Tuesday, July 11, 2006

கண்ணீர் அஞ்சலி

கனவுகளை மட்டுமே சுமந்து வாழ்கின்ற அப்பாவி மக்களை
கொன்றிங்கே புதைப்பதில், இந்த தீவீரவாதிகளுக்கு என்ன வெறியோ..வெற்றியோ...

இப்படி ஒரு ஈன, இழிசெயலை செய்வதனால், அவர்களுக்கு கிடைப்பதென்ன..இந்த ரத்த குவியலை காண்பதால் அவர்களுக்கு என்ன கிடைத்துவிட போகிறது..

இன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வர்றப்போ ஸ்வீட் வாங்கிட்டு வர்றேன்டா செல்லம்னு சொன்ன அப்பா ரத்தமும் சதையுமா பார்சலில் வந்தால் அந்த பிஞ்சு மனசுக்கு, மகனுக்கு எப்படி இருக்கும்.. அங்கே கொல்லபட்டது அத்தனை உயிர்கள் மட்டுமல்ல, அவர்தம் சொந்தமும், கனவுகளும் தான்..

இந்த சம்பவதிற்கு பிறகு, திசை மாறுவது எத்தனை பேரின் வாழ்க்கை.. எத்தனை குடும்பத்தை அதன் இளைய தூண்கள் தாங்க போகின்றன.. இப்படித்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவகின்றனரோ!!

யாரோ சிலரின் வெறிதனத்திற்கு தங்களின் வாழ்வை துறந்த அந்த மும்பை தியாகிகளுக்கு எந்தன் கண்ணீர் அஞ்சலி..

21 பின்னூட்டங்கள்:

said...

//இந்த ரத்த குவியலை காண்பதால் அவர்களுக்கு என்ன கிடைத்துவிட போகிறது..//
ஒரு மயிரும் கிடைக்காது.
என் தாய் மண்ணின் மீது ஆணையிட்டு சொல்கின்றேன். இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை கொன்றாலும் அவர்கள் நினைக்கும் எந்த ஒரு காரியத்தையும் இந்த நாட்டில் நிகழ்த்த முடியாது.

நம் இந்திய அரசாங்கமும், இந்த தீவிரவாதிகளுடன் அரவணைத்து போகும் போக்கை கைவிட்டு இரும்பு கரம் கொண்டு அடக்கும் வழியை தேர்ந்து எடுக்க வேண்டும். தேச நலன் தான் முக்கியம். மற்றது எல்லாம் பிறகு தான்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

said...

உங்க கோபம் ஒட்டு மொத்த இந்தியவின் கோபம்.. சும்ம பாகிஸ்தனுக்கு ரோடும் பஸ்ஸும் விடுரதை நிருத்திட்டு அவங்களை அடக்குர வழிய அரசு பாக்கனும்..

said...

Why isn't you blog compatible with FireFox? Everytime I have to switch to IE. Can you do anything about it?

said...

Sure Kamal. I will try to fix it. But wht type of problem you are getting?

said...

நாங்களும் சேர்ந்து கொள்கிறோம். முதலில் உங்கள் பதிவைத் தான் பார்த்தேன். நல்லதொரு பதிவு. அப்பாவி மக்களுக்கு நம் அஞ்சலி மட்டுமல்லாமல், அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கும் நம்முடைய ஆழ்ந்த வருத்தங்கள்.

said...

அமைதி பேச்சுவார்த்தை என்ற வார்த்தையை அரசியல் அகராதியிலிருந்து எடுக்க வேண்டிய நேரம் நம் அரசாங்கத்திற்கு வந்து விட்டது, ஆனால் அதற்கான தைரியம் தான் எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.
உயிர் நீத்தவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.

said...

இன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வர்றப்போ ஸ்வீட் வாங்கிட்டு வர்றேன்டா செல்லம்னு சொன்ன அப்பா ரத்தமும் சதையுமா
பார்சலில் வந்தால் அந்த பிஞ்சு மனசுக்கு, மகனுக்கு எப்படி இருக்கும்..

அங்கே கொல்லபட்டது அத்தனை உயிர்கள் மட்டுமல்ல, அவர்தம் சொந்தமும், கனவுகளும் தான்..

இந்த சம்பவதிற்கு பிறகு, திசை மாறுவது எத்தனை பேரின் வாழ்க்கை.. எத்தனை குடும்பத்தை அதன் இளைய தூண்கள் தாங்க போகின்றன.. இப்படித்தான் குழந்தை தொழிலாளர்கள் உருவகின்றனரோ!!

said...

கீதா.. இது போன்ற ஒன்று மறுபடியும் நடக்காதிருக்க வேண்டுவோம் ஆண்டவனை..

இவர்களெல்லாம் கோழை அரசியல்வாதிகள் தான் வேதா..

said...

//இந்த சம்பவதிற்கு பிறகு, திசை மாறுவது எத்தனை பேரின் வாழ்க்கை.. //

heart moving lines... Indian gvt shud make it clear that no terrorist business here in future.

said...

ஆமா அம்பி.. இப்படிபட்ட சூல்நிலையில் தான் பாதி பேர் வாழ்க்கை நாசமாகிறது

said...

//இன்னிக்கு ஆபீஸ்ல இருந்து வர்றப்போ ஸ்வீட் வாங்கிட்டு வர்றேன்டா செல்லம்னு சொன்ன அப்பா ரத்தமும் சதையுமா பார்சலில் வந்தால் அந்த பிஞ்சு மனசுக்கு, மகனுக்கு எப்படி இருக்கும்..//

காலையிலே நியூஸ் சேனல்கள்ல மாத்தி மாத்தி வர்ற செய்திகளைப் படிச்சதும் நானும் இதே மாதிரி தான் நெனச்சேன். நெனச்ச அந்த கணம் மனசு பதைபதைக்க ஆரம்பிச்சுடுச்சு. ஏன்னா இறந்தவர்கள் 160,170 என்று டிவியில் குறிப்பிடப்படுவது போல வெறும் எண்கள் அல்ல, அவர்களும் மனிதர்கள், அவர்களை நம்பியும் குடும்பங்கள் உள்ளன. இதை யார் செய்திருந்தாலும், எவ்வித உயரிய நோக்கத்திற்காகச் செய்திருந்தாலும் அது கண்டிக்கத்தக்க ஒரு இழிசெயல்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் என்னுடைய அஞ்சலி. இது மாதிரி ஒரு நிகழ்வு இனியும் நடக்கக் கூடாது என இறைவனை வேண்டுவோம்.

said...

தங்களோடு சேர்ந்து னானும் இந்த வன்முறையைக் கண்டிக்கிரேன்.

said...

கேட்க கஷ்டமாதான் இருக்கு..உங்கள் அஞ்சலில நானும் பங்கு கொள்கிறேன்..

said...

கேள்விப்பட்டதுலே இருந்து மனசே சரியில்லைங்க.
அப்பாவி மக்கள்தான் இவுங்க எதிரிகளா?

போனவங்க போயிட்டாங்க. இனி அவுங்க குடும்பம் அனுபவிக்கப்போற மனக்கஷ்டம்?

said...

சரியாய் சொன்னீர்கள் கைபுள்ள.. முதல் வருகைக்கு நன்றி

said...

முதல் வருகைக்கு நன்றி, ஆராதனா.. ஆனால் இப்படி ஒரு சம்பவத்துக்கு பின்னால் விரைவாக மீண்டெழுந்த மும்பை மக்களுக்கு நன்றி

said...

ஆமாம் துளசி.. எத்தனையோ பேரின் வாழ்க்கை மாற போகிறது..

வாங்க ஷ்யாம்.. நமது ஆறுதல் தான் அவர்களுக்கு இப்போது தேவை..

said...

Even after these worse blast, Mumbai's routine life was not affected.. This amazed the whole India.. In a TV interview one Mumbai wala told that Mumbai people got practiced over these troubles and started taking this as the usual happening in life. The lost their fear over bomb blasts all because of the past few year's continuous disasters.. Cool Mumbai.. Salaam Namasthe.. One more thing Indian Economy got strengthened instead of growing weak due to such disasters..

said...

unmai thaan Sasi.. achcharyamana vishayamum kooda.. Well done Mumbai!!

said...

indha seithiyai kettutu naanum kalangi poiten

said...

urukulaikira seithippa ithu