Friday, April 20, 2007

திரைப்பட வினாடி-வினா 3

இந்த வாரம் போன வாரத்தை விட கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிலோடு சொல்லுங்கள்.

1. இவர் ஒரு டைரக்டர். கமெர்ஷியல் மன்னர் என்று பெயர் வாங்கியவர். தனது படங்களில் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்துவிடுவார். இவர் எல்லா முன்ணனி நடிகர்களையும் வைத்து படம் எடுத்துவிட்டார். இவர் கேப்டனை வைத்து எடுத்த படத்தின் பெயர் என்ன?

2.கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே மர்லின் மன்றோ போல ஒரு பாடலுக்கு ஆடிய இந்த தொடையழகி நடிகை, தயாரித்த படத்தில் நடித்த நடிகைகள் யார் யார்? இவர் நடித்த முதல் படத்தின் டைரக்டர், சரத்குமாரை வைத்து இயக்கிய படத்தின் பெயர் என்ன?

3. பிரபுவும் குஷ்புவும் ஜோடியாக முதலில் நடித்த படத்தின் இன்னொரு கதாநாயகி, சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடித்த படத்தின் பெயர் என்ன?

4. இவர் ஒரு பிரபலமான நடிகை, ஒரு காலத்தில். இவர் பெயரில் பெண்களின் ஆபரண பொருட்கள் எல்லாம் விற்றன. அவ்வளவு பிரபலமான காலத்திலும் கூட இவர் கமல் கூட ஜோடியாக நடிக்கவில்லை. சமீபத்தில் கூட ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். இவர் ரஜினியின் ஜோடியாக நடித்த படத்தை இயக்கிய டைரக்டர், விஜயை வைத்து எடுத்த படத்தின் பெயர் என்ன?

எல்லாமே ஈசியா? அட அப்படின்னா பதிலை சொல்லுங்க நண்பர்களே.. வழக்கம் போல தங்களுடைய பதில்கள் திங்கள் காலை இந்திய நேரப்படி..

110 பின்னூட்டங்கள்:

MyFriend said...

வந்ததுக்கு முதல்ல வருகை பின்னூட்டம்.. :-)

ஆவி அம்மணி said...

3.சுகாசினி

ஆவி அம்மணி said...

ஒரு கேள்வி கேட்டா பரவாயில்லை!

கேள்விக்குள்ளே கேள்வியா கேட்டா எப்படி?

ஆவி அம்மணி said...

1.கே.எஸ்.ரவிக்குமார்

2.ரம்பா, லைலா, ஜோதிகா

4.பிரபல நடிகை குஷ்பூ

Unknown said...

2. a) Rambha, Jyothika, Laila, Govinda b)Sarathkumar Movie is JaanakiRaaman

3. Thaai Veedu (Rajini and Suhaasini)

கானா பிரபா said...

. கே.எஸ்.ரவிக்குமார், படம் தர்மச்சக்கரம்
2. நடிகைகள், ரம்பா, ஜோதிகா, லைலா, சுந்தர் சி சரத்குமாரை வைத்து ஜானகிராமன் படம்
3. சுகாசினி, படம் தாய்வீடு
4. நதியா, டைரக்டர் சுந்தரராஜன், வியை வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன்

ஜுஜுபி ;-))

Dreamzz said...

இதுக்கெல்லாம் நம்மளாள உம்ம் கொட்டி, கமெண்ட்டிட தான் முடியும்... பதில் எல்லாம் என்னோட நண்பர்கள்ள் சொல்லுவாங்க!

Dreamzz said...

:)) சீக்கிரம் பதில சொல்லுங்கப்பா!!

அருண்மொழிவர்மன் said...

1. தர்மசக்கரம்
2. அ. ஜோதிகா, லைலா
ஆ. ஜானகிராமன்
3. பிரபு குஷ்பு முதலில் சேர்ந்து நடித்த படம் தர்மத்தின் தலைவன் இதில் மற்றொரு கதாநாயகியாக நடித்த சுஹாசினி தலைவரின் தங்கையாக நடித்த ஞாபகம் இல்லை
4. காலமெல்லம் காத்திருப்பேன்

Anonymous said...

1. K S Ravikumar கிடையாது.....தர்மபுரி - பேரரசு

2. ஜோதிகா, ரம்பா, லைலா. ஜானகி ராமன்

3. Mr. Bharath

4. theriyala sorry

Jayaprakash Sampath said...

1.தர்மசக்கரம்.
2.ஜோதிகா, லைலா, ரம்பா. ஜானகிராமன்.
3.தாய்வீடு
4. காலமெல்லாம் காத்திருப்பேன்.

MyFriend said...

2- ரம்பா - 3 ரோஸஸ் - ஜோதிகா, லைலா, ரம்பா - சுந்தர் சி. - ரிஷி

3- தர்மத்தின் தலைவன் - சுஹாசினி - ("இது வரைக்கும் ரைட்டா?")

மு.கார்த்திகேயன் said...

வாங்க மை பிரண்ட்.. சீக்கிரம் பதிலை சொல்லுங்க

மு.கார்த்திகேயன் said...

ஆவி அம்மணி, என்னங்க பன்றது.. எப்படி கேட்டாலும் பதில் சொல்லிடுறாங்க பல பேர்..

மு.கார்த்திகேயன் said...

ஆவி அம்மணி, உங்க முதல் பதில் பாதி சரி.. மீதி முயற்சி பண்ணுங்க
ரெண்டாவதும் பாதி சரி.. சரத் படத்தை சொல்லுங்க
நாலாவது பதில் தவறு. குஷ்பூ கமல் கூட ஜோடியா நடிச்சிருக்காங்க..

மு.கார்த்திகேயன் said...

வசிகர், நீங்க சொன்ன 2, 3 கேல்விகளுக்கான பதில்கள் ரொம்பச் சரி..

மு.கார்த்திகேயன் said...

கானா பிரபா, நீங்க சொன்ன எல்லா பதிலும் சரிங்க.. எப்படிங்க..
உங்களை திணறவைக்கிறது தான் என்னோட முதல் வேலை அடுத்த பகுதில :-)

மு.கார்த்திகேயன் said...

அருண்மொழி, நீங்க சொன்ன எல்லா பதிலும் சரி. தலைவர் படத்தை மட்டும் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்

மு.கார்த்திகேயன் said...

அருண்மொழி, நீங்க சொன்ன எல்லா பதிலும் சரி. தலைவர் படத்தை மட்டும் கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்

மு.கார்த்திகேயன் said...

ஹரிஷ், நீங்க சொன்னதுல ரெண்டாவது பதில் மட்டும் கரெக்ட்

மு.கார்த்திகேயன் said...

ப்ரகாஷ், எல்லாமே சரி தான்.. கலக்கிட்டீங்கப்பா

மு.கார்த்திகேயன் said...

மை பிரண்ட், சொன்னது வரை எல்லாமே சரி.. சரத்தை வச்சு சுந்தர்.சி இயக்கிய இன்னொரு படம் கூட இருக்குங்க

மு.கார்த்திகேயன் said...

ட்ரீம்ஸ், சும்மாவாச்சும் ட்ரை பண்ணிப் பாருங்க ட்ரீம்ஸ்

வினையூக்கி said...

//கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே மர்லின் மன்றோ போல ஒரு பாடலுக்கு ஆடிய இந்த தொடையழகி நடிகை, தயாரித்த படத்தில் நடித்த நடிகைகள் யார் யார்? இவர் நடித்த முதல் படத்தின் டைரக்டர், சரத்குமாரை வைத்து இயக்கிய படத்தின் பெயர் என்ன?
//
நீங்கள் ரம்பாவை நினைத்து கேள்வி கேட்டு இருந்தால், சுந்தர்.சி படங்கள் : ஜானகிராமன் , ரிஷி
ஆனால் ரம்பாவின் முதற்படம் உழவன்.
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ பாட்டு , ஏ.ஆர். ரகுமானின் இசையில் பிரபு நடித்து வெளிவந்த படம்.

வினையூக்கி said...

//3. பிரபுவும் குஷ்புவும் ஜோடியாக முதலில் நடித்த படத்தின் இன்னொரு கதாநாயகி, சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடித்த படத்தின் பெயர் என்ன//
தாய்வீடு,
ரஜினியின் ஜோடி அனிதா.

வினையூக்கி said...

//4. இவர் ஒரு பிரபலமான நடிகை, ஒரு காலத்தில். இவர் பெயரில் பெண்களின் ஆபரண பொருட்கள் எல்லாம் விற்றன. அவ்வளவு பிரபலமான காலத்திலும் கூட இவர் கமல் கூட ஜோடியாக நடிக்கவில்லை. சமீபத்தில் கூட ஒன்றிரண்டு படங்களில் நடித்தார். இவர் ரஜினியின் ஜோடியாக நடித்த படத்தை இயக்கிய டைரக்டர், விஜயை வைத்து எடுத்த படத்தின் பெயர் என்ன?
//
நதியா. ஆர்.சுந்தர் ராஜன்.

வினையூக்கி said...

//1. இவர் ஒரு டைரக்டர். கமெர்ஷியல் மன்னர் என்று பெயர் வாங்கியவர். தனது படங்களில் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்துவிடுவார். இவர் எல்லா முன்ணனி நடிகர்களையும் வைத்து படம் எடுத்துவிட்டார். இவர் கேப்டனை வைத்து எடுத்த படத்தின் பெயர் என்ன?
//
கே.எஸ் ரவிக்குமார்.

Anonymous said...

1.Simhasanam(Confirmas Therila)
2.janaki raman
3.Thai veedu
4.Rajathi raja

Bye
Vino.........
dhoniv@gmail.com

Anonymous said...

1.Dharmachakkaram
2.Laila, Jyothika, Ramba, Janakiraman
3.Thaai veedu
4.Kaalamellam kaathiruppaen


kumarjob@hotmail.com

MyFriend said...

இப்போதைக்கு அந்த ரெண்டு பதிலை மட்டும் வச்சுக்கோங்க.. சில கடமைகள் என்னை அழைக்கின்றது.. முடிச்சு திரும்பி வர்ரேன்.. அதுக்குள்ள ப்ரியா அக்காவும் G3 அக்காவும் வந்துடுவாங்க.. நாங்க கூட்டணி ஆரம்பிச்சிட்டோம்ல.. ஹீஹீ.. :-)

Syam said...

எல்லாம் தெரிஞ்ச மாதிரியே இருக்கு...ஆனா ஒன்னும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதே...:-)

Syam said...

//ஒரு கேள்வி கேட்டா பரவாயில்லை!

கேள்விக்குள்ளே கேள்வியா கேட்டா எப்படி? //

இததான் நானும் கேக்க வந்தேன்...:-)

மு.கார்த்திகேயன் said...

வினையூக்கி, நீங்க சொன்ன பதில்கள் எல்லாமே சொன்ன வரை சரி.. உங்கள் பதிலகள் பாதியிலே நிற்கிறதே.. விஜயின் படம் என்பது கேள்வி. தாங்கள் டைரக்டர் பெயர் வரை வந்து நின்று விட்டீர்கள்.. இன்னும் முயற்சி செய்யுங்களேன்..

மு.கார்த்திகேயன் said...

வினோ, இரண்டு மற்றும் மூன்றாவது சரியான பதில்கள்

மு.கார்த்திகேயன் said...

குமார், எல்லாமே சரியான விடைகள்

மு.கார்த்திகேயன் said...

/முடிச்சு திரும்பி வர்ரேன்.. அதுக்குள்ள ப்ரியா அக்காவும் G3 அக்காவும் வந்துடுவாங்க.. நாங்க கூட்டணி ஆரம்பிச்சிட்டோம்ல.. //

மை பிரண்ட், பார்ப்போம், இந்த கூட்டணி ஜெயிக்குதான்னு..

மு.கார்த்திகேயன் said...

/எல்லாம் தெரிஞ்ச மாதிரியே இருக்கு...ஆனா ஒன்னும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதே//

ஷ்யாம், ஒவ்வொரு தடவையும் இப்படிச் சொல்லி எஸ்கேப்பா.. ட்ரை பண்ணுங்க ஷ்யாம்

மு.கார்த்திகேயன் said...

//இததான் நானும் கேக்க வந்தேன்...:-) //

ஹிஹிஹி.. அப்படியும் மக்கள் கலக்குறாங்களே நாட்டாமை என்ன பண்ண

Jayaprakash Sampath said...

//ஹிஹிஹி.. அப்படியும் மக்கள் கலக்குறாங்களே நாட்டாமை என்ன பண்ண //

அடுத்த வாட்டி. கேள்விகளை ஃப்ரேம் பண்றப்ப என் கிட்ட கேளுங்க :-)..

Priya said...

அட, போட்டாச்சா?
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போறலயே..

ப்ரசன்னா (குறைகுடம்) said...

2. ஜோதிகா,ரம்பா,லைலா, ரிஷி
3. தாய் வீடு
4. நதியா, ஆர்.சுந்தர்ராஜன், காலமெல்லாம் காத்திருப்பேன்.

Priya said...

@myFriend,

கூட்டணிக்கு நான் ரெடி. தலை, மை ஃப்ரெண்ட் சொன்னதுல எதெல்லாம் சரினு சொல்லுங்க. மத்ததுக்கு நான் சொல்றேன்..

மணிகண்டன் said...

1. கே.எஸ் ரவிகுமார், தர்மச்சக்கரம்
2. ரம்பா,லைலா,ஜோதிகா & ஜானகிராமன்
3. தாய்வீடு
4. சுந்தர்ராஜன், காலமெல்லாம் காத்திருப்பேன்

மணிகண்டன் said...

என்ன கார்த்தி இந்த தடவையாவது எல்லாம் சரியா சொல்லியிருக்கேனா?

மு.கார்த்திகேயன் said...

/அடுத்த வாட்டி. கேள்விகளை ஃப்ரேம் பண்றப்ப என் கிட்ட கேளுங்க //

ப்ரகாஷ், முதல் தடவையே கஷ்டமா கேட்டா மக்களுக்கு ஆர்வம் குறஞ்சுடும்.. அதனால தான் எப்படி.. மெதுவா சிக்கலான கேள்விகளை கேட்டுடுவோம் ப்ரகாஷ்

மு.கார்த்திகேயன் said...

//ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போறலயே..//

என்ன பன்றதுங்க ப்ரியா.. வெள்ளிகிழமை குவிஸ் போட வேண்டிய நாளாச்சே

மு.கார்த்திகேயன் said...

/கூட்டணிக்கு நான் ரெடி. தலை, மை ஃப்ரெண்ட் சொன்னதுல எதெல்லாம் சரினு சொல்லுங்க. மத்ததுக்கு நான் சொல்றேன்.. //

ப்ரியா.. மை பிரண்ட், இரண்டாவது கேள்விக்கு சரியான பதில் சொல்லியிருக்காங்க..மூணாவது கேள்விக்கு அந்த நடிகையை கண்டுபிடிச்சுட்டாங்க.. அந்த படத்து பேரை கண்டுபிடிக்கல.. நீங்களும் முயற்சி பண்ணுங்களேன்..

மு.கார்த்திகேயன் said...

/என்ன கார்த்தி இந்த தடவையாவது எல்லாம் சரியா சொல்லியிருக்கேனா? //

கலக்கிட்டீங்க மணி.. இந்த தடவை எல்லாமே சரியானது

மு.கார்த்திகேயன் said...

பிரசன்னா (குறைகுடம்) என்ன ஆச்சு.. முதல் கேள்விக்கு பதில் தரல.. ரெண்டு குவிஸ்க்கும் கரெக்டா சொன்னீங்க.. பத்த எல்லா பதிலும் சரி.. முயற்சி பண்ணுங்க

Anonymous said...

1. Dharma chakkaram (KS Ravikumar)
2a. Ramba, Jyothika, Laila (3 roses)
2b. Rishi
3. Thai Veedu
4. Kaalamellaam Kaathiruppen

Porkodi (பொற்கொடி) said...

che inikum late :-(

Arunkumar said...

1. தர்மபுரி

2. ரம்பா லைலா ஜோதிகா
டைரக்டர் சுந்தர்.சி. படம் ஜானகிராமன்

3. தர்மத்தின் தலைவன்??? சுஹாசினி ?? படம் பேரு தெரியல தல

4. நதியா ?

கரெக்டானு சொல்லுங்க அப்பால இன்னும் தேட்றேன்

Priya said...

தலை நாலாவது கேள்விக்கு விடை:

நடிகை: நதியா
இவர் ரஜினியின் ஜோடியாக நடித்த படத்தை இயக்கிய டைரக்டர்: R.சுந்தர்ராஜன்
விஜயை வைத்து எடுத்த படத்தின் பெயர்: காலமெல்லாம் காத்திருப்பேன்

Priya said...

என் விடை சரியா இருந்தா, எங்க கூட்டணி இன்னும் 1 & 3 தான் சொல்லணும்.

Syam said...

//ஷ்யாம், ஒவ்வொரு தடவையும் இப்படிச் சொல்லி எஸ்கேப்பா.. ட்ரை பண்ணுங்க ஷ்யாம் //

நமக்கு காப்பி அடிச்சு பதில் எழுதிதான் பழக்கம் தல...நீங்க வேற answers அ ரிலீஸ் பண்ணமாட்டேங்கறீங்க...:-)

ப்ரசன்னா (குறைகுடம்) said...

1. பேரரசு, தர்மபுரி

Priya said...

தலை ரிலீஸ் மை ரிசல்ட் ப்ளீஸ்

மு.கார்த்திகேயன் said...

உங்க விடை சரி ப்ரியா..

இப்போ 1,3 கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்..

பொதுகூட்டத்துல இருந்தேன் அது தான் உடனே ரிலீஸ் பண்ண முடியல ப்ரியா :-)

மு.கார்த்திகேயன் said...

//நமக்கு காப்பி அடிச்சு பதில் எழுதிதான் பழக்கம் தல...நீங்க வேற answers அ ரிலீஸ் பண்ணமாட்டேங்கறீங்க...:-) //

காப்பி கடைல வேலை பாத்தீங்கன்னு சொல்லவே இல்லை நாட்டாமை

மு.கார்த்திகேயன் said...

பிரசன்னா (குறைகுடம்) நீங்கள் சொன்ன முதல் கேள்விக்கான விடை தவருங்க.. நீங்க சொன்ன டைரக்டர் பெரிய நடிகர்கள் எல்லோரையும் வைத்து படம் எடுக்கலையே..

Porkodi (பொற்கொடி) said...

enakku therinjadhu ivlo thaan thala :-(

1. director k s ravikumar. captain vechu edutha padam theriyala :-(
ravikumar illaina perarasu nu sollidadhinga!

2.rambha, laila ,jothika.
mudhal padam uzhavan. neenga solradha sundar c mean panringa! uzhavan director kadhir. kadhiro sundaro bathil theriyala!

3.suhasini superstarku thangaiya nadicha padam, adhuvum theriyaliye!

4.nadhiya. vijay padam kaalam ellam kaathiruppen.

passa? :-(

மு.கார்த்திகேயன் said...

பொற்கொடி! சொன்ன வரைக்கும் எல்லாமே சரி..

கலக்குற கொடி..

CVR said...

You are a walking talking tamil movie database!!! :P

மு.கார்த்திகேயன் said...

நம்மளை விட பெரிய ஜாம்பவான் எல்லாம் இருக்காங்க CVR

Arunkumar said...

thala naanum anuppinene.. idhu ellam oru answera nu reply panna maatringala ?

Porkodi (பொற்கொடி) said...

enga ellam paadhi paadhi :-( idhu romba mosam!!

ப்ரசன்னா (குறைகுடம்) said...

இது என்னங்க, என் பொது அறிவுக்கு வந்த சோதனை :-)
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரா?

மு.கார்த்திகேயன் said...

அருண், முதல் கேள்வியை தவிர மற்ற எல்லாம் சொன்ன வரை சரி

மு.கார்த்திகேயன் said...

பிரசன்னா குறைகுடம்,முதல் கேள்வியின் டைரக்டர் பெயர் சரிங்க

மு.கார்த்திகேயன் said...

//enga ellam paadhi paadhi :-( idhu romba mosam!! //

Try it again porkodi! you will win!

MyFriend said...

1- பேரரசு - தர்மபுரி

ரைட்டா?????

MyFriend said...

ரைட்டா?

சொல்லுங்க..
இல்லைன்னா சோடா போட்டல் வீசீ உங்க கடையை துவம்சம் பண்ணிடுவோம்.. :-P

மு.கார்த்திகேயன் said...

முதல் கேள்விக்கு இன்னும் முயற்சி செய்ங்க மை பிரண்ட்.. எல்ல பெரிய அடிகர்களை வைத்தும் படம் இயக்கியுள்ளார்.. இது பெரிய க்ளூ அல்லவா

மு.கார்த்திகேயன் said...

//சொல்லுங்க..
இல்லைன்னா சோடா போட்டல் வீசீ உங்க கடையை துவம்சம் பண்ணிடுவோம்.. //

இந்த அராஜகமெல்லாம் நல்லதுக்கு இல்லைங்க மை பிரண்ட்..

இப்படி கூட்டணி போட்டு நம்மளை மிரட்டக்கூடாது மை பிரண்ட்..

உங்க அக்கா ப்ரியா ரொம்ப நல்லவங்க.. அவங்க எவ்வளவு பணிவா கேட்டாங்க..

MyFriend said...

1- KS ரவிகுமார் - தர்மசக்கரம்

3- சுஹாசினி - தாய் வீடு

MyFriend said...

வெற்றி வெற்றி வெற்றி..

ப்ரியாக்கா, G3யக்கா..

எல்லா கேள்விகளுக்கும் கரேக்ட்டா பதிலளிச்சாச்சு! வாங்க போய் தூங்கலாம்..

தல, இந்த வாரமும் இந்த சின்ன புள்ளையை ஏமாத்திடாதீங்க.. அக்காங்க ரெண்டு பேரும் உங்களை கவனிழ்ழிடுவாங்க.. :-D

Priya said...

அப்ப எங்க கூட்டணி 3 கரெக்டா?

Priya said...

//உங்க அக்கா ப்ரியா ரொம்ப நல்லவங்க.. அவங்க எவ்வளவு பணிவா கேட்டாங்க..
//

ஹி ஹி உங்களுக்காவது தெரியுதே?

மு.கார்த்திகேயன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..ஒரு வழியா சோடா பாட்டில்ல இருந்த கடை தப்பிச்சது, மை பிரண்டுக்கு கிட்ட இருந்து

ப்ரசன்னா (குறைகுடம்) said...

ஆஹா. கே.எஸ்.ரவிகுமார், கேப்டனை வச்சு படம் எடுத்திருக்காரா? ஹானஸ்ட் ராஜ்?

மு.கார்த்திகேயன் said...

கரெக்ட் தான் ப்ரியா.. கூட்டணி அமைச்சு தேர்தல்ல ஜெயிக்கிற மாதிரி சகோதரிகள் ஜெயிச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்

Priya said...

முதல் கேள்வி,
P.வாசு.
பொனமன செல்வன் / சேதுபதி IPS ?

MyFriend said...

@ Priya said...

//அப்ப எங்க கூட்டணி 3 கரெக்டா?
//

எல்லாமே கரெக்ட்டு.. :-D

MyFriend said...

//மு.கார்த்திகேயன் said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பா..ஒரு வழியா சோடா பாட்டில்ல இருந்த கடை தப்பிச்சது, மை பிரண்டுக்கு கிட்ட இருந்து //

ROTFL.. :-)))))))

MyFriend said...

//மு.கார்த்திகேயன் said...
கரெக்ட் தான் ப்ரியா.. கூட்டணி அமைச்சு தேர்தல்ல ஜெயிக்கிற மாதிரி சகோதரிகள் ஜெயிச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்
//

நாளைக்கு G3யக்கா வந்தா சொல்லிடுங்க.. நான் கிளம்புறேன். ;-)

Syam said...

//காப்பி கடைல வேலை பாத்தீங்கன்னு சொல்லவே இல்லை நாட்டாமை//

தல டாஸ்மாக் பத்துல இருக்கற சைட்-டிஷ் கடைல வேலை செஞ்சேன்னு சொல்லுங்க...கொஞ்சம் கவுரவமா இருக்கும் :-)

Dev Payakkal said...

1. K S RAVIKUMAR, anaal captain vaithu padam ithu varai illai

2.Rambha, jothika, Laila
C.Sundar RISHI

3.Dharmathin Thalaivan, Suhasini, Thai veedu

4.Nadhiya,Faasil,Kannukul Nilavu!!

Dev Payakkal said...

sari ungallaku oru kelvi....kamal and raghuvaran serndu naditha padam ethu ?(

G3 said...

@My Friend :
//நாளைக்கு G3யக்கா வந்தா சொல்லிடுங்க.. நான் கிளம்புறேன். ;-) //

Avvvvvvvvv... Naan onlinela illatiyum ennaiyum kootanila sethukittadhukku thankies ma thangachi :-))

@Mu.ka : Alwava correcta anuppidunga :-)

Anonymous said...

எனக்கு பதில் சொல்ல பிடிக்காது.நான் கேள்விகளை கேட்டால் மட்டுமே எனக்குப் பிடிக்கும்.ஏனென்றால் நீங்க கேட்ட கேள்விக்கு ஒரு பதில் கூட எனக்குத் தெரியவில்லை.அப்படியே துர்கா escape

மு.கார்த்திகேயன் said...

தேவ், முதல் கேள்வியில் டைரெக்டர் சரி..அவர் கேப்டனை வைத்தி படம் எடுத்திருக்கிறார்.

நாலாவது கேள்வியில் நடிகை சரி.. ஆனால் டைரக்டரும் படமும் தவறு.

மு.கார்த்திகேயன் said...

தேவ், இதுவரை கமலும் ரகுவரனும் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை

மு.கார்த்திகேயன் said...

//@Mu.ka : Alwava correcta anuppidunga //

அல்வா தானே G3, அம்பியை வாங்கிட்டு வரச் சொல்லியிருக்கிறேன்.. வந்தவுடன் பார்சல் தான்

மு.கார்த்திகேயன் said...

//ஏனென்றால் நீங்க கேட்ட கேள்விக்கு ஒரு பதில் கூட எனக்குத் தெரியவில்லை.//

எஸ்கேப் ஆகாமா ஒரு ட்ரை விடுங்க துர்கா

கோபிநாத் said...

தல

1. கே.எஸ். ரவிக்குமார் - படம் - சாரி தெரியாது
2. ரம்பா - நடிகைகள் - லைலா, ஜோதிகா - தீரி ரோசஸ்
3. சுகாசினி - ரஜினிக்கு தங்கையாகவா????

பார்த்து போடுங்க தல ;-)))

Unknown said...

thala eppadi irukeengo?

naan nalla keeren!

balar said...

ஒரு கேள்வி பரிட்சைல கேட்டால ஒழுங்கா பதில் தெரியாது..நீங்க கேள்விக்குள்ள கேள்வி கேட்கிறீங்களே கார்த்தி...:))
ஏதே என்னோட முயற்சி.

1.சேதுபதி IPS(கண்டிப்பா தப்புனு தெரியும் ஆனால் சும்மா விட மனசில்லை அதான்..)
2.ரம்பா,லைலா,நம்ம ஜோ ஜோ ஜோதிகா. சுந்தர் C & ரிஷி.
3.தர்மத்தின் தலைவன்,சுகாசினி,தாய் வீடு
4.நதியா,R.சுந்தரராகன்,காலமெல்லாம் காத்திருப்பேன்..

மு.கார்த்திகேயன் said...

பாலார், முதல் கேள்வியை தவிர, மற்ற எல்லா பதிகளும் சரி தான்

மு.கார்த்திகேயன் said...

கார்த்திக் BS, நல்லா இருக்கேன்.. நீ எப்படிப்பா இருக்க

மு.கார்த்திகேயன் said...

கோபி, முதல் கேள்வி டைரக்டர் சரி, ரெண்டாவது கேள்வி முழு பதிலும் சரி. மூணாவது கேள்வி நடிகை சரி..

Dev Payakkal said...

vijaykanth and K S RAVIKUMAR? I dont know

4.
Kaalamellam Kaathiruppen is the film ...R Sundarajan is the director and Rajathi raja is the film nadiya acted

kamal and raghuvarn never acted is correct!!

Bharani said...

1. Nattammai
2. rambha,jyothika,laila, janakiraaman
3.
4. kathirundha kaadhal

k4karthik said...

அடெண்டன்ஸ்....

k4karthik said...

1. அண்ணன் பேரரசுவின் இயக்கத்தில் தர்மபுரி.....

2.தொடையழ்கி சொன்னாலே அது நம்ம்(!!) ரம்பா தான...

3.தாய் வீடு...

4.காலமெல்லாம் காத்திருப்பேன்...

k4karthik said...

விவரமா சொல்லனுமாக்கும்...

3. சுஹாசினி தலைவருக்கு (உங்களுக்கு இல்ல..) தங்கையாக நடித்த படம் தாய் வீடு....

4. நதியா, தலைவர் ஜோஇ சேர்ந்தது ராஜாதி ராஜா... இயக்கம் ர.சுந்தர்ராஜன்.... அவ்ர் விஜய இயக்கியது... காலமெல்லாம் காத்திருப்பேன்...

k4karthik said...


2.ரம்பா தயாரித்த படத்தில் நடித்தவர்கள்.. ஜோதி-அக்கா(!?) , லைலா....
முதல் பட டைரக்டர் சுந்தர்.சி....
அவர் இயக்கத்தில் சரத் நடித்த படம்.... ரிஷி....

KC! said...

Neengaluma?!! Idhai kuttichuvarudhane pannitrundhar?

Geetha Sambasivam said...

mmmm vidai ellam enakke theriyuthu, mathavanga solrathukku enna? varen appurama.

Raji said...

Ennanga ipavum kastamana questions dhaana..

1.Ravikumar.K.S
2.Ramba,Jothika,Laila
Janakiraman

Ithanai ans therinjadhae periya vishayam..Naan answer paarthu en database update pannikkuraen..

மு.கார்த்திகேயன் said...

விடைகள்..


1. கே.எஸ்.ரவிக்குமார், படம் தர்மச்சக்கரம்
2. நடிகைகள், ரம்பா, ஜோதிகா, லைலா,
சுந்தர் சி சரத்குமாரை வைத்து ஜானகிராமன் படம். ரிஷி என்ற படத்தையும் சொல்லலாம்
3. சுகாசினி, படம் தாய்வீடு
4. நதியா, டைரக்டர் சுந்தரராஜன், விஜயை வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன்

மற்ற கமெண்டுகளுக்கு பதில்கள் விரைவில்..