Sunday, March 04, 2007

மந்திரிசபை மாற்றம் - இரண்டாம் பகுதி

மந்திரிசபையின் மாற்றத்தின் முதல் பகுதிக்கு வந்த பின்னூட்டங்கள் நம்மை திக்கு முக்காட வச்சது. கிட்டதட்ட தமிழ் நாட்டில இருக்க சட்டசபை இடங்களை விட அதிகமாகவே பின்னூன்ட்டங்கள் கிடைத்துள்ளன. இத்தனை கமெண்டுகளும் நமது பிளாக் முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளுக்கு (அப்படின்னா என்னான்னு கேட்கப்படாது.. சும்மா கொள்கை வச்சுகிட்டு அதை கடைபிடிக்காம இருக்கிறதை விட கொள்கையே இல்லாம பிளாக் தேச மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கொள்கையாகும்) கிடைத்த வெற்றி என்றே நினைக்கிறேன். கட்சியின் சின்னத்தை என்ன என்று உள்ளாட்சி அமைச்சர் கேட்டுட்டார். இதுக்கு பதிலையும் நான் சொல்றதை விட நம்ம மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம் (நாட்டாமை முதல்வரே.. நயன் படத்தையோ, நமீதா படத்தையோ சின்னமா எல்லாம் வைக்க முடியாது.. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க)அப்படியே கொடி வண்ணத்தையும் சொல்லுங்கப்பா மக்களே

சரி.. இப்போ மிச்சம் இருக்க மற்ற துறைகளுக்கு.... என்னடா இதெல்லாம் ஆர்பாட்டம் இல்லாத துறையா இருக்கேன்னு யாரும் நினைக்காதீங்க.. ஏற்கனவே பயங்கர வேலை இவங்க எல்லாம் பாக்குறதால இவங்களுக்கு ஈசியா இருக்கட்டுமேன்னு இந்தத் துறைகள்.

சமூக நலத் துறை அமைச்சர் : நண்பர் SLN

லண்டனில் இருந்துகிட்டு லண்டன்ல பொழியிற பனியை பற்றியும் எழுதுவார். சென்னை வெயிலையும் ஹாட்டா எழுதுவார். திடீர்னு எல்லா புண்ணிய தலங்களையும் ட்ரிப் அடிச்சு ஒரு பதிவை போடுவார்.

பால் மற்றும் மீன் வளத் துறை அமைச்சர் : கோல்மால் கோபால்

போன தடவை இருந்த அதே துறை தான். இடையில் மாடு வளர்ப்பது எப்படின்னு ஒரு ட்ரெய்னிங்குகாக ஒரிசா புவனேஷ்வர் போயிருந்தார். இப்போ சென்னை டைடல் பார்க்குல அதை செயல் படுத்துறார். அந்த பணியை இவரே மறுபடியும் தொடர்வார்

உணவு மற்றும் சுற்றுபுறத்துறை அமைச்சர் : SKM

ஹோம் டெபார்ட்மெண்ட்.. ரொம்ப வருஷ அனுபவம். இந்த துறையை இவரைவிட வேற யாருக்கு தர்றது?

காடுகள் மற்றும் கனிம வளர்ச்சித் துறை அமைச்சர் : கோபிநாத்

புது அமைச்சர். புதுசா நம்ம ஜோதில ஐக்கியமானவர். அதனால கஷ்டமில்லாத இந்த துறை இவருக்கு.. ஆனா ரொம்ப பொறுப்பான துறை..

கூட்டுறவுத் துறை அமைச்சர் : தங்கை தீக்க்ஷண்யா

தங்கை இப்போ ரொம்ப பிசி. அதனால ரொம்ப கஷ்டப்படுத்த விரும்பல.

எல்லாத் துறையும் ஓவர். அப்போ சட்டசபையை கவனிக்கிறது யாரு. இருக்கவே இருக்காங்க கொடுமை புகழ் உஷா. போனதடவை கொடுமை ஒழிப்புத் துறை அமைச்சரா இருந்தாங்க. எல்லோர் கொடுமையையும் ஒழிச்சாங்க.. ஆனா இவங்க முன்னாடி ஊர்கொடுமையெல்லாம் பிரேக் ஆடுது. அது தான் இந்த தடவை நமக்கு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இப்போ அவங்க தான் சபாநாயகர். துணை சபாநாயகரா தோழி ரம்யா.

அட! என்னாச்சு அம்பிக்கு ஒண்ணுமில்லையான்னு நீங்க எல்லாம் கேக்குறது புரியுது. என் மச்சானுக்கு இல்லாமலா..நம்ம கிட்ட இருக்க 15 எம்.பி சீட்டை வச்சுகிட்ட என்ன பண்றது. அது தான் மத்திய அமைச்சர் போஸ்ட் ஒரு ஏழு கிடைச்சது. உள்ளூர் பிளாக்கை ஆண்டா மட்டும் போதுமா, தேசிய அளவுல பேரெடுக்க வேண்டாமா..

தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் : அம்பாசமுத்திரம் அம்பி

இதுல தான்பா இந்த தொலைபேசித் துறையும் இருக்கு. இனிமே உன் காட்டுல.. இல்ல..இல்ல..காதுல தேன் மழை தான்.. அம்பி, உன்னை ஒரு சின்ன வட்டத்துக்குள்ள எல்லாம் அடைக்கல.. நம்ம கட்சியோட பேரை செங்கோட்டையிலும் பரப்புபா..

கப்பல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் : நண்பர் KK

எல்லா பிளாக்கும் போய் சரளமா பின்னூட்டம் கொடுப்பார்.. ரொம்ப கருத்தான விஷயங்களையும் எழுதுறார். நம்ம நாட்டாமை பேரை உடம்புல பச்சைகுத்திகிட்டு இருக்கார் போல.. அந்த அளவுக்கு நாட்டாமை மேல இவருக்கு பற்று.. அதனால அவர் கூட இணைந்து பணியாற்ற KK

நிதித் துறை இணை அமைச்சர் : தோழி சேதுக்கரசி

நம்மளோட எல்லாப் பதிவுக்கும் வந்து, படிச்சு பின்னூட்டம் போடுவார். நிறைய விஷயங்களை சுட்டிக்காட்டி இருக்கார், நம்ம பிளாக்கை மேம்படுத்த.

மற்ற மத்திய மந்திரிபதவியை நம்ம தோழமை கட்சிக்கு கொடுத்தாச்சு. இதுக்கு G3 தான் தலைவிங்கிறதால (கட்சி பேர் என்னங்க) அதுக்கு அவர் தான் பெயர் சிபாரிசு பண்ணுவார். பார்ப்போம் யாருக்கு கொடுக்கிறார்னு.

அப்புறம் இந்த சென்னை மேயர் பதவிக்கு நம்ம நண்பர் கோப்ஸ் பெயர் முன்மொழிவோம் நம்ம கட்சி சார்பா.

நம்ம கட்சிக்கு நீங்க கொடுத்து வர்ற ஆதரவை பார்த்தி ஐ.நா சபையே ஆடிகிடக்கு. அவங்க கூட பேச்சு வார்த்தை நடத்த தான் நம்ம (வாழ்நாள்)தலைவி கீதா கிளம்புறாங்க அமெரிக்காவுக்கு. அவங்க பயணம் வெற்றியடையவும் நாம் வாழ்த்துறோம்.

வேற யாருக்காவது வாரியப் பதவியோ வட்ட செயலாளர் பதவியோ வேணும்னா பின்னூட்டதுல சொல்லுங்க நண்பர்களே..

என்றும் நம்ம பிளாக் முன்னேற்ற கழகத்திற்கு உங்களின் பொன்னான ஆதரவை தருமாறு கழகத்தின் சார்பாக வேண்டுகிறோம். இந்த பகுதிக்கும் உங்கள் பொன்னான பின்னூட்டங்களை இட்டு கட்சியின் மானத்தை இமயமலை உயரத்திற்கு பறக்கவிடுங்க..

தலைவி கீதா புகழ் ஓங்குக! நாட்டாமை நாமம் வாழ்க!

மக்களே.. அப்படியே அம்பி எழுதிய மத்திய மந்திரிசபை பதவி ஏற்பு நிகழ்ச்சியையும் பார்த்துட்டு வந்துடுங்க

122 பின்னூட்டங்கள்:

said...

ROTFL :)

correcttana posting thaan enakku! ippave enga veetu maadila oru dish. tower ellam nada sollidaren!
ini talkooo talk thaan! (ippa mattum ennavaam?)

//தலைவி கீதா புகழ் ஓங்குக! நாட்டாமை நாமம் வாழ்க!//
LOL, naatamaikku naamam!nu vaasichen. :p

said...

me thaan pashtaa?

next round varen! :)

said...

யாருமே வரலை. நீங்க கூட இன்னிக்கு என்னோட வலைப்பக்கம் வரலை. என்ன தலைவரோ? என்ன முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கீங்களோ தெரியலை. வெள்ளிக்கிழமை காணாமல் போகிற ச்யாம் மறுபடி புதன் கிழமை மட்டும் வந்துட்டுத் திரும்ப வெள்ளிக்கிழமை காணாமல் போகிறார். "பக்கார்டி" இலவசமாக் கொடுக்கிறாங்களா? இந்த வேதா பாருங்க, துணை முதலை அமைச்சராப் போட்டீங்க, ஹிஹிஹி, முதலைன்னு தப்பா வந்திடுச்சு, முதல் அமைச்சர்னு வந்திருக்கணுமோ? ஹிஹிஹி, அதை அழிச்சுடுங்க, அவங்க எப்பப் பாரு, களப்பணி ஆற்றறதிலேயே இருக்காங்க. நேத்திக்குப் பொதுக்குழு கூடி முக்கியமான முடிவுகள் எடுத்தப்போ கூட வராமல் இருந்துட்டாங்க. கொஞ்சம் கண்டிக்கிறதில்லை? எல்லாம் என் HEAD LETTER! பின்னூட்டம் கொஞ்சம் பெரிசாப் போச்சோ? ஹிஹிஹி, பழக்க தோஷம்!

said...

Aaha.. asathiteenga marubadiyum :-)

Golmaal Gopalu tidel-la maadu meikkaraara? manushan sollavae illa :P

Ambikku perfectaaan thuraiya kuduthuteenga.. Avar ungalukku inimae koil katti kumbiduvaarunnu nenaikkaren :D

KK-kku irundhaalum neenga kappal thuraya kuduthirukka koodadhu.. Avarukku pozhudhu pokku thurai kuduthirundheenganna correcta irundhirukkum :-)

//நம்ம நாட்டாமை பேரை உடம்புல பச்சைகுத்திகிட்டு இருக்கார் போல.. அந்த அளவுக்கு நாட்டாமை மேல இவருக்கு பற்று//
Noothula oru vaartha sonnaalum nachunnu sonnenga :D

C.M.HANIFF said...

VAASHGA VALARGA ;-)

said...

இன்னைக்குதான் எங்க ரெண்டாவது போஸ்ட் தலன்னு கேட்கலாம்ன்னு நினைச்சேன்.. அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க..

said...

எல்லாருக்கும் சர மாரியா பதவிகளை அள்ளி கொடுத்த மு.காவுக்கு ஒரு ஓ போடுங்க மக்களே!!!!

said...

புதுசா பதவியேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

said...

இதிலும் பின்னூட்டங்கள் முன்னூரை தாண்டி பறக்க என் வாழ்த்துக்கள் தல!!! ;-)

Anonymous said...

Dear Karthi,
Naan dhan first a? adadae....

இத்தனை கமெண்டுகளும் நமது பிளாக் முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளுக்கு (அப்படின்னா என்னான்னு கேட்கப்படாது.. சும்மா கொள்கை வச்சுகிட்டு அதை கடைபிடிக்காம இருக்கிறதை விட கொள்கையே இல்லாம பிளாக் தேச மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கொள்கையாகும்

Indha varthaigal - Blog melum, blogers melum, engali pola members melum ungaluku irukum EEDUPATAi kattugiradhu.

Very nice writings karthi. I could see your other side ... Keep it up..

Unmaiyana arasiyaluku vandha - ippodhae ungaluku kaivasam niriaya votes iruku karthi... ha ha ha.

With Love,
Usha Sankar.

said...

part 2 release aayiducha?
lunch timela padichu comment podren :-)

said...

thala,
U have been changing the office bearers...but where is the budget??

said...

aagaaga gaaga

posshhh ellaam vaari vazangiteenga thala..ungal sevayae puliyodhara sevai :-)

ambi, paathu paa...mich use panna pidaadhu...oru naalaikku 18 hrs paesinaa mattum podhum. :-)

KK, appadiyae westindies ku kappal arrange pannunga..World cup semis and finals poi paakalaam :-)

said...

//நம்ம மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம் (நாட்டாமை முதல்வரே.. நயன் படத்தையோ, நமீதா படத்தையோ சின்னமா எல்லாம் வைக்க முடியாது.. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க)அப்படியே கொடி வண்ணத்தையும் சொல்லுங்கப்பா மக்களே
//

கட்சியின் கொடியில் என்ன / எவ்வளவு கலர்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். ஆனால் எல்லா கலர்களுக்கும் நடுவில் தலைவர் மு.கா. அவர்கள் இருக்கவேண்டும்.
:-)

said...

attendance first.....

said...

// கோப்ஸ் பெயர் முன்மொழிவோம் நம்ம கட்சி சார்பா///

aiyaaaa...... (extra potti kidaikka )indha singaara chennai'ai en kai'il oppadaitha/yerpaaadu seidha enga anboda odi pona, sorry anboda maru xerox'ey vaazhga, valarga....

said...

//சும்மா கொள்கை வச்சுகிட்டு அதை கடைபிடிக்காம இருக்கிறதை விட கொள்கையே இல்லாம பிளாக் தேச மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கொள்கையாகும்//

adra sakka, adra sakka...

( katchi thalaivar'na ippadi thaaaan irrukanum... :)) )

said...

//நாட்டாமை முதல்வரே.. நயன் படத்தையோ, நமீதா படத்தையோ சின்னமா எல்லாம் வைக்க முடியாது.. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க//

aaama appadi'ey en padathaium vaikanum'nu அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க ok va brother??

pesaama oru,
nelinchi poi, color mangi pona oru Sombu sinnatha katchi sign'nu vachiruvom..

said...

@ கோல்மால் கோபால் :-

chennai contract'a en kitta koduthurunga.... ok va?

@skm :- //இந்த துறையை இவரைவிட வேற யாருக்கு தர்றது?//

adha sollunga, edho nammabala (enna) maadhiri aalugalukku appppa appppa oru idly photo'va kannula kaaturaaaanga... :))

said...

@ambi :- //நம்ம கட்சியோட பேரை செங்கோட்டையிலும் பரப்புபா..//

nalla soneeenga ponga....

pesaaaama neeenga kaithari thurai'a solli irrukalam..
thalaa adhula sema expert of india.. ok ok... indha thuraium avarukku ok thaaaan...

i mean avarukku mattum thaaaaan.. :))

said...

//மற்ற மத்திய மந்திரிபதவியை நம்ம தோழமை கட்சிக்கு கொடுத்தாச்சு. //

ippppa thaaan naaan sonnnen , adhukullla prove panniteeengaley neeenga remba nallavar'nu


//இதுக்கு G3 தான் தலைவிங்கிறதால (கட்சி பேர் என்னங்க) அதுக்கு அவர் தான் பெயர் சிபாரிசு பண்ணுவார். //
ennadhu, G3 katchi'ki thalavali'a? sory thalavi'a? avangalukku vara vara katchi mela oru concentration'ey illainga...
:))

G3, katchi'ku oru nalla name'a vainga paarpom... :))


பார்ப்போம் யாருக்கு கொடுக்கிறார்னு.

said...

//இந்த பகுதிக்கும் உங்கள் பொன்னான பின்னூட்டங்களை இட்டு கட்சியின் மானத்தை இமயமலை உயரத்திற்கு பறக்கவிடுங்க..
//

do u think sky is the limit?
adhaium thaaaduvom endru kooori thirumbium pooori thinna pogiren vanakkam, vandhanam en nethil'la illa sandhanam

bye bye

said...

Oh!Boy!MK!Why do you have to pull me into this?yenakkum arasiyalukkum vegu dhooram.Thanks a lot for the post and unga mariyadhai paathu agamagilndhu poitten.aanalum I have to resign from my post.If you all don't mind,nan indha postukku namma Priyamana Priya vai vazhimozhigiren.Thank you ithudan yenadhu uraiyai mudithu kozgiren.Nandri.

said...

மந்திரி சபை மாற்றம்னு தலைப்பு பார்த்தோன நம்ம பதவி பணால் ஆயிடுச்சோன்னு ஓடி வந்தேங்க :) தலை தப்பிச்சுது!

said...

தெய்வமே,

உங்க காலை காட்டுங்க இப்படி...கொடுமைடா சாமி அப்படீன்னு பதிவெழுதுறவங்களுக்கு (தமிழ் வலை ) மந்திரி பதவி குடுத்திருக்கீங்க...சன் டீவி தொகுப்பாளினி மாதி அவங்க ப்ளாக் முழுக்க தமிழை இங்கிலீசுலயே வெளுத்துருக்காங்களே...உண்மையில படிக்கிறவனுக்கு " கொடுமைடா சாமி " :)

சும்மா டமாஸ் பண்ணினேன்..ஏங்க அவங்களுக்கு முறம் அல்லது கலப்பை எதுனா கொடுத்து தமிழ்ல பதிய சொல்லக் கூடாதா...இல்லை சட்ட சபையில அறிக்கையும் இப்படித்தான் எழுதி வாசிப்பாங்களா ?

said...

தலைவி கீதா புகழ் ஓங்குக! நாட்டாமை நாமம் வாழ்க!


அட்டண்ட்ஸ் தலைவரே.. அப்புறமா படிச்சுட்டு வரேன்

எல்லா அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்..

said...

கட்சிக்காரங்களுக்கு அறிமுகமும் இல்லை. களப்பணி ஆற்றியதில்லை, தலைவருக்கு வேண்டப்பட்டவர் திடீரென்று மந்திரியாகிவிட்டார்னு, ஏதோ பேசிக்கறாங்க. (தயாநிதி மாறன் இல்லீங்க, என்ன பத்திதான்). அவர மாதிரி சிறப்பா வேலை செய்யலைன்னாலும், தினமும் டி.வி லயும், பேப்பர்லயும், முகத்த காட்றதுக்காவது முயற்சி பன்றேன்.

வாரி வழங்கும் வள்ளல் தல வாழ்க.

Cheers
SLN

said...

அது சரி!! உங்க கட்சில கோ ப செ பதவி இன்னும் காலியாத்தானே இருக்கு

said...

Aiya! Kappal thurai.... Ini Bacardi'kku korai illai.... Ini no local saraku... all saga's enjoy foreign saraku :)
Natamai koodave poi avarukku vethilai pottiyum kodai thookitu poganuma??? Super!!! Notamai.... Namitha veetla avanga thangachi yaravathu irukaangala??? :D

Vaazhaga Muthalamaichar... Vaazhga MK!!!

Kittu - Kappal vittuta pochu... Semi'a and Final yennanga... India'oda yella match'kum pogalam :)

said...

வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கிறோம். ஊழலற்ற ஒரு ஆட்சி நடக்கும் வரையும் எமது ஆதரவு நீடிக்கும். நாங்கள் ஒரு பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக செயற்படுவோம்.
எதிரிக் கட்சியாக செயற்பட மாட்டோம்.
எமது கட்சியினரின் ஆதரவு மற்றும் கட்சி உறுபினர்களின் எண்ணிக்கை எனபவை பின்னூட்டங்களில் தெரியும்.

said...

//நயன் படத்தையோ, நமீதா படத்தையோ சின்னமா எல்லாம் வைக்க முடியாது.. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க//

நம்ம மத்த கட்சி மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமா பண்ணனும்....புது ஹீரோயின் வர வர நாமும் சின்னத்த மாத்திட்டே இருக்கனும் :-)

said...

//இடையில் மாடு வளர்ப்பது எப்படின்னு ஒரு ட்ரெய்னிங்குகாக ஒரிசா புவனேஷ்வர் போயிருந்தார்//

ஒரு சின்ன திருத்தம் தல...அதாவது சைட் அடித்துக்கொண்டே மாடு வளர்பது எப்படி... :-)

said...

//அதனால கஷ்டமில்லாத இந்த துறை இவருக்கு.. //

கஷ்டமில்லாத துறைனாலும்...நல்லா காசு வர துறை...கோபிநாத் அப்படியே கரெக்ட்டா சூட்கேஸ் அனுப்பிடுங்க :-)

said...

//உணவு மற்றும் சுற்றுபுறத்துறை அமைச்சர் : SKM//

ரொம்ப பொருத்தமான துறை...ஆனா ரிசைன் பண்றேனு மிரட்டராங்களே :-)

said...

//இப்போ அவங்க தான் சபாநாயகர். துணை சபாநாயகரா தோழி ரம்யா.//

நல்ல ரெண்டு பேர தான் செலக்ட் பண்ணி இருக்கீங்க :-)

said...

//தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் : அம்பாசமுத்திரம் அம்பி//

எது இந்த பேரன் பாக்கரனு சொல்லிட்டு எப்பவும் தாத்தா கூடவே இருக்காரே அந்த போஸ்ட்டா :-)

said...

//கப்பல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் : நண்பர் KK//

கப்பல் OK....அது என்ன உள்கட்டமைப்பு... :-)

said...

//அந்த அளவுக்கு நாட்டாமை மேல இவருக்கு பற்று//

actuall ஆ எங்க நட்பு பார்த்துதான் தளபதி படமே எடுத்தாங்க...என்ன KK கரெக்ட்டா :-)

said...

//இதுக்கு G3 தான் தலைவிங்கிறதால (கட்சி பேர் என்னங்க) //

என்ன தல இப்புடி கேட்டுப்புட்டீங்க...மொ.மு.க (மொக்கை முன்னேற்ற கழகம்) :-)

said...

//அப்புறம் இந்த சென்னை மேயர் பதவிக்கு நம்ம நண்பர் கோப்ஸ் பெயர் முன்மொழிவோம் நம்ம கட்சி சார்பா//

எதுக்கு முன் எல்லாம் மொழிஞ்சுட்டு...அவரு தான் மேயர்...வேற யாரு போட்டிக்கு வராங்கனு பார்துடலாம் :-)

said...

காமிடியா எழுதியிருக்கீங்க தல :-)

//
நாட்டாமை முதல்வரே.. நயன் படத்தையோ, நமீதா படத்தையோ சின்னமா எல்லாம் வைக்க முடியாது.. அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க)
//

LOL :-)
சரி விடுங்க நாட்ஸ் (உள்ஸ் மாதிரி...ஹி ஹி) இவிங்க இல்லீனா இருக்கவே இருக்கா இலினா

said...

//அப்புறம் இந்த சென்னை மேயர் பதவிக்கு நம்ம நண்பர் கோப்ஸ் பெயர் முன்மொழிவோம் நம்ம கட்சி சார்பா//

எதுக்கு முன் எல்லாம் மொழிஞ்சுட்டு...அவரு தான் மேயர்...வேற யாரு போட்டிக்கு வராங்கனு பார்துடலாம் :-)

said...

//LOL, naatamaikku naamam!nu vaasichen. :p //

@ambi,

kaathu pora gap kidacha pothumey unaku...rocket vitruva :-)

said...

//இதிலும் பின்னூட்டங்கள் முன்னூரை தாண்டி பறக்க என் வாழ்த்துக்கள் தல//

வாழ்த்து மட்டும் சொன்னா பத்தாது மை பிரண்ட்...நம்ம தான் மனசு வைக்கனும் :-)

said...

//aaama appadi'ey en padathaium vaikanum'nu அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க ok va brother??//

@gops,


aasa patuteenga...ungaluthayum vechutaa pochu :-)

said...

//
சும்மா கொள்கை வச்சுகிட்டு அதை கடைபிடிக்காம இருக்கிறதை விட கொள்கையே இல்லாம பிளாக் தேச மக்களுக்கு தொண்டாற்றுவதே நமது கொள்கையாகும்
//
டாப்பு டக்கர் !
சூப்பர் டூப்பர் !!
உங்களால தான் இது முடியும். கலக்கல்ஸ் :-)

said...

//aaama appadi'ey en padathaium vaikanum'nu அழுது ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க ok va brother??//

@gops,


aasa patuteenga...ungaluthayum vechutaa pochu :-)

said...

//கட்சிக்காரங்களுக்கு அறிமுகமும் இல்லை. களப்பணி ஆற்றியதில்லை, தலைவருக்கு வேண்டப்பட்டவர் திடீரென்று மந்திரியாகிவிட்டார்னு//

@SLN,

அது எல்லாம் இந்த காலத்துல நாலு பேரு பேசிட்டு தான் இருப்பாங்க...நீங்க ஜமாய்ங்க...கெரக்ட்டா எல்லா பத்திரிக்கைக்கும் போஸ் குடுத்துடனும்
:-)

said...

//அது சரி!! உங்க கட்சில கோ ப செ பதவி இன்னும் காலியாத்தானே இருக்கு //

@chinna ammini,

புரியுது புரியுது....தல கிட்ட உங்க பேர சிபாரிசு பண்ணிடலாம் :-)

said...

எல்லாத்துறையுமே சூப்பர்,

அதுவும் நம்ம(me,kk and other eligible bachelors like u :P) வழிகாட்டி அம்பிக்கு மட்டும் "ஆதலால் மந்திரி ஆவீர்" மாதிரி இருக்கு.. நீவிர் வாழ்க :-)

said...

அப்பிடியே இந்த கோழி வளத்துறை அமைச்சர் யாருன்னு சொன்னீங்கனா டீல் போட்டுக்க வசதியா இருக்கும் :-)

அப்பறம் கார்த்தி,இந்த வாரயிருதி உங்க ஊருக்கு வரலாம்னு இருக்கேன்... உள்ளாட்சித்துறை பத்தி கலந்து ஆலோசனை சொய்யலாம்னு... இல்ல...

கோழி சாப்பிட + ஒரு classmate வந்துர்க்கான்..

உங்க ப்ளான் என்ன?

said...

நன்றி.. நன்றி! ஆனால் என் வலைப்பதிவுக்கு(?) லிங்க் கொடுத்து ஹிட்ஸ் அதிகரிக்க வழிசெய்யாததை வன்மையாகக் கண்டிக்கிறேன் ;-)

said...

அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் :-)

said...

//actuall ஆ எங்க நட்பு பார்த்துதான் தளபதி படமே எடுத்தாங்க...என்ன KK கரெக்ட்டா :-)//

Illaya pinna....

Actually Mani vanthu Syam'ayum yennayum than Thalapathi'la nadika sonnar....Yena yenga life story'la naangale nadicha nalla irukume drathaala... aana naanga busy'a irunthathaala.... Mani Mamooty and Rajni vechu padam yeduthutar :)

said...

Aha! Naan munnadi pota comment kanome Karthik.... seri yenna nyavagam iruko atha poduren... :)

//கப்பல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் : நண்பர் KK//

Rendume super thurai's.... Namakku thannina romba pudikumnu thane kodutheenga??? Ini customs kitta solli daily naalu bottle veetukku anupa solla vendiyathu than....
Ulkattamaipu amaichar appadina Natamai koodave vethala potti and kodai thookitu poganuma??? Aiya!!! jolly....

Natamai, Nayan'kum Namitha'kum Thangachi yaaravathu irukaangalanu sollunga....

said...

ஆஹா! மந்திரி சபை விரிவாக்கம் ஜூஉப்பர்!

said...

//நாட்டாமை நாமம் //
என்னவோ சொல்ல்றாப்ல இருக்கு! ;)

said...

சக மந்திரிகளுக்கு எல்லாம் எப்ப treat?

said...

அய்யா...
தலைவா...
ரொம்ப நன்றி...நன்றி

said...

மற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

said...

\\அதனால கஷ்டமில்லாத இந்த துறை இவருக்கு.. ஆனா ரொம்ப பொறுப்பான துறை..\\

என்னது கஷ்டமில்லாத துறையா??? முன்னே ஒரு வீரப்பன் தான் இருந்தான் இப்ப எத்தனை வீரப்பன் இருக்கிறானோ ??

said...

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
எல்லாருக்கும் சர மாரியா பதவிகளை அள்ளி கொடுத்த மு.காவுக்கு ஒரு ஓ போடுங்க மக்களே!!!!\\

இந்த ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா...

said...

\\Syam said...
//அதனால கஷ்டமில்லாத இந்த துறை இவருக்கு.. //

கஷ்டமில்லாத துறைனாலும்...நல்லா காசு வர துறை...கோபிநாத் அப்படியே கரெக்ட்டா சூட்கேஸ் அனுப்பிடுங்க :-)\\

இன்னாது சூட்கேஸ்சா...
இன்னா தலைவா நீ....நீ மட்டும் ம்ம்ம் ஒரு வார்த்தை சொல்லு காட்டையே உன் பேருல எழுதிவச்சிடுறேன்...

said...

\\நம்ம கட்சிக்கு நீங்க கொடுத்து வர்ற ஆதரவை பார்த்தி ஐ.நா சபையே ஆடிகிடக்கு. அவங்க கூட பேச்சு வார்த்தை நடத்த தான் நம்ம (வாழ்நாள்)தலைவி கீதா கிளம்புறாங்க அமெரிக்காவுக்கு. அவங்க பயணம் வெற்றியடையவும் நாம் வாழ்த்துறோம்.\\

தலைவி அவர்களே நீங்கள் கூறிபடி $10,000த்தை தலைவர் கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டேன் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்...
வாழ்க தலைவி!!!

said...

\\! நாட்டாமை நாமம் வாழ்க!\\\

ந.புகழ் நாட்டாமை வாழ்க..
ந.புகழ் நாட்டாமை வாழ்க..
ந.புகழ் நாட்டாமை வாழ்க..
ந.புகழ் நாட்டாமை வாழ்க..

said...

// ஆனால் என் வலைப்பதிவுக்கு(?) லிங்க் கொடுத்து ஹிட்ஸ் அதிகரிக்க வழிசெய்யாததை வன்மையாகக் கண்டிக்கிறேன் //

@சேதுக்கரசி,

அங்க வந்து மட்டும் என்ன பண்ண போறோம்...ஏதாவது எழுதுங்களேன் :-)

said...

//ஊழலற்ற ஒரு ஆட்சி நடக்கும் வரையும் எமது ஆதரவு நீடிக்கும்//

@சோமி,

எங்கள இப்படி அசிங்க படுத்தறீங்களே...நாங்களே எப்படி பொட்டி ரெடி பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கோம்....உங்களுக்கும் பொட்டி வேணும்னா சொல்லுங்க...பங்கு அனுப்பிடுவோம் :-)

said...

விரைவில் நமது துறையின் செயல்பாடுகள் பற்றிய அறிவிப்புக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

said...

//correcttana posting thaan enakku! ippave enga veetu maadila oru dish. tower ellam nada sollidaren!
ini talkooo talk thaan! (ippa mattum ennavaam?)
//

உனக்கு சந்தொசம்ன எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி அம்பி!

என்ஜாய் அம்பி!

said...

//me thaan pashtaa?

next round varen! //

ரெண்டாவது ரவுண்டா! பட்டய கிளப்புபா அம்பி!

said...

//எல்லாம் என் ஃஏஆD ளேTTஏற்! பின்னூட்டம் கொஞ்சம் பெரிசாப் போச்சோ? ஹிஹிஹி, பழக்க தோஷம்//

மேடம்.. பின்னூட்டத்தை பதிவு மாதிரி போட்டுட்டீங்க

said...

//Aaha.. asathiteenga marubadiyum :-)//

எப்போ நீங்க உங்க மந்திரிசபை பட்டியலை போடப்போறீங்க G3

said...

/VAASHGA VALARGA //

ஹனிஃப், கடைசிவரை உங்களுக்கு கொடுத்த மந்திரி பதவி தெரியாமலே போயிடுச்சுங்களே

said...

//இன்னைக்குதான் எங்க ரெண்டாவது போஸ்ட் தலன்னு கேட்கலாம்ன்னு நினைச்சேன்//

நீங்க நினைக்கிறதை நடத்தி வைக்கத் தானே நாங்க தலைவராய் இருக்கோம் மை பிரண்ட்

said...

/எல்லாருக்கும் சர மாரியா பதவிகளை அள்ளி கொடுத்த மு.காவுக்கு ஒரு ஓ போடுங்க மக்களே!!!!//

உங்க பாசத்துக்கு தலைவணங்குகிறேன் மை பிரண்ட்

said...

/இதிலும் பின்னூட்டங்கள் முன்னூரை தாண்டி பறக்க என் வாழ்த்துக்கள் தல//

வாழ்த்துக்கு நன்றி மை பிரண்ட்

said...

//Unmaiyana arasiyaluku vandha - ippodhae ungaluku kaivasam niriaya votes iruku karthi... ha ha ha.

With Love,
Usha Sankar.//

உஷா, உங்க ஓட்டை மறக்காம போடுவீங்கள்ல அது போதும்

said...

//part 2 release aayiducha?
lunch timela padichu comment podren //

Attendance marked, Arun

said...

//thala,
U have been changing the office bearers...but where is the budget?? //

Venkat, ellaa soththum namma soththu thaan

said...

//posshhh ellaam vaari vazangiteenga thala..ungal sevayae puliyodhara sevai//

வாங்க கிட்டு.. மக்கள் சேவையே நம்ம சேவை

said...

/கட்சியின் கொடியில் என்ன / எவ்வளவு கலர்கள் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். ஆனால் எல்லா கலர்களுக்கும் நடுவில் தலைவர் மு.கா. அவர்கள் இருக்கவேண்டும்.//

பாலராஜன்கீதா, நம்ம தலைமை மேல இந்த அளவுக்கு நம்பிக்கை :-)

said...

//aiyaaaa...... (extra potti kidaikka )indha singaara chennai'ai en kai'il oppadaitha/yerpaaadu seidha enga anboda odi pona, sorry anboda maru xerox'ey vaazhga, valarga.... //

கோப்ஸ், கீழ பாருங்க.. நம்ம முதல்வரே சொல்லிட்டாரு.. உங்களுக்கு தான் பதவியே

said...

//( katchi thalaivar'na ippadi thaaaan irrukanum... :)) ) //

ஹிஹி.. ரொம்ப நன்றிபா

said...

/Oh!Boy!MK!Why do you have to pull me into this?yenakkum arasiyalukkum vegu dhooram.Thanks a lot for the post and unga mariyadhai paathu agamagilndhu poitten.aanalum I have to resign from my post.If you all don't mind,nan indha postukku namma Priyamana Priya vai vazhimozhigiren.Thank you ithudan yenadhu uraiyai mudithu kozgiren.Nandri.

//

உரையை எல்லாம் முடிச்சு நல்லாத்தான் பேசுறீங்க SKM.. ஆனா நீங்க இந்த பதவியை விட்டு போகணுமா.. எங்க இருந்தாலும் உங்க ஆதரவு நம்ம கட்சிக்குத் தானே..

said...

/மந்திரி சபை மாற்றம்னு தலைப்பு பார்த்தோன நம்ம பதவி பணால் ஆயிடுச்சோன்னு ஓடி வந்தேங்க :) தலை தப்பிச்சுது!

//

என்ன மணி, உங்களைவிட விளையாட்டுதுறையை வேற யாரால பாத்துக்க முடியும், இவ்வளவு திறமையா

said...

/சும்மா டமாஸ் பண்ணினேன்..ஏங்க அவங்களுக்கு முறம் அல்லது கலப்பை எதுனா கொடுத்து தமிழ்ல பதிய சொல்லக் கூடாதா...இல்லை சட்ட சபையில அறிக்கையும் இப்படித்தான் எழுதி வாசிப்பாங்களா ?//

சங்கர், ஏன் முழு தமிழ்ல உஷா எழுதலைங்கிறதுக்கு பின்னாலையும் ஒரு பெரிய கொடுமை இருக்குங்க..

said...

// தினமும் டி.வி லயும், பேப்பர்லயும், முகத்த காட்றதுக்காவது முயற்சி பன்றேன்.//

எப்படித்தான் அந்த மனுஷன் எல்லா போட்டோலையும் வந்துடுறாரோ, தெரிலப்பா SLN

said...

//அது சரி!! உங்க கட்சில கோ ப செ பதவி இன்னும் காலியாத்தானே இருக்கு ///

அதைத் தான் துணை முதல்வர் வேதா வச்சிருக்காங்க.. அவங்க ரெடியா இதுக்குன்னு கேக்கணும் இப்போ அம்மிணி

said...

//எமது கட்சியினரின் ஆதரவு மற்றும் கட்சி உறுபினர்களின் எண்ணிக்கை எனபவை பின்னூட்டங்களில் தெரியும்.//

வாங்க சோமி.. நீங்க எந்த கட்சியோ தெரிலையேப்பா.. தோ இப்பவே வந்து பாக்குறேன்

said...

//புது ஹீரோயின் வர வர நாமும் சின்னத்த மாத்திட்டே இருக்கனும்//

நாட்டாமை, மக்களுக்கு குழப்பம் வந்துடாது

said...

//ஒரு சின்ன திருத்தம் தல...அதாவது சைட் அடித்துக்கொண்டே மாடு வளர்பது எப்படி... //

அட.. இதுல மேட்டர்!

said...

//கஷ்டமில்லாத துறைனாலும்...நல்லா காசு வர துறை...கோபிநாத் அப்படியே கரெக்ட்டா சூட்கேஸ் அனுப்பிடுங்க //


நாட்டாமை முதல்வரே, உங்களுக்கு ஷேர் வராமலா

said...

//ரொம்ப பொருத்தமான துறை...ஆனா ரிசைன் பண்றேனு மிரட்டராங்களே //

ஒரு வேளை, இப்பவே நிறைய வேலையோ அவங்களுக்கு

said...

//நல்ல ரெண்டு பேர தான் செலக்ட் பண்ணி இருக்கீங்க //

ஹிஹிஹி.. நன்றி முதல்வா

said...

//எது இந்த பேரன் பாக்கரனு சொல்லிட்டு எப்பவும் தாத்தா கூடவே இருக்காரே அந்த போஸ்ட்டா///

அதே அதே முதல்வரே

said...

/உள்கட்டமைப்பு//

Infrastructure, CM

said...

//actuall ஆ எங்க நட்பு பார்த்துதான் தளபதி படமே எடுத்தாங்க...என்ன KK கரெக்ட்டா //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

said...

//என்ன தல இப்புடி கேட்டுப்புட்டீங்க...மொ.மு.க (மொக்கை முன்னேற்ற கழகம்)//

அட! ரொம்ப நல்ல பேரா இருக்கே முதல்வரே

said...

//எதுக்கு முன் எல்லாம் மொழிஞ்சுட்டு...அவரு தான் மேயர்...வேற யாரு போட்டிக்கு வராங்கனு பார்துடலாம் //

நீங்க சொன்னா சரி தான்.. அப்பீலே கிடையாது

said...

//LOL :-)
சரி விடுங்க நாட்ஸ் (உள்ஸ் மாதிரி...ஹி ஹி) இவிங்க இல்லீனா இருக்கவே இருக்கா இலினா//

இவ்வளவு ஆணி புடுங்கியுமா, இப்படி அருண்

said...

/kaathu pora gap kidacha pothumey unaku...rocket vitruva//

yaaruppaa athu, CMkkE rocket viduRathu..

எவ்வளவு ராக்கெட் அவர் காலேஜ்ல விட்டிருப்பார்.. எப்பவும் சட்டசபைல ஏதாவது பைல் கொடுத்தா, எதிர்கட்சி பெண் எம்.எல்.ஏ மேல ராக்கெட் விடுற இவருக்கே ராக்கெடா

said...

//டாப்பு டக்கர் !
சூப்பர் டூப்பர் !!
உங்களால தான் இது முடியும். கலக்கல்ஸ் //

ஹிஹிஹி.. நன்றி அருண்

said...

//அது எல்லாம் இந்த காலத்துல நாலு பேரு பேசிட்டு தான் இருப்பாங்க...நீங்க ஜமாய்ங்க...கெரக்ட்டா எல்லா பத்திரிக்கைக்கும் போஸ் குடுத்துடனும் //

ஆமா SLN! அது ரொம்ப முக்கியம்

said...

/அதுவும் நம்ம(me,kk and other eligible bachelors like u :P) வழிகாட்டி அம்பிக்கு மட்டும் "ஆதலால் மந்திரி ஆவீர்" மாதிரி இருக்கு.. நீவிர் வாழ்க//

LOL @ Arun

said...

/உங்க ப்ளான் என்ன? //

இப்பவே கோழி ரெடி அருண்.. என்ன என்ன வேண்டும்னு ஒரு லிஸ்ட் போடுப்பா, ரெடி பண்ணிடலாம்.. உன் பிரண்டையும் கூட்டிகிட்டு வாப்பா

said...

/நன்றி.. நன்றி! ஆனால் என் வலைப்பதிவுக்கு(?) லிங்க் கொடுத்து ஹிட்ஸ் அதிகரிக்க வழிசெய்யாததை வன்மையாகக் கண்டிக்கிறேன் //

உங்க பின்னூட்டம் பாத்தவுடனே பண்ணிட்டேன் அரசி.. நீங்க எழுதலைனு தான் கொடுக்கல.. மன்னிச்சுடுங்க அரசி!

said...

/Actually Mani vanthu Syam'ayum yennayum than Thalapathi'la nadika sonnar....Yena yenga life story'la naangale nadicha nalla irukume drathaala... aana naanga busy'a irunthathaala.... Mani Mamooty and Rajni vechu padam yeduthutar//

SAME BLOOD, KK :-)

said...

//Natamai, Nayan'kum Namitha'kum Thangachi yaaravathu irukaangalanu sollunga....//

அப்படி இருந்தாலும் முதல்வரே கரெக்ட் பண்ணிடுவாரு, KK

said...

//என்னது கஷ்டமில்லாத துறையா??? முன்னே ஒரு வீரப்பன் தான் இருந்தான் இப்ப எத்தனை வீரப்பன் இருக்கிறானோ ??
//

அதுக்கு ஏன் கவலைப்படுறீங்க கோபி! வீரப்பன் எத்தனை மந்திரிக்கு கூட்டாளி தெரியுமா

said...

/இன்னாது சூட்கேஸ்சா...
இன்னா தலைவா நீ....நீ மட்டும் ம்ம்ம் ஒரு வார்த்தை சொல்லு காட்டையே உன் பேருல எழுதிவச்சிடுறேன்...//

இது தான்யா உனக்கு அமைச்சர் போஸ்ட் வாங்கி கொடுத்திருக்கு கோபிநாத்

said...

//தலைவி அவர்களே நீங்கள் கூறிபடி $10,000த்தை தலைவர் கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டேன் என்பதை இங்கே தெரிவித்து கொள்கிறேன்...
வாழ்க தலைவி!!! //

ஆஹா.. அதெல்லாம் தலைவர் கைசெலவுக்கே சரியா போச்சுபா கோபி

said...

//அங்க வந்து மட்டும் என்ன பண்ண போறோம்...ஏதாவது எழுதுங்களேன் //

வழிமொழிகிறேன் இதை

said...

//உங்களுக்கும் பொட்டி வேணும்னா சொல்லுங்க...பங்கு அனுப்பிடுவோம்//

அட அது தானே!

said...

நாட்டாமை ஷ்யாம்... நான் எழுதறதா இல்லையான்னே முடிவு பண்ணலை :-(

கார்த்தி, நான் ஸ்மைலி போட்டேனே கவனிக்கலியா? :-)

C.M.HANIFF said...

போக்குவரத்துத் துறை அமைச்சர் : 'பிரெஞ்சு' CM ஹனிஃப்.
"ஹனிஃப், கடைசிவரை உங்களுக்கு கொடுத்த மந்திரி பதவி தெரியாமலே போயிடுச்சுங்களே "
Enna ippadi solliteenga, manthiri pathavi kodutatarkku nanri tervithu pinnottam potttaen, aanal athu varavillai karthik,Anyway mikka nanri , vaashga valarga ;-)

said...

@சேதுக்கரசி
//
நாட்டாமை ஷ்யாம்... நான் எழுதறதா இல்லையான்னே முடிவு பண்ணலை :-(
//
இருந்தாலும் உங்களுக்கு பொல்லாத மொனம் தாங்க. நானே எழுதுறேன். நீங்க எழுதுறதுக்கு என்னா... சீக்கிரம் முடிவு பண்ணுங்கனு என் சார்பாவும் மத்த அமைச்சர்கள் சார்பாவும் தலைவர் சார்பாவும் நாட்ஸ் சாட்பாவும் கேட்டுக்குறேன்...

said...

//
Namakku thannina romba pudikumnu thane kodutheenga??? Ini customs kitta solli daily naalu bottle veetukku anupa solla vendiyathu than....
//
LOL KK alias devaraj alias surya:-)
inime thanniku no panjam :)

said...

//
புது ஹீரோயின் வர வர நாமும் சின்னத்த மாத்திட்டே இருக்கனும் :-)
//
நான் இதை வழிமொழிகிறேன்

said...

excellent post...

said...

dhooooda...thala latest BOTO getup paathu ellaarum oru O podunga baa

thala, indha rangela BOTO poteengannaa, pisin kooda sikka chance irukku :-)

said...

katchi chinnam unga sokkaai la irukkum vannamaa thala?

neela colorla vellai kooda..aaha DMK la soopum , karuppum kanakka orae miing aa irukkae :-)

said...

யூ டூ அருண்?

சரி..சரி.. நம்ம மந்திரிசபைக்காகவாவது எழுதறேன்.. (ஆனா இப்போதைக்கு முடியாது ;-))