Thursday, September 21, 2006

அமெரிக்காவுக்கு ஊரே வழியனுப்பிய கதை..

என்ன தான் எங்க ஊர் சாராய வியாபாரத்துல, ஒரு காலத்துல, கொடிகட்டி பறந்திருந்தாலும், கிராமத்திற்கே உரிய பாசமும், பழக்க வழக்கமும் மாறாம இருக்கும். நான் அமெரிக்கா கிளம்ப போறேன்னு தெரிஞ்சவுடன, என் பெற்றோர்களிடமும், ஊரில் இருக்கும் என் நண்பர்களிடமும் போனில் சொன்னேன்.. அடுத்த நாள் எங்க ஊர் பஸ்ல போய் இறங்கினேன். (ஆட்டோகிராப் படத்துல சேரன், படத்தோட தொடக்கத்துல எங்க ஊர் பஸ்ல தான் வந்து இறங்குவார்).

பஸ் நிக்கிற இடத்துல இருந்து எங்க வீட்டுக்கு ஒரு முந்நூறு மீட்டர் தூரம் இருக்கும். நான் பஸ்ஸை விட்டு இறங்கினேன்.காய்கறி மார்கெட்டுக்கு போறதுக்கு, பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிகிட்டு இருந்த என் தூரத்து மாமா என்னை பாத்துட்டு 'என்ன கார்த்தி.. அமெரிக்கா போறியாம்ல.. பாத்து பத்திரமா போயிட்டுவாப்பா..' சந்தோசத்தோட சொன்னார்.

ஒரு ரெண்டு எட்டு எடுத்து வச்சிருக்க மாட்டேன்.. என் அப்பாவோட நண்பர் ஒருத்தர் வந்து குசலம் விசாரிச்சார். 'என்னைக்கு கிளம்புற கார்த்தி.. துணி மணி எல்லாம் வாங்கியாச்சா.. அங்க உள் டிரஸ் எல்லாம் ரொம்ப வெலையாம்.. நாலஞ்சு சேத்து வாங்கிகோப்பா..' அவருக்கு தெரிஞ்ச விசயத்தை சொன்னார்..

அடியேய் மாப்புள்ள.. இது டீக்கடையில் உக்கார்ந்து நியுஸ்பேப்பர் படுச்சுகிட்டு இருந்த ஒரு மாமா.. என்ன பிளைட்டுல பறக்க போற போல.. எவ்வளவு நாளாகும் திரும்பி வர.. பேசம எம் பொண்ணு ஒண்ணை கட்டிகிட்டு கூட்டிட்டு போயிட வேண்டியது தான.. சிரித்துகொண்டே வந்து பாத்துகொள்ளலாம் மாமா ன்னு அப்படியே கிளம்பினேன்..

நான் சின்ன வயசா இருக்கிறப்போ இருந்து எங்களோட கடைக்கு வந்து வெத்தல பாக்கு வாங்குற ஒரு பாட்டி டீக்கடைக்கு டீ வாங்க வந்திருந்தது..யாரு கார்த்தியா.. நேத்தைக்கு கடைக்கு போயிருந்தப்போ உங்கம்மா சொன்னுச்சு.. பாத்து இருய்யா.. கண்டவன் கூட எல்லாம் சேராத.. சரி பாட்டின்னு கிளம்பினேன்

என்னோட வீட்டுக்கு பக்கத்துல இட்லி, பணியாரம் சுட்டுவிக்கிற தூரத்து பாட்டி ஒருத்தவங்க.. ராசா..இந்தாயா..பணியாரம் எடுத்துக்கோ.. இதுக்கப்புறம் நீ எப்போ சாப்பிடப் போறியோ..அந்த பாட்டி பாசத்தோட பணியாரம் சுட்டு போட்டிருந்த சட்டியை தூக்கி கொடுத்தது...அப்போ..அந்த பாட்டியை பாக்கணும்.. அப்படியொரு சந்தோசம்..

ஏண்டா பேராண்டி.. அங்க எல்லாம் நல்லா மழை பெய்யுமா.. இது என் அப்பாவோட சித்தப்பா.. மனுஷன் நல்ல உழைப்பாளி.. வயலுல இறங்கி வேலையை ஆரம்பிச்சார்னா மூணு ஆள் வேலையை இவர் ஒருவரே செய்வார்..
தாத்தா பனிப்புயலே இருக்கும்னு நான் சொன்னவுடனே நம்ம சொந்தக்கரவிங்க எவனும் அங்கனகுள்ள இருக்காய்ங்களா.. ன்னு அடுத்த கேள்வி.. யாரும் இல்ல தாத்தா..நான் பதில் சொல்ல..சரி சரி இல்லைங்கிறதால சொந்தம் உண்டக்கிடாதடன்னு அவருக்கே உரிய நக்கலோட சொன்னார்..

அப்படி இப்படின்னு நான் வீட்டுக்கு போய் சேரவே அரைமணி நேரம் ஆயிடுச்சு.. அந்த ரெண்டு நாளும் என் தங்கை கல்யாணத்துக்கு வந்த பாதி கூட்டம் என் வீட்டுக்கு என்னை பாக்கவும் வழியனுப்பவும் வந்திடுச்சு.. போஸ்டர் ஒட்டாத குறை தான்.. அவங்க ஒவ்வொருத்தர் மொகத்துல இருக்கிற சந்தோசம், அவங்க வெள்ளந்தியான பேச்சு..இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு..

அன்னிக்கு சாயந்திரம் எங்க ஊர் சந்தியாகப்பர் திருவிழா.. எல்லோரும் சரியான மப்புல இருந்தாங்க.. எங்கியோ போயிட்டு வந்துகிட்டு இருந்த என்னை என் தூரத்து மாமா புடுச்சுகிட்டார்.. மாப்புள்ள..நீ அமெரிக்கா போற..எனக்குத் தெரியும்.. எப்படி தெரியும்னு கேக்குறியா.. அது தான் உன் மாமன்..என் மப்பிள்ளைக்கு மறுபடியும் முத்தம் கொடுக்க நான் இருப்பேனோ மாட்டேனோன்னு என் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தார்.. இந்த பக்காம் இன்னொரு மாமா.. 'மருமவனே..நீ போயிட்டு வர்றப்போ இந்த மாமனுக்கு ஏதாவது கட்டாயம் வாங்கிட்டுத் தான் வரணும்' னு கையைப் பிடிச்சுகிட்டு முத்தமா கொடுக்கிறார்..எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல.. ஒரு வழியா அவங்களை சமாளிச்சுட்டு வந்தேன்..

பக்கத்து வீட்ல யார் இருக்கா.. என்ன பண்றாங்க ன்னு கூட தெரியாம இருக்கிற பட்டிணத்து வாழ்க்கைல எனக்கு எங்க ஊர் பாசமும் உபசரிப்பும் இன்னும் ஆச்சரியமா இருக்கும்.. அந்த மண்ணுக்கும் அந்த பாசத்துக்கும் நான் என்னிக்கும் தலை வணங்குறேன்..கடமை பட்டும் இருக்கேன்..

34 பின்னூட்டங்கள்:

said...

unmaidhaan karthi! naan kumbakonathukku poiyrundha bodhu enakku oru periya vaazhai ilaila saadham pootadha innikum marakka maaten! ithanikkum avanga yaarrunnu theiryadhu, navagraga koiluuku vadhurukkum inga engayavadhu saapida hotel irukaannu kettadhukku avanga veetukke kootittu poitaanga! :)

said...

கிராமத்து மணமே தனிதான்.
அவுங்க பிரியமான வார்தைகள் நீங்க வாங்கிவரப்போகிற பரிசுப்பொருட்களுக்காக அல்ல.

said...

Karthik,
Your previous, archives, links, reviews etc are not being displayed in Firefox. Just thought of highlighting to you so that you can fix it.

Anonymous said...

Excellent narration Karthi........very interesting...

Balaji

said...

//இல்லைங்கிறதால சொந்தம் உண்டக்கிடாதடன்னு அவருக்கே உரிய நக்கலோட சொன்னார்..
//
ha haa ROTFL :) madurai pple are very well known for their nayandi naah? me spend my studies at mdu for 6 yrs - 3 yrs in american cllge & 3 yrs in MKU. halycon days. :)

very well written. kudos!

said...

karthiksir,
excellent write up! Loved the way you played around with words. Esp. those from your relatives.. felt as if I've just been there. Good job!

Ambi-- you studied in MKU? which batch and course.. did u go to the MKU college in alagarkoil road or the main university in nagamalai pudukottai.Me, main univ MCA 2000-2003. :-)

said...

அட்ரஸ் கேட்டதுக்கே வாழைஇலைல சாப்பாடா.. அதுவும் கும்பகோணம் சாப்பாடுன்னா சும்மாவா...

said...

குமார், நான் எதுவுமே வாங்கிட்டு போகலைன்னா கூட, அவங்க பாசம் மாறாது

said...

குமார், நான் எதுவுமே வாங்கிட்டு போகலைன்னா கூட, அவங்க பாசம் மாறாது

said...

kaps,
I will see and surely rectify that soon.. Thanks for informing..

said...

Balaji,

Thanks..

said...

Oh..ambi mathuraila thaan paduchcheengala.. madura is a big village.. so there also you can find same persons like my village..

ennai maathiri aaru varushamum mathuraiya.. same pinch :-))

said...

//excellent write up! Loved the way you played around with words//

Thanks sister... Naan athai ellam ezhuthurappO marupadiyum angke pOy vantha maathiri irunthathu..

said...

ROTFL....nalla eluthi irukeenga karthik, naanum inga varathuku munnadi enga oorla poi ellorukum sollitu varaumbothu oru perisu sonnaar epdiyaavathu enaku oru 4 viagra maathirai mattum vaangitu vaa nee varaumbothu nu :-)

said...

ROTFL....nalla eluthi irukeenga karthik, naanum inga varathuku munnadi enga oorla poi ellorukum sollitu varaumbothu oru perisu sonnaar epdiyaavathu enaku oru 4 viagra maathirai mattum vaangitu vaa nee varaumbothu nu :-)

said...

கிராமத்து மக்களிடம் பார்க்கமுடியாத்து உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது மற்றும் உள்ளது உள்ளபடியே பேசுவார்கள்.அதை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள் எழுத்தின் மூலம்.அவர்களுக்குட்தான் எவ்வளவு பெருமை நம்ம ஊரிலிருந்து ஒருவன் அமெரிக்கா போகிறான் என்று.

said...

as usual, ரொம்ப நல்லா எழுதி இருக்க்கீங்க..நம்ம ஊர்ல ஒருத்தர்க்கு நல்லது நடந்தா நமக்கே நடக்கற மாதிரி சந்தோஷப்படறது கிராமத்து மக்கள் தான். நக்கல்லாம் super.

//பக்கத்து வீட்ல யார் இருக்கா.. என்ன பண்றாங்க ன்னு கூட தெரியாம இருக்கிற பட்டிணத்து வாழ்க்கைல //
அப்படிலாம் இல்ல. இப்பலாம் அத realise பண்ணி மாறிட்டு இருக்காங்க. நான் கிளம்பினப்போ பக்கத்து வீட்டு aunty ஒரு T shirt ல embroidery பண்ணி குடுத்தாங்க. வீட்ல neighbours குடுத்த haldiram sweets குவிஞ்சிடுச்சு. என்னால தான் எல்லாத்தையும் கொண்டு வர முடியல.

said...

adada.. romba freeya irukingala enna? dinam oru padhivu pottu ipo enaku 5-6 padhivu pendingla iruku.. X-( konjam asinayum kavaninga.. :)

said...

//ROTFL....nalla eluthi irukeenga karthik//

shyam, Naan nalla ezhuthi irukkalam.. athukkaaka ore comment ta rendu thadavai pOttu, vazhakkam pola unga paachaththai velipaduththiteenga shyam.. Thanks Shyam

said...

//enaku oru 4 viagra maathirai mattum vaangitu vaa nee varaumbothu nu//

shyam, LOL :-))

said...

//enaku oru 4 viagra maathirai mattum vaangitu vaa nee varaumbothu nu//

avar pErai cholli neenga ungalukku vaangkittu pokaama iruntha sari shyam :-))

said...

//அதை அப்படியே கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள் எழுத்தின் மூலம்.//
thanks TRC sir
//அவர்களுக்குட்தான் எவ்வளவு பெருமை நம்ம ஊரிலிருந்து ஒருவன் அமெரிக்கா போகிறான் என்று. //
antha santhosaththai nerla paakkanum sir.. kannula thanniyE vanthuduchchu

said...

//அப்படிலாம் இல்ல. இப்பலாம் அத realise பண்ணி மாறிட்டு இருக்காங்க. //

romba romba nalla vishayam priya.. kekkave romba santhosama irukkunga

said...

//konjam asinayum kavaninga.. //

correct a sonneenga porkodi.. athaiye asin kitta sollunga.. shooting shootingnu suththikitte irukkaanga

ajithoda azhwar padathukkum, vijayoda pokkiri padathukkum shotting-um ulunga porathilla.. ennai ninachchu leave pottuduraanga porkodi.. LOL :-))

said...

correct mams...gramthula innum andha kunam appadiye iruku...koduthuvachar neenga...ivlo per vazhi anupi US vanthu irukeenga....gr8888oooooo :)

said...

Mappla..ellaam andavan arul..ippadi oru life amanjathu

said...

america poiteengala?

said...

ama usha.. I am in Columbus, OH

said...

supera ezhudi irukinga karthik.. padikrapove avanga mugam epdi irundurkum nu oogika mudiyudu :)

said...

thanks porkodi.. innum avanga en kooda irukirathave enakku oru ninaippu irukku

said...

Uravukkaaran nalla irukkaradha paathu sandhosha padara sondham kedaikka jenma punniyam venum Karthi..
Avangala ellaam vaalnaalla ennikkaavadhu edhaavadhu oru vagaila sandhosha paduthi, perumai paduthi paathudanum..

said...

nichchayama sasi.. athukku romba punniym panni irukkanum.. ellam andvaan arul

Anonymous said...

கிராமத்து விருந்து படைத்துவிட்டீர்கள் கார்த்தி. நன்றி மறவா மானிடர் வாழும் கிராமத்தில்தான் பலன் எதிர்பாராத அன்பு மழையில் நனையமுடியும். உங்கள் வரிகளில் அந்தச் சாரலில் நானும் ஈரமடைய முடிந்தது.

said...

நன்றி பாலா..