Friday, June 01, 2007

சமையல்கட்டு அறிமுகங்கள்

நான் ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்த சமயம். முதல் இரண்டு வாரங்கள் நண்பர்கள் யாரும் கிடைக்கவில்லை..ரயிலில் ஏறுவதும் திண்டுக்கல் மதுரை ரயில் போகும் வழித்தடங்கள் எல்லாமே எனக்கு புதியது என்பதால் அதை வேடிக்கை பார்ப்பதுவுமாகவே இருந்தேன். சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகள் எப்பவுமே பச்சை பெயிண்டை கொட்டிவிட்டாற்போல தான் தரையெல்லாம் நெற்கதிர்கள் பரந்து விரிந்து கிடக்கும். ஜன்னல் அருகிலோ இல்லை வாசலிலோ இருந்தால் அந்த நெற்கதிர்களை தொட்டு வரும் வாசம் இதயம் தொடும் போதெல்லாம் அப்படியொரு சிலிர்ப்பு உடம்பில் இருக்கும்.

நான் சென்று வந்த ரயில், தினமும் மதுரை-திண்டுக்கலுக்கு இடையே பயணிப்பது, காலையில் ஏழு மணிக்கும் மாலையில் ஏழு மணிக்கும், வேலைக்கு சென்று வருபவர்களுக்கு ஏதுவாக. அதனால் பயணிகள் எல்லோருமே தினமும் வருபவர்கள் தான். மற்ற ரயில்களைப் போல, நிஜ ரயில் பயணங்கள் அல்ல இது. மெல்ல நண்பர்கள் எனக்கும் அறிமுகமாகி, எண்ணிக்கையில் அதிகமானார்கள்.. எனக்கு பள்ளியில் ஜுனியராக இருந்த ஒரு பையனின் நட்பு கிடைத்தது எனக்கு. அருண் - அவன் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் கேட்டரிங் வகுப்பு படித்து வந்தான்.

வாரத்திற்கு இருமுறை அவன் வகுப்பில், செய்முறை பயிற்சியில் செய்த உணவுகளை எடுத்து வருவான், ரயிலுக்கு, எங்களுக்காக. அது அப்போது எங்களது மாலை வேளை ஸ்நாக்ஸாக இருந்தது.. நெய் வடிய வடிய பொங்கலும், மொறுமொறுப்பாக வெளியில் பிரட் தூள்கள் தூவப்பட்ட கட்லெட்டும், நாவில் எச்சில் ஊறவைக்கும் கேரட் அல்வாவும் என தினமும் அவன் செய்து எடுத்து வரும் உணவு பதார்த்தங்களுக்கு எங்கள் ரயில் குரூப்பே அடிமை. அதுவும் அந்த டிபன் பாக்ஸை முதலில் திறப்பவர் அதிர்ஷ்டசாலி. நிறைய சாப்பிடலாம் அல்லவா.. நான் இதற்காகவே எனது கல்லூரி நண்பனின் வண்டியில் ஏறி மதுரை ஜங்க்ஷனுக்கு வேகமாக வந்த காலங்கள் எல்லாம் உண்டு..

அந்த எனது ரயில் ஸ்நேகிதன் தான் சமையல் என்னும் கலையில் எனக்கு ஆர்வத்தை தூண்டியவன். அதுவரை சமையற்கட்டில், என்ன செய்கிறார்கள் என்று எட்டி பார்க்கவே சென்று வந்த நான் அதன் பிறகு எப்படி செய்கிறார்கள் என்று உற்று நோக்க ஆரம்பித்தேன். அருண், அன்றைக்கு செய்து எடுத்து வந்த பதார்த்தங்களை எல்லாம் எப்படி செய்தான் என்று கவனமாக கேட்டு தெரிந்துகொள்வேன். நேரம் கிடைக்கும் போது வீட்டில் அதை செய்து பார்த்து எல்லோரையும் துன்புறுத்துவேன்.. நான் சமையலறைக்குள் நுழைந்தாலே, நான் அன்றைக்கு விரதம் என்று என் தங்கச்சி சொல்லிவிடுவாள்.. (அப்படி சொன்ன என் தங்கை ஒரு முறை சென்னைக்கு தனது தோழியுடன் இன்டர்வியூவிற்கு வந்த போது, பொடி தோசை, நெய் தோசை, மசால் தோசை, வென்காய தோசை னு போட்டு அமர்களப்படுத்தினதுல, என் சமையலை எல்லோருக்கும் போன் போட்டு சொன்னாள், அசத்தல் என்று) ஒன்னும் சரியாக தெரியாத அந்த காலங்களில் உப்பை இனிப்பில் போட்டுவிட்டு, எல்லோரையும் கேரட் அல்வா சாப்பிடச் சொல்லி ஆர்பாட்டம் பண்ணுவேன்.

இப்போதெல்லாம் சன் டிவி இரவு நேர செய்திகளில் ஒரு பகுதி வருகிறது. திருப்பம்ங்கிற தலைப்புல. அது மாதிரி நான் இப்போ இப்படி சமைக்கிறேன்னா அது அன்னைக்கு நான் அருணை சந்தித்ததும் அவன் எனக்கு சொல்லி சொல்லி, சமையல் ஆர்வத்தை தூண்டி விட்டதும் தான். அதன் பிறகு சென்னையில் வேலை செய்ய வந்த பிறகு தட்டு தடுமாறி ஒவ்வொரு வகையையும் தெரிந்து கொண்டாலும், இன்றைக்கு கார்த்தி செஞ்சா எல்லாமே சூப்பர் தான் என்று எல்லோரும் சொல்வதுமாக இருந்தாலும், எல்லாமே அன்றைக்கு எனக்குள் அருண் போட்டு வைத்த விதை தான். எப்படி நமக்கு, கூடவே ஓடி வந்து சைக்கிள் சொல்லித் தந்தவரை மறக்கமுடியாதோ, எனக்கு அப்படி அருணை மறக்க முடியாது. கல்லூரி முடித்து சென்னை வந்த பிறகு ஒரு நாள் தொடர்புகொள்ள முயற்சித்தேன்.. அருணை தொடர்பு கொள்ளமுடியவில்லை.. அப்புறம் அவனது பள்ளி நண்பன் ஒருவன் சொன்னான், அவன் சென்னை சோழா ஷெரட்டனில் வேலை பார்ப்பதாக.. செய்தியை கேட்டவுடன் சந்தோசமாக இருந்தது. அவன் இருக்க வேண்டிய இடம் அது தான் என்று..

நமது வாழ்க்கையில் வந்து சிறிய காலங்களே இருந்தாலும், இது மாதிரி நம்மளை புரட்டி போட்ட மனிதர்கள் பலர்.. எனது வாழ்கையில் எனக்கு சமையலை கற்றுக்கொடுத்து, இப்போது இது போன்ற தனியாக வாழும் காலங்களில் கை கொடுக்கவைத்த அருணும் அவர்களில் ஒரு ஆள்..

எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாதோ, இந்த விஷயம்.. அழகாக தமிழில் விவரிக்கப்பட்டு படங்களுடன் ஒரு தனி தமிழ் வலைப்பக்கமே இருக்கிறது சமையலுக்காக.. கிராமத்து சமையல், செட்டுநாட்டு சமையல் என வட்டார வகைகளும், மாநில வகைகளும் என அங்கிருக்கும் பட்டியல் ஏராளம். புதியதாக முயற்சிக்க வேண்டுமென்றால், இங்கே சென்று பார்க்கலாம். அந்த வலைப்பக்கம் பெயர் அறுசுவை

22 பின்னூட்டங்கள்:

said...

eppadi irukareenga karthik ...romba naal aachu blog pakkam vandhu..adhuvum oru sila blog pakkam poi comments thoovitu vegama poidaradhala inga vara iyalavillai..

anyway neenga samayal epadi kathukittenganu asathala solirukeenga..yarandha lucky gal for u appadinu aarva irukku engalukku ellam..

btw, am a regular visitor of arusuvai.com from the time its been started...nan indha last one monthaa dhaan samayal panitu irukken, but really amma solvadhu dhaan nyabagam varudhu..kann paartha kai seiyanumnu enga amma solluvanga...appadi theriyadha dish kooda really romba nalla varudhu ippo first trial-aye...

seri en kadhai stop panidaren..catch u later..

Anonymous said...

Neenda naatkalukku piragu oru "ARU"suvaiyaana topic, ippo neenga nalla samaikireengala ? ;-)

said...

உங்க வீடு எங்கிட்டு இருக்குன்னு கொஞ்சம் அட்ரெஸ் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்!! ஒன்னுமில்ல உங்கள பாக்கணும்னு திடீர்னு எனக்கு அன்பு பீறிட்டுக்கிட்டு வருது!!
பி.கு: வந்தா கண்டிப்பா சாப்பாடு போடுவீங்கல??

said...

இங்கே தனியா இருக்கவங்களுக்கு சமைக்க தெரியலைன்னா ரொம்ப கஷ்டம் தான் கார்த்தி. நானும் என் நண்பன் மூலமா தான் ஓரளவு சமைக்க கத்துகிட்டேன். நான் சமைச்சதை நான் மட்டும் தான் சாப்பிட முடியுங்கறது வேற விஷயம் :)

said...

தல, ஆய கலைகள் 64ல எத்தனை விட்டு வச்சிருக்கீங்க.. :D :D

கலக்குங்க தல.

said...

eppo lerndhu samaikka armabitcha nnu theriyala ..engaloda nee velachery la irundha po unnnoda post karigaai cutting oda seri ..
Hope unnoda nalabagam has gotten good .

said...

"SUVAI" yana thagaval.

said...

சமையல ஒரு பாடமாக்கணுங்க பள்ளியில. நானெல்லாம் வேற வேலை எதுவும் கிடைக்கலன்னா சமையல் கத்துக்கலாம்னுதான் நினைச்சேன். வெளிநாட்டுக்கு வந்து சொந்த சமையல் ஆரம்பிச்சேன். பரவாயில்ல. சுமாராவே சமைப்பேன்.

said...

ஹ்ம்ம்..கார்த்திக்..அப்ப நீங்க நல்லா சமைப்பேன்னு சொல்றீங்க..உங்க வீட்டு அட்ரஸ் கொடுங்களேன்..நான் சாப்பிட்டு விட்டு வழிமொழிகிறேன்..:)

சரி நீங்க அசைவம் spaciala இல்லை சைவம் speciala?

said...

//eppadi irukareenga karthik ...romba naal aachu blog pakkam vandhu..adhuvum oru sila blog pakkam poi comments thoovitu vegama poidaradhala inga vara iyalavillai..
//

நல்லா இருக்கேங்க ரம்யா.. கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு..ஹ்ம்ம்.. சமையல் எல்லாம் கலக்குறீங்க போல..

said...

//Neenda naatkalukku piragu oru "ARU"suvaiyaana topic, ippo neenga nalla samaikireengala ? //

ஹனிஃப்.. உங்களை போன்றவர்களின் வார்த்தைகள் தான் என்னிக்கும் என்னை போன்றவர்களுக்கு ஊட்டசத்து..

said...

//பி.கு: வந்தா கண்டிப்பா சாப்பாடு போடுவீங்கல?? //

கொலம்பஸ்ஸில் தான் இருக்கு எப்ப வேணும்னாலும் வரலாம் CVR.. வர்றதுக்கு முன்னாடி சொன்னாப்போதும்.. அமர்க்களப்படுத்திடலாம் CVR

said...

//இங்கே தனியா இருக்கவங்களுக்கு சமைக்க தெரியலைன்னா ரொம்ப கஷ்டம் தான் கார்த்தி//

கரெக்டா சொன்னீங்க மணி.. சமைக்க தெரிலைனா பர்கரை மட்டுமே சாப்பிட வேண்டியது தான்

said...

//தல, ஆய கலைகள் 64ல எத்தனை விட்டு வச்சிருக்கீங்க..//

ஹிஹிஹி..அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல ACE.. கற்றது கைமண்ணளவு.. கல்லாதது உலகளவு :-)

said...

//engaloda nee velachery la irundha po unnnoda post karigaai cutting oda seri ..
Hope unnoda nalabagam has gotten good . //

எப்போ கடவுள் புண்ணுயத்துல இங்க நம்ம ரூம் மேட்களுக்கு சமச்சு போடுற அளவுக்கு ஏதோ செய்றேண்டா..

said...

//"SUVAI" yana thagaval. //

நன்றி ப்ரதாப்.. முதல் வருகைகு நன்றி

said...

//சமையல ஒரு பாடமாக்கணுங்க பள்ளியில//

கரெக்டா சொன்னீங்க அம்மிணி.. சமையலை பாடமா வச்சா, நல்லாயிருக்கும்

said...

//சரி நீங்க அசைவம் ஸ்பகிஅல இல்லை சைவம் ஸ்பெகிஅல? //

நீங்க கொலம்பஸுக்கு வாங்க பாலர்.. உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே தந்திடலாம்

Anonymous said...

Hello Karthick,
Eppadi irukeenga?Aani pidungara , adikara velai bharam korainjadha?

Nice to see you as usual styles..
With Love,
Usha Sankar.

Anonymous said...

Karthik can you put some of your speciality recipes in your blog?.Thanks.

Rumya

said...

//Nice to see you as usual styles..//

மறுபடியும் பழைய வேகம் இருக்கும்னு நினைக்கிறேங்க உஷா.. விடாம படிச்சு உற்சாகமூட்டறுதுக்கு நன்றிங்க உஷா..

said...

/Karthik can you put some of your speciality recipes in your blog?.Thanks.

Rumya //

கட்டாயம் போடுறேங்க.. கொஞ்சம் டைம் கொடுங்க