Wednesday, April 04, 2007

மொத்தப் பூக்களின் ஒத்த உருவமே..

நானும்
ஒரு
கைதிதான்..
உன்
இதயத்தில்
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..

உன் காதோரம்
வளைந்து
கிடக்கும்
முடிகற்றைகளில்
எப்போதும்
என் மனம்
ஊஞ்சலாடுது..

அப்படி
ஆடுகையில்,
உன்
காதில்
காதலை
சொல்ல வருகிறேன்..

பக்கத்தில்
வந்ததும்
என்னோடு
சேர்ந்து
மனசும்
ஆடுகிறது
ஊஞ்சல்..

மொத்தப் பூக்களின்
ஒத்த உருவமே..
நீ தான்
பூக்களுக்கு
இரவல் தந்தாயோ
மென்மையை..

ஆப்பிளுக்கு
தந்தாயோ
வண்ணத்தை..

பறக்கும்
பறவையை கூட
மயக்கி
கடிக்க சொல்லுது
உன் கன்னங்கள்..

பறவைக்கே
அப்படி என்றால்
பாமரன்
எனக்கு..
சொல்வதற்குள்ளே
அந்த
கன்னங்களில்
வழுக்கி விழுகிறது
என் இதயம்!

அப்படி
விழுந்த இடம்
உன் இதயம்!

அங்கே
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..

(ப்ரியா.. இப்போது சந்தோசமா.. கவிதை எழுதியாச்சு.. எனக்கும் என் கனவு பெண்ணுக்கும் எந்த ஊடலும் இல்லை..)

58 பின்னூட்டங்கள்:

said...

firstu??

said...

நினைச்சா கவிதை கொட்டுது.. என்னவோ போங்க...gifted தான் நீங்க..

காதோரம், காதலை சொல்ல போய் கன்னத்தில் வழுக்கி இதயத்தில விழுந்து சிறை பட்டுட்டீங்களா??

இந்த சிறையில் இருந்து ஜாமீன் வேற தர மாட்டாங்களே.. மேற்கொண்டு என்ன பண்றதா உத்தேசம்.. கட்சி சார்புல ஒரு போராட்டம் நடத்திடுவோமா?? :))

said...

//
மொத்தப் பூக்களின் ஒத்த உருவமே
//
வாவ்.
சூப்பரா கவித சொல்றீங்க தல.

//
ப்ரியா.. இப்போது சந்தோசமா.. கவிதை எழுதியாச்சு.. எனக்கும் என் கனவு பெண்ணுக்கும் எந்த ஊடலும் இல்லை..
//
இது நமக்கு புரியலியே? :(

Anonymous said...

hihihi super kavidha!

-porkodi

Anonymous said...

meedhi comment nalaikku thala!

-porkodi

said...

Thala kavidha kavidha aruvi maadhiri kottudhu poanga ..

Nice kavidha!!

said...

//அப்படி
விழுந்த இடம்
உன் இதயம்!//

Idhu superb Karthik...

said...

//விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..//

Nice thinking..

said...

//ஆப்பிளுக்கு
தந்தாயோ
வண்ணத்தை..
//
ஆப்பிள்கள் சிவப்பு நிறத்திலும் உண்டு, பச்சை நிறத்திலும் உண்டு. ஆகவே இங்கு நீங்கள் கூற விரும்புவது...?

சொல்லில் குற்றம் இல்லை, பொருளில் தான்! :)

said...

கவிதை கலக்குது கார்த்தி

C.M.HANIFF said...

Kavinjar karthik kalakiteenga ;-)

said...

//விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..//
நல்ல கற்பனை
(கற்பனைதான இல்ல நெஜமாவே எண்ணிக்கிட்டு இருக்கீங்களா?வரமுடியாது வாத்தியாரே வெளிய வரவே முடியாது) :)

said...

/firstu?? //

சிக்கன் பிரியாணி டெக்ஸாஸ் நோக்கி வந்துகிட்டே இருக்கு ACE

said...

/கட்சி சார்புல ஒரு போராட்டம் நடத்திடுவோமா??//

உலகமே போராட்டம் நடத்தினாலும் இதிலிருந்து வரமாட்டேன்னு என் இதயம் அடபிடிக்குதே ACE

said...

///
ப்ரியா.. இப்போது சந்தோசமா.. கவிதை எழுதியாச்சு.. எனக்கும் என் கனவு பெண்ணுக்கும் எந்த ஊடலும் இல்லை..
//
இது நமக்கு புரியலியே?//

ஜெர்னல் பிரியா, ஆங்கில கவிதைக்கு ரொம்ப பிரசித்தி.. அவங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி வந்து என்ன இப்போ எல்லாம் கவிதைகள் எழுதுறது இல்லை.. உங்க கனவு பெண் கூட சண்டையா என்று கேட்டார்.. அது தான் அருண்

said...

/hihihi super kavidha!

-porkodi

//

நன்றி பொற்கொடி.. பாயிண்டர்ஸ் எப்படி போகுது..

said...

/meedhi comment nalaikku thala!

-porkodi //

இன்னும் ரெண்டு மூணு சாப்டர் இருக்கும் போல..

said...

//Thala kavidha kavidha aruvi maadhiri kottudhu poanga ..

Nice kavidha!! //

ஹிஹிஹி..நன்றிங்க ராஜி..

said...

////அப்படி
விழுந்த இடம்
உன் இதயம்!//

Idhu superb Karthik...

//விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..//

Nice thinking..

//

நல்லாவே ரசிச்சிருக்கீங்க ராஜி..

said...

/சொல்லில் குற்றம் இல்லை, பொருளில் தான்!//

வாப்பா நக்கீரா.. உன்னோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்.. வந்திருப்பது இறை என்று அறிந்தும் வாதம் செய்த உன் தமிழ் பற்றி நாங்கள் வாழ்த்தினோம்..

said...

/கவிதை கலக்குது கார்த்தி //
நன்றி தேவ்.. நட்சத்திரமா அட்டகாசம் பண்ணுனீங்க ஒரு வாரமா

said...

/Kavinjar karthik kalakiteenga ;-) //

நன்றி பிரெஞ்சு நண்பரே

said...

/கற்பனைதான இல்ல நெஜமாவே எண்ணிக்கிட்டு இருக்கீங்களா?வரமுடியாது வாத்தியாரே வெளிய வரவே முடியாது) :)
//

எல்லாம் என் கற்பனை பெண்கூட தான் செந்தில்

said...

அழகான கவிதை!!!

//விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..
//
நல்ல கற்பனை!! :-)

இதெல்லாம் பார்த்தா எனக்கு கவிதை காதல் காவிதை எழுதனும் போல ஆசையா இருக்கு!! ;-)

said...

Karthick:

:)))) Sooper. Ippo dhan unga blogla oru brightness erukku!!! Adhu enna applekum unga special dream girlkum always oru conenction...
பாமரன்
எனக்கு..
சொல்வதற்குள்ளே
அந்த
கன்னங்களில்
வழுக்கி விழுகிறது
என் இதயம்!

அப்படி
விழுந்த இடம்
உன் இதயம்!
-nice lines here karthick..

Thank you karthick for a beautiful poem:))
ஆங்கில கவிதைக்கு ரொம்ப பிரசித்தி..
-Edhu vambu dhaney!!!! No problem.

said...

adada...kalayila paarthapa kavidhai illa...ippa paartha quarter adichi irukeenga??

said...

super kavidhai maams( idhellam therinja vishayam dhaanenu neenga aluthukaradu theiyudhu....irundhaalum solla vendiyadhu ennoda kadamai aache )
:-)

said...

naanum romba naala yosikaren...ore varatchiya iruku kavidhai aruvi :)

said...

//நினைச்சா கவிதை கொட்டுது.. என்னவோ போங்க...gifted தான் நீங்க.. //..me too telling the same :)

said...

சாரி தல கொஞ்சம் லேட்டு ;-))

கவிதை எல்லாம் சூப்பரு தல ;-)))

said...

அடடா உளறல் தொடருதா? தலை கலக்கறிங்க.

//உன்
இதயத்தில்
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..
//
எப்படிங்க? எப்படி?

//பறவைக்கே
அப்படி என்றால்
பாமரன்
எனக்கு..
சொல்வதற்குள்ளே
அந்த
கன்னங்களில்
வழுக்கி விழுகிறது
என் இதயம்!
//
பயங்கரமாதான் அடி பட்டிருக்கு இதயத்துக்கு..

said...

// எனக்கும் என் கனவு பெண்ணுக்கும் எந்த ஊடலும் இல்லை//

நம்பறோம் நம்பறோம் கனவு பெண் தான்னு :)

said...

//
வாப்பா நக்கீரா.. உன்னோடு விளையாடவே யாம் இங்கு வந்தோம்.. வந்திருப்பது இறை என்று அறிந்தும் வாதம் செய்த உன் தமிழ் பற்றி நாங்கள் வாழ்த்தினோம்..
//
SUPER :)
Ambi, why sooniyam in own money? :)

Anonymous said...

நானும்
ஒரு
கைதிதான்..
உன்
இதயத்தில்
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு

kaadhal kavidhaiyai kalakkum Kalakkal Karthi ....Ippadi nu katshi saarba ungaluku oru patta peyar vaika oru asai pa....

With Love,
Usha Sankar.

said...

//உன்
இதயத்தில்
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..//

ஆகா என்ன ஒரு சிந்தனை என்ன ஒரு சிந்தனை...தல தூள் கிளப்பறீங்க
:-)

said...

//முடிகற்றைகளில்
எப்போதும்
என் மனம்
ஊஞ்சலாடுது.//

G3 ஆடிட்டு இருக்காங்களே அந்த மாதிரியா :-)

said...

//என்னோடு
சேர்ந்து
மனசும்
ஆடுகிறது
ஊஞ்சல்..//

டிஸ்கோ தே கூட்டிட்டு போங்க :-)

said...

//பறக்கும்
பறவையை கூட
மயக்கி
கடிக்க சொல்லுது
உன் கன்னங்கள்..//

அப்படி ஆசை பாட்டு வந்து அந்த பறவை...குழம்புல வேக போகுது :-)

said...

//அங்கே
சிறைபட்டு
விலாகம்பிகளை
எண்ணிக்கொண்டு..//

இப்பத்தேன் ஜாமீன்ல வந்த மாதிரி இருக்கும்...மறுபடியுமா :-)

said...

//சொல்லில் குற்றம் இல்லை, பொருளில் தான்!//

ambi,

ரெண்டுலயும் இல்ல கலர்லதான்...இதுக்கு தான் அடிச்ச மப்பு எறங்கறதுக்கு முன்னாடி கமெண்ட் போட கூடாது :-)

said...

/இதெல்லாம் பார்த்தா எனக்கு கவிதை காதல் காவிதை எழுதனும் போல ஆசையா இருக்கு//

இதுகெல்லாமா யோசிக்கணும்.. டக்குன்னு எழுதுங்க CVR

said...

/nice lines here karthick..

Thank you karthick for a beautiful poem:))//

கதயளந்துகிட்டு இருந்த என்னை இப்படி எழுதவச்ச உங்களுக்கு டபுள் நன்றிகள் ப்ரியா..

said...

//ஆங்கில கவிதைக்கு ரொம்ப பிரசித்தி..
-Edhu vambu dhaney!!!! No problem.//

சூரியனை கைமறைப்பார் இல், ப்ரியா..

said...

/adada...kalayila paarthapa kavidhai illa...ippa paartha quarter adichi irukeenga??

//


ஏதோ நம்மாள முடிஞ்சது மாப்ள

said...

//super kavidhai maams( idhellam therinja vishayam dhaanenu neenga aluthukaradu theiyudhu....irundhaalum solla vendiyadhu ennoda kadamai aache )
//

இவ்வளவு பெரிய விளக்கமா.. நம்புறேன் மாப்ள

said...

//naanum romba naala yosikaren...ore varatchiya iruku kavidhai aruvi :) //

நீ அடிச்சா அது சிக்ஸர் தானே மாப்ள

said...

////நினைச்சா கவிதை கொட்டுது.. என்னவோ போங்க...gifted தான் நீங்க.. //..me too telling the same//

எல்லாம் இறை கொடுத்த வரம், மாப்ள

said...

//சாரி தல கொஞ்சம் லேட்டு ;-))

கவிதை எல்லாம் சூப்பரு தல ;-)))

//

நன்றிப்பா கோபி

said...

/நம்பறோம் நம்பறோம் கனவு பெண் தான்னு //

வேற வழி இல்லாம நம்புறது மாதிரி தெரியுதுங்க ப்ரியா

said...

/SUPER :)
Ambi, why sooniyam in own money? :)
//

இதே வேளையா போச்சு இந்த அம்பிக்கு

said...

/kaadhal kavidhaiyai kalakkum Kalakkal Karthi ....Ippadi nu katshi saarba ungaluku oru patta peyar vaika oru asai pa....
//


உஷா.. நீங்க சொன்னா சரிதான்.. படிச்சு கமென்டினதுக்கு நன்றிங்க உஷா

said...

/ஆகா என்ன ஒரு சிந்தனை என்ன ஒரு சிந்தனை...தல தூள் கிளப்பறீங்க
//

ஹிஹிஹி.. நன்றி நாட்டாமை

said...

//அப்படி ஆசை பாட்டு வந்து அந்த பறவை...குழம்புல வேக போகுது //

அட நாட்டாமை.. உனக்கு இதே ஞாபகம் தானா எப்பவுமே நாட்டாமை

said...

/இப்பத்தேன் ஜாமீன்ல வந்த மாதிரி இருக்கும்...மறுபடியுமா //

அங்கேயே தங்கிட தான் நினைக்கிறேன் நாட்டாமை.. முடியல

said...

//அம்பி,

ரெண்டுலயும் இல்ல கலர்லதான்...இதுக்கு தான் அடிச்ச மப்பு எறங்கறதுக்கு முன்னாடி கமெண்ட் போட கூடாது :-)
//

நாட்டாமை, உங்களுக்கு இன்னும் ஐ.நா சபை செயலாளர் பதிவு ஏன் இன்னும் தராம இருக்காங்க..

said...

வழக்கம் போல கலக்கல் கவிதை தல:)

said...

/வந்திருப்பது இறை என்று அறிந்தும் வாதம் செய்த உன் தமிழ் பற்றி நாங்கள் வாழ்த்தினோம்.. /
விவிசி:)அம்பி இது தேவையா உங்களுக்கு?:)

said...

//
வழக்கம் போல கலக்கல் கவிதை தல:)
//

நன்றிங்க வேதா..

/வந்திருப்பது இறை என்று அறிந்தும் வாதம் செய்த உன் தமிழ் பற்றி நாங்கள் வாழ்த்தினோம்.. /
விவிசி:)அம்பி இது தேவையா உங்களுக்கு?:)
//

இது அம்பி தனக்கே தான் வச்சுகிட்ட ஆப்புங்க வேதா