கண்ணீர் அஞ்சலி
கனவுகளை மட்டுமே சுமந்து வாழ்கின்ற அப்பாவி மக்களை
கொன்றிங்கே புதைப்பதில், இந்த தீவீரவாதிகளுக்கு என்ன வெறியோ..வெற்றியோ...
இப்படி ஒரு ஈன, இழிசெயலை செய்வதனால், அவர்களுக்கு கிடைப்பதென்ன..இந்த ரத்த குவியலை காண்பதால் அவர்களுக்கு என்ன கிடைத்துவிட போகிறது..
இன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வர்றப்போ ஸ்வீட் வாங்கிட்டு வர்றேன்டா செல்லம்னு சொன்ன அப்பா ரத்தமும் சதையுமா பார்சலில் வந்தால் அந்த பிஞ்சு மனசுக்கு, மகனுக்கு எப்படி இருக்கும்.. அங்கே கொல்லபட்டது அத்தனை உயிர்கள் மட்டுமல்ல, அவர்தம் சொந்தமும், கனவுகளும் தான்..
இந்த சம்பவதிற்கு பிறகு, திசை மாறுவது எத்தனை பேரின் வாழ்க்கை.. எத்தனை குடும்பத்தை அதன் இளைய தூண்கள் தாங்க போகின்றன.. இப்படித்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவகின்றனரோ!!
யாரோ சிலரின் வெறிதனத்திற்கு தங்களின் வாழ்வை துறந்த அந்த மும்பை தியாகிகளுக்கு எந்தன் கண்ணீர் அஞ்சலி..






