Monday, March 19, 2007

இது 'CAR'கால கதைகள்

என் கிராமத்தில், சிறு வயதில், மோட்டார் வாகனங்களை பார்ப்பதே அபூர்வம். தினமும் அரைமணிக்கொரு தடவை வரும் பஸ் தான் எங்களுக்கு தெரிந்து மோட்டார் வாகனங்கள். மற்றபடி வேறு எங்கே சென்றாலும் சைக்கிள் தான். சில சமயம் பக்கத்து ஊரில் டூரிங் டாக்கீஸில் படம் பார்க்க, ஒரே சைக்கிளில் நாலு பேர் போன சம்பவம் எல்லாம் உண்டு. அப்போது பைக்குகள் வைத்திருந்தவர்கள் இரண்டு மூன்று பேர்கள் தான். மற்றபடி திண்டுக்கலிலிருந்து எங்கள் ஊர் கடைகளுக்கு சரக்கு கொண்டு வருவது மாட்டு வண்டிகள் தான். இரண்டு மாடுகள் பூட்டிய, மரத்தினால் ஆன பெரிய சக்கரங்கள் கொண்ட வண்டிகள் இதற்கென பயன்படுத்தபட்டு வந்தன. பின்னாளில் அதெல்லாம் டயர் பொருத்தபட்ட வண்டிகளாக மாறிவிட்டன.. மணல், செங்கல் எடுத்து வரும் சொற்ப வண்டிகளே மர சக்கரங்கள் (தரையில் படும் அதன் வெளிப்புறங்கள் இரும்பினால் ஆனவை) கொண்டவை.. இப்போது அந்த வண்டிகளையும் பார்க்க முடிவதில்லை.

அடுத்து, சைக்கிளுக்கு பிறகு இரு சக்கர வாகனங்கள்.. கிராமங்களில் டி.வி.எஸ் 50-யும் M-80 தான் அதிகம் இருக்கும். இவைகள் தான் அசாத்திய சுமைகளையும் சுமந்து செல்ல உதவும்.. கரமுரடான பாதைகளுக்கும் கட்டுறுதியான சவாரி.. நாங்களும் M-80 தான் வைத்திருந்தோம். என் நண்பர்கள் வந்துவிட்டால், லோடு ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் அந்த அகல நீளமான கேரியரில் ஐந்து பேரை ஏற்றிக்கொண்டு மலைப் பாதைகளில் செல்வோம். எவ்வளவு லோடு அடித்தாலும் மட்டேன் என்று அடம் பிடிக்காமல் எங்களை சுமந்து செல்லும். சொற்ப எண்ணிக்கையில் புல்லட்கள் இருக்கும். தட தடன்னு சத்தத்துடன் இந்த வண்டிகள் என் சிறு வயதில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தும். இந்த வகை வண்டிகளை ஓட்டுவதற்கு எனக்குள் அதிகமான ஆசைகள் இருந்து வந்தது ஒரு காலத்தில்.. ஆனால் இன்று வரை அது நிறைவு பெறவில்லை. புல்லட்களின் உருவத்தை பார்த்து சற்று பயமாகவும் இருக்கும். ஆனால் இங்கே அமெரிக்கா வந்த பிறகு இங்கு அவர்கள் ஓட்டும் இரு சக்கர வண்டிகளை பார்த்து, புல்லட்டோடு ஓப்புமை செய்கிறேன்.. கட்டெறும்பு பக்கத்தில் சித்தெறும்பு.

சைக்கிள்களும், இரு சக்கர மோட்டார் வாகனங்களும் றெக்கை கட்டி பறந்த காலங்களில், கார்களை பார்ப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் நேரங்களில், எங்கள் ஊருக்கு அவ்வப்போது வருவது திரைப்பட சுவரொட்டிகளை மூங்கில் தட்டிகள் சுமந்து வருபவை தான். பக்கத்தில் இருக்கும் சின்னாளப்பட்டி மற்றும் திண்டுக்கலில் ஏதேனும் படம் ஐம்பது நாட்களை தாண்டிவிட்டால் இது போன்று கார்களில் வந்து விளம்பரம் செய்வார்கள். அந்த கார்களின் தலையில் இரண்டு ஒலிபெருக்கிகள் இருக்கும். அதில் அந்த படத்தின் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இடையிடையே பெரிய வீதிகளின் சந்திப்புகளில் காரை நிறுத்தி, ஒலிவாங்கி (மைக் - சமீபத்தில் தெரிந்து கொண்ட ஒரு தமிழாக்க வார்த்தை) பிடித்து படத்தின் அருமை பெருமைகளை பேசுவார்கள். அப்படியே துண்டு பிரசுரங்களையும் தருவார்கள். இப்படி கார்கள் வந்தவுடன் ஊரில் இருக்கும் எல்லா சின்ன பிள்ளைகளும் காரைச் சுற்றித் தான் நிற்பார்கள். கூட்ட கூட்டமாய் அந்த துண்டு பிரசுரங்களை வாங்க பலத்த போட்டியே இருக்கும். கார் கிளம்பும்போது அந்த காரின் பின்னே எல்லோரும் ஓடுவார்கள். அந்த கூட்டத்திலே நான் இருந்திருக்கிறேன் பல முறைகள்.

என்ன இன்று ஒரே கார் கதையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா.. அந்த எம்பெருமான் முருகனின் கருணையினால், கடந்த வாரம் வியாழக்கிழமை ஒரு காரின் உரிமையாளனாக ஆக்கப்பட்டேன். வாழ்வின் அடுத்த கனவொன்று நிறைவேறியது. கார், நிசான் அல்டிமா 98-ம் வருட மாடல். கிட்டதட்ட 84000 மைல்கள் பயணித்துள்ளது. சிறு வயதில், நடராஜா சர்வீஸ்.. அடுத்து, சைக்கிள்.. அப்புறம், M-80.. சென்னை வந்த பிறகு, ஸ்ப்ளெண்டர்.. இப்போது, கார்.. ஆண்டவன் நம்மை ஒவ்வொரு படிக்கட்டாக மெதுவாக ஏற்றுகிறான் என்று அறிந்து சந்தோசம் கொண்டேன்.. அப்பா, அம்மாவிடம் சொன்ன போது அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி..

இங்கே அந்த மகிழ்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே! விரைவில் அதன் புகைப்படங்களை இங்கே இடுகிறேன்!

54 பின்னூட்டங்கள்:

said...

Congrats and hats off to you karthick:)

Way to go- adhan miles nu solvanga.

said...

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் உண்டு என்றாலும் நீங்க கொஞ்சம் கூடப் பழைய வாழ்க்கையை மறக்காமல் ஆண்டவனின் கருணையை எண்ணி வியக்கிறீர்கள் அல்லவா? உங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் three cheers for you KARTHIK,
HIP HIP HURRAY
HIP HIP HURRAY
HIP HIP HURRAY
Bless You and your family.

said...

சிற்றுந்து வாங்கியதற்கும் சிற்றுந்தில் பேரூரெல்லாம் சென்று களித்து வரவும் எமது மனமார்ந்த வாழ்துக்கள்..

said...

படிப்படியாக முன்னேறியதை தெளிவா விரிவா அருமையா எழுதி இருக்கீங்க..

எங்க ஊர் பக்கம், நீங்க சொன்ன பெரிய கட்டை சக்கரம் கொண்ட வண்டியை கட்டை வண்டினு சொல்லுவோம்.. (இன்னொன்னு டயர் வண்டி).. மாட்டு வண்டி பிரயாணம்லாம் ஒரு காலத்துல பண்ணது.. அந்த இனிய நினைவுகளை ஞாபகப்படுத்திட்டீங்க.. :))

said...

வாழ்த்துக்கள். நல்ல சாய்ஸ். Nissan Altima நல்ல கார். அதுவும் 4 சிலிண்டர் கார் தான் என்றாலும் மத்த 4 சிலிண்டர் கார்களை விட horsepower & torque ஜாஸ்தி.. அதனால ஒரு மிதி மிதிச்சா பறக்கும். அல்டிமா ஓட்டிட்டு சத்தியமா Toyota Corolla, Honda Civic, 4 cylinder Camry எல்லாம் ஓட்டமுடியாது.. அதுல அவ்ளோ பவர்/torque கிடையாது. அருமையான செலக்ஷன் - take it from an Altima owner for 9 years :-) போன வருசம் தான் ஒரு சின்ன விபத்தில் சேதமாகி விக்கவேண்டியிருந்தது.

Anonymous said...

congrats karthi. it's so nice to see your progress step by step.

next dum dum dum thaan! :p

said...

hi kaarthik!!
congrats on your new car...
oru car vanginathuku ivalvu periya post ungalala matum thaan poda mudiyum
Ularuthal en ullathin velai relay thodar kavithai naanum ezhuti iruken.. link http://dubukudisciple-dubukudisciple.blogspot.com/2007/03/blog-post_14.html
parthutu sollunga!!!

said...

//என்ன இன்று ஒரே கார் கதையாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா.. அந்த எம்பெருமான் முருகனின் கருணையினால், கடந்த வாரம் வியாழக்கிழமை ஒரு காரின் உரிமையாளனாக ஆக்கப்பட்டேன். வாழ்வின் அடுத்த கனவொன்று நிறைவேறியது.//

ஏற்கனவே உங்க பெயரிலேயே இருக்கிற "கார்" உங்களுக்குச் சொந்தமில்லையா ? :-)))

said...

வாழ்த்துக்கள் கார்த்தி.. நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் தல. :-)

said...

நீங்க கண்ணாடி போட்டுக்கிட்டு போஸ் கொடுத்து நிக்குறீங்களே.. அதுக்கு பின்னால் ஒரு சில்வர் கலர் கார் நிக்குதேஊ.. அதுதானா? ;-)

Anonymous said...

Vaashthukkal "CAR"thik ;-)

said...

இந்த CAR கால கதையையும் ஒரு AUTOGRAPH சேரனைப் போல் சொல்லி மறுபடியும் நீங்களும் ஒரு கதாசிரியர் தான் என்பதை நிரூபிச்சீட்டீங்க வாத்தியாரே! உங்கள் Family ல் புதிய வரவான அந்த காருக்கும் அதைப் பெற்ற(!) உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்... :-)

Anonymous said...

Dear Karthi,
Car kalam - Padhivin thalaipum, ungal nadaiyum azhagaga irukiradhu.

CAR CAALA KADHAI
EZHUDHIYA
CAR KONDA KARTHI
CAR INRI AMAIYADHA USA VAI
INI
CARINAL KAI KOL

With Love,
Usha Sankar.

said...

Congrats thala..

said...

//
நிசான் அல்டிமா
//
en inamada nee :-)

said...

உங்க சந்தோஷத்த நானும் பகிர்ந்துக்குறேன்...
கார் வாங்கி , (அதுவும் நான் வச்சிருக்குற கார வாங்கி) கலக்கிட்டீங்க.

தலைப்பு நல்ல திங்கிங் !!!

said...

உங்க கிராமத்து அனுபவத்த வழக்கம்போல சுவையா சொல்லியிருக்கீங்க கார்த்தி !!!

அடுத்தது அம்பி சொன்னது தான் :P

said...

//
சிறு வயதில், நடராஜா சர்வீஸ்.. அடுத்து, சைக்கிள்.. அப்புறம், M-80.. சென்னை வந்த பிறகு, ஸ்ப்ளெண்டர்.. இப்போது, கார்.. ஆண்டவன் நம்மை ஒவ்வொரு படிக்கட்டாக மெதுவாக ஏற்றுகிறான் என்று அறிந்து சந்தோசம் கொண்டேன்..
//
சூப்பர்
நமக்கும் அதே தான் M-80 தவிர :)

said...

கார்த்திக், வாழ்த்துக்கள். உங்கள் கதை என்னை நெகிழவைக்கிறது. அடுத்த கார் புதிய பென்ஸ் அல்லது BMW ஆக இருக்க வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் புதிய வீடு வாங்குங்கள். திருமணம் செய்துக் கொண்டு பெருவாழ்வு வாழ மனமார வாழ்த்துகிறேன்

said...

Congrtas 'Car'thik! Kalakkunga..

//வாழ்வின் அடுத்த கனவொன்று நிறைவேறியது.//
innum pala kanavugal niraivera vazhthukkal.. adutha kanavu kalyana kanavu dhane :)

//சிறு வயதில், நடராஜா சர்வீஸ்.. அடுத்து, சைக்கிள்.. அப்புறம், M-80.. சென்னை வந்த பிறகு, ஸ்ப்ளெண்டர்.. இப்போது, கார்.. ஆண்டவன் நம்மை ஒவ்வொரு படிக்கட்டாக மெதுவாக ஏற்றுகிறான் என்று அறிந்து சந்தோசம் கொண்டேன்.. //
aduthadhu katchikkaga helicopter vanga vazhthukkal...

said...

வாழ்த்துக்கள் தல...கார் ஹெலிக்காப்டர் ஆகி அப்புறம் ஏரோபிளான் ஆகி அப்புறம் ராக்கெட் வாங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....:-)

said...

அப்படியே ஸ்கூல் டேஸ்ல ஊருக்கு போன எபக்ட் இந்த போஸ்ட் படிக்கும் போது :-)

said...

சரி தல கார் வாங்கிட்டார்...அண்ணன் முத்துக்கு ஒரு போன போட்டு பொன்னு பாக்க சொல்லுங்கப்பா... :-)

said...

//Congrtas 'Car'thik! Kalakkunga..//

@priya...LOL...super peru :-)

said...

வாழ்த்துக்கள் கார்த்தி..

Front Passenger seatக்கும் சீக்கிரமே ஆளை பிடிங்க :))))

said...

கார்த்திக் Congrats.

சரி பார்ட்டி எப்ப? அன்றோரு நாள் National Geographic ல வ்ந்த விலங்கு லாம் சமைச்சிருந்தீங்க அதே மாதிரி இப்பவும் சமைச்சு கூட Heineken அன்ட் Corona வாங்கி வெச்டீங்னா இந்த வீகென்ட் கொலம்பஸ் தான் என்ன சொல்லுறீங்க?

said...

//Congrats and hats off to you karthick:)

Way to go- adhan miles nu solvanga.//

வாழ்த்துக்கு நன்றிங்க ப்ரியா

said...

/உங்கள் உழைப்புக்கும் திறமைக்கும் three cheers for you KARTHIK,
HIP HIP HURRAY
HIP HIP HURRAY
HIP HIP HURRAY
//

உங்கள் உற்சாக வாழ்த்துக்கு நன்றிங்க மேடம்

said...

/சிற்றுந்து வாங்கியதற்கும் சிற்றுந்தில் பேரூரெல்லாம் சென்று களித்து வரவும் எமது மனமார்ந்த வாழ்துக்கள்..

//

உந்துதலான சொற்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க ACE..

said...

/ மாட்டு வண்டி பிரயாணம்லாம் ஒரு காலத்துல பண்ணது.. அந்த இனிய நினைவுகளை ஞாபகப்படுத்திட்டீங்க.. //

எழுதும் போது நானும் இப்படித் தான் பின்னோக்கி பயணம் செய்தேன் ACE..

said...

/வாழ்த்துக்கள். நல்ல சாய்ஸ். Nissan Altima நல்ல கார்.//

வாழ்த்துக்கு நன்றிங்க அரசி

said...

//congrats karthi. it's so nice to see your progress step by step.

next dum dum dum thaan! //

அதே அதே தான் அம்பி.. வாழ்த்துக்கு நன்றிப்பா

said...

/oru car vanginathuku ivalvu periya post ungalala matum thaan poda mudiyum//

சும்மா கார் வாங்கி இருக்கேன்னு சொன்னா நல்லாவா இருக்கும் டுப்புக்கு..

உங்க தொடர் கவிதையும் படித்தேன்.. அருமையா உருகி இருக்கீங்க டுபுக்கு

said...

//ஏற்கனவே உங்க பெயரிலேயே இருக்கிற "கார்" உங்களுக்குச் சொந்தமில்லையா //

நீங்க தமிழ்ல பெரிய ஆளு என்பதை தொடர்ந்து நிரூபித்துவர்றீங்க பாலராஜன்கீதா :-)

said...

/வாழ்த்துக்கள் கார்த்தி.. நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் தல//

வாழ்த்துக்களுக்கு நன்றி மை பிரண்ட்

said...

/அதுக்கு பின்னால் ஒரு சில்வர் கலர் கார் நிக்குதேஊ.. அதுதானா? //

அது நாங்கள் ட்ரிப் போன பொழுது எடுத்த வாடகைகார், மை பிரண்ட்

said...

//Vaashthukkal "CAR"thik //

Thanks Haniff :-)

said...

/மறுபடியும் நீங்களும் ஒரு கதாசிரியர் தான் என்பதை நிரூபிச்சீட்டீங்க வாத்தியாரே!//


//உங்கள் Family ல் புதிய வரவான அந்த காருக்கும் அதைப் பெற்ற(!) உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்... //

வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் நன்றிங்க செந்தில்..

said...

/CAR CAALA KADHAI
EZHUDHIYA
CAR KONDA KARTHI
CAR INRI AMAIYADHA USA VAI
INI
CARINAL KAI KOL//

அழகான வாழ்த்துக்கு நன்றிங்க உஷா..

said...

//காரை ஓட்ட தான் முடியல அட்லீஸ்ட் எங்க கண்ணுலையாவது காட்டுங்க//

கட்டாயம் புகைப்படம் எடுத்து போடுறேங்க வேதா.. வாழ்த்துக்கு நன்றிங்க துணை முதல்வரே

said...

//என்ன ஒரு டைமிங்கான தலைப்பு:)//

:-)

said...

//Congrats thala.. //

Thanks Arun :-)

said...

/en inamada nee :-) //

ore inam.. ore kaar :-)

said...

/உங்க சந்தோஷத்த நானும் பகிர்ந்துக்குறேன்...
கார் வாங்கி , (அதுவும் நான் வச்சிருக்குற கார வாங்கி) கலக்கிட்டீங்க.

தலைப்பு நல்ல திங்கிங் !!! //

வாழ்த்துக்கு நன்றி அருண்.. ரொம்ப ஆணி போல இப்போ எல்லாம் :-)

said...

//சூப்பர்
நமக்கும் அதே தான் M-80 தவிர :) //

என் இனமடா நீ! ரிப்பீட்டே!

said...

/கார்த்திக், வாழ்த்துக்கள். உங்கள் கதை என்னை நெகிழவைக்கிறது. அடுத்த கார் புதிய பென்ஸ் அல்லது BMW ஆக இருக்க வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரம் புதிய வீடு வாங்குங்கள். திருமணம் செய்துக் கொண்டு பெருவாழ்வு வாழ மனமார வாழ்த்துகிறேன் //

வாழ்த்துக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றிங்க சிவா

said...

//aduthadhu katchikkaga helicopter vanga vazhthukkal... //

ப்ரியா.. கலக்கிட்டீங்க போங்க.. நமக்கு உதிக்காத யோசனை.. கட்சி மேலதான் உங்களுக்கு என்ன ஒரு பற்று :-)

வாழ்த்துக்கு நன்றி ப்ரியா

said...

//வாழ்த்துக்கள் தல...கார் ஹெலிக்காப்டர் ஆகி அப்புறம் ஏரோபிளான் ஆகி அப்புறம் ராக்கெட் வாங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....//

எப்படிப்பா எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறீங்க..

வாழ்த்துக்கு நன்றிங்க நாட்டாமை

said...

//அப்படியே ஸ்கூல் டேஸ்ல ஊருக்கு போன எபக்ட் இந்த போஸ்ட் படிக்கும் போது//

எழுதுறப்போ எனக்கும், நாட்டாமை

said...

//சரி தல கார் வாங்கிட்டார்...அண்ணன் முத்துக்கு ஒரு போன போட்டு பொன்னு பாக்க சொல்லுங்கப்பா... //

அடடா! ஆனா ஊன்னா பொண்ணு பாக்க சொல்றீங்க.. உங்களுக்குத் தான் என் மேல என்ன ஒரு பாசம்..

said...

ஆகா! இந்தப் பதிவை கவனிக்காம வுட்டுட்டேன் நண்பா.

வெரிகுட்.... வாழ்த்துக்கள்!!!

said...

congrats karthi.

said...

/ஆகா! இந்தப் பதிவை கவனிக்காம வுட்டுட்டேன் நண்பா.

வெரிகுட்.... வாழ்த்துக்கள்!!!

//

நன்றி வேகப் பந்து வீச்சே!

இது தான் உங்களின் முதல் பந்து இங்கன்னு நினைக்கிறேன்.. நன்றி :-)

said...

/congrats karthi. ///


Thanks Bala