Tuesday, July 18, 2006

சந்தேகம்

இது ஆடி மாசம்..
புதிய சினிமாக்கள் பற்றிய செய்திகள் மிகக் குறைவாகவே இருக்கும்..
அதனால் தான் என்னவோ, போன வாரம், ஒரே நாளில் மூன்று படங்களுக்கு பூஜை செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஏன் ஆடி மாசத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்வதில்லை என்பதற்கு ஒரு பெரிய கதையே சொல்வர்கள் என் ஊரில்.. ஆனால் இந்த மாசத்தில் தான் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.. ஒவ்வொரு அம்மன் கோவிலிலும், செவ்வாய், வெள்ளிகளில் சாமிக்கு மாலை மரியாதைகளும் பூசாரிக்கு தட்டில் காணிக்கைகளும் மிகுதியாகவே இருக்கும்.. பிச்சைகாரர்கள் தங்கள் வங்கி கணக்கை ஏற்றிகொள்ள நல்ல வாய்ப்பு..

எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம்.. கை கால் எல்லாம் நல்ல நிலமையில் இருப்பவர்களுக்கு பிச்சை போடலாமா.. எப்போ அப்படி ஒரு நிலமை வந்தாலும் என் மனசுக்குள் எழுகிற புறநானூற்றுப்ப் பாடல் இது

ஈயென இரத்தழிலிந்தன்று - அதனினும்
இழிந்தது ஈயேன் என்பது..
கொள்ளென கொடுப்பது உயர்ந்தன்று
கொள்ளேன் என்பது அதனினும் உயர்ந்தது
(பிழை இருப்பின் மன்னிக்க)

அதனால நல்ல நிலமையில் இருக்கிற ஒருவன் வந்து பிச்சை கேட்டு நாம் கொடுக்கலைனா அது இழிந்ததா? என்னை பொறுத்தவரை இந்த பாடல் உண்மையிலே முடியாதவர்களை பற்றி தான்.. ஆனால் உண்மையான விளக்கம் என்ன?
தெரிந்தவர்கள் தகுந்த முறையில் விளக்கினால் அவர்கள் தலை வெடிக்காமல், விக்கிரமாதித்த வேதாளம் இன்னுமொரு கதை சொல்லும்

9 பின்னூட்டங்கள்:

said...

கோவில் பிச்சை எடுப்பவர்களில் இரு பிரிவு உள்ளது. ஒரு வகை இல்லற வாழ்வை வேண்டாம் என்று உதறி, சன்னியாசம் வாழ்வை ஏற்று, யாசித்து வாழ்வை நகர்த்தும் ஒரு வகை.
உழைக்க மறுத்து யாசித்து வாழும் இன்னமொரு வகை.
முதல் வகைக்கு நான் உதவியது உண்டு.

இதில் வயதானவர்களை சொல்லவில்லை. சொந்தகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் தனி. அவர்களுக்கு நான் என்றும் உதவி புரிவேன்.

ஆனால் நான் எக்காரணம் கொண்டும் சிறுவர்களுக்கு பணம் குடுப்பது இல்லை. அது பெரும்பாலும் அவர்களை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என்பதால்

said...

உண்மை சிவா.. வயதானவர்களை கண்டால் என்னை கேட்காமலே என் கைகள் என் சட்டை பையுனுள் சென்றுவிடும். ஆனால் எக்காரணம் கொண்டும் நான் உங்கள் எண்ணங்களைப் போல, சிறுவர்களுக்கு எதையும் கொடுப்பதே இல்லை.

said...

ஈயென இரத்தல் இழிந் தன்று
ஈயே னென்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்த உயர்ந் தன்று
கொள்ளே னென்றல் அதனினும் உயர்ந்தன்று.


அதாவது ஒருவரிடம் போய்த் தன் இழிநிலை உரைத்து "பொருள் ஈ (கொடு)" என்று இரத்தல் (யாசகம் கேட்டல்) கேவலமான நிலைமை. ஆனால் அப்படிக் கேட்ட பிறகும் கொடுக்கக் கூடிய நிலையில் உள்ளவன் தரவில்லையெனில் அது அசிங்கத்திலும் அசிங்கம்.

இதே போல் ஒருவர் தன்னால் இயன்றதை மற்றோருக்குக் கொடுத்து உதவுதல் உயர்ந்த பண்பு. அப்படிப் பெறும் நிலையில் இருந்தும், தன்மானம் கருதி அதைக் கொள்ளேன் (கொள்ள மாட்டேன்) என்று சொல்பவர்கள் அந்த உயர்ந்தவரை விட உயர்ந்தவர் ஆகிறார்.

சரியா கார்த்திக்?

said...

ஆஹா..ஆஹா..இவ்வளவு நாளா எங்கிருந்தீங்க பிரதீப்.. நான் என் பள்ளி காலங்களில் படித்த பொருளுரையை அப்படியே மறுபடியும் படித்து போல் ஒரு உணர்வு.. நன்றி..

said...

இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம் அது அவங்கள சோம்பேரி ஆக்காதவரைக்கும் நல்லது... :-)
புறனானூறு பத்தி 2nd போஸ்ட்ல மாத்தி கமெண்ட் போட்டுடேன் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க... :-)

said...

அன்பின் கார்த்திக்,

என்னைப்பொறுத்தவரை சாமிக்கு உண்டியலிடுவதை விட ஆசாமிக்கு (பாத்திரமறிந்து) பிச்சையிடுவது நல்லது.

கருத்துள்ள புறநானூற்று பாடலுக்கு நன்றி

அன்புடன்
தம்பி

said...

ha ha..parava illai syam..And your thoughts are perfectly correct. It should not make them as lazy

said...

சரியா சொன்னீங்க தம்பி.. பாத்திரமறிந்து பிச்சையிடுவது என்றுமே நல்லது தான்

Anonymous said...

I think so too! But is it realy true.