Tuesday, April 17, 2007

அ.வெள்ளோடு - என் கிராமம் - பகுதி 1

"வினாயகனே வினை தீர்ப்பவனே" அப்படின்னு காலைல எங்க ஊர் பகவதி அம்மன் கோவிலுல பாடுற பாட்டு தான் எங்க ஊருக்கே அலாரம்.. அதுக்கு பிறகு தான் ஊரே எழும். பகவதி அம்மன் கோவில் பூசாரிக்கு ஒரு எழுபது வயசுக்கு மேல் இருக்கும்.. வீடு, மனைவி மக்கள்னு இருந்தாலும் அவருக்கு கோவில் தான் எல்லாம்.. இந்த பாட்டை போட்ட பின்னாடி தான், டீக்கடையில் காபி டீ எல்லாம் கூட சுடச்சுட தயாராகும். காபி, டீயை குடிச்சுட்டு, பெரும்பாலானவங்க அவங்கவங்க தோட்டத்துக்கு கிளம்புவாங்க.. இனிமே தான் கத்திரிக்கா பொறுக்குறதும், கனகாம்பரம், மல்லிகை பூவெல்லாம் பறிச்சு மார்க்கெட்டுக்கு கொண்டு போறதும் நடக்கும். நானும் சின்ன வயசுல கனகாம்பரம் பூ பொறுக்கப் போவேன், அந்த அதிகாலைல.. நூறு கிராம் பூ பொறுக்குனா ஐம்பது காசு தருவாங்க..

கொஞ்ச நேரத்துல முதல் நடை பேருந்து திண்டுக்கலில் இருந்து வந்துடும். நான் சென்னையில இருந்து ஊருக்கு போனா அந்த பஸ்ல தான் ஊருக்குள்ள போவேன். அந்த பேருந்து, ஊருக்குள்ள ஆட்களை இறக்கிவிட்டுட்டு கோம்பைக்கு போகும்.. கோம்பைங்கிறது மலையடிவாரம். வர்றப்போ அந்த வண்டியே கர்ப்பிணி பெண் மாதிரி தள்ளாடி தள்ளாடி வரும்.. வர்ற வழில எல்லா தோட்டத்துலையும் நின்னு மூட்டைகளை ஏத்தி வரும். எல்லா தோட்டத்துக்காரவங்களும் அதுல தான் எல்லா மூட்டைகளையும் ஏத்திவிடுவாங்க.. அதுக்குன்னே பேருந்துகுள்ள வலது பக்கம் கடைசி ரெண்டு இருக்கையும் முன்னாடி ரெண்டு இருக்கையும் இருக்காது.. இப்போ ஒரு ஐந்து வருசதுக்கு முன்னாடி ஊர்ல இருக்க ரெண்டு பேரு வேன் வாங்கிட்டதால இந்த பேருந்துகாரவங்களுக்கு கொஞ்சம் நஷ்டம் தான். பேருந்து மார்க்கட்குள்ள போக முடியாது. ஆனா இந்த வேன் மார்க்கட் உள்ளார போகும். அதனால எல்லோரும் இதுலையே போக ஆரம்பிச்சுட்டாங்க.

காலைல டீக்கடையில கூடுற கூட்டம் ஒரு மினி சட்டசபை மாதிரி. அரசியலை பத்தி பெரும்பாலும் நாற்பது வயசுக்கு மேல இருக்கவங்க தான் பேசுவாங்க.. என்னை மாதிரி பசங்களுக்கு சினிமா பக்கம் தான்.. புதுசு புதுசா வர்ற படத்தோட விளம்பரங்கள், சுடச்சுட வர்ற கிசுகிசுக்கள் தான் முக்கியம். அப்படியே அந்த செய்தியெல்லாம் படிச்சிட்டு ஒரு அரட்டையை போட்டா.. அன்னிக்கு பொழுது சூப்பரா இருக்கும்.. இப்போ எல்லாம் எங்க ஊர்ல எல்லா டீக்கடைலயும் டிவி வந்திடுச்சு.. அதனால இந்த அரட்டைகள் கொஞ்சம்..கொஞ்சமென்ன ரொம்பவே குறைஞ்சு போயிடுச்சு.. டீ ஆர்டர் பண்ணிட்டு உக்கார்ந்தா.. முழுப்படத்தையும் வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு தான் கிளம்புது மொத்த சனமும்..

எங்க ஊர்ல மொத மொதல்ல பஞ்சாயத்து போர்டுல டிவி வந்தப்போ ஊர்ல இருக்க எல்லோரும் அங்க தான் இருப்போம்.. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் தான் ரொம்ப பிரசித்தம்.. அதுக்கடுத்து.. நாலஞ்சு தடவை தடங்கலுக்கு வருந்துகிறோம்னு போட்டாலும் ஞாயிற்றுக்கிழமை படத்தை கண்ணை வேற பக்கம் அகட்டாம டிவியத்தான் பாத்துகிட்டு இருப்போம்.. பல சமயத்துல ஹிந்தி நிகழ்ச்சி தான் ஓடிகிட்டு இருக்கும்.. ஆனாலும் அதையும் பாக்க ஒரு கூட்டம் இருக்கும் புரியாமலேயே தலையசைக்க.. இந்த பஞ்சாயத்து போர்டு டிவி வந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை இரவு அதோடதான் வாழ்க்கைனு ஆகிடுச்சு.. அதுக்கு பிறகு சன் டிவி வந்த போது..கேபிள் கனெக்க்ஷன் சில பேர் தான் எடுத்து இருந்தாங்க.. ஏதாவது படம் பாக்கனும்னா கூட நாலணா கொடுத்து தான் அவங்க வீட்டுகுள்ளாற போய் படம் பாக்கமுடியும்.. பெரும்பாலும் கிராம வீடுகளில நடைனு ஒரு பகுதி இருக்கும்..அது வேற ஒண்ணும் இல்ல.. இப்போ நாம ஹால்னு சொல்றோம்ல அது தான். என்ன இந்த நடை மேல கொஞ்சம் திறந்து வானம் பாத்தபடி இருக்கும்.. சுத்தி மத்த அறைகள் இருக்கும்.. அந்த நடைல தான் டிவியை வச்சு இருப்பாங்க.. காசு கொடுத்து அங்க உக்கார்ந்து தான் படத்தை பாக்கணும். பெரும்பாலும் சாராய வியாபாரிகள் வீட்ல தான் அப்போ டிவி இருந்தது.. இப்போ வீட்டுக்கு ஒரு வாசப்படி இருக்கிற மாதிரி டிவி ஆகிபோயிடுச்சு.

ஒரு காலத்துல என் ஊர்ல எல்லார் கையிலும் பணம் தாறுமாறா இருக்கும். நாலு திருவிழா, நாலு ஜல்லிக்கட்டுன்னு எல்லாம் சந்தோசமா தண்ணியடிச்சு ரகளையா இருப்பாங்க.. எல்லாத்துக்கும் காரணம் கள்ளச்சாராயம் தான்.. ஒரு தடவை போலீஸ் ரெய்டுல எங்க ஊர்ல மட்டும் நூறு திருட்டு வண்டிகளை பிடிச்சாங்க.. எல்லாம் விடிய விடிய சாராயத்தை டியூப்ல அடச்சு பக்கத்து ஊருக்கு கொண்டு போவாங்க.. எல்லாம் இந்த மாதிரி வண்டில தான்.. இந்த மாதிரி எங்க ஊர்ல இருந்து பக்கத்து ஊருக்கு கொண்டு போனா, அப்படி கொண்டுபோறவங்களுக்கு ஏகப்பட்ட காசு கிடைக்கும்.. அதனாலயே இந்த வேலைய செய்றதுக்கு பல பேர் இருப்பாங்க.. எல்லாம் பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு அடம் பிடிச்சு சின்ன வயசுல இருந்து இந்த மாதிரி வாழ்ந்தவங்க.. இந்த இளைஞர்களோட சின்ன வயசு வாழ்க்கையே ரொம்ப சுவாரஸ்யமானது.. காலைல யுனிபார்ம் டிரஸ் போட்டுகிட்டு பள்ளிக்கூடம் போறேன்னு வீட்ல சொல்லிட்டு எங்கேயாவது ஓடிப்போயிடுவாங்க.. வகுப்புல இந்த மாதிரி காணலைனா வாத்தியர் நாலு பசங்களை அனுப்பி இந்த பையனை தேடிகொண்டுவரச் சொல்லுவார். அந்த பசங்க வகுப்புலயே கொஞ்சம் முரட்டு பசங்களா இருப்பாங்க... இந்த மாதிரி வகுப்புக்கு வராத பசங்க எங்க இருப்பாங்கன்னு இவங்களுக்கு நல்லாத் தெரியும். ஊருக்கு ஒதுக்குபுறதுல இருக்க புளியமரத்துக்கு கீழ வெட்டி ஆளுங்க சீட்டு விளையாடுவாங்க.. பணத்தை பந்தயமா வச்சு..இது தான் என் ஊரு கிளப்.. ஓடி போற பசங்க இங்கே இருக்கனும் இல்லைனா குளத்து பக்கத்துல எங்கயாவது இருப்பாங்க..

தேடிப் போன பசங்க எப்படியாவது பள்ளிக்கு வராத பையனோட கை கால் எல்லாம் பிடிச்சு ஆளையே செந்தூக்காக பள்ளிக்கூடத்துக்கு தூக்கிட்டு வந்துடுவாங்க.. அதுக்கப்புறம் அந்த பையனுக்கு கிடைக்கிற வெகுமதிகள் தான் மேட்டரே.. பிரம்படிகள் கிடைக்குமே அதுவும் அத்தனை பசங்க பொண்ணுங்க முன்னாடி கிடைக்குமே, அதுக்கு பின்னாடி ஒண்ணு அவன் ஸ்கூலுக்கு ஒழுங்கா வருவான்.. இல்லைனா அதுக்கு பிறகு அவன் ஸ்கூல் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டான்..

(தொடரும்)

எங்கள் ஊரை பற்றி நான் தமிழ்மணத்தின் பூங்கா வலை வார இதழில் எழுதிய தொடரை இங்கே மீள்பதிவு செய்கிறேன் சில சிறு திருத்தங்களோட..

65 பின்னூட்டங்கள்:

said...

supernga.. Graama vaazhkaiya appadiyae kannu munnala kondu vandhutteenga :-)

said...

any one commented :)

said...

cinema-la vara graamam maadhiriye iruku....

Anonymous said...

Ennai giramathukay ashaithu senru viteenga karthik, super continue
;-)

said...

//வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் தான் ரொம்ப பிரசித்தம்.//
அது ஒரு அழகிய நிலாக் காலம்! வாத்தியாரே,இப்பவும் வருது பாக்கத்தான் ஆள் இல்ல

said...

//சுடச்சுட வர்ற கிசுகிசுக்கள் தான் முக்கியம்//
ஆமா ஆமா ரொம்ப முக்கியமே இதானே! இத வெச்சு தான பரபரப்பா பேச முடியும்

said...

//அந்த செய்தியெல்லாம் படிச்சிட்டு ஒரு அரட்டையை போட்டா.. //
இப்பவும் உண்டா? அதான் இந்த அரட்டை கச்சேரி

said...

//(தொடரும்)//

தொடரட்டும் உங்களது இந்த ப்ளாக் சேவை

said...

உள்ளேன் ஐய்யா !!!

said...

ஆஹா!அதுக்குள்ள கமெண்ட்டிட்டாங்களா!

said...

உங்க நடை மிகவும் அழகு கார்த்தி.. I mean tamil ezhuthum nadai ;)

said...

antha kaalathula oru oliyum oliyum, oru padam enru jollya irundhom!

said...

:)

Anonymous said...

Dear Karthi,
NIce write up.Oru Gramathin athiyayathai - miga surukamana nadaiyil kondu vandhu viteergal.Really nice to read.

Oru chinna vishayam about "Vinayaganae vinai theerpavanae"

Indha padal engal Gramathin Theatre il EVe show kaga vaikum padail mudhal padal.Idhai thodarndhu "Kandhan Thiru neer anidhal Kanda pini oodi vidum " padal varum.Adhai aduthu Film Songs varum.Pin show start agum.

Unga writings paditha udan, en manadhil en Gramathin ninaivugal vandhadhu.

Indha Nagara vaazhkai vaazhum podhu - Grama vaazhkai ninaivu varum podhu - Manadhil solla theiryadha oru sogam - Nimmadhiyana oru vaazhkaiyai tholaithu vittomo enru......

With Love,
Usha Sankar.

said...

மண்ணின் மணம் கமழும் பதிவு!!
பதிவுத்தொடரின் அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.

வாழ்த்துக்கள் கார்த்தி!! :-)

said...

வெள்ளோடுங்குற பேரைப்பார்த்து க்ளிக்பண்ணி உள்ள வந்தேன். நான் திண்டுக்கல்லுல வேலைப்பார்த்த மூணு வருஷத்துல வெள்ளோட்டுக்கு பத்து தடவையாச்சும் வந்திருப்பேன். ஆனா, கேள்விப்பட்டது அதுக்கு மேல. எல்லாம் அந்த சரக்கு மேட்டர்தான். 'வெள்ளோட்டுக்கு குமரிப்புள்ளயாட்டம் சத்தமில்லாம போற பஸ், வரும்போது தள்ளாடிக்கிட்டு சலம்பல் பண்ணிதானப்பா வந்து சேரும்'ன்னு மக்கள் சொல்வாங்க. வெள்ளோடு சரக்கு நான் ரெண்டு வருஷத்துக்கு முந்தி நான் இருந்த வரைக்கும் சக்கைப்போடு போட்டுச்சு. இன்னும் இருக்கான்னு தெரியலை. அதுசரி...உங்க ஊருக்கு முன்னால இருக்கே 'அ'...அதுக்கு என்ன விரிவாக்கம்...? அம்மையநாயக்கனூர்..?

said...

Only attendance, now. Saw you forgot my blogs now-a-days. grrrrrr ok. :P

said...

//என்னை மாதிரி பசங்களுக்கு சினிமா பக்கம் தான்.. புதுசு புதுசா வர்ற படத்தோட விளம்பரங்கள், சுடச்சுட வர்ற கிசுகிசுக்கள் தான் முக்கியம். அப்படியே அந்த செய்தியெல்லாம் படிச்சிட்டு ஒரு அரட்டையை போட்டா//

இந்த சிட்டு குருவி மேட்டர அப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா :-)

said...

//பல சமயத்துல ஹிந்தி நிகழ்ச்சி தான் ஓடிகிட்டு இருக்கும்.. ஆனாலும் அதையும் பாக்க ஒரு கூட்டம் இருக்கும் புரியாமலேயே தலையசைக்க.. //

எனக்கும் ஞாபகம் இருக்கு...அதுவரைக்கும் ஹிந்தி ப்ரோக்ராம் பார்த்திட்டு சமாச்சார் வந்த உடனே எழுந்து போவாங்க...அதுவரைக்கும் புரிஞ்சமாதிரியும் இது புரியாதுங்கர மாதிரியும் :-)

said...

தல போன போஸ்டுக்கு நான் போட்ட கமெண்ட் பப்ளிஷ் பண்ணவே இல்ல....

said...

adada, kalakiteenga, you have brought out the changes from the past to the current very well!

said...

எப்பவும் போல, கிராமத்து மணம் கமழும் உங்க எழுத்து அருமை.

said...

//வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் தான் ரொம்ப பிரசித்தம்..//

ஒளியும் ஒலியும் அட்ராக்ஷன் எனக்கும் ஞாபகம் இருக்கு. அந்த நேரத்துல கரெண்ட் போயிட்டா அவ்ளோ தான்.

said...

//ஏதாவது படம் பாக்கனும்னா கூட நாலணா கொடுத்து தான் அவங்க வீட்டுகுள்ளாற போய் படம் பாக்கமுடியும்.. //

பயங்கர விவரமா இருக்காங்க உங்க ஊர் மக்கள்.. ஆனாலும் நாலணா ரொம்ப கம்மி தான் :)

said...

வினாயகனோடு' ஆரம்பிச்சிட்டீங்களா, உங்க வெள்ளோடு கதையை.!!

ரொம்ப நல்லா இருக்கு கார்த்தி.
திண்டுக்கல் -வெள்ளோடு பஸ்தான் பார்த்து இருக்கேன்.
இப்படி படம் பிடிச்ச மாதிரி
சொல்லும்போது நேரே பாக்கிற மாதிரி இருக்கு.

said...

அதானே பார்த்தேன், என்னடா ஏற்கனவே படிச்ச தலைப்பா இருக்கேன் பார்த்தேன்....

கலக்கு மாம்ஸ்!

said...

உங்கள் ப்ளோக் அழகா இல்லை !!
நான் கிராம வாழ்க்கைய LOVE பன்ணலே
ஆனால் இப்படியெல்லாம் நடந்துடுமோ என்று பயமா இருக்கு !!
::))))

said...

Ennada engeyo padicha maathiri irrukkey, enakku thideernu ESP power vandhiduchonnu oru doubt.. Still, anga podaatha paarattai inga pottukkareyn. Graamathu vaazhkai ippadithaan irukkumaannu theriyaadhu, aana oru nalla idea koduthirukkeenga.

Cheers
SLN

said...

//வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் தான் ரொம்ப பிரசித்தம்.. //

திங்கள்கிழமை அடடே மனோகர்,செவ்வாய் நாடகம்,புதன் சித்ரஹார்,வெள்ளி ஒளியும் ஒலியும், ஞாயிறு படம்னு மறக்க முடியாத நினைவுகள் கார்த்தி அதெல்லாம்.

இப்பல்லாம் சீரியல்னாலே வெறுப்பா இருக்கு. அப்போ 13 வார சீரியல்கள் பிரபலம்.

தொடரா போட்டு தாக்கறீங்க.கலக்குங்க..

Anonymous said...

ennada naama erkanave padichadhu thaane paathen! :-)

-porkodi

said...

//supernga.. Graama vaazhkaiya appadiyae kannu munnala kondu vandhutteenga :-)

//

நாலு பகுதிகளாக எழுதியதை இன்னும் நீட்டிக்க யோசித்துள்ளேன் G3.. உங்களுக்கெல்லாம் எப்படி பிடிக்கிறது என்பதை பொறுத்து தான் இன்னும் எழுதனும்...

said...

/any one commented //

வேற யாரு மாப்ள.. நம்ம G3 தான், முதல் ஆள்

said...

//cinema-la vara graamam maadhiriye iruku.... //

என் சிறு வயது முதல் நடந்த விஷயங்களை எழுதினால் தொடர் தொடர்ந்துகொண்டே இருக்கும் மாப்ள

said...

//Ennai giramathukay ashaithu senru viteenga karthik, super continue
;-)

//

நன்றிங்க ஹனிஃப் :-)

said...

/அது ஒரு அழகிய நிலாக் காலம்! வாத்தியாரே,இப்பவும் வருது பாக்கத்தான் ஆள் இல்ல //

இப்பவும் வருதா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது... தீர்த்து வச்சுட்டப்பா செந்தில்

said...

//ஆமா ஆமா ரொம்ப முக்கியமே இதானே! இத வெச்சு தான பரபரப்பா பேச முடியும்
//
யெப்பா.. சினிமா பத்தி பேச ஆரம்பிச்சா பேசிகிட்டே இருக்கலாம்.. அவ்வளவு மேட்டர் அதுல செந்தில்

said...

//இப்பவும் உண்டா? அதான் இந்த அரட்டை கச்சேரி
//

சென்னையில் இருந்தவரை இதெல்லாம் இருந்ததுங்க செந்தில்..

said...

//தொடரட்டும் உங்களது இந்த ப்ளாக் சேவை//

எல்லாம் நீங்கள் எல்லோரும் தரும் ஆதரவு தான் செந்தில்..

said...

//உள்ளேன் ஐய்யா !!! //

அட்டென்டன்ஸ் மார்க்டு தேவ்

said...

//ஆஹா!அதுக்குள்ள கமெண்ட்டிட்டாங்களா! //

மக்கள், அர்ச்சனையை ஆரம்பிச்சுட்டாங்க ட்ரீம்ஸ்

said...

//உங்க நடை மிகவும் அழகு கார்த்தி.. ஈ மெஅன் டமில் எழுதும் னடை //

லொள்ளுங்க ட்ரீம்ஸ் :-)

said...

/antha kaalathula oru oliyum oliyum, oru padam enru jollya irundhom!//

தேடி தேடி காத்திருந்து பார்த்ததில் தான் சுகம் இருக்குன்னு நினைக்கிறேன் ட்ரீம்ஸ்

said...

//Indha Nagara vaazhkai vaazhum podhu - Grama vaazhkai ninaivu varum podhu - Manadhil solla theiryadha oru sogam - Nimmadhiyana oru vaazhkaiyai tholaithu vittomo enru......
//

எனக்கும் தாங்க உஷா.. மனசுக்குள் ஏதோ ஒரு சோகம் கிடந்து தவிப்பதைப் போல இருக்கும்

said...

//பதிவுத்தொடரின் அடுத்த இடுகையை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.

வாழ்த்துக்கள் கார்த்தி//

நன்றி CVR

said...

/வெள்ளோடு சரக்கு நான் ரெண்டு வருஷத்துக்கு முந்தி நான் இருந்த வரைக்கும் சக்கைப்போடு போட்டுச்சு. இன்னும் இருக்கான்னு தெரியலை. //

இப்போது சுத்தமாக இல்லைங்க ஆழியூரான்.. அடிக்கடி வெள்ளோடு வருவீங்களா.. என்ன விஷயமாக.. எங்கே வருவீங்க ஆழியூரான்

//உங்க ஊருக்கு முன்னால இருக்கே 'அ'...அதுக்கு என்ன விரிவாக்கம்...? அம்மையநாயக்கனூர்..? //

சரியாகச் சொன்னீர்கள்.. இந்த தொடரின் கடைசியில் இதை சொல்லியிருக்கேங்க

said...

//Saw you forgot my blogs now-a-days. grrrrrr ok//

கிளாசுக்கு ஒழுங்க வர்ற மாணவனை இப்படிச் சொல்லலாமா மேடம்

said...

//இந்த சிட்டு குருவி மேட்டர அப்பவே ஆரம்பிச்சுட்டீங்களா//

ஆமாங்க நாட்டாமை.. அது நம்ம பிறப்புரிமை

said...

/அதுவரைக்கும் புரிஞ்சமாதிரியும் இது புரியாதுங்கர மாதிரியும்//

கரெக்டா சொன்னீங்க நாட்டாமை

said...

//தல போன போஸ்டுக்கு நான் போட்ட கமெண்ட் பப்ளிஷ் பண்ணவே இல்ல....

//

நாட்டாமை, இந்த பிளாக்கர் ஒரு 8 கமெண்டை பிடிச்சு வச்சிருக்கு.. காட்டவும் செய்யல... அதுல உங்களோடதும் இருக்கும்னு நினைக்கிறேன் ஷ்யாம்

said...

//adada, kalakiteenga, you have brought out the changes from the past to the current very well!

//

வாங்க உஷா.. ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம்!

said...

/எப்பவும் போல, கிராமத்து மணம் கமழும் உங்க எழுத்து அருமை.

//

நன்றிங்க ப்ரியா..

said...

//ஒளியும் ஒலியும் அட்ராக்ஷன் எனக்கும் ஞாபகம் இருக்கு. அந்த நேரத்துல கரெண்ட் போயிட்டா அவ்ளோ தான். //

அப்போ, மின்சார வாரியம் வாங்குற திட்டு இருக்கே, யெப்பாபா..

said...

//பயங்கர விவரமா இருக்காங்க உங்க ஊர் மக்கள்.. ஆனாலும் நாலணா ரொம்ப கம்மி தான் //

அந்த காலத்துல அது பெரிய விஷயங்க பிரியா

said...

//ரொம்ப நல்லா இருக்கு கார்த்தி.
திண்டுக்கல் -வெள்ளோடு பஸ்தான் பார்த்து இருக்கேன்.
//

நீங்க எந்த ஊர்க்காரவங்க வல்லியம்மா

said...

//அதானே பார்த்தேன், என்னடா ஏற்கனவே படிச்ச தலைப்பா இருக்கேன் பார்த்தேன்....

கலக்கு மாம்ஸ்! //

ஹிஹிஹி.. நன்றிப்பா மாப்ஸ்

said...

/ஆனால் இப்படியெல்லாம் நடந்துடுமோ என்று பயமா இருக்கு !! //

ஹிஹிஹி..தேவ்.. நல்ல ரசனையான கமெண்ட்ப்பா

said...

//Still, anga podaatha paarattai inga pottukkareyn. Graamathu vaazhkai ippadithaan irukkumaannu theriyaadhu, aana oru nalla idea koduthirukkeenga.//

Thanks SLN :-)

said...

/திங்கள்கிழமை அடடே மனோகர்,செவ்வாய் நாடகம்,புதன் சித்ரஹார்,வெள்ளி ஒளியும் ஒலியும், ஞாயிறு படம்னு மறக்க முடியாத நினைவுகள் கார்த்தி அதெல்லாம்.
//

அட.. இப்படி அடுக்குறீங்களே அம்சமா மணி

said...

/ennada naama erkanave padichadhu thaane paathen! :-)

-porkodi

//
ஹிஹிஹி.. மறுஒளிபரப்பு தான் பொற்கொடி!

said...

hi kaarthi
supera iruku..
grama vaazhkaina ennane theriyama valarntha enna mathiri palaperuku idu grama vaazhkaiyai kan munnala kondu vanthu niruthum
melum indha mathiri nalla padivugal vara vaazhthukal

said...

Oru gramaththu kalayila pozhadha apdiyae summa superaa kann munnai niruthiirukeenga Karthik....

said...

Eagerly expecting the next part..

said...

NAVARASAMO ?
netru jolly aga irunthuthu ..indru oru "Shock".....Nallai ......????
Kollywood unglai miss Panniduchapa !!!:)))

said...
This comment has been removed by the author.
said...

ஆஹா.. கார்த்தி பிரதர்.. நீங்களும் திண்டுக்கல்தானா? ம்.. ம்ஹ¤ம்.. எப்பவும் பிள்ளைத்தாய்ச்சி மாதிரி வயித்தை ரொப்பிக்கிட்டுப் போவும் அந்த A.வெள்ளோடு பஸ்.. நினைவலைகள் மீள்கிறது நண்பரே.. நானும் திண்டுக்கல்தான்.. என்ன... சிட்டில உக்காந்து கூத்தடிச்சோம். அதான் இப்பவும் அப்படியே கும்மியடிச்சிட்டிருக்கோம். 'அங்கன' இருந்தாலும் நம்மளை மறக்காம இருக்கீங்க பாருங்க.. வாழ்க.. வளர்க..