Tuesday, September 12, 2006

சைக்கிள் பயணங்கள்

அமெரிக்கா வந்த உங்களுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியுதோ இல்லியோ கார் ஓட்டத்தெரிஞ்சிருக்கணும்..கட்டாயச் சட்டம் ஏதும் இல்லிங்க.. ஆனா தெரியலைன்னா ரொம்பக் கஷ்டம்.. நானும் இனிமேல் தான் கார் ஓட்டக் கத்துக்கணும்.. ஒரு கடைக்கு போறதுக்காக நீங்க தினமும் பாதயாத்திரை போக முடியுமா என்ன..

கார் ஓட்டக் கத்துக்கணும்ன உடனே எனக்கு நான் சின்ன வயசுல சைக்கிள் ஓட்டக் கத்துகிட்டது தான் ஞாபகத்துக்கு வருது.. கத்துகிறதுக்குன்னே ஒரு சின்ன சைஸ் சைக்கிள் ஒன்னு, சைக்கிள் கடையில நிக்கும்.. அந்த சைக்கிளுக்கு சனி ஞாயிறு ஆனா ஒரே கிராக்கி.. நான் கத்துகிட்ட சமயத்துல ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் வாடகை. பெரும்பாலும் ஊருக்கு வெளிய இருக்கிற மண் ரோடோ.. தார் ரோடோ தான் பழகுற இடம்.. பழகுறதுனா சும்மா இல்ல.. நல்லா ஓட்டத் தெரிஞ்ச, நமக்கு ஒத்து வர்ற ஒரு பையனை பிடிக்கணும்.. அவனுக்கு ஏதாவது மிட்டாயோ, குச்சிக் கிழங்கோ வாங்கித் தரணும்.. சில நாள், எங்க ஊர் கொட்டாயில நல்ல படம் வந்தா கூட்டிக்கூட போகணும்.. சில சமயம், அந்த பசங்க தம் அடிப்பாங்கன்னா அது கூட வாங்கித் தரணும். ஆனா, எனக்கு அந்த பிரச்சினை இல்ல.. எதுனாலும் என் கடையிலயே எடுத்துட்டு வந்துருவேன்.. பெரும்பாலும், எனக்கு என் மாமா பையன் தான் கூட வருவான்..

இப்போ எது பழகுறதும் பெருசு இல்ல.. அந்த சின்ன வயசுல எல்லாமே பெரிய விசயம்.. ஆன ஒரு தடவை கத்துகிட்டோம்..அப்புறம் எப்பவுமே அது மறக்காது.. சைக்கிள பேலன்ஸ் பண்றதே, ஒரு பெரிய வித்தை.. (ஒலட்டாம ஒட்டுறதுன்னு சொல்வாங்க.. இது வட்டார வார்த்தைன்னு நினைக்கிறேன்)ஹான்ட்பாரை தெக்கே திருப்பினா அது வடக்கால ஓடும்.. கிழக்க திருப்பினா மேக்கால ஓடும்.. சில சமயம், சொல்லித் தர வந்தவன் கடுப்பாகி, கீழ தள்ளி விட்டு போய்டுவான்.. போடா நீயும் நீ சைக்கிள் பழகுற விதமும், அப்படின்னு

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எங்க ஊர்ல சந்தை நடக்கும்.. மளிகை சாமான், பாத்திரம் பண்டம், மண்பானை, கோழி, ஆடுன்னு ஏகப்பட்ட ஐட்டங்கள் விப்பாங்க.. எங்க ஊர்ல கிறித்துவர்கள் அதிகம்னால, அவங்க சர்சுக்கு ஞாயிறு வருவதனால, அன்னிக்கு நல்ல கூட்டம் இருக்கும்.. ஊருக்கு வெளில சைக்கிள் நல்லா கத்துகிட்டா, அடுத்து ஊருக்குள்ள சுத்துறது(கத்துகிறது) தான் அடுத்த படிப்பு.. அப்படிஒரு ஞாயிற்றுக்கிழமை ஊருக்குள்ள நான் சைக்கிள் ஓட்டி கத்துக்கிட்டு இருந்தேன்.. நல்லாத்தான் ஓட்டிகிட்டு இருந்தேன்.. மண்பானையெல்லாம் வித்துகிட்டு இருந்த இடத்துக்கு பக்கத்துல வந்தப்போ, என்ன ஆச்சோ தெரில.. நேரா அப்படியே பானைகளுக்குள்ள சைக்கிள விட்டுட்டேன்.. சடசடன்னு ஒரு மூணு நாலு பானை உடஞ்சிருச்சு.. பானைக்கார அம்மாவோ என்ன என்னவோ சொல்லி திட்டுது.. நான் காதை பொத்தாத குறை தான்..அப்புறம் உடஞ்ச பானையை விட அதிக வெல கையில கொடுத்து அந்தம்மாவை சமாதானப் படுத்தினேன்.

அதுக்கப்புறம், நாலு பேரை ஏத்திக்கிட்டு பத்து பதினஞ்சு கிலோமீட்டர்னு காடு கழனின்னு ஊர் சுத்தி இருந்தாலும், பானை மேல மொத மொதலா ஏத்தின அந்த நாளை மறக்கவே முடியாது

31 பின்னூட்டங்கள்:

said...

பின்னூட்டம் இல்லை
"காதை பொத்தாத.." என்பது "கதை" என்று வந்துள்ளது,கொஞ்சம் மாத்திருங்க!!

said...

நான் மிதிவண்டி கற்றுக்கொள்ளும் போது மணிக்கு 25 காசுகள்.
சைக்கிள் விட்டதும் தார் ரோடு அடிபட்டதும் தார் ரோடு.

said...

எழுத்து பிழையை மாற்றிவிட்டேன் குமார். நன்றி. தட்டச்சுகளில் அடிக்கும் போது இது போல் நடந்துவிடுகிறது

said...

தார் ரோட்டில் பழகியவர், முழங்காலில் அடிவாங்காமல் இருந்திருக்க முடியாதே.. அனுபவம் ஏதும் உண்டா

said...

he hee, same pinch. but i fell down in a thorn bush. ullankaila mullu kuthi sema vali. but i learned in a day, as i know swimming earlier. both are interrelated naah? esp in balancing the body ...

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஆமாங்க! உங்களது பதிவை படித்தவுடன் எனக்கும் சைக்கிள் ஓட்டனும் போல ஆசையா இருக்கு. நான் சைக்கிள் ஓட்டிய காலமெல்லாம் பொற்காலம் தான் போங்க!


பாலச்சந்தர் முருகானந்தம்
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal

said...

Haa enakkum malarum ninaivugal irukku indha vishayathula.. Selvan, my childhood friend.. He used to come by Exam holidays.. Enga appa kitta kamukkamaa cycleukku kaasu vaangi vechukkuven.. Ammavukku dagalti kuduthuttu rendu perum kelambi poi cycle eduthukkuvom.. Eduthukkittu Theradiyod naalu radha veedhium suthi varuvom.. Veetukku vandha odane mayyaaru poosadhaan (amma kitta sollama ponadhukku).. Naan eppavum normal cycle dhaan eduppen.. Aana avan ranger cycle eduppaan.. Enakkum aasaiyaa irukkum.. Aana andha handle bar paathaale oru maadhiri irukkum.. So i wont try..
Palaginappo vilala.. But oru naal main roadla over speedla vandhuttu irundhappo pakkathu streetla irundhu oruthan cycle konduvandhu ennoda cyclela idichu, 2 perum vilundhu, handle bar valanju, enga pakkathu veetu punniyavaan adha paathu, veetla poi potu kuduthu, 4 naal cycle edukka amma kitta kenji.. Adhellaam... avvalavudahaan

said...

பானை பிடித்தவள் பாக்கியசாலின்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா
பானை உடைத்த பராக்கிரமசாலியைப் பற்றி இப்போதான் கேள்விப்படறேன்

said...

ஆகா மலரும் நினைவுகள்...நான் முதல் டைம் தனியா ஓட்டறேன்னு சொல்லி கூட வந்தவன தள்ளி நிக்க சொல்லீட்டு ஸ்ட்ரெய்ட்டா வாய்க்கால்ல போய் இறங்கினேன்....
அப்புறம் ஏகப்பட்ட விழுப்புன்கள் எதன்னு சொல்ல :-)

said...

நல்ல பதிவு. நான் cycle கத்துக்கும் போது மாடு மேல விட்டுட்டு அழுதுட்டே வீட்டுக்கு வந்துட்டேன். car ஓட்ட கத்துக்கும் போது curb ல ஏத்திட்டேன்.
All the best for your driving classes. என் life லயே ரொம்ப கஷ்டப்பட்டது US la driving license வாங்க தான். road test ல 2 தடவை fail பண்ணிட்டாங்க..

said...

@ambi
// but i learned in a day, as i know swimming earlier. both are interrelated naah? esp in balancing the body ...
//

நிஜமாவா? எனக்கு தெரிஞ்சு யாருமே 1 நாள் ல cycle ஓட்ட கத்துக்கிட்டது இல்ல. :)
BTW, first time hearing about the inter-relation between cyclig and swimming

said...

True karthik....enna than namma flight oota kathukittalum...cycle oota kathukitatu marakave mudiyatha anubavam....nice post :)

said...

All the best...vandiya stop pannum bodhu, break pedaluku badhila accelarator-a midhichidaadheenga...

said...

Ambi, again same punch.. Naanum oru thadavai thorn bushkuLLa vizhuNthirukkEn.. eppO appadi vizhuthaalaavathu, ungalukku punjan kothumai paththu podum

said...

பாலசந்தர், சைக்கிள் அனுபவத்தை யாராலும் மறக்க முடியாது.. உங்கள் முதல் வருகைக்கு நன்றி

said...

Sasi, appaada ennOda pathivai padichchuttu ungalukku udambellam valichirukkum, amma koduththa adiyai ninachchu paarththathula..illiyaa

said...

தி.ரா.சா சார், சும்மா நச்சுன்னு இருக்கு உங்க பின்னூட்டம்

said...

ஷ்யாம், சைக்கிள் ஓட்டினப்போ வங்குன விழுபுண்களை எண்ணவே முடியாது, அதன் சுகந்தமான நினைவுகளை போல

said...

பிரியா, அப்படின்னா மாடை பாக்குரப்போ எல்லாம் உங்களுக்கு சைக்கிளை அதன் மேல விட்டது ஞாபகத்துக்கு வரும்னு சொல்லுங்க..

said...

பிரியா, அம்பியை நம்பாதீங்க.. அவருக்கு இன்னும் சைக்கிள் ஓட்டவே தெரியாது.. அவரோட பதிவுல சும்மா போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டும் சைக்கிள்ல ஏறி இருப்பார்ன்னு நினைக்கிறேன்

said...

Thanks Bharani.. Neenga sonnathu unmayilum unmai

said...

வேதா, ஷேர் இல்லாம சைக்கிள் எப்படி கத்துக்க முடியும்.. ஷேர் பொடுரப்போ அவங்க கூட அடுச்சுகிறது தான், நகைச்சுவையான விஷயம்

said...

Thanks Bala.. sila samayam antha maathiri chinna size vandila breakE irukkathungirathu thani vishayam

said...

//அம்பியை நம்பாதீங்க.. அவருக்கு இன்னும் சைக்கிள் ஓட்டவே தெரியாது.. //
yow! enyaa yeen? singatha seendra. venaam sollitten.

said...

@ambi

//yow! enyaa yeen? singatha seendra. venaam sollitten.//

pinna oru naalla cycle kathukittennu sonna... kerala-yerumai-aeroplane kathai theriuma unaku :-)

said...

ambi, alli vidalam.. athukukaaka ippadi ellam alli vidalama enna.. Naangalum evlo Naaluthaan poruththu porathu

said...

Shyam, kalakkipOtteenga uthaaranam solli..

Ambi, Ithu thevaiya namakku.. oru NaaLla cycle Ottinennu Reel Ottanuma..

said...

ஒ அப்போ எல்லாருக்குமே சைக்கிள் ஓட்டத் தெரியுமா.. நா என்ன போல சில பேருக்கு தான் தெரியும்னு நெனச்சேன் :)
நான் நேரா தார் ரோடு தான்.. கத்துக்கிட்ட அப்போ விழல.. ரொம்ப நாள் கழிச்சு எங்கேயோ பராக்கு பாத்துட்டே ஓட்டி நல்லா ஒரு 300 மிலி ரத்தம் குடுத்து 5 தையல் போட்ட அப்புறம் தான் நிம்மதியாச்சு :)

said...

ahaa.. thaiyal ellaam pOtteengala..achchoo.. Nalla velai enakku antha maathiri ethuvum nadakula :-)

said...

nice post.

remembering my olden days. still I have some so called "Veera Thazhumbu" in my legs.

:-)))