Monday, March 26, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 3

இரண்டாம் பகுதி

ஸ்பென்சர் பிளாசா -

மூன்றாவது தளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கரம் மெல்ல என் கரத்தை பிடித்து இழுத்தது. திரும்பி நான் பார்த்தால், எனது பள்ளித் தோழன்.. அவனை பார்த்தவுடன் ஆச்சர்யம் ஒரு பக்கம்.. அதிசய பார்வை மறு பக்கம்.. என்னடா அப்படிப் பாக்குற.. மறந்துட்டியா.. என்று கேட்டான் பிரகாஷ்.. என்னுடன் ஆறாம் வகுப்பு மட்டும் படித்தவன்.. மதுரைக்கு பக்கத்தில் ஏதோ ஊர் சொன்னான்.. அப்போது நானும் அவனும் ஒரே மாதிரி.. இந்த நாகரீகங்கள் எல்லாம் அப்போது எங்களுக்கு, அண்ணாந்து பார்த்து அதிசயப்படும் ஜெட் விமாங்கள் போல, உணர்வைத் தரும். சென்னையிலிருந்து இளையராஜா என்ற பையன் (அண்ணா நகர் என்று நினைக்கிறேன்) ஒவ்வொரு முறை ஊருக்கு சென்று வரும் போதும், புதுசாய் பேண்ட், கால் பேண்ட் மாடல்கள் இருக்கும். அதை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டு கேட்டு ஆச்சர்யப்பட்டு தெரிந்து கொள்வோம். அப்படி என்னுடைய எண்ணத்தோடு இருந்தவன், இப்போது பார்த்தால் பக்கா சென்னைவாசி.. காதில் சின்ன கடுக்கன், கிழிந்த ஜீன்ஸ் பெண்ட், வுட்லேண்டஸ் ஷூ, எண்ணெய் வைக்காத பரட்டை தலை.. விழுந்து விடுவதை போல தவாங்கட்டையில் பிரெஞ்சு தாடி.. என்னால் உண்மையில் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அட! இந்த அதிர்ச்சியோடு அவன் சொன்னது சொல்ல முடியாத குற்ற உணர்வையும் கிளப்பியது..


இந்த பிளாசாவுலயே நீ ஒருத்தன் தான் தனியா தெரியிற.. அது தாண்டா என்னால் உன்னை ரொம்ப ஈசியா அடையாளம் கண்டுபிடிக்க முடியுது என்றான். அவன் குத்தி காட்டுறானா, இல்லை மனசுல பட்டதை சொல்றானான்னு தெரியாது. ஆனால், நல்ல வேலையில் சேர்ந்த பிறகு, இவனளவுக்கு கடுக்கனோடு மாறலைனாலும், சென்னை மக்களுக்கு ஏத்த மாதிரி மாறனும்.. நீளச் சட்டை, பலூன் பேக்கிஸ் வகையறாக்களுக்கு விடைகொடுக்கணும்னு நினச்சுகிட்டேன். இவ்வளவு நாட்கள் அதற்கு வாய்ப்பு வரவில்லை.. இனிமேல், இடத்திற்கு தகுந்த மாதிரி நாம நம்ம உடைகளை மாற்றி கொள்ளவேண்டும் என்று நினைத்துகொண்டேன்.. ஆனால் உள்ளிருக்கும் மனசு எப்பவும் சிப்புக்குள் இருக்கும் முத்து மாதிரி வச்சுக்கணும்னு நினச்சேன்.. என்ன தான் பாசி படிந்து, வண்ணங்கள் சிப்பியில் படிந்தாலும், அது உள்ளிருக்கும் முத்தின் வெள்ளை நிறத்தை மாற்றாது அல்லவா, அதைப்போல..

அன்று ஒருவழியாக, ஸ்பென்சரின் எல்லாத் தளங்களையும் சுற்றி விட்டு, வெகு தாமதமாகத் தான் அறைக்கு கிளம்பினோம். நானும் என் நண்பன் குமரனும் ஸ்பென்சரில் இருந்து கிளம்பி எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்துகொண்டிருந்தோம். சாந்தி தியேட்டரின் எதிர்புறம், தபால் அலுவலகம் இருக்கும் இடத்தில் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. சுரங்கப்பாதையின் அந்த கூண்டின் பக்கவாட்டில் மக்கள் நடந்து போக சிறிது வழி வைத்திருந்தார்கள். சுரங்கப்பாதையின் வலது புறம் சாலை இருப்பதால் எல்லோரும், இடது பாதசாரி வழியையே பயன்படுத்துவார்கள். நாங்களும் அவ்வழி செல்ல நுழைகையிலும், அங்கே அந்த மெல்லிய வெளிச்சத்தில் இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். இவர்கள் ஏன் இங்கே நிற்கிறார்கள் என்று நினைத்த வேளையில், ஒருவள் வேகமாக நடந்து எங்களை நோக்கி வந்தாள். அருகில் வரவரத் தான் எங்களுக்கு புரிந்தது, அவர்கள் அரவாணிகள் என்று. வந்தவர் என் நண்பனின் கைபிடித்து ஏதேதோ சொல்ல ஆரம்பிக்க, நானும் என் நண்பனும் இரண்டு அடிகள் பின்னோக்கி வைத்தோம். ஆனால், அதற்குள் இன்னும் இருவர் வந்து எங்களை வளைக்க ஆரம்பிக்க, நாங்கள் அவர்களின் இடையில் புகுந்து ஓட்டமெடுத்தோம். அதன் பிறகு ஒரு நாள், என் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது தான் தெரிந்தது, சாந்தி தியேட்டர் சுரங்கப் பாதை இதற்கு சிறந்தது என்று.

இரவு நேர எம்.எல்.ஏ ஹாஸ்டல் ரொம்ப அமைதியானது. எல்லா அறையிலும் விளக்குகள் விடிய விடிய எரிந்தாலும் உள்ளிருந்து எந்த சப்தங்களும் வராது.. நாங்களும் சூரியன் இல்லையென்றால் கதவை சாத்திக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும் என்ற சென்னையின் கலாச்சாரதிற்கு பழக்கப்பட்டிருந்தோம். சில சமயம் சில அறைகளின் உள்ளே பாட்டில்கள் உருளும் ஒலி இருக்கும்.. தூக்கம் வராத சில இரவுகளின் போது, இரவு நேர பெண்களின் வருகையை கூட நான் கவனித்திருக்கிறேன். ஓமந்தூரார் இல்லத்தின் உள்ளே, எம்.எல்.ஏ ஹாஸ்டலின் உள்ளே, இரவு நேரங்களில் விலைமாதர்கள் தொந்தரவு இருக்கும் என்று ஒரு வாரைதழில் படித்தேன். ஆனால் நான் அங்கு இருந்த ஐந்து மாத காலங்கள் அப்படி எந்த சம்பவம் நடந்ததை நான் கண்டது கிடையாது. பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கும் புதிய எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்கும் இடையே மரங்கள் சூழ்ந்த பகுதியில் இது போல் நடப்பதாக சொல்லப்பட்டது.

இந்த வேளையில், என் புராஜெக்ட் தேடும் பணியும் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள், என் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண், என் தோழியின் அறையில் தங்கியிருந்த காரணத்தால், பழகியதில் எனக்கு தங்கையாகி இருந்தாள். அவளிடம் என் ரெசியுமை கொடுத்து புராஜெக்ட் தேடச் சொல்லியிருந்தேன், அவளின் மாமா சென்னையில் ஒரு கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததால். அவளிடம் இருந்து எனக்கு இ-மெயில் வந்திருந்தது. ஏன் இன்னும் அவள் மாமா சொன்ன கம்பெனியில் இருந்து அழைப்பு அனுப்பியும் அந்த கம்பெனியில் புராஜெக்டில் சேரவில்லை என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. என்னடா, அவர்கள் அனுப்பிய இ-லெட்டரை நான் மறந்து ஏதும் அழித்துவிட்டேனோ என்று. ஊருக்கு கால் பண்ணியும் கேட்டேன், அப்படி கடிதம் எதுவும் வந்ததா என்று. ஆனால் அவர்களும் வரவில்லை என்றார்கள். அந்தப் பெண் அனுப்பிய இ-மெயில் இருந்த தொலைபேசிக்கு டயல் செய்தேன்.. ஆண்டவா, இப்படி கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லையே என்று வேண்டினேன்.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

55 பின்னூட்டங்கள்:

said...

நான் இதை இப்போ தான் பாத்தேன்.. எப்போ போட்டீங்க... இந்த மாதிரி நமக்கும் நிறைய நடந்திருக்கு... நடை உடை அப்புறம் சென்னை மக்களோட பேச்சுமே வித்தியாசம் தான்... முதல் 2 மாசம், கொஞ்சம் கஷ்டப்ப்ட்டேன்... அப்புறம் போக போக பழகிடிச்சு.. :))

said...

ம்ம். ஒரு ரேஞ்சா தான் போகுது கதை. மேலே தொடரட்டும். :p

said...

இன்று மதியம் பார்த்த போது, இப்போ இருப்பதில் பாதி தான் இருந்துச்சு..இன்னும் கொஞ்சம் சேத்து திரும்பவும் பதிவிட்டீங்களோ?? இல்லை நான் தான் சரியா படிக்கலையா??

வெற்ற்கரமா 2வது தடவையா முதல் பின்னூட்டம் நம்மது தான்.. :))

said...

attendance குறிச்சுகோங்க கார்த்தி.. நான் க்லாஸ்லதான் இருக்கேன். ஹீஹீ..

said...

நீங்க எப்போ பிரெஞ்சு தாடி வைக்க போறீங்க?

said...

கைக்கு கிடைத்தது வாய்க்கு வரவில்லையோ அந்த வேலை வாய்ப்பு.. இல்லை நீங்க ஒன்னுக்கு 20-30 ஏஇமேயில் வச்சிருந்தீங்களா?

said...

தல ரெண்டு மூனு போஸ்ட் பாக்கி இருக்கு...நாளைக்கு வேலைக்கு போன உடனே படிச்சிட்டு சொல்றேன் :-)

said...

vaazhakai payanam super pogudhu maams....enjoyed reading it...

said...

Apuram yenachu nga Karthik ...Sikkiram sollunga ...

Anonymous said...

"உள்ளிருக்கும் மனசு எப்பவும் சிப்புக்குள் இருக்கும் முத்து மாதிரி வச்சுக்கணும்னு நினச்சேன்" super karthik, continue ;-)

said...

அடடா! யடார்த்தமா சொல்லி இருக்கீங்க! சூப்பரா இருக்கு! நம்க்கும் இந்த பட்டனத்து மலைப்பு என்னக்கும்ம் மாறாது!

said...

அம்பி சொல்ற்றாப்ல, கதை ரேஞ்சா தான் இருக்கு! அடுத்த பதிவு போடுங்கசீக்கிரம் :))

said...

அந்த சிப்பிக்குள் முத்து உவமை சூப்பர்!

said...

//
என்ன தான் பாசி படிந்து, வண்ணங்கள் சிப்பியில் படிந்தாலும், அது உள்ளிருக்கும் முத்தின் வெள்ளை நிறத்தை மாற்றாது அல்லவா
//
அருமையாக இருக்கிறது மு.கா. நான் உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனாலும் பின்னூட்டியதில்லை. மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

said...

//என் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண், என் தோழியின் அறையில் தங்கியிருந்த காரணத்தால், பழகியதில் எனக்கு தங்கையாகி இருந்தாள்//
எவ்ளோ பெரிய மனசு வத்தியாரே உங்களுக்கு!!
அந்த முத்து matter really superb! :)

said...

ஒவ்வொரு பகுதிலயும் எதிர்பார்ப்பை கூட்டிகிட்டே போறிங்க கார்த்தி. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். சீக்கிரம் எழுதுங்க.

said...

weekend oorla illa vandu paatha ivalo posts. porumaya padichi commenturen karthi :-)

said...

Mega serial maathiri thodarum podareenga. Aana, athu maathiri izhukkaama, fast-aa, super-interestingaa povuthu.

Waiting to know what happened next.

Cheers
SLN

said...

thalaiva.. Padikkave engalukku time illa. Eppadi ungalala ivlo fast a ezhudha mudiyudhu? adhuvum ovvonnum arumayana post.

said...

chancey illa. kalakkala ezhudhi irukkinga Karthik. Ovvoruthar vazhkkailayum ovvoru stage layum evlavo pudhu pudhu experiences irukkum. Ana ungala madhiri ivlo azhaga yaralayum ezhudha mudiyadhu.

//உள்ளிருக்கும் மனசு எப்பவும் சிப்புக்குள் இருக்கும் முத்து மாதிரி வச்சுக்கணும்னு நினச்சேன்.. என்ன தான் பாசி படிந்து, வண்ணங்கள் சிப்பியில் படிந்தாலும், அது உள்ளிருக்கும் முத்தின் வெள்ளை நிறத்தை மாற்றாது அல்லவா, அதைப்போல..
//

ellarum sonnadhu dhan. Romba romba azhagana uvamai..

//ஆண்டவா, இப்படி கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கவில்லையே என்று வேண்டினேன்.//
idhulayum oru suspencea?

said...

naan romba rasitha innoru vari

// விழுந்து விடுவதை போல தவாங்கட்டையில் பிரெஞ்சு தாடி.. //

said...

@Sathya,

// நான் உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனாலும் பின்னூட்டியதில்லை.//

Adha ozhunga pottirundha ippo oru minister ayirukkalam illa?

said...

வணக்கம் திரு கார்த்திகேயன்,

உங்களுக்கு weird கேள்வி சுற்றை அனுப்பியிருக்கிறேன். பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி

அன்புத்தோழி

said...

அடையாள பின்னூட்டம் ;-)

said...

நானும் நம்ம தலைவி மாதிரி பொலம்ப வேண்டியதா போச்சு...வெள்ளிக்கிழமைல இருந்து ட்ரை பண்றேன்..கமெண்ட் போட முடியல....இதுவாவது போகுதானு பார்ப்போம்....

said...

சக்ஸஸ்.......:-)

said...

ச.ம.உ விடுதி பத்தி நல்லா சொல்லி இருக்கீங்க...நானும் அங்க அடிக்கடி போய் இருக்கேன்...நமக்கு தெரிஞ்ச நிறைய ச.ம.உக்கள பாக்க...:-)

said...

/முதல் 2 மாசம், கொஞ்சம் கஷ்டப்ப்ட்டேன்... அப்புறம் போக போக பழகிடிச்சு.. //

சென்னை வருகின்ற நிறைய பேருக்கு முதலில் உங்களையும் என்னையும் போல அசௌகரியங்கள் இருக்கும்னு நினைக்கிறேன் ACE..

said...

// ஒரு ரேஞ்சா தான் போகுது கதை.//

:-)

said...

//வெற்ற்கரமா 2வது தடவையா முதல் பின்னூட்டம் நம்மது தான்.. //

சிக்கன் பிரியாணி சாப்பிடுவீங்களா. இல்லைனா புளியோதரை அனுப்புறேன் ACE

said...

// நான் க்லாஸ்லதான் இருக்கேன்.//

சரி.. அப்போ கேள்வி கேட்குறேன் மை பிரண்ட்.. பதில் சொல்ல ரெடியாகுங்க

said...

//நீங்க எப்போ பிரெஞ்சு தாடி வைக்க போறீங்க? //

ஒரே ஒரு முறை தான் வைத்தேன்.. கை எப்ப பாத்தாலும் அங்கே போயிகிட்டு இருந்தது.. அடுத்த ரெண்டு நாளுல எடுத்துட்டேன் மை பிரண்ட்

said...

//நாளைக்கு வேலைக்கு போன உடனே படிச்சிட்டு சொல்றேன் //

நாட்டாமை முதல்வரே, மெதுவா வாங்க

said...

//vaazhakai payanam super pogudhu maams....enjoyed reading it...

//

நன்றிப்பா மாப்ள

said...

/Apuram yenachu nga Karthik ...Sikkiram sollunga ...

//

ஹிஹிஹி.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ராஜி

said...

//"உள்ளிருக்கும் மனசு எப்பவும் சிப்புக்குள் இருக்கும் முத்து மாதிரி வச்சுக்கணும்னு நினச்சேன்" super karthik, continue //

ஹிஹிஹி.. நன்றி ஹனிஃப் :-)

said...

/தலைவா படித்துக்கொண்டிருக்கிறேன் என்பதற்கு அடையாளமாய் இந்த பின்னூட்டம்//

நம்புறேன் வேதா :-)

said...

/அடடா! யடார்த்தமா சொல்லி இருக்கீங்க! சூப்பரா இருக்கு! நம்க்கும் இந்த பட்டனத்து மலைப்பு என்னக்கும்ம் மாறாது! //

நல்லா சொன்னீங்க ட்ரீம்ஸ்.. இந்த மலைப்பு போகவே பொகாது

said...

//அம்பி சொல்ற்றாப்ல, கதை ரேஞ்சா தான் இருக்கு! அடுத்த பதிவு போடுங்கசீக்கிரம் :))

//

கட்டாயம் வந்துகிட்டே இருக்குங்க ட்ரீம்ஸ் ;-)

said...

//அந்த சிப்பிக்குள் முத்து உவமை சூப்பர்! //

நன்றி ட்ரீம்ஸ்

said...

/அருமையாக இருக்கிறது மு.கா. நான் உங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆனாலும் பின்னூட்டியதில்லை. மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
//

சத்யா, ப்ரியா சொல்ற மாதிரி அப்பப்போ ஒரு பின்னூட்டம் போட்டிருந்த இந்நேரம் நீங்க ஒரு அமைச்சர் ;-)

said...

/எவ்ளோ பெரிய மனசு வத்தியாரே உங்களுக்கு!!
அந்த முத்து matter really superb! :)
//

நன்றிங்க செந்தில்

said...

//ஒவ்வொரு பகுதிலயும் எதிர்பார்ப்பை கூட்டிகிட்டே போறிங்க கார்த்தி. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். சீக்கிரம் எழுதுங்க.//

அப்படியா சொல்றீங்க மணிகண்டன்.. நல்ல வேளை கல்லை விட்டு எறியலையே

said...

/weekend oorla illa vandu paatha ivalo posts. porumaya padichi commenturen karthi //

சரிப்பா அருண்.. எந்தூரு போனீக

said...

//Mega serial maathiri thodarum podareenga. Aana, athu maathiri izhukkaama, fast-aa, super-interestingaa povuthu.

Waiting to know what happened next.
//

நன்றிங்க SLN :-)

said...

/Eppadi ungalala ivlo fast a ezhudha mudiyudhu? adhuvum ovvonnum arumayana post. //

இதுல உள்குத்து எதுவும் இல்லியே, ப்ரியா

said...

//ellarum sonnadhu dhan. Romba romba azhagana uvamai..
//

நன்றிங்க ப்ரியா

said...

/naan romba rasitha innoru vari//

:-)

said...

/Adha ozhunga pottirundha ippo oru minister ayirukkalam illa? //

சரியாச் சொன்னீங்க ப்ரியா..

said...

//உங்களுக்கு weird கேள்வி சுற்றை அனுப்பியிருக்கிறேன். பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
//

அன்புத்தோழி, நான் ஏற்கனவே இதை பற்றி பதிவு எழுதிட்டேங்க.. எனக்கு கேள்வி சுற்றை அனுப்பியதற்கு நன்றி..

ஆ.. என்ன இது.. உங்க பதிவுப் பக்கம் போலாம்னு பாத்தா ஒண்ணுமே இல்லியே :-)

said...

//அடையாள பின்னூட்டம் //

இதுல உங்க அடையாளம் நல்லாவே தெரியுது

said...

//சக்ஸஸ்.......:-) //

நாட்டாமை நீங்க வாழ்க்கைல பெரிய ஆளா வரப்போறீங்க.. சிவாஜி பேசுன முதல் வசனம் இது தான்..
முதல்வரா ஆனவுடனே தலைவி மாதிரி ஆயிட்டீங்களே ஷ்யாம் :-)

said...

/...நமக்கு தெரிஞ்ச நிறைய ச.ம.உக்கள பாக்க...:-) //

அட.. இதை சொல்லவே இல்லை..

Anonymous said...

nan blog world ku romba pudhusu...rendu naal la ye unga blog la indha post padika sandharpam kidachadhu...aahaa nammala madhiriye innoruthar nu sandhosham aiduchu...ungaloda narration nalla iruku..continue pannunga...adutha episode seekiram edhirparkarom...

said...

ம்.

அப்பாவியா இருந்திருக்கீங்க அப்டியே இருங்க நல்லது.

அடுத்த பார்ட்டுக்கு போறேன்
:-))