Friday, March 23, 2007

அரசியல் பயணங்களும் அனிதாவின் நினைவுகளும்

முதன் முதலாக நான் தேர்தல் பிரச்சாரம் பண்ணியது என்னுடைய பத்தாவது வயதில். அப்போது என் தாத்தாவின் நண்பர் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். என் தாத்தா பத்திர எழுத்தாளராக இருந்ததால், எங்கள் பஞ்சாயத்து மட்டுமல்ல, திண்டுக்கல்லை சுற்றி இருக்கிற அதிகமான கிராம மக்களுக்கு தெரிந்தவர். அதனால் சனி, ஞாற்றுகிழமைகளில் அவரும் தனது நண்பருக்காக, எங்கள் பஞ்சாயத்தில் இருக்கின்ற எல்லா ஊருக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அவர் கூட நானும் செல்வேன். ஒரு மினி வேனில் தான் அழைத்துசெல்வார்கள். என் கூட, என் வயதையொத்த இன்னும் சில பசங்களும் இருந்தார்கள். வேன் ஒரு ஊரின் எல்லையை தொட்டவுடன் நாங்கள் கத்த ஆரம்பிப்போம் கோஷங்களை. 'இந்த படை போதுமா'விலிருந்து, 'போடுங்கம்மா ஓட்டு பம்பரச் சின்னத்தை பார்த்து' வரை உரக்க சொல்வோம். அந்த அந்த ஊருக்கு எங்கள் வேன் போனவுடன் அந்த ஊரில் இருக்கும் மற்ற சின்ன பசங்களும் எங்கள் கூட சேர்ந்துகொள்வார்கள். மொத்தமாக நாங்கள் ஒன்று கூடி அந்த ஊரின் எல்லா வீதிகளிலும் கோஷங்களை கத்தியபடி செல்வோம். ஒரு சுற்று முடிந்து வந்த பிறகு, எங்களுக்கு காபி, டீயோ, மிக்க்ஷர் பாக்கெட்டோ, உள்ளூர் குளிர்பானங்களோ தருவார்கள். எனக்கு இந்த திண்பண்டங்களில் எல்லாம் எங்கள் கடையிலே இருப்பதால் பெரும் நாட்டமில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு பிரச்சாரத்துக்கு சென்ற போது தான், என் பஞ்சாயத்தின் எல்லா ஊரையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.. அதுவரை எனது ஊரும் திண்டுக்கல்லும், இடையில் இருக்கும் சில ஊர்கள் மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.

இந்த ஊர்களைத் தவிர, நான் கான்வென்டில் படித்த போது, என் கூட படித்தவர்களின் ஊர் பேரும் தெரியும். முக்கியமா, ஒடிசலா, கிராப் வெட்டப்பட்டு என்கூட ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்த அனிதாவின் ஊர் நல்லாவே தெரியும். முதல் முதலா த்ரிஷாவை லேசா லேசா படப் போஸ்டர்களில் பார்த்தபோது, அவளை பெரிய பிள்ளையாகி பார்த்த மாதிரி இருந்தது. என் பள்ளியில் ஒரு பையனுக்கு பக்கத்தில் ஒரு பொண்ணுன்னு மாற்றி மாற்றி தான் உட்கார வைத்திருப்பார்கள். அவள் என் பக்கத்தில் தான் உட்காருவாள். அப்போ என் வகுப்புல என்னோட சேர்த்து நாலு பேரு பெயர் கார்த்தி. அதனால என்னை எல்லோரும் 'எம்'னு தான் கூப்பிடுவாங்க.. ஏற்கனவே எனக்கு ஆறாம் வகுப்புக்கு மேல 'வி.எம்'னு கிடைத்த இன்னொரு பெயர் தெரியும் உங்க எல்லோருக்கும்.. கார்த்தி என்ற பேர் அவ்வளவு பிரசித்தி என் வயதில்.. அனிதா திண்டுக்கல் பக்கத்தில் இருக்கும் சிலுவத்தூர் என்ற ஊரில் இருந்து பேருந்தில் வந்து செல்வாள். ரொம்ப நல்ல பிரண்ட். நான் கொஞ்சம் சுட்டி. முன்னாடி உட்கார்ந்து இருக்க ரெண்டு பொண்ணுங்க சடையையும் சேர்த்து கட்டிவிட்டுருவேன். யாராவது சண்டைக்கு வந்த, அது கூட தெரியாத அளவுக்கு நீங்க ஏன் இருக்கீங்கன்னு எனக்கு சப்போர்ட்டுக்கு வருவாள்.. அப்போ எல்லாம் பிரியப்போறோம் அப்படிங்கிற சோகம் எல்லாம் கிடையாது. அதனால அப்போ ஒண்ணும் தெரியவில்லை, அஞ்சாவது முடிச்சு திரும்பி வர்றப்போ. அதற்கு பிறகு, ஒரு பதினைந்து வருஷத்துக்கு அப்புறம், தூரத்து சொந்தத்தின் கல்யாணத்திற்காக அந்த ஊருக்கு போனேன். அந்த ஊர் பெயரை பார்த்தவுடன் அவள் முகம் தான் நெஞ்சில் வந்தது.

அப்படி பல ஊர் பெயரை நான், இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் தெரிந்து கொண்டேன். அந்த தேர்தலில் என் தாத்தாவின் நண்பர் தான் வெற்றிபெற்றார். எனக்கெல்லாம் பயங்கர சந்தோசம். நானும் தேர்தல் பிரச்சாரம் பண்ணினோம்ல. என் அப்பா பக்கா அதிமுககாரர். எம்ஜியார் இறந்த பிறகு, ஜானகி எம்ஜியார் தலைமையில் இருந்த அதிமுக(ஜா) பிரிவில் திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதியாக இருந்தார். பல கட்சிக்கூட்டங்களுக்கும் செல்வார். ஒரு முறை என்னை காந்திகிராம தம்பித்தோட்டம் பள்ளியில் சேர்த்துவிட்டு, என் அப்பா பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன் (இரண்டு முறை திண்டுக்கல் எம்.பியாக இருந்தவர். சில காலம், அதிமுக பொருளாளராகவும் இருந்தவர்), என் அப்பாவின் பெயர் சொல்லி அழைத்து காரில் ஏற்றிக்கொண்டு, எங்களை எங்களது பிரிவில் இறக்கிவிட்டார். அப்போது தான் எனக்கே தெரியும், என் அப்பாவுக்கு மாவட்ட அளவில் கட்சியில் இருந்த நல்ல பெயர். அதன் பிறகு அடிக்கடி கட்சி கூட்டத்திற்கு சேர அழைப்பு வரும். நாங்கள் கடை வைத்திருப்பதால், அடிக்கடி அப்பா அப்படி செல்வது சிரமமாக இருந்தது. அதன் பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

1996-இல், ரஜினியின் வாய்ஸிற்கு பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பிறகு, கட்சியை பலப்படுத்த எல்லாக் கட்சியிலும் இருப்பதுபோல இளைஞர், மகளிர், மாணவ அணியினை உருவாக்கினர். எங்கள் ஊரில், எனக்குத் தெரிந்து இன்னமும் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருக்கும் ஒருவர், எங்கள் கடைக்கு அடிக்கடி வருபவர் அவர், என்னிடம் வந்து தமிழ் மாநில காங்கிரஸில் சேர ஆர்வமா என்று கேட்டார். அப்போது ரஜினியின் ஆதரவு இருந்தது அந்த கட்சிக்கு. நான் அப்போது கல்லூரியில் பி.எஸ்.சி முதல் வருடம் படித்துகொண்டிருந்தேன். அவர் கேட்டதற்கு சரி என்று பதிலும் அளித்து விட்டேன். அவர் கொடுத்த விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்தும் கொடுத்தேன். ஒரு வாரத்திற்கு பிறகு என்னை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் ஒன்றியத் தலைவராக நியமித்து ஜி.கே.மூப்பனார் மற்றும் அப்போது திண்டுக்கல் மாவட்ட மாணவ அணித் தலைவர் (அவர் பெயர் மறந்துவிட்டது) கையெழுத்துடன் கடிதம் வந்திருந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம் ஒரு புறம் சிரிப்பு ஒரு புறம். அடப்பாவிகளா! கட்சியில் இருக்கும் தொண்டர்களை விட பதவிகளின் எண்ணிக்கை அதிகம் போலும் என்று நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு இரண்டு கூட்டதிற்கும் சென்று வந்தேன்.. அதன் பிறகு என் அம்மா இதெல்லாம் படிக்கிற காலத்தில் வேண்டாம் என்று சொன்னதால், அழைப்பிதழ்கள் வந்தாலும் போவதை நிறுத்திவிட்டேன். அவர்களும் ஆறு மாதங்களுக்கு பிறகு அழைப்பிதழ் அனுப்புவதை நிறுத்தியும் விட்டனர்.

எனக்கு சினிமா எப்படியோ அது போல தான் அரசியலும். ஒரு நாளிதழை படிக்க எடுத்தால், முதலில் சினிமா செய்திகளையும் அடுத்து அரசியல் செய்திகளையும் படிப்பேன். ஆனால் பெரும்பாலும் அரசியல் பற்றி யாரிடமும் தர்க்கம் செய்யமாட்டேன். ஆனால் நண்பர்களிடம் காரசார விவாதம் இருக்கும். எனது அரசியல் வாழ்க்கை(?) இப்படித்தான் இருந்தது, சென்னைக்கு வந்து ஒரு வேலையில் சேருகின்ற வரை.

68 பின்னூட்டங்கள்:

said...

கார்த்திகேயன்,
நல்லாருக்கு பதிவு.
//சென்னைக்கு வந்து ஒரு வேலையில் சேருகின்ற வரை.//
என்ன கடைசில இப்படி ஒரு பிட்ட போட்டுடீங்க .இப்போ எந்த கட்சியிலாவது சென்னை மாவட்ட செயலாளரா இருக்கீங்களா என்ன?

said...

adhan ingayum mudhalvar aaicharavai nu allolakallola padudhu!

said...

//என் பள்ளியில் ஒரு பையனுக்கு பக்கத்தில் ஒரு பொண்ணுன்னு மாற்றி மாற்றி தான் உட்கார வைத்திருப்பார்கள். //

ahaa, ithuvallava school! very good. very good. :)

said...

Hello!
This work is very good. thank you
have a good weekend

said...

அதான் சேர்த்து வைச்சு இப்ப பி.மு.க தலைவர் ஆகிட்டீங்கல்ல:)அது உங்க ராசி சினிமாவும் அரசியலும் எங்க போனாலும் உங்கள விடாது போலிருக்கு.அடுத்து சினிமா தான?:)

said...

/என் பள்ளியில் ஒரு பையனுக்கு பக்கத்தில் ஒரு பொண்ணுன்னு மாற்றி மாற்றி தான் உட்கார வைத்திருப்பார்கள். /
நானெல்லாம் சென்னையில் தான் படிச்சேன் இங்கேயே அப்டியெல்லாம் உட்கார வைக்கறதில்லை:)உங்க பள்ளி ரொம்ப நல்ல பள்ளிங்கோ:)

said...

இவ்வளவு பெரிய ஆளா நீங்க?

சரி சென்னைக்கு வந்தப் பொறவு என்ன ஆச்சு.. சென்னை உங்களைப் போடா வெண்ணெய்ன்னு சொல்லிடல்லீயே? ( ச்சும்மா தமாஸாத் தான் கேக்குறேன்)

said...

அப்புறம் என்ன ஆபீஸ் அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க. அதானே!! :))

said...

அட, என்னடா, எல்லாருக்கும் பதவிகளை அள்ளிக் குடுக்கிறாரேன்னு நினைச்சேன், ம்ம்ம்ம்ம்ம்.,.,.,.,.,., ப்ரம்பரை அரசியல்வாதியா? வாழ்த்துக்கள்!!!!!!! :)))))) துணை முதலை அமைச்சர் சொன்னாப்பல அடுத்து சினிமாதானே? :D

said...

kalakuringa karthik

said...

Nalla arasiyal anubavam nga Karthik....

said...

//பிரச்சாரம் பண்ணியது என்னுடைய பத்தாவது வயதில்.//

adra sakka, andha chinna vayasulai'ey eppadi'nga thala?

//என் தாத்தாவின் நண்பர் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக போட்டியிட்டார்.//

suthu pattti'um sukku kaapi kai'oda vandhu irukanumey?

C.M.HANIFF said...

Enakkum intha mathiri anubavam undu, kootathil podungamma votu enru ;-)

said...

//'இந்த படை போதுமா'விலிருந்து, 'போடுங்கம்மா ஓட்டு பம்பரச் சின்னத்தை பார்த்து' வரை உரக்க சொல்வோம். //

oh avlo early'vey ungalukku indha slogans ellam theriumaaaa?

parava illa thala, neeenga thaaan namma katchi'ku sare aaana thalai..neeenga thaaan enga imai'a malai, yaarachum virichaangana valai, appuram andha idathula vilum ko..................lai

said...

//ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்த அனிதாவின் ஊர் நல்லாவே தெரியும்.//

thala, ipppa andh anitha madam enga irrukaanga'nu theriumaaa?

//உட்கார்ந்து இருக்க ரெண்டு பொண்ணுங்க சடையையும் சேர்த்து கட்டிவிட்டுருவேன்.//
naan idhu maadhiri panni, teacher kitta dharam adi vaaangi irruken...

said...

//அந்த ஊர் பெயரை பார்த்தவுடன் அவள் முகம் தான் நெஞ்சில் வந்தது.
//

adra adra... idha idha thaang'a edhir paaarthen...

//), என் அப்பாவின் பெயர் சொல்லி அழைத்து காரில் ஏற்றிக்கொண்டு, எங்களை எங்களது பிரிவில் இறக்கிவிட்டார். //

kumbudren saaami...

//தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியின் ஒன்றியத் தலைவராக நியமித்து ஜி.கே.மூப்பனார் மற்றும் அப்போது திண்டுக்கல் மாவட்ட மாணவ அணித் தலைவர் (அவர் பெயர் மறந்துவிட்டது) கையெழுத்துடன் கடிதம் வந்திருந்தது. //
wow... super ponga....

said...

//எனது அரசியல் வாழ்க்கை(?) இப்படித்தான் இருந்தது, சென்னைக்கு வந்து ஒரு வேலையில் சேருகின்ற வரை.
//

idho ippo Us la keeeereeenga, anga poi indha blog ulagathaium oru kalaku kalakureeeenga..

vaazhthukal thalaivarey....

said...

//அனிதாவின் ஊர் நல்லாவே தெரியும்//
ரணகளத்திலயும் ஒரு குதூகலம்:-)

உங்க அரசியல் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை - அத பாக்க நெறய பேர் இருக்கிறதுனால, வேணாம்.
இந்த பிளாக் சேவை எங்களுக்குத் தேவை :)

said...

/என்ன கடைசில இப்படி ஒரு பிட்ட போட்டுடீங்க .இப்போ எந்த கட்சியிலாவது சென்னை மாவட்ட செயலாளரா இருக்கீங்களா என்ன?//

அதெல்லாம் இன்னும் கனவுல இருக்குங்க, ஜோ.. பார்ப்போம் அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்குதான்னு :-)

said...

தல, நெஜமாலுமே நீங்க தல தானா.. ஆகா.. ஆச்சர்யபடுத்தறீங்க..

//அதெல்லாம் இன்னும் கனவுல இருக்குங்க,//

கனவு நினைவாக வாழ்துக்கள்

said...

maams....arasiyalayum kaal vachacha...naan verum b.m.k dhaan neen start pannina first katchinu nenachen....aduku munnadiye poondu velayaadi irukeenga :)

said...

yaaru adhu arasiyalla vandha apram cinemaku poradhu?! ellarum cinemmala irundhu thaane arasiyaluku povanga?? :-/

said...

aama santos enna solraru? unga yaarukachum puriyudhungla? :)

said...

//adhan ingayum mudhalvar aaicharavai nu allolakallola padudhu! //

ஏதோ நமக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்குல்ல, பொற்கொடி :-)

said...

//ahaa, ithuvallava school! very good. very good//


நல்லா ஆட்டம் போட்டோம் அந்த சின்ன வயசுல அம்பி.. நல்ல பள்ளி அது

said...

//அடுத்து சினிமா தான?:) //

சின்ன வயசுல இருந்து அந்த கனவு இருக்குங்க வேதா..

பார்ப்போம், தமிழ்நாட்டோட தலையெழுத்து எப்படி இருக்குன்னு :-)

said...

//உங்க பள்ளி ரொம்ப நல்ல பள்ளிங்கோ//

நான் மூணாவது படிச்ச போது தான் இந்த மாதிரி இடம் மாற்றினார்கள்.. ஏன் எதற்கு என்றெல்லாம் அப்போ தெரியாதுங்க வேதா

said...

/சென்னைக்கு வந்தப் பொறவு என்ன ஆச்சு.. //

அது தான் தனி தொடரா வருதே தேவ்

said...

/அப்புறம் என்ன ஆபீஸ் அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க.//

ஆபீசுல அரசியலா.. இருக்கிற மக்கள் பண்ற அரசியல் போதாதா, கொத்ஸ்..

said...

/ப்ரம்பரை அரசியல்வாதியா? வாழ்த்துக்கள்!!!!!!! :)))))) //

எப்படி இருந்தாலும் நீங்க தான் என் தன்னிகர் தலைவி..

said...

/kalakuringa karthik //

வாங்கி கும்மி... நல்லா அடிங்க கும்மி!

கலக்குறது எல்லாம் இல்லைங்க. ஏதோ நடந்ததை சொல்றேன்

said...

ஓ! இது ஒரு அரசியல் பதிவா? ஹீஹீ..

சின்ன வயசுல பிரசாரத்துக்கெல்லாம் போவீங்களா?

said...

எலேய் தம்பி கார்த்தி.. இப்போ விஷயம் புரியுதுலே! உங்கவிதைக்கு திரிஷா அக்கா..அன்.. சார்ரி.. அனிதா அக்காதான் காரணமோ?

said...

//என் பள்ளியில் ஒரு பையனுக்கு பக்கத்தில் ஒரு பொண்ணுன்னு மாற்றி மாற்றி தான் உட்கார வைத்திருப்பார்கள்//

என் ஆரம்ப கால பள்ளியிலேயும் அப்படித்தான் கார்த்தி.. ;-)

said...

//Nalla arasiyal anubavam nga Karthik.... //

உண்மையிலே ராஜி.. இதெல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள்..

said...

/adra sakka, andha chinna vayasulai'ey eppadi'nga thala?

//

கூச்சம் எல்லாம் தெரியாத வயசு அது, கோப்ஸ்.. அதுனால புகுந்து விளையாடினோம்

said...

//Enakkum intha mathiri anubavam undu, kootathil podungamma votu enru//

எவ்வளவோ அனுபவங்களை புதச்சு வச்சிருக்கீங்களே, ஹனிஃப்..

நீங்களும் எழுதலாமே, ஹனிஃப்

said...

//parava illa thala, neeenga thaaan namma katchi'ku sare aaana thalai..neeenga thaaan enga imai'a malai, yaarachum virichaangana valai, appuram andha idathula vilum ko..................lai //

இதையெல்லாம் மேடையில் அவிழ்த்துவிடுப்பா, கோப்ஸ்.. கலக்குற போ

said...

//thala, ipppa andh anitha madam enga irrukaanga'nu theriumaaa?//

சத்தியமா தெரியாது கோப்ஸ் :-(

said...

//naan idhu maadhiri panni, teacher kitta dharam adi vaaangi irruken...
//

கோப்ஸ், இதுலையும் நீ நம்ம ஆளா

said...

/idho ippo Us la keeeereeenga, anga poi indha blog ulagathaium oru kalaku kalakureeeenga..

vaazhthukal thalaivarey....
//

நன்றிப்பா கோப்ஸ், வாழ்த்துக்கும், இத்தனை பின்னூட்டதுக்கும்

said...

//உங்க அரசியல் சேவை தமிழ்நாட்டுக்குத் தேவை - அத பாக்க நெறய பேர் இருக்கிறதுனால, வேணாம்.
இந்த பிளாக் சேவை எங்களுக்குத் தேவை//

செந்தில், உங்க பாசத்துக்கு..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரொம்ப நன்றிங்க செந்தில்

said...

//தல, நெஜமாலுமே நீங்க தல தானா.. ஆகா.. ஆச்சர்யபடுத்தறீங்க//

இந்த அனுபவங்களை வச்சு கோட்டையை பிடிக்கமுடியுமா ACE..

பேசாம எந்த கட்சிலையாவது சேர்ந்துடலாம்னா, ஏற்கனவே அங்க குடுமிபிடி சண்டை தான் ACE..

said...

//maams....arasiyalayum kaal vachacha...naan verum b.m.k dhaan neen start pannina first katchinu nenachen....aduku munnadiye poondu velayaadi irukeenga//

நம்மை சுத்தி இருக்கவங்க அப்படி.. கிராமத்துல, அதுவும் ஊர் நடுவில் இருந்த எல்லா விஷயங்களும் இப்படித் தான் நமக்குள்ள பூந்து இருக்கும், பரணி

அப்படி வந்தது தான் இந்த சினிமாவும், அரசியலும்

said...

/yaaru adhu arasiyalla vandha apram cinemaku poradhu?! ellarum cinemmala irundhu thaane arasiyaluku povanga?? //

எப்படி லாகிக்கா கேள்வி கேக்குறாங்க பாருங்க பொற்கொடி..

ஆமா பொற்கொடி, பாயிண்டர்ஸ் படிச்சிட்டீங்களா

said...

தல, இப்போ ரெண்டாவது தடவ படிக்கும் போது தான், ஒரு டவுட்டு.. நீங்க அரசியல்ல அஞ்சாப்பு படிக்கறதுல இருந்து இருக்கீங்க.. சரி, அதுக்கும் அனிதாக்கும் என்ன சம்பந்தம்.. ஒரு சைக்கிள் கேப்புல உங்க ஆட்டோகிராப்-அ எடுத்து விட்டுடீங்க.. என்ன நடக்குதுங்க.. கூடிய சீக்கிரம் தலைவி வரப்போறாங்களா??

said...

//இந்த அனுபவங்களை வச்சு கோட்டையை பிடிக்கமுடியுமா ACE..
//

என்ன தல இப்படி கேட்டுட்டீங்க.. தலன்னா சும்மாவா?? நாட்டை புடிச்சு கோட்டையில கொடிய ஏத்திடுவோம்.. கவலைய விடுங்க..

(நம்மள மட்டும் மறந்துடாதீங்க..:) :) )

said...

கார்த்தி.. எப்பவும் போல்ல நாம இப்ப தான் வரோம்... லேட்டா :(

said...

எங்க தாத்தாவும் நின்னாரு! நம்ம அம்மா கட்சியில! எனக்கு தான் அவகள பிடிக்காதே ;)

said...

//பிள்ளையாகி பார்த்த மாதிரி இருந்தது. என் பள்ளியில் ஒரு பையனுக்கு பக்கத்தில் ஒரு பொண்ணுன்னு மாற்றி மாற்றி தான் உட்கார வைத்திருப்பார்கள்//

adadaa! naanum padicha oru schoolla appadi thaan! appo enkooda utkaarndha ponnu peru krithika. naan college padikkum varai, ennai da pottu koopitta ore thozhi avanga thaan :)

said...

//எனக்கு சினிமா எப்படியோ அது போல தான் அரசியலும். ஒரு நாளிதழை படிக்க எடுத்தால், முதலில் சினிமா செய்திகளையும் அடுத்து அரசியல் செய்திகளையும் படிப்பேன். ஆனால் பெரும்பாலும் அரசியல் //

periya arasiyal vaathiya varavendiyavar neenga! ippadi king makera irundhu enakku pathiviya koduthiteenga ;)

said...

vandhadhukku oru 50 adikka venaam?

said...

adichiten enru nambuvom.. poi matha miss panna post ellam padikiren

said...

/சைக்கிள் கேப்புல உங்க ஆட்டோகிராப்-அ எடுத்து விட்டுடீங்க.. என்ன நடக்குதுங்க.. கூடிய சீக்கிரம் தலைவி வரப்போறாங்களா?? //

அப்படி எல்லாம் இல்லைங்க ACE.. சும்மா அரசியலை மட்டும் சொன்னா எப்படிப்பா.. அது தான் மெல்ல அந்த கதையையும் சொன்னேன்

said...

//என்ன தல இப்படி கேட்டுட்டீங்க.. தலன்னா சும்மாவா?? நாட்டை புடிச்சு கோட்டையில கொடிய ஏத்திடுவோம்.. கவலைய விடுங்க..

(நம்மள மட்டும் மறந்துடாதீங்க..:) :) )
//

ஹிஹிஹி.. என்னங்க ACE எப்படி சொல்லிட்டீங்க.. உங்களை எல்லாம் மறந்துடுவோமா என்ன

said...

//கார்த்தி.. எப்பவும் போல்ல நாம இப்ப தான் வரோம்... லேட்டா //

பரவா இல்லை ட்ரீம்ஸ்.. ஆணிகள் இருக்கப்ப என்ன பண்றது

said...

//எனக்கு தான் அவகள பிடிக்காதே //

நமக்கும் தான் ட்ரீம்ஸ்.. அது என்னமோ சுத்தமா பிடிக்காது. ஆனா ஏதாவது நல்லது செஞ்சா பாராட்டுவேன்.. ஆனா பிடிக்காது :-)

said...

//adadaa! naanum padicha oru schoolla appadi thaan! appo enkooda utkaarndha ponnu peru krithika. naan college padikkum varai, ennai da pottu koopitta ore thozhi avanga thaan //

அது எப்படிங்க, நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய விஷயம் இப்படி ஒத்துப்போகுது ட்ரீம்ஸ் :-)

said...

/periya arasiyal vaathiya varavendiyavar neenga! ippadi king makera irundhu enakku pathiviya koduthiteenga //

ஆஹா..ட்ரீம்ஸ்..

கிங் மேக்கர்னெல்லாம் சொல்லி நம்மளை பெரிய ஆளாக்காதீங்கப்பா :-)

said...

/vandhadhukku oru 50 adikka venaam?//

இந்தியாதான் கவுத்திடுச்சு.. நீங்களாவது அடிங்க எப்படி, ட்ரீம்ஸ்

said...

/adichiten enru nambuvom.. poi matha miss panna post ellam padikiren //

என்ன ஒரு பொறுப்புணர்ச்சி, உங்களுக்கு ட்ரீம்ஸ்

said...

என்ன தல? என் பின்னூட்டத்துக்கு மட்டும் பபதில் போட மாட்ட்றிங்க? இதை வவண்மமையயாக கண்டிக்கிறேன்..

said...

கார்த்தி நீங்க திண்டுக்கல்லா, சொல்லவேயில்லை. அதிருக்கட்டும் சிலுவத்துருல இருந்து யாரும் கான்வென்ட்ல படிக்கலை.ஸோ அனிதாவின் ஊரை மாற்றியுள்ளீர்கள் என்று இங்கு போட்டு கொடுக்கிறேன். ஒரு வேளை அதிகாரிபட்டி, ராசக்காபட்டி இல்லை ஜம்புலியம்பட்டியாய் இருக்கும்.

said...

/ஓ! இது ஒரு அரசியல் பதிவா? ஹீஹீ..

சின்ன வயசுல பிரசாரத்துக்கெல்லாம் போவீங்களா? //

நம்ம வாழ்க்கை பதிவுப்பா, மை பிரண்ட்

said...

/எலேய் தம்பி கார்த்தி.. இப்போ விஷயம் புரியுதுலே! உங்கவிதைக்கு திரிஷா அக்கா..அன்.. சார்ரி.. அனிதா அக்காதான் காரணமோ? //

எப்படி எல்லாம் கேட்கப்படாது, மை பிரண்ட்.. ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் ஞாபகதிற்கு வந்திருக்காங்க.. நீங்க புதுசா எதையும் கிளப்பி விடாதீங்கப்பா மை பிரண்ட்

said...

//என் ஆரம்ப கால பள்ளியிலேயும் அப்படித்தான் கார்த்தி../

அந்த கதை எல்லாம் சீக்கிரம் போடுங்க மை பிரண்ட்

said...

//என்ன தல? என் பின்னூட்டத்துக்கு மட்டும் பபதில் போட மாட்ட்றிங்க? இதை வவண்மமையயாக கண்டிக்கிறேன்../

கூட்டதுக்குள்ள மாட்டிகிச்சு உங்க பின்னூட்டம்.. நானும் தேடித் தேடிப் பாத்தேன்.. தூக்கத்துல கவனிக்கல மை பிரண்ட்.. வெளிநடப்பு எல்லாம் செய்திடாதீங்க மை பிரண்ட்

said...

//கார்த்தி நீங்க திண்டுக்கல்லா, சொல்லவேயில்லை. அதிருக்கட்டும் சிலுவத்துருல இருந்து யாரும் கான்வென்ட்ல படிக்கலை.ஸோ அனிதாவின் ஊரை மாற்றியுள்ளீர்கள் என்று இங்கு போட்டு கொடுக்கிறேன். ஒரு வேளை அதிகாரிபட்டி, ராசக்காபட்டி இல்லை ஜம்புலியம்பட்டியாய் இருக்கும்.
//

ஆஹா.. எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி ஊர் பெயரெல்லாம் கேட்டு.. ரெண்டாம் நம்பர் பஸ் கண்டக்டர் மாதிரி வரிசையா ஊர் பேரெல்லாம் சொல்லி எனக்கு பழைய நினைவுகளை கொண்டு வர்றீங்களே வரவனையான்..

நீங்க சொன்னது சரி தான் வரவனையான்...