Friday, March 09, 2007

தமிழாய் அவளும் என் இதய இலவம்பஞ்சும்

தன்னை விட
ஆறு மடங்கு
பாரத்தை
சுமக்குமாம்
எறும்பு..
உன்னை
சுமப்பதில் சுகமாகி
போனதடி
என் இதய
இலவப்பஞ்சு!

ஒரு கையிலே
ஒரு பொருளை
ஒரு நாள் முழுவதும்
ஒரு கணமும் விடாது
தூக்கி நின்றால்
கை வலிக்கும்
என்பது
அறிவியலார் சொன்னது!

நீயே சொல்
வருடங்களாய்
உன்னை சுமக்கும்
என் உள்ளம்
அவரின் வாதத்தை
பொய்யாக்கியதோ!

மனித உடம்பு
காந்தம்
என்று
ஆறாம் வகுப்பு
அறிவியலில்
அறிந்து வைத்திருக்கிறேன்!

அதற்காக
சூரியகாந்தியாய்
உன் சுற்றத்தையே
சுற்றி வருகிறதே
பட்டாம்பூச்சி இதயம்!

உனது
நெற்றிப் பொட்டு
மெய்யெழுத்தின்
அழகுப் புள்ளி..

உனது
கழுத்து தொடங்கி
கால் வரை
தமிழின்
ஒய்யார
வளைவுகள்..

ஒற்றைக் கொம்பு
எழுத்தெல்லாம்
உன் குதிரை வால்
சடையோ!

நீண்டு சுழித்து
வரும்
உயிர்மெய்
எழுத்தெல்லாம்
உன்
பேரழகு கொண்டையோ!

நீ இதழ்
குவித்து
தரும்
முத்தமெல்லாம்
'உ'வன்னா வகையறா
எழுத்துகளோ!

நீ அஜந்தா
ஓவியமாய்
வளைந்து நின்றால்
ஓவன்னா!

தமிழை அமுதென்றார்
பாரதியின் தாசன்!
உன்னை பார்த்த
பின்புதான்
படித்தேன்
தமிழுக்கு
ஏசுபிரான் போல
உயிர்தெழும் சக்தி
இருக்கிறதென்பதை!

நீ
எப்படி நினைக்கிறாயோ
அப்படியே
நீ ஆகிறாய்
என்றார்
சுவாமி விவேகானந்தர்!

அப்படித் தானடி
எனக்கு நீ!

எதனைப்
பார்த்தாலும்
அதில் நீ!
அதுவாய் நீ!

உருவமற்ற நீர்,
இருக்கும்
பாத்திரத்தின்
உருவத்தை
கொள்வதாய்,
நீ நீராகிறாய்!

தமிழ் படித்தாலும்
நீயே
அறிவியலும் அறிதலிலும்
நீயே!

யார் சொன்னது
சர்வமும் சிவமயம் என்று!
எனக்கான வீதிகளின்
சுவர்களில் எல்லாம்
மாற்றி எழுதிவிட்டேன்
சர்வமும் அவள்மயம் என்று!

அங்கே
பூ விக்கும்
பெண்முதல்
இங்கே
என் முக கண்ணாடி
வரை
எல்லோருக்கும்
தெரிந்து போய்விட்டது!

நான் காதலில்
இருக்கிறேன் என்று,
உன்னைத் தவிர!


டிஸ்கி : உங்க ஊர் ஆணியா எங்க ஊர் ஆணியா.. கிலோ கணக்குல ஆணிகள்.. அதனால் தான் உங்க பதிவுகளுக்கெல்லாம் என்னால் தினமும் வந்து கும்மி அடிக்க முடியவில்லை.. இதோ இன்றிலிருந்து 'ஆணிகளற்ற உலகத்தில்' சில காலங்கள்..

63 பின்னூட்டங்கள்:

said...

ம்ம்ம்ம்ம், இன்னும் யாரும் வரலியா? நான் தான் முதலா? எல்லாரும் இப்போப் போட்டி போட்டுக் காதல் கவிதை எழுதறீங்க? நான் அறிவிப்புக் கொடுத்தப்போ யாருமே எழுதல்லை! :((((((((
போகட்டும், வீட்டிலே வேலை நடக்குது மெயின் போர்டிலே அதனாலே இன்னிக்கும் நாளைக்கும் கொஞ்சம் வர முடியாது. உங்க பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். வேலை முடிஞ்சுட்டால் ஒரு வேளை நாளைக்கு வந்து பயமுறுத்துவேன். :D

said...

super kavidhai.. detailaa naalaiku commenturen :)

said...

/எல்லாரும் இப்போப் போட்டி போட்டுக் காதல் கவிதை எழுதறீங்க? நான் அறிவிப்புக் கொடுத்தப்போ யாருமே எழுதல்லை!//

இப்போதான் காதல் பூக்கும் பருவமோ என்னவோ, மேடம்

said...

//மெயின் போர்டிலே அதனாலே இன்னிக்கும் நாளைக்கும் கொஞ்சம் வர முடியாது//

அது யாருப்பா, பாயசம் வச்சு விருந்து போடலாம்னு சொல்றது..

said...

/detailaa naalaiku commenturen //

மெதுவா தூங்கிட்டு வாங்க உள்ஸ்

Anonymous said...

Dear Karthi,
neengal kavidhaiyil than (kavidhaiyai )kaadhalithu kondu irukerrergala? Or Love ku neram vandhu vittadha? Enna vishayam? Onrum kandu pidika mudiyavillaiyae?

with Love,
usha Sankar.

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! இப்பவே கண்ணக்கட்டுதே!

said...

ungge ullaththin ularal poga poga neenddu kidde poguthu.. kanau ippellaam mani kanakkaa varumo???

said...

//மனித உடம்பு
காந்தம்
என்று
ஆறாம் வகுப்பு
அறிவியலில்
அறிந்து வைத்திருக்கிறேன்!//

naan nettu padichchathu kooda innaikku nyabagam ille! neengga eththanaiyo(!) varusaththukku munne padichathellam eppadingga???

c.m.haniff said...

Kalakunga kalakunga kalakittey irunga, super ;-)

said...

//உன்னை
சுமப்பதில் சுகமாகி
போனதடி
என் இதய
இலவப்பஞ்சு!// wow...eppadi ippadi ellam...seriousa enakku unga kavidhai padikaracha ellam neenga ninnu feel pannitu solra maadiri enaku oru peeling...as ovoru variyum eppodhum pol karkandu, i mean rasithu ezhudhirukeenga...

said...

hey, nan potta comment enga kaanom...ogay ogay, comment moderationa marandhuten..

said...

//ஒற்றைக் கொம்பு
எழுத்தெல்லாம்
உன் குதிரை வால்
சடையோ!// ungalukku mattum eppadi ippadi ellam thonudhu mr.azhagusundaram...ippadi koopidaradhula thappilainu ninaikaren..

said...

//பூ விக்கும்
பெண்முதல்
இங்கே
என் முக கண்ணாடி
வரை
எல்லோருக்கும்
தெரிந்து போய்விட்டது!//
kaadhal seidha kolam than ungala ippadi aativaikudhunu ninaikaren...anyway ethanai than kaadhal kavidhaigal ezhudhinalum, ovvondrukkum thani suvai...

//நான் காதலில்
இருக்கிறேன் என்று
அவளை தவிர!// takkunu neengaley sollividalam appadinu nan ninaikaren...veetla kalyana pechu eduthacha ungalukku?? as unga appa ammava venumna ungalukku pidicha pennai poi parka sollalam...

said...

//'ஆணிகளற்ற உலகத்தில்' சில காலங்கள்..// purinjudhu, ippothula irundhu neenga konjam free appadinu...nsoy..

said...

//நீயே சொல்
வருடங்களாய்
உன்னை சுமக்கும்
என் உள்ளம்
அவரின் வாதத்தை
பொய்யாக்கியதோ!//
nalla kelvi!

superk kavidha!

said...

//அதற்காக
சூரியகாந்தியாய்
உன் சுற்றத்தையே
சுற்றி வருகிறதே
பட்டாம்பூச்சி இதயம்!
//
adada! enna concept.. kaarthi chanceless!

said...

//யார் சொன்னது
சர்வமும் சிவமயம் என்று!
எனக்கான வீதிகளின்
சுவர்களில் எல்லாம்
மாற்றி எழுதிவிட்டேன்
சர்வமும் அவள்மயம் என்று!
/

appadi podu! ithu thaan top!

said...

apparam namma kavidha thodarla naan aduthu kalla erinju paarkalam enru irukken... ;) parpom

said...

aaha...aduthathu aarambichiteengala...innum ularal odikitu irukum podhe next releasea :)

said...

//நீ
எப்படி நினைக்கிறாயோ
அப்படியே
நீ ஆகிறாய்
என்றார்
சுவாமி விவேகானந்தர்!

அப்படித் தானடி
எனக்கு நீ!

எதனைப்
பார்த்தாலும்
அதில் நீ!
அதுவாய் நீ!
//....super maams...idhe maadhiri naanum yosichi vachen...neenga ezhudhiteenga :)

said...

//யார் சொன்னது
சர்வமும் சிவமயம் என்று!
எனக்கான வீதிகளின்
சுவர்களில் எல்லாம்
மாற்றி எழுதிவிட்டேன்
சர்வமும் அவள்மயம் என்று//...aaha..aaha...kadhal vazhinji ooduthappa :)

said...

//நான் காதலில்
இருக்கிறேன் என்று,
உன்னைத் தவிர!
//....super ending maams :)

said...

ivlo aaniku naduvulayum...daily oru post podura unga kadamai unarchiki oru alave illaya :)

said...

azhagaana kavidhai.. :-)

Eppadinga ippadilaan asathareenga.. Pesama unga aaluku unga blog linka anuppi vidunga.. avangalukkum theriyattum :-)

said...

/neengal kavidhaiyil than (kavidhaiyai )kaadhalithu kondu irukerrergala? Or Love ku neram vandhu vittadha? Enna vishayam? Onrum kandu pidika mudiyavillaiyae?//

சந்தேகமே வேண்டாங்க உஷா.. கவிதை வழியாக கவிதையை தான் காதலிக்கிறேன்

said...

/இப்பவே கண்ணக்கட்டுதே//

எதுக்காக ராஜா?

said...

/kanau ippellaam mani kanakkaa varumo???//

மை பிரண்ட், வாழ்க்கையே கனவாகி போன போது தனியாக பிரிப்பதெப்படி?

said...

/naan nettu padichchathu kooda innaikku nyabagam ille! neengga eththanaiyo(!) varusaththukku munne padichathellam eppadingga??? //

காதல் வந்தவனுக்கு (என்னைச் சொல்லல) இருப்பதெல்லாம் மறந்துவிடும்.. பழயது எல்லாம் ஞாபகதிற்கு வரும் மை பிரண்ட்

said...

//Kalakunga kalakunga kalakittey irunga, super //

கட்டாயம் ஹனிஃப் :-)

said...

//seriousa enakku unga kavidhai padikaracha ellam neenga ninnu feel pannitu solra maadiri enaku oru peeling...as ovoru variyum eppodhum pol karkandu, i mean rasithu ezhudhirukeenga...
//

வாவ் :-)

நான் முன்னே நின்னு சொல்ற மாதிரி நினச்சு பண்ணீங்களா, ரம்யா..?

கற்கண்டு வார்த்தைகள்.. நன்றிங்க ரம்யா

said...

//ungalukku mattum eppadi ippadi ellam thonudhu mr.azhagusundaram...ippadi koopidaradhula thappilainu ninaikaren..
//

என்னங்க ரம்யா இப்படி ஒரு புதுப்பேரு நமக்கு :-)

என்னமோ காதல் கவிதைன்னு உட்கார்ந்தாலே சும்மா ஜிவ்வுன்னு கற்பனை குதிரை பறக்குதுங்க ரம்யா

said...

/anyway ethanai than kaadhal kavidhaigal ezhudhinalum, ovvondrukkum thani suvai...
//

ஆமாங்க :-)

//veetla kalyana pechu eduthacha ungalukku?? //

நடந்துகிட்டே இருக்குங்க

said...

//purinjudhu, ippothula irundhu neenga konjam free appadinu...nsoy//

haha.. thanks ramya :-)

said...

//adada! enna concept.. kaarthi chanceless//

ஹிஹிஹி.. நன்றிங்க ட்ரீம்ஸ்!

said...

//apparam namma kavidha thodarla naan aduthu kalla erinju paarkalam enru irukken... ;) parpom

//

தோ..இப்பவே வருகிறேன் ட்ரீம்ஸ்!

said...

/innum ularal odikitu irukum podhe next releasea //

உளறல் நிக்கவே மாட்டெங்குது மாப்ள.. என்ன செய்யப்பா

said...

/.idhe maadhiri naanum yosichi vachen...neenga ezhudhiteenga//

அட மாப்ள.. எவ்வளவு ஒற்றுமையா நமக்குள்ள

said...

//super ending maams//

thankspaa mapla

said...

/ivlo aaniku naduvulayum...daily oru post podura unga kadamai unarchiki oru alave illaya//

இல்லப்பா இந்தவாரம் கொஞ்சம் கம்மியாகிடுச்சு :-)

said...

//Pesama unga aaluku unga blog linka anuppi vidunga.. avangalukkum theriyattum //

எங்க இருக்காங்கன்னு யாருக்குங்குங்க தெரியும் G3.. தெரிஞ்சா முதல் வாசகியே அவங்க தானே :-)

said...

இங்குட்டும் கவுஜா.... என்னய்யா இப்படி ரவுண்ட் கட்டி அடிக்குறீங்க...

மார்ச் மாதம் வந்தும் அக்கபோர் முடிய மாட்டேங்குதேடா சாமி.....

said...

திறனாய்வு செய்யலாம் என்று தான் நினைக்கிறேன் மாம்ஸ், அவ்வளவு நேரம் இப்ப நமக்கு இல்ல. அதனால் எனக்கு பிடித்த ஒரே ஒரு பத்திய மட்டும் சொல்லிட்டு ஒடிடுறேன்.

//யார் சொன்னது
சர்வமும் சிவமயம் என்று!
எனக்கான வீதிகளின்
சுவர்களில் எல்லாம்
மாற்றி எழுதிவிட்டேன்
சர்வமும் அவள்மயம் என்று!//

இது டாப்பு...

இதை

யார் சொன்னது
சர்வமும் சிவமயம் என்று!
என் சர்வமும்
அவள்மயம் தானே!

என்று புரிஞ்சிக்கிட்டு ஒரு கேள்வி கேட்குறேன்.

அந்த அதிஷ்டசாலி யாரு மாம்ஸ்

said...

//மார்ச் மாதம் வந்தும் அக்கபோர் முடிய மாட்டேங்குதேடா சாமி.....//

மாப்பி.. எல்லா நாட்களிலும் காற்று இருப்பதை போல காதல் இங்கே

said...

//அந்த அதிஷ்டசாலி யாரு மாம்ஸ் //

நானும் இதைத் தான் தேடிகிட்டு இருக்கேன் மாப்ஸ்

said...

//உனது
கழுத்து தொடங்கி
கால் வரை
தமிழின்
ஒய்யார
வளைவுகள்..//
தமிழையே உங்கள் காதலிக்கு உவமைப்படுத்தியிருப்பது சிறப்பு அதுலயும் வாத்தியாரே இந்த வரிகள் Highlight...வாழ்க உமது தமிழ்ப் பற்று

said...

தல கவிதை சூப்பரு...

\\உனது
நெற்றிப் பொட்டு
மெய்யெழுத்தின்
அழகுப் புள்ளி..\\

ஆஹா...ஆஹா.... (நான் போட்ட first கமெண்டை காணவில்லை)

said...

//தமிழையே உங்கள் காதலிக்கு உவமைப்படுத்தியிருப்பது சிறப்பு அதுலயும் வாத்தியாரே இந்த வரிகள் Highlight...வாழ்க உமது தமிழ்ப் பற்று//

நன்றி செந்தில்!

said...

//நான் போட்ட first கமெண்டை காணவில்லை//

எனக்கு comment moderationku கூட வரலையே கோபிநாத்

said...

Lines I loved:

அதற்காக
சூரியகாந்தியாய்
உன் சுற்றத்தையே
சுற்றி வருகிறதே
பட்டாம்பூச்சி இதயம்!

எதனைப்
பார்த்தாலும்
அதில் நீ!
அதுவாய் நீ!

Superb karthick!!!!

said...

தல...அவ்வ்வ்வ்வ்வ்வ் படிச்சிட்டு என்ன சொல்றதுனே தெரியல.... :-)

said...

இந்த கவிதையோட ஒரு ஒரு வரியும்...நீங்க உங்க காதலியவிட தமிழ எவ்வளவு காதலிக்கறீங்கனு சொல்லுது...
:-)

said...

semma kavidhai maams. pattai kilappings as usual

said...

////மார்ச் மாதம் வந்தும் அக்கபோர் முடிய மாட்டேங்குதேடா சாமி.....//

மாப்பி.. எல்லா நாட்களிலும் காற்று இருப்பதை போல காதல் இங்கே //

அட அக்கபோர் ஆரம்பிச்சுட்டாங்களே.... மாம்ஸ் இந்த சோகம் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து துரத்தி அடிக்குது.

said...

//Superb karthick!!!!//

Thanks Priya :-)

said...

//இந்த கவிதையோட ஒரு ஒரு வரியும்...நீங்க உங்க காதலியவிட தமிழ எவ்வளவு காதலிக்கறீங்கனு சொல்லுது...//

தமிழும் நமது காதலி தானே நாட்டாமை

said...

//semma kavidhai maams. pattai kilappings as usual //

Thanks kittu maamu :-)

said...

//அட அக்கபோர் ஆரம்பிச்சுட்டாங்களே.... மாம்ஸ் இந்த சோகம் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து துரத்தி அடிக்குது. //

அச்சோ.. அப்படி என்ன சோகம் மாப்ஸ்

said...

ம்.. வித்தியாசமான ஒப்புமைகள்! நல்லா இருக்கு..

said...

//.. வித்தியாசமான ஒப்புமைகள்! நல்லா இருக்கு.. //

நன்றிங்க அரசி

said...

irukum kavingyargal himsai podhum ennaiyum kavingyan akkadhae nu sonna vairamuthu niyabagathukku varrar.but nice.

said...

nice

said...

Thanks nirandhari