வகுப்பறையில் சில நாய்குட்டிகள்
எட்டாவது நான் படித்த வகுப்பறை, பள்ளியின் மேடை அருகே இருந்தது. கிட்டதட்ட பனிரெண்டிலிருந்து பதினைந்து அடி அகலமும் முப்பதாறு முதல் நாற்பது அடி வரை நீளமும் கொண்டது. வகுப்பின் கரும்பலகை வட மேற்கு நோக்கி இருக்கும். வகுப்பின் வாசப்படி தென்மேற்குப்பக்கம் இருக்கும்.. வாசலின் அருகினில் பெண்கள் உட்காருவதெற்கென்று பெஞ்சுகள் இருக்கும்..அவர்களின் பெஞ்ச் இரண்டு பேர் அமரக்கூடியது.. எதிர்புறம் இருக்கும் ஆண்கள் பெஞ்சில், கிட்டதட்ட நான்கு பேர் அமரலாம். வகுப்பின் பின்னே, சிமெண்டினால் ஆன திறந்த வெளி அலமாரிகள் இருக்கும். வகுப்பில் ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது, அதில் தான் ஏறி உட்கார்ந்து ஆட்டம் போடுவோம் நாங்கள். அந்த அலமாரியின் கீழ் தட்டின் இடது பக்கம் இருக்கும் அலமாரியில் எப்போதும் மண்கள் தோண்டப்பட்டும் சிதறிக்கிடக்கும். எப்போதோ ஏதோ விலங்கோ, இல்லை வேற ஏதோ காரணத்தினாலோ இப்படி ஆன பின்னும் பள்ளி நிர்வாகம் இன்னும் சரி செய்யாமல் இருந்தது.
ஒரு முறை வகுப்பில் அந்த கீழ்தட்டு அலமாரியில் சில காலியான பான்பராக் பாக்கெட்டுகளை எப்படியோ எனது வகுப்பு ஆசிரியை பார்க்க நேர்ந்தது. அவருக்கோ தூக்கி வாரிப்போட்டது..இந்த சின்ன வயசில் யார் இதெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று. தனியாக (வகுப்பு தலைவனாக இருந்த காரணத்தால்) என்னை ஆசிரியர் அறைக்கு அழைத்து, யார் என்று கண்டுபிடிக்க சொல்லி உத்தரவிட்டார்.. தருமியின் நிலமை எனக்கு. யாரென்றே தெரியாது.. எப்படி கண்டுபிடிக்கப் போகிறேன் என்று பயங்கர கவலை.. அது நம்ம வகுப்பில் இருக்கும் பையன் தானா இல்லை வேற யாரேனுமா என்று ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால் இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் சொல்லிவிட்டர்கள்..
ஆனால் அந்த மர்மமும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் வகுப்பில் சரசரவென்று சத்தம் கேட்க, பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியையே யார் அந்த பையன் என்று கண்டுபிடித்துவிட்டதால் எனது வேலை சுலபமாக, சுபமாக முடிந்துவிட்டது. சிவகாசியில் இருந்து வந்து விடுதியில் தங்கி படித்த சம்பத் என்ற பையனே அந்த பான்பராக் பாக்கெட்டுகளுக்கு காரண கர்த்தா. அவனைப் பற்றி சொல்லும் போது இன்னொரு சம்பவத்தை பற்றியும் சொல்லியேயாக வேண்டும்.
ஒரு முறை வார இறுதி என்பதால் எல்லாப்பாடங்களிலும் அதிக வீட்டுப்பாடங்கள் தந்துவிட்டார்கள். திங்கள் வகுப்பிற்கு வந்த பிறகு தான் இத்தனை வீட்டுப்பாடங்கள் இருப்பது சம்பதிற்கு தெரிந்தது. என்ன செய்வது என்று நினத்து, உடனே ஜாமென்ட்ரி டப்பாவில் இருந்த டிவைடரை வைத்து கையை கிழித்துக்கொண்டான்.ரத்தம் சொட்ட ஆரம்பிக்கும் போது, கைகுட்டையால் அதை கட்டினான்.. ஆசிரியர் வீட்டுப்பாடங்கள் செய்யாதவர்கள் யார் என்று கேட்ட போது, இவன் எழுந்து நின்று, தனக்கு அடி பட்டுவிட்டதால் எழுத முடியவில்லை என்று சொன்னான். இது பற்றி அப்போது தெரிந்த இரண்டு பெஞ்சு பசங்களும் பயங்கர அதிர்ச்சியில் இருந்தோம் சிறிது நேரம்.
அந்த வருடம் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாங்கள் வந்த போது எங்கள் வகுப்பின் எண்ணிக்கை சற்று உயர்ந்திருந்தது. இந்த வகுப்பின் பின்னே கீழ்தட்டு அலமாரியில் ஒரு நாய் தனது குட்டிகளுடன் வாழ்ந்துகொண்டிருந்தது. அந்த நாய் அழகாக இருந்தது. கருப்பு வண்ண மூக்கும், வெள்ளையில் சாம்பல் கலந்தும் இருந்தது. அதற்கு ஆறு குட்டிகள். ஒண்ணொன்னும் பொம்மைகள் மாதிரி இருந்தன. வகுப்பில் ஆசிரியர் ரொம்பவும் சுவாரஸ்யமாக ஏதும் நடத்திக்கொண்டிருக்கிற போது, அந்த நாய் தனது குட்டிகளுடன் உள்ளே வருவதும் போவதுமாய் இருக்கும்.. அந்த பிஞ்சு குட்டிகள் அதன் தாயுடன் ஒட்டியவாறு போவது பார்க்க அவ்வளவு ரசிப்பதாய் இருக்கும்.இரண்டு மூன்று நாட்களில் அவைகள் எங்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தன. நாங்கள் கொண்டு வரும் சாப்பாட்டை போடுவது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்து வர்க்கி, பிஸ்கட் வேறு அவைகளுக்கு தர ஆரம்பித்தோம்.. கடைசி வரிசை பெஞ்சில் அமர்ந்திருந்த பசங்க சில பேர், ஆளுக்கொரு நாய்குட்டிகளுடன், அவைகளை கொஞ்சியவாறே பாடம் கவனிக்க ஆரம்பித்தனர்..
ராஜா என்னும் பையன், அவைகளின் மீது மிகுந்த பாசம் கொண்டு ஒன்றை வீட்டிற்கு எடுத்து செல்ல முற்பட்டான். ஆனால் தாய் கிட்ட இருந்த அதை பிரிக்கக்கூடாது என்று எல்லோரும் சொல்லிவிட்டதால் அவன் அந்த எண்ணத்தை கைவிட்டான்.. அதே சமயம், அந்த வருட பொங்கல் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது, அந்த நாயையும், குட்டிகளையும் காணவில்லை..சில நாட்கள் எங்கள் பேச்சில், வகுப்பில் ஒரு அங்கமாக இருந்த நாய்குட்டிகள் எங்கே போயின, எப்படி காணாமல் போயின என்று எங்கள் தெரியவே இல்லை.. எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாக இருந்தது. இரண்டு மூன்று மாதம் கழித்து, ராஜா அந்த நாயும் நாய்குட்டிகளும் தன்னுடைய தோட்டத்தில் தான் வளருவதாக சொன்னான். அவன் தான் தன் ஊர் நண்பர்களுடன் வந்து தாயோடு எல்லா நாய்குட்டிகளையும் எடுத்து சென்றுவிட்டானாம். கேட்ட போது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசமா இருந்தது. வகுப்பில் பணம் வசூலித்து சில நாட்கள் அவைகளுக்கு பிஸ்கட் எல்லாம் வாங்கி தந்துகொண்டிருந்தோம்.
16 பின்னூட்டங்கள்:
Evlo nalla manasu parunga unga friendku...
Again biscuit dhanda unga friendku??
Hope u didn't change it thou'.
//ambi said...
btw, prev post description superrrroo superrrr.
sari, ippa enna solla vara, Mr.muthurajanukku yaaravathu phone podunga! ithu thaane postin maiya karuthu..? //
repeaaaatttuuuuuuu :-)
imbuttu nyaabagam vechu ivalo suvaarasyamaa eluthu ungalaathaan mudiyum....:-)
மு.க, வாழ்க்கையின் சிறு விஷயங்களையும் நினைவில் கொண்டு, ரசிக்கும் படி எழுதி, எங்களை முற்காலத்த சக்கரத்தில் ஒரு ரைடு கொடுப்பது.. சூப்பர்!
//அந்த அலமாரியின் கீழ் தட்டின் இடது பக்கம் இருக்கும் அலமாரியில் எப்போதும் மண்கள் தோண்டப்பட்டும் சிதறிக்கிடக்கும். எப்போதோ ஏதோ விலங்கோ, இல்லை வேற ஏதோ காரணத்தினாலோ இப்படி ஆன பின்னும் பள்ளி நிர்வாகம் இன்னும் சரி செய்யாமல் இருந்தது.
//
டீட்டெய்லா சொல்லுவது.. இன்னும் பிடிக்கும்!
//ஆளுக்கொரு நாய்குட்டிகளுடன், அவைகளை
கொஞ்சியவாறே பாடம் கவனிக்க ஆரம்பித்தனர்..//
ஐய்யோ.......... எவ்வளோ ஜாலியா இருந்திருக்கும்!!!!
அடடா............. நான் அந்த வகுப்பில் ( அட்லீஸ்ட் டீச்சராவாவது)இல்லாமப்
போயிட்டேனே(-:
:)
தலைவா
மீண்டும் மலரும் நினைவுகளா!!!!!....வழக்கமான அட்டகாசமான எழுத்து நடை தலைவா ;)))
\\Syam said...
imbuttu nyaabagam vechu ivalo suvaarasyamaa eluthu ungalaathaan mudiyum....:-)\\
அய்யா முதல்வரே எங்க இருந்திங்க இவ்வளவு நாளா?
Karthik,
thaangamudialaye.. 9th std student essay ezhuthara madiri irrukku. guess u can write these in some kids spl sites.. guess Chella created one...
better luck next time..
super flash back :)
and good narration too. :)
@syam, munthina postu commenta thondi eduthu ipdi karthiku aapu adikanumaa? :p
Mokkai No : 1
Blade No .1
only one kostin ur aanar..
eppidi idhellam nyabagam irukku?
eppidi ivalo supera adhe picturize panna mudiyudhu ?
//
imbuttu nyaabagam vechu ivalo suvaarasyamaa eluthu ungalaathaan mudiyum....:-)
//
syam,
same blud.. naanum adha thaan ketten...
mundhaa nethu nadandadhe enakku nyabagam vara maatingudhu sattunu.. ivaru 8th std-la padicha classroom size modhakondu pasanga peru ellam solli asathuraaru.. avvvvvvvvvvvvvvvvvvvvvvvv
@ச்யாம், என்ன தலைமறைவா இல்லை, ப்ளாக் யூனியனில் கும்மி அடிக்கிறதுல பிசியா? நான் அனுப்பின வாழ்த்து வந்ததா? அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை! :(
@கார்த்திக், பழகின நாய் பிரியறதுக்கே கஷ்டம்னால் வளர்த்தது பிரியும்போது இன்னும் கஷ்டமா இருக்கும். அந்தப் பிரிவை எல்லாராலும் தாங்க முடியறதில்லை. :(
Post a Comment