Friday, July 21, 2006

பொண்ணு பாக்க போறேன்

கீதா சந்தேகப்பட்ட மாதிரி, அம்பி சந்தோசப்படுற மாதிரி நான் பொண்ணு பாக்க போறேன். பொண்ணு பாக்க போறதே ஒரு சுவாரசியமான விசயம். ஒரு பொண்ணுக்கு தெரியாம எத்தனை தடவை வேண்டுமானாலும் அந்த பொண்ணை பாக்கலாம்.. சைட்டு அடிக்கிறதை தாங்க சொல்றேன். ஆனா அந்த பொண்ணை அவங்க வீட்லயே, அந்த பொண்ணோட அப்பா அம்மாவை கூட வச்சுகிட்டே பாக்குறது இன்டிரஸ்டா இருந்தாலும் கொஞ்சம் பயமாதான் இருக்கும். போட்டோல பாத்த மாதிரி பொண்ணு இல்லாம, நமக்கு பிடிக்கலைனா எப்படி அதை சொல்றது..இப்படி தர்மசங்கடமான விசயங்கள் இருந்தாலும்.. நான் இப்போ பொண்ணு பாக்க போறேன்...

பொண்ணுக்கு சொந்த ஊர் மேட்டுப்பாளையம் பக்கத்துல தான்.. போட்டோ பாத்தேன்.. பிடிச்சிருந்தது.. சரி நேர்ல போய் ஒரு தடவ பாத்து ஓகே பண்ணிடலாம்னு, இந்த வாரம் ஒரு கும்பலா கிளம்புறோம். அதுவும் வாழ்க்கைல இருந்த ஒரு கடமையும் நல்லபடியா முடிஞ்சது.. அதாங்க என் தங்கை காயத்திரி கல்யாணம்.. அதனால இது தான் என் தேடும் படலத்தை ஆரம்பிக்க சரியான நேரம்.

பொண்ணு இளவரசி மாதிரி இருக்கும்... அந்த பொண்ணை இளவரசின்னு தான் கூப்பிடுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்.. மனசுல சும்மா லப்டப் லப்டபுன்னு இதய துடிப்பு எகிறுது கன்னாபின்னான்னு.. உங்களுக்கு கூட அந்த பொண்ணை தெரியும்.. என்னிக்கும் இனிமையாய் மனசுல இருக்கிற அசினா? (தசாவதாரம் படத்துல கமலுக்கு ஜோடியா அசின் நடிக்க போறாங்கலாம். செய்தியை பாத்தவுடன் மனசே சரியில்லை. அதுவும் கூடவே, நதியா ஏன் இதுவரை கமலுக்கு இணையா நடிக்கவில்லைங்கிற காரணத்தை வேற படிச்சேன்.. படிச்சதிலிருந்து, சோறு தண்ணி ஒழுங்கா இறங்கலை. அம்பி, நாம நமக்குள்ள சண்டை போட்டா, பெரிய ஆளே வில்லனாய்.. கீதா, வேதா தலைமைல ஜல்லிகட்டுல இனி நானோ, அம்பியோ ஜெயிக்க போவதில்லை, அது தான் விருமாண்டி வந்தாச்சுல..) சமீபத்துல கனவுல வந்த த்ரிஷா?

சரி..சரி..ரொம்ப பில்டப் கொடுக்காம நேர விசயத்துக்கு வர்றேன்... இந்த வாரம் ஆபிஸ்ல இருந்து டூர் போறோம் ஊட்டிக்கு.. அது தான் அந்த பில்டப்.. ஊட்டிக்கு மலைகளின் இளவரசின்னு ஒரு பேர் இருக்குங்க..

எல்லோரும் அடிக்க ஒடி வர்ற மாதிரி தெரியுது.. கொஞ்சம் நில்லுங்க.. பொண்ணை பாத்துட்டு வந்துடுறேன்..

24 பின்னூட்டங்கள்:

வல்லிசிம்ஹன் said...

கார்த்திக் முத்துராஜன்,
உங்க நண்பர்கள் உதைக்கப் போறாங்க.
நல்ல பொண்ணு பார்த்துக் கல்யாண அழைப்பு அனுப்புங்க.
நல்லா ஏமாத்திட்டீங்க.:-)))

மு.கார்த்திகேயன் said...

நான் டூர் போறேங்கிறதை இதை விட வித்தியாசமா சொல்ல எனக்கு தெரியல வள்ளி. தங்கள் முதல் வருகைக்கு நன்றி

துளசி கோபால் said...

யாரு கண்டா.... உங்க வாய் முஹூர்த்தம் அங்கே நிஜமாவே பொண்ணு இருந்து க்ளிக் ஆயிருச்சுன்னா...?

எதுக்கும் வாழ்த்துச் சொல்லிடறது நல்லது பாருங்க.

மனம்போல வாழ்வு. நல்லா இருங்க.

ambi said...

ada paavi makka! kalaasi iruka paa karthik!
seekrame nalla sedhi sollu, amaaa, un sis mrrgela etho aachu!nu izhuthiyee? aprom sathamee kanoom? :)

மு.கார்த்திகேயன் said...

ஆமால..ஊட்டிக்கு யார் அம்மா அப்பா..கொடைக்கானல் ஊட்டிக்கு தங்கைனு கேள்வி.. தெரிந்தவர்கள் சொல்லலாம்..

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கு நன்றி துளசி.. ஆனா அப்படி ஏதும் நடந்தா முதல் இன்விடேஷன் உங்களுக்கு தான்

மு.கார்த்திகேயன் said...

thangai kalyanaththula nadanthathu oru periya bulb matter..athu paththi oru thani pathivu poduren ambi..

creditukku nanRi thala..

Anonymous said...

Enna karthi sathemae illama Ooty Poora.. Enjoy the Tour..send photos once you are IN.

மனசு... said...

டேய் தாங்கலடா... கொஞ்சம் அடங்குடா...
சரி சரி பாத்து போயிட்டு வாப்பு... அங்கனகுள்ள போயி எதுவும் சேட்ட பண்ணிக்கிட்டு திரியாத..

நட்புடன்,
மனசு...

Geetha Sambasivam said...

Grrrrrrrrrrrrrrrrrrrr. நான் நிஜமாவே ஏமாந்து போனேன். அது என்ன தங்கிலீஷ், இங்கிலீஷ்னு வெளுத்துக் கட்ட ஆரம்பிச்சுட்டீங்க? அதான் நம்ம வலைப்பக்கம் வரதில்லையா?

நாகை சிவா said...

பங்கு, ஊட்டியை ராணினு தான் சொல்லுவாங்க, நீ புதுசா வேற ஏதோ சொல்லுற.
கொடைக்கானல் - இளவரசியா
ஏற்காடு - இதுவும் நல்ல பிகரு தான்
வால்பாறை - நச்சு பிகரு

Syam said...

உஸ் அப்பாடானு அம்பி ஒரு பெருமூச்சு விட்டு முடிக்கறதுக்குள்ள ஆப்பு அடிச்சிட்டியேப்பா...ஏதோ நல்லா இருந்தா சரி... :-)

Hariharan # 03985177737685368452 said...

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் காலத்துக்குப் பொருந்தாத "மலைகளின் இளவரசி"ன்ற பட்டத்தை ஒன் லைன் ஸ்டோரியா வச்சு பில்டப்போடு இப்படி ஒரு பதிவா?

ஊட்டியே மரமெல்லாம் வெட்டி வெட்டி இபோ மலைகளின் "கிழவரசி"யா இல்லை இருக்கு இப்போ?

எப்படியோ பொண்ணு கிடைச்சு "கால் விலங்கு" சீக்கிரம் போட்டுக்குங்க!

அன்புடன்,

ஹரிஹரன்
www.harimakesh.blogspot.com

Unknown said...

நல்லா கெளப்புரீங்கையா பீதியை....

மு.கார்த்திகேயன் said...

Ganesh, mennamE plan panninathu thaan.. Thanks da for your wishes..

மு.கார்த்திகேயன் said...

மனசு, என்னத்தை சேட்ட பண்றது போ.. ஆனா நல்ல சீதோஷ்ண நிலைடா

மு.கார்த்திகேயன் said...

கீதா, உங்க வலைப்பக்கம் வராம எல்லாம் இல்லை.. ஆனா இந்த பிளாக் பிரச்சினை காரணமா நீங்க ஒண்ணும் எழுதிலைன்னு நினைச்சேன்

மு.கார்த்திகேயன் said...

பங்கு, இன்னும் அந்த நச்சு பிகரை தான் பாக்கணும்

மு.கார்த்திகேயன் said...

ஷ்யாம், அசின் விசயம் அம்பிக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆப்பு தான்

மு.கார்த்திகேயன் said...

Hari, neenga cholrathu romba unmai.. pykara falls pakkathula oru entire malaiyave suththama azhichuttanga.. paththa mottai adichcha kumari pennai paththa mathiri romba sokama irunthathu

மு.கார்த்திகேயன் said...

bala, enna panrathu bala.. appo appo ippadi ellam poda vendiyathu irukku..

மு.கார்த்திகேயன் said...

என்னங்க வேதா, இப்படி சொல்லிட்டீங்க.. நான் பெண்களை மதிப்பவன்.. என் நெருங்கிய சொந்தங்களில் எனக்கு தங்கைகளே பத்துக்கு மேல்.. பெண்களை பற்றி தவறாக பேசியதற்காக பலமுறை சண்டைகள் எல்லாம் போட்டிருக்கிறேன்.. அதனால், என்னோட வலைபூவில் என்னிக்கும் அந்தமாதிரி பதிவுகள் இருக்காது.. விளையாட்டா எழுத போய்..நீங்க எப்படி சொல்லிட்டீங்களே வேதா..

மு.கார்த்திகேயன் said...

என்னங்க வேதா..மன்னிப்பு எல்லாம் கேட்டு என்னை சங்கடப்படுத்துறீங்க.. நண்பர்களுக்குள் இதெல்லாம் சகஜம் தானே..

மு.கார்த்திகேயன் said...

That's what I wanted my Friend..