Saturday, September 09, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 7

நல்ல தூக்கத்தில் இருந்தேன்.. ஜன்னல் டொக் டொக்ன்னு தட்டுற சத்தம் கேட்டது.. சலிப்புடன் எழுந்து பாத்த நம்ம சிட்டுக்குருவி, முறைத்து பார்த்தவாறு நின்று இருந்தது. ஜன்னலை திறந்து அதை உள்ளே அழைத்தேன்.. எவ்வளவு அரும்பாடுபட்டு உனக்கு சினிமா செய்தி கொண்டுவந்தா நீ எப்படி தூங்குறியே ஒரே கத்தல்.. அது கோபத்தைக் குறைக்க கொஞ்சம் குறைக்க, தர்ப்பூசணி போட்டேன்.. இப்போ குளிர்ச்சி அடைஞ்சு, சினிமா நியுசா கொட்ட ஆரம்பிச்சது..

தொண்டையை கணைத்துகொண்டே.. நம்ம ஜேஜே பூஜா அவங்க கடவாப்பல்லு துறுத்துகிட்டே இருந்ததால அதை ஆபரேஷன் மூலமா எடுத்துட்டாங்க..ன்னு ஒரு அதிர்ச்சியான செய்தியோட ஆரம்பிச்சது.. பூஜா சிரிச்சாலே ஒரு அழகு தான் இல்லியானு நம்மளப் பாத்து சிட்டுக்குருவி நக்கல வேற பண்ணுது..

தமிழ் கத்துக்கொடுக்க நீ போறியான்னு குருவி கேட்டது.. யாருக்குன்னு கேட்டேன்.. வேற யாருக்கு.. இப்போதைக்கு தமிழ் ரசிகர்களோட கனவு 'கன்னி'வெடி நமீதாவுக்கு தான்.. அப்படின்னது.. நானும் ஹி..ஹின்னு தலையாட்டினேன்.. தனக்கு தமிழ் கத்துகொடுத்தவர் இறந்துட்டதால நமீதா புது தமிழ் வாத்தியார் தேடுறங்களாம்.. குருவி கையிலேயே என்னோட அப்பிளிகேஷனை கொடுத்தேன்.. அ..ஆன்னு நமீதாவுக்கு தமிழ் சொல்லி கொடுக்கலாமே அது தான்..

நம்ம தல அஜித், போன வாரம் ஏவிஎம் நிறுவனம் கொண்டாடிய திருப்பதியின் வெற்றி விழாவுக்கு, அழகாய், புதுசாய், புத்துணர்ச்சியாய், தனது மனைவி ஷாலினியுடன் வந்து எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தார். (குருவி:ச்ச்சோ சுவீட் தல..)அஜித், தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜிக்காக நடிக்க இருக்கும் படத்திற்கு கிரீடம் என்று பெயர் சூட்டபட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் தொடங்கி அடுத்த வருடம் மேய் 1, அஜித் பிறந்த நாளன்று வெளியிடப்படுகிறது. அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரண் நடிக்கிறார். ஜோடியாக ஷ்ரேயா அல்லது நயன்தார (குருவி: சிம்பு ஒகே சொல்லியச்சா.. என்ன நக்கல் பாருங்க இந்த குருவிக்கு) நடிக்கலாம். ஒளிப்பதிவை திரு கவனிக்க செல்வா கலையை கைப்பற்ற, ஆன்டனி எடிட்டிங் செய்கிறார். யுவன் இசை பொறுப்பை ஏற்றிருக்கிறார்.லொள்ளு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஜொள்ளூ இயக்குனர் SJ சூர்யாவை கதாநாயகனாய் போட்டு ஒரு சொந்த படம் எடுக்கிறார். படத்தின் பெயர் வியாபாரி. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சென்னை சிட்டியை கலக்கி கொண்டிருப்பதாக கேள்வி. இந்த படத்தில் SJ சூர்யாவுக்கு ஜோடியாக நமீதா, மாளவிகா மற்றும் பக்கத்து மாநில நாயகி ஒருத்தரும் நடிக்கிறார்கள். ஒரு நல்ல போஸ்டர் மட்டும் இங்கே.. மற்ற ஜொள்ளு போஸ்டர்களுக்கு இங்கே செல்லவும். தாய்குலங்களும் இங்கே வருவதால் அது மாதிரி போஸ்டர் எப்போதுமே இங்கே தவிர்க்கப்படுகிறது. சே..என்னே சிட்டுகுருவியின் நல்ல எண்ணம்.

அடுத்த செய்தி என்னன்னா மெட்டி ஒலி தொடரின் இயக்குனர் திருமுருகன் இயக்கிய எம்டன் மகன்னு வித்தியாசமான தலைப்பை கொண்ட படத்தின் தலைப்பு எம் மகன் என்று மாற்றப்பட்டது. எல்லாம் வழக்கம் போல வரி விலக்கு காரணமாய் தான். எம்டன் என்பது இரண்டாம் உலகப் போரின் போது சென்னைக்கு அருகில் மூழ்கிப்போன ஒரு நீர்மூழ்கி கப்பலின் பெயர் என்பதால் வரி விலக்கிற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. படம் நன்றாக இருப்பதாய் கேள்வி.

ரொம்ப தூரம் பறந்து இந்த மாதிரி நியுஸ் எல்லாம் புடிக்கிறதால இறக்கை எல்லாம் வலிக்கிறது என்று சொல்லி என்னிடம் இருந்து ஐயோடெக்ஸ் வாங்கி கொண்டு சிட்டுக்குருவி பறந்தது.

13 பின்னூட்டங்கள்:

said...

kumudhan, J-vikatan padicha effetu.
:)

leo said...

GodFather Thala Ajith'kku sure KIREEDOM.....

Anonymous said...

Thala is damn smart ! I think he is going back to his old days ! Surely ! AASAI NAYAGAN is back !

said...

Thanks Ambi..Will try to tune more

said...

Yes Leo. Thala is rocking!!

said...

Anon, You are correct..Aasai Ajith thirumba vanthachchu

said...

USla chittukuruvi dharboosani ellaam saapidudhaa.. Thirumuruganoda serials ellame family problems and emotionsa appadiye eduthu kodukkum.. Adhe vagaila Em(Ton) Maganai edhirpaarakalaanu nenaikkiren..
Thirai vimarsanathula oru scene paathen.. Nasar Bharatha potu veluthu vaangura scene.. Quite natural as it happens in our home..

said...

I too expecting the film in the same way, Sasi

said...

wow, such a nice pic of Ajit and Shalini. தலைய இவ்வளவு smart ஆ பாத்து ரொம்ப நாள் ஆச்சு.
BTW, very well written post.

said...

update ku romba nandringov...ennathu sittu kuruviya ivalo naal kaanomnu paarthitu irundhen :-)

said...

Ovvoru blog-kkum oru trademark series of posts maadhiri, ungla blog-kku indha chittukuruvi posts, Karthik. Keep them coming. Heartening to see Ajith look like the Ajith of old. He looks smart. Lets hope that atleast this time around, Yuvan gets to score music for the new Ajith movie.

said...

amaa priya, ajith is rocking like before..

said...

shyam, i thot of posting cine news on every friday