Friday, March 30, 2007

கதை சொல்ற கதையும், பார்த்தாலே பரவசமும்

இத்தனை கதை சொல்றீங்களே.. எப்படி இப்படி உங்களால சூப்பரா கதை சொல்லமுடியுது மாம்ஸ்.. அந்த கதையை கொஞ்சம் சொல்லக்கூடாதான்னு என் மாப்ள 'கர்ண பரம்பரை' பரணி கேட்க, மாப்ள கேட்டு நாம என்னிக்காவது இல்லைன்னு சொல்லியிருக்கோமா.. அது தான் அதைப் பத்தி எழுதலாமேன்னு, ஆரம்பிக்கிறேன், நான் கதை சொல்ற கதையை..

நமக்கு இப்ப மட்டுமில்ல.. சின்ன வயசுல இருந்து இது ஒரு பொழப்பாத் தான் இருந்தது.. அதுவும் நான் கதை சொல்ல ஆரம்பிச்சா, முன்னாடி சின்னதா ஒரு கூட்டமே உருவாகிடும்.. என் நாடு, என் மக்கள்னு நம்ம முருகன் மாதிரி அது ஒரு தனி உலகம்.. என் தெருல இருக்க வாண்டுகள் எல்லாம் நைட் ஏழு மணிக்கு மேல நம்ம வீட்டுக்கு முன்னால கூடிடும்.. ராஜா காலத்து (ஒரு மானை பார்த்து இளவரசன் நந்தகுமாரன் வில்லால் குறி பார்க்கிறான்.. வில்வித்தையில் தேர்ந்தவன்.. நூறு பறவை வானத்துல போனாலும் சொல்ற பறவையை விழவைக்கிற வித்தையாளன்.. அவன் குறி வைப்பது தெரியாமல் மான் மேய்ந்துகொண்டிருக்கிறது.. இவன் அம்பை எய்ய, அது காற்றை கிழித்துகொண்டு மானை நோக்கி பாய்கிறது.. அந்த அம்பு மானை நெருங்க, மான் எதைக் கண்டோ பயந்து துள்ளி ஓடுகிறது.. அப்போது தான் மானிற்கு பின்னாடி இருந்த முனிவர் இவன் கண்களுக்கு தெரிகிறார்.. இவன் அதிர்ச்சியில் இருக்க, விட்ட அம்பு அவர் இதயத்தை துளைக்கிறது.. இது உபாலதேசத்தில் ஒரு கபாலம்னு நான் அவங்களுக்கு சொன்ன கதையில் ஒரு பகுதி)கதையிலிருந்து எதிர்கால விஞ்ஞான உலகம் வரை நாம அளக்குறது தான் வேலை.. இதுக்காக நாம எதும் தனியா குத்த வச்சு யோசிக்கிறதில்லை.. போறபோக்குல சரளமா வரும்.. நான் கதை சொல்றதைப் பாத்து பக்கத்து வீட்டு பாட்டி, கதை கேட்ட நாயை செருப்பால அடிக்கனும் ஒரு பழமொழியை வேற சொல்லிட்டு போகும்..

நான் என் ஐயா கிட்ட கதைகேட்டு வளர்ந்தவன்.. அவர் கதை சொல்றதுல நம்மளை விட பெரியவர்.. ஒரு தடவை ஒரு கதையை கிட்டதட்ட இரண்டு மாதம், தினமும் அரை மணிநேரமாக சொன்னவர்.. வாய்வழிகதைல கூட அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் வச்சு கலக்கியவர்.. அதுல இருந்து தான் கொஞ்ச நஞ்சம் நமக்கு வந்ததுன்னு நினைக்கிறேன்.. ஆனா அவர் சுதந்திர போராட்ட காலத்து உண்மைகதைகளை சொன்னப்ப எனக்கு நம்ம நாட்டு மேல அப்படி ஒரு மரியதை உருவாச்சு. அவ்வளவு கஷ்டப்பட்டதை இப்போ எப்படி பயன்படுத்துறாங்கன்னு எனக்கு கோபம் கூட வரும்..

இப்படித்தான் நான் எம்.சி.ஏ படிக்கிறப்போ ஒரு கதை நடந்தது.. அப்போ பார்த்தாலே பரவசம் படம் ரிலீஸ் ஆன சமயம்.. நான் கம்பியூட்டர் லேப்ல இருந்தேன்.. லேப் மூணு மணி நேரம் இருக்கும். நாம என்னிக்கு லேப்ல புரோகிராம் போட்டிருக்கோம்.. தினமும் ஏதாவது கூத்து தான் போடுவோம்.. அங்க தொட்டு இங்க தொட்டு ஒரு நாள் அஸிஸ்டண்ட் புரபசர் தலையிலே கையை வச்சாச்சு.. சக்க போரடிக்க, மெதுவா சினிமா டாபிக்கை எடுத்துவிட்டேன்.. அவங்க அப்படியே மெல்ல நம்ம கதையை கேட்க ஆரம்பிச்சாங்கா.. நான் பார்த்தாலே பரவசம் படத்தோட கதையை சொல்ல ஆரம்பிச்சேன்.. எனக்கு உண்டான கெட்ட பழக்க என்னென்னா, படத்தோட கதையை சொல்ல ஆரம்பிச்சா, கேமரா ஆங்கிளோட தான் சொல்வேன்.. அப்படி லெப்ட்ல, மேலயிருந்து மாதவனை ஃபோகஸ் பண்ற கேமரா, மெல்ல சிம்ரனை முகபாவத்தையும் கவர் பண்ணும்னு கதை சொல்ல ஆரம்பிச்சேன்.. மூணு மணிநேர படத்தோட கதையை இரண்டு மணி நேரம் சொன்ன ஆள் நானாத் தான் இருப்பேன்.. அவங்களும் குறுக்க குறுக்க கேள்வியெல்லாம் கேப்பாங்க.. மேடம்..நீங்க பாடம் எடுக்குறப்போ நான் இப்படி கேள்வியா கேட்பேன்னு சொல்லி அவங்க வாயை வேற அடச்சிடுவேன்.. அப்பவும் கேட்டா பதிலை சொல்லிபுட்டு, அடுத்த தடவை கிளாஸ்ல நான் கேள்வி கேக்கப்போறதா செல்ல மிரட்டல் வேற விடுவேன்.. நாம இரண்டு மணி நேரம் சொன்ன கதை கேட்டுட்டு, கட்டாயம் படத்தை பாக்கபோறதா வேற சொன்னாங்க.. இதோட விட்டிருந்தா அவங்க சந்தோசமா இருந்திருப்பாங்கா.. என்கிட்ட கேட்கக்கூடாத கேள்வியை வேற கேட்டுட்டாங்க.. இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்த அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டாங்க.. நான் என் முகத்தை அப்பாவியா வச்சுகிட்டு, நான் இன்னும் படமே பாக்கலைனு சொன்னேன் பாருங்க, மொத்த லேப் அதிர்ற மாதிரி என் நண்பர்கள் சிரிச்சாங்க.. அதுக்கு பிறகு என்னிக்குமே கதை சொல்லு கார்த்தின்னு அவங்க என்கிட்ட கேட்டதில்ல..

இது இல்லாம, நாம முழிச்சிருக்க நேரம் விடுற கதை போதாதுன்னு நமக்கு வர்ற கனவுகள் வேற முழுநீள கதைகள் தான்.. கனவெல்லாம் சின்னதா தான் வரும்னு சொல்வாங்க.. நமக்கு மட்டும் வில்லன் நம்மளை துரத்துறதுல இருந்து, தப்பிக்கிற நேரத்துல ரெண்டு ஹிரோயின் கூட டூயட்டோட கனா வரும்.. ஆபீசுல டீ நேரத்துல நம்ம கனா கதையை கேக்கலைனா, என்ன இன்னைக்கு காபில சக்கரையே இல்லைன்னு மக்கள் கேப்பாங்கன்னா பாத்துக்கங்களேன்..

இப்படித்தான், ஒரு தடவை, என் அம்மாச்சி வீட்டு நிலத்துல கடலை போட்டிருந்தாங்க.. நான் அப்போ பத்தாவது முழு பரீட்சை லீவுல அவங்க வீட்டுக்கு போயிருந்த சமயம், கடலையை புடுங்கினாங்க.. நான் அங்க இருந்த எல்லாம் நாளும் காட்டுக்கு போயி, கடலை புடுங்க வந்தவங்களோட கடலை புடுங்குவேன்.. அப்போ அவங்களுக்கு தினமும் ஏதாவது கதை சொல்வேன்.. அவங்களுக்கும் வேலை அலுப்பு தெரியாம போகும்.. அதுக்கு அடுத்த வருஷம், அதே ஆளுக வேலைக்கு வந்தப்ப, எங்க உங்க பேரன் வரலையா.. அவர் இருந்தா வேலை செய்ற அலுப்பே இருக்காதுன்னு என் அம்மாச்சிகிட்ட சொல்லி இருக்காங்க.. அப்புறமென்ன, என் அம்மாச்சி அதை அதுக்குபிறகு பத்து வருஷமா வர்றவங்க கிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க..

78 பின்னூட்டங்கள்:

Anonymous said...

இதுக்காக நாம எதும் தனியா குத்த வச்சு யோசிக்கிறதில்லை.. போறபோக்குல சரளமா வரும்..

Karthi,
ADhanala dhana UNGALODA PADHIVAI MOKKAI PADHIVU nu solla vidama interesta padika vaikaradhu. V.GOOD.

CHinna pasangaluku enna, ENGALUKUM IPPO KADHAI DHAN VIDAREENGA.NANGALUM CHINA PASANGA MADHIRI DHAN KETTUNDU IRUKOM.
he he he .
IDHU DHANAE KARTHI ODA SPECIAL....KEEP IT UP Karthi....

With Love,
Usha Sankar.

said...

மீ ஃபர்ஸ்ட்டு... :-D

said...

போஸ்ட்டை படிச்சுட்டு வந்து கமேண்டு போடறேன்..

எத்தனை கமேண்டு போட்டாலும், மத்தவங்க கமேண்டுக்கு பதி போடுறதுல்ல உள்ள கிக்கு எதிலும் இல்லைங்க கார்த்தி.. :-)

Anonymous said...

SOOOOOOOOPERAPPU! :)

-Porkodi

said...

adukulla vandhutaanga MyFriend...ungalathaan poi thoonga sonnen illa :(

said...

//கேட்க, மாப்ள கேட்டு நாம என்னிக்காவது இல்லைன்னு சொல்லியிருக்கோமா..//...அஅவ்வ்வ்வ்வ்வ் :)

said...

porkodi...neengaluma :(

said...

// இது உபாலதேசத்தில் ஒரு கபாலம்னு நான் அவங்களுக்கு சொன்ன கதையில் ஒரு பகுதி//...appaye vaarthayila vilayaaduveengala???

said...

//நாம எதும் தனியா குத்த வச்சு யோசிக்கிறதில்லை.. போறபோக்குல சரளமா வரும்//...idhu unga posta paarthaale theriyudhu :)

said...

//அவர் கதை சொல்றதுல நம்மளை விட பெரியவர்.. ஒரு தடவை ஒரு கதையை கிட்டதட்ட இரண்டு மாதம், தினமும் அரை மணிநேரமாக சொன்னவர்.. வாய்வழிகதைல கூட அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் வச்சு கலக்கியவர்//...idha maadhiri vishayangal namma vaazhjayila missing :(

said...

//இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்த அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டாங்க.. நான் என் முகத்தை அப்பாவியா வச்சுகிட்டு, நான் இன்னும் படமே பாக்கலைனு சொன்னேன் பாருங்க,//

ROTFL :-) Chancae illa :D

said...

//எனக்கு உண்டான கெட்ட பழக்க என்னென்னா, படத்தோட கதையை சொல்ல ஆரம்பிச்சா, கேமரா ஆங்கிளோட தான் சொல்வேன்.. அப்படி லெப்ட்ல, மேலயிருந்து மாதவனை ஃபோகஸ் பண்ற கேமரா, மெல்ல சிம்ரனை முகபாவத்தையும் கவர் பண்ணும்னு கதை சொல்ல ஆரம்பிச்சேன்//...adangokka makka :)

said...

//ஆபீசுல டீ நேரத்துல நம்ம கனா கதையை கேக்கலைனா, என்ன இன்னைக்கு காபில சக்கரையே இல்லைன்னு மக்கள் கேப்பாங்கன்னா பாத்துக்கங்களேன்..//

Ippo dhaan puriyudhu nethu en neenga comment session galatala irundhu avlo supera 1 hr tea brk poneengannu :D

said...

//அப்புறமென்ன, என் அம்மாச்சி அதை அதுக்குபிறகு பத்து வருஷமா வர்றவங்க கிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க..//

Soooooooooooo sweet :D

said...

//அதுக்கு பிறகு என்னிக்குமே கதை சொல்லு கார்த்தின்னு அவங்க என்கிட்ட கேட்டதில்ல//....pinna unga kusumbuku alavillama pochi :)

said...

//என் அம்மாச்சி அதை அதுக்குபிறகு பத்து வருஷமா வர்றவங்க கிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க//...oor pakkam indha pazhakam iruku...oru vishayatha naama saaga varaikum vida maataanga :)

said...

unga kadhai sollum kadhaya super solli irukeenga maams...aduku oru nandriyai therivithu kondu...me escape :)

Anonymous said...

கார்த்திக் நான் பேச ஆரம்பிச்சலே எல்லாரும் ஓடிப் போயிருவாங்க.இதுல நான் எங்கே கதை சொல்லுறது :(

Anonymous said...

//கதை கேட்ட நாயை செருப்பால அடிக்கனும் ஒரு பழமொழியை வேற சொல்லிட்டு போகும்..//
அந்த பாட்டிக்கு பொறமையாக இருக்கும் அதான் அப்படி சொல்லிட்டு போய் இருக்கும் ;)

Anonymous said...

கார்த்திக் நான் படிச்சு படிச்சு களைச்சு போனால் உங்க கிட்ட கதை கேட்க வரட்டா?படிச்ச அலுப்பு தெரியமா இருக்கும் பாருங்க :)))

said...

//
நான் அப்போ பத்தாவது முழு பரீட்சை லீவுல அவங்க வீட்டுக்கு போயிருந்த சமயம், கடலையை புடுங்கினாங்க.. நான் அங்க இருந்த எல்லாம் நாளும் காட்டுக்கு போயி, கடலை புடுங்க வந்தவங்களோட கடலை புடுங்குவேன்.. அப்போ அவங்களுக்கு தினமும் ஏதாவது கதை சொல்வேன்
//
கடலை சாகுபடி அப்போதே ஆரம்பித்தாயிற்றா ? நல்ல விளைச்சலா ?
:-)))

said...

//Bharani said...
adukulla vandhutaanga MyFriend...ungalathaan poi thoonga sonnen illa :(
//

ஓ! இதுக்குதான் என்னை போய் தூங்உங்க தூங்குங்கன்னு விரட்டிக் கிட்டு இருந்தீங்களா? நான் அசரவில்லை. ;-)

said...

:) Konja posts miss paniten pola.. Kind of busy now.. Missing 2 check any blogs :( Will check the old ones soon! :)

Ammachi elarumey ipdi thana? ;) Hehehe.

said...

கார்த்தி..கதை எழுதுவதற்கு ஒரு பொறி வரணும். அது உங்க மனசை நெருப்பா எரிக்கணும். இதை யாரிடமாவது சொல்லி அழத் துடிக்கணும். அப்பத்தான் அந்தக் கதையில் உயிர் வரும். அப்படி ஒரு கதையை மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன்.உங்க க்மேண்ட் அனுப்புங்க
http://blossomingspace.blogspot.com

ceejay

said...

அப்ப கடலையில் நீர் பெரிய மன்னர் அப்படி தானே மாம்ஸ்....

said...

நானும் எங்க தாத்தாக்கிட்ட நிறைய கதை கேட்டு இருக்கேன் மாம்ஸ்.

நமக்கும் இந்த கதை சொல்லுற பழக்கம் உண்டு, நம்ம தோஸ்துக்கள் எல்லாம் கதை நம்மக்கிட்ட வழக்கமா கேட்பாங்க....

சில சமயம் உண்மையில் நடந்த கதையை கொஞ்சம் நான் உல்டா பண்ணி சொல்லுறப்ப செம ரணகளமா இருக்கும்...

Anonymous said...

Giramiya manathudan eshutureenga karthik ;-)

said...

Nice post!!
// மேடம்..நீங்க பாடம் எடுக்குறப்போ நான் இப்படி கேள்வியா கேட்பேன்னு சொல்லி அவங்க வாயை வேற அடச்சிடுவேன்.. //
LOL :)
//

// இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்த அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டாங்க.. நான் என் முகத்தை அப்பாவியா வச்சுகிட்டு, நான் இன்னும் படமே பாக்கலைனு சொன்னேன் //
ROTFL :)
me too have an exp like this :)

said...

ஆஹா! சூப்பர கதை சொல்லுவிங்க போல!

said...

கதை சொல்லுவது கூட ஒரு கலை தான்!

said...

// நமக்கு மட்டும் வில்லன் நம்மளை துரத்துறதுல இருந்து, தப்பிக்கிற நேரத்துல ரெண்டு ஹிரோயின் கூட டூயட்டோட கனா வரும்//

உங்களுக்காச்சும் பரவாயில்லை. எனக்கு ஒரு நாள் ஒரு கனவு வந்துமுடியும். அடுத்த நாள் விட்ட இடத்துல இர்ர்ந்து continue ஆகும்!
சீரியல் மாதிரி!

said...

தல.. பதிவுலகத்துல என்ன நடக்குதுனே புரியலப்பா... கமென்டுக்கு பதிவு போடறார் ஒருத்தர்.. இஙக ஒருத்தர் கதைப்பது எப்படினு கதைக்கறார்.. கலக்கறீங்க கார்த்தி.. வாழ்துக்கள்

said...

//மேடம்..நீங்க பாடம் எடுக்குறப்போ நான் இப்படி கேள்வியா கேட்பேன்னு சொல்லி அவங்க வாயை வேற அடச்சிடுவேன்.. //

ROTFL :))

//இந்த படத்தை எந்த தியேட்டர்ல பார்த்த அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டாங்க.. நான் என் முகத்தை அப்பாவியா வச்சுகிட்டு, நான் இன்னும் படமே பாக்கலைனு சொன்னேன் பாருங்க//

சான்ஸே இல்ல.. அதுக்கப்புறம், அந்த லேப்ல பாஸ் பண்ணீங்களா?? :))

said...

//ஆபீசுல டீ நேரத்துல நம்ம கனா கதையை கேக்கலைனா, என்ன இன்னைக்கு காபில சக்கரையே இல்லைன்னு மக்கள் கேப்பாங்கன்னா பாத்துக்கங்களேன்..
//

மக்களே,

ஆணி பிடிங்கி
சளைத்தாலும்
கடலை பிடுங்கி
களைத்தாலும்

கார்த்தியின்
கதை கூறும்
நேர்த்தியில்
கவலை மறந்து
களிப்புறுவீர்..!!!

கதா(தை)யுதம் கொண்டு
களைப்பை
களைந்தெடுக்கும்
கார்த்தியின் கீர்த்தியோங்க
போற்றுவீர்..!!!

படம் பார்த்து
கதைக்க
புவியில் பலர் இருக்க
கதைத்து
படம் காட்டும்
கார்த்தியின் கொற்றம் ஓங்க
வாழ்த்துவீர்.. !!! :))

சூப்பரா கதை சொன்ன எங்க தலைக்கு ஒரு ஓ போடுங்கப்பா..!!!

said...

தலைவா...
ரீல் நல்லா சுத்திவிங்க போல ;-))
கலக்கல் பதிவு தல

நம்ம பயபுள்ளைங்களுக்கு சினிமா கதை சொல்லறதுன்னா முத ஆளா நிப்பேன்.

said...

ஹிஹி.. நன்றிங்க உஷா.. எல்லாம் நீங்கள் தர்ற உற்சாகத்துல தான் :-)

said...

/மீ ஃபர்ஸ்ட்டு... :-D //

ஜஸ்ட்ல மிஸ்ஸ் ஆயிடுச்சே மை பிரண்ட்

said...

//போஸ்ட்டை படிச்சுட்டு வந்து கமேண்டு போடறேன்..

எத்தனை கமேண்டு போட்டாலும், மத்தவங்க கமேண்டுக்கு பதி போடுறதுல்ல உள்ள கிக்கு எதிலும் இல்லைங்க கார்த்தி.. :-) //

நீங்க சொல்றது சரிதான் மை பிரண்ட்

said...

/SOOOOOOOOPERAPPU! :)

-Porkodi

//

பொற்கொடி.. என்ன இது இப்ப எல்லாம் அனானி கமெண்ட்

said...

//adukulla vandhutaanga MyFriend...ungalathaan poi thoonga sonnen illa :(

//

பிளாக்ல எங்க போனாலும் மை பிரண்ட் மயம் தான் மப்ள

said...

/...அஅவ்வ்வ்வ்வ்வ்//

மாப்ள.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//...appaye vaarthayila vilayaaduveengala???
//

ஏதோ அப்பவே அமைஞ்ச வரம்னு நினைக்கிறேன் மாப்ள

said...

//...idhu unga posta paarthaale theriyudhu :)
//

மாப்ள.. நெசமாவேவா

said...

//...idha maadhiri vishayangal namma vaazhjayila missing //

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொடுப்பினை, மாப்ள

said...

//Ippo dhaan puriyudhu nethu en neenga comment session galatala irundhu avlo supera 1 hr tea brk poneengannu :D
//

ஹிஹிஹி.. அன்னைக்கு எல்லாம் ஃபெமிலி டே பேச்சுத் தான் G3

said...

/Soooooooooooo sweet :D//

இன்னமும் என் பேராண்டி ஆரம்பிச்சு அவங்க மத்தவங்க கிட்ட சொல்றது நினைவுல இருக்கு, G3

said...

//pinna unga kusumbuku alavillama pochi//

அதுக்கு பிறகு, அவங்க கிளாஸுல நாம என்ன சேஷ்டை பண்ணினாலும் கேள்வியே கிடையாது மாப்ள

said...

//oor pakkam indha pazhakam iruku...oru vishayatha naama saaga varaikum vida maataanga//

கரெக்ட் தான் மாப்ள.. அவங்கள பொறுத்தவரை நாம தான் ஹீரோ

said...

/unga kadhai sollum kadhaya super solli irukeenga maams...aduku oru nandriyai therivithu kondu...me escape //

இப்படி ஒரு போஸ்ட் போட ஐடியா கொடுத்ததுக்கு நான் தான் நன்றி சொல்லனும் மாப்ள

said...

/கார்த்திக் நான் பேச ஆரம்பிச்சலே எல்லாரும் ஓடிப் போயிருவாங்க.இதுல நான் எங்கே கதை சொல்லுறது//

பேசாதீங்க துர்கா.. கதை சொல்லுங்க..ஹிஹிஹி

said...

//அந்த பாட்டிக்கு பொறமையாக இருக்கும் அதான் அப்படி சொல்லிட்டு போய் இருக்கும் //

நானும் அப்படித் தான் நினச்சு விட்டுட்டேன், துர்கா

said...

//கார்த்திக் நான் படிச்சு படிச்சு களைச்சு போனால் உங்க கிட்ட கதை கேட்க வரட்டா?படிச்ச அலுப்பு தெரியமா இருக்கும் பாருங்க//

தைரியமாக வாங்க துர்கா..

said...

//கடலை சாகுபடி அப்போதே ஆரம்பித்தாயிற்றா ? நல்ல விளைச்சலா ?//

ஆமாங்க பாலராஜன்கீதா

said...

/ஓ! இதுக்குதான் என்னை போய் தூங்உங்க தூங்குங்கன்னு விரட்டிக் கிட்டு இருந்தீங்களா? நான் அசரவில்லை//

மை பிரண்ட், உங்களை யாராவது அசரவைக்க முடியுமா என்ன

said...

/:) Konja posts miss paniten pola.. Kind of busy now.. Missing 2 check any blogs :( Will check the old ones soon! :)

Ammachi elarumey ipdi thana? ;) Hehehe.

//

மெதுவா வந்து படிங்க பொன்னா.. நீங்க சொல்றது மாதிரி அம்மாச்சினாலே இப்படித் தான்

said...

/ அப்பத்தான் அந்தக் கதையில் உயிர் வரும். அப்படி ஒரு கதையை மொழிபெயர்த்து போட்டிருக்கிறேன்.//

கட்டாயம் வந்து படிக்கிறேன் சிஜே

said...

/அப்ப கடலையில் நீர் பெரிய மன்னர் அப்படி தானே மாம்ஸ்.... //

கல்லூரில நமக்கு பேரே அப்படித் தான் மாப்ஸ்

said...

/சில சமயம் உண்மையில் நடந்த கதையை கொஞ்சம் நான் உல்டா பண்ணி சொல்லுறப்ப செம ரணகளமா இருக்கும்...
//

இதுல தான் சுவாரஸ்யம் அதிகம் மாப்ஸ்

said...

/Giramiya manathudan eshutureenga karthik //

நன்றிங்க ஹனிஃப்

said...

/ROTFL :)
me too have an exp like this :)
//

ஓ.. நீங்க நம்ம ஆளா பத்மப்ரியா

said...

/உங்களுக்காச்சும் பரவாயில்லை. எனக்கு ஒரு நாள் ஒரு கனவு வந்துமுடியும். அடுத்த நாள் விட்ட இடத்துல இர்ர்ந்து continue ஆகும்!
சீரியல் மாதிரி! //

ஆஹா.. நம்மளை மிஞ்சிடுவீங்க போல ட்ரீம்ஸ்

said...

/தல.. பதிவுலகத்துல என்ன நடக்குதுனே புரியலப்பா... கமென்டுக்கு பதிவு போடறார் ஒருத்தர்.. இஙக ஒருத்தர் கதைப்பது எப்படினு கதைக்கறார்.. கலக்கறீங்க கார்த்தி.. வாழ்துக்கள் //

ஏதோ தினமும் நீங்க எல்லாம் இருக்கீங்க அப்படிங்கற நம்பிக்கைல பதிவை போடுறேங்க ACE

said...

//சான்ஸே இல்ல.. அதுக்கப்புறம், அந்த லேப்ல பாஸ் பண்ணீங்களா?? :)) //

பாஸ் பண்ணி விடாம இருப்பாங்களா.. இல்லைனா தான் நாம அடுத்த கதை சொல்வோம்ல

said...

//சூப்பரா கதை சொன்ன எங்க தலைக்கு ஒரு ஓ போடுங்கப்பா..!!! //

கவிதையெல்லாம் சொல்லி நம்ம கண்ணை கலங்க வச்சீட்டீங்க ACE.. உங்க பாசத்தை நினச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

நன்றிங்க ACE..

said...

//தலைவா...
ரீல் நல்லா சுத்திவிங்க போல ;-))
கலக்கல் பதிவு தல

நம்ம பயபுள்ளைங்களுக்கு சினிமா கதை சொல்லறதுன்னா முத ஆளா நிப்பேன்./

ஓ.. நீங்களும் நம்ம ஆளு தான கோபிநாத்

said...

Aaha enakku kadhai kaetkuradhuna remba pidikkum...
Enakkum kadhai sollu veengala karthik...Thinamum oru kadhai..

said...

//நான் இன்னும் படமே பாக்கலைனு சொன்னேன் பாருங்க//
இத நான் எதிர் பாக்கல!

said...

@ACE
//சூப்பரா கதை சொன்ன எங்க தலைக்கு ஒரு ஓ போடுங்கப்பா..//

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

இந்த ஓ போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

said...

//சின்ன வயசுல இருந்து இது ஒரு பொழப்பாத் தான் இருந்தது.. அதுவும் நான் கதை சொல்ல ஆரம்பிச்சா, முன்னாடி சின்னதா ஒரு கூட்டமே உருவாகிடும்..//

விளையும் பயிர்...னு அப்பவே அடிச்சு ஆடி இருக்கீங்க :-)

said...

// ஒரு தடவை ஒரு கதையை கிட்டதட்ட இரண்டு மாதம், தினமும் அரை மணிநேரமாக சொன்னவர்.. வாய்வழிகதைல கூட அந்த அளவுக்கு சஸ்பென்ஸ் வச்சு கலக்கியவர்.. //

அதான பார்த்தேன்...இது உங்க gene லயே இருக்கு போல இருக்கு :-)

said...

hi karthi.
enna idu ippadi runs score panreenga.. naan runs kanaku panrathukula neenga innum oru 15 runs score panreengale

said...

supera ezhuthi irukeenga.. engaluku konjam padichu comment poda time kudunga

said...

/Aaha enakku kadhai kaetkuradhuna remba pidikkum...
Enakkum kadhai sollu veengala karthik...Thinamum oru kadhai..

//

என்ன கேள்வி இது ராஜி.. நம்ம பக்கம் வாங்க தினமும் ஒரு கதை நிச்சயம் உண்டு

said...

/இத நான் எதிர் பாக்கல!
/
கதை சொல்றப்போ எவ்வளவு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினேன் தெரியுமா, செந்தில்

said...

//ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

இந்த ஓ போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?//


உங்க பாசத்தை என்னென்ன சொல்வேன்..

said...

/விளையும் பயிர்...னு அப்பவே அடிச்சு ஆடி இருக்கீங்க //

ஆமாங்க நாட்டமை..

said...

/hi karthi.
enna idu ippadi runs score panreenga.. naan runs kanaku panrathukula neenga innum oru 15 runs score panreengale

//

உங்களுக்காக தான் நேற்று லீவ் விட்டேன், DD

said...

/supera ezhuthi irukeenga.. engaluku konjam padichu comment poda time kudunga //

கட்டாயம் டைம் கொடுக்குறேங்க, DD