Sunday, April 08, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 4

மூன்றாம் பகுதி

அருமையான வாய்ப்பு தவறிப் போய்விட்டதே என்று எனக்கு பெரும் கவலை.. இந்த வேளையில் சென்னையில் புராஜெக்ட் தேடி அலுத்துவிட்ட என் நண்பனும் தனியாக வீட்டிலேயே சென்று செய்கிறேன் என்று மதுரைக்கு கிளம்பிவிட்டான்.. பக்கத்தில் சொல்லி அரற்ற நண்பனும் இல்லை. எனது இருபத்திமூன்று வருட வாழ்க்கையில் கிடைத்ததெல்லாம், முருகன் அருளால் தான். மனசு நிம்மதியடைய வடபழநி முருகன் கோயிலுக்கு சென்று வந்தேன்.. முதல் முறை சென்றதிலேயே நல்ல தரிசனம். மனதுக்குள், நாலு பாட்டில் பூஸ்ட்டை மொத்தமாக குடித்துவிட்டு, முருகன் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்று சொன்னது போல் இருந்தது. அப்போது கிறிஸ்துமஸ் விடுமுறை வந்ததால் ஊருக்கு சென்று வரலாம் என்று கிளம்பினேன். சென்று வந்தால் மனசுக்குள் இன்னும் நம்பிக்கை பிறக்கும் என்று எண்ணம்.

ஊரில் இருந்தபோது, திண்டுக்கலில் இருக்கும் அபிராமி அம்மன் கோவிலுக்கு போனேன்.. வெள்ளிக்கிழமை ஊரில் இருந்தால் அபிராமி அம்மன் கோவிலுக்கு பெரும்பாலும் போய்விடுவேன்.. அங்கே தெற்கு வாசப்படியில், புதுசாய் வாங்கின உயரம் கூடிய செருப்பை ஐம்பது பைசாவுக்கு அங்க இருக்கும் காலணிகளை பாதுகாப்பில் வைத்துவிட்டுச் சென்றேன்.. செருப்புகள் வைப்பதற்கு என்று எந்த அலமாரிகளும் இல்லை.. எல்லாமே அங்கொன்றும் இங்கொன்றுமாக வைத்திருந்தார்கள். உள் சென்று அம்மனை தரிசித்துவிட்டு அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, செருப்பை காணல.. பாதுகாக்குறவங்க கிட்ட கேட்டா, நாங்க என்ன சார் பண்றது.. யாரோ மாத்தி எடுத்துட்டு போயிட்டாங்க போல என்று அசால்டா பதில் சொன்னாங்க.. எனக்கு சுர்ருன்னு கோபம் ஏறிடுச்சு. செருப்பு காணாம போனதை விட அதுக்கு அவங்க சொன்ன பதில் தான் கோபத்துக்கு காரணம். யாரோட செருப்பை யார் வேணும்னாலும் எடுத்துட்டுப் போனா அப்புறம் எதுக்கு அதை பாதுகாக்கன்னு இவங்க வேற தனியா.. ஒருவேளை புது செருப்புங்கிறதால அவங்களே கூட எடுத்திருக்கலாம்.. ஆனாலும் என்ன பண்றது, அப்படியே வீட்டுக்கு வந்தேன்.. மனசே சரியில்லை.. கம்பெனிலயிருந்து அனுபின லெட்டர் வரல.. புது செருப்பு கோயில்ல காணல.. மெல்ல சனி தலைல சம்மணம் போட்டு உட்கார்ந்ததா ஒரு கவலை..

ஆனா, செருப்பு காணாம போனதுக்கு வீட்ல சொன்ன காரணமோ உல்டாவா இருந்தது. கோயில்ல செருப்பு தொலஞ்சா நல்லதாம்.. அட..யாரோ ஒரு கூடை ஐஸை எடுத்து தலைல வச்ச மாதிரி ஜில்லுன்னு இருந்தது. அந்த ஜில்லிப்போட மெட்ராஸ் வந்து, அந்த தங்கைக்கு போனைப் போட்ட, "அண்ணா, உங்களை ஜனவரி ரெண்டாம் தேதி டைரக்டா கம்பெனிக்கு வந்திடச் சொன்னாங்க.. அன்னைக்கே லெட்டரையும் நேர்ல தந்திடுறாங்களாம்.." அப்படி ஒரு சந்தோசம் மனசுக்குள்.. நாம எல்லாம் கம்பெனில போய் புராஜெக்ட் பண்ண போறோமா.. ஆஹா! செருப்பு தொலஞ்சது நல்லதுக்குத் தான் போலன்னு நினச்சுகிட்டேன்..

அந்த 2002 ஆரம்ப காலங்களில், நமக்கு ஆங்கில புலமை எல்லாம் அவ்வளவா இல்லை. ஏதோ பேசத் தெரியும். யார் பேசினாலும் அதை புரிஞ்சுக்க முடியும். காலேஜ்ல இருக்க வரைக்கும், எப்படியோ நாளை நகத்தியாச்சு. கிளாஸ்ல செமினார் எடுக்கச் சொன்னா எடுக்கச் சொன்ன ஆளையே கிண்டல் பண்ணிட்டு அமைதியா உட்கார்ந்துடுவோம். அதுக்கு எல்லாம் மொத்தமா உள்ளுக்குள்ள உளறல். எப்படி போய் ஒரு கம்பெனில நாம எல்லாம் வேலை பாக்க போறோம். ஜனவரி 2-ம் தேதி, அந்த கம்பெனியோட ரிசப்சன்ல திருட்டு முழியோட தான் உட்கார்ந்து இருந்தேன். அதே நாள், அதுக்கு பிறகு என் கூட புராஜெக்ட சேர்ந்து வேலை செய்த ஒரு தோழியும் அங்க உட்கார்ந்து இருக்காங்க. இன்னைக்கும் அந்த முழியை சொல்லி சொல்லியே நம்மளை கலாய்ப்பாங்க. என்ன கேள்வி கேட்டா என்ன மாதிரி பதில் சொல்லணும் நான் மனசுக்குள்ளயே ஒரு சின்ன நாடகம் மாதிரி போட்டு பாத்துகிட்டேன்.. ஆனா, உள்ளே போன பிறகு தான் தெரிந்தது வாய்ப்பு கிடைக்கிறவரை சச்சின் கூட ரஞ்சி பிளேயர் தான்னு.. நமக்குள்ள இந்த அளவுக்கு தெளிவான ஒரு ஆள் உட்கார்ந்து இருக்கான்னா அப்போ தான் எனக்கும் தெரிஞ்சது..

இந்தப் பக்கம், புராஜெக்ட் தேடி சென்னை வந்த என் நண்பர்கள் தங்க இடம் கிடைக்காமல் இருக்க, அவர்களும் என் கூட, எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்க வந்தார்கள். அப்போது நான் ஒருவன் மட்டுமே இருந்ததால், இன்னும் ஐந்து நண்பர்கள் என்னுடன் வந்து சேர்ந்தார்கள். எல்லோரும் என் கூட எம்.சி.ஏ படித்துக்கொண்டிருந்தவர்கள். ஆக மொத்தம் அந்த சின்ன அறையில் ஆறுபேருடன் சேர்த்து இனிதாக ஆரம்பமானது 2002. நான் தாம்பரம் சானிடோரியத்தில் இருக்கும் MஏPZ-இல் இருக்கும் கணினி நிறுவனத்திலும், என் நண்பன் கிச்சா சென்னை தலைமைசெயலகத்தில் இருக்கும் நீC-யிலும், மற்ற மூன்று நண்பர்கள் அண்ணா சாலையில் இருக்கும் ஒரு நிறுவனத்திலும் மற்றொரு நண்பன் செந்தில் சைதையில் இருக்கும் ஒரு நிறுவனத்திலும் புராஜெக்ட் செய்ய ஆரம்பித்தோம். தினமும் கம்பெனி போய்விட்டுவந்தால் ஆரம்பிக்கும் அரட்டை இரவு பனிரெண்டு மணிக்கும் மேலும் நீடித்தது. பல நாட்கள் சீட்டுகட்டை எடுத்துப் போட்டால், ரம்மி, கழுதை என்று ஆட்டம் கலகலப்பாய் போகும். மொத்தத்தில் இன்னொரு கல்லூரி வாழ்க்கையை நாங்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருந்தோம், கல்லூரியில் அல்லாமல்.

அப்போது தான் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பயன்படுத்தியிருந்த முன்னாள் எம்.எல்.ஏவிடம் இருந்து முடிந்தவரை சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். இரவு நேர இருட்டைப் போன்ற அடர்த்தி எங்கள் மனசிலும் பரவியது.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

66 பின்னூட்டங்கள்:

Anonymous said...

seruppu tholainja nalladha.... apo tolaichuda vendiyadhu thaan!


-porkodi

said...

Naan dhaan firtsaa?

said...

Unga anbavangala thoguthu kadhaya podura vidham romba nalla irukkunga Karthik...

Aavaludan adutha pagudhikku waiting:)

said...

இந்தத் தொடரை நிறுத்திட்டீங்களோனு
நினைச்சேன்...நல்ல வேளை ஆரம்பிச்சுட்டிங்க....
வேலை தேடி சென்னை வர்ரவங்களுக்கு பூஸ்ட் கொடுக்குமில்லையா..?
நிறுத்தாமல் தொடருங்க.....

said...

hai
neenga post podarthula aniyaya speedu... supera iruku neenga kosuvathi kolithunathu
kalakunga

said...

hai
neenga post podarthula aniyaya speedu... supera iruku neenga kosuvathi kolithunathu
kalakunga

said...

அட உங்களுக்கும் செருப்பு தொலஞ்சு நல்லது நடந்ததா? எனக்குக் கூட திருச்சி கல்லுக்குழி ஆஞ்சனேயர் கோயில்ல காசு கொடுத்து போட்டுட்டுப் போன செருப்பு காணாமப் போச்சு! ஆனா அப்ப கூடயிருந்த நண்பர்கள் நல்லது நடக்கும்னு சொன்னாங்க... அப்புறம் சில நாள்ல முன்னாடி interview attend பண்ணியிருந்த கம்பெனியிலிருந்து offer அனுப்பியிருந்தாங்க....

எனக்கு இதுல ஒரே கவலை என்னானா அந்த செருப்பு என்கிட்டயே கதறிக்கிட்டு இருந்துச்சு... இத எடுத்துட்டுப் போனவருக்கு மனசாட்சியே இல்ல போலிருக்கு... பாவம் அந்த செருப்பு அதுக்கப்புறம் எத்தனை நாள் அவருக்கிட்ட குப்பைக் கொட்டிட்டு உயிர விட்டுச்சோ! :((

said...

//ஜனவரி 2-ம் தேதி, அந்த கம்பெனியோட ரிசப்சன்ல திருட்டு முழியோட தான் உட்கார்ந்து இருந்தேன்.//

LOL :) original muzhiye athu thaane karthi! adhaan naanga unnoda photos paakromE adikadi! :p

2002 was a very drastic period to grab a pjt itself. i too did my pjt in NIC after a vigorous test and i'vw. felt nostolgic.

C.M.HANIFF said...

Padika aarvamaaga irukku continue ;-)

said...

அற்புதம்!!
ரொம்ப சுவாரஸ்யமா எடுத்துட்டு போய்ட்ருக்கீங்க தலைவரே!! :-)

said...

// நமக்கு ஆங்கில புலமை எல்லாம் அவ்வளவா இல்லை. ஏதோ பேசத் தெரியும். யார் பேசினாலும் அதை புரிஞ்சுக்க முடியும். காலேஜ்ல இருக்க வரைக்கும், எப்படியோ நாளை நகத்தியாச்சு. கிளாஸ்ல செமினார் எடுக்கச் சொன்னா எடுக்கச் சொன்ன ஆளையே கிண்டல் பண்ணிட்டு அமைதியா உட்கார்ந்துடுவோம்//...same pinch.....innum indha otta english-a vachikitu naan padura paadu iruke...andha kadavuluku dhaan velicham :(

said...

தல
இந்த 4வது பகுதியில ரெண்டு மேட்டரு நமக்கும் ஒத்து போகுது. ஒன்னு செருப்பு.

இன்னொன்று பல நல்லவங்களுக்கும் இருக்குமே
அதான் தல....முழி..முழி..அது ;-)))

said...

அப்படியே என் வாழ்க்கையை திரும்பி பாத்த மாதிரி ஒரு உணர்வு... எனக்கும் இந்த வேலை தேடும் படலம், ரொம்ப இம்சை பண்ணிடுச்சு.... ஆனா எல்லாம் நன்மைக்கே!!!

said...

//திருட்டு முழியோட தான் உட்கார்ந்து இருந்தேன்//

அதனால தான் இப்போ சன் கிளாஸ் போட்டுக்கறீங்களா?? :) :) :)

said...

//
உள்ளே போன பிறகு தான் தெரிந்தது வாய்ப்பு கிடைக்கிறவரை சச்சின் கூட ரஞ்சி பிளேயர் தான்னு..
//
இதை உணர்ந்து விட்டால் போதும் கார்த்தி. அநாவசியமான பல ஒப்பீடுகள் (irrelevant comparison) மறையும். மன அழுத்தங்களை தவிர்க்கலாம்.

said...

தல அட்டெண்டன்ஸ்...ரெண்டு ஆணி புடுங்கிட்டு அப்புறமா வரேன் :-)

Anonymous said...

hai naan than pashtu! enakku oru koodai tulip flower thaangalen thala! :-)

-porkodi

Anonymous said...

thala inga thaan irukingla! kalakkunga aani ellam pudungi mudichacha?? :-)

-porkodi

said...

கதை nalla irukkunga kaarthi

chennaiyil patta naubavangal nammala maari ovvuru pattikaatu ilaigyanukkum muthala evlo malaipu !

alagaana naatkal athu!

said...

adutha post podunga seekiram!

said...

innum onnu pottutu poren ok a!

said...

Epdinga ivlo azhaga kadhai sollareenga???

said...

well composed way of writing..enakum konjam solli thaangalean pls.
okay..naa ipo poi idhoda previous episodes eh padichutu varen

said...

//அந்த கம்பெனியோட ரிசப்சன்ல திருட்டு முழியோட தான் உட்கார்ந்து இருந்தேன்//

நெனச்சுப் பாத்தே எனக்கு சிப்பு வந்துடுச்சு நேர்ல பாத்தவங்க கலாய்க்காம விட்ருவாங்களா!!

said...

//கோயில்ல செருப்பு தொலஞ்சா நல்லதாம்.. //

சும்மா மன ஆறுதலுக்காக கூறும் வார்த்தைகள்

said...

//இந்த வாழ்க்கை இன்னும் நீளும்//

ஆவலுடன் செந்தில்

said...

எப்பவும் போல, கலக்கல் தலை. கோவில்ல செருப்பு தொலைஞ்சா நல்லதா? LOL. மக்கள் எப்படிலாம் சொல்லி வச்சிருக்காங்க?

said...

//வாய்ப்பு கிடைக்கிறவரை சச்சின் கூட ரஞ்சி பிளேயர் தான்னு.. //

Good point. ஆனா, wrong egjamble at the wrong time :)

said...

//சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். இரவு நேர இருட்டைப் போன்ற அடர்த்தி எங்கள் மனசிலும் பரவியது.
//

அட, இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

said...

உங்க 'விழுதுகளே வேராக...' ரொம்ப நல்லா இருந்தது. கசப்பான உண்மைகள்.

said...

நல்லா கதை சொல்ல வருது உங்களுக்கு!

வாட்ச் தொலஞ்சு போனா எதாச்சும் நடக்குங்களா?

இதுவரைக்கும் 50 வாட்ச் தொலச்சிருப்பேன்.

said...

தல படிச்சுட்டேன்...ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா போகுது....உங்கள காலி பண்ண சொன்ன அந்த எம்.எல்.ஏ யாருன்னு மட்டும் சொல்லுங்க ஆட்டோ அனுப்பிடுவோம் :-)

said...

//
seruppu tholainja nalladha.... apo tolaichuda vendiyadhu thaan!


-porkodi
//

புது செருப்பா தொலைக்கணும்னு கண்டிஷன் வேற இருக்கு பொற்கொடி

said...

//Naan dhaan firtsaa?//

ஜஸ்ட்ல புளியோதரையை மிஸ் பண்ணிட்டீங்க ராஜி

said...

/Unga anbavangala thoguthu kadhaya podura vidham romba nalla irukkunga Karthik...

Aavaludan adutha pagudhikku waiting:) //

சீக்கிரமே அடுத்ததை போட்டுடுவோம் ராஜி

said...

//இந்தத் தொடரை நிறுத்திட்டீங்களோனு
நினைச்சேன்...நல்ல வேளை ஆரம்பிச்சுட்டிங்க....
வேலை தேடி சென்னை வர்ரவங்களுக்கு பூஸ்ட் கொடுக்குமில்லையா..?
நிறுத்தாமல் தொடருங்க..... /

ஆதரவுக்கு நன்றிங்க சிவஞானம்

said...

//neenga post podarthula aniyaya speedu... //

DD, நீங்க சொன்னதுல இருந்த இந்த மாசத்துல பத்து நாளைக்கு ஏழு பதிவு தான் போட்டு இருக்கேன் :(

said...

//பாவம் அந்த செருப்பு அதுக்கப்புறம் எத்தனை நாள் அவருக்கிட்ட குப்பைக் கொட்டிட்டு உயிர விட்டுச்சோ!//

உங்களுக்கு நல்ல நேரம் தான்.. எடுத்துட்டு போனவனுக்கு தான் சனியன் கபடி விளையாடியிருக்கும் அமிழ்து

said...

//original muzhiye athu thaane karthi! adhaan naanga unnoda photos paakromE adikadi! :p
//
ஏன் போட்டோல எப்படி முழியை பாத்த அம்பி.. அது தான் முக்கால்வாசில நான் கண்ணாடி போட்டுகிறேன்ல
//2002 was a very drastic period to grab a pjt itself. i too did my pjt in NIC after a vigorous test and i'vw. felt nostolgic.
//

உண்மை தான் அம்பி.. ரொம்ப கஷ்டம் அப்போ..

said...

//Padika aarvamaaga irukku continue //

நன்றிங்க ஹனிஃப் :-)

said...

//அற்புதம்!!
ரொம்ப சுவாரஸ்யமா எடுத்துட்டு போய்ட்ருக்கீங்க தலைவரே!! //

ஹிஹிஹி.. நன்றி CVR

said...

/...same pinch.....innum indha otta english-a vachikitu naan padura paadu iruke...andha kadavuluku dhaan velicham //

மாப்ள.. இருந்தாலும் மாமனை நீ எதுலையும் தனியா விடுறதே இல்லியா

said...

/இன்னொன்று பல நல்லவங்களுக்கும் இருக்குமே
அதான் தல....முழி..முழி..அது //

கோபி.. நம்மளை நல்லவன்ன்ன்ன்னு சொல்லிட்டியேப்பா.. அவ்வ்வ்

said...

/ எனக்கும் இந்த வேலை தேடும் படலம், ரொம்ப இம்சை பண்ணிடுச்சு.... ஆனா எல்லாம் நன்மைக்கே!!!
//

எல்லாம் நன்மைக்குன்னு வாழ ஆரம்பிச்சா "சோகம் இனியில்லை", ACE

said...

//அதனால தான் இப்போ சன் கிளாஸ் போட்டுக்கறீங்களா??//

ஹிஹிஹி..எப்படி எப்படி கண்டுபிடிச்சீங்க ACE

said...

/அநாவசியமான பல ஒப்பீடுகள் (irrelevant comparison) மறையும். மன அழுத்தங்களை தவிர்க்கலாம்.//

கரெக்டா சொன்னீங்க சத்யா.. எல்லாம் மனசில தான் மேட்டர்

said...

//தல அட்டெண்டன்ஸ்...ரெண்டு ஆணி புடுங்கிட்டு அப்புறமா வரேன்//

ரொம்ப பெரிய ஆணிகளா நாட்டாமை

said...

//enakku oru koodai tulip flower thaangalen thala! :-)

-porkodi
//

சியாட்டல்ல தான் நிறைய இருக்குமாமே பொற்கொடி!

said...

/kalakkunga aani ellam pudungi mudichacha?? //

ஆணி புடுங்கிறது முடியிறதா.. அட்சய பாத்திரம் மாதிரி அள்ள அள்ள குறையாது பொற்கொடி

said...

/chennaiyil patta naubavangal nammala maari ovvuru pattikaatu ilaigyanukkum muthala evlo malaipu !
//

ஆமா ட்ரீம்ஸ்.. மனசுக்குள்ள இப்போ நினச்சாலும் அந்த மலைப்பு இருக்கத் தான் செய்யுதுங்க

said...

/adutha post podunga seekiram!//

சொல்லிட்டீங்கள்ல சீக்கிரம் போட்டுடுவோம் மக்கா

said...

/Epdinga ivlo azhaga kadhai sollareenga??? //

ஹிஹிஹி.. ஏதோ ஒரு ஃப்லோல வருதுங்க பத்மா

said...

/well composed way of writing..enakum konjam solli thaangalean pls.
okay..naa ipo poi idhoda previous episodes eh padichutu varen

//

ரொம்ப நன்றிங்க.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க பத்மா

said...

/நெனச்சுப் பாத்தே எனக்கு சிப்பு வந்துடுச்சு நேர்ல பாத்தவங்க கலாய்க்காம விட்ருவாங்களா!!
//

ஆஹா. மறுபடியும் கலாய்ப்பா.. me escape Senthil :-)

said...

/சும்மா மன ஆறுதலுக்காக கூறும் வார்த்தைகள் //

கரெக்ட் தான் செந்தில்.. ரெண்டு மூணு பேருக்கு நடந்தும் இருக்கேப்பா

said...

//ஆவலுடன் செந்தில்//

சீக்கிரம் உங்க ஆவலை பூர்த்து செய்றேங்க சேன்தில்.. அதரவுக்கு நன்றிங்க

said...

//மக்கள் எப்படிலாம் சொல்லி வச்சிருக்காங்க?
//

மனுஷனுக்குள்ள இருக்க சோர்வை போக்க சொல்றது, அப்பப்போ நடக்க வேற செய்றதால நம்பவும் ஆரம்பிச்சாச்சு ப்ரியா

said...

//Good point. ஆனா, wrong egjamble at the wrong time :) //

பழக்க தோசம் ப்ரியா

said...

/அட, இதெல்லாம் ஒரு பிரச்சனையா?
//

அப்போ இருந்த நிலமைல, எல்லாமே பிரச்சனை தான் ப்ரியா

said...

//உங்க 'விழுதுகளே வேராக...' ரொம்ப நல்லா இருந்தது. கசப்பான உண்மைகள்.

//

நன்றிங்க ப்ரியா

said...

/நல்லா கதை சொல்ல வருது உங்களுக்கு!

வாட்ச் தொலஞ்சு போனா எதாச்சும் நடக்குங்களா?
//

கேட்டு சொல்றேங்க தம்பி..

said...

//....உங்கள காலி பண்ண சொன்ன அந்த எம்.எல்.ஏ யாருன்னு மட்டும் சொல்லுங்க ஆட்டோ அனுப்பிடுவோம் //

அதை தி.மு.க கூட்டணியை விட்டு வைகோ போனப்ப, திமுககாரவங்க பண்ணிட்டாங்க நாட்டாமை..

ரொம்ப வருத்தப்பட்டேன் அப்போ :(

said...

//ஆனா, செருப்பு காணாம போனதுக்கு வீட்ல சொன்ன காரணமோ உல்டாவா இருந்தது. கோயில்ல செருப்பு தொலஞ்சா நல்லதாம்..//

ஆஹா.. நான் எக்கச்சக்கமான செருப்புகளை கோவில்களில் தொலைத்து வெருங்காலிலேயே வீட்டுக்கு நடந்து வந்திருக்கேனே!!! ஆனா, அதுக்கப்புறம் நடந்த ஒரு நல்ல விசயங்களும் என் ஞாபகத்தில் இல்லையே!!!!

:-(

said...

//மொத்தத்தில் இன்னொரு கல்லூரி வாழ்க்கையை நாங்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருந்தோம், கல்லூரியில் அல்லாமல்.//

இதை படிக்கும்போது இன்னும் ஒரு மாடஹ்த்தில் முடிய விருக்கும் என் கல்லூரி வாழ்க்கையை நினைத்து கவலையாக இருக்கிறது. ஓரிரு பேருக்குதான் வேலை இடைத்திருக்கு.. ஆனாலும் தூரம்.. மற்றவர்கள் எங்கே செல்ல போகிறார்களோ!!!!

:-((((

said...

//உங்களுக்கு நல்ல நேரம் தான்.. எடுத்துட்டு போனவனுக்கு தான் சனியன் கபடி விளையாடியிருக்கும் அமிழ்து//

அது சரிதான் கார்த்தி :))

said...

//
ஆனா, உள்ளே போன பிறகு தான் தெரிந்தது வாய்ப்பு கிடைக்கிறவரை சச்சின் கூட ரஞ்சி பிளேயர் தான்னு..
//
கண்டிப்பா