Saturday, June 09, 2007

மனதின் பிரதிபலிப்புகள்

நானும் எப்படியாவது வாரத்துக்கு பழைய மாதிரி அஞ்சு பதிவாவது போட்டுடடும்னு பாக்குறேன்.. ஆனா முடியல.. ஆபீஸ் விட்டு கிளம்பவே ஆறு ஆறரை ஆகிடுது.. அப்படியே கிரிக்கட் விளையாட போனா, அப்படி இப்படின்னு நேரம் ஒன்பதரை ஆகிடுது.. அப்புறம் வீட்டுக்கு வந்து, குளிச்சு சாப்பிட்டு உட்கார்ந்தா கடிகாரத்துல சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒண்ணாய் சேர்ந்து இடக்குது.. அப்படியே மெதுவா படுக்கைல விழுற நிலமைல தான் தினமும் நம்ம பொழப்பு போகுது.. இதுக்கு இடையில, சரி பதிவு தான் போட முடியல, நண்பர்கள் பதிவுபக்கதிற்கு போய், பதிவை படிச்சோமா, ஒரு அட்டென்டன்ஸ் போட்டோமான்னு இருக்கவும் முடியல.. ஏன் எப்படின்னு பக்கதுல இருக்க சுவரு, பலகை எல்லத்துலையும் தலையை மோதி யோசிச்சேன்.. அப்பத் தான் புரிஞ்சது.. நான் இப்போ எல்லாம் ஆபீசுல அதிகமா வேலை பாக்குறேன்னு.. அதுக்கடுத்து, வீட்ல சன் டிவி கனெக்க்ஷன் இழுத்ததும் ஒரு காரணம். வீட்டுக்கு போனாவே போதும் கை தானா ரிமோட்டை தேடுது.. என்ன மொக்கை படம்னாலும், அப்படியே பார்க்க வேண்டியது..இந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சிடுச்சு.. டிவி தமிழ்நாட்ல மட்டுமல்ல, இங்கேயும் வந்து நம்மள துரத்த ஆரம்பிச்சிடுச்சுப்பா..

ஒரு காலத்துல எழுத உட்கார்ந்தா, எதை எழுதுறதுன்னு யோசிக்கவே ரொம்ப நேரம் ஆகும்.. எழுதணும்னு நினச்ச தலைப்பை பத்தி எழுத ஆரம்பிச்ச, அட! பெரிய பதிவாப் போச்சே அப்படின்னு நாமளா முடிக்கிற அளவுக்கு ஒரு சக்தி இருந்தது.. இப்போ என்ன ஆச்சுன்னு தெரில.. ஒரு பதிவு போடுறதுக்கே ரெண்டு நாள் யோசிக்க வேண்டியது இருக்கு.. அதுக்கடுத்து அதை எழுத ரெண்டு நாள் ஆகுது.. அந்த சக்தி கொடுன்னு சூப்பர்ஸ்டார் மாதிரி பாடவும் முடியல, எனக்கு வேணும் ஆசை ஆசைன்னு தருமி மாதிரி புலம்பவும் முடியல.. ஆனா எப்படியும் பழைய மாதிரி எழுதிடுவேன்னு ஒரு நம்பிக்கை இருக்கு.. ஒரு வேளை தொடர்ந்து இவ்வளவு நாள் விடாம கிறுக்கி வந்ததாலா, பழக பழக பாலும் புளிக்கும் மாதிரி நமக்கு இந்த பிளாக் புளிக்குதா.. தெரில.. எதை நினச்சாலும், ஆராஞ்சாலும் ஒரு முடிவுக்கு வர முடியல.. சரி அதை அப்படியே விட்டுடுவோம்..

அன்புடன் குழு(நமது தோழி சேதுக்கரசியும் இதில் ஒரு அங்கத்தினர். நமது கவிதைகளை பார்த்து என்னையும் கவிதை எழுத சொன்னார்.. ஆனா என்னமோ தெரில இந்த மாதிரி போட்டிக்கு எழுதணும்னு உட்கார்ந்தா வர்ற கவிதை நமக்கே புடிக்கிறது இல்லை..) நடத்திய பரிசு போட்டில நமது தோழியும் பி.மு.கவின் துணை முதல்வருமாகிய வேதா பரிசு வாங்கியிருக்காங்க. நிச்சயமாய் அவருக்கும், அவரது சிந்திக்கும் திறனுக்குமிது ஒரு நல்ல ஊட்டச் சத்தாய் இருக்கும்னு நினைக்கிறேன்.. தோழிக்கு எமது வாழ்த்துக்கள்!

தினமும் ஒரு திருகுறள்னு நவீனமயமா எழுதிவர்ற நமது கிட்டு மாமாவோட பதிவுகள் 250 என்ற ஒரு மைல்கல்லை தொட்டிருக்கு.

வாழ்த்துக்கள் கிட்டு மாமா.

இன்னும் நிறைய நண்பர்கள் பல தலைப்புகள்ல அருமையான தொடர்களை எழுதி வர்றாங்க.. அதெல்லாம் தொடர்ந்து சுடச் சுட படிக்க முடியலைனாலும், நேரம் கிடைக்கும் போது படிக்காமல் விட்டதில்லை.. அதில் CVR-இன் வானுக்குள் விரியும் அதிசயங்கள் தொடர், படித்தவுடன் என் கண்களை ஆச்சரியத்தில் விரியச் செய்தது. அதுவும் ஒவ்வொரு விஷயத்தையும் அவர் விளக்குவது, தொடர் பதிவு சற்று பெரிதாக இருந்தாலும் சலிப்பு தட்டாமல் கொண்டுசெல்கிறது. அருமையான தொடர்! பரந்து விரிந்த வான்மண்டலத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் உங்களுக்கு இருந்தால் தாராளமாக உள்ளே கால் வைக்கலாம்.

இதோ வர்றார், அதோ வர்றார்னு கிட்டதட்ட பதினெட்டு மாதங்களா பத்திரிக்கைகளுக்கும், ரசிகர்களுக்கும் செய்தி தீனி போட்ட சூப்பர்ஸ்டாரின் சிவாஜி வெளிவர இன்னும் ஐந்தே நாட்கள்! சூடம் ஏத்தி, பாலூத்தி, பேப்பர் கிழித்து விசில் சத்தம் தியேட்டர் அதிர படத்தை பார்க்கமுடியலைனாலும், நானும் இந்த மாதம் 24-இல் கொலம்பஸ்லயே படத்தை பாக்கபோறேன்.. பத்து நாள் கழிச்சு பாத்தாலும், நெருப்பு சூடு ஆறாமத் தானே இருக்கும்? என்ன நாஞ் சொல்றது.

26 பின்னூட்டங்கள்:

said...

தல.. சேம் பின்ச்.. நான் எத்தனை மணிக்கு ஆபிஸ்ல இருந்து வெளியானாலூம் வீடு வந்து சேரவே 9-9.30 ஆகுது.. காலையிலும் சீக்கிரமா எழுந்திரிக்கணும்...

ஒண்ணுமே யோசிக்க முடியல.. ஒன்னுமே எழுத வரல. :-(

said...

வேதா, கிட்டு மாமா மற்றும் சி.வி.ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். :-)

said...

எல்லாருக்கும் இப்படி ஒரு அலிப்பு வரும்தான். அதுக்காக எழுதாமல் எல்லாம் போக முடியாது. நல்லா ஓய்வு எடுத்துட்டு வந்து எழுத ஆரம்பிங்க, மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்களுக்கும், நீங்க பதிவில் குறிப்பிட்டு இருக்கும் அனைவருக்கும்.

pria said...

Karthick: Its all about timing and freemind for a new post. If we feel too much drained, evlo yosichalum onum mindla varadhu.

said...

எவ்வளவு நாளா எழுதிட்டு இருக்கீங்க!!
நீங்க பாக்காததா??

கொஞ்ச நாளைக்கு அப்புறமா தானா தினம் ஒரு பதிவா எழுத ஆரம்பிச்சிருவீங்க!! நம்ம கையெல்லாம் சும்மா இருக்காதுல!! :-)

என் பதிவை இடுகையில் சேர்த்தது கண்டு மகிழ்ச்சி!!
மிக்க நன்றி தலைவா!! :-)

said...

/
ஒண்ணுமே யோசிக்க முடியல.. ஒன்னுமே எழுத வரல. //

அது தான் எல்லோருக்குமே தெரியுமே மை பிரண்ட்.. எப்பவுமே முதல் பின்னூட்டம் போடுற ஆள் நீங்க.. கொஞ்ச நாளா ஆளையே காணோமே

said...

/ நல்லா ஓய்வு எடுத்துட்டு வந்து எழுத ஆரம்பிங்க, மனம் நிறைந்த வாழ்த்துக்கள். உங்களுக்கும், நீங்க பதிவில் குறிப்பிட்டு இருக்கும் அனைவருக்கும்.
//

சரியாச் சொன்னீங்க மேடம்.. எல்லோருக்கும் வாழ்த்துச் சொன்ன உங்க நல்ல மனசு யாருக்கு வரும்..

said...

/Karthick: Its all about timing and freemind for a new post. If we feel too much drained, evlo yosichalum onum mindla varadhu.//

amaa priya.. methuvaa pazhaiya maathiri ezhuthanum :)

said...

//நம்ம கையெல்லாம் சும்மா இருக்காதுல!! //

ஹிஹிஹி.. கரெக்டா சொன்னேப்பா CVR..

//என் பதிவை இடுகையில் சேர்த்தது கண்டு மகிழ்ச்சி!!
மிக்க நன்றி தலைவா!! :-) //

அது நம்ம கடமைப்பா CVR

said...

எழுத மேட்டர் எல்லாம் நிறையா இருக்கு மாம்ஸ்... வேலைப்பளுவும், சோர்வும் சேர்த்து அழுத்தி விடுகிறது... பாக்கலாம் நம்ம தல இந்த வாரம் வரான், அவன் வந்தா நான் கொஞ்சம் ப்ரீ ஆவேன்...

said...

10 நாள் என்ன 100 நாள் கழித்து பார்த்தாலும் படம் சும்மா பத்திக்கிட்டு எரியும் மாம்ஸ்...

said...

வேதா, கிட்டு மாமா மற்றும் சி.வி.ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். :-)

said...

/எழுதணும்னு நினச்ச தலைப்பை பத்தி எழுத ஆரம்பிச்ச, அட! பெரிய பதிவாப் போச்சே அப்படின்னு நாமளா முடிக்கிற அளவுக்கு ஒரு சக்தி இருந்தது.. இப்போ என்ன ஆச்சுன்னு தெரில.. /
உண்மை தான் கார்த்தி நான் முன்பே உங்க கிட்ட சொன்னேன் இப்டி ஜெட் வேகத்துல பதிவுகள் போட்டா அப்புறம் ஒரு நாள் என்ன எழுதறதுன்னு யோசிக்க வேண்டி வரும்னு:) ஆனா உங்க கிட்ட இருக்கறா திறமைக்கு நீங்க அப்டி சொல்லக்கூடாது கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டு எழுதுங்க :)

said...

//எல்லாருக்கும் இப்படி ஒரு அலிப்பு வரும்தான். அதுக்காக எழுதாமல் எல்லாம் போக முடியாது//

@geetha paati, அதானே, மொக்கை போடாம உங்களால இருக்க முடியுதோ? :p

said...

/ஆனா என்னமோ தெரில இந்த மாதிரி போட்டிக்கு எழுதணும்னு உட்கார்ந்தா வர்ற கவிதை நமக்கே புடிக்கிறது இல்லை./
இதுவும் உண்மை தான் கார்த்தி நானும் அதை அனுபவிச்சுருக்கேன், ஆனாலும் அது எப்டி போட்டின்னு வந்துட்டா இப்டி ஒரு எண்ணம் வருது? அதை மீறி தான் பார்ப்போமேன்னு ஒரு முயற்சி செய்வேன்:)

said...

அனைவரின் பாராட்டுக்களுக்கும் நன்றி:)

C.M.HANIFF said...

Karthik, laetta eshutinallum latesta taan eshutu veenga , eshuthungonna ;-)

said...

வற்றிப் போன நதியெல்லாம் கடலைப் பார்த்து ஆனந்தம் அடைகின்ற மாதிரி எழுதித் தள்ளிய பி.மு.க வின் முன்னோடி யால் எழுத முடியவில்லையா?அய்யகோ! என்ன கொடுமை இது சிங்கம்லே ACE :)

said...

//
வேதா, கிட்டு மாமா மற்றும் சி.வி.ஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். :-)
//
என்னுடைய வாழ்த்துக்களும் :)

said...

கார்த்தி, உங்களுக்கே டைம் ஆகுதுனா நான் எல்லாம் எங்க போறது..

நீங்க வழக்கம் போல தினம் ஒரு பதிவு இல்லாட்டியும் 3 நாளுக்கு ஒரு பதிவாது போடனும் !!!
அதத்தான் நாங்க எதிர்பாக்குறோம்

said...

சிவாஜி படம் NJ-ல போய் பாக்கப் போறேன்.. 16த் !!

உங்களோட கூட கொலம்பஸ்ல மறுக்கா பாக்கலாம்னு இருக்கேன் :)

said...

Karthik, I think this is something that every blogger goes through in his/ her blog life cycle :) Plus, when you get busy on top of that, it becomes all the more difficult. But niruthidaadheenga. Keep writing, no matter what the frequency is. Good luck...

said...

Maams...enna idhu....ungalaala mudiyaadhadha....no way....kandipa mudiyum....

said...

neengale ezhdhalana eppadi mathavanga ellam.....

said...

அதுவும் கரெக்டுதான்.. இப்பெல்லாம் எழுதணும்னு நெனச்சாலே கடியா இருக்குற மாதிரி இருக்குது :((

said...

வேதா, கிட்டு மாமாவுக்கு வாழ்த்துக்கள் :))