Sunday, March 11, 2007

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் - ஒரு பார்வை

டி.ஆரை பற்றி ஏகப்பட்ட நகைச்சுவை பதிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அவர் கதாநாயகனாக இப்படி எல்லாம் நடிக்க வேண்டுமா.. அதற்கு பதில் ஒரு காலத்தில் மற்றவர்களின் படங்களுக்கு எல்லாம் இசையமைத்தாரே.. அது போல இப்போது செய்யலாமே, என்று வீராசாமி வருவதற்கு முன்னால் நான் நினைத்ததுண்டு. ஆனால் வீராசாமி என்னுடைய அந்த ஆசையிலும் ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுவிட்டது. ஒரு பாடல் கூட அவரின் பழைய சுறுசுறுப்பில் இல்லை. இசையும் ஏதோ புதுசாய் வந்தவரின் கைவண்ணம் போல இருந்தது. என் ஆசை மைதிலியும், ஒரு தாயின் சபதமும் தந்த பாடல்கள், இன்று கேட்டாலும் கால்களை பூமியில் பதித்து நம்மை ஆடவைக்கும் வல்லமை கொண்டது.

ஒரு வேளை சினிமா உலகில் எல்லோருக்கும் ஒரு பருவகாலம் இருக்கிறதோ.. பாலசந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் எடுக்கின்ற படங்கள் கூட, இன்றைய காலங்களில் தியேட்டர்களில் ஓடுவதில்லை. பழைய இயக்குநர்கள் இது மாதிரி புதியதாக படம் எடுக்க நினைத்து எடுத்த படம் எல்லாம் அந்து நைந்த துணியானது தான் மிச்சம். ரஜினிக்கும் கமலுக்கும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த SP முத்துராமன் கடைசியாக எடுத்த படமான பாண்டியன், ரஜினியின் தோல்விப்படங்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.

டி.ராஜேந்தரை எனக்கு இசையின் வழியாக கொஞ்சம் பிடிக்கும். அந்த காலத்தில் தமிழ் திரை உலகில் மெனக்கட்டு நல்ல வித்தியாசமான இசைத் தொகுப்புகளை கொடுத்தவர். உண்மையில் நல்ல சங்கீத புலமை கொண்டவர். டி.ஆரின் தமிழ் சுவை கொண்ட பாடல் வரிகளும் மிகவும் பிரசித்தம். மைதிலி என் காதலி படத்தில் வரும் ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் என்னும் பாடலின் வரிகள் சாம்பிளுக்காக...

தடாகத்தில் மீன்ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ...


இதை கண்ட
வேகத்தில்
பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான்
உன் கண்களோ..

இந்த பாடல் அதே படத்தில் மயில் வந்து மாட்டிகிட்ட பாதையிலே என்னும் பாடலின் சில வரிகள்..

மதம் கொண்ட
யானையின் பாதத்தில்
சேனைகள்
சிதைவதை நான்
நியாயம் என்பேன்..

இதம் சிந்தும்
பாவையின் பார்வையில்
காளையர்
சிதைவதை நான்
மாயம் என்பேன்..

இதில் வரும் வார்த்தை விளையாட்டுக்களையும் அவரின் கற்பனை சக்தியையும் நீங்கள் உணரலாம். இதெல்லாம் வெறும் உதாரணங்கள் தான். இன்னும் மற்ற பாடல்களை கேட்டால் நீங்கள் உணரலாம். அதுவும் ஒவ்வொரு பாடல்களிலும் வரும் சின்ன சின்ன இசை ஜெர்க்குகளும், ஓசைகளும் 'அட' போடவைக்கும். இப்போது அந்த ஞானமெல்லாம் எங்கே போயிற்று?

இவரைப் போல தயாரிப்பில் இருந்து இசை வரை எல்லா விஷயங்களையும் முயற்சி பண்ணியவர் K. பாக்யராஜ். இது நம்ம ஆளு, பவுனு பவுனு தான், ஆராரோ ஆரிராரோ போன்ற படங்களுக்கு சொந்த இசை அமைத்தார். ஆனால் டி.ஆரின் இசை அளவுக்கு பாக்யராஜின் இசை பிரமலமாகவில்லை என்று தான் சொல்லவேண்டும். டி.ஆரின் இசையை கேட்டாலே இது அவரின் இசை தான் என்று அடுத்துச் சொல்லும் அளவுக்கு ஒரு தனித்துவம் இருக்கும். சில பாடல்களுக்கு சொந்த குரல் வேறு கொடுத்திருக்கிறார். மைதிலி என் காதலி படத்தில் வரும் அட பொன்னான மனசே பூவான மனசே இவரின் குரல் தான். சில நாட்களுக்கு முன்னால் கவனித்த விஷயம், இது நம்ம ஆளு படத்தில் வரும் பச்சமலை சாமியொன்னு உச்சிமலை ஏறுது, பாக்யராஜ் சொந்த குரலில் பாடியது. (இந்த பாடல்களின் சுட்டிகளை விரைவாக கண்டுபிடிக்க உதவிய ஆனந்தின் புதிய கருவிக்கு ஒரு சலாம்)

டி.ராஜேந்தர் அவர்களே, மகன் த்ரிஷாவுடன் ஆட்டம் போடும் வேளையில் நீங்கள் மும்தாஜ் (தொடாமல் நடித்தாலும்) கூட டூயட் தேவையா? உங்கள் படங்களை எடுத்தவுடன் நீங்கள் ஒருமுறையாவது பார்ப்பதுண்டு.. வீராசாமி படத்தை பார்க்க கலைஞரை அழைத்து வந்து படத்தை போட்டு காண்பித்தீர்களாமே.. அவரும் படத்தை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் வெளியேறிவிட்டார் போல..

அட! யார் என்ன சொன்னாலும் அடுத்த படத்திற்கு நீங்கள் ரெடியாகி விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். தமிழ்நாடு தங்காதப்பா சாமி! ஏதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்றேன்..

நண்பர்களே.. வந்தது வந்துட்டீங்க.. டி.ராஜேந்தர் வெளிப்படத்திற்கு இசையமைத்த படங்களின் பட்டியலை கொஞ்சம் சொல்லுங்க.. (வெளிப்படம் என்றால் இவர் இயக்காமல் இசை மட்டும் அமைத்த படங்கள். இவரின் இசையில் சிலப் படங்கள் மிகப் பெரும் வெற்றியை அடைந்தன.) இதுக்கு நமக்கு பதில் தெரியும்பா.. மாதுரி பாட்டை வைத்து கேட்ட கேள்விக்கு எனக்கு இன்னும் பதில் தெரியலை சாமிகளா!

75 பின்னூட்டங்கள்:

said...

mmm...ippo than paarthen indha posta...anyway karthik, nan indha vishyathula konjam weak, so nan porumaiya yosichu solren t.r. songs pathi..

Anonymous said...

pookalai parrikatherkal-suresh movie

another movie starts with poo..

said...

I like lot of T.Rajendar's songs.
"Naanum unthan uravai" is one of good songs from him.

said...

ராஜேந்தர்...விஜயராஜேந்தராக தன் தனித் தன்மை,திறமை தொலைத்து வெகுநாளாகிவிட்டதென்பது, என் தாழ்மையான அபிப்பிராயம்.

said...

நல்ல பதிவு கார்த்தி. ஒருதலை ராகம்,உயிருள்ளவரை உஷா, பூக்களை பறிக்காதீர்கள்னு நிறைய நல்ல பாடல்கள கொடுத்தவர். இப்போ தானே தன்னை அசிங்கபடுத்திகிட்டு இருக்காரு.

அதே மாதிரி ஆர்.வி உதயகுமாரும், முத்து மணி மாலை, இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய், என்னவென்று சொல்வதம்மானு நிறைய நல்ல பாட்டு எழுதியிருக்காரு. அவரும் இப்ப தரம் தாழ்ந்து போயிட்டாரு..

said...

attendance mattum sami!! :)

said...

/மாதுரி பாட்டை வைத்து கேட்ட கேள்விக்கு எனக்கு இன்னும் பதில் தெரியலை சாமிகளா!/

அதாம்பா பதில நாம சொல்லிட்டம்ல.

Anonymous said...

யாரும் தரம் தாழ்ந்து போகவில்லை. காலத்திற்கேற்ப அவர்களால் தங்களை மாற்றிக் கொள்ளமுடியவில்லை அல்லது ஈடு கொடுக்கமுடியவில்லை. இதே வீரசாமி பாடல்கள் ராஜேந்தரின் காலக்கட்டத்தில் வந்திருந்தால் ஒரு வேளை ஹிட் ஆகியிருக்கலாம். ஆனா இப்போ?

Anonymous said...

Pookal vidum thoothu
pookkalai parikkatheerkal
koolikkaran

said...

another movie starts with poo..
அது "பூ பூவா பூத்திருக்கு" என்ற பிரபு, சரிதா, அமலா, ராஜீவ் நடித்த படம், (நசுரீதீன் ஷா நடித்த மாசும் என்ற இந்தி படத்தின் தழுவல் என்று நினைக்கிறேன்)- நாகூர் இஸ்மாயில்

said...

attendence..

classukku poyiddu vanthu kelvikku pathil yosikkiren.. ;-)

Anonymous said...

நீங்க சொல்வதும் சரிதான் கார்த்திக்.ஒரு சில நாட்களுக்கு முன்னால் அவர் இசை அமைத்த பாடல்களைக் கேட்டேன்.இவ்வளவு திறமை இருக்கின்றதா என்று அசந்து போனேன்.

said...

கார்த்தி, நல்ல பதிவு இது. நான் முழுக்க முழுக்க ஒத்துபோகிறேன் உங்க கருத்தோடு. அவரின் "வாலிபம் என்பது ரானுவம் அதை அடக்கிட நினத்தால் கலவரம்" போன்ற வரி இப்போது வரும் அவர் பாடல்களில் இல்லை என்பதே உண்மை.

Anonymous said...

One more film - Mohan and Poornima nadichadhu.

Padal - Vizhigal medaiyam Parvai thiraigalam Julie I love you

padam peyar ninaivu varavillai.

with Love,
Usha Sankar.

Anonymous said...

இவரின் இசையமைப்பில் மோகன் நடித்த "கிளிஞ்சல்களை" மறக்க முடியுமா?

இவரின் பாடல் வரிகளும் அற்புதம்...

"படுக்கை விரித்துப் போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு"

__________________

கிணற்றுக்குள் வாழும் தவளையைப்போலே
மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி!

கண்கெட்டபின்னே சூரிய உதயம்
எந்தப் பக்கம் ஆனால் எனக்கென்ன போடி!

__________________

இன்னும் நிறைய சொல்லலாம்

அதெல்லாம் இவரின் பொற்காலம்

said...

க்ர்ர்ர்ர்ர்ர், இதான் ஆணி பிடுங்குற ஆராய்ச்சியின் விளைவா? நல்லா இருக்குப் போங்க! :P

Anonymous said...

TR tiramaisaali taan, aanal ippothu trend maari vittathu karthik ;-)

said...

/anyway karthik, nan indha vishyathula konjam weak, so nan porumaiya yosichu solren t.r. songs pathi.. //

said...

//pookalai parrikatherkal-suresh movie//

அனான், சரியான பதில்.. இன்னும் நிறைய படங்கள் இருக்கிறது. முயற்சி பண்ணி பாருங்களேன்

said...

//I like lot of T.Rajendar's songs.
"Naanum unthan uravai" is one of good songs from him.//

இந்த பாடல் எனக்கும் பிடித்தது சின்ன அம்மிணி.. மைதிலி என்னைக் காதலியின் அருமையான கிளைமாக்ஸ் பாடல்

said...

/விஜயராஜேந்தராக தன் தனித் தன்மை,திறமை தொலைத்து வெகுநாளாகிவிட்டதென்பது, என் தாழ்மையான அபிப்பிராயம்.//

தங்கள் கூற்று சரியே யோகன்

said...

/ஆர்.வி உதயகுமாரும், முத்து மணி மாலை, இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய், என்னவென்று சொல்வதம்மானு நிறைய நல்ல பாட்டு எழுதியிருக்காரு. அவரும் இப்ப தரம் தாழ்ந்து போயிட்டாரு.. //

ஆமாம் மணிகண்டன்.. ஆர்.வி.உதயகுமார் நல்ல பாடலாசிரியராக இருந்தவர். நிறைய படங்களுக்கு (வெளிப்படங்களுக்கு கூட, உதாரணம் சொக்கத் தங்கம்) பாடல் எழுதியவர். தன்னுடைய படங்களுக்கு தானே எழுதி வந்தவர், ஒரிரு பாடல்களைத் தவிர.

ஆனால் முத்துமணி மாலை பாடல் கவிஞர் வாலி எழுதியது என்று நினைக்கிறேன்

said...

//attendance mattum sami!! //

நல்ல வேளை லீவ் லெட்டர் கொடுக்கலையே, பொற்கொடி! :-)

said...

/அதாம்பா பதில நாம சொல்லிட்டம்ல.
//
அதுவும் சரி தான், கஸ்தூரி

said...

//இதே வீரசாமி பாடல்கள் ராஜேந்தரின் காலக்கட்டத்தில் வந்திருந்தால் ஒரு வேளை ஹிட் ஆகியிருக்கலாம்//

எனக்கு இதில் உடன்பாடு இல்லை அனான்.. அந்த அளவுக்கு பாடல்கள் மோசம் வீராசாமியில்

said...

/Pookal vidum thoothu
pookkalai parikkatheerkal
koolikkaran //

மூன்றும் சரியான பதில், அனான்..

உங்கள் பேரையும் சொல்லியிருக்கலாமே அனான்

said...

//அது "பூ பூவா பூத்திருக்கு" என்ற பிரபு, சரிதா, அமலா, ராஜீவ் நடித்த படம்,//

கரெக்ட் கரெக்ட் இஸ்மாயில்

said...

//classukku poyiddu vanthu kelvikku pathil yosikkiren//

யோசிங்க மை பிரண்ட்

said...

//ஒரு சில நாட்களுக்கு முன்னால் அவர் இசை அமைத்த பாடல்களைக் கேட்டேன்.இவ்வளவு திறமை இருக்கின்றதா என்று அசந்து போனேன்//

உண்மை தான் துர்கா, அசந்து போற அளவுக்கு திறமை உள்ளவர் தான்.. இப்போ அசந்து போய்விட்டார்னு நினைக்கிறேன் :-)

said...

//தமிழ்நாடு தங்காதப்பா சாமி! ஏதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்றேன்..
//
உண்மை. அது தாங்காதப்பா ரைட்டா?
ஏதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்றேன்.. :p

அந்த ரிலே கவிதை அறிவிப்புல டிரீம்ஸ் லிங்கும் என் பக்கத்துக்கே போகுது. correct it.

என்ன இதேல்லாம் கவனிக்கறது இல்லையா? தகவல் தொடர்புதுறை அமைச்சகம் தான் நோட்டீஸ் விடனுமா?

said...

Correct soneenga. Infact TR isai amaitha padangalil, I like "Pookkalai parikatheenga". Nice bunch of songs. And appo ellam all of TR's movies were hits. But I think now he has become desperate to gain the old fame and started doing comedy things.

Anonymous said...

Dear Karthi,

Mthumani maalai padal patri,
ஆனால் முத்துமணி மாலை பாடல் கவிஞர் வாலி எழுதியது என்று நினைக்கிறேன்

Udhayakumarin oru tv interview vil avar solli keten - IR ai patri sollum podhu,

"Amdha situation ku enru IR tune pottar. Enaku appodhu pidithu ok sonnen.Anal piragu pidikavillai.IR idam marubadiyum veru tune pottu thara kettu konden. IR um pottu koduthar.

Naan udanae lyric ezhudhinen - MUTHU MANAI MAALAI ' enru... Udhaya kumar sonnar.

So Muthumanai maalai by Udhayakumar.I believe that Udhya Kumar told about this song .

With Love,
Usha Sankar.

said...

எண்பதுகளின் துவக்கத்தில் வந்த சில படங்களில் அவரது இசை அருமையாக இருக்கும். உதாரணமாக கிளிஞ்சல்கள்.

said...

என்ன தல வீக் எண்டுக்கு போய்டு வர சொல்லோ ரெண்டு போஸ்ட் போட்டுடீங்க :-)

said...

அது ஒன்னியும் இல்ல நைனா...பரணி பிளாக்க கண்டுகினு வந்த எபக்ட்டு :-)

said...

நீங்க சொல்றது சரிதான்...ராஜேந்தரின் பழைய பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்...இப்பொ எல்லாம் சரக்கு தீந்து போச்சு...அடக்கி வாசிக்கறத விட்டுட்டு எதுக்கு தமிழக மக்கள டார்ச்சர் பண்ணிட்டு இருக்காருனு தெரியல :-)

said...

ரயில் பயணங்களில் T.R படமா...அதுல கூட பாட்டு எல்லாம் நல்லா இருக்குமே...

said...

//என்ன இதேல்லாம் கவனிக்கறது இல்லையா? தகவல் தொடர்புதுறை அமைச்சகம் தான் நோட்டீஸ் விடனுமா//

இத தவிர தகவல் தொடர்பு துறை என்ன கலக்டர் உத்தியோகமா பாக்குது :-)

said...

ஒரு தலை ராகம், ராகம் தேடும் பல்லவி...

(ஹி..ஹி..எல்லாம் ராகா.காம் உபயம் தான்) :-)

said...

thala ennadhaa karadiya kindal seidhaalum T.R tamiz varigal ellaam aroudhaamaa irukkum. his creations those early days were simply superb. he has great talents like mucis, lyrics etc., but moonja kaati nadichu dhaan uyir edupaaru

his ever lasting numbers
1. idhu kuzadhai paadum thaalaatu
2. vaigaikarai kaaree nillu
3. naanum undhan uravai

ellam semma kalakkals...innum evvalavo SPB songs with TR sollalaam.

said...

ippa thaa post'a paarthen

attendance naaalaiku comments..

btw, naanum relay'va mudichiten...

kavidha list'la adhu varudhungala?

Anonymous said...

Digress:

Bhagyaraj, from what I have read, is not musically sound, in the technical aspect. He just hums tunes and his assistants write notes out of them. I doubt if the orchestration is his own work. Although he may take credit in titles, it doesn't seem correct to call him music director.

On the other hand, TR learned music. And yes, his music from the earlier days was amazing. But with fame comes contempt/ego. I guess, he thinks everything he does will be devoured by his millions(where are they?) of fans.

-kajan

said...

All in all alaguraja - TR
Avarukku poranthatho little super star
Familiye full'a verum bear
avara pathi thappa pesina keeshiduvar daar

said...

மாம்ஸ்,

நீ சொன்னப்புல டி.ஆர், மிக சிறந்த திறமைசாலி என்பதில் சந்தேகம் இல்லை. அவரின் ஒவ்வொரு படங்களுக்கு அற்புதமான படம் தான்.(20 நூற்றாண்டில்). அந்த சமயத்துக்கு ஏற்ற படம். அது எல்லாம் இப்ப வேலைக்கு ஆகாது.

எப்படி எம்.எஸ் இசை, கலைஞர் வசனம், பாரதிராஜா டைரக்ஷன், மோகன் மைக் எல்லாம் இப்ப வேலைக்கு ஆகலையோ அது போல தான் அவரும். இத அவரு புரிஞ்சுக்கனும், அதை விட்டுட்டு ராஜா, ரஜினி, மணிரத்னம் கூட தன்னை கம்பெர் பண்ணிக்கிட்டு திரிச்சா ஏற்கனவே எடுத்த பெயர் நாஸ்தி ஆகும் என்பது தான் உண்மை.

said...

இசையமைப்பாளர் என்ற வகையில் அவரின் பழைய பாடல்கள் என்று இனிமையானவை தான், அதிலும் ஒரு தலை ராகம், மைதிலி என்னை காதலி, இழவு காத்த கிளி இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

தட்டி பார்த்தேன் குண்டாங்கச்சி... இதை யாரால் மறக்க முடியும் சொல்லுங்க

said...

adada... TR mela ivlo mathipa ungalukku?

said...

enga appakkum TR na romba pidikkum... namakellam TR na aagathu!

said...

neenga sonna padalgal ellam arumaiyaana padalgal..
But
Great men are not those who do Great deeds once. But those who can repeat it! enna sollareenga?

said...

aama ippo fifty A?

said...

illana ithulla 50!

said...

/நான் முழுக்க முழுக்க ஒத்துபோகிறேன் உங்க கருத்தோடு. அவரின் "வாலிபம் என்பது ரானுவம் அதை அடக்கிட நினத்தால் கலவரம்" போன்ற வரி இப்போது வரும் அவர் பாடல்களில் இல்லை என்பதே உண்மை.
//

வாங்க அபி அப்பா.. நம்ம கருத்தோடு ஒத்துப் போகிற ஒரு ஆள் கிடச்சது சந்தோசம் தான்
:-)

said...

//padam peyar ninaivu varavillai.//

அந்த படத்தின் பேர் கிளிஞ்சல்கள், உஷா

said...

//அதெல்லாம் இவரின் பொற்காலம் //

நமக்கும் தான் எதிர்த்துகள்

said...

//இதான் ஆணி பிடுங்குற ஆராய்ச்சியின் விளைவா//

ஆணி புடுங்கினதுல தான் இப்படி மேடம்

said...

//TR tiramaisaali taan, aanal ippothu trend maari vittathu karthik//

கரெக்ட் தான் ஹனிஃப் :-)

said...

/என்ன இதேல்லாம் கவனிக்கறது இல்லையா? தகவல் தொடர்புதுறை அமைச்சகம் தான் நோட்டீஸ் விடனுமா? //

இதெல்லாம் புது அமைச்சர் எப்படி வேலை செய்றார்னு பாக்குறதுப்பா அம்பி..

நல்லாத்தான் வேலை செய்ற :-)

said...

/But I think now he has become desperate to gain the old fame and started doing comedy things. //

ஆமா ரவி.. அந்த புகழை கெடுக்குற மாதிரி தான் இப்போ நடந்துக்கிறார்

said...

//So Muthumanai maalai by Udhayakumar.I believe that Udhya Kumar told about this song .
//

ஓ..எனக்கு தெரிந்து வாலி என்று சொன்னேன்.. ஆர்.வி.உதயகுமார் தான் எழுதினார் என்றால், மக்களே, தவறான தகவல் தந்தமைக்கு மன்னிக்கவும் :-)

நன்றிங்க உஷா

said...

/எண்பதுகளின் துவக்கத்தில் வந்த சில படங்களில் அவரது இசை அருமையாக இருக்கும். உதாரணமாக கிளிஞ்சல்கள். //

ஆமாங்க பிரகாஷ்

said...

//என்ன தல வீக் எண்டுக்கு போய்டு வர சொல்லோ ரெண்டு போஸ்ட் போட்டுடீங்க//

போன வாரம் ரொம்ப குறைவான பதிவுகள் அது தான் நாட்டாமை

//அது ஒன்னியும் இல்ல நைனா...பரணி பிளாக்க கண்டுகினு வந்த எபக்ட்டு //

ஓ..புரியுது புரியுதுங்க நாட்டாமை

said...

//அடக்கி வாசிக்கறத விட்டுட்டு எதுக்கு தமிழக மக்கள டார்ச்சர் பண்ணிட்டு இருக்காருனு தெரியல //

அது தான் தெரியல நாட்டாமை.. ஒரு வேளை வடிவெலு இடத்தை பிடிக்கலாம்னு ஒரு நினைப்பா

said...

//ரயில் பயணங்களில் T.R படமா...அதுல கூட பாட்டு எல்லாம் நல்லா இருக்குமே... //

ஆமாங்க நாட்டமை.. அது டி.ஆர் படம் தான்

said...

//இத தவிர தகவல் தொடர்பு துறை என்ன கலக்டர் உத்தியோகமா பாக்குது//

அப்படி போடுங்க நாட்டாமை முதல்வரே..

said...

//ஹி..ஹி..எல்லாம் ராகா.காம் உபயம் தான்) //

ஆனா ரெண்டு படமும் சரி தான் நாட்டாமை..

said...

//ellam semma kalakkals...innum evvalavo SPB songs with TR sollalaam. //

கலக்கல் லிஸ்ட் கிட்டு மாமு

said...

//naanum relay'va mudichiten...//

vanthu pakkurenGka, Gops :-)

said...

இன்றளவும் டி.ஆரின் பாடல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

டி.ஆரின் டண்டனக்கா என்று எம்பி3 சக்கை போடு போடுகிறது.

நான் வாங்கிய டி.ஆரின் டண்டனக்கா சி.டி யில் ஏதாவது படம் தேரினால் அடுத்த பின்னூட்டத்தில் தெரியப்படுத்துகிறேன்.

சமீபத்தில் அவர் இசை அமைத்த ஒரு படம் பன்னாரி அம்மன்.

said...

//. I guess, he thinks everything he does will be devoured by his millions(where are they?) of fans.//

காஜன், இது டி.ஆருக்கு இலையுதிர் காலம் என்றுதான் நினைக்கிறேன்

said...

/All in all alaguraja - TR
Avarukku poranthatho little super star
Familiye full'a verum bear
avara pathi thappa pesina keeshiduvar daar //

KK, என்ன இது ஒரு புது டி.ஆர் ஆகிட்டீங்க :-)

said...

//அதை விட்டுட்டு ராஜா, ரஜினி, மணிரத்னம் கூட தன்னை கம்பெர் பண்ணிக்கிட்டு திரிச்சா ஏற்கனவே எடுத்த பெயர் நாஸ்தி ஆகும் என்பது தான் உண்மை. //

சூப்பரா சொன்னப்பா மாப்ஸ்

said...

//தட்டி பார்த்தேன் குண்டாங்கச்சி... இதை யாரால் மறக்க முடியும் சொல்லுங்க//

நம்மளை எல்லாம் தட்டிப் பார்த்த பாடலாச்சே அது மாப்ஸ்

said...

/TR mela ivlo mathipa ungalukku//

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை நல்லாத்தான் இருந்தார் :-)

said...

/enga appakkum TR na romba pidikkum... namakellam TR na aagathu! //

அந்த காலத்துல நல்லாத் தான் இசை அமைச்சார் ட்ரீம்ஸ்.. இன்னும் நிறைய பேர் அவருக்கு ரசிகர்கள் தான்

said...

//Great men are not those who do Great deeds once. But those who can repeat it! enna sollareenga? //

athuvum sari thaan, Dreamzz

said...

//illana ithulla 50! //

appadiyE kaiyai mEla thookkunGka..

fifty pOttutteenGka..