Thursday, July 12, 2007

தனிமையில் கிடைத்த ஞானப்பழம்

கடந்த வாரம் காரை எடுத்துகிட்டு, தனியா ரவுண்டு அடிக்கலாம்னு கிளம்பினேன்.. அப்படி தனியாக சுத்தியதற்கு என்ன காரணம்.. எப்பவும் எங்கேயும் கூட்டதோடு இருக்கவே எனக்கு பிடிக்கும்.. அரட்டைகள் பிடிக்கும்.. நாம அடுத்தவங்களை ஓட்றோமோ, அடுத்தவங்க நம்மளை ஓட்றாங்களோ தெரியாது, ஆனா அந்த அரட்டை கும்மி ஆனந்தம் தரும்.. மொத்தமாக ஒரு வீட்டில் கும்மி அடித்து, ஒரு ஆள் வெங்காயம் நறுக்க, அடுத்த ஆள் தக்காளி அறுக்க, இந்த பக்கம் ஒரு ஆள் கோழியை வெட்டி மஞ்சள் போட்டு கழுவ.. அந்த பக்கம் சமையல் என்ன நடக்குதுன்னு கவனிக்காம டிவில ரெண்டு பேர் தமிழ் படம் பாக்க.. ஒரு சின்ன திருவிழா சந்தோசம் அந்த அறைக்குள்ளே இருக்கும்.. மொத்தமா சேர்ந்து சமைச்சு சாப்பிட்டு, சத்தமா பேசி சிரிச்சு சாப்டா அந்த உணவே அமிர்தம்.. அந்த நாளே திருவிழா.. அந்த இடமே சொர்க்கம்.. இப்படி ஒண்ணா இருந்து பழகிட்டதால, என்னைக்காவது தனிமைல இருக்கின்ற சந்தர்ப்பம், அதாவது எங்கேயாவது போறப்ப வந்தா சமாளிக்கமுடியாதோன்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு.. அதனால தான் அந்த தனி உலா..

கொலம்பஸ்ல ஸ்கியாட்டோ ஆறு ஒண்ணு இருக்கு.. இது கிட்டதட்ட 231 மைல் நீளம் கொண்டது என்று யாரோ சொல்லக்கேள்வி..அது போற வழியெல்லாம் ஆற்றுப்படுகை பூங்காக்கள் நிறைய இருக்கும். கிட்டதட்ட வீட்டிலிருந்து ஒரு முப்பது மைல் தூரத்தில் இருக்கும் பூங்காவிற்கு சென்றேன்.. ஆற்றில் நீர் விளையாட்டுக்கள் பல பேர் செய்துகொண்டிருந்தார்கள்.அவர்கள் கூச்சலும், மரங்களின் இலைகள் காற்றோடு பேசிக்கொள்ளும் சம்பாஷனைகளும், தூரத்தில் பறவைகள் மெதுவாகப் பாடுவதும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது..

கிட்டதட்ட அம்பது வருடங்களுக்கு முன்னால் வந்த ஆடிப்பெருக்கு படத்தில், ஏ.எம்.ராஜன் இசையமைத்து பாடிய "தனிமையிலே இனிமை காணமுடியுமா' என்ற பாடல் மனசுக்குள் ஓடியது.. இது மாதிரி வம்பாக தனிமை தேடி செல்வது சரியா என்பது தான் நான் வீட்டிலிருந்து கிளம்பும்போது எனக்கு தோன்றியது..ஆனால், அதையும் அனுபவிப்போமே.. அமெரிக்கா வந்த பிறகு இது மாதிரி தனியாக எங்கும் சென்றதில்லையே என்ற எண்ணம் மனசை முழுதாக ஆளுமை படுத்தியது.

ஊர்ல இருக்கிறப்போ எப்படித் தான், சில சமயம் நேரத்தை தள்ள முடியாம தள்ள வேண்டியதா இருக்கும். அது மாதிரி நேரத்துல மிதிவண்டியை எடுத்துகிட்டு எங்கேயாவது போயிடுவேன்.. போற இடம் தெரியாது.. கால் வலிக்கிற வரைக்கும் போயிட்டு எங்க வலிக்க ஆரம்பிக்குதோ அங்க உட்கார்ந்துடுவேன்..எவ்வளவு நேரம் அப்படி இருப்பேன்னு தெரியாது.. தரையில் கிடக்குற புள்ளை ஒண்ணொன்ணா புடுங்கி ஏறியிறது முதல், வானத்துல மேகம் வரையிற ஓவியங்கள் பார்ப்பது வரை ஏதாவது பண்ணிகிட்டு இருப்பேன்.. எனக்கு இன்னமும் ரொம்ப பிடிக்கிறது மேகத்தை ரசிப்பது.. காற்று அடிக்க அடிக்க அது தன் உருவத்தை மாத்துறது அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும். சில சமயம், டைனோசர் மாதிரி உருவமும் இருக்கும்.. சில சமயம் ஓடுகின்ற மனுஷனை போலவும் இருக்கும்.. எனக்கு பிடித்த விஷயங்களில் இதுவும் ஒன்று.. ரொம்ப நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பி வருவேன்.. பல சமயங்களில் முழுதாக சக்தியேற்றப்பட்டவனாக உணர்ந்ததுண்டு.

இங்க வந்த பிறகு அது போல், தனிமை அவ்வளவாக வாய்த்ததில்லை.. ஆமாம்.. இது மாதிரி தனிமை தேடி போனால், ஏதோ மனசுக்குத் தான் கஷ்டம் போல என்று எலோரும் பார்ப்பார்கள்.. சந்தோசமாக இருப்பவன் இப்படியெல்லாம் போகக்கூடாதா என்ன என்று தெரியவில்லை.. ஆனால், அன்று நான் அப்படி தனிமை தேடி போன போது, பின்னால் திரும்பி பள்ளி சம்பவங்களையும் அங்கே போட்ட ஆட்டங்களையும் நினைத்து பார்க்க முடிந்தது.. ஏழாவதில் தமிழம்மாவிடம் (ஜெயலலிதா அல்ல) திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல், வெளியே நின்று கொண்டிருந்தது, எட்டாவதில் எங்கள் வகுப்பில் ஒரு நாய், குட்டியோடு தங்கி இருந்ததும், மொத்தமாக குட்டிகளோடு அது உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது என பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தது..

இப்படி எல்லாம் நினைத்து பார்க்க அருமையான சந்தர்ப்பம் அன்று அமைந்தது. மறுபடியும் காரினுள் ஏறி முன்னால் கிளம்பியபோது, நான் பதினைந்து வருடங்கள் பின்னால், மென் மீசை வளர்ந்து, சிறுவனாக, டவுசர் போட்டுக்கொண்டு திரிந்த காலத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.

16 பின்னூட்டங்கள்:

said...

//எங்கள் வகுப்பில் ஒரு நாய், குட்டியோடு தங்கி இருந்ததும், மொத்தமாக குட்டிகளோடு அது உள்ளே வருவதும் போவதுமாக இருந்தது //

இது நல்லா இருந்துருக்குமே:-) இன்னும் கொஞ்சம் சொல்லுங்க இதைப்பத்தி.

said...

//இப்படி எல்லாம் நினைத்து பார்க்க அருமையான சந்தர்ப்பம் அன்று அமைந்தது//

:(( Itha padikum pothu than orey senti'a pochu! :(

Anonymous said...

Ungal pathivu superna, antha naal nyabagangal ....... ;-)

Anonymous said...

Office la thappi thavari kooda intha blog ah open panna mudiyalai .. Wat an horrible Profile Pic .. Uvaac

Anonymous said...

Office la thappi thavari kooda intha blog ah open panna mudiyalai .. Wat an horrible Profile Pic .. Uvaac

Anonymous said...

Office la thappi thavari kooda intha blog ah open panna mudiyalai .. Wat an horrible Profile Pic .. Uvaac

said...

mu.ka!!
eppadi ippadi ellam ezhuthareenga???

said...

கதைப்படி ஞானப்பழம் முருகனுக்கு(கார்த்தி) இல்லையே அவரோட அண்ணன் கணேசனுக்குத்தான!!
:)

said...

thala, thanimai inbathai superaa solli irukkeenga. ennadhan gummalam adithaalum manadhirku neram odhukkudhal, thanimayil dhaan undu. nammai naamae ninaithup paarkkum naeramum undu. idhu eppadi naa, "keladi kanmani paadagan sangadhi" la vara maadhiriyaana nammaip parriya paadalaga iruppadhu dhaan thanimai.

sari sari. romba ularraennu ninaikkiraen.

unga postin elaborations eppavum pola gumm. chinna vayadhu nyaabagam ellam yaedho autograph rangela short and sweetaa solli irukeenga poonga

Anonymous said...

When you are alone surrounded y nature deep thoughts come inw ith cherished moments.

Nice read Karthick.

said...

தலை சூப்பர். தனிமை நம்பள யோசிக்க வைக்கும்ங்கறது ரொம்ப உண்மை. சில சமயம் அது உங்களுக்கிருந்த மாதிரி refreshing ஆ இருக்கும். சில சமயம் depressing ஆ முடியும்..

said...

ஆணிகள் கம்மியாகி இருக்கோ? அதான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது!

said...

ஒரு நாளைக்கு தனியா இருந்ததுக்கே டவுஸர் போட்டுக்கிட்டீங்களா??
அப்படி பாத்தா நான் இப்போ என்னுடைய 2321-ஆவது ஜென்மத்தை நோக்கி (பின்னோக்கி) போய்க்கிட்டு இருக்கேன்!! :-P

said...

கார்த்தி, தனியா "ரவுண்டு" -- எந்தரவுண்டு?

said...

தனிமையின் அசைவுகள், தனி சுகங்கள் தான். நானும் அப்ப்ப்போ தனிமை விரும்பி. :)

Anonymous said...

[B]NZBsRus.com[/B]
Skip Slow Downloads With NZB Files You Can Swiftly Search HD Movies, PC Games, MP3 Albums, Applications & Download Them @ Maxed Out Speeds

[URL=http://www.nzbsrus.com][B]Newsgroup Search[/B][/URL]