Friday, April 06, 2007

முரட்டு வைத்தியம் என்றால் என்ன? - பாக்யா கேள்வி பதில்

கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி பதிலில் படித்தது இது.

கேள்வி : முரட்டு வைத்தியம் என்றால் என்ன?

பதில் : ஒரு தந்தை மகனுக்கு விளையாட்டு சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தார். மகன் மெதுவாக பீரோவில் ஏறி அங்கிருந்து குதிக்க, அப்பா அவனை தாங்கி பிடிப்பார். இது போல மூன்று முறைகள், மகன் குதிக்க அப்பா அவனை அலேக்காக பிடிப்பார். நாலாவது தடவை அவன் குதிக்கும் போது அப்பா பிடிப்பது போல பாவலா செய்து கீழே விட்டுவிட, மகனுக்கு சரியான அடி.. மகனை பார்த்து அப்பா சொல்வார், இது போல யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. நம்பினால் நமக்குத் தான் சேதாரம் என்று சொன்னார். இந்த கருத்தை அந்த அப்பா சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம். ஆனால் மகனுக்கு அது எப்படி இருக்கும் என ஒரு செயலால் (முரட்டுத்தனமான) உணர்த்தினார் அல்லவா.. இதற்குப்பேர் தான் முரட்டு வைத்தியம்.

நான் என் ஞாபகத்தில் இருப்பதை வைத்து இந்த பதிலை எழுதினேன். பாக்யாவின் கேள்வி பதில் பகுதி கொஞ்சம் பிரசித்தமானது. அதிலும் ஒவ்வொரு கேள்விக்கும் நகைச்சுவை பொதிந்து கருத்துக்கள் சொல்லி, கதையளப்பது பாக்யராஜின் பாணி. அது மக்களையும் சென்று நன்றாகவே சேர்ந்தது. அந்த கேள்வி-பதில்கள் இரண்டு பகுதிகளாக புத்தக வடிவிலே வந்ததாகவும் ஞாபகம். பாக்யராஜின் பாக்யாவை பார்த்து டி.ராஜேந்தரும் டி.ராஜேந்தரின் உஷா என்னும் வார இதழை ஆரம்பித்தார். ஆனால் அவரால் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் தாக்குபிடிக்கமுடியவில்லை.

பாக்யராஜின் சினிமாக்களை போலவே இதிலும் 'அந்த' மாதிரியான விஷயங்களும் அங்கங்கே தூவப்பட்டிருக்கும். ஆனால் எதுவும் எல்லை மீறினதாக எனக்குத் தெரியவில்லை

இன்னும் வெளிவந்துகொண்டிருக்கிறதா பாக்யா..

39 பின்னூட்டங்கள்:

VSK said...

சென்னையில் இருந்தவரை விரும்பிப் படித்த இதழ் இது!

இங்கு அட்லாண்டாவிலிருந்து ஒருவர் பாக்கியராஜின் உதவியுடன் ஒரு இதழ் ஆரம்பித்து அதில் இதைப் போட்டு வந்தார். அதுவும் கடந்த ஒரு ஆண்டாகக் காணவில்லை.

அருமையான கேள்வி பதில் பகுதிகள் இவை!

நினைவூட்டியதற்கு நன்றி.

Anonymous said...

varudhunga. naan india vittu vara varai pathurken (padichum irukken) :)

-porkodi

Anonymous said...

Neengalum kaelvi bathil aarambikalamay karthik ;-)

ambi said...

yes, bagya qstn-ans session is too good with stories. i too love it.
still it's available.

yappa! post poda ipdiyellam vishyam thondi edukanuma? :)

சுப.செந்தில் said...

இன்னும் வருகிறது விலை தான் அதிகமாகிவிட்டது.இனிமேலும் வரும் இன்னும் அதிக விலையோடு!!!(Worth illa)

Syam said...

எனக்கு தெரிஞ்சு இதுவும் பெப்ஸி உமா மாதிரி ஒரு மர்மம்....இந்த கேள்வி எல்லாம் அவங்களே செட் பண்ணிக்கறதுன்னு கேள்விபட்டேன்...:-)

Syam said...

உங்களுக்கு தெரிஞ்சு யாராவது கேள்வி அனுப்பி அது பப்லிஷ் ஆகி இருக்கா..

Priya said...

பாக்யால கேள்வி-பதில் தவிர ஒண்ணும் பெரிசா நல்லா இருக்காது. Paper quality யும் மட்டமா இருக்கும். இப்ப வருதானு தெரியல.

அட்லாண்டால ஒரு பாக்யா வந்துட்டிருந்தது. நிறைய ad தான் இருக்கும். அதையும் இப்ப காணும்.

கதிர் said...

நானும் ரசித்து படித்ததுதான் இந்த பாக்யா கேள்வி பதில் பகுதியை. ஒவ்வொன்றும் ஒரு ரகமா இருக்கும்.
புத்தகமா கூட வந்துச்சி.

மணிகண்டன் said...

பாக்யால கேள்வி-பதில் மட்டும் தான் படிப்பேன். மத்தது எதுவும் அவ்வளவு சுவாரசியமா இருக்காது. ஒவ்வொரு பதில்லயும் ஒரு கதை சொல்றது நல்லா இருக்கும்.

//நினைவூட்டியதற்கு நன்றி.
//
ரிப்பீட்டே..

SathyaPriyan said...

பாக்யா இன்னும் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் பாக்யராஜ் தி.மு.க வில் இனைந்த உடன் முரசொலி ரேஞ்சுக்கு தி.மு.க கொள்கை பரப்பு செய்கிறது என்று கேள்விப்பட்டேன்.

அதன் கேள்வி பதில் பகுதி நான் விரும்பி படிக்கும் ஒன்று.

Arun's Thoughts said...

பாக்யாவில் வரும் கேள்வி பதில்கள் பகுதி எனக்கும் பிடிக்கும், ஆனால் வரவர சுவாரஸ்யமாக எதுவும் வருவதில்லை, அதனால் அதை நிருத்திவிட்டேன்

Anonymous said...

Dear Karthi,
Mokkai nu solla vidama ,

Bhoodhathuku velai kudukara madhiri oru kelvi veraiya?
Nice going...... ha ha ha...

Bhagya vil varum psyco josyam - konjam nalla irukum.Anegama sariyaga irukum....

With Love,
Usha Sankar.

மு.கார்த்திகேயன் said...

/இங்கு அட்லாண்டாவிலிருந்து ஒருவர் பாக்கியராஜின் உதவியுடன் ஒரு இதழ் ஆரம்பித்து அதில் இதைப் போட்டு வந்தார். அதுவும் கடந்த ஒரு ஆண்டாகக் காணவில்லை.
//

இங்கே அது தனி இதழாக வந்ததா, VSK

மு.கார்த்திகேயன் said...

/varudhunga. naan india vittu vara varai pathurken (padichum irukken) :)

-porkodi

//

ஓ.. உங்களை கவர்ந்த பகுதி எது, பொற்கொடி?

மு.கார்த்திகேயன் said...

//பாக்யா இன்னும் வெளிவருதா? கிட்டத்தட்ட 7,8 வருடங்களுக்கு முன் படித்தது. எனக்கு தெரிந்து இப்பொழுது வருவதில்லை என்றே நினைக்கிறேன்,ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து வாரபத்திரிக்கைகளும் நாங்க வாங்கறோம். //

எப்போதிலிருந்து நிறுத்திவிட்டார்கள், வேதா..

மு.கார்த்திகேயன் said...

//Neengalum kaelvi bathil aarambikalamay karthik ;-) //

நல்ல ஐடியா தான், ஹனிஃப்.. ஆனா நமக்கு அந்த அளவுக்கு ஞானம் இல்லைங்க

மு.கார்த்திகேயன் said...

//yappa! post poda ipdiyellam vishyam thondi edukanuma?//

வேற வழி, அம்பி.. நிலைச்சு நிக்கணும்ல..

மு.கார்த்திகேயன் said...

//இன்னும் வருகிறது விலை தான் அதிகமாகிவிட்டது.இனிமேலும் வரும் இன்னும் அதிக விலையோடு!!!(Worth illa) //

நான் படிக்கும் காலத்திலேயே, அதிக விலையிலே இருந்தது செந்தில்

மு.கார்த்திகேயன் said...

//எனக்கு தெரிஞ்சு இதுவும் பெப்ஸி உமா மாதிரி ஒரு மர்மம்....இந்த கேள்வி எல்லாம் அவங்களே செட் பண்ணிக்கறதுன்னு கேள்விபட்டேன்...:-)

//

எனக்குத் தெரிந்த இரண்டு மூன்று நபர்களின் கேள்விகள் பிரசுரமாகி இருக்கின்றன ஷ்யாம்

மு.கார்த்திகேயன் said...

//Paper quality யும் மட்டமா இருக்கும். இப்ப வருதானு தெரியல.
//

நானும் கவனிச்சிருக்கேன் இதை, ப்ரியா

மு.கார்த்திகேயன் said...

/ஒவ்வொன்றும் ஒரு ரகமா இருக்கும்.
புத்தகமா கூட வந்துச்சி.
//

இரண்டு பகுதிகளா வந்ததா ஞாபகம், தம்பி

மு.கார்த்திகேயன் said...

//ஒவ்வொரு பதில்லயும் ஒரு கதை சொல்றது நல்லா இருக்கும்.
//

அது தான் ஹைலைட்டேங்க மணி

மு.கார்த்திகேயன் said...

//அதிலும் பாக்யராஜ் தி.மு.க வில் இனைந்த உடன் முரசொலி ரேஞ்சுக்கு தி.மு.க கொள்கை பரப்பு செய்கிறது என்று கேள்விப்பட்டேன்.
//

முதலில், அதிமுகவின் புகழ் பரப்பிகொண்டிருந்தது, ஸத்யா..

மு.கார்த்திகேயன் said...

//ஆனால் வரவர சுவாரஸ்யமாக எதுவும் வருவதில்லை, அதனால் அதை நிருத்திவிட்டேன் //

சரி தான் தோழி.. நமக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு வழி இல்லியே

மு.கார்த்திகேயன் said...

/Bhagya vil varum psyco josyam - konjam nalla irukum.Anegama sariyaga irukum....

//

அட.. இது யாரும் சொல்லாத புது விஷயம்ங்க உஷா

Anonymous said...

yenga adhula kelvi badhil tavira vera enna irukku solra pola??! :-)

adhuvum enakku avaru kadhai solradha paatha idhu ellam nijamave vasagar kelviyaa nu doubt vanduduchu ;-)

-porkodi

Anonymous said...

paper quality mattama irundha enna ippo? ink kotita blotting papera use panlaamla... :-)

indha kaalathula enga irundhu ink kottudhu nu ellam kelvi ketta apram naan sambhara kotta vendi varum!

-porkodi

Bharani said...

ennakum bhagayarajoda bathigal pudikum maams...andha nagaichuvaikaagave padipen....innum varudhunu dhaan nenaikaren...

Anonymous said...

Dear Karthi,

Bhagya vil varum psyco josyam - konjam nalla irukum.Anegama sariyaga irukum....

psyco josiyam garadhu,

coming week la namaku eppadi irukum garadhai solradhu dhan...

sila padam pottu adhil edhu ungaluku pidikum nu select panna solli irupanga. Namba select pannina padathuku nu oru weekly palan irukum Karthi.

Bhakya la adhai than naan first parpen..

Bhakya Vandha pudhidhil sila varudangal matumae parthen. Piragu pidikavillai.

With Love,
Usha SAnkar.

Dreamzz said...

நான் பாக்கும் போதெல்லாம் வாங்கி படிக்கும் இதழ் அது. ஒரு காலத்தில்.. இப்ப இங்க எங்க விக்குது

Dreamzz said...

பொதுவா பாக்யராஜ் படம் என்றால் எனக்கு பிடிக்கும்!

Dreamzz said...

இப்ப recenta அவர் மகளை வைத்து எடுத்த படம் ஓடாததில் கூட எனக்கு வருத்தம்.. நல்லா தான் இருந்துச்சு!

மு.கார்த்திகேயன் said...

//adhuvum enakku avaru kadhai solradha paatha idhu ellam nijamave vasagar kelviyaa nu doubt vanduduchu //

எல்லாத்துக்கும் இதே டவுட் இருக்கு பொற்கொடி!

ஆனா, யார் கேள்வி கேட்டா என்ன, நமக்கு நல்ல விஷயங்கள் கிடைக்குதே!

மு.கார்த்திகேயன் said...

//indha kaalathula enga irundhu ink kottudhu nu ellam kelvi ketta apram naan sambhara kotta vendi varum! //

அம்மா தாயே பொற்கொடி! பேப்பர் குவாலிட்டி எப்படி வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்.. பாவம் ரங்கு.. நைட் சாப்பாடுக்கு சாம்பார் கொஞ்சம் இருக்கட்டும்!

மு.கார்த்திகேயன் said...

/andha nagaichuvaikaagave padipen....//

நானும் தான் மாப்ள..சாரி பில்லு

மு.கார்த்திகேயன் said...

/Bhakya Vandha pudhidhil sila varudangal matumae parthen. Piragu pidikavillai.
//

பொதுவா எல்லோருக்கும் இதே மனநிலை தான் இருக்குங்க போல, உஷா

மு.கார்த்திகேயன் said...

/இப்ப recenta அவர் மகளை வைத்து எடுத்த படம் ஓடாததில் கூட எனக்கு வருத்தம்.. நல்லா தான் இருந்துச்சு//

ட்ரீம்ஸ், படம் சூப்பர் ஹிட் இல்லைனாலும் ஹிட்டு தான்.. வருத்தமெல்லாம் படாதீங்கப்பா

dubukudisciple said...

kaarthi!!
enaku kooda antha kelvi bathil pidikum.. ade mathiri psycho jothidam, mattrum attai padathukana kavithai