Tuesday, March 27, 2007

மாமான்னு சொல்ல ஒரு ஆளு

2004-ம் வருட தீபாவளி காலங்களில், எனக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. எங்கள் ஊரின் பக்கத்து ஊரில் இருப்பவர் பல காலங்களுக்கு முன்னே, சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார்.அவர் இந்திய வான்படையில் வேலை பார்த்துவிட்டு, தாம்பரம் பக்கத்தில் இருக்கும் சேலையூரில் வீடுகட்டி குடியேறிவிட்டார். கிட்டதட்ட பதினைந்து வருட காலங்கள் பஞ்சாபில் பணியில் இருந்தவர். அவர் எனக்கு பெண் பார்ப்பது பற்றி கேள்விப்பட்டு, அவரின் தம்பியை முதலில் எங்கள் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். வந்தவர் என் அப்பாவிடம் பேசிவிட்டு, என் கைபேசியின் எண் வாங்கி சென்றார். அதன்பிறகு, இரண்டு நாள் கழித்து பெண்ணின் தந்தை எனக்கு தொலைபேசியிருந்தார். பெண் பார்க்க வருமாறு அழைத்தார். நான், முதலில் பெண்ணின் ஜாதகமெல்லாம் பார்த்து விட்டு தான், எங்கள் வீட்டில் பெண் பார்க்க வருவார்கள் என்று பதில் சொன்னேன். ஆனால், தினமும் இரண்டு முறை எனக்கு கால் செய்து அழைத்தவண்ணம் இருந்தார். என் தந்தையின் நண்பர் வீட்டிற்கு வருவது போல, அவர் வீட்டிற்கு வருமாறு கூறினார். இவர் இவ்வளவு முறை அழைத்ததால், என் பெற்றோற்களும், சரி, சென்று வா என்றார்கள். என் மனதுக்குள் சொல்லாத ஒரு நெருடல் இருந்தால், அவர் வீட்டிற்கு என் நண்பனை அழைத்துகொண்டு சென்றேன்.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அதன் பிறகு பெண்ணை அழைத்து வந்தார்கள். அவள் நடந்து வந்த நளினமும் அந்த மென்மையும் எனக்கு முதல் பார்வையிலே பிடித்துவிட்டது. படிக்கும் உங்களுக்கு ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், சோனியா அகர்வாலின் மெல்லிய சாயல் இருக்கும். (உனக்கெல்லாம் சோனியாவா என்று முறைக்காதீர்கள்) கிட்டத்தட்ட பதினைந்து வருடகாலம், பஞ்சாபில் இருந்ததால், அந்த பெண்ணிடம் வடநாட்டு சாயல் இருந்த காரணத்தினால், சோனியா அகர்வால் போல் எனக்கு தெரிந்ததில் தப்பில்லை. அதன் பிறகு, எல்லோரிடமும் சொல்லிகொண்டு விடை பெற்றோம்.

அவர்களுக்கும் என்னை பிடித்துப் போய்விட, எனக்கும் பிடித்து போய் விட, பெண்ணின் ஜாதகத்தை என் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே தான் பிரச்சனை ஆரம்பித்தது. எங்கள் ஊரின் அருகில் தேவழகர்பட்டி என்னும் ஊரில், ஜாதகம் பார்ப்பவர் இருக்கிறார். இவர் சொன்னால் அது தொண்ணூறு சதவிகிதம் சரியாக இருக்கும். எங்கள் குடும்ப விஷயத்தில் அது நூறு சதவிகிதம். நான் எம்.சி.ஏ படிக்கின்ற காலத்தில், காலேஜில் கேம்பஸ் இன்டர்வியூற்கு வந்த நிறுவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.அதுவும் பல நிறுவனங்கள், எம்.சி.ஏ என்றால் எட்டிக்காயை பார்ப்பது போல வேண்டாம் என்றார்கள். அப்போது, இரட்டை கோபுரம் இடிந்த சம்பவமும் நடந்ததால், கணினித்துறையே பாதளத்தில் கிடந்த நேரம். சரி, எப்போது எனக்கும் வேலை கிடக்கும் என்று அவரிடம் கேட்கலாம் என்று அவரிடம் சென்றால், அவர் 2002, ஏப்ரல் 29 முதல் அதே வருட செப்டம்பர் 9-குள் வேலை கிடைக்கும். ஆனால் அது நிரந்தர வேலை யில்லை என்றும் சொன்னார். அவர் சொன்னபடியே, நான் ஒரு நிறுவனத்தில் மே 1-இல் டெம்பரரி வேலையில் சேர்ந்தேன். அவரின் கணிப்பு எந்த அளவிற்கு சரி என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும். என் அப்பா அவரிடம் இந்த பெண்ணின் ஜாதகத்தை காண்பிக்க, அவர் இந்த இடம் வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என் அப்பா கொஞ்சம் யோசிப்பதை பார்த்த அவர், பையனுக்கு பிடித்துப்போய்விட்டதா என்று கேட்டு, பெண்ணின் ருதுவான ஜாதகத்தை கொண்டு வரச் சொன்னார். அதை கொண்டு சென்றாலும், அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்படி அந்த பெண்ணை கட்டினாலும், சில காலங்களுக்கு மட்டுமே குடும்பம் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அந்த நிலையில் என் அப்பா மிகவும் பயந்து போய்விட்டார். அதாவது அதற்கு அவர் சொன்ன ஒரு சின்ன உதாரணம் என்ன வென்றால், வீட்டிற்கு நான் வர தாமதமாக இருந்தாலும் அந்த பெண் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்க்க மாட்டாளாம். சாப்பாடு கூட, அங்க வைத்திருக்கிறேன், சாப்பிட்டுக்கோங்க என்பது போல் சொல்லிவிடுவாளாம்.. அதாவது, கணவன் மனைவினிடையே அந்த பாசம், பற்று இருக்காதென்று சொல்லிவிட்டார். சரி என்று நாங்களும் அவர்களிடம் ஜாதகம் பொருந்தி வரவில்லை என்ற காரணத்தை சொல்லிவிட்டோம்.

கிட்டதட்ட, ஆறு மாதங்களுக்கு பிறகு, எங்களுக்கு கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்த பையனையே கல்யாணம் செய்துகொண்டதாக. அப்போது தான் புரிந்தது, அந்த பெண்ணின் தந்தை அன்று ஏன் அவ்வளவு அவசரப்பட்டார் என்று. அன்றைய தேதியிலிருந்து, வீட்டில் உள்ளவர்களுக்கு, அந்த ஜாதகம் பார்க்கும் நபர் மீது மிகவும் நம்பிக்கை வந்துவிட்டது. எனக்கும் அது மிகவும் ஆச்சர்யமான விஷயமாகத் தான் இருந்தது. நாம் பிறந்த நேரத்தையும், தேதியையும் வைத்து எப்படி இதையெல்லாம் கணிக்கிறார்கள் என்று அப்படி ஒரு மலைப்பு எனக்கு ஜோசியத்தின் மீது இன்னும் இருக்கிறது.

நேற்று இந்திய நேரப்படி, காலை பத்தரை மணி அளவில் என் தங்கை ஒரு அழகிய ஆண்பிள்ளையை பெற்றெடுத்தாள். பல மணி நேரம் பொறுத்தும், சுகப்பிரசவம் ஆகாததால், ஆபரேசன் செய்து தான் குழந்தையை வெளியே எடுத்துள்ளார்கள். அந்த மருத்துவமனையில் அவ்வளவு லேசில் ஆபரேசன் செய்துவிட மாட்டார்கள், மற்ற காசு பிடுங்கும் மருத்துமனைகள் போல. (திண்டுக்கலில் காட்டாஸ்பத்திரி என்று தான் அந்த மருத்துமனையை எல்லோரும் அழைப்பார்கள். எனக்கும் சரியான பெயர் நினைவில் இல்லை. செயின்ட் ஜான் மருத்துவமனை என்று நினைக்கிறேன்) மாமான்னு சொல்ல ஒரு ஆள் வந்தாச்சு.. அப்படியொரு இனம் புரியாத, வார்த்தையில் வடிக்க இயலாத, மகிழ்ச்சி மனசுக்குள்..

அப்போது தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. சுகப்பிரசவம் என்றால் அந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது சரி. ஆனால் இது போல ஆபரேசன் செய்யும் போது, அந்த நேரத்தை வைத்து வாழ்க்கையை ஜாதகத்தில் கணிப்பது சரியாக இருக்குமா?

102 பின்னூட்டங்கள்:

said...

//மாமான்னு சொல்ல ஒரு ஆள் வந்தாச்சு.. அப்படியொரு இனம் புரியாத, வார்த்தையில் வடிக்க இயலாத, மகிழ்ச்சி மனசுக்குள்..
//

அடடா , வாழ்த்துக்கள் கார்த்திக்...

said...

கார்த்திக்,

பொண்ணுன்னா காதலிக்கத்தான் செய்வாங்க. பெற்றோர் எதிர்ப்பு இருந்தா ஓடத்தான் செய்வாங்க. உங்களுக்கு பார்த்திருந்த பெண்ணும் அப்படித்தான் காதலனோடு இணைந்திருக்கலாம். இதனால ஜோசியம் பாக்கறவர் சொன்னதுதான் நடந்து போச்சின்னு சொல்றது சத்தியமா சின்னபுள்ள தனமா இருக்கு.

ஜோசியம்னு சொல்றது எல்லாமே பொய். படிச்ச நீங்களே இப்படி ஜோசியத்தை கண்மூடித்தனமா நம்பலாமா?

said...

மாமா பிரமோஷன் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

ஊருக்கு போங்க உங்க மடியில நம்பர் ஒன் போக ரெடியா ஒரு ஆள் இருக்கு.

said...

aha vaazhthukkal! namakku kooda ippo than maami nu koopida oru pudhu varavu vandhadhu! :)

neenga vera, edho tevai nu c-section panradhu kooda parva illa! sila peru nalla natchatiram, jadhagam amaiyanumnu neram kurichu c-section poranga!! adhu epdi sariyana jadhagam aagum nu puriala!

irundalum, romba thevai nu mudivu panni seiyara c-section okay nu nenakren, andha neram correct thaane anda pirappuku?? naama decide pannaliye?

said...

வாழ்த்துக்கள் கார்த்தி!!

said...

indha jadhagam josiyam namba koodiyadha illainu ippolam aagi pochu! (thambi solrapola) ana idhu oru science thaan. romba thulliyama details kidaicha kaalathula, i guess this worked out. ippo neerthu pochu, so nambikkaiyum kurainjuduchu.

nambikkai illanu sonnalum, oru kariyam vendaamnu yaarum sollitangana, adhai eeri seiyarappo, oru padhattam irukka thaan seiyum. adhe pola adhu kettadha pochuna, apove sonanga nu varutha padradhum, illaina pathiya paove sonen indha jadhagam paakradhu ellam dubakoornu solradhum thaan manidha iyalbu!! :)

said...

முதலில் வாழ்துக்கள்.. இனிப்பு எங்கேங்க.?? வெறுமனா விஷயத்தை மட்டும் சொல்லிட்டு விட்டுட்டீங்க.. :))

ஜாதகம் ஜோசியம் எல்லாமே ஒரு நம்பிக்கை அவ்வளவே.. 2 முறை அந்த ஜோதிடர் சரியாக கணித்ததனால் நீங்க அவரை 100%னு நம்பறீங்க... இதுவே ஒரு முறையேனும் அவர் தவறாக கணித்திருந்தாலோ இல்லை ஜாதகம் எழுதும் போது பிழையாய் எழுதியிருந்தாலோ, நீங்க ஜாதகத்தை நம்புவீங்களா?? என்னை பொறுத்த வரை ஜோசியம் என்பதை ஒரு வழிகாட்டியா தான் உபயோகப்படுத்த வேண்டும்.. முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும்..

said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், தங்கை குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்.

ஜோதிடம்பற்றிய ஆச்சர்யமான குறிப்பு தந்திருக்கீங்க. நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாருமே இதுபோல ஏதேனும் உண்மைகளைச்(!?)சொல்லித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். சோதிடம் மட்டுமல்ல எல்லா நம்பிக்கைகளுமே இதுபோன்றுதான் அமைந்திருக்கின்றன.

said...

இது ஆவரது இல்ல...இப்பத்தான் ஒரு மூனு போஸ்ட் படிச்சு கமெண்ட் போட்டுட்டு போனேன்...அதுக்குள்ள இன்னும் ஒன்னா...:-)

said...

//மாமான்னு சொல்ல ஒரு ஆள் வந்தாச்சு.. //

இப்போதான் உங்க தங்கச்சி கல்யானத்துக்கு வாழ்த்து சொன்ன மாதிரி இருக்கு...டைம் எவ்வளவு வேகமா போகுது...வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சகோதரி குடும்பத்துக்கும் :-)

said...

நல்ல வேளை அந்த சோனியா அகர்வால் மாதிரி இருக்குன்னு நீங்க கல்யானம் பண்ணி இருந்தா இன்னேரம் வாழாவெட்டி ஆகி இருப்பீங்க...

said...

உங்களூக்கு ஒரு விசயம் தெரியுமா..கரிகால் சோழன் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடி பிறந்தா சோழ அரசுக்கு ஆபத்துனு பிறசவ நேரத்துல அவனுடைய தாயின் கால்கல் ரெண்டையும் கட்டி வெச்சு இருந்த்தா கேள்வி பட்டு இருக்கேன்....

said...

vaazhthukkal karthi!! :-)

said...

மாமா ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

ஜோசியம், ஜாதகம் எல்லாம் சும்மா. எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்கள்.

ஆனா, இவ்ளோ காலமா தொடர்ந்து ஏமாத்திட்டு வராங்களே. எப்படி சாத்தியமாவுது இதெல்லாம்?
என் நண்பர்கள் சிலரும் நாடி ஜோசியம் பாத்துட்டு, புளகாங்கிதம் அடஞ்சிருக்காங்க. "மச்சி, புட்டு புட்டு வக்கராண்டா" அப்படீன்னாங்க.

சுயமா, ட்ரை பண்ணி பாத்தாதான் எப்படி பூ சுத்தராங்கன்னு தெரியும் :)

said...

ஜோசியத்து மேல எனக்கு அவளோ நம்பிக்கை இல்ல அதனால எதுவும் சொல்றதுக்கில்ல கார்த்தி.

said...

//அப்படியொரு இனம் புரியாத, வார்த்தையில் வடிக்க இயலாத, மகிழ்ச்சி மனசுக்குள்.. //

வாழ்த்துக்கள் தல..

இவளோ பெரிய மேட்டர இப்பிடி கடெசிலயா சொல்றது...

said...

Congrats to your sister Karthick:)

said...

வாழ்த்துக்கள் தலைவா ;-)))

said...

ஆஹா! நல்ல பதிவு! ஆனா தலைப்புக்கு சம்பந்தமா கடசில தான் வருதா! :)) நான் தான் குழம்பிட்டேன்!

நல்லா ஜோசியம் பார்க்கின்றார்களப்பா!

said...

எனக்கு பார்த்த ஜோசியத்திலும் இது போன்ற நம்ப முடியாத விஷயங்கள் நிறைய... எனக்கு இதன் மேல் கொஞ்சம் மரியாதைஉண்டு.. ஆனால் இஷ்ட்டமில்லை.. காரணம் இப்போதைய ஜோசியர்கள்!

said...

@தம்பி
படித்தோம் என்பதற்காக, நமக்கு புரியவில்லை என்பதற்காக எல்லாமே பொய் ஆகிவிடாது நண்பரே!

Yes we should take everything with a high amount of caution! but that applies to both sides of the coin.

There is so many things we dont understand.. and just because of that, or because present day science cannot explain it,. doesnt make it false inanyway.

Education should make us to reason, not to reject everything!
The first understanding is there are things beyond our reasons. That doesnt mean there is fault with the thing, but that means the yer uncomprehebality of human thoughts.

said...

Congrats Maams....Maams-se maama ayitaare :)

said...

indha jaathabam, joosiyam, billi, palli, oval, vavval....idhellam ennaku eppayume puriyala...nambikayum illa....

said...

என்னங்க தமிழ் படம் மாதிரி தலைப்புவின் விரிவாக்கம் கட்ட கடைசில வச்சிட்டீங்க? மாமனானதற்கு வாழ்த்துக்கள்! அருமையான கேள்வி ஒன்னு கேட்டு இருக்கீங்க. எனக்கும் இந்த சந்தேகம் உண்டுங்க. எனக்கு தெரிந்த ஒருவர், நல்ல நேரத்தில் குழந்தை பிறக்கனும்ன்னு சாதகப்படி C-section பண்ணிட்டாங்க. (எனக்கு கோவம் வந்தது தனி கதை). அப்போ இருந்து எனக்கிருந்த சந்தேகம் இது. பதில் வாத்தியார் சுப்பையா அவர்கள் சொல்லுவாரா?

said...

//ஜோசியம்னு சொல்றது எல்லாமே பொய். படிச்ச நீங்களே இப்படி ஜோசியத்தை கண்மூடித்தனமா நம்பலாமா?
//

தம்பி, கிளி வைத்து சொல்வதையும் கை ரேகை வைத்து சொல்வதை வேண்டுமானால் பொய்யென நான் ஏற்றுக்கொள்வேன்.. ஆனால் நமது பிறந்த நேரத்தை வைத்து, கணக்கு பண்ணி சொல்லப்படும் ஜாதக கூற்றை நம்புவதில் எந்த தப்பும் எல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.. அதை எல்லோரும் சரியாக சொல்லிவிட முடியாது என்பதும் நாம் இங்கே கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக்...//

நன்றிங்க ராம் :-)

said...

//மாமா பிரமோஷன் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

ஊருக்கு போங்க உங்க மடியில நம்பர் ஒன் போக ரெடியா ஒரு ஆள் இருக்கு. //

அந்த வாய்ப்பு இல்லாமத் தான் மனசு ஏங்குதுங்க தம்பி :-)

said...

//aha vaazhthukkal! namakku kooda ippo than maami nu koopida oru pudhu varavu vandhadhu! //

அட.. சொல்லவே இல்லை பொற்கொடி! வாழ்த்துக்கள் பா

said...

//nambikkai illanu sonnalum, oru kariyam vendaamnu yaarum sollitangana, adhai eeri seiyarappo, oru padhattam irukka thaan seiyum. adhe pola adhu kettadha pochuna, apove sonanga nu varutha padradhum, illaina pathiya paove sonen indha jadhagam paakradhu ellam dubakoornu solradhum thaan manidha iyalbu!!//

கரெக்டா சொன்ன பொற்கொடி!

said...

சகோதரர் கார்த்தி மாமாவாக ப்ரமோஷன் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.
சீக்கிரம் அத்தையையும் ரெடி பண்னுங்க‌

said...

/என்னை பொறுத்த வரை ஜோசியம் என்பதை ஒரு வழிகாட்டியா தான் உபயோகப்படுத்த வேண்டும்.. முடிவுகளை நாம் தான் எடுக்க வேண்டும்..
//

சந்தோசமான விஷயமாயிருந்தால் நம்பிக்கையும் இல்லையென்றால் அடபோங்கப்பா என்று சொல்வதும் நல்லது தானே ACE.. அதை விடுத்து வருத்தப்படுவது தவிர்க்கவேண்டியது தானே ACE

said...

/. சோதிடம் மட்டுமல்ல எல்லா நம்பிக்கைகளுமே இதுபோன்றுதான் அமைந்திருக்கின்றன. //

உண்மை தான் அலெக்ஸ்.. நம்பிக்கை நல்ல விஷயடிற்கு என்றால் வரவேற்போமே.. வாழ்த்துக்கு நன்றிங்க

said...

//இப்பத்தான் ஒரு மூனு போஸ்ட் படிச்சு கமெண்ட் போட்டுட்டு போனேன்...அதுக்குள்ள இன்னும் ஒன்னா...:-) //

ஷ்யாம்.. அது தான் ஒரு நாள் கேப் விட்டேனே ;-)

said...

//இப்போதான் உங்க தங்கச்சி கல்யானத்துக்கு வாழ்த்து சொன்ன மாதிரி இருக்கு...டைம் எவ்வளவு வேகமா போகுது...வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சகோதரி குடும்பத்துக்கும் //

நாட்கள் வேகமா போகுதுங்க ஷ்யாம்.. வாழ்த்துக்கு நன்றிங்க நாட்டாமை

said...

//நல்ல வேளை அந்த சோனியா அகர்வால் மாதிரி இருக்குன்னு நீங்க கல்யானம் பண்ணி இருந்தா இன்னேரம் வாழாவெட்டி ஆகி இருப்பீங்க... //

ஆமாம் ஷ்யாம்.. அந்த பயம் இன்னும் என்கிட்ட ஏனோ இருக்கு :-)

said...

//உங்களூக்கு ஒரு விசயம் தெரியுமா..கரிகால் சோழன் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடி பிறந்தா சோழ அரசுக்கு ஆபத்துனு பிறசவ நேரத்துல அவனுடைய தாயின் கால்கல் ரெண்டையும் கட்டி வெச்சு இருந்த்தா கேள்வி பட்டு இருக்கேன்....//

வாவ்.. அரிய விஷயம்ங்க ஷ்யாம்.. கலக்குறீங்களேப்பா

said...

/vaazhthukkal karthi!! //

நன்றிங்க CVR :-)

said...

//மாமா ஆனதுக்கு வாழ்த்துக்கள்.
//

வாழ்த்துகளுக்கு நன்றிங்க சர்வேசன்.. ஜாதகம் பார்க்காமல் தமிழ்நாட்டில் எந்த அரெஞ்சுடு கல்யாணமும் நடப்பதில்லையே ப்பா

said...

//ஜோசியத்து மேல எனக்கு அவளோ நம்பிக்கை இல்ல அதனால எதுவும் சொல்றதுக்கில்ல கார்த்தி. //

சில பேருக்கு உண்டு.. எனக்கு நடந்த தொடர் சம்பவங்களை உங்களைப் போல இருந்த என்னை மாற்றவில்லையா, அருண்

said...

//வாழ்த்துக்கள் தல..

இவளோ பெரிய மேட்டர இப்பிடி கடெசிலயா சொல்றது...//

வாழ்த்துக்கு நன்றிப்பா அருண்.. கடசில மெதுவா சொன்னாத் தானே மேட்டர் அருண் :-)

said...

/Congrats to your sister Karthick:) //

நன்றிங்க ப்ரியா

said...

//வாழ்த்துக்கள் தலைவா ;-))) //

நன்றி கோபிநாத்

said...

//ஆஹா! நல்ல பதிவு! ஆனா தலைப்புக்கு சம்பந்தமா கடசில தான் வருதா! :)) நான் தான் குழம்பிட்டேன்!
//

நம்ம பாணில, கதை சொல்லி சொல்லனும்ல அது தான் ட்ரீம்ஸ்..

said...

/எனக்கு பார்த்த ஜோசியத்திலும் இது போன்ற நம்ப முடியாத விஷயங்கள் நிறைய... எனக்கு இதன் மேல் கொஞ்சம் மரியாதைஉண்டு.. ஆனால் இஷ்ட்டமில்லை.. காரணம் இப்போதைய ஜோசியர்கள்!

//

முதலில் இதை ஒரு தியானமாக செய்தவர்கள் உண்டுங்க ட்ரீம்ஸ்.. இப்போது அப்படி யாரையும் பார்க்க முடிவதில்லை ;-)

said...

/Education should make us to reason, not to reject everything!
The first understanding is there are things beyond our reasons. That doesnt mean there is fault with the thing, but that means the yer uncomprehebality of human thoughts. //

நீங்க சொல்றதும் சரி தான் ட்ரீம்ஸ்

said...

/Congrats Maams....Maams-se maama ayitaare//

வாழ்த்துக்கு நன்றிப்பா பரணி.. :-)

said...

/indha jaathabam, joosiyam, billi, palli, oval, vavval....idhellam ennaku eppayume puriyala...nambikayum illa.... //

:-)

said...

//அப்போ இருந்து எனக்கிருந்த சந்தேகம் இது. பதில் வாத்தியார் சுப்பையா அவர்கள் சொல்லுவாரா?//

தெரில.. பார்ப்போம் சுப்பையா வாத்தியார் பதில் சொல்வாரா என்று, காட்டாறு

said...

//சந்தோசமான விஷயமாயிருந்தால் நம்பிக்கையும் இல்லையென்றால் அடபோங்கப்பா என்று சொல்வதும் நல்லது தானே ACE.. அதை விடுத்து வருத்தப்படுவது தவிர்க்கவேண்டியது தானே ACE //

வருத்தபடுவதை விட, விட்டு விடுவதும் நல்லது தான்.. :))

said...

HI Karthik,

//மாமான்னு சொல்ல ஒரு ஆள் வந்தாச்சு.. அப்படியொரு இனம் புரியாத, வார்த்தையில் வடிக்க இயலாத, மகிழ்ச்சி மனசுக்குள்//

Congrats..Apa choclate yenga?

said...

Idhu oru nalla kaelvi ?


U know nowadays..opertion kooda nalla neram nalla naal paarthu seya solluraanga ....En previous roomie oda akkavukku ipdi thaan time paarthu operation panninaanga...
Ulgam yengayoo poi kittu irukku ..Yenatha solluradhu...

said...

Naan dhaan 50 ..Paarthu sollunga karthik..

said...

Congrats karthi for becoming uncle that is so sweet. :)

regarding Astrology,
ஜாதகம் பொய்யில்லை, ஜனன கால நேரம் சரியாக இருந்தால் மிக துல்லியமாக கணிக்க முடியும்.

இது ஒரு சயின்ஸ். எல்லாமே துல்லியமாக டிகிரி சுத்தமாக கணிக்கபடுவது.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!"னு பாரதி சொன்னார்னா அவருக்கு பதினோரு மொழி தெரியும்.

ஆனால் தற்போதைய ஜோதிடர்கள் காசே குறியாக இருக்கிறார்கள். அதான் வருத்தபட வேண்டிய விஷயம். :(

said...

ennaga idu kaarthi.
oru post padichi aduku comment podanumnu ninaikarthukulla adutha post podareenga

said...

maama va aanaduku vaazhthukal...
adu eppovume mama athai ippadi rendume santhosham thaan

said...

enaku niraya nambikai iruku jaathagathula.. ella planetsukum namma mela oru effect iruka thaan seiyuthu.. atha josiyargal eppadi solraanganu iruku. its a science.. adu nambikai illa.

said...

வாழ்த்துக்கள் கார்த்திக்.....

said...

முதல்ல வாழ்த்துக்கள் தலைவரே உங்க சகோதரிக்கும் சொல்லிடுங்க, அவங்க உடல்நிலையையும் கவனிச்சுக்க சொல்லுங்க:)
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தையை வெளியே எடுக்கும் நேரத்தை வைத்து தான் ஜாதகம் கணிப்பார்கள் என்று கேள்விப்பட்டேன் தலைவரே.

said...

மாமா ஆனதுக்கு கார்த்தி உங்களுக்கு வாழ்த்துக்கள்.

உங்க தங்கச்சிக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க..

இன்னைக்கு விடியற்காலை 2 மணீக்கு (மலேசிய நேரப்படி) துர்காவும் அத்தையாகிவிட்டார் என்ற சந்தோஷ சேதியை உங்களோடு பகிர்ந்துக்கிறேன். :-)

said...

கார்த்தி,

ஜி3யும் உளரிட்டாங்க.. உங்கள் சன்கிலி தொடர்ல எட் பண்ணுங்க. :-)

C.M.HANIFF said...

Vaashthukkal mams karthik ;-)

said...

haa 50 poda vandhuttomla!

said...

illa enakku munnalaiye pottutaangala?

said...

sari ethukkum innum onne!

said...

// Syam said...
உங்களூக்கு ஒரு விசயம் தெரியுமா..கரிகால் சோழன் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னாடி பிறந்தா சோழ அரசுக்கு ஆபத்துனு பிறசவ நேரத்துல அவனுடைய தாயின் கால்கல் ரெண்டையும் கட்டி வெச்சு இருந்த்தா கேள்வி பட்டு இருக்கேன்.... //

அன்புள்ள நாட்டாமை,

ஆனால் கீழ்க்கண்ட சுட்டியில் வேறுமாதிரி உள்ளதே ? :-(((

http://velu.blogsome.com/2006/03/22/ko/

திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான் கோச்செங்கணானின் சிலந்திக்கதையோடு, அம்மன்னன் பிறந்த கதை, அவன் பெற்றோர் பெயர்கள் முதலியவையும் கூறுகின்றார். கோச்செங்கணானின் தந்தையைச் சுபதேவர் என்றும் தாயார் கமலவதி என்றும், அப்பெருமாட்டி, த்ன் குழந்தை சிறிது நேரம் கழித்துப் பிறந்தால் உலகாளும் என்று சோதிடர்கள் கூறியதால் தன்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச்செய்து, பிள்ளைப்பிறப்பைத் தள்ளிப்போட்டதாகவும், காலங்கடந்து பிறந்தமையால் கண்கள் சிவந்திருக்கக் கண்ட தாய், ‘என் கோச்செங்கண்ணனோ’ என்று கேட்டதாகவும் சோழரின் பிறப்புக்கதை கூறப்படுகின்றது.

said...

களவும் கற்று மற'ங்கிற மாதிரி நம்பிக்கை இல்லேன்னாலும் ஜாதக கணிதம் எப்படின்னு தெரிஞ்சுகிட்டேன். அதுபடி முதல் மூச்சு (சுவாசம்) தான் பிறந்த நேரம். எப்படி பிறந்தாலும் வெளியே வந்து தானே வெளிக்காற்றை சுவாசிக்க முடியும்.

பலன்கள் என்பவை எந்த அளவு நம்ப முடியும் ங்கறது பூவா தலையா மாதிரி தான் என் பார்வையில்... மற்றபடி அனுபவ கணக்கில் சதவீதம் கூடலாம்.

said...

/வருத்தபடுவதை விட, விட்டு விடுவதும் நல்லது தான்.. //

அதுவும் சரியான கூற்றே ACE

said...

/Congrats..Apa choclate yenga? //

அனுப்பு வச்சேனே வரலையா, ராஜி :-)

said...

/U know nowadays..opertion kooda nalla neram nalla naal paarthu seya solluraanga ....En previous roomie oda akkavukku ipdi thaan time paarthu operation panninaanga...
Ulgam yengayoo poi kittu irukku ..Yenatha solluradhu... //

ஆமாங்க ராஜி.. நம்ம மக்கள் இது மாதிரி நடந்த பல சம்பவங்களை சொல்லி இருக்காங்கா

said...

/Naan dhaan 50 ..Paarthu sollunga karthik//

கீ-போர்டை தூக்கி காண்பிங்க ராஜி.. நீங்க தான் அது :-)

said...

/Congrats karthi for becoming uncle that is so sweet. :)
//

தேங்க்ஸ் அம்பி :-)

//
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!"னு பாரதி சொன்னார்னா அவருக்கு பதினோரு மொழி தெரியும்.//

ஆஹா.. இது புது மேட்டருல.. நிறைய விஷயம் தெரியவருது இந்த பதிவின் பின்னூட்டங்கள் மூலம்

said...

/ennaga idu kaarthi.
oru post padichi aduku comment podanumnu ninaikarthukulla adutha post podareenga //

ஹிஹிஹி.. இடையில் ரெண்டு நாள் லீவு விட்டேனே DD

said...

/maama va aanaduku vaazhthukal...
adu eppovume mama athai ippadi rendume santhosham thaan //

வாழ்த்துக்கு நன்றிங்க DD

said...

/enaku niraya nambikai iruku jaathagathula.. ella planetsukum namma mela oru effect iruka thaan seiyuthu.. atha josiyargal eppadi solraanganu iruku. its a science.. adu nambikai illa. //

நான் ஒரு முறை அந்த ஜோசியரின் முன்னே உட்கார்ந்து பார்த்ததிலிருந்து, அவர் சும்ம எல்லா விஷயங்களையும் போற போக்குல சொல்றதில்லை.. கணக்கு வாத்தியார் மாதிரி கணக்கெல்லாம் எழுதி அதை வைத்து தான் சொல்றார்.. எனக்கும் நம்பிக்கை இருக்குங்க DD

said...

//வாழ்த்துக்கள் கார்த்திக்..... //

வாழ்த்துக்கு நன்றிங்க மதுரையம்பதி

said...

//முதல்ல வாழ்த்துக்கள் தலைவரே உங்க சகோதரிக்கும் சொல்லிடுங்க, அவங்க உடல்நிலையையும் கவனிச்சுக்க சொல்லுங்க:)//

நன்றிங்க வேதா.. கட்டாயம் என் தங்கையிடம் சொல்கிறேன்..

//அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தையை வெளியே எடுக்கும் நேரத்தை வைத்து தான் ஜாதகம் கணிப்பார்கள் என்று கேள்விப்பட்டேன் தலைவரே. //

ஓ.. எப்ப குழந்தை வெளிய வருதோ அது தான் சரியான நேரமோ..

said...

/மாமா ஆனதுக்கு கார்த்தி உங்களுக்கு வாழ்த்துக்கள்.

//

நன்றிங்க மை பிரண்ட்... துர்காவிற்கும் வாழ்த்துக்கள் சொல்லிட்டேன் அவங்க பதிவுல

said...

/ஜி3யும் உளரிட்டாங்க.. உங்கள் சன்கிலி தொடர்ல எட் பண்ணுங்க.//

பண்ணிட்டேங்க மை பிரண்ட்

said...

Eppadi thambhi eppadi oru gramiya manam kalanthu tamil ezhuthukalal eppadi kalakureergal?
ungalai parthal oru "cheran" feeling ennaku varuthu!!Thodarathu kalakumbadi kettukolgirean!!

said...

thalaiva congrats! seekirama ooruku oru trip podunga. Roja poo madhiri irukkara chinna kuzhandhaya pakkara/thottu pakkara santhosham vera edhulayum illa.

said...

birth time correcta kuduthu jadhagam kanichi, josiyarum correcta calculate panravara irundha the science of astrology works. C-sectiona irundha andha time dhan eduppanga.

said...

ama, 2004 la ponnu pakka arambichadhu enna achu? andha josiyar ungala 2008 varaikkum kalyanam pannika koodadhunu sollitara??

said...

//நேற்று இந்திய நேரப்படி, காலை பத்தரை மணி அளவில் என் தங்கை ஒரு அழகிய ஆண்பிள்ளையை பெற்றெடுத்தாள்//

vaalthukal thala...unga sister kittaium sollidunga.. :)

said...

//மாமான்னு சொல்ல ஒரு ஆள் வந்தாச்சு.. அப்படியொரு இனம் புரியாத, வார்த்தையில் வடிக்க இயலாத, மகிழ்ச்சி மனசுக்குள்..
//

poga poga paaarunga... innum adhu kolundhu vittu erium...

experience speaks ya.....

said...

@பாலராஜன் கீதா,

எனக்கு கதை சொன்னவங்களுக்கு அவ்வளவு தான் தெரிஞ்சு இருக்கும் போல...மத்தபடி மேட்டர் ஒன்னுதான்னு நினைக்கறேன் :-)

said...

thala....vaazhthukkal to u n ur family...

said...

Congratulations Karthi.

Ponnu thaedurathu appuram enna aachu?

I too don't believe in this Jaathakam / Josiyam etc., (IMHO) If you think about about since when we (India) started following the current clock, what we used in the past, DST issues, whether the time given by the hospitals is accurate (they sure are not sync-ed to any atomic clock) etc, any argument about it being science will be blown. Maybe it an art which some practicioners have mastered a little better.

Cheers
SLN

Anonymous said...

கார்த்திக் நீங்க நம்ப கட்சியா இப்பொழுது?வாழ்த்துக்கள்.

Anonymous said...

என்னை அத்தைன்னு சொல்ல 4 பேரு!!

said...

//ungalai parthal oru "cheran" feeling ennaku varuthu!!Thodarathu kalakumbadi kettukolgirean!! //

வாழ்த்துக்களுக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றிங்க தேவ்..

said...

/thalaiva congrats! seekirama ooruku oru trip podunga. Roja poo madhiri irukkara chinna kuzhandhaya pakkara/thottu pakkara santhosham vera edhulayum illa.

//

வாழ்த்துக்கு நன்றிங்க ப்ரியா.. உங்க வார்த்தைகள் இப்பவே என்னை உடனே பிளைட்டை பிடி என்று சொல்கிறது..

said...

/birth time correcta kuduthu jadhagam kanichi, josiyarum correcta calculate panravara irundha the science of astrology works. C-sectiona irundha andha time dhan eduppanga.//

ஓ.. மக்கள் சொன்ன மாதிரி முதல் மூச்சுக்காற்று தான் மேட்டர் போல..

said...

/ama, 2004 la ponnu pakka arambichadhu enna achu? andha josiyar ungala 2008 varaikkum kalyanam pannika koodadhunu sollitara?? //

இந்த சம்பவதிற்கு பிறகு, என் தங்கைக்கு வரன் தேட ஆரம்பிச்சாச்சு ப்ரியா..

said...

//vaalthukal thala...unga sister kittaium sollidunga.. //

நன்றி கோப்ஸ்.. கட்டாயம் சொல்றேன்பா

said...

//poga poga paaarunga... innum adhu kolundhu vittu erium...

experience speaks ya..... //

அட.. சில அனுபவங்களை அப்படியே சொல்றது, கோப்ஸ்

said...

//மத்தபடி மேட்டர் ஒன்னுதான்னு நினைக்கறேன்///

ஆமா ஷ்யாம். உள்கருத்து ஒன்று தான்

said...

//thala....vaazhthukkal to u n ur family... //

நன்றிப்பா கோபால்..

ஆணி புடுங்குற வேலையெல்லாம் எப்படி போகுது, கோபால்

said...

//Congratulations Karthi.

Ponnu thaedurathu appuram enna aachu?//

நன்றிங்க SLN.. பொண்ணு தேடுறது இந்த சம்பவதிற்கு பிறகு இப்போ தான் மறுபடியும் ஆரம்பிச்சு இருக்காங்க

said...

//கார்த்திக் நீங்க நம்ப கட்சியா இப்பொழுது?வாழ்த்துக்கள்.

//

ஆமாங்க துர்கா.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

said...

//என்னை அத்தைன்னு சொல்ல 4 பேரு!! //

யாரந்த நாலு பேர், துர்கா

said...

101

said...

வாழ்த்துக்கள் கார்த்தி :-) வெளியூர் போயிருந்தேன்.. இப்ப தான் பதிவைப் பார்த்தேன்.