Sunday, April 22, 2007

ஒரு பட்டிக்காட்டு இளைஞனின் பட்டண வாழ்க்கை 5

நாலாம் பகுதியிலிருந்து...

அப்போது தான் நாங்கள் தங்கியிருந்த அறைக்கு பயன்படுத்தியிருந்த முன்னாள் எம்.எல்.ஏவிடம் இருந்து முடிந்தவரை சீக்கிரம் அறையை காலிசெய்துவிடுங்கள் என்று கடிதம் வந்தது. சென்னையில் யாரும் தெரியாத நாங்கள் தங்க என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினோம். இரவு நேர இருட்டைப் போன்ற அடர்த்தி எங்கள் மனசிலும் பரவியது.

இனிமேல்...

எங்கள் ஆறு பேரின் மனசிலும், அடுத்து தங்க என்ன செய்வதென்பது தான் ஒரே யோசனையாய் இருந்தது. அந்த அறை எங்களது சொந்த அறையை போலவே எங்களுக்கு தோன்றியது. அப்போது கூட தங்கியிருந்த நண்பன் பூபாலன் எங்கள் நெஞ்சில் பால் வார்த்தான். அவனுக்கும், தேனி மாவட்ட எம்.எல்.ஏவை தெரியும் என்றும் அவரிடம் சொல்லி புது அறைக்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். பட்டென்று யாரோ ஒருவர் வெளிச்சம் காண்பித்தது போன்று ஒரு சந்தோசம் எங்களுக்குள்.

நான் தாம்பரம் சானிடோரியத்தில் இருக்கும் நிறுவனதிற்கு தினமும் மின்சார ரயிலில் தான் செல்வேன். எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து எழும்பூர் ரயில் நிலையதிற்கு சென்று அங்கிருந்து ரயில் மூலம் சானிடோரியம் சென்று, அங்கிருந்து கம்பெனியின் வேன் மூலம் ஆபீஸ் செல்வேன். ரயில் வாழ்க்கை ஒரு வித்யாசமான அனுபவம். காலேஜிற்கு கிட்டதட்ட ஒரு வருடம் சென்ற அனுபவம் இருந்தாலும் இது அதை காட்டிலும் மிற்றுலும் வித்யாசமான அனுபவம்.

நான் திண்டுக்கல்லில் இருந்து ரயில் செல்லும் போதும் பெண்களுக்கென தனி பெட்டி இருக்கும். தினமும் வந்து செல்லும் பெண்கள் அதில் பயணம் செய்வதைத் தான் விரும்புவார்கள். அதிலும் ஒரு சில காதல் கதைகள் இருக்கத்தான் செய்கிறது. என் கூட சிறிது காலத்திலேயே நண்பனாய் அமைந்த விஜய், அந்த மாதிரி ஒரு காதலில் சிக்கி, கலகலப்பு விஜய் சோக விஜய் ஆனாது இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. ஆனால் அது காதலா, சிறிது கால நட்பை காதலென நினைத்தாரா என்ற சந்தேகம் இன்னும் எனக்குள் இருக்கிறது. ஆனால் கிட்டதட்ட ஒரு நான்கு வருடம் கழித்து அவரை சந்தித்த போது அதே பழைய கலகலப்பு இருந்தது. அவரை பாக்கவே சந்தோசமா இருந்தது.
சென்னை ரயிலிலும் அது போன்றே பெண்களுக்கென தனிப் பெட்டி இருக்கிறது. அதிலும் காலை பரபரப்பு நேரத்தில் அதில் தொங்கிகொண்டு போகும் பெண்கள் என்னை ஆச்சரியப்படுத்தவே செய்தனர். சுடிதார் அணிந்த பெண்களும் சரி, புடவைகள் அணிந்த பெண்களும் சரி எல்லோருமே அப்படித் தான் சென்றார்கள். அதுவும் செங்கல்பட்டிலிருந்து வரும் ரயிலில் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும். நான் நகரை விட்டு போகும் ரயிலில் செல்வதால் அந்த அளவு கூட்டம் இருக்காது, உள்ளே வரும் ரயில்களைப் போல.

ரயில்களில் வியாபரிகள் கூட்டமும் தர்மம் கேட்கும் கும்பலும் இருக்கும். ரயிலினுள் வியாபாரம் செய்பவர்கள் பலரும் விழியிழந்தோர் தான். சிறிய அளவு கூண்டுசி முதல், ரேஷன் கார்டு அட்டை, காது குடையும் பஞ்சு முதல் எல்லாவற்றையும் விற்பார்கள். சில பேருக்கும், கண்கள் சரியாக இருந்தாலும், இரக்கத்தில் வியாபாரம் நடக்கும் என்பதால், விழிகளை இழந்தது போலவே தங்களது வியாபாரங்களை செய்வார்கள். ஒரு பக்கம் அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.

ஒரு சில பேர் நல்ல பாடவும் செய்வார்கள். அவர்களின் சோகம் அந்த குரலில் ஏறி நம்மையும் மூழ்கடிக்கும். ஒன்றை குறைத்த ஆண்டவன் மற்ற ஒரு வரபிரசதத்தை தந்திருக்கானே என்று பல சமயங்களில் நினைத்துகொள்வேன். சென்னை ரயில் பயணங்களில் எனக்கும் சொல்லிக்கொள்ளும்படி எந்த நண்பர்களும் அமையவில்லை. ஆனால் பயணம் எனக்கும் பிடித்தே இருந்தது. தினமும் காலையில் கிளம்பி, அங்கே இருக்கும் VLR ஸ்டாலில் நான்கு இட்லிகளையோ, இரண்டு தோசைகளையோ சாப்பிடுவேன். அதன் ருசியே தனி தான்.

ரயிலில் நான் கவனித்தது, கண்டது கேட்டது எல்லாம் ஒரு தனிக்கதை.. நிறைய விஷயங்களை அது எனக்குச் சொல்லித் தந்தது. அதப் பற்றி பின்னால் சொல்கிறேன்..

பூபாலன் அந்த எம்.எல்.ஏவிடம் பேசி, புதிய அறையை வாங்கினான். அது புதிய எம்.எல்.ஏ ஹாஸ்டல். பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்து நாங்கள் அங்கே ஜனவரி மாத கடைசியில் குடிபெயர்ந்தோம்.. புதிய அறை கொஞ்சம் விசாலமானது. அறை எண் 420. நாலாவது மாடியில். அங்கிருந்து பார்த்தால் அலைகள் இரவிலும் கரையில் இருப்போரை தொட முயற்சி செய்வதை பார்க்கலாம். தொரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கப்பல்கள் விளக்குகள் போட்டு நிற்பதை காணலாம். எனக்கும் இந்த அறை மிகவும் பிடித்திருந்தது. மனசு லேசான மாதிரி இருக்கும் ஜன்னலை திறந்து அமர்ந்தால்..

இரவு நேரங்களில் சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது வழக்கம். அன்று சேப்பாக்கம் வரை நடந்து சென்றோம். தூரத்தில் ஒருவன் வேகமாக ஓடி வருவது தெரிந்தது. கைலியை மடித்து கட்டியிருந்தான். பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது. நாங்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் நின்றிருந்தோம். எங்கள் நண்பன் வேகமாக எங்களை நடக்கச் சொன்னான். நாங்கள் வளைந்து வாலாஜா ரோட்டில் வலது பக்கம் திரும்ப, தூரத்தில் நான்கு பேர் இடது பக்கத்தில் ஓடிவருவது அந்த அடர்ந்த இருட்டில் தெரிந்தது.

(இந்த வாழ்க்கை இன்னும் நீளும்)

55 பின்னூட்டங்கள்:

MyFriend said...

thodar continuationaa? padichchuddu varren ;-)

MyFriend said...

puthu room kidaichathai yenni makizchi..

aanaal, puthu room vanthathum oru puthu pirachanaiyaa???

Padmapriya said...

apdiye serial maadhiri eduthutu poreenga princi!!

Padmapriya said...

naa 0 comments paathutu..
1st nu perumai pattu oru ice cream keappen... apparam paatha enaku munnadiye ninariya peru comments potirpaanga..

yedhuku bhajane.. pesama ethanavadhu commento athana icecream kuduthidunga :)

Padmapriya said...

room number 420 nu karecta thaan kuduthirkaanga :D

Anonymous said...

Suspense..........;-)

ambi said...

As usual nice narration. next part pls.

//புதிய அறை கொஞ்சம் விசாலமானது. அறை எண் 420.//

LOL, correctaana room no thaan! :)

Anonymous said...

Nice yar

CVR said...

ஆஹா!!
கலக்கலா முடிச்சிருக்கீங்க தல!!
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வெய்டிங்!! :-)

பி.கு:நாங்க அட்டென்டென்ஸ் மட்டும் இல்லாம பதிவை படிச்சிட்டு பின்னூட்டமும் போடுவோம்!! :-D

Dev Payakkal said...

////இந்த வாழ்க்கை இன்னும் நீளும்///

romba santhosham!!!

Dreamzz said...

kadhai interestinga podhu!

MLA hostellaiye maari maari thangi irukeenga!

Dreamzz said...

//விழிகளை இழந்தது போலவே தங்களது வியாபாரங்களை செய்வார்கள். ஒரு பக்கம் அவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.
/

nalla soneenga! oru pakkam paavam. maru pakkam vetkamaaga irukkum. naam irukkum saamoogathil ippadiyum nadakirathey enru :(

சுப.செந்தில் said...

உங்க சென்னை வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமானதா இன்னும் எழுதுங்க வாத்தியாரே 6 வது பகுதிக்கு ஆவலுடன்

சுப.செந்தில் said...

ஏதாவது கிளுகிளுப்பாவும் நடந்திருக்குமே அதையும் மறைக்காம மறக்காம எழுதிடுங்க

SathyaPriyan said...

என்னங்க பாலகுமாரனின் இனிது இனிது காதல் இனிது ல வர ஒரு கதை மாதிரி இனிமையாக போய்க்கொண்டு இருக்கும்னு பார்த்தா ராஜேஷ் குமாரின் நாவல் மாதிரி திடுக் திடுக் லாம் வருது.

நீங்க சங்கத்த அத பார்த்த உடனே கலச்சுடீங்களா?

கோபிநாத் said...

\\ஒரு சில பேர் நல்ல பாடவும் செய்வார்கள்.\\

தல
நம்ம ரூட்டா நீங்க, மூனு வருஷம் நானும் அந்த ரூட்டு தான்....செம ஜாலியா இருக்கும் ;-)

சில பேரின் குரல்கள் உண்மையில் பாடகர் குரல் போலவே இருக்கும். நானும் இன்னும் பல நண்பர்களும் தனியாக காசு கொடுத்து எங்களுக்கு விரும்பிய பாடல்களை பாட சொல்லி கேட்போம்.

mgnithi said...

aaha.. ippadi oru suspense vachiteengale... seekiram adutha part ezhuthunga

Bharani said...

eppadi maams ivlothayum nyabagam vachi irukeenga....ennaku nethi nadanthadhe nyabagam illa....

Bharani said...

ezhutha pathi enna solla....

MyFriend said...

haiyaa.. naanthaan firstuu.. ;-)

Syam said...

சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸா போட்டு தாக்கறீங்களே...:-)

Syam said...

//பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது//

MLA ஹாஸ்டல் வாழ்கைல இது எல்லாம் சாதாரனம் :-)

Syam said...

//LOL, correctaana room no thaan! :) //

அம்பி, ROTFL :-)

Anonymous said...

Karthi,
Ungaluku Nalla kadhai panna theiryudhu.
Adhai than oru padhivu vera solli irukeengalae.

Nijamma, kadhai solli ketkara madhiri oru feelings dhan varudhu
.Anubavathai sollikara feelings varalai thale.
Ha ha ha.Just for kidding.
Vegama oodi pona appo enna achu? seekiam Sollungo.

With Love,
Usha Sankar.

Geetha Sambasivam said...

ippovuma VLR stall thosai nalla irukku? No chance.

Priya said...

சூப்பர்.. ரயில் பயணங்கள் ரொம்ப சுவாரஸ்யமானவை. அதுவும் பெண்கள் கம்பார்ட்மெண்ட்ல போனா இறங்கவே மனசு வராது :)

Priya said...

//பக்கத்தில் வந்தபோது அந்த சோடியம் வேப்பர் விளக்கில் இடது பக்க வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து காய்ந்து கிடந்தது.//

இப்படி ஒரு சஸ்பென்ஸா?

மணிகண்டன் said...

ஒவ்வொரு தடவையும் ஒரு சஸ்பென்ஸோட முடிச்சு மர்மத்தொடர் மாதிரி கொண்டு போறீங்க :)

மு.கார்த்திகேயன் said...

/thodar continuationaa? padichchuddu varren ;-)
//

ஆமாங்க பிரண்ட்.. படிச்சிட்டு சொல்லுங்க

மு.கார்த்திகேயன் said...

/aanaal, puthu room vanthathum oru puthu pirachanaiyaa??? //

அது தானே வாழ்க்கை மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

//apdiye serial maadhiri eduthutu poreenga princi!! //

அப்பத் தானே கொஞ்சம் சுவாரஸ்யம் இருக்கும் பத்மப்ரியா

மு.கார்த்திகேயன் said...

//yedhuku bhajane.. pesama ethanavadhu commento athana icecream kuduthidunga //

ஆஹா பத்மப்ரியா.. நீங்க தானா அது

மு.கார்த்திகேயன் said...

//room number 420 nu karecta thaan kuduthirkaanga //

அடடா.. நாந்தான் வாயை கொடுத்து மாட்டிகிட்டேனா

மு.கார்த்திகேயன் said...

/Suspense..........;-) //

ஆமாங்க ஹனிஃப் :-)

மு.கார்த்திகேயன் said...

//LOL, correctaana room no thaan! :) //

ஆஹா அம்பி நீயுமா

மு.கார்த்திகேயன் said...

/பி.கு:நாங்க அட்டென்டென்ஸ் மட்டும் இல்லாம பதிவை படிச்சிட்டு பின்னூட்டமும் போடுவோம்!! //

CVR, நம்மளை இப்படி டேமேஜ் பண்ணலாமா

மு.கார்த்திகேயன் said...

/romba santhosham!!! //

தேவ், அடுத்த பதிவைப் போட்டாச்சா

மு.கார்த்திகேயன் said...

/MLA hostellaiye maari maari thangi irukeenga! //

ஆமாங்க தினேஷ்.. கிட்டதட்ட ஆறு மாதங்கள்!

மு.கார்த்திகேயன் said...

//nalla soneenga! oru pakkam paavam. maru pakkam vetkamaaga irukkum. naam irukkum saamoogathil ippadiyum nadakirathey enru :(
//

சில விஷயங்களை நம்மால் மாற்ற முடியாதே ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//உங்க சென்னை வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமானதா இன்னும் எழுதுங்க //

அப்படி நினச்சு தான் நான் எழுதுறேங்க செந்தில்

மு.கார்த்திகேயன் said...

//ஏதாவது கிளுகிளுப்பாவும் நடந்திருக்குமே அதையும் மறைக்காம மறக்காம எழுதிடுங்க//

அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்கலங்க செந்தில்

மு.கார்த்திகேயன் said...

//நீங்க சங்கத்த அத பார்த்த உடனே கலச்சுடீங்களா? //

வேற வழி, சத்யா

மு.கார்த்திகேயன் said...

//சில பேரின் குரல்கள் உண்மையில் பாடகர் குரல் போலவே இருக்கும். நானும் இன்னும் பல நண்பர்களும் தனியாக காசு கொடுத்து எங்களுக்கு விரும்பிய பாடல்களை பாட சொல்லி கேட்போம். //

கரெக்டா சொன்னப்பா கோபி.. நானும் அப்படி சில பேரை பார்த்திருக்கிறேன்

மு.கார்த்திகேயன் said...

//aaha.. ippadi oru suspense vachiteengale... seekiram adutha part ezhuthunga //

அப்படி வச்சாத் தானே நல்லா இருக்கும் நிதி

மு.கார்த்திகேயன் said...

/eppadi maams ivlothayum nyabagam vachi irukeenga....ennaku nethi nadanthadhe nyabagam illa....

//

எழுத உட்கார்ந்தா எல்லாமே தானா வருதுப்பா, மாப்ள.. அவசரமில்லாம எழுதினா இன்னும் நிறைய வரும், கொஞ்சம் உணர்சியோட

மு.கார்த்திகேயன் said...

/ezhutha pathi enna solla....//

சொல்லாதா அர்த்தங்கள் கோடிப்பா மாப்ள

மு.கார்த்திகேயன் said...

//சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸா போட்டு தாக்கறீங்களே...:-) //

என்னங்க பண்றதுங்க நாட்டாமை.. மக்களுக்கு தேவைப்படுதே :-)

மு.கார்த்திகேயன் said...

//MLA ஹாஸ்டல் வாழ்கைல இது எல்லாம் சாதாரனம் :-)
//

நாட்டாமை அந்த கூட்டத்துல நீங்களும் ஒரு ஆள் :-)

மு.கார்த்திகேயன் said...

//Vegama oodi pona appo enna achu? seekiam Sollungo.//

என்னங்க உஷா மேடம்.. இப்படி காலை வாருறீங்க

மு.கார்த்திகேயன் said...

//ippovuma VLR stall thosai nalla irukku? No chance.

//

கிண்டியில் மிகவும் சுவையாக இருக்கும் கீதா மேடம்

மு.கார்த்திகேயன் said...

/பெண்கள் கம்பார்ட்மெண்ட்ல போனா இறங்கவே மனசு வராது//

அந்த அனுபவங்களை நீங்க தான் சொல்லணும் ப்ரியா

மு.கார்த்திகேயன் said...

//ஒவ்வொரு தடவையும் ஒரு சஸ்பென்ஸோட முடிச்சு மர்மத்தொடர் மாதிரி கொண்டு போறீங்க :)

//

சின்ன சின்ன விஷயத்தை இப்படியெல்லாம் தான் சொல்லவேண்டி இருக்கு

ACE !! said...

உங்க வாழ்க்கை கதை த்ரில்லர் கதையாயிடுச்சா? சஸ்பென்ஸா முடிச்சிருக்கீங்க.. அடுத்த பகுதியை சீக்கிரமா போடுங்க.. :) :)

Anonymous said...

Mla ஹாஸ்டல்ல இப்படி எல்லாம் தங்கலாமா?

அப்ப இருந்தே அடி போட்டாச்சு, கார்த்தி நீ M.L.A ஆனதும் அதே ஹாஸ்டலுக்க்ய் போனா எப்படி இருக்கும்னு ஒரு கனவு கானுரேன்

Anonymous said...

micha kadhaiya yaar solva antha kuthu pattavana? seekirama yelutha start pannumga. yevvulavau nalaa yemathureenga


anbu thangai