Tuesday, March 06, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 2

முதல் பகுதி

தினமும் நாங்கள் சிஃபி ஹப்பில் போய் மெயில் செக் செய்வது, ஏதாவது நிறுவனத்தில் இருந்து சேதி வந்திருந்தால் அவர்களை போய் பார்ப்பது, இது தான் எங்களது வேலை. இதற்காக சிஃபியில் ஐம்பது ரூபாய் பேக்கேஜ் வாங்கி வைத்திருந்தோம். மெயிலில் செய்தி வந்த இடங்கள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் சில நேரம் வெட்டியாக ஊரைச் சுற்றியிருக்கிறோம். ஒரு முறை என் நண்பனுக்கு சிட்லபாக்கத்தில் ஏதோ ஒரு கம்பெனியில் இருந்து புராஜக்ட் தருவதாக அழைத்திருந்தார்கள். சரி போகலாமே என்று எல்.ஐ.சியில் பஸ் பிடித்தோம். அங்கே இருந்து சிட்லபாக்கம் போவதென்பது ஒரு பெரிய சுற்றுலா. நான் எங்கள் ஊரில் இருந்து மதுரைக்கு செல்லும் போதெல்லாம் தனியார் பேருந்துகளின் கருணையினால் ஐம்பது நிமிடத்தில் மதுரைக்கு சேர்த்துவிடுவார்கள். இங்கே நாங்கள் சிட்லபாக்கம் வருவதற்குள் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அது முதல் தடவை சென்னையை சுற்றுவது. அதனால் டி.எம்.ஸ், தேனாம்பேட்டை, சைதபேட்டை, கிண்டி, ஏர்போர்ட் (இந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் நான் சீட்டில் இருந்து மெல்ல எழுந்து ஏதாவது ஏரோபிளேனை உயர்ந்த காம்பவுண்டு சுவர்களுக்கு பின்னால் பார்க்க முடிகிறதா என்று எட்டிப் பார்ப்பேன்)பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என்று எல்லா இடங்களை மனதுக்குள் குறித்துக்கொண்டே வந்தேன். எந்த ஊருக்கு புதிதாக சென்றாலும் போகும் வழி ஊர்களையும், அந்த ஊரை பற்றி முன்னமே எங்கேயாவது கேள்விபட்டிருக்கிறோமா என்றும், நான் எண்ணிப்பார்ப்பது வழக்கம்.

சிட்லபாக்கத்தில் இறங்கி கிட்டதட்ட ஒரு மைல் தொலைவு நடந்து சென்றோம். ஒரு மாடி வீடு வந்தது. வெளியே அந்த நிறுவனத்தின் பெயர் பலகை இருந்தது. உள்ளே சென்றோம். ஒரு வீட்டின் ஹால் மற்றும் அறைகளுக்குள் கம்பியூட்டர்கள் வைக்கப்பட்டு அந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். நாங்கள் சென்று அந்த கம்பெனியின் மேனேஜரை பார்த்தோம். அவர் புராஜெக்ட் தருவதாகவும், ஆனால் அதற்கு நாங்கள் ஐந்தாயிரம் பணம் கட்டவேண்டும் என்றும் சொல்லிவிட்டார். புராஜெக்டுக்காக சென்றால், இது போல பல நிறுவனங்கள் பணம் கேட்ட கதை எங்களுக்கும் நடந்திருந்ததால் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறினோம். கீழே வந்த பிறகு தான் ஞாபகம் வந்தது, என் ரெசியூம் அவர்கிட்ட இருப்பது. நான் மறுபடியும் அந்த மேனேஜரை பார்த்து, கொடுத்த ரெசியூமை திரும்ப வாங்கி வந்தேன். அப்போதெல்லாம் ஒரு ப்ரிண்ட் எடுக்க கிட்டதட்ட ஐந்து ரூபாய் முதல் ஏழு ரூபாய் வர ஆகும். எப்படியும் பணம் கொடுத்து இங்கே புராஜெக்ட் செய்யப் போவதில்லை.. எதுக்கு பணத்தை வேஸ்ட் செய்யவேண்டுமென்று அது தான் திரும்ப வாங்கி வந்தோம்.

எல்.ஐ.சியை படத்தில் மட்டுமே பார்த்து வந்த எனக்கு, அதன் பிறகு எல்.ஐ.சி ஒரு பெரிய விஷயமாக இல்லை. இந்த குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கும். அழுது ஆர்பாட்டம் பண்ணும். ஆனால் அந்த பொருள் கையில் கிடைத்துவிட்டால் சிறிது நேரம் தான் ஆர்வமெல்லாம். அது போன்றதொரு நிலையில் தான் என் மனமும் எல்.ஐ.சியை நினைத்தது. பஸ் ஏறவும் இறங்கவும் அங்கே தான் செல்வேன் என்பதால் எனக்கு இப்போது அது சலித்து விட்டது. ஆனால் ஸ்பென்சருக்கு போகாததால் அதற்கு செல்லலாமென்று ஒரு நாள் வார இறுதியில் கிளம்பினோம். ஞாயிற்றுக்கிழமை தான் ஸ்பென்சர் களைகட்டும் என்று நண்பர்கள் அடிக்கடி சொல்லியிருந்ததால் அன்றைக்கே கிளம்பினோம். ஸ்பென்சர் பிளாசா, எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து நடக்கும் தூரம் என்பதால், நாங்கள் நடந்தே தான் சென்றோம்...

ஸ்பென்சர் பிளாசா-
பாதரசம் போல, எனது கிராமத்து ஸ்டைல் உடைகளும் செருப்பு அணிந்த கால்களும், அங்கே இருந்த மனிதர்களுடன் ஒட்டாமல் தான் இருந்தன. அதென்ன கிராமத்து உடைகள் என்று நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது. கிராமத்து மனிதர்களின் சட்டைகள் எப்போது முட்டிவரை நீண்டு இருக்கும். நான் சட்டை தைக்க போகும் போதெல்லாம் என் அம்மா, வளர்ற பையன்னு சொல்லி நீளமா தான் தைப்பாங்க.. அப்புறம் மதுரைல காலேஜ் சேர்ந்த பிறகு, நீளம் கொஞ்சம் குறைந்ததென்னவோ உண்மை தான். இப்படி ஒவ்வொரு உடை ஸ்டைலும் நான் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து தான் வருகிறேன் என்பதை ஊருக்கு முரசு கொட்டி சொல்லும். அப்புறம் சட்டையை இன் செய்ய ஆரம்பித்ததில் இருந்து இந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மறுபடியும் பேண்ட் மாடல் பிரச்சனை தரும். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் பிடித்தன எனக்கு, மக்களோடு ஒன்றாக இணைவதற்கு...

ஸ்பென்சர் பிளாசா நவநாகரீக உலகமாக தெரிந்தது. அவர்களின் உடைகளும் பேச்சுகளும் என்னை மெதுவாக நத்தை கூட்டுக்குள் நத்தை சுருங்கி கொள்வது போல மாற்றியது. மெல்ல ஏதோ ஒரு தெரியாத உலகத்தில் நுழைந்து விட்டமோ என்ற குறுகுறுப்பும் படபடப்பும் என்னை ஆட்டுவித்தது. அந்த ஏசி பிளாசாவிலும் முகம் திட்டு திட்டாய் வேர்க்க ஆரம்பித்தது. தரை தளத்தில் எல்லோரும் அடித்து பிடித்து, சிற்றுண்டிகளை வாங்கி கொண்டிருந்தார்கள். மெல்ல விலைப்பட்டியலை பார்த்தேன். எங்கள் ஒரு நேர உணவின் விலையது.. அப்படியே அங்கிருந்து மெல்ல நகன்று எல்லாத் தளங்களுக்கும் சென்று வந்தோம். மூன்றாவது தளத்தில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த போது ஒரு கரம் மெல்ல என் கரத்தை பிடித்து இழுத்தது. திரும்பி நான் பார்த்தால்..

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

40 பின்னூட்டங்கள்:

said...

//இந்த இடத்தை கடக்கும் போதெல்லாம் நான் சீட்டில் இருந்து மெல்ல எழுந்து ஏதாவது ஏரோபிளேனை உயர்ந்த காம்பவுண்டு சுவர்களுக்கு பின்னால் பார்க்க முடிகிறதா என்று எட்டிப் பார்ப்பேன்//

me too karthi! நல்லா எழுதி இருக்க, நான் மறுபடி ஸ்பென்ஸர் போன மாதிரி இருந்தது! :)

me thaan pashtaa? :p

Anonymous said...

Dear Karthi,
Nalla padhivu.Nanraga ezhudhugireergal.

மெல்ல ஏதோ ஒரு தெரியாத உலகத்தில் நுழைந்து விட்டமோ என்ற குறுகுறுப்பும் படபடப்பும் என்னை ஆட்டுவித்தது. அந்த ஏசி பிளாசாவிலும்

INdha kalacharam - ippodhu engu parthalum theriya arambithu irukiradhu.

Nammudaiya adaiyalam enbadhu eppodhum thavaru kidaiyadhu karthi.

In fact. naam saadhanaiyalanga varum podhu dhan - nammudiaya culture and recognition - nammai evvalavu dhooram vazhi nadathi vandhadhu enra arumai theirum.

Panam thodarnbana culture patri - eppodhum paadhithu kolla vendam.Because. indha gap engayum eppodhum kannil pattu kondae irukum. Adhanal thavirthu vidalam. Idhu ennudiaya opinion...

Nalla Writer aga uruvagiteenga !!!!! kep it up..

With Love,
Usha Sankar.

said...

ம்ம்ம்ம், அம்பி வந்துட்டுப்போயாச்சா? நல்லா எழுதி இருக்கீங்க. உங்க உணர்வுகள் எல்லாம் வெளிப்படையா நல்லாச் சொல்றீங்க. அருமையான நினவோட்டம். அது சரி, என்னோட பதிவிலே 3 பின்னூட்டம் போட்டும் எதிலேயும் உங்களோட கருத்துக்களைச் சொல்லவில்லையே? என்ன காரணம்? சொல்லலாம்னாச் சொல்லுங்க.நான் உங்களோட கருத்துக்களை எதிர்பார்த்தேன்.

said...

இப்போதைக்கு அட்டென்டன்ஸ்...

Anonymous said...

nalla anubavam, continue ;-)

said...

சஸ்பென்ஸா முடிச்சிட்டீங்களே!!!!!

said...

அட.. அம்பி இன்னைக்கு first-ஆ?

said...

//கிராமத்து மனிதர்களின் சட்டைகள் எப்போது முட்டிவரை நீண்டு இருக்கும். நான் சட்டை தைக்க போகும் போதெல்லாம் என் அம்மா, வளர்ற பையன்னு சொல்லி நீளமா தான் தைப்பாங்க.. //

வானத்தை போல கேப்டன் ககதை மாதிரி இருக்கு.. :-)))
ஆனால், நீங்க சொல்றது உண்மை.. ஏன் நீட்டுன்னு வீட்டுல கேட்டா, இதைதான் பதிலா சொல்லுவாங்க..

said...

உண்ம தான் ஒட்றது எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.. 2வது பகுதியை ரொம்பத்தான் சுருக்கீட்டீங்க வாத்தியாரே!!!

said...

:) Parava illa..Ithellam neenga observe panni irukeenga! :) Nice post.. :) Hai na than 2nd? :D Or coment moderation?? :(

said...

நல்ல ஆரம்பம்.. வாழ்த்துக்கள்.

said...

Naan solla vandhadhai appdiye Usha Sankar sollitaanga. (Infact avanga comment romba nalla irdhadhu) and Vaanathaipola comment-a "my friend" sollitaar.

Nice post. I liked that line "Snacks oda vilai engalin oru nera uNavin vilai". Appo sambadhikka sambadhikka, kaasin madhippu theriyaamal poividugiradho??

Usha Sankar, kudos to your comments. Really superb!

said...

தொடர் சூப்பரா போகுது...சஸ்பென்ஸ் எல்லாம் வேற வெச்சு எழுதறீங்க...யாருடயது அந்த கை...பிகரா :-)

said...

//எல்.ஐ.சியை படத்தில் மட்டுமே பார்த்து வந்த எனக்கு, அதன் பிறகு எல்.ஐ.சி ஒரு பெரிய விஷயமாக இல்லை//

இது எல்.ஐ.சி க்கு மட்டும் இல்ல தல...எல்லாமே அப்படி தான் தொலைவில் இருக்கும் போதுதான் அதனுடய அருமை தெரியும் :-)

said...

//ஒரு கரம் மெல்ல என் கரத்தை பிடித்து இழுத்தது. திரும்பி நான் பார்த்தால்..
//

என்னங்க பயங்கர சஸ்பென்ஸ் வச்சி முடிச்சிட்டிங்க?

இன்னும் கொஞ்சம் நீளமாவே எழுதலாம். வசூல்ராஜால சொல்ற மாதிரி ஆரமிபிக்கறதுக்குள்ள முடிஞ்சிடுச்சு :)

said...

தல அனுபவங்கள் எல்லாம் சஸ்பென்ஸ் போகுது...

\\ மெல்ல ஏதோ ஒரு தெரியாத உலகத்தில் நுழைந்து விட்டமோ என்ற குறுகுறுப்பும் படபடப்பும் என்னை ஆட்டுவித்தது.\\

உண்மை தான் தல முதமுதல்ல அப்படி தான் இருக்கும்...

said...

\\யாருடயது அந்த கை...பிகரா :-)\\

என்ன நாட்டாமை இது....அதோ தான்...

said...

அது என்னங்க, உங்க பதிவின் பின்னூட்டங்களில் அப்படி ஆங்கிலத்தில்தான் எழுதுவேன்னு அடம் பிடிக்கறாங்க? படிக்கவே முடியலை. நீங்களாவது சொல்லக்கூடாதா? :((

Anonymous said...

ப்ரெசண்ட் தலை..அப்புறமா வரேன்

said...

//me too karthi! நல்லா எழுதி இருக்க, நான் மறுபடி ஸ்பென்ஸர் போன மாதிரி இருந்தது//

நன்றி அம்பி.. ஸ்பென்சர்னவுடனே உனக்கு என்ன ஞாபகம் வந்தது அம்பி

said...

//Panam thodarnbana culture patri - eppodhum paadhithu kolla vendam.Because. indha gap engayum eppodhum kannil pattu kondae irukum. Adhanal thavirthu vidalam. Idhu ennudiaya opinion...//

நல்லா சொன்னீங்க உஷா.. உங்களை போன்றவர்களின் உற்சாக வார்த்தைகளிலே தான் பல பேர் எழுகிறார்கள்

said...

//என்னோட பதிவிலே 3 பின்னூட்டம் போட்டும் எதிலேயும் உங்களோட கருத்துக்களைச் சொல்லவில்லையே? என்ன காரணம்? சொல்லலாம்னாச் சொல்லுங்க.நான் உங்களோட கருத்துக்களை எதிர்பார்த்தேன்.//

இப்போது இருக்கும் மேடம்.. அப்போது அவசரத்தில் இருந்ததால் பொதுவான பின்னூட்டம் மட்டும் தான் இட்டேன்

said...

//இப்போதைக்கு அட்டென்டன்ஸ்... //

குறிச்சாச்சு மணி

said...

//nalla anubavam, continue ;-) //

நன்றி ஹனிஃப்

said...

//சஸ்பென்ஸா முடிச்சிட்டீங்களே!!!!!

//

தூக்கம் வந்ததால் எழுதினவரை அப்படியே நிறுத்திவிட்டேன் மை பிரண்ட்

said...

/வானத்தை போல கேப்டன் ககதை மாதிரி இருக்கு.. :-)))
ஆனால், நீங்க சொல்றது உண்மை.. ஏன் நீட்டுன்னு வீட்டுல கேட்டா, இதைதான் பதிலா சொல்லுவாங்க..
//

அதே அதே தான் மை பிரண்ட்.. பெரியவர்களின் சட்டையும் அப்படித் தான்.. நான் கூட என் அம்மவிடம், அவங்க எல்லாம் பெரியவங்க ஆகிட்டாங்க அப்புறம் ஏன் அவ்வளவு பெரிய சட்டை போட்டு இருக்காங்கனெல்லாம் வாதாடி இருக்கேன் :-)

said...

//2வது பகுதியை ரொம்பத்தான் சுருக்கீட்டீங்க வாத்தியாரே!!!
//

தூக்கம் கொஞ்சம் கண்களை தழுவியதால், சீக்கிரம் முடித்து விட்டேன் செந்தில்

said...

//Parava illa..Ithellam neenga observe panni irukeenga!//

எங்கேயாவது தனிச்சு விடப்பட்ட இப்படித் தான் சுற்றியும் முற்றியும் பார்ப்பேன் பொன்னா

said...

/நல்ல ஆரம்பம்.. வாழ்த்துக்கள்.//

ஹிஹிஹிஹி.. இது ரெண்டாவது பகுதி தங்கச்சி

said...

// Appo sambadhikka sambadhikka, kaasin madhippu theriyaamal poividugiradho??
//

உண்மை தான் ரவி.. காசு இல்லாத நேரங்களில் பத்து ரூபாய் செருப்பு வாங்கவே நாலு மணி நேரம் சிந்திக்கிற நாம், அதற்கு பிறகு 2000 ரூபாய்க்கு மாடல் என்ற பெயரில் எடுப்பதில்லையா ;-)

said...

//யாருடயது அந்த கை...பிகரா//

எங்க சுத்தினாலும் பிகர் பக்கத்துல தான் வந்து நிப்பீங்களா நாட்டாமை முதல்வரே

said...

//எல்லாமே அப்படி தான் தொலைவில் இருக்கும் போதுதான் அதனுடய அருமை தெரியும்//

நாட்டமை தத்துவம் 999991!

said...

/இன்னும் கொஞ்சம் நீளமாவே எழுதலாம். வசூல்ராஜால சொல்ற மாதிரி ஆரமிபிக்கறதுக்குள்ள முடிஞ்சிடுச்சு //

ஹிஹிஹி.. எனக்கும் அசை தான் மணி.. ஆனா தூக்கம் வந்துட்டதேப்பா.. இனிமேல் நிறைய எழுத முயற்சிக்கிறேன்

said...

//உண்மை தான் தல முதமுதல்ல அப்படி தான் இருக்கும்... //

அந்த உணர்வுகளை இன்னும் மறக்க முடியவில்லை கோபி

said...

//அது என்னங்க, உங்க பதிவின் பின்னூட்டங்களில் அப்படி ஆங்கிலத்தில்தான் எழுதுவேன்னு அடம் பிடிக்கறாங்க? படிக்கவே முடியலை. நீங்களாவது சொல்லக்கூடாதா? //

கொத்ஸ்.. மக்களுக்கு அது தான் சௌகரியமா இருக்குன்னு நினைக்கிறேன்.. ஆனா இங்கேயே தமிழில் அடிக்க ஏற்பாடு பண்றேன் கொத்ஸ்..

ஆலோசனைக்கு நன்றி கொத்ஸ்.. ஏற்கனவே இதைப் பத்தி அரசியும் சொல்லி இருக்காங்க

said...

//ப்ரெசண்ட் தலை..அப்புறமா வரேன் //

ஒகே மணி.. அட்டென்டன்ஸ் போட்டாச்சுப்பா

said...

//எல்.ஐ.சியை படத்தில் மட்டுமே பார்த்து வந்த எனக்கு, அதன் பிறகு எல்.ஐ.சி ஒரு பெரிய விஷயமாக இல்லை//

Aamam nga naanum idhaeyae feel pannirukkaen....

Run padathula Madhavan kitta Meerajasmine,Madhavan Maela anandhu flight-ah paartha vudanae
kaetpaangalae,
Neenga yenna Chennaikku pudhusa nu...
Yen kaetkureenga apdi nu avar sola...

Theriyudhu nu reply pannuvaangale...

Adhu gyabagam vandhuchu Karthik...

Nambalum college serundha pudhusula apdi thaan....

Anonymous said...

Dear ravi and karthi,
Thank you for your responses. En karuthai +ve manner il edudthu kondadhrku ennudaiya Nanri.

With Love,
Usha Sankar.

said...

/ ஆனா நான் ஒரு முறை தான் போனேன்,அதுக்கப்பறம் ஏனோ போக தோணல//

ஓ..வேதா நீங்களும் நம்ம கட்சியா இதுல

said...

ஆஹா கார்த்திக் நீங்க எந்த வருசம் போனீங்க ஸ்பென்சர்க்கு.

நீங்க சொல்றத வெச்சு பாத்தா அது ஓல்ட் ஸ்பென்சர் ப்ளாசான்னு நினைக்கிறேன்.

அப்பவே உங்க ட்ரெஸ் ஸ்டைல் சென்னை ஆளுங்களோட மேட்ச் ஆகலிங்கறீங்க இப்ப ரொம்ப மோசம்.

நான் 2000 வரைக்கும் சென்னை வாசம்தான் அப்பல்லாம் பசங்களுக்கும் சரி பொண்ணூங்களுக்கும் சரி இந்தளவு ட்ரெஸ் சென்ஸ் எல்லாம் கிடையாது.

இப்ப போட்டுட்டு திரியறது எல்லாம் சென்ஸ்லெஸ் ட்ரெஸ்ங்கிறது வேற விசயம்
:-))))))