Wednesday, March 28, 2007

கன்யாகுமரி கலாட்டக்களும், ஆர்.எஸ்.எஸ் மாநாடும்

பேருந்தில் ஏறிவிட்டாலே, தூங்கி போய்விடுவதென்பது என் பால்ய வயது வேலை.. அது இருபது நிமிட பயணமென்றாலும் சரி, இரண்டு நாள் பயணமென்றாலும் சரி.. அதுவும் எங்கள் ஊரின் மேடு பள்ள சாலையிலே என்னால் சொகுசாக தூங்கமுடிகிறதென்றால், தேசிய நெடுஞ்சாலை பயணத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.. அது சொர்க்கத்தில் தூங்குவது போல இருக்கும். ஆனால் பத்து பனிரெண்டு வயதிற்கு பிறகு, அப்படியெல்லாம் தூங்குவது கிடையாது.. எங்கே போனாலும் வேடிக்கை பார்ப்பதும், கடக்கின்ற ஊர்களை மனத்திலே இருத்திக்கொள்வதும் தான் என் வேலையாக இருந்தது..

மிக முக்கியமாக, சுற்றுலாவில் இரவானாலும் கூட தூங்குவது கிடையாது. கிராமத்தில் இருந்து சுற்றுலா செல்வதென்பது மிகவும் அரிதான விஷயம். ஒரு முறை, நாகர்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடப்பதற்காக ஆட்கள் திரட்டும் பணி நடந்துவந்தது. போதுமான ஆட்கள் சேரவில்லை என்பதால், அதை ஒரு சுற்றுலாவாக மாற்றினார்கள். சுற்றுலாவிற்கான பாதி செலவை நாம் போட்டால் போதும் என்று முடிவானது.மதுரை, திருச்செந்தூர், கன்யாகுமரி அங்கேயிருந்து சுசீந்திரம் வழியாக நாகர்கோவில் மாநாடு செல்வதென்று முடிவானது. எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகள் சற்று அதிகம். அதுவும் 1990-களில், எங்கள் ஊரில் நடந்த சில மத பிரச்சினைகளுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் கொஞ்சம் நன்றாக வேரூன்றிவிட்டது. தினமும் மாலை வேளைகளில் பயிற்சிவகுப்புகள் எல்லாம் கூட நடந்து வந்தது. அப்படியான காலங்களில் தான், நான் சிறிது காலம் சிலம்பம் கற்றுக்கொண்டேன்.. சிலம்பம் எடுத்தும் வணக்கம் சொல்லவும், யாராவது எதிர்த்தால் என்னை காத்துக்கொள்ளும் அளவும் எனக்கு சிலம்பம் கற்றுத்தரப்பட்டது..

எங்கள் ஊரின் மேற்குபகுதியில், ஊர் கிணற்றின் அடியில், தெருவிளக்கின் கீழே தான் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி வகுப்புகள் நடந்தது. நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேரவில்லையென்றாலும், எனது அநேக நண்பர்கள் அதில் தான் இருந்தார்கள்.. சகா என்பதும், ஜி என்பதும் தான் அவர்களுக்குள் அழைக்க பயன்படும் வார்த்தைகள்.. பின்னாளில் அது ஊருக்குள் இருக்கும் எல்லோருக்கும் பொதுவானதொரு சொல்லாக மாறிவிட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தனது கிளைகளை எங்கள் ஊரில் பரப்ப காரணமாய் இருந்தவர்கள், கல்யாணம் செய்துகொண்ட பின்னர், அதனின் தாக்கம் மெதுவாக குறைந்து போய்விட்டது.. இன்னமும் அது இந்துத்துவா மற்றும் பாரதிய ஜனதா கட்சி என்னும் பெயரில் அங்கங்கே சத்தமில்லாமல் தூங்கிகொண்டு தான் இருக்கிறது..

இப்படியாக, அந்த முறை, திருச்செந்தூர், கன்யாகுமரி எல்லாம் சுற்றிப் பார்த்தோம். எங்கள் கூட வந்த எல்லோருக்கும், என்னையும் சேர்த்து, கன்யாகுமரி சென்றது அது தான் முதல் அனுபவம். விவேகானந்தர் பாறைக்கு, படகில் செல்வதற்கு முன், வழியில் ஒருவன் பிளாஸ்டிக்காலானா ஒரு ஃப்லூட்டை விற்றுக்கொண்டிருந்தான்.. அதற்கு முன்னால் மற்றொரு இடத்தில் அதன் விலை கேட்ட போது, முப்பது ரூபாய் என்று சொன்னதால் நாங்கள் வாங்கவில்லை. என் கூட வந்திருந்த என் அண்ணனின் பையன் விடாமல் கேட்டதால் (அழுததால்), நின்று விலை கேட்டால், இவன் அந்த ஃப்லூட்டிற்கு ஐம்பது ரூபாய் என்றான். அடப்பாவிகளா என்று நாங்கள் அதிர்ந்து போனோம்.. என் இன்னொரு அண்ணன் நக்கலாக இப்பத்தான் இதை பத்து ரூபாய்க்கு காந்தி மண்டபதுல சொன்னாங்க என்றார். அதற்கு அவன் சொன்ன பதில் எங்களை ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஒரு சேர உண்டாக்கியது. அப்படியா.. அப்பன்னா ஒரு ரெண்டு ரூபாய் சேர்த்து பனிரெண்டு ரூபாய் வாங்கிக்கோ சார் என்றார். என் அண்ணன் விடாமல் பேசி பத்து ரூப்பாய்க்கு வாங்கி வந்தார். ஏன் இப்படி அநியாய விலை சொல்றீங்கன்னு கேட்டதுக்கு, அப்பத்தானே சார் நீங்க விலை குறைச்சு கேட்குறப்போ எங்களுக்கு கட்டுபடியாகும்னு ரொம்ப அசால்டா பதில் சொல்றான். பத்து ரூபாய் எங்க இருக்கு..ஐம்பது ரூபாய் எங்க இருக்குன்னு நாங்க நினச்சுகிட்டோம். அன்றிலிருந்து,எங்கே இது மாதிரி பாதசாரி கடைல விலை கேட்டாலும் அவன் சொல்ற விலையை விட பாதிக்கும் கீழ தான் கேட்குறதுன்னு முடிவு பண்ணினோம்.

விவேகானந்தர் பாறையில, மண்டபத்திற்கு மேல போற படிக்கட்டுக்கு ரெண்டு பக்கத்திலையும் ரெண்டு யானை சிலைகள் இருந்தன.. நானும் என் தம்பியும் (அண்ணன், தம்பிக எல்லாம் என் சித்தப்பா, பெரியப்பா மக்க.. நம்ம பங்காளிக) ரெண்டு யானையையும் தொட்டு கும்பிட்டோம். இதைப் பார்த்த எங்க கூட வந்த எங்க மக்களும் தொட்டு கும்பிட ஆரம்பிச்சாங்க.. ஆஹா. நம்ம மக்கள் இன்னும் மாறலையான்னு நினைத்துகொண்டு, உள்ளே போய்விட்டோம். அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, ஒரு கூட்டமே அந்த ரெண்டு யானை சிலைகளுக்கும் முன்னாடி விழுந்து கூம்பிட்டுகொண்டு இருக்கங்க.. யாராவது வேண்டுதல் வச்சு மொட்டை அடிக்காம இருந்தா சரின்னு நினைச்சு மனசுக்குள் சிரித்துகொண்டோம்.

அங்கிருந்து சுசீந்தரம் சென்று, பிறகு நாகர்கோவில் சென்றடைந்தோம். அன்றைய ஆர்.எஸ்.எஸ் மாநாடு ஒரு ஊர்வலத்தோடு கிளம்பியது.. நாங்களும் அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டோம். இந்தியாவில் அதிசயமான காரியம் ஒன்று அந்த மாநாட்டில் நடந்தது. சொன்ன நேரத்துக்கு மாநாடு ஆரம்பித்தது. ஒரு நிமிடம் கூட முன்பின் இல்லை. அதே மாதிரி சரியான நேரத்துக்கு முடித்தார்கள். இந்த மாதிரி எல்லோரும் சரியான நேரத்தை கடைபிடிச்சா நல்லா இருக்குமேன்னு நினைத்துகொண்டேன். அவ்வளவு நேர்த்தியாக இருந்தது.. அதை பார்த்தால் ஏதோ இயந்திர மனிதர்களின் அணிவகுப்பு போல இருந்தது, கட்டுகோப்பாக. நாங்கள் எல்லாம் அந்த அணிவகுப்பு நடந்த மைதானத்தை சுற்றியே உட்காரவைக்கப்பட்டோம். இதுபோல அடிக்கடி நடப்பதால் தான், நாகர்கோவிலில் பாரதிய ஜனதா நன்றாக வேறூன்ற முடிந்தது என்று பின்னாளில் அங்கே, அவர்கள் வெற்றிபெற்ற போது நினைத்துகொண்டேன்.

45 பின்னூட்டங்கள்:

said...

hiyaaaaaaa! me thaan pashtu.

said...

nalla ezhuthi irukka karthi.
one of the good things in RSS is their discipline and punctuality.

same is applicable in punjab kaalsa movement(akhali dhal)

said...

ஆர்.எஸ்.எஸ்ன்னா என்ன தல?

said...

//ரெண்டு யானையையும் தொட்டு கும்பிட்டோம். இதைப் பார்த்த எங்க கூட வந்த எங்க மக்களும் தொட்டு கும்பிட ஆரம்பிச்சாங்க.. //

ஆஹா.. அவனா நீ????

said...

"பஞ்சாப்" மூவ்மென்ட் பத்தி எல்லாம் நம்ம "திடீர்" அக்கறை???
இல்ல,ஏதோ கேக்கனும்னு தோனிச்சு,அதான் கேட்டேன்!! :D

said...

Me the 2ndaa?


Thala orae postaa pottu thakkureenga...

said...

//பேருந்தில் ஏறிவிட்டாலே, தூங்கி போய்விடுவதென்பது என் பால்ய வயது வேலை.. அது இருபது நிமிட பயணமென்றாலும் சரி, இரண்டு நாள் பயணமென்றாலும் சரி//

Aiye neenga namba katchi...
Aana naan innum apdi thaan thonnguvaen...

I also heard about RSS punctuality.

Anonymous said...

vandhutten!

-porkodi

said...

ippadi katurai ezhudha ellam enga kathukiteenganu oru post pota nalla irukume maams :)

said...

//சிலம்பம் எடுத்தும் வணக்கம் சொல்லவும், யாராவது எதிர்த்தால் என்னை காத்துக்கொள்ளும் அளவும் எனக்கு சிலம்பம் கற்றுத்தரப்பட்டது..//

வாத்தியார்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்..இப்பதான தெரியுது நீங்க நெஜமான வாத்தியார்தான்னு :)

said...

//ரெண்டு யானையையும் தொட்டு கும்பிட்டோம்//

நீங்க யாரப் பார்த்துட்டு தொட்டுக் கும்பிட்டீங்கன்னு சொல்லவே இல்ல..ஹி ஹி ஹி

said...

நானும் என் தம்பியும் (அண்ணன், தம்பிக எல்லாம் என் சித்தப்பா, பெரியப்பா மக்க.. நம்ம பங்காளிக) ரெண்டு யானையையும் தொட்டு கும்பிட்டோம். இதைப் பார்த்த எங்க கூட வந்த எங்க மக்களும் தொட்டு கும்பிட ஆரம்பிச்சாங்க.. ஆஹா. நம்ம மக்கள் இன்னும் மாறலையான்னு நினைத்துகொண்டு, உள்ளே போய்விட்டோம். அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, ஒரு கூட்டமே அந்த ரெண்டு யானை சிலைகளுக்கும் முன்னாடி விழுந்து கூம்பிட்டுகொண்டு இருக்கங்க..

Jeasus is a Shepard appidinnu yen sonnanga theriuma.. makkal samudhaayatha suyama sindhikka theriyaadha aatu mandhainnu directaa thitta mudiyaadhilla.. adhukkuthaan..

Nalla oor suthi irukkeenga

said...

நானும் என் தம்பியும் (அண்ணன், தம்பிக எல்லாம் என் சித்தப்பா, பெரியப்பா மக்க.. நம்ம பங்காளிக) ரெண்டு யானையையும் தொட்டு கும்பிட்டோம். இதைப் பார்த்த எங்க கூட வந்த எங்க மக்களும் தொட்டு கும்பிட ஆரம்பிச்சாங்க.. ஆஹா. நம்ம மக்கள் இன்னும் மாறலையான்னு நினைத்துகொண்டு, உள்ளே போய்விட்டோம். அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, ஒரு கூட்டமே அந்த ரெண்டு யானை சிலைகளுக்கும் முன்னாடி விழுந்து கூம்பிட்டுகொண்டு இருக்கங்க..

Jeasus is a Shepard appidinnu yen sonnanga theriuma.. makkal samudhaayatha suyama sindhikka theriyaadha aatu mandhainnu directaa thitta mudiyaadhilla.. adhukkuthaan..

Nalla oor suthi irukkeenga

said...

Wow.. nice experience solli irukeenga karthi!

said...

/அது சொர்க்கத்தில் தூங்குவது போல இருக்கும்//
sariya sonneenga.. naamellam ippo kooda appadi thaan! ;)

said...

/ அரைமணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா, ஒரு கூட்டமே அந்த ரெண்டு யானை சிலைகளுக்கும் முன்னாடி விழுந்து கூம்பிட்டுகொண்டு இருக்கங்க.. //

HAHAHA! antha yaanaigalukku munnal ninru foto edutha nyabagam irukku enakku!

said...

//முடிந்தது என்று பின்னாளில் அங்கே, அவர்கள் வெற்றிபெற்ற போது நினைத்துகொண்டேன். //
ithulla intha matter ellam irukka!

said...

ok kaarthi vandha velai aachu.. appala vareen!

said...

//hiyaaaaaaa! me thaan pashtu.
//

ஒரு பேக், கம்பங்கூழ் பார்சல்.. வெயில்காலம் வருதுல அம்பி

said...

நன்றிப்பா அம்பி.. நான் நேற்ல பல தடவை அவங்க நேரந்தவறாமையையும் அந்த ஒழுக்கத்தையும் கண்டு அசந்து போயிருக்கேன்..

said...

//ஆர்.எஸ்.எஸ்ன்னா என்ன தல?//

RSS- Rashtriya Swayamsevak Sangh

http://en.wikipedia.org/wiki/Rashtriya_Swayamsevak_Sangh

இந்துக் கொள்கைகளை பரப்புவதற்காக உருவாக்கப் பட்ட ஒரு இயக்கம், மை பிரண்ட்

said...

//ஆஹா.. அவனா நீ???? //

ஹிஹிஹி..நானே தான், மை பிரண்ட்

Anonymous said...

Ungaludan saernthu naanum oor sutri vanthu vitten ;-)

said...

அருமையான கட்டுரை.. சொல்ல வந்ததை தெளிவா சொல்லியிருக்கீங்க... :))

//ஒரு கூட்டமே அந்த ரெண்டு யானை சிலைகளுக்கும் முன்னாடி விழுந்து கூம்பிட்டுகொண்டு இருக்கங்க //

LOL :))

//அதிசயமான காரியம் ஒன்று அந்த மாநாட்டில் நடந்தது. சொன்ன நேரத்துக்கு மாநாடு ஆரம்பித்தது. //

ஆச்சர்யமா இருக்கு...

தல, எந்த துறையிலாவது காலடி வைக்காம இருந்திருக்கீங்களா??

said...

தல....சிலம்பம் எல்லாம் தெரியுமா??? ...சீக்கிரம் எல்லா அமைச்சர்களுக்கும் சொல்லி கொடுங்க....சட்டசபைக்கு யூஸ் ஆகும் ;-)))

said...

எப்பிடி இவளோ ஞாபகம் வச்சி சுவையா எழுதுறீங்கனு நெனச்சா எனக்கு
ரொம்ப வியப்பா இருக்கு கார்த்திக்.
//
இதைப் பார்த்த எங்க கூட வந்த எங்க மக்களும் தொட்டு கும்பிட ஆரம்பிச்சாங்க..
//
நம்ம மக்கள மாத்தவே முடியாது :)

//
யாராவது வேண்டுதல் வச்சு மொட்டை அடிக்காம இருந்தா சரின்னு நினைச்சு மனசுக்குள் சிரித்துகொண்டோம்.
//
LOL :)

said...

@ambi
//
same is applicable in punjab kaalsa movement(akhali dhal)
//
*ahem background-la eppavume punjab pathi thaan nyabagama?
*narayana narayana*

said...

/"பஞ்சாப்" மூவ்மென்ட் பத்தி எல்லாம் நம்ம "திடீர்" அக்கறை???
//

அது அம்பிக்கு பிடிச்ச ஊர்.. அதனால நாம எந்த ஊரை பத்தி பேசினாலும் அவர் உடனே பஞ்சாப் போயிடுவான்

said...

//Thala orae postaa pottu thakkureenga... //

நமக்கும் பொழுது போகனுமே, ராஜி :-)

said...

/Aiye neenga namba katchi...
Aana naan innum apdi thaan thonnguvaen...//

ஹிஹிஹி.. நம்ம கட்சிதானா நீங்களும் ராஜி

said...

/vandhutten!

-porkodi

//

வாம்மா பொற்கொடி.. பாயின்டர்ஸ் எப்படி போகுது

said...

/ippadi katurai ezhudha ellam enga kathukiteenganu oru post pota nalla irukume maams //

புது போஸ்டுக்கு வழி தந்த மாப்ள வாழ்க வாழ்க

said...

//வாத்தியார்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்..இப்பதான தெரியுது நீங்க நெஜமான வாத்தியார்தான்னு//

சொல்லித் தர்ற அளவுக்கு தெரியாதுப்பா செந்தில்.. காத்துக்கொள்ற அளவுக்கு தெரியும்

said...

//நீங்க யாரப் பார்த்துட்டு தொட்டுக் கும்பிட்டீங்கன்னு சொல்லவே இல்ல..ஹி ஹி ஹி //

நம்மளை இப்படி வம்புல மாட்டி விடலாமா, செந்தில் :-)

said...

//*ahem background-la eppavume punjab pathi thaan nyabagama?
//

///"பஞ்சாப்" மூவ்மென்ட் பத்தி எல்லாம் நம்ம "திடீர்" அக்கறை???
//

@CVR, arun,
அடப்பாவிகளா! ஒரு தகவல் சொன்னா உடனே பாயிண்ட பிடிச்சு பத்த வெச்ச்ருவீங்களே!

நானே ரெம்ப்ப்ப்ப கஷ்டப்பட்டு அந்த ஊழல் புகாரை தங்கமணியிடம் சமாளிச்சு வெச்சுருக்கேன். மறுபடியுமா?

said...

/Nalla oor suthi irukkeenga //

வாம்மா மின்னல்.. ரொம்ப நாளா ஆளையே காணலையே சசி..

said...

/Wow.. nice experience solli irukeenga karthi! //

நம்ம எல்லோருடைய அனுபவத்தையும் இப்ப நினச்சு பாத்தா, கதைகள் தானே ட்ரீம்ஸ்

said...

/sariya sonneenga.. naamellam ippo kooda appadi thaan!//

பரவாயில்ல ட்ரீம்ஸ்.. இன்னும் விடாம இருக்கீங்களே :-)

said...

//HAHAHA! antha yaanaigalukku munnal ninru foto edutha nyabagam irukku enakku//

பாத்தீங்களா, உங்களுக்குள்ளையும் ஒரு கதை ருக்கு, ட்ரீம்ஸ்

said...

//ithulla intha matter ellam irukka!//

ஆமாங்க ட்ரீம்ஸ்!

said...

//
"கன்யாகுமரி கலாட்டக்களும், ஆர்.எஸ்.எஸ் மாநாடும்"
//

கலாட்டா இல்லையா... கலாட்ட என்று குறிலில் சொல்லியது சரியா ? என் தமிழ் மிகவும் மோசமானது.. தயவு செய்து விளக்கவும்.

கன்னியாகுமர் தானே, கன்யாகுமரியா ?

said...

மாப்ள, பரணியும் களத்தில குத்திச்சாச்சு.. அட.. நாலு பதில்கள் சரிப்பா.. மூன்றாவது கேள்விக்கு மட்டும் மறுபடியும் முயற்சி செய்ப்பா

said...

//சிலம்பம் எடுத்தும் வணக்கம் சொல்லவும், யாராவது எதிர்த்தால் என்னை காத்துக்கொள்ளும் அளவும் எனக்கு சிலம்பம் கற்றுத்தரப்பட்டது//

தலனா சும்மாவா :-)

said...

//same is applicable in punjab kaalsa movement(akhali dhal)//

@ambi,

நீ பஞ்சாப்லயே இரு :-)

said...

தல கொஞ்சம் லேட்...அதுனால நெக்ஸ்ட் போஸ்டுக்கு போறேன் :-)