Friday, July 06, 2007

மார்க்கபோலோ மார்ஷல்

யூ.எஸ் வந்த பிறகு, எங்க யார் பகார்டின்னு சொன்னாலும் டக்குன்னு மனசுல வர்றது நம்ம நாட்டாமை தான். இதே மாதிரி நான் பத்தாவது படிக்கிறப்போ, யார் மார்க்கப்போலோன்னு சொன்னாலும், ஞாபகத்துல வர்றது என் நண்பன் மார்ஷல் தான். சராசரிக்கும் சற்றே உயரம்.. ஒடிசலான தேகம்.. இந்திய நிறம்.. என்ன பேசினாலும் நக்கல் அதுல தூக்கலா இருக்கும்.. பத்தாவது மட்டுமே என் கூட படிச்சான்.. ஆனா, என்னோட மனசு அகராதில மார்க்கபோலோ = மார்ஷல் னு ஒரு பதிவை உண்டாக்கிட்டு போயிட்டான்..

திண்டுக்கல் நகரம் பூட்டுக்கும் திராட்சைக்கும் வெற்றிலைக்கும் பிரசித்தின்னு சினிமா பாட்டு கேக்குற எல்லோருக்கும் சாதாரணமா தெரிஞ்ச விஷயம்.. அதோட தோல் தொழிற்சாலைகளும் அதிகம்ங்கிறது ரொம்ப சில பேருக்குத் தான் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் உண்டு.. நீங்க மதுரைலைல இருந்து திண்டுக்கலுக்கு பஸ்ல வந்தீங்கன்னா, திண்டுக்கலுக்குள்ள நீங்க நுழையிறதுக்கு இந்த துர்வாசனைகள் தான் பன்னீர் மாதிரி.. அப்படியொரு கப்பு அடிக்கும் உள்ள நுழையிறப்போ.. இந்த தொழிற்சாலைகள் அந்தப் பக்கம் இருந்த நிலங்களை எல்லாம் சீரழித்தது ஒரு தனிக்கதை.. அப்படியொரு ஒரு தோல் தொழிற்சாலை முதலாளியின் பையன் தான் என் நண்பன் மார்ஷல்.. முதலாளியின் பையன் சொன்னவுடன் உங்க மனசுல தமிழ் படம் அதிகம் பார்த்ததினாலோ என்னவோ ஒரு சின்ன வில்லன் உருவம் கொடுத்திருப்பீங்களே.. அதை அப்படியே மாத்திக்கோங்க.. வயசுக்கேற்ற குறும்பு இருக்கும்.. ஆனா சற்றும் அந்த பணக்காரத்தனம் இருக்காது. திண்டுக்கல்ல இருந்து வர்ற பசங்க கூட தான் இவனும் பஸ்ல வருவான்.. பார்த்தால் சற்றும் நீங்க அவனை பகட்டு வாழ்க்கை கூடத்துல இருந்து வர்றவனா யோசிக்கவே மாட்டீங்க..

இவனைப் பத்தி சொல்ற நேரத்துல ஒரு மூணு வருஷம் எங்க பள்ளியின் தலைமையாசிரியரா இருந்த ஒருவரை பற்றிச் சொல்லியேயாக வேண்டும். அவர் பெயர் இராமர்.. தடித்த உருவம்.. தலையில் முடிகள் குறைவு.. இவர் பள்ளியில் ஆட்கள் சேர்க்க லஞ்சமெல்லாம் வாங்குவார்.. இல்லைனா மார்க்கபோலோ வாங்குவார்னு கேள்விபட்டிருக்கேன்.. ஆனா எங்க வகுப்பு சும்மா வர்றப்ப எல்லாம் மார்ஷல் கிட்ட, என்ன மார்க்கப்போலோ..ன்னு தான் கூப்பிடுவாரு..அப்பா எனக்குன்னு ஏதும் கொடுத்துவிட்டாரான்னு ஒரு கேள்வி வேற.. அப்போ தான் நாங்க அவன் கிட்ட காரணம் கேட்டப்ப, அவன் எப்படி சீட் வாங்கினோம்ங்கிற கதையெல்லாம் சொன்னான்.. அவர் பற்றி இன்னும் பல புகார்கள் இருந்ததால் சீக்கிரமாவே அந்த பதவியில் இருந்த இறக்கப்பட்டார் பள்ளி நிர்வாகித்தினரால்.. பள்ளியிலேயே பதினோராம் வகுப்பு இருந்தாலும், பத்தாவதில் டி.சி வாங்கிவிட்டு மறுபடியும் சேரணும்.. எல்லாப் பள்ளியிலும் இதே நிலைமை தானா என்று தெரியாது. அதே பள்ளியில் பத்தாவது படித்து நல்ல மதிப்பெண் வாங்கியும், மறுபடியும் சேர எத்தனை நாட்கள் அலைந்தோம் என்று எனக்கும் என் நண்பர்களுக்கும் தான் தெரியும்.. இறுதியில் பள்ளி நிர்வாகம் தலையிட்டு பள்ளியில் படித்தவர்களுக்கே முதலுரிமை என்று, எங்களை சேர்த்துக்கொண்டது..

பத்தாவது படித்து முடித்த பிறகு, அவர்கள் தொழிற்சாலையை கவனித்துக்கொள்ள லெதர் டெச்னாலஜி படிக்கவேண்டும் என்று சென்னைக்கு போய்விட்டான் மார்ஷல்.. இரண்டொரு முறை திண்டுக்கலுக்கு சென்ற போது அவனை பார்த்தேன்.. அதன் பிறகு அவன் சென்னையில் படிப்பதாக கேள்விப்பட்டேன்.. இப்படி வாழ்க்கையில், கண்மூடி நினைத்துப் பார்த்தால் வந்தவர்கள் என்று பல நண்பர்கள் ஒவ்வொரு காலகட்டதிலும் உண்டு. அதுவும் இப்போது ஆர்குட் போன்ற வசதிகள் வந்த பிறகு, நமது முகத்தை எங்கேயோ பார்த்து விட்டு, பள்ளி நண்பர்கள் முதல் கல்லூரி நண்பர்கள் வரை தேடி வரும் , உள்ளத்தில் அப்படி ஒரு உன்னத மகிழ்ச்சி ஏற்படுவது நன்றாகத் தெரியும்..

சின்ன வயசில் கேள்விபட்ட மாதிரி, ஆண்களோட நட்பு நீண்ட காலம் நீடித்து இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெண் நட்பு, வருகின்ற கணவனை பொறுத்தே அமைகிறது. என் கூட கல்லூரி படித்த பெண், ஒரு மாததிற்குள் நடந்த தனது திருமணதிற்கு கூட, கூட படித்த யாரையும் அழைக்க முடியாத நிலமையில் இருந்தாள்.. இன்று வரை, கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு பின்னாலும், அவளை அவளது பெண் நண்பர்கள் கூட அந்த நட்பை தொடர முடியவில்லை.. ஏனெனில், அவளுக்கு அமைந்த கணவன் அப்படி. இப்படி எத்தனையோ நல்ல நண்பர்களை, அவர்கள் பெண்களாய் இருந்ததால் நாம் தொலைத்திருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக ஒரு இருபது வருடதிற்கு முன்னால் இருந்த நிலைமையை விட இன்று பரவாயில்லை என்று ஆறுதல் கொள்ளமுடிகிறது..

12 பின்னூட்டங்கள்:

said...

தலைவா வணக்கம் ;)))

\\நமது முகத்தை எங்கேயோ பார்த்து விட்டு, பள்ளி நண்பர்கள் முதல் கல்லூரி நண்பர்கள் வரை தேடி வரும் , உள்ளத்தில் அப்படி ஒரு உன்னத மகிழ்ச்சி ஏற்படுவது நன்றாகத் தெரியும்..\\

ம்ம்ம்....இப்ப அதுக்கு இங்க ஆப்பு வச்சிட்டாங்க ;(((

said...

கார்த்தி,

சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுவதால், இப்போ தோல் தொழிற்சாலைகளையெல்லாம் மூடிட்டாங்க. ஒன்றிரெண்டு தான் இருக்குது.

அப்புறம் அது என்ன போஸ், பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு பாஸ்!

said...

மாற்றங்கள் ஓரிரவில் நடந்து விடாது!!
நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது,ஆனால் நேரம் ஆகும்.

நம் மனதில் சரி என்று தோன்றும் விஷயங்களை நம்மால் முடிந்த வரை நடைமுறை படுத்த முயல்வோம்!! :-)

Anonymous said...

aajar aajar :-)

-kodi

Anonymous said...

ippo idhula edhuku marco polo pathi varudhu?! onnume purialiye... :-/ konjam explain thala!

-kodi

said...

ம்ம்ம்ம்...

said...

பெண்கள் நட்பு.. அப்படிதான்! காலேஜ் படிக்கும் போது பொண்ணுங்க கிட்ட சகஜமா பேசும் ஆண்கள், கல்யாணம் ஆன ப்பின், தன் மனைவி மேல் மட்டும் இவ்ளோ தடைகள் விதிப்பது நியாயமா?...
நிலம மாறிட்டு தான் வருது..

said...

இப்படியும் ஒரு ஆசிரியர்,:(
நட்பின் மதிப்பை நினைவு கூர்ந்ததுக்கு வாழ்த்துக்கள்.

said...

பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பு நீடித்து இருப்பதற்கான காரணம் இது தான் தல :( என்னுடன் படித்த பள்ளித் தோழியை இன்றும் தொலைப்பேசியில் அழைத்து பேச நான் தயங்குவேன், காரணம் நான் யார், என்ன எல்லாம் கேட்டுவிட்டு தான் போனை தருவார்கள். ஆனால் நிலைமை மாறி வருவது உண்மையும் கூட .

C.M.HANIFF said...

nalla pathivu ;)

Anonymous said...

The converse is also true. i.e.the wife barring the husband even from even his male friends. My brother had max. no. of friends among us siblings. Now he is totally friendless
SR

said...

மார்கோ போலோ பீர் அத்தனை சிலாக்கியம் இல்லை .. புல்லட் பீர் தான் சரியா வரும் பாஸ்!