறம் எப்போ கடைக்கு போனாலும் அவங்க கிட்ட தான்..//

same pinch. 6 yearsaa ore kadai thaan. ippa kooda maximum bnglela irunthu madurai poi thaan hair cutting.

LOL on my friend's comment. :)

said...

//வாரம் இரண்டு முறை சேவிங் பண்ணவே சோம்பேறியா இருக்கும்//
இது நம்ம ஆளு

//எப்படித் தான் சில பேர் தினமும் பண்றாங்களோன்னு எனக்கும் அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்//
இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு தல சலூன் கடைய வச்சிக்கிட்டு ஷேவிங் பண்ண மாட்டேன்னு வர்ரவங்ககிட்ட சொல்ல முடியுமா? :)

said...

@MyFriend
அந்த படம் நாங்க பார்க்கணுமே! அடுத்த போஸ்ட்டுல போட்டுடுங்க --

இதை நான் வழிமொழிகிறேன்

said...

saloonla ivlo matter-a....ungalala dhaan maams mudiyum...

said...

//அந்த தூக்கம் மட்டும் விட்டதே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது.. அது ஒரு தனி சுகம்ங்க//....oru vaarthai sonnalum nachinu sonnenga...inna sugam...inna sugam..

said...

I shud agree with you about the good sleep when we get the hair cut!!!

said...

//கூரைகளில் அங்கங்கே மழை பெய்தால் வலிக்காமால் தரைக்கு வர சில ஓட்டைகள் இருக்கும்.//

Eppadinga ungalaala mattum ippadilaan yosikka mudiyudhu :-))

//"தூக்கம் வரலைன்னா சலூன் கடைக்கு போங்க"

இதுதானே உங்க மோரல் ஆப் தி ஸ்டோரி?? ;-)//

LOL@ My Friend's comment :-))

said...

கார்த்தி !!சின்ன வயசில் என் கிராம (palaghat) சாலூநிஸ்ட் என் காதை லேசாக ஆறுத்தர் உடனெய் பயந்தார் !!! காரணம் வெளியில் சில பெருசுகள் !! அன்று அவருக்காக சாலூநின் பின் புறமாக (ரத்தம் சொட்ட) நான் வெளிய சென்று அவரின் பேரை காப்பாற்றியது ஞாபகம் வருதது !!

said...

hi kaarthi
as usual supera kadai sollli irukeenga

said...

aaha.. intha post ellam miss panniyache..

namma kathaiyum kitta thatta ihte maathiri thaan irukkum.

//கிரேட் க்ளிப்ஸ்க்கு போயிருந்தேன் முடிவெட்ட. அப்போ வெட்டுறவர் கிட்ட மஷ்ரூம் கட்டிங் பண்ணிவிடுங்கன்னு எல்லா ஸ்பெக்கும் கொடுத்தேன். பாவி மகனுக்கு என்ன சொன்னாலும், அவங்க ஊர் ஸ்டைல ட்ரிம்மரை போட்டு ஒரே சரட் தான்.//


Ithukku thaan great clipsla poi spec ellam kudukrathu illa.. Namma ellm verum number mattum thaan solrathu..

said...

\\கருவேப்பிலை எண்ணெய் முதல் முயல் ரத்தம், வெட்டிவேர் இப்படி எல்லா வகை எண்ணெய்களையும் நம்ம தலை கண்டிருக்கிறது.\\

தல
காத்தாடிக்கு மாஞ்சா போடுற ஐட்டத்தை எல்லாம் தலைக்கு போட்டு பார்த்திருக்கீங்க போல ;)))

said...

\\நமக்கு ஒரு கெட்ட பழக்கம், எல்லோருக்கும் அது இருக்கான்னு தெரியாது. ஒரு ஆள்கிட்ட முடி வெட்டிகிட்ட அப்புறம் எப்போ கடைக்கு போனாலும் அவங்க கிட்ட தான்..\

இதை போயி கெட்ட பழக்கமுன்னு சொல்லிக்கிட்டு.....எனக்கும் அப்படி தான் ;-)))

said...

\\dave...dev said...
கார்த்தி !!சின்ன வயசில் என் கிராம (palaghat) சாலூநிஸ்ட் என் காதை லேசாக ஆறுத்தர் உடனெய் பயந்தார் !!! காரணம் வெளியில் சில பெருசுகள் !! அன்று அவருக்காக சாலூநின் பின் புறமாக (ரத்தம் சொட்ட) நான் வெளிய சென்று அவரின் பேரை காப்பாற்றியது ஞாபகம் வருதது !!\\

தேவ் உங்க காதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா? சொல்லவேல்ல ;-)))

said...

//
(சொல்ல மறந்துட்டேனே... நமக்கு இன்னமும் சலூன் கடை சேர் ஏறி உக்கார்ந்து தலைல தண்ணி பட்டாலே தானே சொக்க ஆரம்பிச்சிடுது.. அந்த தூக்கம் மட்டும் விட்டதே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது.. அது ஒரு தனி சுகம்ங்க..)//

இது same blood! என்ன நல்லா தூக்கம் வரும் :))

said...

//இன்னமும் அந்த கூரைக் குடில் தான்.. எனக்கு சென்னையில் முப்பது அல்லது ஐம்பது ரூபாஇக்கு வெட்டிய பிறகு ஊருக்கு போனால், ஆச்சர்யமாக இருக்கும். எப்படி பத்து ரூபாயில் காலத்தை கடத்துகிறார்கள் என்று//

:)) உண்மை!!

C.M.HANIFF said...

Veetula antha saloon kadai narkali irukka , thoonga taan ;-)

said...

//
இப்போது வாரம் இரண்டு முறை சேவிங் பண்ணவே சோம்பேறியா இருக்கும். எப்படித் தான் சில பேர் தினமும் பண்றாங்களோன்னு எனக்கும் அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.
//
நாம இந்த கூட்டம் தான் மு.கா. தினமும் ஷேவ் பன்னலேன்னா குளிச்ச மாதிரியே இருக்காது. ஏன்னு தெரியலே.

இது ஆரம்பிச்சது காலேஜ் முதல் நாள். அப்போலாம் கரு கருன்னு மீசை இருக்கும். முதல் நாள் பேக்கு மாதிரி முழிச்சு கிட்டே நின்னுகிட்டு இருந்தேன். கையிலே டிராஃப்டர். பாத்தாலே தெரியும் பர்ஸ்ட் இயர்ன்னு. கூப்பிட்டான் ஒரு மூதேவி. ரெண்டு மணி நேரம் அவனாலே எவ்வளோ முடியுமோ அவ்வளவு ரேகிங் பன்னிட்டு, "மவனே நாளைக்கு ஒன் முகத்துலே மீசை இருந்துது செத்த." அப்படின்னான்.

அதுலேந்து தினமும் ஷேவ் தான். :-)

said...

//எப்படித் தான் சில பேர் தினமும் பண்றாங்களோன்னு எனக்கும் அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்//

ரொம்ப சரி தல, நான் எல்லாம் ரெண்டு வாரத்துக்கு ஒரு டைம் தான்
:-)

said...

//ஒரு ஆள்கிட்ட முடி வெட்டிகிட்ட அப்புறம் எப்போ கடைக்கு போனாலும் அவங்க கிட்ட தான்.. //

நானும் அதே மாதிரிதான்...கோவைல இருக்கும் போது 10 வருசம் ஒரே ஆள்...சென்னைல 4 வருசம் ஒரே ஆள்...இங்க வந்தும் 4 வருசம் ஒரே ஆள்...இப்போ ஒரு வருசமா ஒரு ஆள்...:-)

said...

Inga oru chinese irukkan avan kitta neenga ennathan spec, number sonnalum avan istakkuthan vettuvan..athunala ethuvum sollarathu illa. trim pannudana avan polic cut adichuviduvan.. 4 nalaikku athupatukku pichikittu irukkum.

said...

@ Syam-
...இப்போ ஒரு வருசமா ஒரு ஆள்...:-)


Unga CM dhannu sollama solliteengaley:)

said...

கார்த்திக் உங்க சலூன் கடை தூக்கங்கள் இல்ல ஏக்கங்கள் நல்லா இருக்கு..:)

ம்மம்ம்..உண்மைய சொல்லுங்க உங்க ஊர்ல கிரேட் கிளிப்ஸ்ல பாவ மகன்களா இல்ல பாவி மகள்களா..:)
எங்க ஊர்ல எல்லாம் பாவி மகள்கள்தான்...தூக்கம் எங்க வருது...:))

said...

//தேவ் உங்க காதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா? சொல்லவேல்ல//

PURAMUDUKIL patta kayam... athanaal solavillai !!

said...

//
ஒரு கட்டிங்
//
அதுவுமா... சூப்பர் கட கார்த்தி... சின்ன வயசுல இருந்து நல்லா கட்டிங்
பாத்துர்க்கீங்கனு சொல்லுங்க :)

//
இப்போது வாரம் இரண்டு முறை சேவிங் பண்ணவே சோம்பேறியா இருக்கும். எப்படித் தான் சில பேர் தினமும் பண்றாங்களோன்னு எனக்கும் அவங்களை பாக்கும் போதெல்லாம் ஆச்சரியமா இருக்கும்.
//
ரிப்பீட்டே :)

முயல் ரத்தமா?
அப்போ கொல வெறி உங்க தலைல ஊறிப்போயிர்க்கா? :)

//
அந்த தூக்கம் மட்டும் விட்டதே இல்லை.. சும்மா சொல்லக்கூடாது.. அது ஒரு தனி சுகம்ங்க
//
ஆகா ஆகா அந்த சுகத்துக்கு ஈடே கெடயாது :)

said...

//
இப்போ ஒரு வருசமா ஒரு ஆள்...:-)
//
தல புரியுது தல புரியுது :)
நானும் இங்கன ஒரே ஆள் தான் :P