Wednesday, April 25, 2007

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 19 [சூடான சினிமா பகுதி]

ரொம்ப நாள சிட்டுக்குருவி வராததால, நாமளே இன்னைக்கு ஏன் சினி பிட்ஸ் எழுதக்கூடாதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். எப்படித் தான் நான் யோசிச்சது சிட்டுக்குருவிக்கு தெரிஞ்சதோ தெரில, இன்னைக்கு வர்றேன்னு வாய்ஸ் மேஸேஜ் விட்டிருந்தது.. நம்ம குருவியோட பஞ்சுவாலிட்டி தான் தெரியுமே.. கரெக்டானா நேரத்துக்கு வந்தது.. அதுக்காக ஜன்னலை திறந்துவிட்டப்போ தான் அந்த ஆச்சரியமான இன்னொரு ஆளை பார்த்தேன்.. சிட்டுக்குருவியோட காதலி.. என் கிட்ட அறிமுகம் பண்ணிவைக்க சொன்னுச்சாம். அட! நாம அவ்வளவு பெரிய ஆளா என்று நினைக்கிறப்பவே நைசா காதுல வந்து சிட்டுக்குருவி சொன்னுச்சு..மகனே இன்னைக்கு உனக்கு ராடு தான்.. நீ அடிக்கடி எனக்கு போன் பண்ணி தொல்லை பண்றேன்னு, நம்மாளு கோபத்துல இருக்கு. உன்னை நேர்ல பாத்து நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்விகேட்கலாம்னு வந்திருக்கு.. என்ன கொடுமை இது ACE!

இன்னைக்கு எப்படியாவது சிட்டுக்குருவியோட கைல இருந்து தப்பிக்கணுமே.. புதுசா ஏதாவது திட்டம் போடுடா கார்த்தின்னு மனசு சொன்னுச்சு.. சரி.. ரெண்டு பேரும் புதுசா வந்திருக்காங்க.. ஏதாவது ட்ரீட் அரெஞ்ச் பண்ணி அசத்திடவேண்டியது தானேன்னு டக்குன்னு ஒரு பிளான் போட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் ஜோடியா வந்திருக்கீங்க.. உங்க ரெண்டு பேருக்கு இன்னைக்கு ட்ரீட் நான் தர்றேன் அப்படின்னி சொன்னேன்.. உடனே சிட்டுக்குருவியோட காதலி ஒரு லுக் விட்டுச்சு பாருங்க.. பக்கத்துல இருந்த டேபிள் லேம்ப் படார்ன்னு வெடிச்சது.. ஏன் ஏன் இந்த கோபம்னு கேட்டேன்.. நீங்க ட்ரீட் தர்ற லட்சணம் தான் இந்த உலகத்துக்கே தெரியுமே.. எல்லோருக்கும் ட்ரீட் தர்றேன்னு கூட்டிட்டு போய், நீங்களெள்ளாம் ரவுண்ட் கட்டி ஹோட்டலை காலி பண்ணிட்டு, பில்லை மட்டும் அந்த பச்சபுள்ள பில்லு பரணிகிட்ட கொடுத்துடுவீங்க.. அவனும் எத்தனை நாளைக்கு தான் நல்லவன் மாதிரியே உங்க பில்லையெல்லாம் கட்டுவான்னு நம்மளை பாத்து ஒரு கேள்வி கேட்டுச்சு.. இங்க பாருங்கடா! மாப்ள பரணி பில்லு ஆனது அகில உலக ஜீவராசிகள் எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கேன்னு நமக்கு ஒரு ஆச்சர்யம்!

சரி..சரி.. வந்த வேலையை கவனிங்க.. வெட்டியா இந்தாளு கூட என்ன பேச்சுன்னு (இவிங்க எப்பவுமே இப்படித் தான்) காதலி சொல்ல, பரபரப்பா நியுஸை சொல்ல ஆரம்பிச்சது சிட்டுகுருவி.. சரி.. நாம மக்களுக்காக எப்படி எல்லாம் உழைக்கிறோம்.. இத்தனை அடிகளான்னு நினச்சுகிட்டேன்..

முக்கியமான விஷயத்தை கடைசில சொல்றேன்ன்னு ஒரு சின்ன சஸ்பென்ஸோட ஆரம்பிச்சது சிட்டுக்குருவி.. நாம பல தடவை கேட்டும் அதை கடைசில தான் சொல்வேன் சொல்லிடுச்சு..

இந்த பாலா நான் கடவுளை எப்பத்தான் முடிப்பாரோ.. அந்த புராஜெக்டை விட்டு அஜித் வெளியேறி(யேற்றப்பட்டு) ஒரு வருஷம் ஆகப் போகுது.. இன்னும் படம் முடிஞ்சபாடு இல்லை.. கால்ஷீட்டெல்லாம் வேஸ்ட்டாகுதுன்னு (இல்லைனா, பில்லு பரணி மாப்ள கூடவாவது ஊர் சுத்தியிருப்பேன்) பாவனா சொல்ல, இப்ப புது ஹிரோயின்களை தேர்ந்தெடுக்கிறார் பாலா.. கூடிய விரைவில், அதற்கான அறிவிப்பு வரும் போல தெரியுது..

சூர்யா, கௌதமோட இயக்கத்துல வாரணம் ஆயிரம் படத்துல நடிக்கிறது எல்லாருக்கும் தெரியும். ஷூட்டிங் கூட ஸ்டார்ட் ஆகப்போகுது.. இதுக்கு இடைல, அதே நேரத்துல, ஹரியோட இயக்கத்துல வேல் படத்துலையும் நடிக்கப்போறார். கஜினி வெற்றிக்கு பிறகு அசின் ஜோடி சேர்றார் நம்ம அசின்.. கஜினியோட ரீமேக்ல அமீர் ஜோடியா அசின் நடிக்க போறது எல்லோருக்கும் தெரியும்.. மெல்ல நம்ம கோலியுட்டை விட்டு பாலிவுட்டுக்கு பறக்குது அசின் கிளி.. கிளிக்கு றெக்கை முழைச்சுடுச்சு.. பறந்துடுச்சுன்னு தமிழ் மக்கள் கதறப் போறாங்க.. நானும் அப்படின்னு சிட்டுக்கிருவி வழிய, பக்கத்துல உட்கார்ந்திருந்த சிட்டுக்குருவியோட லவ்வர், கைல கிடச்ச வாட்டர் கேனை தூக்கி எறிந்தது, செல்லமா.. (போடி..இந்த வழிசலுக்கு உனக்கு ஆப்பு இருக்குன்னு சிட்டுக்குருவியை பார்த்து சொன்னேன்)

இம்சை அரசனுக்கு பிறகு, இந்திரலோகத்தில் நா அப்பாசாமிங்கிற படத்துல வடிவேலு ஹீரோவா நடிக்கிறதா இருந்தது. பல காரணத்தினால அது தள்ளி போயி ட்ரொப்பும் ஆகிடுச்சு. இப்போ அந்த புராஜெக்டை செவந்த் சேனல் நாராயணன் தயாரிக்கப் போறார். அடுத்த மீழு நீள காமெடி படம் ரெடியாகப் போகுது..

இதை சொலி முடிச்சிட்டு பார்த்த சி.குவோட லவ்வர் கௌச்சுல நல்லா கால் நீட்டி தூங்க ஆரம்பிச்சிடுச்சு..

கமெர்சியல் டைரக்டர் (திருப்பதி, தர்மபுரிக்கு பிறகு அப்படி கூப்பிடலாமா) பேரரசு இப்போ பரத்தை வச்சு அடுத்த படத்தை எடுக்கிறார். படத்து பேரு பழநி.. (மக்களே.. உங்க ஊர் பெயரை அனுப்பி வையுங்க.. அடுத்த பட டைட்டிலுக்கு பேரரசு யோசிப்பார்). முக்கிய வேஷத்துல நடிக்க நதியாவை கேட்டிருக்காங்க.. படத்துக்கு இசை ப்ரூ காப்பி..சாரி..ஸ்ரீகாந்த் தேவா.. வரிசையா நல்ல படங்களை தந்து கேரியர் கிராப் நல்லா போயிகிட்டு இருக்க பரத்துக்கு இந்த படம் அடுத்த லெவலுக்கு ஏற்றுமான்னு பாக்கலாம்.. மறந்தே போயிட்டேன்.. இந்த படத்தோட டேக் லைன் கமர்ஷியல் பஞ்சாமிர்தம்..

நீங்க சொல்றதெல்லாம் இருக்கட்டும்.. ஜூன் மாசக் கடைசில ஜோதிகா அம்மா ஆகிறார்.. சூர்யா அப்பாவாகிறார்.. அடுத்த மாதம் தி.நகர்ல இருக்க அவங்க வீட்ல ஜோதிகாவுக்கு வளைகாப்பு நடக்குது.. இந்த நிகழ்ச்சில பாட்டு பாடுவாரா சூர்யா?

யாரு இது புதுசா நியூஸ் சொல்றதுன்னு பார்த்தா, அட நம்ம சிட்டுக்குருவியோட லவ்வர்.. அதுவும் சினி நியூஸ் சொல்ல ஆரம்பிச்சிடுச்சேன்னு ஒரு சந்தோசம் (எப்படி அது மனசு மாறுச்சுன்னு கேட்கப்படாது.. கிளைமாக்ஸ் வந்திடுச்சுல..)

இப்ப நான் சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னென்னா, சிவாஜி படம் மே 17-இல் ரிலீஸ் ஆகுறது உங்க எல்லோருக்கும் தெரியும்.. நம்ம கொலம்பஸ்லயும் படம் அதே நாள் ரிலீஸ் ஆகுது.. (ஷங்கர் மறுபடியும் டேட்டை தள்ளி வைக்காம இருந்தா) அருண், டிக்கட் வேணுமா.. இப்பவே சொல்லுப்பா.. சூடம் ஏத்தி தேங்காய் உடச்சு அமர்க்களம் பண்ணிடலாம், தலைவர் படத்துக்கு..

நாங்களும் வர்றோம் தலைவர் படம் பாக்கன்னு சி.குவோட லவ்வர் சொன்னுச்சு உற்சாகமா.. கொஞ்ச நேரம் மூணு பேரும் அரட்டை அடிச்சோம்.. இந்த தடவை சிட்டுக்குருவி ஜோடியா வந்ததுனால ரெண்டு பேருக்கும் செர்ந்து இந்தியன் ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்தேன்.. ஹிஹிஹி.. மாப்ள பரணி, கவலைப்படாதே.. பில்லை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.. நீ ரொம்ப நல்லவன்டாடாடாடாடா

65 பின்னூட்டங்கள்:

said...

//இயக்கத்துல வாரணம் ஆயிரம் படத்துல நடிக்கிறது எல்லாருக்கும் தெரியும்//

இதுவே வாணரம் ஆயிரம் னு பேரு வெச்சு இருந்தா நம்ம எல்லாம் நடிக்க போய் இருக்கலாம் :-)

said...

//பேரரசு இப்போ பரத்தை வச்சு அடுத்த படத்தை எடுக்கிறார்//

போச்சு அடுத்த டார்சருக்கு மக்கள் ரெடியாக வேண்டியது தான் :-)

said...

//படத்துக்கு இசை ப்ரூ காப்பி..சாரி..ஸ்ரீகாந்த் தேவா.. //

ROTFL....தல அவரு தரமான பில்டர் காப்பி :-)

said...

//சிவாஜி படம் மே 17-இல் ரிலீஸ் ஆகுறது உங்க எல்லோருக்கும் தெரியும்.. //

என்ன தல ஜீன் 8 னு கேள்வி பட்டேன்...ஒரே கன்பீசனா இருக்கு....

said...

உள்ளேன் ஐயா:)

said...

நாந்தான் முதலா? அப்டியிருந்தா(இல்லேன்னா கூட) எனக்கு இன்னிக்கு ரசகுல்லா வேணும்:) பில்லை வழக்கம் போல என் சிஷ்யன் பில்லு பரணிக்கு அனுப்பிடுங்க:)

said...

who is first?

said...

aiya syam first!!

said...

ஆகா நம்ம முதல்வர் முந்திக்கிட்டாரா? சரி பரவாயில்ல அண்ணே நமக்கும் கொஞ்சம் ரசகுல்லா அனுப்பி வச்சுடுங்க:)

said...

தல இந்த பதிவ ரொம்ப ரசிச்சேன்.. நல்ல எழுதியிருக்கீங்க

said...

என்ன தல இப்பிடி ஒரு கேள்வி.. 1.5 மணி நேரம் தான.... கண்டிப்பா வருவேன். தலைவர் படத்துக்காக இது கூட செய்யாட்டி எப்பிடி...

சூடம்/தேங்கா/பூசனிக்கா இதெல்லாம் இல்லாமயா?

பட்டைய கிளப்பிடுவோம்.. தலைவர் படத்துக்கு ஒடையாத தேங்கா எதுக்குங்குறேன் :)

"காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்"னு தலைவர் பாடிட்டு வரும்போது தேட்டர் அதிரனும் :)

said...

//படத்து பேரு பழநி.. இந்த படத்தோட டேக் லைன் கமர்ஷியல் பஞ்சாமிர்தம்..
//

தயாரிப்பாளருக்கு மொட்டை போடாம இருந்தா சரி...

said...

நம்பதா பர்ஸ்ட்டா...அப்பா மை பிரண்ட் இன்னைக்கு போட்டிக்கு வரல....மக்களே எல்லோரும் பில்லு செலவுல வேணும்கரத சாப்பிடுக்கலாம்
:-)

said...

//உடனே சிட்டுக்குருவியோட காதலி ஒரு லுக் விட்டுச்சு பாருங்க.. பக்கத்துல இருந்த டேபிள் லேம்ப் படார்ன்னு வெடிச்சது.. //

பறவைகள் உலகத்துலயும் தங்கமணிகள் இப்படி தானா?

said...

"namma asin?" nalla irukku! :)))))))
Bru Coffee? Srikanth Deva? adutha he he he he

said...

//சிவாஜி படம் மே 17-இல் ரிலீஸ் ஆகுறது உங்க எல்லோருக்கும் தெரியும்.. நம்ம கொலம்பஸ்லயும் படம் அதே நாள் ரிலீஸ் ஆகுது.. //

அட. முதல் நாள் முதல் ஷோவா? கலக்குங்க தலை.

said...

சுவாரஸ்யமா இருந்தது பதிவு.

said...

மு.கா. சிட்டு குருவி சூப்பர்.... அது சரி இந்த சிட்டு குருவி லேகியம்னு சொல்றானுங்களே அப்படின்னா என்ன?

Anonymous said...

attendance :-)

-kodi

said...

//என்ன கொடுமை இது ACE!//

இவரை இன்னும் நீங்க விடலையா? :-P

said...

//இங்க பாருங்கடா! மாப்ள பரணி பில்லு ஆனது அகில உலக ஜீவராசிகள் எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கேன்னு நமக்கு ஒரு ஆச்சர்யம்!//

இதோ! இந்த இடத்துலாதான் இன்னொரு தடவை "என்ன கொடுமை ACE இது"ன்னு போடனும்.. ஹீஹீ..

said...

//முக்கிய வேஷத்துல நடிக்க நதியாவை கேட்டிருக்காங்க.. //

நதியா, நீங்க இந்த போஸ்ட்டை படிச்சுக்கிட்டு இருந்தீங்கன்னா "ஸே நோ டு பேரரசு!!!!"

கார்த்தி, உங்க சிட்டுகுருவியை அனுப்பு நதியாவுக்கு தகவல் சொல்லுங்களேன்

said...

நான் முதல்ல கடசி மேட்டர தேடி படிச்சிட்டு அப்புறம் தான் மிச்சத்த படிச்சேன்!

said...

//என்ன கொடுமை இது ACE!//

paavam avaru!

Anonymous said...

சிட்டுக்குருவி ஜோடியா வந்ததுனால ரெண்டு பேருக்கும் செர்ந்து இந்தியன் ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்தேன்.. ஹிஹிஹி.. மாப்ள பரணி, கவலைப்படாதே.. பில்லை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.. நீ ரொம்ப நல்லவன்டாடாடாடாடா


Karthi,
Indha dharam bharaniku billai anupunga.. apparam unga chittukuruvi - jodiya ungalai gavanikara vidhathil nalla gavanikum.......
(actuala, unga bloga la romba inspire anadhu indha chittukuruvi cine bit sollun unga writings dhan.)

With Love,
Usha Sankar.

Anonymous said...

இதுவே வாணரம் ஆயிரம் னு பேரு வெச்சு இருந்தா நம்ம எல்லாம் நடிக்க போய் இருக்கலாம் :-)

syam - really nice and kindal comments.

padichutu - sirichu sirichu sotmach pain.

Manakkannil = ellaraiyum vaanaramaga partha oru feelings ( already unga blog pathutu - syam nu parthalae unga blog vanaram dhan ninaivil varudhu.)(adhu vaanaram dhanae?)

With Love,
Usha Sankar.

With Love,
Usha Sankar.

said...

பரவாயில்ல. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸ் கொடுத்துருக்கு சிட்டுக்குருவி

said...

அப்படா எவ்வளவு நாள் ஆச்சு.சிட்டுக்குருவிய பார்த்து..ம்ம் நல்லத்தான் இருக்குப்பு சோடியா கிளம்பியாச்சா..இனி நிறைய கிடைக்குமே...

said...

//அருண், டிக்கட் வேணுமா.. இப்பவே சொல்லுப்பா.. சூடம் ஏத்தி தேங்காய் உடச்சு அமர்க்களம் பண்ணிடலாம்//

என்னப்பா அருணுக்கு மட்டும்தான் டிக்கட்டா?

அப்புறம் பில்லு பரணி கிட்ட சொல்லி கொடுத்து, ஸ்பாண்சர்சிப் கட் பண்ணிடுவென்ன்ன்ன்ன்ன்ன்

said...

நன்றி :)

said...

இது மாதிரி அடிக்கடி ந்யூஸ் கொடுத்துக்கிட்டு இருங்க தல!!

அந்த அமீர் கான் கஜினி படத்துல அசின்-க்கு பதிலா வேறு யாரோ மாற்றப்பட்டுவிட்டதா கேள்வி பட்டேனே!! :-)

said...

இன்டரெஸ்டிங்கா இருக்கு... :) :)

இங்க சிவாஜியை எந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்கன்னு தெரியல.. டிக்கெட் ரிஸர்வ் செய்யனும்..

@syam
//வானரம் ஆயிரம்..//
LOL :) :)

said...

இன்னியில இருந்து என் பேர் ACE இல்ல.. இல்ல.. இல்ல.. ஏன், எனக்கு பேரே இல்ல.. :) :) எனக்கு பேரே கிடையாது.. இப்போ என்ன பண்ணுவீங்க.. :) :)

said...

//இதுவே வாணரம் ஆயிரம் னு பேரு வெச்சு இருந்தா நம்ம எல்லாம் நடிக்க போய் இருக்கலாம் //

நானும் இதையே தான் நினச்சேன் ஷ்யாம்.. அங்கேயும் நாட்டாமை நீர் தான்!

said...

//போச்சு அடுத்த டார்சருக்கு மக்கள் ரெடியாக வேண்டியது தான்//

எடுத்த டார்ச்சரே இன்னும் இருக்கே ஷ்யாம்

said...

சிட்டுக்குருவி கிசு கிசுவெல்லாம் கொடுக்காதா?

said...

/ROTFL....தல அவரு தரமான பில்டர் காப்பி//

ஜித்தன் படத்துல ஹார்லிக்ஸ் விளம்பர டியூனை கூட காப்பி அடிச்சவர் தானே நாட்டாமை

said...

/என்ன தல ஜீன் 8 னு கேள்வி பட்டேன்...ஒரே கன்பீசனா இருக்கு....
//

மே 27 தாங்க நாட்டாமை.. ஏன்னா ஷங்கருக்கு ராசி 8.. தலைவருக்கு வியாழன்.. ரெண்டும் சரியா வர்றது மே 27 தான்.. நோ கன்பியூசன்

said...

//பில்லை வழக்கம் போல என் சிஷ்யன் பில்லு பரணிக்கு அனுப்பிடுங்க:)//

மாப்ள உன் புகழ் ஊரெல்லாம் நல்லாவே பரவுதுப்பா

said...

//பரவாயில்ல அண்ணே நமக்கும் கொஞ்சம் ரசகுல்லா அனுப்பி வச்சுடுங்க//

பரணி, ஒரு ரசகுல்லா பார்சல் ;)

said...

//தல இந்த பதிவ ரொம்ப ரசிச்சேன்.. நல்ல எழுதியிருக்கீங்க //

நன்றிப்பா அருண்..

said...

//"காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்"னு தலைவர் பாடிட்டு வரும்போது தேட்டர் அதிரனும் :) //

அமர்க்களப்படுத்தலாம் அருண்..

said...

//
தயாரிப்பாளருக்கு மொட்டை போடாம இருந்தா சரி... //

கட்டாயம் தயாரிப்பாளருக்கு மொட்டை தான்...

said...

//....மக்களே எல்லோரும் பில்லு செலவுல வேணும்கரத சாப்பிடுக்கலாம்
//

போதும் போதும் நிறுத்திக்குவோம்.. பாவம் என் மாப்ள

said...

//பறவைகள் உலகத்துலயும் தங்கமணிகள் இப்படி தானா? //

நானும் அதையே தான் நினச்சேன் ப்ரியா.. உண்மையா இது/

said...

//"namma asin?" nalla irukku! :)))))))
Bru Coffee? Srikanth Deva? adutha he he he he //


ஹிஹிஹி எல்லாம் உங்க ஆசிதாங்க மேடம்

said...

//அட. முதல் நாள் முதல் ஷோவா? கலக்குங்க தலை. //

நம்ம அருணும் மணிபிரகாசும் வர்றாக.. கலக்கி எடுத்துபுடுவோம்ல ப்ரியா

said...

//சுவாரஸ்யமா இருந்தது பதிவு. //

நன்றிங்க ப்ரியா

said...

//அது சரி இந்த சிட்டு குருவி லேகியம்னு சொல்றானுங்களே அப்படின்னா என்ன? //

ஆஹா..கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க

said...

/attendance :-)

-kodi

//

marked kodi:-)

said...

//இவரை இன்னும் நீங்க விடலையா?//

இனிமே இவர் தான்.. நமக்கு சரவணன்..

said...

//இதோ! இந்த இடத்துலாதான் இன்னொரு தடவை "என்ன கொடுமை ACE இது"ன்னு போடனும்.. ஹீஹீ.. //

இன்னும் நாலு இடத்துல கூட போடலாம் மை பிரண்ட்

said...

//கார்த்தி, உங்க சிட்டுகுருவியை அனுப்பு நதியாவுக்கு தகவல் சொல்லுங்களேன்//

அனுப்புச்சுட்டேங்க மை பிரண்ட்... நடிக்கமாட்டாங்க இனிமேல்

said...

/நான் முதல்ல கடசி மேட்டர தேடி படிச்சிட்டு அப்புறம் தான் மிச்சத்த படிச்சேன்! //

அட!

said...

//(actuala, unga bloga la romba inspire anadhu indha chittukuruvi cine bit sollun unga writings dhan.)//

நன்றிங்க உஷா.. எல்லாம் நீங்க எல்லாம் தர்ற உற்சாகம் தான்

said...

//Manakkannil = ellaraiyum vaanaramaga partha oru feelings ( already unga blog pathutu - syam nu parthalae unga blog vanaram dhan ninaivil varudhu.)(adhu vaanaram dhanae?)
//

நல்ல கற்பனைங்க உஷா மேடம்

said...

/பரவாயில்ல. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் நியூஸ் கொடுத்துருக்கு சிட்டுக்குருவி//

அதுக்கு வேலையே அது தானே அம்மிணி

said...

// நல்லத்தான் இருக்குப்பு சோடியா கிளம்பியாச்சா..இனி நிறைய கிடைக்குமே... //

நானும் அப்படித்தான் நம்புறேன் மணிபிரகாஷ்

said...

/அப்புறம் பில்லு பரணி கிட்ட சொல்லி கொடுத்து, ஸ்பாண்சர்சிப் கட் பண்ணிடுவென்ன்ன்ன்ன்ன்ன் //

அய்யோ அதெல்லாம் வேண்டாம்.. பில்லுவை நம்பி பல ட்ரீட் இருக்கு இன்னும்

said...

//நன்றி :) //

:-)

said...

//அந்த அமீர் கான் கஜினி படத்துல அசின்-க்கு பதிலா வேறு யாரோ மாற்றப்பட்டுவிட்டதா கேள்வி பட்டேனே!! :-) //

மறுபடியும் அசினே வந்துட்டாங்க CVR :-)

said...

//இன்னியில இருந்து என் பேர் ACE இல்ல.. இல்ல.. இல்ல.. ஏன், எனக்கு பேரே இல்ல.. :) :) எனக்கு பேரே கிடையாது.. இப்போ என்ன பண்ணுவீங்க.. :) :) //

என்ன கொடுமை இது ACE!

இப்படியெல்லாம் சொன்னா எப்படிங்க

said...

adada..
naan unga bloga padika arambichulernthu idu thaan mudal sini bits...irukatum.. supera potu irukeenga.. inga thalaivaroda padam release agumo agothonu ore kavalaiya iruku.. neenga ellam first day first show parthutu kadai/vimarsanam ellam poda koodathu solliten.. naan pakira varaikum

C.M.HANIFF said...

Appada cine sittu kural kaetu evvalavu naal ayiduchu ;-)

said...

//
மே 27 தாங்க நாட்டாமை.. ஏன்னா ஷங்கருக்கு ராசி 8.. தலைவருக்கு வியாழன்.. ரெண்டும் சரியா வர்றது மே 27 தான்.. நோ கன்பியூசன்
//
thala , may 17th and not 27th..