Wednesday, July 04, 2007

வீட்டுக்குள்ளே ரசிகர் சண்டை

சிவாஜி பத்தி போஸ்ட் போடுறதுக்கு முன்னால, நான் ரஜினி படம் பாத்துட்டு வந்தாலோ, இல்ல என் அப்பா கமல் படம் பாத்தாலோ (அவர் பெரும்பாலும் படமே பாக்குறதில்லை.. ஆனா எப்பவாவது அப்படிப் பாத்தா அது கமல் படமாத் தான் இருக்கணும்), வீட்ல ஒரு சின்ன கலவரமே நடக்கும்.. அதை பத்தி சும்மா கதைக்கிறேன்..

சினிமா உலகத்துல, நிறைய நடிகர்கள் இருந்தாலும் எப்பவும் ஒரு ரெண்டு நடிகரை வைத்து தான் ரசிகர் சண்டைகளே இருக்கும்.அந்த காலத்துல பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி தியாகராஜா பாகவதர் தான் எதிரும் புதிருமா இருந்த நடிகர்கள்.. எம்.கே.டியை அந்தகால சூப்பர் ஸ்டார்னு தான் எல்லோரும் அழைப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி.. இந்த இருவரை பற்றி சொல்லவேண்டாம்.. எல்லோருக்கும் தெரிந்திரிக்கும்.. எப்பவும் இப்படி இருக்கிற இரண்டு பேருக்கும் இடையில் அவர்கள் பயன்படுத்தும் பார்முலா, வேறுவேறாகத் தான் இருக்கும். எம்.கே.டியும், எம்.ஜி.யாரும் நடிப்பை ஊறுகாயாக்கி, மக்களை கவர்கின்ற அம்சத்தை நிறைய வைத்திருப்பார்கள். எம்.கே.டி படங்கள் அவ்வளவா பார்த்ததில்லை.. ஆனால் எம்.ஜி.யார் படங்கள் அப்படித்தான். ஆனால், இதற்கு நேர்மாறாக இருக்கும் சிவாஜியின் படங்கள்.. மனித வாழ்க்கையும் அதில் உணர்ச்சிகளும் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.. இவர்கள் இருவருக்கிடையில் யாரும் மற்றவருடையும் பார்முலாவை அதிகம் பயன்படுத்தியதில்லை.. எம்.ஜி.யார் ஒரு போதும் சிவாஜியின் குடும்ப சித்திர பார்முலாவை பயன்படுத்தியதில்லை.. ஒரு வேளை தனக்கு அழுது வடிந்து நடிப்பது வரவில்லை என்பதால் அப்படி ஒரு பார்முலாவை எடுத்தாரா என்பதும் தெரியவில்லை.

அதன் பிறகு வந்தது தான், ரஜினி-கமல் யுகம்.. ஆரம்பத்தில் இவர்களுக்கு இடையில், தேர்ந்தெடுத்து நடித்த படங்களில் அப்படி ஒரு வித்தியாசம் இருந்ததில்லை. ரஜினியும் கமல் பாணி படங்களான, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் படங்களில் நடிக்கவே செய்தார். கமலும் ரஜினி பாணி படங்களான, சகலகலா வல்லவன், காக்கி சட்டை போன்ற படங்களிலும் நடித்து வெற்றியை தவறாமல் குவித்தார். ஆனால், இவர்களின் சமீப கால படங்கள் எல்லாமே ஏதோ ஒரு பிரிவுக்குள் அடங்கி போனவையாகத் தான் இருக்கும். கமல் வித்தியாசங்களை காட்டவேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு கருக்களையே எடுத்துக்கொண்டார்.. ஹே ராம், தேவர் மகன், அன்பே சிவம், குணா, மகாநதி, விருமாண்டி என்று அந்த பட்டியல் சற்றே நீளமானது.. இந்தப் பக்கம் அண்ணாமலையில் தொடங்கி இன்றைய சிவாஜி வரை, சராசரிக்கும் அதிகமான விஷயங்கள் கொண்ட ஒரு மனிதனின் (larger-than-life image?) வாழ்கையை சுற்றியே தானிருக்கிறது.. கதைகளை விட, ரஜினியை நம்பியே படங்கள் எடுக்கப்படுகின்றன..

ரஜினி-கமலுக்கு பிறகு விஜய்-அஜித் வந்துவிட்டாலும் இந்த மாதிரி ஒரு ஒப்புமை செய்யும் அளவிற்கு அவர்கள் படங்கள் நடிக்கவில்லை என்பதால் அதை விட்டுவிடலாம். ஆனால், ஒரே மாதிரி, ரஜினி எம்.ஜி.ஆர் பாணி தான், விஜயின் பாணி என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்பது வேறு விஷயம்.

என் அப்பா, அவரது இளமை காலங்கள் தொட்டு எம்.ஜி.ஆர் ரசிகனாய் இருப்பவர். நீண்ட வரிசைகளில் நின்றெல்லாம் படம் பார்த்தவர்.. அந்த இள வயது துள்ளல் எப்போது முறுக்கேறி கிடந்த காலங்களில், அதே சுறு சுறு படங்கள் தான் பிடித்திருந்தது.. ஆனால் இப்போது இத்தனை கால வாழ்க்கைக்கு பிறகு அன்று பிடிக்காமல் இருந்த சிவாஜி படங்கள் இன்று கமல் போர்வையில் பிடிக்கிறது. நான் இது போல பல பேரை கண்டதுண்டு.. எம்.ஜி.ஆர் பிடித்தவர்களுக்கு கமல் பிடிப்பதும், ரஜினியை பிடித்தவர்களுக்கு அஜித்தை பிடிப்பதும்..

நான் ஒவ்வொரு முறையும் ரஜினி படம் பார்த்துவிட்டு வரும் போது, ஏன்டா..கதையே இருக்காது.. சும்மா ஸ்டையிலுக்காக ஏன் போய் ரஜினி படமெல்லாம் பாக்குறன்னு கேட்பார்..கமல் படமெல்லாம் எப்டி இருக்கு.. நடிப்பும் அதில் சொல்ற விஷயங்களும் அருமையா இருக்குன்னு என்னை கேன்-வாஷ் பண்ணுவார்.. நான் மறுபடியும், அன்றைக்கு உங்களுக்கு ஏன் சிவாஜி படங்கள் பிடிக்கலையோ அதே மாதிரி தான் இதுவும்..னு சொல்லி நான் பேச என் அப்பா பேசன்னு ஒரு சின்ன ரசிகர் சண்டையே நடக்கும்.. ஆனா, அந்த நொடிகள் எல்லாம் நான் என் வாழ்க்கையில் ரொம்ப ரசிச்சது..

ஆமாங்க, உங்களுக்கு இது மாதிரி ஏதாவது அனுபவம் இருக்கா?

19 பின்னூட்டங்கள்:

said...

இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.வி, ராஜா, ரஹ்மான் என விவாதங்கள் பலவற்றில் மூக்கை நுழைத்த அனுபவம் உண்டே!!

said...

எங்க அப்பாவோட சினிமா அறிவு "ஆயிரத்தில் ஒருவன் -ல நடிச்சது சிவாஜி தானே"- ங்கிற அளவுக்கு தான் .இதுல எங்க சண்டை போடுறது.ஹும்..

said...

எங்க ஊருல ஒரு வீட்டுல சகல நேரமும் பாட்டு அலறிகிட்டே இருக்கும் ..அப்பா எம்.ஜி.ஆர் பக்தர் .மூத்த பையன் கமல் ரசிகர் .இளைய பையன் ரஜினி ரசிகர் ..எம்.ஜி.ஆர் பாட்டு ஓடினா அப்பா வீட்டுல இருக்காருண்ணு அர்த்தம் ..கமல் பாட்டு ஓடினா அண்ணன் இருக்கார் ,தம்பி இல்லைண்ணு அர்த்தம் ..ரஜினி பாட்டு ஓடினா தம்பி இருக்கார் அண்ணன் இல்லைண்ணு அர்த்தம் ..மூணு பேரும் இல்லைண்ணா சிவாஜி பாட்டு ஓடும் ..வேற ஒண்ணுமில்ல ..இந்த மூணு பேர் தொல்லை தாங்க முடியாம வீட்டுல உள்ள பொம்பளைங்கள்ளாம் சிவாஜி ரசிகைகளா மாறிட்டாங்க.

said...

எங்க ஊருல ஒரு வீட்டுல சகல நேரமும் பாட்டு அலறிகிட்டே இருக்கும் ..அப்பா எம்.ஜி.ஆர் பக்தர் .மூத்த பையன் கமல் ரசிகர் .இளைய பையன் ரஜினி ரசிகர் ..எம்.ஜி.ஆர் பாட்டு ஓடினா அப்பா வீட்டுல இருக்காருண்ணு அர்த்தம் ..கமல் பாட்டு ஓடினா அண்ணன் இருக்கார் ,தம்பி இல்லைண்ணு அர்த்தம் ..ரஜினி பாட்டு ஓடினா தம்பி இருக்கார் அண்ணன் இல்லைண்ணு அர்த்தம் ..மூணு பேரும் இல்லைண்ணா சிவாஜி பாட்டு ஓடும் ..வேற ஒண்ணுமில்ல ..இந்த மூணு பேர் தொல்லை தாங்க முடியாம வீட்டுல உள்ள பொம்பளைங்கள்ளாம் சிவாஜி ரசிகைகளா மாறிட்டாங்க.

said...

hi hi@ ithe ithe thaan enga veetalayum! enga appa ammaku munna rajini pidikkum ippo kamal thaan. enakku rajini thaan eppovum!

said...

Rajini pidikkum enbathaal, kamal pidikaathu enathu illai. Kamal padamum virumbi paarpavan naan. actually, apart from Rajini,kamal, meethi ellar padamum, kadhai riundha thaan pidikkum...

said...

எங்க வீட்டில இதுக்கெல்லாம் வாய்ப்பேயில்ல. அப்பாவுக்குப் பழைய்ய்ய்ய சிவாஜி படமெல்லாம் தலைகரணமாகத் தெரியும். நாமும் சிவாஜி விசிறி. இதில எங்க சண்டைபோல. அப்புறம் அவருக்கு கமலையும் பிடிக்கும். அம்மாவோடதான் ஒரு கட்டத்தில பயங்கர கத்தி சண்டை - ரஜனி படங்கள் பற்றி. ஒரு கட்டத்தில அவங்களும் திருந்திட்டாங்க. ;)

ஆனா, இந்த அரசியல் இருக்கே. அதில ஏகப்பட்ட விவாதம் நடந்திருக்கு. நடந்துகிட்டிருக்கு. ;)


-மதி

said...

கதை நல்ல இருந்து, அருமையா படமாக்கப்பட்டா வடிவேலு படமும் பிடிக்கும். அவ்ளோ தான். :)

இந்த ஹீரோ வர்ஷிப் எல்லாம் கிடையாது! :)

said...

//எம்.ஜி.ஆர் பிடித்தவர்களுக்கு கமல் பிடிப்பதும், ரஜினியை பிடித்தவர்களுக்கு அஜித்தை பிடிப்பதும்..
//

ROTFL :) கார்த்தி உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை இது? :p

said...

naan kamal-oda theevira rasigan......adukaaga rajini padam paarkaama ellam iruka maaten....baasha first day first show kooda paarthu iruken....aana fan-na adu kamal-ku mattum dhaan :)

said...

இந்த மாதிரி சண்டை போட்டது எல்லாம் நண்பர்களோடு மட்டுந்தான்...
வீட்டுக்குள்ளன்னு எடுத்துக்கிட்டா ஒண்ணும் இல்ல...

said...

இந்த நடிகர்தான் பிடிக்கும்னு இல்ல..யார் நல்ல படம் நடிச்சாலும் விரும்பி பாக்குறது உண்டு...
இருந்தாலும் அஜித் மேல மட்டும் ஒரு சின்ன Soft Corner மொக்கை படமா இருந்தாலும் அதுல உள்ள சில(!) நல்ல விஷயங்களை எடுத்து வச்சு Argue பண்றது உண்டு..

said...

தலை, எப்படி இருக்கிங்க. இந்த மாதிரி சண்டை எல்லா வீட்லயும் நடக்கும். எங்க வீட்லயும் உண்டு.

said...

உங்க பிறந்தநாள் அபிஷேக விடியோ சூப்பர். அவ்ளோ கஷ்டத்துலயும் 'காமிராவ பாத்து ஸ்மைல் பண்ணுங்க கார்த்தி' னு சொன்னவுடனே ஒரு ஸ்மைல் விடறிங்க பாருங்க - நீங்க பிறவி நடிகன்..

said...

thala, neenga sonna ella pointsum perfect. iruvar dhaan tamil naatin vidhi. cinema enru sonnalae, neenga sonna aatkal dhaan stamp maadhiri.

it has been well suited for politics too. DMK and ADMK vittaa vera enna theriyum elaarkum

whatever might be the case, rajini kamal paarthu valarndhavanga dhaan namma ellaam. cinema enra passiona inject pannadhum avanga dhaan. so enna porutha varai rajini and kamal is my all time favorite.

said...

வருகைப் பதிவு மட்டும், அப்புறமா வந்து கமென்டறேன்.

said...

வர வர என்னோட பின்னூட்டம் கூட போடறது இல்லையா? வருகைப் பின்னூட்டம் எங்கே காணோம்?
எனக்கு சிவாஜி, எம்.ஜி.ஆர். இருவரையும் விட ஜெமினி, முத்துராமன், சிவகுமார் பிடிக்கும். :))))) அது போல் இப்போ சூர்யா பிடிக்கும். இதுக்கு என்ன சொல்லப் போறீங்க? :D
அப்புறமா ஒரு விஷயம் சிவாஜி, எம்.ஜி. ஆர் படங்களையும் அதன் கதை, பாட்டுக்களையும் வச்சு ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தி இருக்கேன். (மனசிலே தான்.)

said...

enakku inddha maadhiri anubavam edhuvum illa, enna enga appavum seri ammavum seri avalava padangal paarakardhu illa.

Enakku kamal pidikkum indraiya kaala nadigargalil vasoolai patri kavalai padamal nadipin vasool rajavai thigazhgirar illaya. anbe sivam endra oru padame podhum - to show what a good actor he is!

naan rajiniyum rasippen i like baadsha, aanal oru murattu kaalaiyo, naan magan allavo, illa oru thillu mullu'o, thambikku endha ooru-kaadhalin deepam ondru'o - irukkara rajini ippa missing.

Anonymous said...

enakku time poradhu theriyama pilim kaatina yaara irundhalum paarpen :-)

-kodi