கிரீடம் - ஒரு பார்வை
நாளை உலகமெங்கும் தல அஜித்தின் கிரீடம் வெளியாகிறது. படம் மலையாளப் படத்தின் மறு வடிவம் என்றாலும், ஏற்கனவே இது ஹிந்தியிலும் தெலுங்கிலும் (எவனாயிருந்தா எனக்கென்ன என்று ராஜசேகர் நடித்து வெளியானது என்று எங்கோ படித்தேன்) மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தேவையில்லாத பில்டப், மாஸ் ஹீரோ போன்று பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இல்லாமல் இருக்கும் என்று நம்பலாம். அதுவும் அப்பா வேடத்தில் ராஜ்கிரணும் அம்மா வேடத்தில் சரண்யாவும் நன்றாக நடித்திருப்பதாக சொல்கிறார்கள். படத்தின் போஸ்டர்களில் அழகாக இளமையாக முகவரி படம் வெளி வந்த காலத்தில் இருப்பதை போல அஜித் இருக்கிறார். அஜித், திரிஷா ஜோடி பார்ப்பதற்கு அழகு.. போட்டோக்களில் பதுமையாக இருக்கிறார் திரிஷா. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும்படி நன்றாக இருக்கிறது. ஆழ்வாரின் சறுக்கலுக்கு பிறகு தன்னை நிமிர்த்திக் கொள்ள அஜித்திற்கு இந்த படம் உதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
எப்போதுமே சிஃபியின் விமர்சனங்களை நான் ரொம்பவும் நம்புவதில்லை. அடி வாங்கிய படங்களுக்கு பைசா வசூல் என்று எழுதுபவர்கள். வரலாறின் முதல் நாள் விமர்சனம் பரவாயில்லை எனவும் மறு நாள் நல்ல படம் என்றும் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. கிரீடதிற்கு, இது போன்று ஒரு நல்ல படம் வருவது மிகவும் குறைவு என்று விமர்சனம் தந்திருக்கிறார்கள். சென்னையில், ஏற்கனவே கிட்டதட்ட இந்த வாரயிறுதிக்கான முன் பதிவுகள் முடிந்து கிட்டதட்ட முப்பது லட்சங்கள் வசூலாகி இருக்கின்றன. இது, அஜித், முதல் வார வசூலரசன் என்று அஜித்தை மறுபடியும் நிரூபித்திருக்கிறது.
படத்தின் போஸ்டர்களில் அழகாக இளமையாக முகவரி படம் வெளி வந்த காலத்தில் இருப்பதை போல அஜித் இருக்கிறார். திருவின் (நீர்களுக்கு நடுவில் அந்த சின்ன இடத்தில் இரண்டு தென்னை மரங்களோடு இவர் எழுதிய அழகான கவிதை பாடல், இவர் பெயர் பேசும் சிறிது நாளைக்கு) கண்களில், ஆன்டனியின் கத்திரியில், நா. முத்துகுமாரின் பாடல் வரிகளில், ஜி.வி.பிரகாஷின் இசையில், விஜய்யின் இயக்கத்தில் கிரீடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன். இயக்குநர் பிரியதர்ஷனின் சீடர். இந்த படம் சுரேஷ் பாலாஜி மற்றும் ரிலையன்ஸின் அட்லாப்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொசுறு : இந்த படத்திலும் அஜித்தின் மாமாவாக (அக்கா கணவராக) விவேக், சிவாஜியில் ரஜினிக்கு போல..
16 பின்னூட்டங்கள்:
Thanks for the information
கார்த்தி நீங்க அஜித் ரசிகரா?
Hey Karthik...
I saw ur B'day post !
Belated happy birthday !
http://mkarthik.blogspot.com/2007/07/blog-post.html
I am very happy u had a good time on ur b'day.
But what was that abhishekam about ? Is it some kind of ritual ?
ur friends were dumping all kinds of food stuffs and u were sitting so meekly and taking the whole thing...is it usually done like that?
But I felt sorry that all the food stuff was going a waste. I live in a country where even rice thrown in the garbage is taken and cleaned and dried by ppl who cant afford a single square meal a day.
All the expense on that grocery cld have fed a bunch of needy children here in India.
A small request ! Instead of this 'ritual' why dont u dump those stuff in some orphanage here ?
the kids will be happy and u'd be showered with blessings !
just a suggestion !
Hope it makes a difference !
thanks , Karthik :)
see yaa :)
Hi M.Karthik,
Read your post "Pirandhanaal abhisheka..."
Very very funny. That should have been a great experience. Well pictured too. You should have had a whale of a time. Am happy for you.
...and to think that the food used could have fed many a mouths in India (or for the matter anywhere in the world) is making me even more happy.
Voracious Blog Reader
ஒரே பில்டப்புதான் போங்க.....இதுவே தொழிலா தல?
அட போங்கப்பா...
athaane, Karthik, illainaa eppadi, athuvum AJITH padaththukku!
தலைவா உங்களை நம்பிதான் தல படத்தை பார்க்க போறேன்....
ஆமா தல! இந்த படம் ஹிட் ஆகும்!
கண்டிப்பா! அப்படினு நம்புவோம்!
அப்புறம் உங்களுக்கு ஒரு பரிசு இருக்கு, வந்து வாங்கிகோங்க நம்ம பதிவுல!
Thala padam vetri pera valthukal
mmm கார்த்தி. படம் பார்க்க காத்து இருக்கிறேன்,,,
என்னதான் இளமையாக தெரிந்தாலும் மீசை இல்லா அஜீத் ஏனோ நன்றாகவே இல்லை.. :(
தல...
முப்பது லட்சம் தான் "வசூலரசா"??
ஊருக்கு புதுசுங்களா தம்பி??...
மக்கா அவனவன் கோடில கும்மியடிக்கிறாய்ங்க... நீங்க வந்து முப்பது இருபதுன்னிட்டு...
கார்த்தி... அஜீத்த வச்சி நீங்க காமெடி கீமெடி பண்ணலியே??
Intha padam moolam THALA nimirattum ;-)
POst elaam padichen.. gummi adika mudiyala :(
epdi irukeenga?? life epdi pogudhu?
padam nalla irukundu dhaan naanum kelvi patten maams...thala rocks :)
saw this poster http://bp2.blogger.com/_495mjRLzPkI/RqQvbdhDsOI/AAAAAAAAAIU/xMZQG7Lt4Gg/s1600-h/k1.jpg and cant help thinking "7kku apparam 8da. 8kku apparam ajit da"
he he.. take it easy :-)
Post a Comment