Thursday, March 22, 2007

நடிகர்-இயக்குனர் பார்த்திபனின் மேடைப்பேச்சு

நடிகர்-இயக்குனர் பார்த்திபனின் துடுக்குத்தனமான, குறுப்புத்தனமான மேடை பேச்சை நான் என்றுமே ரசிப்பேன்.. அதில் சுவை இருக்கும்.. கேட்போரை கவரும் வல்லமை இருக்கும். ஒரு முறை கருணாநிதிக்கு திரைஉலகம் எடுத்த விழாவில், எல்லோரும் பாடல், ஆடல் என்று தங்களது திறமைகளை காண்பித்துக்கொண்டிருக்க, இவர் செய்தது ஒரு சின்ன புதுமையான விஷயம். கலைஞர் இதுவரை அதிகமுறை மேடைபேச்சு பேசியிருப்பார். அதையெல்லாம் முன்னிருக்கும் எல்லோருக்கும் வாங்கி கொடுப்பது ஒலிவாங்கி(மைக்) தான். அந்த ஒலிவாங்கி கருணாநிதியை பார்த்து பேசினால் எப்படி இருக்கும் என்பதான ஒரு கற்பனை பேச்சு. நமது சிறு வயதில் நான் சென்று வந்த சுற்றுலா, நான் ஆறு பேசுகிறேன் என்னும் கட்டுரை தமிழ் பாடத்தில் எழுதியது போல, அந்த ஒலிவாங்கி அதனுடைய கண்ணோட்டத்தில் கருணாநிதியை பற்றி சொல்வது போல ஒரு சின்ன நிகழ்ச்சி. அருமையான கற்பனை.

ஏதாவது ஒரு விழாவில் அவர் பேசுவதாக தெரிந்தால், அதை ஆவலோடு பார்ப்பேன். சமீபத்தில் மாயக்கண்ணாடி பாடல் தொகுப்பு விழாவில் அவர் பேசுவதை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்பவும் போல அவரது பாணி பேச்சு.. ஒலிவாங்கியை பிடித்தவுடன், அவர் சொன்னது.. மாலை வணக்கம்.. இதுல வணக்கம் உங்களுக்கு, மாலை இளையராஜாவுக்கு.. முன்னே இருந்த கூட்டம் தன்னை மறந்து கைதட்டியது.. சாதாரண ஒரு வணக்கத்தில் இப்படி ஒரு மேட்டரா.. நான் வலையில் தான் இதை பார்த்துக்கொண்டிருந்தாலும் நானும் என்னை மறந்து கைதட்டினேன்.

இது போல பல விஷயங்கள். இளையராஜா ஜெயா டிவிக்கு செய்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இவர் தான். நிகழ்ச்சியை இவரது பேச்சு இன்னும் உயிரோட்டமாக நடத்தி சென்றது. நிச்சயமாய் இதைப் பார்த்தவுடன் உங்களுக்கும் பார்த்திபனின் பேச்சற்றல் சில நினைவுக்கு வரலாம். பகிர்ந்துகொள்ளலாமே நண்பர்களே.

57 பின்னூட்டங்கள்:

said...

நானும் பார்த்திபனின் மேடைப் பேச்சுக்கு இரசிகன். இவர் பேசுகிறார் என்றால், மற்ற பேச்சாளர்களுக்கு புளியைக் கரைத்துவிடும் என்று நினைக்கிறேன்! creative -வான ஆளு!

said...

ennaku kooda parthiban-oda pechi pudikum maams..but sila samayam....romba vidyasama pesurenu over mokka potuduvaaru...

said...

ஆமாங்க அவர் ஒரு பல்முக திறமையாளர்

அவர் கவிதைகள், பேச்சு எல்லாரையும் சீக்கிரமே வசீகரிக்கும்

அவர் சொளந்தர்யாவின் இழப்புக்கு பின் விகடனில் ஒரு கட்டுரை எழுதினார்

அதில் அவர் சொலியிருப்பார், சொளந்தர்யாவை கடைசியாக ஏர்போர்டில் இவர் வழியனுப்ப சென்ற போது , அவர் இவரிடன் ஒரு கவிதை எனக்காக சொல்லுங்களேன் என கேட்க்க

இவர்

"உன்னை இங்கே விட்டு விட்டு
என்ன எடுத்து செல்கிறேன் நால் என்னோடு ??"

அப்படினாராம்

அவர் தொடர்ந்து கலக்கட்டும்

நன்றி இந்த பதிவுக்கு , டைம் கிடைச்சா நம்ம பக்கம் வந்து போங்க!!

said...

ammam kaarthik!!
naan endrume avarudaiya pechukalai ketpen.. rasipen.. avarudaiya jokes ellam supera irukum... ade mathiri ivan padathil varum oru kavithai amarkalam.. avarudaiya kirukalgal vaangi padikanum..
athe mathiri avarudaiya ennagal ellame pudumaiyaga irukum endru kelvi pattullen.. avarudaiya veetil ulla porukal.. avar invitations print pannum vidam ellathuleyum pudumai irukum ena kelvi pattulen

said...

ம்ம்ம்ம்ம், ரொம்பவே ரசிச்சிருக்கீங்க. ஆனால் நான் அவ்வளவாக் கேட்டதில்லை பார்த்திபன் பேச்சை! நான் தான் முதலோ? காலம்பர பார்த்தப்போ ஒண்ணும் இல்லை. அப்புறமா எழுதி இருக்கீங்க போல் இருக்கு!!!!

C.M.HANIFF said...

Partiban nalla pesuvaartaan, irunthallum avar vadiveludan seyum nagaichuvai super ;-)

said...

I Expect a long speech of Parthiban in your post.

But its good.

said...

---நான் வலையில் தான் இதை பார்த்துக்கொண்டிருந்தாலும---

do U have the video link?

said...

தல, attendence.. ஆணி நிறைய.. பொறுமையா வரேன்..

said...

வந்துட்டேன் கார்த்தி... யெஸ் மீ டூ ஃபென் ஆப் பார்த்தி.

ஆனா இளையராஜாவோடதுல என்ன அவர் அவ்வளவா கவர் பண்ணல...

அப்புறம் உளரல் ரிலே கல கட்டியிருக்கு

இம்புட்டு பேரா எழுதி இருக்காங்க.....சூப்பர்பா.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...

said...

Yes, Parthiban does creative things but Bharani sonna maadhiri sila samayam romba try panni over mokkai aayidum.

He had published a book called "Kirukalgal". Nice one. Chinna chinna write-ups but romba nalla irukkum.

I just love Parthiban-Vadivelu comedy.

said...

thala...nesam dhaan...romba nalla pesuvaaru....in many places he seems to have researched well into the topic he speaks...facts'laam alli viduvaaru...

but sila nerangalla nallllaaave pesipuduvaaru...mokkaiyaa poidum.. :))

said...

pazhaya padhivellaatheyum padichen'nga...vazhakkam pola range... :) me the pudingings many aanis suddenly...adhaan no regular vijit.. :(

said...

நம்ம மணிகண்டன் உங்களுக்கு ஒரு பந்து வீசியிருக்கிறார்.. ஒரு 4 இல்ல 6 அடிங்க..
http://wcup2007.blogspot.com/2007/03/weird.html

said...

மாம்ஸ்,

நானும் பார்த்திபனின் பல மேடை பேச்சுகளை ரசித்து இருக்கேன்.

கலைஞரை பற்றி ஒருமுறை அவரை பற்றி பேசுவது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல் னு சொன்னார். நல்ல டைமிங், நல்ல திங்கிங்

said...

அதே போல் இன்னொரு விழாவில் நேரமின்மை காரணமாக ஒரு நிமிடம் மட்டும் பேசும்ப்படி இவரிடம் சொல்வார்கள், இவர் வந்து ஒரு நிமிடம் தான் பேசுவேன், ஆனால் ஒரு மைக்கு ஒரு நிமிடம் என்று சொல்வார்.(மூனு மைக் இருக்கும்)

said...

எனக்கும் பார்திபன் பேச்சு பிடிக்கும் தல..எப்பவும் கொஞ்சம் வித்தியாசமா சிந்திக்கர மனுசன் :-)

said...

என்ன தல இத்தன போஸ்ட் அடை மழை மாதிரி...ஆபீசுக்கு லீவ் போட்டுதான் படிக்கனும் போல :-)

said...

அவரின் புத்தக வெளியீட்டின் போது கடவுள் வாழ்த்து என்று கூறி குழந்தைகளுக்கு உணவு பரிமாறியது, இது போல பல விசயங்கள் மாம்ஸ்.

"அட "அப்படினு சொல்ல வைக்கும்படி இருக்கும்.

said...

பார்த்தி மட்டும் கிடையாது இது போல் மிக அருமையாக மேடைப்பேச்சு பேசும் பலர் திரையுலகில் உள்ளார்கள்.

said...

தல நானும் அவரோட ரசிகன் தான். அவருடைய பேச்சுக்கள் எனக்கும் பிடிக்கும்.

ஜேயா டிவி-யின் இசைஞானி கச்சேரி தான் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே கடசில சொல்லிட்டீங்க.

said...

விடியோ லிங்க் இருந்தா அனுப்புங்க. நானும் யூட்யூபில தேடுறேன்.

said...

naan parthiban medai pechu kettdhilla..Ana movies la avara pidikkum.

said...

//நானும் பார்த்திபனின் மேடைப் பேச்சுக்கு இரசிகன். இவர் பேசுகிறார் என்றால், மற்ற பேச்சாளர்களுக்கு புளியைக் கரைத்துவிடும் என்று நினைக்கிறேன்! creative -வான ஆளு!
//

சரியாச் சொன்னீங்க, அமிழ்து.. முதல் வருகைகும், முதன் முதல் வருகைக்கும் நன்றி :-)

said...

//....romba vidyasama pesurenu over mokka potuduvaaru... //

எல்லோருக்கும் இருக்கிற ஒரு விஷயம்.. சில சமயம் மொக்கையை போடுறது, மாப்ள

said...

//அவர் தொடர்ந்து கலக்கட்டும்

நன்றி இந்த பதிவுக்கு , டைம் கிடைச்சா நம்ம பக்கம் வந்து போங்க!! //

கட்டாயம் வர்றேங்க கார்த்திக்

said...

//avar invitations print pannum vidam ellathuleyum pudumai irukum ena kelvi pattulen
//

கரெக்டா சொன்னீங்க.. அவரின் ஒவ்வொரு புதுப்பட அழைப்பிதழ்கள் மிகவும் புதுமையா இருக்கும்ங்க

said...

//நான் அவ்வளவாக் கேட்டதில்லை பார்த்திபன் பேச்சை!//

கேட்டுப் பாருங்க மேடம்.. ரசிக்கும்படியா இருக்கும்

said...

//Partiban nalla pesuvaartaan, irunthallum avar vadiveludan seyum nagaichuvai super //

இந்த லொள்ளு பேச்சு காமெடியில் கூட இவரின் எண்ணம் இருக்க வாய்ப்பு உண்டுங்க ஹனிஃப்ஃப்

said...

/I Expect a long speech of Parthiban in your post.//

ஹிஹிஹி.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ல வெங்கட்ராமன்

said...

/do U have the video link? //

Bala, I saw here only .. http://sify.com/movies/tamil

said...

//தல, attendence.. ஆணி நிறைய.. பொறுமையா வரேன்..//

பொறுமையா வாப்பா.. ஆணி குத்திடப்போகுது

said...

//இம்புட்டு பேரா எழுதி இருக்காங்க.....சூப்பர்பா.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...
//

எனக்கும் தான் மணி.. இது எனக்கு இன்ப அதிர்ச்சி

said...

பார்த்திபன் மேடை பேச்செல்லாம் படிச்சதோட சரி.. கேட்டதெல்லாம் இல்ல.. ஒரு முறை ஆனந்த விகடன்ல "விகடனும் நானும் (????)" தலைப்புல எழுதியிருந்தார்.. அதுல "எனக்கு விகடன் மீது கோபம் உண்டு.. நான் கிறுக்கல்கள்னு எழுதிய கவிதையை திருத்தம் செய்தார்கள்... அதை கவிதைன்னு சொல்லியிருந்தா திருத்தம் செய்யலாம்.. கிறுக்கல்களை எதுக்கு திருத்தனும்ன்"னு லாஜிக்கா அடிச்சிருந்தார். அது தான் ஞாபகம் இருக்கு :)

வாக்கு கொடுத்த மாதிரி வந்து பின்னூட்டம் போட்டாச்சு..:))

தல, நமக்கும் பாத்து எதாவது போட்டு கொடுங்க ;)

said...

//He had published a book called "Kirukalgal". Nice one. Chinna chinna write-ups but romba nalla irukkum.

I just love Parthiban-Vadivelu comedy.//

கிறுக்கல்கள் அருமையான தொகுப்பு ரவி.. ஒவ்வொரு கிறுக்கல்களும் அருமையாக இருக்கும்

said...

/but sila nerangalla nallllaaave pesipuduvaaru...mokkaiyaa poidum//

உண்மை தான் கோபால்.. சில நேரங்கள் அவர் சொதப்பியது உண்மை தான்

said...

/pazhaya padhivellaatheyum padichen'nga...vazhakkam pola range... :) me the pudingings many aanis suddenly...adhaan no regular vijit.. /

நம்ம ஆபீசு-ல எப்பவாவது தான் இப்படி இருக்கும்.. வேற வழி இல்லை கோபால்.. பொறுமையா உட்கார்ந்து ஆணி புடுங்க வேண்டியது தான்

said...

//நம்ம மணிகண்டன் உங்களுக்கு ஒரு பந்து வீசியிருக்கிறார்.. ஒரு 4 இல்ல 6 அடிங்க..
//

பாத்தேங்க அப்துல்.. நான் ஏற்கனவே எழுதிட்டேன்னு நினைக்கிறேன்

said...

//கலைஞரை பற்றி ஒருமுறை அவரை பற்றி பேசுவது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல் னு சொன்னார். நல்ல டைமிங், நல்ல திங்கிங் //

பார்த்திபனுக்கு டைமிங் சூப்பரா வரும், மாப்ஸ்

said...

/எனக்கும் பார்திபன் பேச்சு பிடிக்கும் தல..எப்பவும் கொஞ்சம் வித்தியாசமா சிந்திக்கர மனுசன்//

சரியாச் சொன்னீங்க நாட்டாமை

said...

/என்ன தல இத்தன போஸ்ட் அடை மழை மாதிரி...ஆபீசுக்கு லீவ் போட்டுதான் படிக்கனும் போல//

இனிமேல் பொறுமையா ஒண்ணுன்னா போடுறேன் நாட்டாமை..

said...

/"அட "அப்படினு சொல்ல வைக்கும்படி இருக்கும்.
//

நானும் பல தடவை அட போட்டிருக்கேன் மாப்ஸ்

said...

/ஜேயா டிவி-யின் இசைஞானி கச்சேரி தான் சொல்லலாம்னு இருந்தேன். நீங்களே கடசில சொல்லிட்டீங்க.
//

அருண், அந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும்.. முதல் காரணம் இசைஞானி, இரண்டாவது பார்த்திபன்

said...

//..Ana movies la avara pidikkum.//

சில படத்துல அவர் நக்கலே கலாசலா இருக்கும் ப்ரியா

said...

karthik naanum parthibanoda rasigan. i like his thoughts of doing everyhting differently

said...

அதில் அவர் சொலியிருப்பார், சொளந்தர்யாவை கடைசியாக ஏர்போர்டில் இவர் வழியனுப்ப சென்ற போது , அவர் இவரிடன் ஒரு கவிதை எனக்காக சொல்லுங்களேன் என கேட்க்க

இவர்

"உன்னை இங்கே விட்டு விட்டு
என்ன எடுத்து செல்கிறேன் நால் என்னோடு ??"

அப்படினாராம்
//

idhai paththi onnum solala ? :(

im very sad

said...

//முதன் முதல் வருகைக்கும் நன்றி :-)//

உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன்... ஆனா இப்பத்தான் மறுமொழியிட்டிருக்கேன்!

said...

//idhai paththi onnum solala ? :(

im very sad //

கார்த்திக், நீங்களே அதை சூப்பரா விளக்கி சொன்னதால, நான் ஏதும் சொல்லலைங்க.. மன்னிச்சுக்கோங்க கார்த்திக், இதுக்காக நீங்கள் வருத்தப்பட்டிருந்தா

said...

//உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன்... ஆனா இப்பத்தான் மறுமொழியிட்டிருக்கேன்! //

ரொம்ப நன்றிங்க அமிழ்து.. உங்க பதில் என் காதுல இன்பத் தேனா பாயுதுங்க

said...

50th comment.. :-)

said...

மைக்கின் பெயர் ஒலிவாங்கியா? ஓ!

said...

//மாலை வணக்கம்.. இதுல வணக்கம் உங்களுக்கு, மாலை இளையராஜாவுக்கு.. //
அருமை.. ;-)

//நான் வலையில் தான் இதை பார்த்துக்கொண்டிருந்தாலும் நானும் என்னை மறந்து கைதட்டினேன். //

:-)

said...

enakkum ivara pidikkum!

said...

he is really creative..

ivaroda kavidha bookla, ivaru kulandhai padam pottu en mudhal kavidha enraare! athu top!

said...

/50th comment.. :-)//

உங்களுக்கு ஒரு சித்தார்த் போஸ்டர் வானத்துல பறந்து வருது மை பிரண்ட்..

said...

//மைக்கின் பெயர் ஒலிவாங்கியா? ஓ! //

ஆமாங்க மை பிரண்ட்.. தமிழ்ல அதற்கு பெயர் இது தான் :-)

said...

//ivaroda kavidha bookla, ivaru kulandhai padam pottu en mudhal kavidha enraare! athu top! //

ஆமாங்க ட்ரீம்ஸ்.. நானும் படிச்சு மெய்சிலிர்த்த ஒரு விஷயம் அது