Wednesday, March 21, 2007

வலையில் உலவும் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள்

இன்று நினைக்காத ஒன்று நிகழ்ந்தது.. வலையில் எங்கு பார்த்தாலும் சிவாஜி பாடல்கள்.. இரண்டு நாளைக்கு முன்னாடி தான், பாடல்கள் ஏப்ரல் 4-ல் ரிலீஸ் என்று அறிவித்திருந்தார்கள். அதற்குள் எப்படி வலையில் இவ்வளவு சாதாரணமாக உலவுகிறது மூன்று பாடல்கள். இதற்கு நமது நண்பர் ஃபில்பர்ட், குமுறலுடன் தனியாக ஒரு பிண்ணனி கதை சொன்னாலும், இது உண்மையான பாடல்களாக இருக்காது என்பது என் எண்ணம். அப்படி உண்மை என்றால், இருந்துவிடக்கூடாது என்பது என் வேண்டுதல். மூன்று பாடல்களும் அப்படி ஒன்றும் பெரிய அளவில் ஈர்க்கக்கூடியதாக இல்லை. ஏப்ரல்-4 வரை காத்திருக்கிறேன், இன்னும் நம்பிக்கையுடன்..

[தயவுசெய்து யாரும் எங்கு கிடைக்கிறது இந்தப் பாடல்கள் என்று கேட்காதீர்கள். நிச்சயமாய் நான் சொல்வதாய் இல்லை. சொல்லக்கூடிய மனநிலையும் இல்லை]

20 பின்னூட்டங்கள்:

said...

எல்லாம் சரி தான் கார்த்திகேயன்..ஆனால்

//தயவுசெய்து யாரும் எங்கு கிடைக்கிறது இந்தப் பாடல்கள் என்று கேட்காதீர்கள். நிச்சயமாய் நான் சொல்வதாய் இல்லை. சொல்லக்கூடிய மனநிலையும் இல்லை//

அடேங்கப்பா..சுனாமிக்கு அப்புறம் நடந்த பெரிய அசம்பாவிதம் மாதிரி சொல்லுறீங்க..கூகுள்-ல தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.Take it easy.

said...

என்ன ஆச்சு? இதுக்கெல்லாம் மனம் தளர்ந்து போகலாமா?

said...

நான் தான் முதலோன்னு நினைச்சேன். ஜோ வந்திருக்கார் போல் இருக்குது. அவர் சொன்னதையே நானும் வழி மொழிகிறேன். இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. உங்க சொந்த வாழ்வில் நீங்க ஜெயிச்சு வரதுக்கே அர்த்தம் இல்லாமப் போயிடும். :)))))) சுலபமா எடுத்துக்குங்க.

said...

What is this non-sense...Idiots.
Why they are doing like this.

I have to tell you one more thing...before GODFATHER movie release...I mean 2 months before I've got TWO songs "Kaatril oor vaarthai" and "Thotha puram" (video).
so there is a possibility...athellam irrukattum ....paattu romba kevalama irruka?

adhey pathi oru allasal illaiye?

said...

கார்த்திக் சந்தேகம் இல்லை..பாடல்கள் அசல் தான்

வாஜி.. வாஜி.. சிவாஜி பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும்.. கவலை வேண்டாம்..

சகாரா பாடல் நான் இன்னும் கேட்க வில்லை..

ஒரு கூடை சன் லைட் ஒரு கூடை மூன் லைட பாடல் பற்றிய செய்தி பாடல் வரிகளோடு இன்று குமுதத்தில் வந்துள்ளது.

said...

Karthik,
Hope you heard from friends that though these songs are there in the movie, they are not finished products. Looks like ARR is the one who has sung the Sahana saaral song in the movie. And the Oru koodai sunlight song is completely different from what they have on the final audio CD.

said...

enakku oru forwarded email - ella pattayum vimarsanam panni vandhadhu..

Idhukku poi en tension aringa?? Nennga online la songs/movies download panradhillaya?

said...

//அடேங்கப்பா..சுனாமிக்கு அப்புறம் நடந்த பெரிய அசம்பாவிதம் மாதிரி சொல்லுறீங்க..கூகுள்-ல தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது.Take it easy. //

நாம கொடுக்க கூடாதுல்ல.. அப்புறம் ஏவிஎம் நஷ்டஈடு கேட்டா என்ன பன்றதுங்க ஜோ

said...

//உங்க சொந்த வாழ்வில் நீங்க ஜெயிச்சு வரதுக்கே அர்த்தம் இல்லாமப் போயிடும். :)))))) சுலபமா எடுத்துக்குங்க.//

ஒருத்தன் கஷ்டப்பட்டு உழைக்க, அடுத்தவங்க இந்த மாதிரி ஈசியா வெளியிட்டா எப்படிங்க மேடம்.. அது தான்..

said...

//adhey pathi oru allasal illaiye? //

Nalla irukungka, amar

said...

//ஒரு கூடை சன் லைட் ஒரு கூடை மூன் லைட பாடல் பற்றிய செய்தி பாடல் வரிகளோடு இன்று குமுதத்தில் வந்துள்ளது. //

ஆனால் சற்று வித்தியாசம் இருக்கும் என்பது என் அபிப்பிராயம்

said...

/ And the Oru koodai sunlight song is completely different from what they have on the final audio CD.//

This is interesting news filbert

said...

//Idhukku poi en tension aringa?? Nennga online la songs/movies download panradhillaya? //

அப்படி இல்லைங்க பிரியா.. அவங்களே வெலியிட்டா பரவா இல்லை

said...

இப்படி ஆசை காட்டி மோசம் பண்ணுகிறிர்களே எவ்வளவு ஆசையோடு வந்தேன் சிவாஜி பாடல் கிடைக்குதென்று

said...

இந்த பாடல்கள் எல்லாமே சிவாஜியின் பாடல்களாகவே தோணுது! ஏற்கனவே officiala ரிலீஸ் செய்த சிவாஜி பாடல்களின் பெயர்களுக்கு இது ஒத்துபோகுதே!

said...

mm.. ithu original paadalgal thaan kaarthi! enna panna! namma thalai ezhuthu! ippadi paathu amaiyudhu thalaivarukku!

Naatta eathina unna emathuven said...

Karuppu panathula padam edukkiravanunkalukaaga romba feel pannureenka.

Anonymous said...

சுமாரான பாடல்க்ள்தான்..

படமும் சகிக்காது போல இருக்கு..

said...

Thala,

chennai-la shivaji pada 40min DVD Rs.50 ku vikkiraanga. pakka digital print. ulagam enga poguthune theriyala :(

said...

இங்கே போய் பாருங்கள்

http://maruthanayagam.blogspot.com/2007/03/blog-post_31.html